Sunday, 4 May 2014

இசை விரும்பிகள் XVII - சுவர்களைத் தாண்டி....

                 திடுமென வானத்தை  உடைத்துக்கொண்டு கொட்டும் கோடை  மழை, முதன் முறையாக வானத்தில் கண்ட  பனிபடர்ந்த அந்த வானவில், பேருந்தில் பயணம் செல்கையில் பாதையோரத்தில் சட்டென தோன்றும் வசீகரமான ஒரு பெண்ணின் முகம், அடர்ந்த நிசப்தமான ஒரு இரவில் திடீரென ஒலிக்கும் டெலிபோன் மணி, மெழுகுவர்த்தியைப்  பற்ற வைக்கும் ஒரு எதிர்பாராத தருணத்தில் விரலைத் தீண்டும் நெருப்பு. இதைப் போன்றே மின்சாரத்தை விழுங்கிய அனுபவத்தை கொடுத்த அந்த அதிர்ந்த இசை....

   

                       சுவர்களைத் தாண்டி ....  


    (இந்தப் பதிவு தமிழ்த் திரையிசையைப் பற்றியதல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது முழுதும் ஆங்கில இசையைப் பற்றிய  என் பதிவு. இது நான் பல வருடங்களுக்கு முன் Retro Ride என்ற தலைப்பில் எதோ ஒரு நோட்டுப் புத்தகத்தில் என் சொந்த வாசிப்புக்காக எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பதிப்பு. இதில் பல மாற்றங்கள் செய்தே இப்போது வெளியிடுகிறேன்.  தமிழ்த் திரையிசை என்னும்போது அதற்கு ஒரு துவக்கம் இருப்பதால் நம்மால் ஒரு கோட்டிலிருந்து ஆரம்பித்து எழுதக்கூடிய வசதி உண்டு. ஆனால் ஆங்கில இசையைப் பொறுத்தவரை அப்படியான ஒரு துவக்கப் புள்ளியை கண்டுகொள்வது சாத்தியமில்லை. அது ஒரு மகா கடலைப் போன்றது. இதில் ஏகப்பட்ட இசைக் குழுக்கள் அலைகள் போல வந்தவண்ணமிருக்கின்றன.  இதனால் இதை எங்கே தொடங்குவது  என்ற குழப்பத்தைத்  தவிர்க்க  ஆங்கில இசை எனக்கு அறிமுகமானதிலிருந்தும்  அது எனக்குக் கொடுத்த     அனுபவங்களிலிருந்தும்    ஆரம்பிக்கின்றேன்.  இது முற்றிலும் என் அனுபவங்களைச் சார்ந்தேயிருப்பதால் சற்று பொறுமையுடன் இதைப் படிக்க வேண்டுகிறேன்.)
       சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் திடுமென வானில் வினோத ஒலியுடன் குறுக்கே பறந்துசெல்லும் ஒரு ஹெலிகாப்டர் அதை முதல் முறையாகப் பார்க்கும் ஒரு சிறுவனிடத்தில் ஏற்படுத்தும் திகைப்பு  வார்த்தைகளற்றது.  80 களின் துவக்கத்தில் ஒரு கோடை நாளின் மாலை நேரத்தில் எனக்கு இந்த ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த "ஹெலிகாப்டரோ"  என் மனதுக்குள் பறந்தது. அது நான் முதன் முதலாகக் கேட்ட மேற்கத்திய இசை. இப்போது நான் முதலில் கேட்ட அந்த இசையை விட்டு வேறு வேறு இசைவெளிகளை அடைந்துவிட்டாலும், பல்வேறு மகத்தான கானங்களை கேட்டு அனுபவித்த ஆனந்தம்  மனதுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும்  அந்த முதல்  பாடலைக் கேட்கும் சந்தர்பங்களிலெல்லாம் அந்தச் சிலிர்ப்பு மீண்டும் மீண்டும் என்னைத் தீண்டுவதை உணர்கிறேன். ஆனால் நியாயமாக சொல்வதானால்  நான் கேட்ட முதல் மேற்கத்திய இசை சிறிய துணுக்குகளே. இதை இப்படிக்  கூறுவதன் காரணம் அந்த ignorable இசையைக் கூட நான் ஒரு முழுப் பாடல் என்ற உணர்விலேயே ரசித்துக் கேட்டதினால்தான்.  கசெட்டின் இறுதியில் filler  எனப்படும் நிரப்பும் இசையாக நான் சில ஆங்கில இசையை பகுதி பகுதியாகக்  கேட்டிருக்கிறேன். அது பெரும்பாலும் Kraftwerk என்ற சிந்தசைசர் இசைக்குழுவினரின் டிஜிடல் இசையாக இருக்கும். சில சமயங்களில் இந்த filler இசையை கேட்பதற்காகவே முழு கசெட்டையும் ஓட விடுவதுண்டு.  (Rewind, Fast Forward போன்ற தொழிநுட்ப அனுகூலங்கள் எங்கள் வீட்டில் தடை செய்யப்பட்டிருந்தன.) எதோ ஒரு விதத்தில் மேற்கத்திய இசையை நோக்கி நான் நகர்ந்துகொண்டிருந்தேன் என்று பிறகுதான் உணர்ந்தேன்.


       காமிக்ஸ் கதைகள் என்னை கதை எழுதத் தூண்டிய தினங்களில் படக்கதை எழுதி, பின்னர் துப்பறியும் மர்மக் கதைகளில் ஈடுபாடு வர, தொடர்ந்து மர்மக் கதைகள் எழுதிவந்தபோது, எதோ ஒரு அசந்தர்ப்பத்தில் ஒரு கதையில் கொலைகாரன் தன் காரை ரிவர்சில் எடுக்கும்போது அதில் ஒசிபிசா என்ற ஆங்கில குழுவினரின் பாடல் ஒன்று ஒலிப்பதாக எழுதியிருந்தேன். (அப்போதுதான் ஒசிபிஸா குழுவினர் மெட்ராஸ் வந்திருந்தார்கள். நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் அவர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன.) நான் கதை எழுதுவதை அறிந்திருந்த என் தந்தை படிப்பதற்கு  பத்திரிக்கைகள் எதுவுமில்லாத  ஒரு வறட்சியான பின்பொழுதில்   நான் எழுதிய கதையை அசுவாரஸ்யமாக படிக்கத் துவங்கி பின் ஆச்சர்யத்துடன் , "அட! துப்பறியும் கதை எழுதுகிறாயாக்கும். நான் கூட எதோ  அணில், முயல்  கதைகள் எழுதுகிறாயோ  என்று நினைத்தேன்." என்று பாராட்டினார். (மகனாயிற்றே, வேறு வழி!) தாசில்தாராக இருந்த அவர் அடுத்த முறை பணி நிமித்தம் திருச்சி சென்று திரும்பும்போது "இதோ உனக்கொரு பரிசு!" என்று ஒரு கசெட்டை என்னிடம்  கொடுத்து, " ஒரு கடையில் இதைப் பார்த்ததும் எனக்கு உன் கதைதான் ஞாபகம் வந்தது." என்றார். அது ஒசிபிஸாவின்  டி என் டி என்ற இசைத் தொகுப்பு. (இதில்தான்  கிலேலே கிலேலே  என்ற பாடல் இருக்கிறது. இதுதான்  13 வருடங்களுக்குப் பின்  ரஹ்மானின் இசையில்  ஜென்டில்மேன் படத்தில் பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத பாக்காதே என மாறியிருந்தது .) ஒசிபிஸாவின் பாடல்கள் ஒரு முழுமையான ஆங்கில இசை கிடையாது. அவர்கள் ஆப்ரிக்க இசைக் கூறுகளை ஆங்கிலத்தில்  அமைப்பவர்கள். (ரகே வகையும் கிடையாது.)  எனவே அந்த இசை என்னிடம் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் அந்த சிறிய வயதில் ஆப்ரிக்க இசை எனக்கு  வித்தியாசமாக இருந்ததே ஒழிய விருப்பத்தை கொடுக்கவில்லை. மறைய வேண்டிய இந்த மயக்கம்  எவ்வாறு ஒரு மாபெரும் மலை போல் என் மனதில்  நிலைத்தது என்பது அடுத்தடுத்து எனக்கு நிகழ்ந்த இசை அனுபவ நீட்சியின் பாதிப்பே.

       எண்பதுகளின்  இறுதியில் எம் சி சியில்   படித்துக்கொண்டிருந்த போது என் நண்பன் (சுமித்திரன் என்று பெயர்) நான் ஆங்கிலப் பாடல்களை ரசித்துக் கேட்பவன் என்பதால் என்னிடம் அவ்வப்போது அதைப்  பற்றி விவாதிப்பதுண்டு.  ஒருமுறை எங்கள்  உரையாடல் இப்படிப் போனது:
"Waiting For A Girl Like You  என்று ஒரு கிளாஸ் சாங் இருக்கிறது. நீ அதைக்  கேட்டதில்லையா?" அவன் class song என்பதை சொல்லும்விதமே தனி.
"இல்லை" என்றேன். உண்மையில் அந்தப் பாடல் Foreigner என்ற அமெரிக்க hard rock இசைக் குழுவின் மிகச் சிறப்பான பாடல். காதலை மென்மையான  தாலாட்டும் இசையுடன் சட்டென்று மனதைக் கவரும் கவிதையுடன் சொல்லும் மிக அருமையான  பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆனால் நான் அதை அப்போது கேட்டதில்லை.
"Hotel California பாடலாவது கேட்டிருக்கிறாயா? Welcome to hotel california such a lovely place." என்று அடுத்து கேட்டான் பாடலின் வரிகளைப் பாடிக்காட்டியபடி.
ஹோட்டல் கலபோர்னியா அமெரிக்க ராக் மற்றும் folk என்ற  நாட்டுப்புற இசைகளின்  கலவையான The Eagles  என்ற சரித்திரம் படைத்த இசைக்குழுவின் மகா அபாரமான பாடல். பாடலை முழுதும் கேட்காமல் நகர்ந்து செல்ல முடியாது. குறிப்பாக பாடலின் இறுதியில் வரும் அந்த லீட் கிட்டாரின் துள்ளிச் செல்லும்  தனி இசைத் துணுக்கு நமக்குள் மின்சாரம் போல பாயும்.
"ம்ஹூம். கேட்டதில்லை." என்றேன் அவன் குறிப்பட்ட பாடல்களை மனதில் குறித்துக்கொண்டே.
அவன் குழப்பத்துடன்,"Eric Clapton கேட்டிருக்கிறாயா?"
"இல்லை. பிடிக்காது". எரிக் கிளாப்டனின் Wonderful Tonight  என்ற காதல் கானத்தை அப்போது நான் கேட்டதில்லை.
அவன் கொஞ்சம் அதிர்ச்சியுடன்," The Beatles கேட்டிருக்கிறாயா?" என்றான்.
மறுபடியும் என்னிடமிருந்து  "இல்லை". அவர்கள் அதீதமாக புகழப்பட்டவர்கள் என்பதால் எனக்கு அவர்களின் இசை மீது அவ்வளவு நாட்டம் கிடையாது.
"நீ Let It Be கூட கேட்டதில்லையா?" என்றான் வியப்பில் விரிந்த விழிகளோடு. "கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றேன் அமைதியாக. லெடிட் பி ஒரு மிக மென்மையான தத்துவப் பாடல்.  அது சொல்லும் கருத்தைக் கொண்டு அதை போனால் போகட்டும் போடா வின் ஆங்கிலப் பதிப்பு என்று வைத்துக்கொள்ளலாம். அதை கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியதே ஆறு வருடங்களுக்கு முன்தான்.
அவன் மூர்ச்சையடையாத குறையாக  இகழ்ச்சியுடன் சொன்னான்: "பீட்டில்ஸ், ஈகிள்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், எரிக் க்ளாப்டன்  கேட்காமல் அப்படியே படார்னு Depeche Mode டுக்கு வந்துடிங்களாக்கும்!"
எனக்கோ அவனது இகழ்ச்சி  ரசிப்புக்குரியதாக இருந்தது. 80களில் வந்த அனைத்து டேபேச் மோட் இசைத் தொகுப்புக்களையும் நான் தேடித் தேடி சேகரித்ததை அவன் நன்கறிவான். ஆனால்   டேபேச் மோட் பாடல்களை அவன் கேட்டதில்லை. எனவேதான் இந்த நக்கல்.  அவன் சொன்னது கிண்டலுக்கு என்றாலும் அது உண்மையே. ஏனென்றால் நான் இப்படித்தான் ஆங்கில இசைக்குள் வந்தேன்.

       பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஈகிள்ஸ்  போன்ற இசைக் குழுக்கள் மிகப் பெரிய சகாப்தங்கள் படைத்தவை என்று அதை ஒரு புதிய தகவலாகச்  சொல்வது ரோஜாவுக்கு நறுமணம் உண்டு என்பதைப் போன்று அசட்டுத்தனமானது. 60களில் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் இவர்களது இசை எங்கும் ஒலித்தது. ஜான் லென்னன், பால் மெக்கார்டினி (பீட்டில்சை சேர்ந்தவர்கள்) மிக் ஜேக்கர் (ரோலிங் ஸ்டோன்ஸ்) டான் ஹென்லி, கிளென் ப்ரே (ஈகிள்ஸ்) போன்ற பெயர்கள் எல்லோருடைய உதடுகளிலும் உதிர்ந்தவண்ணம் இருந்த காலகட்டம் ஓய்ந்து போனபின்பே  நான் என் புதிய இசைத் தேடலைத் துவங்கினேன் இவர்களை யார் என்று அறியாமலேயே. அடிப்படையில் நான் ஒரு சராசரி BoneyM  ரசிகனாகவே இருந்தேன். என்னைக் கவர்ந்த முதல் மேற்கத்திய இசையே ஒரு போனி எம் பாடல்தான். இது இப்படி நிகழ்ந்தது.
          எண்பதுகளின் துவக்கத்தில்  உலகையே உலுக்கிய கடல் காவியம் என்ற விளம்பரத்துடன்  ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் புகழ்பெற்ற Jaws  திரைப்படம் எங்கள் ஊரில் திரையிடப்பட்டது.  நானறிந்தவரையில் அந்த ஊரில்   ஒரு ஆங்கிலப் படம் மூன்று காட்சிகளும் ஓடுவது அதுவே முதல் முறை.   நான் அதைக் கண்டு மோகம் கொண்டு, அப்போதைய தமிழ்ப் படங்களை மாற்றுக்கண்ணோட்டத்துடன் அணுக,  என் நண்பன் ஒருவன் (ஆனந்த் என்று பெயர்.அவன் தந்தை எதோ ஒரு கப்பலில் மாலுமியாகவோ வேறு எதாகவோ இருந்தார். எனவே அவனுக்கு இது கிடைத்ததாக பின்குறிப்பு வரைந்தான். ) ஒரு மாலை வேளையில் ஒரு ஆங்கில இசைத் தொகுப்பை  என் கையில் திணித்து,"கேள் இதில் ஒரு கடல் பாட்டு உண்டு. அப்படியே கடல் அலைகளின் ஓசை கேட்கும்." என்று பெருமிதத்துடன் தெரிவித்தான்.  ( என்னிடம் கொடுக்க வேண்டிய காரணம்  நான் jaws படத்தை அவ்வளவு ரசித்ததால்தான் என்று நினைக்கிறேன்.) கேட்டேன். கடல் ஓசை கேட்டது. தும் தும் என்றது தாளம். கொஞ்சம் என்னை உரசிச் சென்றது அந்த இசை. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன். ஆனால் அது என்னைக் கவர்ந்ததா இல்லையா என்றே புரிபடவில்லை. அவன் சென்றபின் நான் அந்த இசைத் தொகுப்பை என் பேனாசோனிக் ஸ்டீரியோ பிளேயரில் ஓடவிட்டேன். திருவிழாக் கூட்ட நெரிசலில்  கண்ட ஒரு அழகான பெண்ணின் முகத்தை வெகு அருகில் தனிமையில் பார்ப்பதைப் போல இம்முறை நான் நிதானமாக தனியாக அந்த இசையை உள்வாங்கினேன். என் வாழ்வின்   மிக முக்கியமான திருப்பம் அப்போது அங்கே சடுதியில் நிகழ்ந்தது. மிக முதல் பாடலாக என் செவிகளில் விழுந்த ஒரு இசை என் இசை ரசனையை  ஒரே நொடியில் தலைகீழாக புரட்டிப்போட்டது. எனக்குள் எங்கோ என் ஆத்மாவின் குரல் "இதுதான்" என்று சொல்வதைப் போலிருந்தது. என் காதலி யாரென்று எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த தேவதையின் அழகான முகம் My Friend Jack என்ற பாடல். உண்மையில் இந்தப் பாடல் 1967 இல்  The Smoke என்ற பிரிட்டிஷ் பாப் இசைக் குழுவினர் இசைத்தது. அற்புதமான கானம். ஆனால் நான் கேட்டது அந்தப் பாடலையல்ல. இது அந்த அசலின் ஆர்ப்பாட்டமான நகல். போனி எம் குழுவினரால் மீட்டெடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட இசை.

        ஒரு பள்ளிச் சிறுவனாக   நான் கேட்ட அந்த முதல் ஆங்கிலப் பாடல் என்னை அழைத்துச்சென்ற இசைச் சோலைகள் எனக்கு மிகப் புதிது. அதன் ஆரம்பமே ஒரு சிந்தசைசர் இசை சரசர வென்று இங்கும் அங்கும் அலைந்து பின் தடத்தடவென  தாளம் துவங்கி அதன் பின் கிடார் சேர்ந்துகொண்டு மை ப்ரெண்ட் ஜேக் என்று பாடல் பாட கேட்க அதகளமாக இருக்கும். பொதுவாக ஆங்கில இசையில் நாட்டம் கொண்டவர்கள் போனி எம் இசையை  பெரிதாக கருதுவது கிடையாது. அது  ஒரு எலிமெண்டரி இசை என்றே அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் அவர்களின் தாளம் ஒரே வகையைச் சேர்ந்தது. டிஸ்கோ-பாப்  இசையை மிகத் தரமான இசைத் தொழில் நுட்பத்துடன், முக்கால்வாசி cover songs எனப்படும் மற்றவர்களின் பாடல்களைப்   பாடி இசைத் தொகுப்புக்களை வெளியிட்டவர்கள்  போனி எம். (Frank Farian என்ற ஒருவரின் மூளைக் குழந்தைதான் இந்த இசைக் குழு.) மிகப் பெரிய இசை ரசனையை வைத்துக்கொண்டு மகா எதிர்பார்ப்புகளுடன் இவர்களை அணுகினால் நமக்கு ஏமாற்றமே ஏற்படும். ஆனால் ஆங்கில இசைக்குள் நுழைவதற்கு  போனி எம் ஒரு அருமையான வாசல் என்பதை மறுப்பதற்கில்லை.  என் நண்பன் குறிப்பிட்ட அந்தக் கடல் ஓசை கொண்ட பாடல் Oceans Of Fantasy .  The Magic Of BoneyM என்ற அந்த இசைத் தொகுப்பின் இருபது பாடல்களும் (El Lute, I'm Born Again தவிர) அதன் பின் எங்கள் வீட்டில் ஒலிக்காத நாட்களே இல்லை. வெகு விரைவில் போனி எம் குழுவின் அனைத்து இசைத் தொகுப்புகளும் என் வசமாயின. பள்ளிப் பருவத்தில் என் நண்பர்கள் என்னை போனி எம் பயல் என்று நக்கலடிக்கும் அளவுக்கு நான் இவர்களின் இசை மீது தீரா காதல் கொண்டிருந்தேன். கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் இரண்டு மாதங்கள் வரை இந்த போனி எம் புராணம்தான்   என் அடையாளமாக இருந்தது.  என் வகுப்பில் இருந்த  சமகால ஆங்கில இசையை கேட்கும் மேல்தட்டு வர்கத்தின் பிரதிநிதி ஒருவன் ஒரு முறை நக்கலாக, "Careless Whisper கேட்டிருக்கிறாயா?" என்று வினவினான். நான் அதே திமிருடன் கேட்டேன்:"நீ Kalim Ba De Luna கேட்டிருக்கிறாயா?". உதட்டை நாவால் வருடிக்கொண்டே இல்லை என்று தலையாட்டினான். கண்ணனுக்கு கண் என்ற கோட்பாடு தகுந்த பலனளித்த திருப்தி எனக்கு. சொல்லப்போனால் Wham! என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவின் (ஜார்ஜ் மைக்கல் பாடகராக இருந்த குழு) உலகப் புகழ்பெற்ற பாடல் கேர்லஸ் விஸ்பர். வழக்கமான அதிரடி தாளம் இல்லாது ஏறக்குறைய நம்ம ஊர் சாயல் கொண்ட மென்மையான கானம். நான் வீறாப்புடன் ஆயுதமாக வீசிய களிம்பாடிலூனா பாடலோ துடிக்கும்  டிஸ்கோ இசை. இன்றோ நான் இந்தப் பாடலை நான் கேர்லஸ் விஸ்பருக்கு கீழ்தான் வைத்திருக்கிறேன். இது எவ்வாறென்றால் சிறிய வயதில் இனிப்பை அதிகம்  விரும்பும் நாம் வயதாக ஆக  அதை விரும்புவதிலிருந்து விலகிச் செல்வது  போன்ற மாற்றமே.

       தொடர்ந்து ஆங்கில இசையே ஒலித்ததால் எங்கள் வீட்டில் என்னை விநோதமாகப்  பார்க்க ஆரம்பித்தார்கள்.  கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்ற சகிப்புத்தன்மை அவர்களிடம்  இருந்தது.  நானோ இன்னும் இன்னும் ஆங்கில இசையின் ஆழங்களுக்குள் சென்றபடியே இருந்தேன். பல பாடல்கள் கொண்ட தொகுப்பை வாங்கினால் அதை வெறுமனே கேட்பதோடு நிற்காமல் அதிலுள்ள என் மனத்தைத் தாக்கிய பாடல் குழுக்களை தேடி எனது பயணம் நீண்டது.  அப்போது நான் கேட்ட சில ஒற்றைப் பாடல்கள்  மேற்கத்திய இசையின் உன்னதனமான பல இசைக் குழுக்களிடம் என்னைக் கொண்டு சேர்த்தது.  உதாரணமாக

The Alan Parsons Project ( Eye In The Sky ), 
The Cars (You Might Think), 
Starship ( Nothing's Gonna Stop Us Now), 
Wham! ( Last Christmas), 
Lionel Ritchie (Hello), 
The Police (Every Breath You Take), 
A-Ha (Take On Me), 
Eddy Grant (Electric Avenue) 
Tina Turner (What's Love Got To Do With It), 
Stevie Nicks (You Can Talk To Me), 
Big Country (In A Big Country), 
Men At Work (Down Under), 
Duran Duran (Rio), 
Ric Ocasek (Something To Grab For), 
Donald Fagen ( The New Frontier), 
A Flock Of Seagulls ( Wishing), 
Dire Straits (Twisting By The Pool)
Don Henley (Boys Of Summer)
Glenn Frey (The Heat Is On)
Pet Shop Boys (West End Girls)
Gazebo (I Like Chopin)
Simply Red (Money's Too Tight To Mention)
Phil Collins (I Don't Care Anymore)
Steely Dan (Do It Again)
Paul Young (Every Time You Go Away)
Status Quo (In The Army Now)

போன்ற இசைக்குழுக்கள் எனக்குப் பரிச்சயமானது. நான் ஒரே பாடலோடு நின்றுவிடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. மேலே அடைப்புக்குறிக்குள்   குறிப்பிட்டுள்ள பாடல்கள் அந்தந்த குழுக்களின் முத்திரைப் பாடல்கள். ஆனால் அவைகளைத் தாண்டி இன்னும் பல நெஞ்சத்தை தழுவும் கானங்கள் அவர்களிடம் உண்டு. ஒரு குழுவின் அனைத்து இசைத் தொகுப்புகளையும் கேட்டால் வணிக அளவில் வென்ற அவர்களது பாடல்களைக் காட்டிலும் சிறப்பான மற்ற கானங்கள் இருப்பதை இனம் காணலாம். பொதுவாக நான் அவ்வாறான பாடல்களையே தேடும் பழக்கமுடையவன்.

         இந்த இசைத் தேடல் என்னை நீண்ட தொலைவுகளுக்கும், வினோதமான இடங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறது. இரவு பகல் வித்தியாசங்களில்லாமல் அலைய வைத்திருக்கிறது.  எதிர்பார்க்காத ஆச்சர்யங்களையும், திடீர் துள்ளல்களையும், மன வருத்தங்களையும், வித்தியாசமான மனிதர்களையும் சந்திக்க வைத்திருக்கிறது. அறிமுகமேயில்லாத இடங்களில் காக்க வைத்திருக்கிறது. ஒரு முறை எங்கள் ஊரிலுள்ள அக்ரஹாரம் ஒன்றில் ஒரு வக்கீல் வீட்டில் ஆங்கிலப் பாடல்கள் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றால், நம்ப மாட்டீர்கள், அந்த மாமி "வாங்கோ! காபி சாப்பிடுங்கோ முதல்ல!" என்று எதோ மாமி மெஸ்சுக்கு சாப்பிட வந்தவர்களை உபசரிப்பது போல வரவேற்றார். காபியுடன் அந்த மாமி தட்டு நிறைய எதோ தட்டையா, வட்டையோ கொண்டு வர, நாங்கள் (என் அண்ணனும் வந்திருந்தான்.) திகிலடைந்து  போய்  ஒருவாறாக சமாளித்து  Abba  வின் The Name Of The Game, Rod Steward இன் Camouflage என்ற இரண்டு இசைத் தொகுப்புகளை பதிவு செய்துகொண்டு தெறித்து ஓடி வந்தோம். அதன் பிறகு மறுபடி அங்கு சென்றதாக நினைவில்லை. வீட்டில்  சொன்னால் "அந்த மாமி நல்ல அழகா இருந்தாளா?" என்று உபரியாக சகோதரிகளின்  நக்கல் வேறு.  ராட் ஸ்டீவர்ட்டின் சிறந்த ஆல்பம் என நான் கருதும்  கேமாப்ளாஜ் எனக்குக் கிடைத்தது நான் எதிர்பாராத அக்ரஹாரத்தில் என்பதை இப்போது என்னால் நம்ப முடியவில்லை.  ராட் ஸ்டீவர்ட்டின் உல்லாச் குரலில் துள்ளும் Infatuation, Some Guys Have All The Luck, Bad For You பாடல்கள் இதில்தான் இருக்கின்றன. புன்முறுவலுடன் எங்கள் மீது வினோத பாச மழை பொழிந்த அந்த மாமியின் முகத்தை நான் இப்போது மறந்துவிட்டாலும், இந்தப் பாடல்களைக் கேட்கும் பொழுதெல்லாம் அந்த விசித்திர அனுபவத்தை அசைபோடத்  தவறுவதில்லை.


       நடுவில் எனக்கு போனி எம் கொடுத்த நண்பன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கத் துவங்க, நான் அவனை அடிக்கடி அங்கே சென்று சந்திக்க நேரிட்டது. போகும் வழியில் மியூசிக் லேன்ட் என்றொரு கடையில்  அதிரும் தாளத்துடன் ஒரு ஆங்கிலப் பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.கேட்கும்போதே மனதில் அதன் வீச்சை உணரமுடியும். பொதுவாகவே ஆங்கில இசையில் தாளங்கள் துடிப்பாக ஒலிப்பவை.  Rock Beat எனப்படும் இந்த inverted drum beat போதை தரக்கூடியது. நான் கேட்ட அந்தப் பாடல் Queen என்ற பிரிட்டிஷ் இசைக்குழுவின் The Works என்ற தொகுப்பிலுள்ள I Want To Break Free என்ற தடாலடிப் பாடல். க்வீன் இசைக்குழுவின் முதன்மைப் பாடகரான Freddie Mercury பார்சி இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியராக இருந்தாலும் தன் இந்திய அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்து வீழ்ந்த சரித்திரப் பாடகர். (இவர் எய்ட்ஸ் நோயினால் இறந்து போனார்.) இவரது குரல்  வசீகரமானது. தனித்தன்மை கொண்டது. Bohemian Rhapsody, Radio Ga-Ga, Don't Try Suicide, Another one Bites The Dust, We Are The Champions, We Will Rock You பாடல்களைக் கேட்டால் மெர்குரியின் குரல் ஜாலத்தை நீங்கள் வியக்காமலிருக்க முடியாது. குறிப்பாக Machines, Man On The Prowl, Keep Passing The Open Windows, Life Is Real, Under Pressure போன்றவை  இவரது குரலுக்காகவே கேட்கப்படவேண்டிய கானங்கள். க்வீன் இசைத் தொகுப்பை அந்த மியூசிக் லேன்ட் கடையில் கண்டெடுத்த பின் அது எங்களின் புனிதத் தலமாகிவிட்டது. ஏனென்றால் கடையின் உரிமையாளன் (ஸ்ரீதர்)  ஒரு விஷயமுள்ள ஆசாமி. அவன் எங்களுக்குத்  தெரியாத பல ராக் இசைக்  குழுக்களை பற்றி எங்களிடம் நிறைய  பேசுவான். சில  சமயங்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று ," சரி அப்பறம் பாக்கலாம்!" என்று கடையை மூடிவிட்டு மர்மமாக மறைந்து விடுவான். Third World  என்ற ஒரு ரகே குழுவின் இசையை அங்கேதான் முதலில் கேட்டேன். (Try Jah Love என்ற நெஞ்சத்தை அள்ளும் கானம்.) இவன் கொஞ்சம் வேற மாதிரி. அதாவது "அது  வேண்டாம் பசங்களா. நல்லாயிருக்காது. இதை கேளுங்கள்" என்று ஆச்சர்ய அறிவுரைகளை அவ்வப்போது அள்ளி வீசுவான் . அவன் வயதுக்குரிய இசை ரசனையை பள்ளிச் சிறுவனான என் மீது செலுத்தினான் என்று கூட சொல்லலாம்.


       என் இன்னொரு நண்பன் (அழகப்பன்) தயவில் ஊரிலிருந்த சக்தி மியூசிகல்ஸ் எங்களது அடுத்த haunt ஆக மாறியது.  அடிக்கடி கடையின் முதலாளி எல் பி ரெகார்டுகள் வாங்க திருச்சி சென்றுவிட, நாங்கள் அங்கே சென்று பெரிய ஸ்பீக்கர்களில் பாடல்களைக் கேட்போம். அவனோ சமகாலத்து தமிழ்ப் பாடல்களை போட்டு என்னை கலங்கடிப்பான். இந்தப் பாடல்களுக்கு இத்தனை பெரிய ஸ்பீக்கர் அவசியமா என்று நான் எண்ணிக்கொள்வேன். அதுதான் ஆயிரம் முறை வானொலியில் ஒலிபரப்புகிறார்களே என்ற நியாயமான சிந்தனை வரும். எப்போதோ ஒரு முறை "சரி இந்தா உனக்கும்  கொஞ்சம்" என்கிற ரீதியில் ஒன்றிரண்டு ஆங்கிலப் பாடல்களுக்கு அனுமதி அளித்தான். அப்படிக் கேட்ட ஒரு பாடல் என்னைத் திணற அடித்தது. அது  Somebody's Watching Me என்ற குதிக்கும் தாளம் கொண்ட அபாரமான பாடல். சரியான ராக் துள்ளல். பாடலின் துவக்கத்திலேயே திடும் திடும் என தாளம் ஆங்காரமாக குதிக்க, அதன் பின் ஒரே ஹை ஸ்பிரிட்டட்  இசைதான். I always feel like somebody's watching me என்ற வரியை மட்டும் அப்போது உச்சத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற   Michael Jackson பாடியிருப்பார். சிலர் இதை அவருடைய பாடல் என்று நினைப்பதுண்டு.உண்மையில் அது Rockwell என்ற கறுப்பின இசைஞனின் கானம். இதில்தான் என் விருப்பத்திற்குரிய அற்புதமான Knife என்ற கலைந்த காதலை துயரத்துடன் சொல்லும் பாடலும் இருக்கிறது.


         டிஜிடல் இசை கொண்டு  பாடல்கள் உருவாக்கிய -தமிழில் கம்ப்யூட்டர் இசை என்று சொல்வது வழக்கம் - முதன்மையானவர்களில் ஒருவரான Giorgio Moroder என்ற இத்தாலிய இசைஞனின் E=Mc2, From Here To Eternity என்ற இரண்டு இசைத் தொகுப்புகளையும் நான் இங்கேதான் கண்டெடுத்தேன். ஜார்ஜோ ஒரு அற்புதமான இசைஞன். டிஜிடல் இசையின் பிதாமகன் என்று தாராளமாகச் சொல்லலாம். இவர் Donna Summer என்ற கறுப்பின பாடகியுடன் சேர்ந்து அமைத்த பாடல்கள் பெரிய வெற்றி பெற்றவை. (பொதுவாக ஆங்கில இசை என்றாலே நமக்கு வெள்ளைத் தோல் ஆசாமிகள்தான் நினைவுக்கு வரும் என்பதால் இந்த கறுப்பின என்ற பதத்தை உபயோகிக்கிறேன். மற்றபடி வேறு அரசியல் இல்லை.) E=Mc2 ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிகப் புகழ்பெற்ற விஞ்ஞான விதி என்பதை நான் ஜார்ஜோ மூலம்தான் அறிந்தேன்! 70களின் துவக்கத்திலேயே இவர் இந்த டிஜிடல் இசைக்கு வித்திட்டார்.  77 இல் வந்த ப்ரம் ஹியர் டு இடர்நிட்டி டிஜிடல் இசையின் முன்னோடியாக இன்று பார்க்கப்படுகிறது. இதிலுள்ள அனைத்துப் பாடல்களும் என்றும் அலுக்காத, தெவிட்டாத மேற்கத்தியத்  தேன் துளிகள். குறிப்பாக I'm Left, You're Right, She's Gone என்ற பாடல் நம்மை வசியப்படுத்தும் இசைவண்ணம்.  13 இசைத் தொகுப்புகளுடன் பத்து ஹாலிவுட் படங்களையும்  இவரது டிஜிடல் இசை அலங்காரம் செய்திருக்கிறது. Top Gun ( டாம் க்ரூஸ் super stardom அடைந்த படம்) படத்தின் கையெழுத்துப் பாடலான Danger Zone, Take My Breath Away,  Flash Dance இன் What A Feeling போன்றவை சில உதாரணங்கள்.

         வெளிமாநிலத்தில் இருந்த ஒரு  உறவினர்  ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது ," நாள் பூரா இந்த காட்டுக் கத்தல்தான்" என்று புகார் வாசிக்கப்பட்டது. அவர் எங்களுக்கு ஏதாவது உபயோகமாக அறிவுரைகள் சொல்வார் என்று புகார் சொன்ன என் அம்மா எண்ணியிருக்கலாம். ஆனால் அவரோ ,"ப்பூ! இதெல்லாம் சும்மா. Born In The USA ன்னு ஒரு பாட்டு இருக்கு. Springsteen ன்னு ஒருத்தன் பாடுவான். அப்படி கத்துவான் பாட்டு பூராவும். இதெல்லாம் ஒண்ணுமேயில்ல." என்று அலட்சியமாக சொல்லி  எனது இசைத் தீயின் மீது மேலும் பெட்ரோல் ஊற்ற, நான் அடுத்த முறை வழக்கமாகச் செல்லும் மியூசிக் லேன்ட் கடைக்குச் சென்ற போது இதைத்  தெரிவித்தேன். "அந்தப்  பாட்டு இருக்கிறதா?" எனக்கேட்டேன். அமெரிக்காவில் தி பாஸ் என்று அறியப்படும் ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் ஒரு folk இசை நாயகன்.  அமெரிக்க சமூகத்தின் மத்தியதர  மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும், வலிகளையும் சுடும் நிஜங்களையும் தன் பாடலில்  வடித்து உச்சக் குரலில் வெறிகொண்டு பாடுபவர். பார்ன் இன் தி யு எஸ் எ  மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு அமெரிக்க போர்வீரனின் குற்ற உணர்ச்சி கலந்த நாட்டுபற்றை வெளிப்படுத்தும் ஒரு கதறல் கானம். நான் முன்பு குறிப்பிட்ட  அந்த ஸ்ரீதர்  "அதையே காட்டுக் கத்தல்ன்னா இதை என்ன சொல்றது?" என கேட்டுவிட்டு உடனே ஒரு எல் பி ரெகார்டை எடுத்து ஓட விட்டான். பாடல் துவங்கியதுமே bass கிடார் ஓசை தும் என அதிர, தாளம் எகிற, அடுத்து துப்பாக்கிக்குண்டு செல்லும் வேகத்தில் ஒரு மனிதக் குரல் எதையோ படபடவென்று பாட, இசை தறிகெட்டு ஓட, ஒரு வினாடி கூட நிற்காது ஆங்காரமாக செவிகளை பதம் பார்க்கும் ரிதம் கிடார் விர்ரென்று சூடேற,  எனக்குப்  பொறி பறந்தது. முதல்  முறையாக அப்போதுதான் அப்படிப்பட்ட இசையை கேட்கிறேன். அது பிரிட்டிஷ் heavy metal இசைக்குழுவான Iron Maiden இசைத்த The Duelists என்ற பாடல். Powerslave  என்ற அவர்களின் இசைத் தொகுப்பில் இது உள்ளது.  அதை நான் முழுதாகக் கூட கேட்கவில்லை. ஏனென்றால் கேட்க முடியவில்லை. "இது என்ன?" என்றேன் காதைத்  தேய்த்தபடி. "நீ சொன்ன அந்த காட்டுக் கத்தல் இதுதான். வேண்டுமா?" என்றான் அவன் அதிபயங்கரமாக சிரித்துக்கொண்டே. அந்த மாதிரியான பரிசோதனைகளுக்கு அப்போது நான் தயாராக இல்லை. அயன் மெய்டன் ஒரு ஹெவி மெட்டல் இசைக் குழு என்பதும் அவர்களின் இசை இரைச்சலாகத்தான் இருக்கும் என்பதையும்  அதன்பிறகுதான் அறிந்தேன். மூன்று வருடங்கள் கழித்து அந்த "இரைச்சலை" பதிவு செய்து கேட்டதை விட இன்று நான் மிகவும் விரும்பும் இசைத் தொகுப்பாக அது மாறிவிட்டது என்பது தனிக்கதை. இதில்தான் எஸ் டி கோல்ட்ரிட்ஜின்  The Rime Of The Ancient Mariner என்ற கிளாசிக் கவிதையை தங்களின் அதிரும்  ஆர்ப்பாட்டமான இசை மூலம்  முற்றிலும் வேறு பரிமானத்திற்கு எடுத்துச் சென்று ஒரு ராக் சல்யூட் அடித்திருப்பார்கள். பதிமூன்று நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் பாடல். கேட்டு முடித்ததும் காதுக்குள் கண்டிப்பாக மழை பெய்யும். இன்றோ death metal, black metal வகையைச் சேர்ந்த   Cradle Of Filth, Celtic Frost, Morbid Angel, Napalam Death, Obituary போன்ற இசைக் குழுக்களால் இதை விட ஆயிரம் மடங்கு வீரியமான அலறல் இசை உருவாக்கப்பட்டு கேட்பவரை தெறித்து ஓடச் செய்கின்றன. இவைகளுடன் ஒப்பிடுகையில் Iron Maiden, Slayer, ACDC, Judas Priest, Black Sabbath, Deep Purple, Uriah Heep, Dio, Led Zeppelin, Scorpions போன்றவைகள் இன்றளவும் கேட்டு ரசிக்கக்கூடிய இசைக்  குழுக்கள் அவை ஹெவி மெட்டல் வகையாக இருந்தாலும்.       இவ்வளவுக்கும் என் அம்மா "காட்டுக் கத்தல்" என்று புகார் செய்தது Eddy Grant, Queen, Giorgio Moroder, Wham  போன்ற  சாதாரணமான இரைச்சல்களற்ற rhythm-based இசைக் குழுக்களைத்தான். எடி கிராண்ட் ஒரு கறுப்பினத்தை சேர்ந்த  மகா இசைக் கலைஞன். இவரது இசை Ringbang என்ற வகையை சேர்ந்தது. சிலர் இதை funk என்று வகைப்படுத்தினாலும் எடி இதை ஏற்றுக்கொண்டதில்லை. 15 இசைத் தொகுப்புகளை வெளியிடுள்ள இவர் பல அற்புதமான பாடல்களை படைத்தவர். Going For Broke என்ற தொகுப்பில் வரும் இவர் பாடிய ஒரு பாடல் Telepathy. இதை அவர் பாடும் விதம் கேட்பதற்கு  நல்ல பசி என்று சொல்வதைப் போலிருக்கும். மேலும் இதை அவர் சொல்லிவிட்டு உடனே ஊ ஊ ஊ என்று வினோத சத்தம் போடுவார். கேட்பதற்கு பசியில் அவர் கத்துவது போலவே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் எடி கிராண்ட் ஒரு பாடலின் தலைப்பை அப்பாடல் முழுதும் நூறு முறையாவது திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பார் எதோ நர்சரி ரைம் போல. எனவே நல்ல பசி எங்கள்  வீட்டில் ஒரு மிகப் புகழ் பெற்ற பாடலாகிவிட்டது.  எனவே சில சமயங்களில் என்னைச் சீண்டும் விதத்தில் "என்ன இன்னைக்கு  அந்த பிச்சைக்காரன் பாடலியா?" என்று வீட்டில்  வெறுப்பேற்றுவார்கள். பல ஆண்டுகளுக்குப்  பிறகுதான் ஆங்கிலத்தில் th என்ற ஒலியை தடியாக த என்று உச்சரிக்காமல் (உதாரணமாக தண்ணீரில் இருக்கும் த) மென்மையாக,  லேசாக எஸ் ஓசை வரும் விதத்தில் stha என்று உச்சரிக்கவேண்டும் என்பதை அறிந்தேன். எனவே டெலிபதி நல்ல பசியாக மாறியதில்  வியப்பொன்றுமில்லை. War Party என்ற பாடலில் முதலாளித்துவ வர்கத்தின் ரத்தம் தோய்ந்த பண வேட்டையை எடி கிராண்ட் கடுமையாக சாடியிருப்பார். அதே  சமயம் Till I can"t Take Love No More என்று காதலின் கருப்பான பக்கத்தையும் மிக பக்குவமாக வெளிப்படுத்தியிருப்பார். நீங்கள் எடி கிராண்டை ரகே, Folk , Funk, பாப் என்று  ஒரு கோட்டுக்குள் கொண்டுவரமுடியாது.  அதுதான் அவரது சிறப்பு. அவரை நீங்கள் வண்ணம் தீட்ட முடியாததே எடியின் தனித்தன்மை.  அவர் தன் இசையை ரிங் பேங் என்ற வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டார். Electric AvenueBaby Come Back, I Don't Wanna Dance போன்ற பாடல்கள் பிரபலமானவை. இவரது பாடல்களைக் கேட்டுதான் எனக்கு Wanna (want to) Gonna (going to) என்ற பதங்கள் பரிச்சயமாயின.


     இதற்கிடையில் மகேஷ் என்றொரு நண்பன்  எங்களுக்குப் பழக்கமானான். இவன்  ஒருமுறை "எதோ Modern Talking என்று ஒரு க்ரூப் இருக்கிறதாமே? அந்தப் பாடல் எதுவும் இருக்கிறதா?" என்று கேட்டான்.
  "இல்லை."என்றேன் கவனமின்றி. மாடர்ன் டிரெஸ் தெரியும். மாடர்ன் டாக்கிங் எல்லாம் கேள்விப்பட்டதேயில்லை அப்போது. "ஏன்?"  என்றேன் பிறகு. அவன் தொடர்ந்து சொன்னது படு திகிலாக இருந்தது.
 "ஒன்றுமில்லைஅவர்களின் பாடல்களைக் கேட்டவர்களெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்களாம்." என்று ஒரு திரியை பற்ற வைத்துவிட்டுப் போய்விட்டான்.
    அவன்  இதை வெறுமனே சும்மா சொல்லாமல் உண்மையாகவேதான் கூறினான். அடுத்த இலக்கு அந்த மாடர்ன் டாக்கிங்தான் என்று முடிவு செய்துகொண்டு (அப்போது திருச்சி செயின்ட் ஜோசெப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்) திருச்சியிலுள்ள சிங்காரத் தோப்பில் ஒரு குறுகிய நான்கு மாடிக் கட்டிடத்தின் ஒரு கடையில் (ஓம் சக்தி ரிகார்டிங் செண்டர்) கடைசியில் அந்தத்  தற்கொலை இசைக் குழுவை கையும் களவுமாகப் பிடித்தாயிற்று. அவர்களின் முதல் ஆல்பத்தை பதிவு செய்து கொண்டு வந்து டேப்பில் ஓட விடும்வரை ஜாஸ் படத்தில் அந்த சுறாவைக் காட்டாமல் இருப்பதால்   நமக்கு பதற்றம்   எகிறுவதைப் போல உள்ளுக்குள் ஜிவ்வென்று ஒரு இனந்தெரியாத உணர்ச்சி படபடத்தது. டேப்பில் விஷ்க் விஷ்க் என்று சுழன்ற அந்த ப்ரவ்ன் வண்ண இசை நாடா கொஞ்ச நேரத்தில் இசைக்க ஆரம்பித்தது.  முதல் பாடல் You're My Heart, You're My Soul.  கும் கும் என்று மேடுபள்ளங்களில் பயணிக்கும்போது நமக்கு ஏற்படும் அதிர்வலைகளைப்  போன்ற தாளத்துடன் அது ஒலித்தது. You Can Win If You Want  என்ற அடுத்ததும் அதே வகையான மெத்தை மீது மோதும் சுகமான கானம். மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் ஒன்றில் கூட அவன்  சொன்ன அந்தத் தீவிரமான தற்கொலைத் துணுக்கு  மருந்துக்கும் இல்லை. உண்மையில் மாடர்ன் டாக்கிங் இருவர் கொண்ட ஒரு ஜெர்மானிய இசைக் குழு. இவர்கள் யூரோ பாப் அல்லது சிந்த் பாப் (Synth-Pop ) எனபடும் டிஸ்கோ இசையின் புத்துப்பிக்கப்பட்ட இசை வடிவம். மாடர்ன் டாக்கிங் இசையைக் கேட்டால் குதித்து எழுந்து நடனமாடத் தோன்றுமே ஒழிய மாடியிலிருந்து குதித்து விடத் தோன்றாது. Brother Louie, Atlantis Is Calling (SOS For Love), Let's Talk About Love, Geronimo's Cadillac, 10000 Lonely Drums, Operator Gimme 609, Romantic Warriors, Locomotion Tango போன்ற பாடல்களைக் கேட்டால் ஒரே நொடியில்  இவர்களின் இசையை ஒரு கும்மாளமான குதூகலம்  என்று சொல்லிவிடலாம். ஏறக்குறைய எல்லா பாடல்களுமே காதல் கீதங்களே. ஒரே வார்ப்பில் பாடும் முறை, ஒரே தாளம், ஒரே கோரஸ் என என்பதுகளின் டிபிகல் டிஸ்கோ. வழக்கமாக ஆங்கிலப் பாடல்களில் ஒலிக்கும் விர்ரென்ற லீட் கிடாரின் riff கூட இவர்களிடம் கிடையாது. சொல்லப்போனால் ரொம்ப சாதுவான  சைவ இசை. அடுத்த முறை அந்தத்  "தற்கொலை" மகேஷ் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் வேண்டுமென்றே அட்லாண்டிஸ் இஸ் காலிங் என்ற கேட்கவே மனது துள்ளும் பாடலை சத்தமாக வைத்தேன். பேசிக்கொண்டிருந்தவன் அப்பாடல் முடிந்ததும் என்னை நோக்கி," ரொம்ப அருமையா இருக்கே இந்தப் பாட்டு. ஏன்னா அடி? என்னது இது? மைக்கல் ஜாக்சனா?" என்று கேட்டான். "மாடர்ன் டாக்கிங்." என்றேன் நான். "நீ சொன்னதுதான். இத்துடன் இருபதாவது முறை கேட்கிறேன்."   என்று பின்குறிப்பு வரைந்தேன். திகைத்துப்போய் அவன் கொஞ்சநேரம் தீவிரமாக யோசனை செய்வதுபோல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.  பின்னர் ஆண்ட்டி-க்ளைமாக்ஸ் போல  அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ஒரு நல்ல நடன இசையை மரண இசை என்று சொல்லிவிட்டானே என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு ரசிக்கத்தகுந்த இசைக் குழுவை இவன் மூலமாக அறிந்ததற்காக அவனை "மன்னித்து" விட்டோம்.


           ஆனால் உண்மையில் மேற்கத்திய ராக் இசையில் இவ்வாறான தற்கொலையைத் தூண்டும் இசையும் பாடல்களும் ஏகத்துக்கு இருக்கவே செய்கின்றன. குறிப்பாக ஹெவி மெட்டல் வகையச் சேர்ந்த இசைக் குழுக்கள் இந்த விஷயத்தில் கை தேர்ந்தவைகள். ஜூடஸ் ப்ரீஸ்ட், ப்ளேக் சேபத், Ozzy Osborne என சில  இசைக்குழுக்கள் கேட்பவரை தன் கதையை உடனே முடித்துக்"கொல்ல" வைக்கும் வசிய சக்தி கொண்டவை என்ற குற்றச் சாட்டு மேற்குலகில் நிறைய உண்டு. மேலும் Devil Worship எனப்படும் சாத்தான் வழிபாடும் இந்த இசைக் குழுக்களிடம் உண்டு. மரணத்தைப் போற்றும் பல கவிதைகளை மனதுக்குள் விதைக்கும் வீரியப் பாடல்களாகப் பாடுவதும் இதற்கு ஒரு காரணம். நம்ப முடியாத தகவலாக தி ஈகிள்ஸ் இசைக்குழுவின் மிக சிறப்பான புகழ்பெற்ற பாடலான ஹோட்டல் கலபோர்நியா கூட இந்த சாத்தான் வழிபாட்டுப் பாடலே என்று சொல்லப்படுகிறது. Back Masking என்று அழைக்கப்படும் மர்மமான பின்குரல் ஓசைகள் இவர்களின் இசையில் ஒலிக்கும் என்றும் அதை ஒரு விசேஷ ப்ளேயரில் (பின்பக்கமாகச் சுழலும் ரெகார்ட் ப்ளேயர்) கேட்கலாம் என்றும் கருத்து உண்டு. நான் இதை தீவிரமாக நம்பி சில கசெட்டுக்களை வாங்கிய கடைகளிலேயே திருப்பிக் கொடுத்த விநோதமும் நடந்திருக்கிறது. இருந்தும் அந்த தற்கொலைப் பாடல் உண்மைதான். அது  Rezso Seress என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைஞரின் Gloomy Sunday என்ற  பாடல்.  பலர் இதைக் கேட்டு உடனே "போய்" விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. விசித்திரமாக அந்த ரெசொ செரஸ் என்பவரே இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பாடல் ஸ்பீல்பெர்க்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்ற படத்தில் கூட சில காட்சிகளின்  பின்னணியில் ஒலிக்கும்.

           இந்த சமயத்தில்தான் உலகை ஒரு கறுப்பினக்  கலைஞன் தன் பக்கம் திருப்பிய அதிசய நிகழ்வு நடந்தது. அது மைக்கல் ஜேக்ஸன் என்ற புதிய அத்தியாயத்தை இசையுலகில் துவக்கியது. எங்கும் அவரைப் பற்றிய செய்தியாகவே இருக்க, அதீத எதிர்ப்பார்புகள் என்னை  அவரது இசை மீது ஒரு நாட்டத்தை ஏற்படுத்தின. Thriller இசைத் தொகுப்பு வந்ததும் அதை உடனே  வாங்கிக்  கேட்ட போது ஒரே  ஒரு பாடலைத் தவிர மற்ற எதுவும் என்னைக் கவரவில்லை. அது மிகப் புகழ் பெற்ற Beat It. மேலும் அவரது இசை அப்போது நான் கேட்டுக்கொண்டிருந்த இசையை விட்டு ,எனது பார்வையில், வெகு கீழே இருந்தது. இசையே இல்லை என்றுதான் சொல்வேன். வெறும் மனிதக் குரல் அதுவும் பெண் குரல். பாடலைவிட அவர் கோமாளித்தனமாக ஹீ ஹீ என்று கதவுக்கடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி மாதிரி கிறீச்சிடுவது எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. இருந்தும் பீடிட் பாடல் என்னை ஊடுருவிச் சென்றது.  அடிதடியான வெற்றிப் பாடல். வெறியான குரல் சீறும் இசை, துடிக்கும் தாளம் என்று அது ஒரு திடீர்மழை. சில வருடங்களுப் பிறகுதான்  பீடிட் பாடலில் அதன் அடிநாதமாக பாடல் முழுதும் அதிரும்  சுரீர் ரென்ற கிடார் இசை Eddie Van Halen இசைத்தது என்பதை அறிந்தேன். அந்தப் பாடலை எடி வான் ஹேலனின் கிடார் இசையின்றி கற்பனை செய்து பாருங்கள். மிகச் சாதாரணப் பாடலாகவே அது இருக்கும். இந்த வான் ஹேலன் உலகின் மிகச் சிறந்த, மிக  விரைவாக   கிடார் இசைப்பவர்களில் ஒருவர். Van Halen என்ற இசைக் குழுவின் And The Cradle Will Rock, Jump, Panama, I'll Wait, Why Can't This Be Love போன்ற பாடல்களைக் கேட்டால் எடியின் கிடார் வேகம் நம்மை போதை கொள்ளச் செய்யும். Twister படத்தின் இறுதியில் வரும் ஒரு மிக நீண்ட தனி கிடார் இசை இவருடையதுதான். மைக்கல் ஜேக்சனை திறமையான musician என்பதைவிட ஒரு சிறந்த performer என்று சொல்லலாம். ஆடுவார், பாடுவார், உருளுவார், புரளுவார், பின்னோக்கி நடப்பார், தொடைகளுக்கு நடுவில் அவ்வப்போது தேய்த்துக் கொள்ளுவார். இது பார்ப்பதற்கு ரசிக்கும்படி இருக்கலாம். ஆனால் இசை என்பது கண்டிப்பாக பார்த்து ரசிப்பதற்கல்ல என்பது என் திடமான எண்ணம். எம் ஜே வுக்குப் பிறகே மேற்கத்திய இசையில் இதுபோன்ற இசையைக் "கண்டு" மதிமயங்கும் புதிய மோகம் பிறந்தது என்று கூட சொல்லலாம். மேடையில் தோன்றும் இசைஞர்களை ஆராவராத்துடன் வரவேற்பதை இதில் கணக்கில் கொள்ள வேண்டாம். இருந்தும் தற்போது மேற்கத்திய இசையில் காணப்படும் அசிங்கமான மாற்றங்கள் மைக்கல் ஜேக்சனைப் பற்றிய என் ஒப்பீடுகளை சற்று சீர்செய்து விட்டதைப் போல உணர்கிறேன். ஏனென்றால் ஹிப்-பாப், ராப், டெத் மெட்டல், டீன் பாப் போன்ற சகித்துக்கொள்ள முடியாத கழிவுகளைக் காணும்போது (எங்கே கேட்பது?)  இந்தக் கருமங்களுக்கு    எம் ஜே எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம்  இப்போது எனக்கு வந்திருக்கிறது.

   இன்னும் நிறையவே இருக்கிறது .ஆனால் இடம் போதாது என்று எண்ணுகிறேன். ஆகையால் ....      அடுத்து; இசை விரும்பிகள் XVIII - எல்லைகளற்ற இசைவெளி.

44 comments:

 1. ரிம்போச்சே4 May 2014 at 05:34

  //நம்ப முடியாத தகவலாக தி ஈகிள்ஸ் இசைக்குழுவின் மிக சிறப்பான புகழ்பெற்ற பாடலான ஹோட்டல் கலபோர்நியா கூட இந்த சாத்தான் வழிபாட்டுப் பாடலே என்று சொல்லப்படுகிறது. //

  ஹோட்டல் கேரளாபோர்னியா கேட்டிருக்கிறீர்களா? கட்டாயம் மரணம்தான் :)

  http://www.youtube.com/watch?v=BHxEO28s8Mg

  On serious note, do you like Carlos Santana's "Maria" ?

  ReplyDelete
 2. ரிம்போச்சே4 May 2014 at 07:39

  இவ்விடுகையில் வருபவர்களுக்கும் நமக்கும் வெகு தூரம்.

  வவ்வால் வந்து triviaக்களை அள்ளி வீசுவார் என நினைக்கிறேன்.

  அமுதவன் அய்யா வந்து சில பித்தர்கள் இதையெல்லாம் கேட்காமல் 80களின் இசையிலேயே மயங்கிக் கிடப்பதாக வசையலாம் :)

  சேகர் அய்யா வந்து எப்படி இளையராஜாவின் ஏகபோகம் மேற்குலக இசையைக் கேட்க விடாமல் தமிழக ரசிகர்களைத் தடுத்தது என விளக்கலாம்.

  ReplyDelete
 3. Hello Mr. Kaarigan,
  Thanks for the post I've been looking for. I'm left speechless. Mesmerizing!
  It's a pleasure reading your humour-laced writing which entirely hangs on your personal side yet a lot more of your music taste has been revealed than your inside life. A few achieve this. Congrats!
  Coming to the stuff you have put in here I have a feeling that this post is incomplete (which you yourself admitted). But enough to figure out how rock has shaped your taste of music.

  Curiously enough, some keep asking the same old question how one can enjoy Depeche Mode and the like without ever delving in to the world of Beatles, Stones and Clapton..etc..Well, I ,of course, started with The Beatles in my teens which was about in the middle of 70s. I like their melody and music.

  It's sheer joy to know of your adventurous leap in to the world of western music like the Brahmin lady's home and the way you've put it simply blows one over. I enjoyed every word of yours. Great.

  Be it Foreigner,Third World, Eddie Grant or simply The Eagles you have enlivened your experience of the electrifying 80s with your glorious writing.

  I'll be back soon. More to share.

  ReplyDelete
 4. வாருங்கள் ரிம்போச்சே,
  என் எழுத்துக்களை தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்து மகிழ்ச்சி.

  அந்த ஹோட்டல் கேரளாபோர்னியா கேட்டு ரசித்தேன். நன்றி. இதுபோன்ற spoof பாடல்கள் ஆங்கிலத்திலும் நிறையவே இருக்கின்றன. எம் ஜே வின் beat it பாடலை eat it என்று படு பயங்கரமாக பகடி செய்திருப்பார் Weird Al Yankovic என்ற spoof பாடகர்.

  https://www.youtube.com/watch?v=ZcJjMnHoIBI

  கார்லோஸ் சன்டானா "கை" தேர்ந்த கிடாரிஸ்ட். Beyond Appearances என்ற ஆல்பம் எனக்குப் பிடிக்கும். பெரிய வெற்றிபெற்ற The Black Magic Woman சண்டானாவின் சிறப்பான பாடல்களில் ஒன்று. அருமையான இசை. மற்றபடி மரியா, ஸ்மூத், போன்ற பாடல்கள் மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.

  இந்த பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக வெகு குறைவாகவே இருக்கும். அமுதவன் வர வாய்ப்பிருக்கிறது. வவ்வால் என் தளத்தின் மீது பறந்து பல நாட்களாகிவிட்டன. ஆளையே காணோம். எதோ Eco -location பிரச்சினையாக இருக்கலாம். நிறைய பேர் விரும்பிக் படிக்கக்கூடிய பதிவாக இது இருக்காது என்று எனக்குத் தெரியும்.

  உங்களின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 5. வணக்கம் காரிகன்,

  இந்த சாமானியனின் வருகையை இங்கு நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள், இல்லையா ?!

  நான் இந்தியாவில் இருந்தவரை எனக்கு தெரிந்த மேற்கத்திய இசை போனி எம்மும், சில மைக்கேல் ஜாக்சன் பாடல்களும்தான் ! பாதி தமிழும் பாதி பிரெஞ்சும் கலந்து பேசும் ழொசேப் ( ஜோசப் என்பதின் பிரெஞ்சு உச்சரிப்பு ! முதன் முதலாக அவன் வீட்டுக்கு போய் " ஜோசப் " இருக்கிறானா என கேட்ட போது, அவனின் தந்தை என்னை பார்த்த பார்வை.... !, நிற்க, அடியேனின் பூர்வீகம் பாண்டிச்சேரி யூனியனை சேர்ந்த காரைக்கால் ) வீட்டில்தான் rivers of babylon பாடலை கேட்டேன் !

  பதிணெட்டு வயதில் பிரான்ஸ் வந்த பிறகுதான் மேற்கத்திய சங்கீத மகா கடலின் கரையை எட்ட நின்று " கேட்க " முடிந்தது !

  நீங்கள் குறிப்பிட்ட புகழ் பெற்ற மேற்கத்திய ரோஜாக்களின் வாசணைகளையே அதிகம் அறிந்தவன் நான் !

  Lionel Ritchieயின் say you say me வசீகரம்மிக்க பாடல், அதே போல நீங்கள் குறிப்பிட்ட The policeன் Every breath you take !

  Phil Collinsன் In the air tonight பாடலையும், Status Quoன் In the army now பாடலையும் எங்கு கேட்டாலும் மெய்சிலிர்த்துவிடும் எனக்கு ! முக்கியமாய் ஏகாந்தமான இரவுகளில் !!

  Queen இசைகுழுவின் Freddie Mercury நிச்சயமாய் ஒரு சகாப்தம் ! I Want To Break Free பாடல் தடாலடி என்றால், இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அவர் பாடிய We Are The Champions இன்றளவும் கால்பந்து ரசிகர்களை ஜன்னி கொள்ளவைக்கும் பாடல் ! அவரின் We will rock you பாடலின் டிரம்ஸும், எலெக்ட்ரிக் கிதாரும் இதய துடிப்பை எகிறச்செய்யும் !ஒருவகையில் எய்ட்ஸ் நோயை உலகம் அறியசெய்த சோகத்துக்கும் அவர் பிரபலமானார் ! எய்ட்ஸுக்கு பலியாகிய முதல் பிரபலம் Freddie Mercury !

  மைக்கேல் ஜாக்சனை பற்றி இன்னும் என்ன சொல்ல ?!... அவரின் பிரபல பாடல்களைவிடவும் அருமையான சில பாடல்களை அவர் ஆரம்பத்தில் கொடுத்துள்ளார் என தோன்றுகிறது !

  உங்கள் லிஸ்ட்டில் Bee Geesன் Stayin' Alive வை விட்டுவிட்டீர்களே ?! உச்ச ஸ்தாயில் பாடப்படும் அந்த பாடலும் ஒரு பரவச அனுபவம் !

  நான் ரசித்த சில பாடல்களையும் கொடுத்துள்ளேன். நேரம் கிடைத்தால் கேட்டு பாருங்கள் !
  boy george - do you really want to hurt me
  https://www.youtube.com/watch?v=c9MdW8RISCI

  Cat Stevens - My lady d'arbanville

  https://www.youtube.com/watch?v=vjfI3uSN8DQ

  Lemon Tree - Fool's Garden

  https://www.youtube.com/watch?v=phEnpdDusss

  பாரீஸ் நகரின் பெரும்பான்மையான டிஸ்கோத்தேக்களின் இரவு கொண்டாட்டம் ராப், டெக்னோ பாடல்களுடனும் அல்லது அந்த சமயத்தின் பிரபல பாடல்களுடனும் ஆரம்பிக்கும். நேரம் செல்ல செல்ல ஒரே விதமான தும் தும் இசைக்கு களைத்த கூட்டம் நடுநிசி நெருக்கத்தில் அரங்கத்தில் சோம்பி நிற்கும் நேரத்தில் deegee abba, bee gees போன்ற குழுக்களின் டிஸ்கோ பாடல்களை ஒலிக்கவிடுவார்... அப்போது கூட்டத்தினரிடையே எழும் ஆராவார , பரவச Nostalgie ஜாலாட்டத்தை ( வார்த்தைக்கு நன்றி காரிகன் ! )அங்கிருந்து பார்த்தால்தான் புரியும் !

  நன்றி
  சாமானியன்
  ReplyDelete
 6. ஒரு பாடலை குறிப்பிட மறந்துவிட்டேன் !

  Eurythmics - Sweet Dreams Are Made Of This
  https://www.youtube.com/watch?v=qeMFqkcPYcg

  மிக அருமையான இசையையும் தத்துவ வரிகளையும் கொண்ட பாடல் !

  ReplyDelete
 7. Welcome Mr. Oliver,
  Thanks for the comments.
  Still much more awaits. It's highly impossible to write all about Rock in one single post, let alone Western music as a whole. There are some known and mysterious bands with whom I have some of the most telling moments of my life. Simply words fail to drop to describe those unearthly experiences.

  You said more to share.. Waiting..

  ReplyDelete
 8. காரிகன்,
  அப்பப்பா! அபாரம். என்ன ஒரு எழுத்து நடை. வியக்க வைக்கிறீர்கள்.
  எனக்கு ஆங்கில இசையில் அதிக பரிச்சயம் கிடையாது. அபா, போநி எம், அப்பறம் funky Town என்ற பாடல் ஒன்று,(எந்த க்ரூப் என்று தெரியவில்லை), எம் ஜே, பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், பிரிடினி ஸ்பியர்ஸ், மேடோனா,தெரியும். நீங்கள் குறிப்பிட்டுள்ள க்ரூபுக்களைப் பற்றி இப்போதுதான் அறிந்தேன். நன்றி.
  அந்த மாடர்ன் டாகிங் கிடைத்த அனுபவம் அருமையாக இருந்தது. அந்த மகேஷ் அப்பறம் வேறன்ன புதிய இசைக் குழுக்களை உங்களுக்கு அறிமுகம் செய்தார் என்று சொல்லவில்லையே?
  சிறந்த படைப்பு. ஆங்கில இசை பற்றி இருந்தாலும் தெளிவாகவே எழுதி படிக்க அலுப்பிலாமல் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 9. வாங்க சாம்,
  உண்மைதான். உங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்ன? பரவசப்படுத்திவிட்டீர்கள். நன்றி.

  நீங்கள் காரைக்கால் என்றதும் எனக்கு என்னுடன் விடுதியில் இருந்த பெஞ்சமின் என்ற நண்பன் ஞாபகத்துக்கு வருகிறான். பி காம் படித்தான் என்று நினைவு.

  பிரான்ஸ் சென்றதும்தான் ஆங்கில இசையை இன்னும் ஆழமாக அறிந்ததாகச் சொன்னீர்கள். எனக்கு அமெரிக்க இசைக் குழுக்களை விட அயர்லாந்து, ஸ்காட்லாந்து,பிரிட்டிஷ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன் என்று ஐரோப்பிய இசைக் குழுக்களைத்தான் அதிகம் பிடிக்கும். அவர்களின் இசை பன்முகம் கொண்டது. பிரான்ஸ் என்றதும் அங்கே பிரபலமான Gypsy Kings ஞாபகம் வருகிறது. கேட்டிருப்பீர்கள். A-Ha ஒரு நார்வே நாட்டைச் சேர்ந்த இசைக் குழு. டேக் ஆன் மீ பாடலை அதன் விடியோ வுடன் பார்த்துக் கேளுங்கள். நாஸ்தியாக இருக்கும்.

  ரிச்சி யின் ஹெலோ, செய் யு செய் மீ, டான்சிங் ஆன் தி சீலிங், ஆல் நைட் லாங், நைட்ஷிப்ட் (கமொடர்ஸ்)பாடல்கள் அருமையானவை. முகம்தான் பார்க்க கடுகடுவென கொடூரமாக இருக்கும்.

  பில் காலின்ஸ் குரல் ரசிக்கக்கூடியது. மாமா என்ற பாடலை (ஜெனிசிஸ்) கேளுங்கள். அவர் குரல் உச்சத்தை எட்டும்போது நமக்கு சிலிர்ப்பு ஏற்படும். ஸ்டேட்ஸ் குவோ வின் இன் தி ஆர்மி நவ் சரியான ராக் துடிப்பு. நீங்கள் அந்த ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் கேளுங்கள். குறிப்பாக ரெட் ஸ்கை, ரோலிங் ஹோம், ஓவர்டோஸ் போன்றவைகள் கேட்க அலாதியாக இருக்கும். Whatever You Want பாடலை மறக்கலாமா? கிடார் அப்படியே நின்று விளையாடுமே? கேட்டிருக்காவிட்டால் இன்றே கேளுங்கள். (எதோ பல்பொடி விளம்பரம் போல இருக்கிறதா?)

  Beegees டிஸ்கோ இசையின் பிதாமகன். எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. ஆனால் மோசமான இசை என்று சொல்லிவிடமுடியாது. Robin Gibb (மூவரின் ஒருவர்) ஆல்பம் கொஞ்சம் பிடிக்கும். King Of Fools என்றொரு கலக்கல் கானம் இருக்கிறது.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களை கேட்டிருக்கிறேன் சாம். பாய் ஜார்ஜ் (Culture Club) ஜின் Chameleon பாடல் என்னவாயிற்று? டூ யு ரியலி வாண்ட் டு ஹர்ட் மீ யும் மனதை தொடும் பாடலே. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. கேட் ஸ்டீவன்ஸ் எனக்கு சற்று தூரமானவர். ஒன்றிரண்டு பாடல்களே அறிமுகம். லெமன் ட்ரீ தொன்னூறுகளில் வந்த டெக்னோ இசையின் மற்றொரு குழந்தை. நல்ல பாடல். ரம்மியமான இசை.ஸ்வீட் ட்ரீம்ஸ் அப்போது பிடிக்காமல் இரண்டு வருடங்களுக்கு முன் தற்செயலாகக் கேட்டபோது பிடித்துப் போனது. விந்தைதான். Kenny Loggins இன் Danger Zone கேட்டுப் பாருங்கள். ஒருமுறை யோடு நிறுத்தவே மாட்டீர்கள்.

  நாஸ்டால்ஜியாவின் மந்திரத் தொடுகை இன்றி யாரும் இருக்கமுடியாது. அந்த உணர்சிக்கு விலையேயில்லை. சரியாக நிறைவாகச் சொன்னீர்கள். ஒரு காலத்தில் எனக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விருப்பம் அதிகமாக இருந்தது. இப்போதோ அந்த temptation கலைந்து போய்விட்டது.

  ஒரே பதிவில் நிறைய சொல்ல முடியாது என்பதால் இதன் தொடர்ச்சி அடுத்து வர இருக்கிறது. இன்னும் பலப் பல இசைக் குழுக்களைப் பற்றி பேச வேண்டாமா? உங்களைப் போல எதோ ஒன்றிரண்டு பேராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.மீண்டும் வாருங்கள். அதற்கு முன் இன்னும் சில இசைத் தேன் துளிகளை ருசியுங்கள்.

  ReplyDelete
 10. திரு காரிகன்,
  தொடர்ந்து தமிழ்த் திரையிசைப் பற்றி எழுதி வந்த தாங்கள் இதில் ஆங்கில இசையைப் பற்றி எழுதி (எனக்கு இதுவும் தெரியும் என காட்டிக்கொள்ள) இருப்பதுபோல தெரிகிறது. பதிவு நன்றாகவே இருக்கிறது. எனக்கு ஆங்கில இசையில் நாட்டமோ தொடர்போ இல்லை என்பதால் உங்கள் எழுத்தில் உள்ள நகைச்சுவையை - மாமி வீட்டு விஜயம்- ரசித்தேன். அபா மட்டும் கேட்டிருக்கிறேன். மணி மணி என்று ஒரு பாடல் உண்டு.கேட்க நன்றாக இருக்கும். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் காரிகன். எனக்கு ஆங்கில இசையும் மிகவும் பிடிக்கும் என்றாலும் அதைப்பற்றிப் பேசுவதற்கு என்னிடம் அதிகம் விஷயம் இல்லை. இரவு நேர ரயில் பயணங்களில் எனக்கொரு பழக்கம் உண்டு. பெரும்பாலும் ரயில்களில் எனக்குத் தூக்கம் வராது என்பதால் சும்மா படுத்துப் புரண்டுகொண்டிருந்து பழக்கமில்லை. உடனே எழுந்து உட்கார்ந்து கண்ணாடி ஜன்னலைப் போட்டுவிட்டு மௌனமாகத் தெரியும் காட்சிகளை ரசித்தபடி வருவேன்.

  எந்த ஊர் தெரியாது. ஆறுகளும் குளங்களும் கோவில் கோபுரங்களும் இருட்டில் மங்கலாய்த் தெரியும் மரங்களும் சில வேளைகளில் நிலா வெளிச்சத்தின் ரம்மியத்துடன் தெரியும் வீடுகளையும் ரசித்தபடி வரும் அனுபவம் இருக்கிறது இல்லையா? கிட்டத்தட்ட அந்த மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.

  யார், என்ன, எந்த இசைக்குழு, என்ன வகை இசை என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நன்றாக இருந்தால் ரசிப்பேன். இருட்டுச் சித்திரங்களைப் பார்ப்பதுபோல.

  அந்தக் காலத்திலெல்லாம் மாலை வேளைகளில் சிலோன் ரேடியோ முடிந்தபிறகு இந்தியில் விவித்பாரதி வரும். அதுவும் முடிந்தபிற்பாடு இரவு பத்து மணிவரை ஏதோ ஒரு ஆங்கில ரேடியோ ஸ்டேஷனைத் தொடர்ச்சியாய் வைப்பார் எங்கள் அண்ணன். அதில் வரும் இசையைக் கேட்டுக்கொண்டிருப்போம்.
  தனிப்பட்ட பாடல் என்று ரசித்துக்கேட்க ஆரம்பித்தது லெமன்ட்ரீ பாடலைத்தான்.

  \\லெமன் ட்ரீ தொன்னூறுகளில் வந்த டெக்னோ இசையின் மற்றொரு குழந்தை. நல்ல பாடல். ரம்மியமான இசை\\ - என்கிறீர்களே. அப்படியானால் இது வேறு பாடலோ? ஏனெனில் 70 களில் பம்பாயில் இருந்த என்னுடைய நேவி அண்ணன் வீட்டிற்குப் போயிருந்தபோது இந்தப் பாடல் அறிமுகமானது.
  'Lemon tree very pretty and the lemon can't you' என்று போகும் பாடல் அது. மிகப் பிரமாதமான மெலடி. அவர் வீட்டில் எந்த நேரமும் ஆங்கில இசைதான். ஏனெனில் அவரே ஒரு இசை வித்தகர். நேவியில் Director of Music பொறுப்பில்தான் இருந்தார். கவனிக்கவும். மியூசிக் டைரக்டர் அல்ல; டைரக்டர் ஆப் மியூசிக். இருபத்தாறு வருடங்களுக்கு சுதந்திரதின பரேடும், குடியரசுதின பரேடும் டெல்லியில் நடக்கும்போது முப்படைகளின் வாத்தியக்கோஷ்டியினை (Band) வழிநடத்திச் சென்றவர் அவர்தான். லெப்.கமாண்டராக இருந்து ஓய்வு பெற்றார். அவர் வீட்டில் திடும்திடும் என்று அதிரும் இசைத்தட்டுக்கள் ஒருபுறமிருக்க பணிமுடிந்து வந்ததும் "மெலடி போடும்மா" என்று சொல்லிவிட்டுத்தான் மது அருந்தத் தொடங்குவார்.

  பொதுவாக ஜிம்ரீவ்ஸைத் தெரியும். ஆங்கில இசையிலும் நமது ரசனை மெலடி பக்கம் என்பதால் பெயர் தெரியாத பல (முக்கியமாக இன்ஸ்ட்ரூமெண்ட் இசைதான்) இசைக்கோர்வைகள் கேட்பதுண்டு. அத்தனை இளகின இனிமையான மெலடி தமிழிலும் இல்லை என்பதை தாராளமாகச் சொல்லலாம்.

  நீங்கள் எழுதியிருக்கும் பெயர்களையெல்லாம் சுஜாதா வீட்டில் கேட்டிருக்கிறேன். அவருடைய மகன்களுடன் இதுபற்றி சரமாரியாக விவாதித்துக் கொண்டிருப்பார் அவர்."ஏய்யா நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?" என்று சிரித்துக்கொண்டே என்னிடம் விசாரிப்பார்.

  நண்பர் தேசிகனுடைய இசை ஞானமும் அபாரமானது. மகாராஜபுரம் சந்தானத்தையும் ரசிப்பார்.,ரஹ்மானின் பாடல்களையும் கேட்பார், வேன்ஹேலன் இசைக்குழுவையும் ரசிப்பார்......... நாமெல்லாம் கரையில் நிற்பதோடு சரி. ஹிந்திப் பாடல்களுடன் உள்ள பரிச்சயம் அளவுக்குக்கூட ஆங்கில இசையுடன் பரிச்சயம் இல்லை.

  ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி பேசிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் புதிய தளத்திற்குக் கூட்டிச் சென்று புதிய விஷயம் பேசும் உங்கள் பதிவு மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் உங்கள் ரசனை அனுபவங்களை எழுதுங்கள்.

  ReplyDelete
 12. அமுதவன் அவர்களே,
  என்ன வராமல் இருந்து விடுவீர்களோ என்று நினைத்திருந்தேன். வருகைக்கு நன்றி. என் பதிவுக்கு தொடர்ந்து வரும் இருவரில் ஒருவர் நீங்கள். (இன்னொருவர் திருவாளர் சால்ஸ்.) உங்கள் எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை அறிவதில் ஆர்வமாகவே இருந்தேன்.

  நீங்கள் குறிப்பிட அந்த லெமன் ட்ரீ பாடல் 50 களில் வந்த Will Holt என்பவரின் பாடல். ஆனால் திருவாளர் சாம் குறிப்பிட்டது வேற பாடல். இது துடியான டெக்னோ இசை. (எனக்கு டெக்னோ பிடிக்காது. நான் மெலடி விரும்பும் அமைதியான ஆள். )
  உங்கள் நேவி அண்ணனைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். ஆச்சர்யப்பட்டேன்.நீங்கள் இன்னும் பல அதிரடியான விஷயங்களை உள் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் மிகவும் காணக் கிடைக்காத அரிய மனிதர் என்பது மறுபடியும் நிரூபணமாகிவிட்டது.சிலர் வெறும் பெயரை வைத்துக்கொண்டே அலப்பறைகள் செய்வதை நான் ஏகத்துக்கு நேரிலேயே சந்தித்திருக்கிறேன். Still waters run deep. Hats off to you.

  ஜிம் ரீவ்ஸ் ஒரு காஸ்பல் இசைஞர். எனக்கோ போனிஎம் மின் கிறிஸ்மஸ் ஆல்பம் தவிர மற்ற காஸ்பல் இசை மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டதே இல்லை. ஆனால் மேற்கத்திய இசையே இந்த காஸ்பல் இசை மீது கட்டப்பட ஒரு கட்டிடம்தான். நீங்கள் போனி எம் கிறிஸ்மஸ் ஆல்பம் கேட்கவில்லை என்றால் உடனே அந்த இசைத் தொகுப்பை வாங்கிக் கேளுங்கள். மேரிஸ் பாய் சைல்ட், பெலிஸ் நவிடாட், ஐல் பி ஹோம் பார் கிறிஸ்மஸ் போன்ற பாடல்கள் அந்த கிறிஸ்மஸ் உணர்வை 100% நம் மனதுக்குள் விதைப்பவை. (ஆனால் நான் இந்த சம்பிரதாய மத நம்பிக்கைகளை வெறுப்பவன்.)

  சுஜாதா கூட தன் கதையில் பல இசைக் குழுக்களை பற்றி எழுதியிருப்பார். ஆனால் அவரும் கூடவே ஒரு வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை என்பது வருத்தற்குரியது. அவர் மகன்கள் அமெரிக்காவில் இருந்ததால் அவரை விட இந்த விஷயத்தில் அதிகமாக தெரிந்து கொள்ள முடிந்தது என்று நினைக்கிறேன். இருந்தும் எங்கிருந்தாலும் சில விஷயங்களை அறிந்து கொள்வதில் நம்முடைய ஆர்வமும் விருப்பமும்தான் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்வேன்.

  அமுதவன் அவர்களே, ஆங்கில இசை பெரிய மலையைப் புரட்டும் வேலையில்லை. அது ஒரு இசை ரசனை. அவ்வளவுதான். கொஞ்சம் அக்கறை கொண்டால் நீங்களே ஒரு பதிவு எழுதுவீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

  (ஆங்கில இசையிலும் நமது ரசனை மெலடி பக்கம் என்பதால் பெயர் தெரியாத பல (முக்கியமாக இன்ஸ்ட்ரூமெண்ட் இசைதான்) இசைக்கோர்வைகள் கேட்பதுண்டு. அத்தனை இளகின இனிமையான மெலடி தமிழிலும் இல்லை என்பதை தாராளமாகச் சொல்லலாம்.)

  மிகச் சரியாகச் சொன்னீர்கள். இசையின் ஊற்றே மேற்கத்திய இசைதான் என்று சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. அவர்களுக்கு எந்த விதமான சினிமா சார்ந்த இசைக் கட்டுப்பாடுகள் இல்லாததே இதற்கு காரணம். அவர்களுடையது உண்மையான மனதிலிருந்து வரும் இசை. வணிக நோக்கங்கள் இருந்தாலும் நம் திரையிசை போல வெட்கங்கெட்ட சமரசங்கள் அவர்களுக்கு தேவையில்லை என்பதால் இது அங்கே சாத்தியப்படுகிறது. நமக்கோ இசை என்றாலே அது சினிமாதானே.

  உங்களின் பாராட்டுக்கு நன்றி. இன்னுமொரு பதிவு இருக்கிறது. அதன் பின் நான் எவ்வாறு மறுபடியும் தமிழ்த் திரையிசைக்கு வந்தேன் என்பதைச் சொல்லும் பதிவு வரும். கொஞ்சம் பொறுமையாக என் அடுத்த பதிவையும் படித்து கருத்து சொல்லுங்கள்.

  ReplyDelete
 13. வாங்க பரத்,
  பாராட்டுக்கு நன்றி.
  போனி எம், அபா போன்ற இசைக் குழுக்கள் 70,80 களில் நமது நாட்டில் பெரிய அளவில் பேசப்பட்ட மேற்கத்திய இசை வடிவங்கள். ஆங்கில இசையில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட இந்தப் பெயர்களை அறிந்தேயிருப்பார்கள். நீங்கள் குறிப்பிட அந்த funky town LIpps,Inc என்ற டிஸ்கோ இசைக் குழுவின் மிகவும் புகழ் பெற்ற பாடல். எங்கள் ஊரில் இவர்களின் பாடல்களைத்தான் படம் ஆரம்பிக்கும் முன் போடுவார்கள். திரையின் மீது இன்னொரு திரை இருக்கும். அது உயரும் போது லிப்ஸ் இங்க் இசைதான் பெரும்பாலும் ஒலிக்கும். அந்த சிறிய இசைத் துணுக்குக்காகவே நான் காத்திருந்த நாட்கள் உண்டு.

  மகேஷ் அதன் பிறகு அதிகம் வந்ததில்லை. காரணம் அவன் ஒரு தீவிர கமல் ரசிகன். அவன் போதாத காலம்,துரதிஷ்டவசமாக எங்களோடு அவன் விக்ரம் என்ற படத்திற்கு வந்திருந்தான். நாங்கள் காட்சிக்கு காட்சி செய்த கிண்டலில் ஆளே ஏகத்துக்கு வெறுப்பாகி "இனிமே உங்க கூட படமே அதுவும் கமல் படமே பாக்க மாட்டேன்" என்று சபதம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இன்னும் சில தற்கொலை இசைக் குழுக்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு இதனால் பறிபோய்விட்டது. வருத்தம்தான்.

  பொதுவாக நமக்கு அதிக தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசும் போது சலிப்பு வராமலிருக்க சில மேற்பூச்சுக்கள் அவசியப்படுகின்றன. அதனால்தான் என் அனுபவங்கள் என்ற வண்ணத்தை எடுத்துக்கொண்டு இதை நான் வரைந்தேன். ரசிப்பிர்க்குறியதாக இருப்பதாக நீங்கள் சொல்வது குறித்து எனக்கு திருப்தியே. நன்றி பரத்.

  ReplyDelete
 14. வாங்க அனானி,
  கருத்துக்கு நன்றி.
  அபாவின் Money Money புகழ்பெற்ற பாடல். தமிழில் கூட இது வந்தது என்று நினைவு.

  (தொடர்ந்து தமிழ்த் திரையிசைப் பற்றி எழுதி வந்த தாங்கள் இதில் ஆங்கில இசையைப் பற்றி எழுதி (எனக்கு இதுவும் தெரியும் என காட்டிக்கொள்ள) இருப்பதுபோல தெரிகிறது.)

  ஆங்கில இசையை கேட்பது அத்தனை பெரிய அரிய சாதனை என்று நீங்கள் நினைப்பதுபோல இருக்கிறது.பரிதாபம்தான். It's just a matter of choice, simply.

  ReplyDelete
 15. வணக்கம், அண்ணன் அமுதன் சொன்னது போல் நானும் ஆங்கில பாடல்கள் அதிகம் கேட்டதில்லை.. மற்றபடி சிலருக்கு பழைய இன்பமான நினைவுகளை தரும் பெரிய பரிசாக கூட இருக்கும்...நன்றி

  ReplyDelete
 16. \\ஆனால் மேற்கத்திய இசையே இந்த காஸ்பல் இசை மீது கட்டப்பட ஒரு கட்டிடம்தான். நீங்கள் போனி எம் கிறிஸ்மஸ் ஆல்பம் கேட்கவில்லை என்றால் உடனே அந்த இசைத் தொகுப்பை வாங்கிக் கேளுங்கள். மேரிஸ் பாய் சைல்ட், பெலிஸ் நவிடாட், ஐல் பி ஹோம் பார் கிறிஸ்மஸ் போன்ற பாடல்கள் அந்த கிறிஸ்மஸ் உணர்வை 100% நம் மனதுக்குள் விதைப்பவை. (ஆனால் நான் இந்த சம்பிரதாய மத நம்பிக்கைகளை வெறுப்பவன்.)\\

  திருமதியார் கொஞ்சம் அதிகமான மதநம்பிக்கை உடையவர்கள் என்பதால் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக காஸ்பல் இசை டிவிடிக்கள் நிறையவே வீட்டில் உள்ளன.

  கிறிஸ்துமஸ் பாடல்களே நிறைய உள்ளன. போனிஎம் அந்தக் காலத்திலிருந்தே அவ்வப்போது ஒலிக்கும் ஒரு இசை கானம்தான்.

  நிறையக் கிறிஸ்துவப் பாடல்களைக் கேட்டிருப்பதால்தானே நேற்றைய ஞானிகளும், இன்றைய ஹாரிஸ்களும் சில டியூன்களை எங்கிருந்து உருவியிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது....................ஆனால் இதனைக் குறையாகச் சொல்வதற்கில்லை. எங்கோ ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிறந்த ஒன்றைப் பெருவாரியான மக்கள் அறியும்படிச் செய்வது ஒரு கலைஞனின் பொறுப்புத்தான். ஆனால் அதற்கு 'மூலகர்த்தாவும் இவனே' என்று வேஷம் போடுவதும், அப்படிப் பிறர் கொண்டாடும்போது வாய்திறவாமல் மௌனியாக அதனை ஏற்றுக்கொள்வதும்தான் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

  ஆங்கில இசையே இந்த காஸ்பல் இசைமீது கட்டப்பட்ட ஒரு கட்டடம்தான் என்கிறீர்கள். தமிழிலும் தெலுங்கிலும்கூட இதே தானே நிலைமை. கர்நாடக சங்கீதத்தின் ஆதாரக் கிருதிகள் எல்லாமே கடவுளர்கள் மீது கட்டப்பட்டவைதாமே. எல்லா மொழிகளிலும் இது பொது என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. (ஆங்கில இசையே இந்த காஸ்பல் இசைமீது கட்டப்பட்ட ஒரு கட்டடம்தான் என்கிறீர்கள். தமிழிலும் தெலுங்கிலும்கூட இதே தானே நிலைமை. கர்நாடக சங்கீதத்தின் ஆதாரக் கிருதிகள் எல்லாமே கடவுளர்கள் மீது கட்டப்பட்டவைதாமே. எல்லா மொழிகளிலும் இது பொது என்றே நினைக்கிறேன்.)

   உண்மைதான். கடவுளர்களைப் பாடிப் பாடி போரடித்துப் போனதும் மற்ற விஷயங்களை நோக்கி மனிதன் நகர ஆரம்பிக்க அதன் விளைவே பல மாற்றங்களுக்கு பாதை அமைத்தது. இப்போது நாம் ரசிக்கும் இசையும் அதில் ஒன்று.

   Delete
 17. காரிகன்,

  உங்களின் பதிலுக்கு நன்றி.

  நீங்கள் குறிப்பிட்ட " a-ha - Take On Me " பாடல் நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று. பிரான்ஸின் fm அலைவரிசைகளில் இந்த பாடல் வாரம் ஒருமுறையாவது ஒலித்துவிடும் !

  " ஆங்கில இசையே இந்த காஸ்பல் இசைமீது கட்டப்பட்ட ஒரு கட்டடம்தான் என்கிறீர்கள். தமிழிலும் தெலுங்கிலும்கூட இதே தானே நிலைமை. கர்நாடக சங்கீதத்தின் ஆதாரக் கிருதிகள் எல்லாமே கடவுளர்கள் மீது கட்டப்பட்டவைதாமே. எல்லா மொழிகளிலும் இது பொது என்றே நினைக்கிறேன். "

  உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் பண்டைய நாட்களில் இசைக்கருவிகள் அதிகம் பயன்பட்டதே மத ரீதியிலான சடங்குகளிலும், தெய்வ ஆராதனைகளிலும்தானே ! இதற்கு உலகின் எந்த கலாச்சாரமும் விதிவிலக்கல்ல.

  " வணிக நோக்கங்கள் இருந்தாலும் நம் திரையிசை போல வெட்கங்கெட்ட சமரசங்கள் அவர்களுக்கு தேவையில்லை "

  ஆமாம், சமரங்களும் அவர்களிடம் கிடையாது, அதேபோல யாரோ நாலு பேர் சேர்ந்துகொண்டு இதைதான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று ஆபாச அபஸ்வரங்களை அள்ளிவீசும் சினிமா சூழ்நிலையும் அங்கு கிடையாது ! நிற்க,

  நான் மிகவும் விரும்பும் மற்றொரு மேற்கத்திய பாடல்,
  Stingன் A english man in newyork
  https://www.youtube.com/watch?v=d27gTrPPAyk

  பாடலின் ஆரம்பம் தொடங்கி முடிவுவரை கூடவே வரும் சாக்ஸோபோனின் இசை இதமான இன்ப தாலாட்டு ! பாடலின் முடிவில் ஒலிக்கும் சாக்ஸ்போனின் துணுக்கு... அடடா !

  பிரெஞ்சு இசையில் நிறைய மெலொடிகள் உண்டு. அடுத்தடுத்த பதிவுகளில் பேசுவோம் !

  காரிகன் அவர்களே, இசைத்தேன் பருகி களைத்த நேரத்தில் கொஞ்சம் என் வலைப்பூவின் பக்கம் திரும்புங்களேன்... புதிய பதிவை இட்டுள்ளேன் !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 18. ரிம்போச்சே8 May 2014 at 18:43

  //திரையின் மீது இன்னொரு திரை இருக்கும். அது உயரும் போது லிப்ஸ் இங்க் இசைதான் பெரும்பாலும் ஒலிக்கும். //

  இதற்குப் பயன்பட்ட இன்னொரு பிரபலப் பாடல் "come september" theme.

  ReplyDelete
 19. அப்படியா! தெரியாத தகவல்.

  ReplyDelete
 20. வாங்க சாம்,
  மத இசையே காரம் கூடிப்போனதால் மனித இசையாக உருமாறிப் போனது உலகெங்கிலும். இதனாலேயே சில மத அடிப்படைவாதிகள் secular இசையை சாத்தான் இசை என்று முத்திரை குத்துவது உண்டு.

  நீங்கள் குறிப்பிட்டுள்ள An Englishman in newyork நெஞ்சத்தை தழுவும் பாடல். Russians, Moon Over Bourbone Street, Consider Me Wrong பாடல்களும் வாவ் ரகம். ஸ்டிங் கின் டென் சம்மனர்ஸ் டேல் என்ற ஆல்பம் அவருடைய மிக சிறப்பான இசைத் தொகுப்பு. The Police இசைக்கும் ஸ்டிங்கின் இசைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதை உணரலாம்.

  அடுத்த பதிவு வர பல நாட்களாகலாம். அதற்குள் நீங்கள் இன்னும் இரண்டு பதிவுகள் வெளியிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 21. It's really good!1 It made me remind my old memories!!

  ReplyDelete
  Replies
  1. Thanks for your visit and comments, Varun. How can we forget those good old days?

   Delete
 22. https://www.facebook.com/kasthurirengan74
  பகிர்ந்திருக்கிறேன்..
  கிளர்வூட்டும் எழுத்து...ஒரு நிலா இரவில் நழுவும் ஒடையைப் போல .. வாவ்

  ReplyDelete
 23. மீண்டும் நான் தான் பாஸ்...
  வெகுகாலமாய் இசயோடு வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ...
  நீர் கொடுத்துவைத்தவர்...
  நிறய விசயங்களை அறிந்தேன்... பாடல்களை அறிந்தேன்

  நன்றிகள்

  ReplyDelete
 24. It's me again. I have heard most of all the bands that you refer to except for Rockwell, Eddy grant., Third World. What an interesting write up! I hope more stuff will follow in your next post on other rock bands. By the way, have you heard of "Weather Report, King Crimson, Stevie Wonder?"

  What about I Shot The Sheriff, Whatever you want, Part time lover?

  ReplyDelete
  Replies
  1. Thanks Mr.Oliver,
   It's really great to know that you walk the same path as mine.
   Rockwell is not a landmark artist. Eddy Grant, on the other hand, is someone to reckon with when it comes to English pop scene.
   Of course, I do listen to Weather Report ,King Crimson and Stevie Wonder.
   Those songs you've mentioned are my classic cuts. Especially Whatever You Want is a powerful shocker to listen to. The guitar riffs are mind blowing.
   Thanks again Mr. Oliver. You have one more post to enjoy reading (So I think). Keep coming back.

   Delete
 25. வாருங்கள் அர்ஜூன்,
  பாராட்டுக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

  இசையோடு வாழ்வது ஒரு கொடை என்று கூறுகிறீர்கள். இருக்கலாம். ஆனால் இது எல்லோருக்கும் கிடைப்பதே என்று எண்ணுகிறேன். நீரின்றி அமையாது உலகு என்பார்கள். இசையின்றி அமையாது வாழ்வு என்பது என் கருத்து.

  ReplyDelete
 26. வணக்கம் ஐயா
  இசையைப் பற்றிய இவ்வளவு தெளிவும் ரசனையோடு இதைப் பகிர்ந்த விதமும் விவரிக்க முடியாத அற்புதமான உணர்வாக தெரிகிறது. இசை நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கம். அதற்கு மொழி தேவை இல்லை. இசையை ரசிக்கும் மனநிலை இருந்தாலே போதுமானது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 27. வாருங்கள் பாண்டியன்,
  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
  இசையைப் பற்றிய நல்ல புரிதல் உங்களிடம் இருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் பதிவு ஆங்கில இசையைப் பற்றியது. இசை உங்களுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கும் பட்சத்தில் என் பழைய பதிவுகளை நேரமிருப்பின் படிக்கவும்.

  ReplyDelete
 28. இசைக்கு மொழி என்றுமே தேவையில்லை.... வாழ்த்துக்கள்.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 29. வாருங்கள் கில்லர் ஜி, (இப்படி அழைக்கவே தயக்கம்தான் என்ன செய்வது?)
  இசை எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டியது. ஒரு அழகான குழந்தையின் புன்னகை போன்றது. அதை ரசிப்பதற்கு மனம் ஒன்றே போதுமே.

  ReplyDelete
 30. காரிகன்,

  அலங்காரம் இல்லாமல் எளிமையாக எழுதும் என் பின்னூட்டம் தேவை இல்லாதது என்று நினைக்கிறீர்களா?

  ReplyDelete
 31. வாருங்கள் சேகர்,
  ஏனிந்த கேள்வி எனத் தெரியவில்லை. அலங்காரம் எழுத்திற்கு அவசியமே. ஆனால் அதுவேகூட சில சமயங்களில் ஒரு நல்ல எழுத்தை நசுக்கிவிடும். அதுசரி. உங்கள் ப்ளாக் கில் உங்களின் பதிவுகளைக் காணவில்லையே இப்போது. என்னாயிற்று?

  ReplyDelete
 32. காரிகன்,
  //ஏனிந்த கேள்வி எனத் தெரியவில்லை//
  நான் இதற்கு முன் எழுதிய பின்னூட்டத்தை படித்தீர்களா? என்று எனக்கு தெரியவில்லை அதனால் தான்.

  //உங்கள் ப்ளாக் கில் உங்களின் பதிவுகளைக் காணவில்லையே//
  தெரிந்ததை மட்டும் செய்யலாமே என்று எழுதுவதை (நகல் எடுப்பதை) நிறுத்திவிட்டேன். நன்றி

  ReplyDelete
 33. உங்கள் இசை ஞானம் அசாதரணமானது. இதற்கு முன்னர் இசை பற்றி இப்படி ஒரு கட்டுரை படித்ததில்லை. மேற்கத்திய இசை மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டீர்கள்
  மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்

  ReplyDelete
 34. வாருங்கள் முரளிதரன்,
  உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
  மேற்கத்திய இசையின் மீது உங்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது குறித்து மகிழ்ச்சியே. அந்த இசை ஒரு புது அனுபவம். தமிழ் இசையில் இது காணக்கிடைக்காதது. ஆனால் இரண்டையும் ஒரே கோட்டில் வைத்து ஒப்பீடு செய்வது முட்டாள்தனமானது. இதை நான் உணர்ந்த பின்பே மீண்டும் தமிழிசைக்குள் வந்தேன்.

  நிறைய பாடல்களைக் கேளுங்கள். மொழி ஒரு தடையே அல்ல. ஆங்கில இசையிலும் எண்ணிலடங்கா தேன் துளிகள் உள்ளன. அந்த துள்ளும் தாளமும் அதிரடியான கிடாரின் அலறலும் மனதை கிறங்கடிக்கும் சிந்தசைசர் இசையும் ஆஹா .. வார்த்தைகளே கிடையாது அந்த இன்பத்தை வர்ணிக்க.

  என் பதிவை மீண்டும் படிப்பதை விட சில ஆங்கிலப் பாடல்களை நீங்கள் கேட்டால் அது எனக்கு நீண்ட திருப்தியை கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 35. உங்களது இசை ஞானமும் எழுத்தும் அற்புதம். எனக்கு மேற்கத்திய இசை பற்றி அவ்வளவாக தெரியாது. ABBAவின் Angel Eyes போன்ற பாடல்களை அவ்வப்போது கேட்டதுண்டு. நீங்கள் எழுதியதை படித்து மேற்கத்திய இசையின் ஒரு புதிய பரிமாணத்தை உணர்ந்தேன். வாழ்த்துக்கள், காரிகன்.

  ReplyDelete
 36. வாருங்கள் Expatguru (ஏனிந்த பெயர் என்று சற்று விளக்கினால் நலம்.) நான் உங்களை குரு என்றே அழைக்கிறேன்.

  பாராட்டுக்கு நன்றி. நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது நம்மிடம் உண்டாகும் ஈர்ப்பே அந்த எழுத்தை அழகு செய்துவிடுகிறது என்று நினைக்கிறேன். காதலியை வித விதமான ஆடைகளில் காண விரும்பும் ஒரு காதலன் போல மனம் சட்டென மாறிவிடுகிறது இசையைப் பற்றி என்னும்போதே. Abba 70களில் ஐரோப்பாவில் (இந்தியாவிலும்) வெகுவாக புகழுடன் வலம் வந்த ஒரு ஸ்வீடிஷ் இசைக் குழு. நிறைய மெலடிகள் அவர்களின் இசையில் உண்டு. மேற்கத்திய இசை என்ற மகா கடலின் ஓரத்தில் கொஞ்சம் கால் வைத்துப் பாருங்கள். உள்ளே இழுத்துச் சென்றுவிடும்.

  ReplyDelete
 37. திருச்சி, செயின்ட் ஜோசப் , இந்த இரண்டு பெயர்களைப் பின்னூட்டத்தில் பார்த்துத் தான் உங்களின் தளத்திற்கு வந்தேன். மலைமுகடுளில், பள்ளத்தாக்குகளில், வனாந்தரங்களில் படிப்பவனை திடும்திடும் என தன்வயமற்று இழுத்துப் போகிறது உங்கள் எழுத்து..! உள்ளடங்கித் திமிறும் இசைபோலவே! கொஞ்சம் மெதுவாகவேனும் மீண்டும் படிக்க வேண்டும். இதையும் முந்தைய உங்களின் பதிவுகளையும்..! நன்றி!

  ReplyDelete
 38. வாருங்கள் ஊமைக் கனவுகளே, (உங்கள் பெயர் தெரியவில்லை.)
  என் தளத்திற்கு வருவதற்கு திருச்சி செயின்ட் ஜோசெப் என்ற வார்த்தைகளே போதும் என்னும் போது நீங்களும் அதே கல்லூரியில் படித்தவராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி. உங்களின் எழுத்தும் சட்டென திரும்பி பார்க்கவைக்கிறது.

  பாராட்டுக்கு நன்றி.

  என்னிடம் ஒரு குணம் உண்டு. எனக்குப் பிடித்த ப்ளாகர் யாராக இருந்தாலும் அவர்களின் எல்லா பதிவுகளையும் தேடிப் படித்துவிடும் என் குணம் உங்களிடம் இருப்பது கண்டு சற்று வியப்புற்றேன். பொதுவாக எல்லோரும் ஒரே ஒரு பதிவை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போடுவது இயல்பானதுதான். அதையும் தாண்டி பழைய பதிவுகளைப் படிப்பது ஒரு நுண்ணிய தொடர்பை உருவாக்குகிறது என்பது என் எண்ணம். வெறுமனே ஒரு பதிவை படித்து விட்டு கருத்து சொல்வதை விட இது கொஞ்சம் ஆழ்ந்த ரசனையை கொண்டது.

  வாழ்த்துக்கள். நிறைய படியுங்கள். உங்களின் கருத்துக்களை தயங்காமல் எழுதுங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 39. நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தாங்கள் தொகுத்துத் தந்துள்ள விதம் பாராட்டும் வகையில் உள்ளது. தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 40. திரு ஜம்புலிங்கம்,

  வருகைக்கு நன்றி. நீங்கள் தமிழ்த் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் போல தெரிகிறது. என் பழைய தமிழ்த் திரையிசை பற்றிய பதிவுகளை வாசித்தால் ஒருவேளை நீங்கள் என்னைப் பற்றி கொஞ்சம் சரியாக எண்ணத் தோன்ற வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 41. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete