Thursday 9 April 2020

உறைந்த உலகம்.

மூன்றில் ஒரு பகுதி உலகம் இன்றைய கணத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையில் உறைந்து போயிருக்கிறது. கண்டங்கள், நாடுகள், நகரங்கள், வீதிகள், சாலைகள் எல்லாமே ஒரு புகைப்படம் போன்று அசைவுகளற்ற அமைதியில் அடங்கிப் போயிருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களும், வணிக வளாகங்களும், உணவரங்குகளும், கேளிக்கை விடுதிகளும், திரையரங்குகளும், முகவரியற்ற இடங்களாக மனிதத் தடம் படாத பகுதிகளாக மாறியிருக்கின்றன.  இயற்கையோ செயற்கையோ, விதியோ சதியோ நம் கண்களுக்குப் புலப்படாத இந்த எதிரியின் பின்னிருக்கும் காரணிகளை ஆராயும் நேரம் இதுவல்ல என்றாலும்  உலகம்  முழுவதும் இறந்து  கொண்டிருக்கும் எளிமையானவர்களின்  மரணத்திற்கு இயற்கையையும்  கடவுளையும்   சுட்டிக் காட்டி விட்டு   இதை  நாம் கடந்து சென்று  விடப் போகிறோமா?  

தற்போதைக்கு தனித் தனி தீவுகளாகவும், யாரையும் தொடாமலும், முகம் பார்த்து பேசாமலும், பிறரிடமிருந்து தள்ளி நின்றும் இருப்பதே பாதுகாப்பானது. ஆனால்  இதுவே ஒரு புதிய வாழ்க்கை முறையாக போதிக்கப் படாமலிருந்தால் மிகவும் நலம்.  


3 comments:

  1. பொறுத்திருந்து பார்ப்போம் உலக நடப்பை....

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 24 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  2. உறைந்த உலகம்.
    அருமையான தலைப்பு.அறிவியல் வளர்ச்சியால் அகிலத்தையே ஆள,ஆட்டிப்படைக்க நினைத்த மனிதனை நுண்ணுயிரி ஒன்று அண்டசராசரங்களையும் உறைய வைத்திருக்கிறது.சாமானியர்களே இதிலும் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.பட்டினிக்கும்,நோய்த்தொற்றுக்குமிடையில் அவர்களது வாழ்க்கை ஊசலாடிக்கொண்டுதானிருக்கிறது. அனைவருக்கும் இயல்பு வாழ்க்கை விரைவில் மலர இறைவன் அருள் புரியட்டும்.....

    ReplyDelete
  3. உண்மைதான். சீக்கிரம் எல்லாம் யதார்த்தத்துக்குத் திரும்ப வேண்டும்.

    ReplyDelete