Monday, 13 July 2015

மெல்லிசை ஒன்று இன்று மௌனமானது.


என்ன எழுதுவது என்று தெரியவில்லை.இந்த மௌனம்தான் என் இப்போதைய பதிவு.
சில தூக்கங்கள் துக்கமளிக்கின்றன.


19 comments:

 1. இசைக்கோலங்கள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...

  ReplyDelete
 2. சில துக்கங்கள் நிரந்தரமில்லை..

  ReplyDelete
  Replies
  1. சரியாகப் புரியவில்லை.

   Delete
 3. தங்களது ஆழ்ந்த அஞ்சலியோடு
  எனது
  கண்ணீர் அஞ்சலியும் கவிதை வடிவில்!

  "எலப்புள்ளி எழுச்சி இசை நாயகர் எம்.எஸ்.விஸவநாதன்"

  இசையோடு இசைந்தே வாழ்ந்தார் -நல்
  இன்னிசையால் இசை மன்னர் ஆனார்!
  மனையங்க சுப்ரமணியன் விஸ்வநாதன் -ஏன்
  அனைவரையும் அழ வைத்து போனார்?

  இசையும் இசைந்தே 'தீ'யில் வேகுதம்மா!
  திசைத் தேடி மெல்லிசைத் தேர் போகுதம்மா!
  ‘சிவாஜி’ வைத்த "மெல்லிசைமன்னர்"-திலகம்
  அழியாது நிலைக்கும் அகிலமெங்கும்!

  திரைமேகம் திரண்டு வருகின்றது -கண்ணீர்
  கரை புரண்டு இசைவெள்ளம் வழிகின்றது
  ‘எலப்புள்ளி’ எழுச்சி நாயகரே -உமது புகழ்!
  இசை உலகம் உள்ளவரை வாழும்.
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாங்க யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு அவர்களே,

   கவிதாஞ்சலி செய்துவிட்டீர்கள். மறக்கக் கூடிய இசையா எம் எஸ் வி இடமிருந்து வந்தது?

   Delete
 4. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு அது ஒன்றுதான் நம்மால் செய்யமுடியும். ஆனால் அவர் இருந்தவரை அவரது கடைசி இருபது வருடங்களில் அவருக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல் பல அற்புதமான பாடல்களை இழந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.

   Delete
 5. நான் ரசித்த முதல் இசை மேதை. இறைவன் எடுத்துக் கொண்டான் . இன்று மண்ணை விட்டு விண்ணை அடைந்தார். நம் கண்ணை விட்டு மறைத்தாலும் நெஞ்சை விட்டு மறைய நெடுங்காலம் ஆகும் . உடல்தானே அழிந்தது. அவர் உயிர் இன்னும் அவரிசைத்த பாடல்களுக்குள் உறைந்து கிடக்கிறதே ! ஆயிரம் ஆயிரமாய் திரைபடங்களுக்குள்ளும் பாடல்களுக்குள்ளும் நிறைந்து கிடக்கிறதே! கடைசி ரசிகன் உள்ளவரை அவரும் உயிரோடுதானே இருப்பார்!?

  தன் இசையால் சிரிக்க வைக்கவும் அழ வைக்கவும் சிந்திக்க வைக்கவும் தூங்க வைக்கவும் ஏங்க வைக்கவும் ஏன்...காதலிக்க வைக்கவும் செய்தாரே.... மறக்க முடியுமா ? இறைவன் எடுத்துக் கொண்டான் . அவருடைய இசையை எடுத்துக் கொள்ள முடியாதே !? அவர் படைத்த பாடலை கேட்கும்போதெல்லாம் நாம் அவருக்கு அஞ்சலி செய்து கொண்டே இருப்போம்.

  காரிகனே ....உங்கள் மௌனத்தில் தெரியும் துக்க அலைகளின் ஓசையை நானும் உணர்கிறேன். அஞ்சலியை நானும் பகிர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சால்ஸ்,

   ஒரு மகத்தான கலைஞனின் மரணம் ஒரு ஆல மரம் விழுவதைப் போன்றது. உங்களின் எண்ணங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயத்தில் உங்கள் தளத்தில் ஒரு காட்டுவாசி எம் எஸ் வி என்ன செத்தா போய்விட்டார் என்று எழுதியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு ஏற்பட்ட கோபத்தை மீறிய வருத்தத்தை நீங்களும் இந்நேரம் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

   Delete
 6. அதிசய ராகம் தந்த ஆன்மா சாந்தியடையட்டும் . நடிகராக ,பாடகராக ,இசையமைப்பாளராக என பன்முகம் காட்டி நின்ற மெல்லிசை மன்னருக்கு பாராமுகம் காட்டியமைக்கு தேசம் வெட்கப்பட ட்டும் .காலச் சக்கரம் கண்மூடச் செய்திடினும் காலம் உள்ளவரை அவரது கானம் எங்கும் ஒலிக்கட்டும் .இசையால் இதயம் வருடியவரது. இல்லத்தாருக்கு ஆறுதல் கிடைக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க அருள் ஜீவா,

   நீங்கள் சொல்வது உண்மையே. எம் எஸ் வி ஒரு பன்முகக் கலைஞர்.

   Delete
 7. (24 காரட் சுத்தத் தங்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அதை தூரத்திலோ அருகிலோ வைத்துக்கொண்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். ஆனால் அது கழுத்திலோ,காதிலோ, மூக்கிலோ பளபளப்பாக வந்து அமர சில நகாசு வேலைகள் அவசியப்படுகின்றன. தங்கத்தோடு கொஞ்சம் செம்பு வெள்ளி என்று கலந்தால்தான் அதன் நோக்கம் பூர்த்தி அடைகிறது. இப்படி உருமாறிய 22 காரட் தங்கமே நமது மெல்லிசை. இந்த மெல்லிசை இங்கே வந்த பிறகுதான் ராகங்கள் மாறின. தமிழிசையின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. )

  இசை விரும்பிகள் V - வென்ற இசை என்ற பதிவின் முதல் வரிகள்.

  http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/v-24.html

  வைரமுத்துவின் இரங்கல் செய்தி " சுத்த தங்கத்தில் செம்பு கலப்பது போல நமது கர்நாடக இசையில் மேற்கத்திய இசையை கலந்து கொடுத்தவர் எம் எஸ் வி."

  வைரமுத்து என்னிடமிருந்து இதை எடுத்தார் என்ற கற்பனையெல்லாம் எனக்கில்லை. ஆனால் இந்தக் கருத்து எத்தனை உண்மை என்பதையே குறிப்பிடவிரும்புகிறேன்.

  எம் எஸ் வி பற்றிய ஒரு நீண்ட பதிவு விரைவில் எழுத இருக்கிறேன்.

  ReplyDelete
 8. மெல்லிசை மௌனமானது! உண்மையே! ஆனால் எல்லோர் மனதிலும் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கும்! காற்றில் கலந்து....காற்றினில் வரும் கீதமாய்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன்,

   எம் எஸ் வி யின் இசைக்கு முற்றுப் புள்ளி என்பதே இல்லை. தமிழ் சமூகத்தின் அணைத்து விழுமியங்களுக்கும் ஏற்புடைய பாடல்களைப் படைத்தவர் அவர். அத்தைமடி மெத்தையடி, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல, அச்சம் என்பது மடமையடா போன்ற பாடல்கள் ஓய்ந்து போகுமா?

   Delete
 9. காரிகன்...

  எம் எஸ் வியின் மறைவினை அறிந்ததுமே நான் நினைத்தது உங்களைத்தான் !

  வீனைக்கம்பியின் இரு அதிர்வுகளுக்கு நடுவே ஏற்பட்ட அமைதியை போன்ற உங்களின் ஒரு வரி அஞ்சலி....

  அவருக்கு முன்னும் பின்னும் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருந்திருக்கலாம்... இன்னும் வரலாம் !...

  ஆனால் தமிழ்திரையிசையின் வரலாறு எம் எஸ் விக்கு முன், பின் என்றே பிரித்து பேசப்படும் !

  அந்த மகா இசைக்கலைஞனின் ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் மெல்லிசையாய் பரவும்.

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 10. வாங்க சாம்,

  ---வீனைக்கம்பியின் இரு அதிர்வுகளுக்கு நடுவே ஏற்பட்ட அமைதியை போன்ற உங்களின் ஒரு வரி அஞ்சலி....--

  அழகான வார்த்தைகள். நன்றி.

  ---ஆனால் தமிழ்திரையிசையின் வரலாறு எம் எஸ் விக்கு முன், பின் என்றே பிரித்து பேசப்படும் !அந்த மகா இசைக்கலைஞனின் ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் மெல்லிசையாய் பரவும்.----

  உண்மையே. எம் எஸ் வி காற்றில் கலந்த கலைஞன். நிரந்தரமானவர்.

  ReplyDelete