Wednesday 18 January 2017

ஒரு பண்பாட்டின் மிச்சம்.

   ஜல்லிக்கட்டு மிருக வதையா, வீர விளையாட்டா என்ற விவாதங்களைத் தாண்டி  யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு இளைஞர் போராட்டம் இன்று எழுந்து நிற்கிறது. இதன் போக்கு என்னவாக மாறும், எந்த இலக்கில் இது முற்றுப் பெறும் என்பது இப்போது சற்று புலப்படாமல் புகை போல தோன்றினாலும், ஒரு இனத்தின் அடையாளத்தின் மீது  அரசியலும் அந்நியர்களும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்தால் அவர்கள்  சில அதிர்ச்சியான உண்மைகளுக்கும் எதிர்வினைகளுக்கும்  தயாராகவேண்டியதுதான். 

       என்னைக் கேட்டார்கள் சிலர்; "நீ எந்தப் பக்கம்? ஜல்லிக்கட்டா அல்லது பீட்டாவா?"

       "எப்போதுமே ஒரே பக்கம்தான்". என்றேன் நான். 

     ஒரு பண்பாட்டின் மிச்சத்தை  காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் யாருக்கும் நான் சொன்ன ஒரே பக்கம் என்ன என்பது புரியும். 



5 comments:

  1. ஜல்லிக்கட்டு பற்றி யாராவது எழுதிய பதிவில் பின்னூட்டம் போடுமளவு கருத்து சொல்லி இருக்கிறீர்கள் . அதற்கு ஒரு பதிவு எழுதியிருப்பது வியப்பாக உள்ளது . நீளமான பதிவெழுதுபவரின் புதிய பதிவு இவ்வளவு சிறியதாக இருப்பது ஆச்சரியம்.

    சாமானியன் அவர்களின் ஜல்லிக்கட்டு பதிவில் பின்னூட்டமாக போட்டிருக்கலாம் காரிகன்.

    ReplyDelete
  2. காரிகன்
    தற்போதைய சூழலுக்கேற்ற சற்றே சிறியதாயினும் தகுதியான பதிவு.
    இலவசங்களை வாரி வழங்கிவிட்டால் ஓர் இனத்தையே கூட அழித்துவிடலாம் என்றெண்ணம் கொண்ட மட்டமான அரசியல்வாதிகளுக்கும் ஆணவக்கார ர்களுக்கும் இப்போராட்டம் சரியான சாட்டையடியே.
    சாது மிரண்டால் காடு கொள்ளாது தானே.

    ReplyDelete
  3. வணக்கம்
    எமது வீர விளையாட்டை காத்திடுவும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. தமிழனுடைய ஒட்டுமொத்த எதிர்ப்பின் வடிவம்தான் மெரினா போராட்டம். அதற்கு ஜல்லிக்கட்டு ஒரு அடையாளமாகக் கிடைத்தது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    ReplyDelete
  5. வாங்க அமுதவன்,

    நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் பட்சத்தில் நன்றே. எனக்கும் அப்படித்தான் முதலில் தோன்றியது. வரும் காலங்களில் இந்த மாதிரியான போராட்டங்கள் தொடருமா என்று சந்தேகமாக இருக்கிறது. மக்கள் போராட்டங்களில் கூட சுற்றுலா உணர்வில்தான் திரள்கிறார்கள்.

    ReplyDelete