Thursday 9 October 2014

இசை விரும்பிகள் XXI -- அலங்காரம் கலையாத அழகு.



சில சந்தர்ப்பங்களையும் அனுபவங்களையும்  நாம் எவ்வித கலையுனர்வுமின்றி ரசிக்கத் தவறி சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். பால்ய நாட்களின் திரும்பி வராத இனிமையைப் போல அவைகள் திரும்பிப் பார்க்கப்படும் போதுதான் இன்னமும் அழகாகத் தெரிகின்றன. அப்போது நமக்கு ஏற்படுவது வெறும் அழகின் சுவை மட்டுமல்ல அதை சுவைக்கத் தவறிய வலியும்தான்.

                         

           எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.


        பதிவைத் துவங்கும் முன் நாம் மறந்துவிட்டசில மகத்தான பாடல்களைக் குறித்துப் பேச  விரும்புகிறேன். முதலில்  ஒரு மாலை நேரத்து இளய  நிலவின் குளுமையை சில்லென்று நமக்கு கடத்தும் ஒரு பாடல். 72ஆம் ஆண்டு  வந்த மாப்பிள்ளை அழைப்பு என்ற படத்தின்   உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்  என்ற வி குமார் அவர்களின் இசையில் வெளிவந்த அற்புதமான பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? இணையத்தில் நீந்திச் சென்றுகொண்டிருந்த போது திடுமென இந்த இசைமுத்தை பல வருடங்களுக்குப் பிறகு கண்டெடுத்தேன். எத்தனை ரம்மியமான பாடல்! அடுத்த பாடல் இன்னும் சற்று பின்னோக்கிய காலத்தில் வந்தது. 67 ஆம் ஆண்டில் வந்த செல்வமகள் என்ற படத்தின் எம் எஸ் வியின் இசையில் பளீரென்று ஒரு காற்று நம்மை சுகமாக அறைவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் என்ற பாடல். இதில் கானக் குயில் சுசீலாவின் குரல் உங்களுக்குள் சில வியப்பு விதைகளை விதைக்காவிட்டால் அந்த இசை அனுபவமே வீணாகிவிடுகிறது. குரலா, இசையா, கவிதையா எதை விவரிப்பது என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். பழைய இசைதான் என்னென்ன விதமான எண்ண ஓவியங்களை மனதில் வரைகிறது! சிலர் எளிதில் இகழும் சாதாரண இசையமைப்புதான். இருந்தும் இதுபோன்ற சாதாரணங்கள் கொடுக்கும் பிரமிப்பு வார்த்தைகளைத் தாண்டியது.

   
      பழைய பாடல்கள் நம் குடும்ப உறவினர் போல ரத்தத்தில் கலந்து விட்ட மறக்க முடியாத பிணைப்புகளில் ஒன்று. இப்படியொரு  கருத்தை முன்பு ஒருமுறை படித்தபோது அதுவரை பழைய பாடல்களுக்கும் அதைக் கேட்பவருக்குமான தொடர்பு என்னவென்பதை எப்படிச் சரியாக வகைப்படுத்துவது என்ற  குழப்பத்திற்கு  ஒரு துல்லியமான விடை கிடைத்த திருப்தி எனக்கு உண்டானது. இது  எத்தனை உண்மை என்பது   ஆன்மாவை மீட்டெடுத்து பலவகையான பசுமையான நினைவுகளை உயிர்ப்பிக்கும் பழைய பாடல்களைக் கேட்கும்போதுதான் புரிகிறது.  அவைகளை மீண்டும் கேட்கும் போது நமக்கு ஒரு இனம் புரியாத இணைப்பின் இன்பம் வருவதின் பின்னே இருப்பது இந்த உண்மையாகத்தான் இருக்க முடியுமென தோன்றுகிறது. ஏனென்றால் பழைய பாடல்களை  நாம் வெறும் பாடல்களாக மட்டுமே பாவிப்பதில்லை. அதையும்  மீறிய ஒரு பிணைப்பு அந்த இசையின் ஊடே ஒரு மெல்லிய நூலிழை போல நம்மையும் நம் நினைவுகளையும் ஒரு சேர சேர்த்துத் தைக்கிறது. விழித்துக்கொண்ட மனமோ உள்ளுக்குள் இன்னும் ஆழமாகப் பார்க்கிறது.  ஒரே  வரியில்  ஆன்மாவை கண்டெடுக்கும் இந்த இணைப்பை விவரிப்பதென்றால் இப்படிச் சொல்லலாம்:  பழைய பாடல்கள் நமது நினைவுகளின் நீட்சி.

       எம் எஸ் வி யின் தேன் மதுர கானங்களை நான் காலம் தாண்டி ரசிக்கக் கற்றுக்கொண்டாலும் அவரது பாடல்கள் என் மனதிற்குள் மழைத்துளி போல விழுந்து  என் ரசிப்பின் மேன்மைக்கு உரமேற்றியவைகள்  என்பதில் மாற்றுக் கருத்து  இல்லை. உதாரணமாக ஒரு முறை வட மாநிலத்தில் மிகத் தனிமையாக உணர்ந்த ஒரு பொழுதில் பழைய கசெட்டுகளில் ஒன்றை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. அப்போது நான் கேட்ட ஒரு பாடல் எனக்கு ஒரு நதியின் ஆனந்த அலைகளின் மீது பயணம் செய்யும் உணர்வை கொடுத்ததோடு  என் வாழ்க்கையில் அந்த சமயங்களில்  அறுபட்டுப் போயிருந்த என் பழைய உணர்வுகளின் உயிர்ப்பை உறுதி செய்தது. அந்தப் பாடல் ஆண்டவன் கட்டளை படத்தின் இசைச் சிற்பம் என நான் வர்ணிக்கும் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் என்ற பாடல்.  இதைக் கேட்ட நேரத்தில் என்னிடம் திரும்பி வந்த பல விவரிக்க முடியாத நினைவலைகள் உணர்வுகளின் சங்கமமாக என்னை வசப்படுத்தின. இதே உணர்வு உங்களுக்கும் பல பாடல்களைக் கேட்கும் சமயத்தில் வருவது இயற்கையே. ஆனால் இதில் கவனிக்கத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால் இந்தப் பாடல் வெளிவந்த போது நான் பிறக்கவேயில்லை. பள்ளிப் பருவத்தில் ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு எனக்கும் இப்பாடலுக்கும் இடையே உள்ள உறவு அதிகமில்லை. இருந்தும் இந்தப் பாடல் எனக்குள் செலுத்திய உணர்வுகள் எண்ணங்கள் வெறும் நாஸ்டால்ஜிக்  என்பதையும் மீறி காலத்தைத் தாண்டிய ஒரு அனுபவமாகவே எனக்குத் தோன்றுகிறது. இதையே நான் ஒரு காவியப் பாடலுக்கான முதன்மையான தகுதியாகப் பார்க்கிறேன்.

          இணையத்தில் உலா வந்தபோது ஒரு "இசை வித்தகர்" சொன்னதை படிக்க நேர்ந்தது. இவர் அன்னக்கிளியே தமிழில் வந்த முதல் படம், அதற்கு முன் தமிழர்கள் தமிழ்ப் பாடல்களையே கேட்காதவர்கள், 76 க்குப்பிறகுதான் தமிழ் பாடல்கள் வந்தன என்று புரட்டு செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் சொல்லியிருக்கும் கருத்தைப் படித்தாலே உங்களுப் புரியும்.

------------அடுத்து பொதுவாவே ஏ.ஆர் புதுமையாகவும் ஒன்றும் செய்ய வில்லை.. எப்போதும் 40/100 மார்க் மாணவர்தான் .மேலோட்ட ரசிகர்களுக்கு அவர் இசை புயல் .பெரிய பெரிய கருவிகளை வைத்துக்கொண்டு “மெல்லிசை” போட்டுக்கொண்டிருக்கிறார்... 
அல்லது யூஸ் அண்ட் த்ரோ இசை.
இது தவிர ஏ.ஆர்.ஐ Digitalised MSV என்று சொல்லலாம் Digitalised MSV . என்று சொல்லும் போது எம்.எஸ்.வியை குறைவாக மதிப்பிடவில்லை (ஆனால் MSVன் கடைசி பத்து ஆண்டு இசை துரு பிடித்துதான் போயிற்று)
(”காற்றுக்கென்ன் வேலி” பாட்டு (படம்-அவர்கள்) MSVன்
அமர்க்களமான இசை.அந்த டிரெண்டை தொடர்ந்த்திருந்தால்
டிரெண்டு மாறி இருக்கும்.)
இது தவிர ஏ.ஆர்ன் சில பாடல்கள் , எம்.ஸ்.வி.ன் பழைய பாடல்களுக்கு ”பில்டு அப்” கொடுத்து போடப்படடது. சொந்த சரக்கு இல்லை.-------------

          இதைச் சொல்வது ஒரு இளையராஜா ரசிகராகத்தான் இருக்க முடியும் என்பது  எந்த விதமான யூகத்தையும்  தாண்டிய நிதர்சனம். மெல்லிசை என்பதை மிகச் சாதாரணமான அதிகமான வாத்தியங்கள் இசைக்கப்படாத வெறும் இசை எனவும் , மெல்லிசையை மெலிந்த இசை என குதர்க்கமாக திரிக்கவும்  முயலும் இந்தச் சிந்தனை ஒரு பலத்த ஆய்வுக்கு உட்பட்டது. முதலில் இவர் பகடி செய்யும் மெல்லிசை என்ன என்பதை நாம் சற்று ஆராய்வோம்.

             ஒரு வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருந்த நமது பாரம்பரிய கர்நாடக இசை அறுபதுகளில் பாமரர்களும்  சுலபமாக  ரசிக்கும் எளிமையின் வடிவம் பெற்றது ஒரு ஆச்சர்யம். பின் அது  மெல்லிசையாக மாறி நமது இசை தாகத்துக்கான நீரூற்றுகளாக பொங்கிப் பிரவாகமெடுத்தது ஒரு வியப்பான காவிய நிகழ்வு. இது  அணையில்லாத வேகத்தில்  புதுவெள்ளமாகப் பாய்ந்தது
ஒரு இசைச் சரித்திரம்.  இதன் நீட்சியாக  எழுபதுகளில்  இந்த மெல்லிசை புதிய சாலைகளை அமைத்துக்கொண்டது ஒரு மகத்துவம். இந்த மெல்லிசை எப்படி சாத்தியமானது என்பது பாதைகளில்லாத இடங்களில் சாலைகளை அமைத்தவர்களின் ஆண்டாண்டு காலமான உழைப்பே.

       மெல்லிசை என்பது திடமான அடர்த்தியான கர்நாடக ராகத்தின் எளிமையான வடிவம். ஒரு சாராருக்கு மட்டுமே ஏதுவாகவும் அவ்வாறான இசைப் பண்டிதர்களின் இசை உணர்ச்சிக்கு உணவாகவும் அடிமைப்படுத்தப்பட்டு   ஒரு வட்டதிற்குள்  சிக்கிக்கொண்டுவிட்ட கர்நாடக இசையை (தமிழிசையே கர்நாடக இசையாக உருமாறியது என்ற கருத்தும் உண்டு.)  அதன் அழகுணர்ச்சி சிதையாமல்  அதைக் கேட்டு  பாமரனும் தலையாட்டும் இசை ரசனைக்கான புதிய நவீனத் தோற்றமே மெல்லிசை.  இது எப்படியென்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிகப் புகழ் பெற்ற எளிதில் யாருக்கும் புரியாத Theory Of Relativity என்ற விஞ்ஞான விதியை "நீ உன் காதலிக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகவும் காதலியுடன் இருக்கும்போது ஒவ்வொரு யுகமும் ஒரு நிமிடமாகவும் மாறிப்போகும்" என்று சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் சொல்வதைப் போன்றது.  இன்னும் சுலபமாக சொல்வதென்றால் குழந்தைகளுக்கு கசப்பு மருந்தை ஊட்டும் போது அதில் தேனைக் கலந்து கொடுக்கும் தந்திரம் போன்றது இது.  ஐம்பதுகள் முதல் அறுபதுகளின் ஆரம்பம் வரை இந்த இசைச் செதுக்கல்  படிப்படியாக நமது தமிழ்த் திரையிசையில் முன்னெடுக்கப்பட்டு செங்கல் செங்கலாக உருவாக்கப்பட்ட இசை மாளிகைதான் இந்த மெல்லிசை.  இந்த மகத்தான பணியை சிறப்பாகச் செய்த பல இசை அமைப்பாளர்களின் இசை மேதமையையும் அவர்களின் சிரத்தையான உழைப்பையும் சட்டென காலில் போட்டு மிதித்துவிட்டு, இவ்வாறான கட்டுமானங்கள் முடிந்து இசைக் கோவில்கள் கட்டப்பட்ட பின்னர் எதோ ஒரு சிலையை உள்ளே திணித்து இதுதான் இசைக் கடவுள் என்று உண்மையை உடைப்பது ரொம்பவும் முதிர்ச்சியற்ற போக்கு இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் ..மடத்தனமானது.

     மேற்கத்திய இசை பாரம்பரியத்தில் இவ்வாறான மெல்லிசை எனப்படும் light music 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தன் பரிமாணத்தை வெளிக்காட்ட ஆரம்பித்து விட்டது.  ஐரோப்பாவின் ஆணவம் மிக்க மேல்தட்டு மக்கள் ஆராவாரமாக ரசித்துக்கொண்டிருந்த சிம்பனி என்னும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் நுட்பத்தை, இசை மேதமையினால் விளைந்த இசைக் குறிப்புகளின் மீது கட்டப்பட்ட  சிம்பனியின் மகத்துவத்தை சிறிய இசைத்  துணுக்களாக மாற்றி   every Tom Dick and Harry யும் விரும்பும் வண்ணத்தில்  அதை சாமானியர்களின் அருகே கொண்டு சென்றது மேலே உள்ள சிலர் பகடி செய்யும்  light music எனப்படும்  மெல்லிசையே. ஒரு சமூகத்து  மேட்டுக்குடியின் பாரம்பரிய இசை ரசனையையும்  அதே சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின்  நடைமுறை இசை ரசனையையும் எதுவும் எதையும் மீறாத அளவில் சரியான விகிதத்தில் கலந்து ஒரு மேன்மையான இசையனுபவதிற்காக உருவாக்கப்பட்டதே இந்த மெல்லிசை என்னும் அற்புதம். இது நடந்திருக்காவிட்டால் மேற்கத்திய உலகில் என்ன மாறியிருக்கும் என்று  துல்லியமாக வரையறுக்க முடியாவிட்டாலும் நமது தமிழ்த் திரை இசையைப் பொருத்தவரை இந்த மெல்லிசையின் நிகழ்வு சாத்தியமாகியிருக்காத பட்சத்தில் இங்கே இளையராஜாவும் இல்லை ரஹ்மானும் இல்லை என்பதே உண்மை. பாதைகளே இல்லாத வெளிகளில் சாலைகள் அமைத்தவர்களை ஒரு நாலாந்தர நக்கலுடன் ஓரங்கட்டிவிட்டு   அவ்வாறான சாலைகள்  உருவாகி அதில் பயணம் செய்து காலம் காலமாக தமிழ் நெஞ்சங்களை காதலுடன் கட்டியணைக்கும் கணக்கில்லா பல கானங்கள் இன்றளவும் இறவாமல் தங்களின் இருப்பை அமைதியாக உணர்த்திக்கொண்டிருக்க இதன் பின் வந்தவர்கள்  தங்கள் வண்டிகளை அதே சாலைகளில் இலகுவாகவும் ஒய்யாரமாகவும்  ஓட்டிச் செல்ல அவர்களை  அளவுக்கு மீறிப் புகழ்வது எனது பார்வையில் நலிந்த  செயல். இசையின் பன்முகத்தன்மை நம்மை அதிசயத்திலும், ஆச்சர்யத்திலும், வியப்பிலும், திகைப்பிலும் சில சமயங்களில்  அதிர்ச்சியிலும் ஆழ்த்தக்கூடியது. அதன் மாற்றம் நமது புலன்களுக்கு தெரியாத வண்ணமாகவும்  சமயத்தில்   புரிபடாத  ஒரு திடீர் காட்சி  போலவும் வெளிப்படக்கூடியது. 

    மெல்லிசையின் ஆத்மாவை  அறியாமல் இதைப்போன்ற புரையோடிய கருத்துக் குப்பைகளை தாராளமாக அள்ளிவீசுபவர்களின் பக்குவமில்லாத  அடுத்த வெற்றுக்கூச்சல் எம் எஸ் வியின் இன்னிசையின் இனிமை  அவருடைய அந்திம காலங்களில் சோடை போனது என்பது. மேலே இப்படியான ஒரு கருத்தைச் சொன்னவர் பொத்தாம்பொதுவாக எம் எஸ் வி யின் கடைசி பத்து வருடங்கள் என்று ஆதாரமில்லாத அபத்தத்தை உதிர்த்துவிட்டு உடனே  ரஹ்மானை துவைத்துப்போட சென்றுவிடுகிறார். அது எந்த பத்து வருடங்கள் என்பதை மட்டும் நம்முடைய அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார். இது வழக்கம்தான். 70களின் எம் எஸ் வி யின் இசை எவ்வாறு ராக அலைகளாக சுழன்றடித்தது என்பதை தமிழகமே அறியும். ஒருவேளை அன்னக்கிளி வந்த 76ஆம் ஆண்டிலிருந்து இந்த கணக்கை எடுத்துக்கொண்டாலும் அதுவுமே உண்மைக்கு முரணானது. வெற்று ஓசைகளிலும், கண நேரத்திற்கு நமது கவனத்தை கவரும் துடிப்பான இசையை  தருவதையும்   தவிர்த்து தான்  அதுவரை கடந்துவந்த பாரம்பரியத்தின் வேர்களை இழக்காத இசையை இறுதிவரை எந்தவித சமரசங்களுக்கும் உட்படாமல் கொடுத்துவந்த ஒருவரை கேட்கவே கூசும்  நாலாந்தர இசை வடிவங்களை   பிரபலமாக்கி தமிழிசையின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒருவருடன் ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது. இருந்தும் அவருக்குப் பின் இவர் வந்த ஒரே காரணத்திற்காக  இந்த ஒப்பீடு சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. 

           இப்போது நாம் பார்க்க இருப்பது 1972இல்  பட்டி தொட்டியெங்கும் வெடி போல ஒலித்த ஒரு படத்தின் பாடல்களை. அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு  என்று ஆரம்பித்தாலே அந்தப் பாடலின் துடிப்பான தாளம் நம்மை உடனே ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு நண்பர் மச்சானைப் பார்த்தீங்களா பாடல்தான் முதல் முதலாக நாட்டுப்புற இசையின் குதூகலத்தை தமிழர்களுக்கு உணர்த்தியது என்று சொல்லப்போக அந்த மதீயீனமான  கருத்தின் மீது ஆணியடித்தது இந்தப் பாடல். பட்டிக்காடா பட்டணமா படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் குதித்து உற்சாக கும்மாளம் போட்டவை என்பதை இங்கே நினைவில் கொள்வது அவசியம். உதாரணமாக எம் எஸ் வி அனாசயமாக மேற்கத்திய இசையை நமது நாட்டுப்புற தாளத்துடன் சேர்த்து அதகளம் செய்த கேட்டுக்கோடி உருமி  மேளம் என்ற பாடலை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால் அதில்  அவர் செய்திருக்கும் நவீனம் நம்மை வியக்க வைக்கும். கிராமத்து நாயகன் தன் மண் சார்ந்த பெருமையை பாடத்துவங்க அந்தப் பல்லவிக்கு எம் எஸ் வி கிடார் மற்றும் ட்ரம்ஸ் என தடதடக்கும் மேற்கத்திய இசையை பின்னணியில் அமைத்து நகரத்து நாயகி We shall meet at the garden gate என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்க பின்னணியில் நம் நாட்டுபுற வாத்தியங்கள் ஆர்ப்பாட்டமான  தாளத்துடன் அந்த மேற்கத்திய உருவத்தை அப்படியே வாரிச் சுருட்டி விழுங்கி விட எஞ்சி நிற்பது ஆனந்த வியப்பே. இந்த மரபை மீறும் பாணி அல்லது இசைப் புரட்சி பாடல் முழுதும் நம்மை தொந்தரவு செய்யாமல் ரசிப்புடன் மானசீகமாக குதித்து ஆடவைக்கிறது. M.S.V's choice of musical layers is not disturbingly dominant but subtly sensuous.  மேலை நாடுகளில் டப்பாங்குத்து பாடலைப் பாடும் அலங்காரமான வெளிப்பூச்சு எதுவுமில்லாத ஒரு உன்னதமான இசை ரசனைக்கான பாடலிது. இதே படத்தின் நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று என்ற பாடல் மற்றொரு மனதை கவரும் கானம். இதில் இசைக்கப்படும் கிடாரின் இன்னிசை கேட்பதற்கு அலாதியானது. 
         
   பால்ய வயதில் நண்பர்கள் சூழ வாழ்ந்த தினங்களில் எத்தனை இன்பங்கள் அருவி போல பருகக் கிடைத்தாலும் அவற்றை நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. Abundance and availability make us feel regret the moments we failed to cherish when they were around. 78 இல் வந்த அவள் தந்த உறவு என்ற படத்திலுள்ள இந்தப் பாடல் இதை எத்தனை அழகாகச் சொல்லிவிடுகிறது. நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது. நமது ஞாபக மண்ணில் புதைந்துபோன பொக்கிஷப் பாடல். காதலிக்கு பதில் இசை என்று வைத்துக்கொண்டால் இது சரியே என்று தோன்றுகிறது. எஸ் பி பியின் இளமை துள்ளும் குரலும் அப்போது ஆர்ப்பரிப்பைக் கொடுத்த அவரது ஒ ஒ ரிமெம்பர் என்ற ஆங்கில உச்சரிப்பும் ஒரு பசுமையான இலையாக நெஞ்சத்தில் துடிக்கிறது.  ஏன் இதுபோன்ற இசை முத்துக்களை மறந்தோம் என்ற சுய ஊசிகள் நம்மைக் குத்துவது இவைகளுடன் நமக்குக் கிடைக்கும் வலிகள்.

      இதே உணர்வை அளிக்கும் மற்றொரு வைர கீதம் என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் என்ற மிக மகத்துவமான இனிமையை இசையாக கொட்டிய பாடல். எழுபதுகளின் முத்திரை என்ற பட்டியலிட்டால் அதில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இந்தப் பாடல் இருக்கும் என்பது நிச்சயம். ஒரு முறை இதைக்  கேட்டுவிட்டால் பிறகு நாள் முழுதும் மனதில் அணையாத விளக்காக எரிந்துகொண்டே இருக்கும் பாடல்.  கேட்கும் முதல் நொடியிலேயே கானக் குயில் சுசீலாவின் மந்திரம் போர்த்திய குரலும் எம் எஸ் வியின் ராகத்தை விட்டு விலகாத தாளமும் நம்மை வசியம் செய்துவிடுகின்றன. பிறகு டி எம் எஸ் பாடத்துவங்கியதும் நாட்டுபுற தாளத்துக்கு மாறும் பாணி பின் சுசீலா மீண்டும் தொடரும் போது எந்தவித இடைஞ்சலில்லாமல் மேற்கத்திய தாளம் போட்டுக்கொள்வது அபாரமான இசைச்  சுழற்சி. இந்தப் பாடல் அவன் ஒரு சரித்திரம் என்ற படத்தில் வருவதாக ஒரு தவறான தகவல் இணையத்தில் இருந்தாலும் உண்மையில்  இது1977 இல் வந்த பெருமைக்குரியவள் என்ற  படத்தின் பாடல். 

     இது பெய்ட்டோவன் (தமிழில் பீத்தோவன் என்பார்கள் தவறுதலாக.) என்ற இசை அதிசயத்தின் Fur Elise என்ற இசைத் துளியின் நகல் என்ற தகவல் இருக்கிறது. உண்மையில் பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய துணுக்கே இந்த அற்புதப் பாடலை ஒரு மேற்கத்திய நகல் என்று சொல்லத்தூண்டுகிறது. மற்றபடி இந்தப் பாடல் செல்லும் திசையே வேறு. கண்டிப்பாக இது ஒரு பிரதியெடுக்கப்பட்ட பாடலல்ல. இங்கே சில உண்மைகளை வெளிச்சத்துக்கு அழைத்துவருவது அவசியம் என்றுனர்கிறேன்.  யாதோங்கி பாரத் என்ற ஹிந்திப் படம் நாளை நமதே என தமிழில் எடுக்கப்பட்டபோது அதில் எம் எஸ் வி இசையமைக்க மறுத்துவிட்டார். பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் யாரும் மறுப்பே கூற முடியாது. ஆனாலும் எம் எஸ் வி இசையமைக்க விரும்பாததின் காரணம் மூலப் படத்தின்  ஹிந்திப் பாடல்களையே தமிழில் அமைக்கும்படி தான் நிர்பந்த்திக்கப்படுவோம்  என்ற எண்ணமே. ஆனால் அவ்வாறில்லாமல் தமிழில் புது மெட்டுகள் அமைக்கலாம் என்ற உறுதிமொழிக்குப் பிறகே எம் எஸ் வி இதில் இசையமைத்தார். ஆச்சர்யமாக நாளை நமதே படத்தின் பாடல்கள் ஒன்றுகூட அந்த ஹிந்திப் படத்தின் சாயலைக் கொண்டிருக்காது என்பதை இந்த இரண்டு படத்தின் பாடல்களைக் கேட்டவர்கள் உணர்வார்கள். மேலும் ஆராதனா என்ற ஹிந்திப் படம் சிவகாமியின் செல்வன் என்றானபோதும், பிரமச்சாரி எங்க மாமாவாக வந்தபோதும் பாடல்களில்  எம் எஸ் வி தன் சுய முத்திரையையே பதித்தார். இதில் பில்லா, தில்லு முல்லு, தீ போன்ற படங்களும் அடக்கம். பட்டியல் நீளும் சாத்தியம் இருக்கிறது. எனவே இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன்.

      72 இல் வெளியான  சுடரும் சூறாவளியும் என்ற படத்தில் வரும் அன்பு வந்தது என்னை ஆள வந்தது என்ற சுகமான கீதம் எஸ் பி பி யின் ஆரம்பகாலத் தேன் துளிகளில் ஒன்று. இதைக் கேட்டவர்கள் அல்லது இப்போது கேட்பவர்கள் இதை உணர்வார்கள். இதைக் கேட்கும்போது உங்களுக்கு அந்த கால வானொலி தினங்கள் ஞாபகம் வராவிட்டால் நீங்கள் சில முதல் அனுபவங்களை  இழந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  என்று அர்த்தம்.

     73இல் மணிப்பயல் என்றொரு படம் வந்தது. இதில்தான் தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ என்ற அலாதியான கானம் இருக்கிறது. பாடகர்  ஜெயச்சந்திரனின் ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்று. டேப் ரிகார்டர் வந்த பிறகு  இந்தப் பாடலை மட்டும் ஒரு கசெட் முழுதும் பதிவு செய்து சலிக்காமல் கேட்ட ஒரு உறவினர் எனக்குண்டு. சிலருடைய இசை விருப்பங்கள்தான் எத்தனை வினோத வடிவங்கள் பெறுகின்றன? தவிர்க்க முடியாத கானம்.  இதை பலமுறை கேட்டிருந்தாலும் படத்தில் ஏ வி எம் ராஜன் பாடுவார் என்று சற்றும் எண்ணவில்லை.

     74இல் ஜெயலலிதாவின் 100வது படம் திருமாங்கல்யம் வெளிவந்தது. படம் ஓடியதா இல்லையா என்ற விபரம் தெரியவில்லை.  பொன்னான மனம் எங்கு போகிறது சொல்லுங்கள் மேகங்களே என்றொரு நளினமான கீதம் இதிலுண்டு. ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு சரி. இதன் பின் தற்போதுதான் மீண்டும் இந்தப் பாடல் என் செவிகளில் விழுந்தது. இதே படத்தின் மற்றொரு நல்லிசை கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே என்ற பாடல். அருமையான ராக வார்ப்பு.

         76இல் வந்த ஒரு படம் முத்தான முத்தல்லவோ. படம் வெற்றி பெற்றதாக எனக்கு நினைவில்லை.  ஏனென்றால்  இந்தப் படம் வந்த சுவடே அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் இதிலுள்ள சில பாடல்களை குறிப்பிட்டால் இந்தப் படம் பற்றிய ஒரு திடீர் ஞாபகம் உங்களுக்கு வரலாம். நான் குறிப்பிடும் முதல் பாடலைக் கேட்டபோது 70களின் வானொலி தினங்கள் மனதில் மறுபடி உயிர்பெற்றன. எஸ் பி பி பாடிய மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் என்ற பாடலை  யு டியூபில் காண நேர்ந்தது. பாடலே ஒரு சுகம் என்றால் இதில் நடித்த தேங்காய் சீனிவாசனின் முக பாவனைகளும் சேஷ்டைகளும் அற்புதம்.இப்படியொரு பாடல் அப்போது வந்தது என்ற நினைவே இதை கேட்கும்போதுதான் மீண்டும் எழுந்தது. இதே படத்தின்  பாலபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ பாடல் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்ட கான  ஊற்று. பாடலை முழுதும் உள்வாங்கினால் இதன் வசீகரத்தை உணரந்துகொள்ள முடியும். இதே படத்தின் சிறப்பான மற்றொரு பாடல் எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள். இதை ஒரு ராஜா ரசிகர் முன்பு ஒருமுறை எனக்கு வந்த பின்னூட்டத்தில் கடுமையாக சாடியிருந்தது என் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடல் வந்தபோதே எங்கள் நண்பர்கள் குழுமத்தில் தேங்காய் சீனிவாசன் பாடும் பாட்டு இது என்ற அறிமுகத்துடன் நாங்கள்  இதை நக்கல் செய்வதுண்டு. அந்த சிறுபிள்ளைத்தனத்தைத் தாண்டி யோசித்தால் எம் எஸ் வி மற்றும் எஸ் பி பி சேர்ந்து பாடிய அபூர்வமான பாடல் இது என்ற நிறம் இதற்க்கிருப்பதைக்  காணலாம். பகடி செய்யப்பட்டாலும் இசையின் அழகு குலையாமல் கரகரப்பான குரலில் எம் எஸ் வி சிறப்பாக பாடியிருப்பது இதனை இன்னும் மெருகேற்றுகிறது.

     1978 இல் வந்த ஒரு திரைப்படம் அதுவரை நாயகனாக வலம் வந்த ஒரு நடிகரை  ஒரே நொடியில் கீழே வீழ்த்தியது. அது வண்டிக்காரன் மகன் என்ற கருணாநிதியின் கைவண்ணத்தில் வந்த திரைப்படம். நீண்ட நாட்களுக்குப் பின் கருணாநிதியின் வசனத்தில் வந்த இந்தப்படம் (எம் ஜி ஆர்  முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பின் கருணாநிதி கலைத் துறைக்கு மீண்டும் வந்த படம் இது.)  150 படங்கள் கதாநாயகனாக சிம்மாசனத்தில் இருந்த ஜெய் ஷங்கர் என்ற மனிதாபிமானம் மிக்க ஒரு  நடிகரின் நடிப்புல வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. வினோதம் என்னவென்றால் வண்டிக்காரன் மகன் படம் பெரிய வெற்றி பெற்றது என்பதுதான். எம் ஜி ஆர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் மக்கள் மத்தியில் அவர் கதாநாயகனாகவும் அவரை எதிர்த்தவர்கள் எதிரிகளாகவும் (பெரும்பான்மையானவர்களால்) பார்க்கப்பட்டார்கள்.   எம் ஜி ஆர் ஆட்சியில் கருணாநிதி மீண்டும் திரைப்படத் துறைக்கு வந்த முதல் படம் வண்டிக்காரன் மகன். கருணாநிதி தன் எழுத்தின் வலிமையால்  எம் ஜிஆர் என்ற தன் நண்பதெரியை (ஆங்கிலத்தில் frenemy (friend+enemy) என்று இப்போது அழைக்கப்படும் ஒரு பதத்தின் உறுதிசெய்யப்படாத தமிழாக்கம்.) வசைபாடும் பல சாட்டையடி வசனங்கள் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்று கருத்தப்படுகிறது. எனவே இதில் நடிக்க பல நடிகர்கள் அப்போது தயங்கியதாக நான் படித்திருக்கிறேன். இதில் துணிச்சலாக நடித்த ஜெய்ஷங்கர் ஒரு மிகப் பெரிய விலையை இதற்காக கொடுக்கவேண்டியதாக இருந்தது. அது இதுதான்: இதன் பின் ஜெய் ஷங்கரின் திரையுலக வாழ்வு ஒரு முடிவுக்கு வந்தது. பல அரசியல் காரணங்கள் அவரின் திரையுலக பயணத்தை மீண்டும் எழ விடாது செய்தாலும் அவர் இந்தப் படத்தில் நடித்ததை கொஞ்சம் பலத்த ஆலோசனைக்குப்பின் ஏற்றிருக்கலாம் என்ற ஒரு எண்ணம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. இந்தப் படத்தில்  ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்ற பாடல் தி மு க பார்வையில் அன்றைய எம் ஜி ஆர் ஆட்சியை பரிகாசம் செய்தது. இதை எம் ஜி ஆரின் பல கொள்கைப் பாடல்களை எழுதிய வாலி எழுதியதும் அதற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்ததும் ஒரு வியப்பான உண்மை. கொஞ்சம் அரசியலை தூரவைத்துவிட்டு இந்தப் படத்தில் வைரம் போல் ஜொலித்த அருமையான மெலடியான ஒரு பாடலைப் பார்ப்போம். அது மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே  என்ற மிகச் சிறப்பான பாடல்.  எஸ் பி பி- வாணி ஜெயராம் இருவரின் குரல்களும், மனதை கொள்ளைகொள்ளும் பல்லவியும், நேர்த்தியான செதுக்கப்பட்ட இசையும் இந்தப் பாடலை நிரந்தரமாக நம் நெஞ்சில் உட்காரவைத்துவிடுகின்றன.

     70களில்  வந்த பல கானங்கள் அற்புதம் கலந்த ஆனந்த அனுபவங்கள். அவற்றை நான் முதலில் கேட்ட சமயத்தில் எழுந்த சிலிர்ப்பு பிறகு எனக்கு உண்டான  வேறு இசை நாட்டத்தினால் சட்டென அடங்கிவிட்டாலும் அவை நெருப்புக் கங்குகள் போல என்னுள் உயிருப்புடனிருப்பதை எந்தப் புதிய இசையாலும்  அணைக்க முடியவில்லை. குறிப்பாக எம் எஸ் வி - சிவாஜி இணைப்பு ஒரு மேகத்தீண்டல்.  
    
        அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்- ரோஜாவின் ராஜா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மென்மையின் மறுவடிவம். அலங்காரம் கலையாத அற்புத இசை. இதுபோன்று மெழுகு போல உருகும் பல கீதங்கள் எம் எஸ் வி யின் இசை ஆச்சர்யங்களில் அடக்கம்.

    அடுத்து வருவது மிகப் பெரிய புகழடைந்த, அப்போது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பான  சுவையான டாக்டர் சிவா படத்தின்  மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய்.   எத்தனை முறை   என்ற கணக்கில்லாது தினமும் எதோ ஒரு அலைவரிசையில் இது ஒலித்துக்கொண்டே இருக்கும். ஜேசுதாஸின் வெற்றி நோக்கிய பாதையில் அவருக்குக் கிடைத்த அடுத்த ஏணிப்படி இப்பாடல். பாடல் வந்த சமயத்தில் என் நண்பனொருவன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் என இடைவிடாது மந்திரம் போல உச்சரித்துக் கொண்டேயிருப்பான். அதன் அர்த்தம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    77இல் அவன் ஒரு சரித்திரம் என்ற படம் வந்தது. எதோ ஓடியது என்று ஞாபகம். ஆனால் இதன் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை. அம்மானை என்ற பாடல் ஒரு இசைத் தாலாட்டு.  அம்மானை அழகு மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடிவரும் பெருமானை எனத் துவங்கி பின் ராக தாளங்களில் குதித்து வாணி ஜெயராமின் வெள்ளிக்குரலில் இந்தப் பாடல் ஓடுவதைக் கேட்டால்  ரம்மியமான அமைதி கிடைப்பது நிச்சயம். மாலையிட்டான் ஒரு மன்னன் அங்கு  மயங்கி நின்றாள் ஒரு அன்னம் என்ற பாடலும் சிறப்பாக வார்க்கப்பட்டது. படத்தின் உயிர்நாடியான வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே எல்லோரின் உதடுகளிலும்  உட்கார்ந்த பாடல். நெஞ்சத்தை நிரப்பிய கானம். வானொலியில் வெற்றி உலா வந்த பாடலிது.
    
         அன்பைத் தேடி என்ற படத்தின்  சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் என்ற பாடல் கேட்டவுடனே நாற்பது  வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது. அதேபோல் சித்ரா பவுர்ணமி படத்தின் வந்தாலும் வந்தாண்டி ராஜா பாடலும் சிறப்பாக அமைக்கப்பட்டது. இந்தப் படம் வந்த புதிதில் சிவாஜியின் சிகை அலங்காரம் எங்கள் வட்டத்தில் அதகளமாக பகடி செய்யப்பட்டது. என் நண்பன் ஒருவன்  சிவாஜியின் தீவிர ரசிகனாக இருந்தான். அது அவன் தந்தை ஒரு தீவிர காங்கிரஸ் அனுதாபி என்பதால் அவனுக்குள் செலுத்தப்பட்ட ரசனை. நாங்கள் செய்த ரகளையில் தெறித்து ஓடியவன் சில நாட்களில் ரஜினி ரசிகனாக மாறிவிட்டான்.

    77இல் வந்த ஒரு படம் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து பெரும்பாலானவர்கள் அறியாதவண்ணம் உருமாறி அசல் பெறாத வெற்றியை ருசித்தது. அது நாம் பிறந்த மண் என்ற சிவாஜி-கமல் நடிப்பில் வந்து காணாமல் போன படம். இதுவே 1996இல் ஷங்கரின் கைவண்ணத்தில் இந்தியன் என முகமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் தலைப்புச் செய்தியானது. சுட்டதா சுடாததா என்ற விவாதம் தேவையற்றது. மேலும் அது எனது நோக்கமல்ல. நாம் பிறந்த மண் படத்தில் ஒரு பாடல் உண்டு ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே என்ற இந்தப் பாடல் அப்போதைய கமலஹாசனின் மேடைப் பாடகன் இமேஜுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இதன் பிறகே என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு  என்று மறுபடி மேடையில் தோன்றி கமல் பாடினார்.

    இதே ஆண்டில் வெளிவந்த இன்னும் இரண்டு சிவாஜியின் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. அதன் பாடல்களும் பிரபலமடைந்தன. அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ என்றாலே  பாசமலர் பாதிப்பில் சிவாஜியை வைத்துக்கொண்டு நமது இயக்குனர்கள் கொத்து பரோட்டா போட்ட பல படங்களில் ஒன்றான அண்ணன் ஒரு கோவில் நமது ஞாபகத்துக்கு வந்துவிடும்.  படத்தின் நிறைவே இதன் பாடல்கள்தான் என்பது என் எண்ணம். இந்தப் படத்தை நான் அப்போது பார்க்கவிரும்பவில்லை. மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை என்ற பாடல் மனதை வருடிச் செல்லும் மயிலிறகு போன்ற மென்மையானது. மிகவும் சுவையாகப்  படைக்கப்பட்ட இசை உணவு. நாலுபக்கம் வேடருண்டு  என்றொரு பாடல் இதிலுள்ளது. இரண்டாவது அந்தமான் காதலி என்ற படம். இளையராஜா என்ற புதியவர்  தனது வேறுபட்ட  இசை பாணியால் வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த சமயத்திலும் எம் எஸ் வியின் இசை வீச்சு எத்தனை நளினமாகவும் அலங்காரமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியின் இனிமையை விட்டுவிலகாமல் ஒலித்தது! அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடல் ஒரு உவகை. நமக்குப் பிடித்தவர்களின் முகத்தை ஆழ்ந்து நோக்கும் அனுபவம். வாணிஜெயராமின் குரல் அந்த அற்புதத்திற்கு வடிவம் கொடுக்க, ஜேசுதாஸ் இன்னொரு பக்கம் இதன் அழகை அடர்த்தியாக்க எம் எஸ் வி யின் ராக தாளங்கள் மற்றும் ஹான்டிங் டியூன் என்று எல்லாமே இதை ஒரு சாகாவரம் பெற்ற நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. அடுத்த அபாரம்  நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா  . இந்தப் பாடல் அப்போது வெகுவாக பிரசித்தமானதன் ஒரு சிறிய காரணம் ஜேசுதாஸ் திருக்கோவிலே ஓடிவா என்பதை தெருக்கோவிலே ஓடிவா என்று பாடியதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் அந்த தெருக்கோவிலே  என்ற அம்சத்திற்காகவே இந்தப் பாடலை கேட்டதுண்டு. இந்தப் பாடல்  ஜேசுதாசை  எங்கள் வீட்டில் ஒரு விவாதப் பொருளாக்கிவிட்டது.  பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம் என்றொரு பாடல் டி எம் எஸ் சின் சீறும் குரலில் சிவாஜிக்குப் பொருத்தமான பாடலாக அமைந்தது.

   இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ? என்ற இந்த ராகத் தீற்றல்  அப்போது இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வந்த பைலட் பிரேம்நாத் படத்தில் உள்ளது. மென்மையாக  மனதை வருடும் கீதம். Who is the black sheep  அது யார் யார் யார் என்றொரு பாடல் இதில்தான் இருக்கிறது என்று நினைவு.(அல்லது ஜெனெரல் சக்கரவர்த்தியாக இருக்கலாம்.)

    இமயம் கண்டேன் என்ற இமயம் படத்தின் பாடல் மிகவும் நளினமான காதல் கானம். ஆனால் அதைவிட அதிக உள்ளங்களை கொள்ளைகொண்டது கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம் மங்களம் என்ற பாடலே. துடிப்பான இசை துவங்க பின் ஜேசுதாஸ் கங்கை என்று முதல்புள்ளி வைக்க வாணிஜெயராம் யமுனை என்று பின்பாட்டு பாட அதுவரை துடித்து ஓடக் காத்திருந்த  தபேலா தடாலென்று ஒரு மோகன வசீரகத்துடன் தன் தாளக்கட்டை ஆரம்பிப்பது கேட்பதற்கு ஆனந்தம்.

    80இல் சிவாஜி நடிப்பில் மோகனப் புன்னகை என்றொரு ஓடாத படம் வெளிவந்தது. இதில் ஒரு அபாரமான பாடல் உண்டு. தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி என்ற இந்தப் பாடல் எம் எஸ் வி யின் இசை இன்னும் இனிமை சிதையாமல் இருக்கிறது என்பதைச் சொன்னது. உண்மையே. இது ஒரு இசை தெளிக்கும் ஆனந்த அருவிதான். கேட்டிருக்காவிட்டால் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். திகட்டாத தேன்சுவை கொண்ட பாடல். தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை என்ற பாடலும் சிறப்பானது

       இதே ஆண்டில் சிவாஜி நடிப்பில் விஸ்வரூபம் என்ற படம் வந்து சடுதியில் காணமல் போனது. இதில் ஒரு மிக அபூர்வமான பாடல் ஒன்று உண்டு. ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி என்ற இந்த அற்புதப் பாடல் சற்று கவனம் ஈர்த்தது அப்போது. இருந்தும் இளையராஜாவின் அதிரடி டப்பாங்குத்து வீச்சுக்கு முன் களையிழந்து போனது.  நான் பட்ட கடன் எத்தனயோ பூமியில் பிறந்து என்று வழக்கமான சிவாஜிக்கான பாடலும் இதில் உள்ளது. இது அருமையான மேற்கத்தியப்  பூச்சு கொண்ட பாடல்.

     எம் எஸ் வி  மேற்கத்திய பாணியில்  படைத்த  என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது என்ற பாடல் ரத்த பாசம் என்ற படத்தில் இடம்பெற்றது. ஒரு சுவையான நேர்த்தியான மேற்கத்திய இசைச் சாயல் படிந்த பாடல். சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்டபோது அந்த இசை மிக நவீனமாக இருப்பதை உணர்ந்து சற்று வியப்படைந்தேன்.  பாடலின் பல்லவியின் பின்னே துடிப்பாக ஒலிக்கும் ட்ரம்ஸ் ஒரு ஆச்சர்யக் குறியை எனக்குள் விதைத்தது.

   அடுத்து நான் குறிப்பிடுவது இப்போது மக்களின் பொது ஞாபகத்தில் இல்லாத ஒரு அபூர்வமான அற்புதப்  பாடலையே. இப்பாடல் வந்தபோது சிவாஜி பாடல் என்று எனது நண்பர்கள் பகடி செய்தததில் கவனமின்றி கேட்டு உடனே மறந்தும்விட்ட ஆனால் இப்போது என் உள்ளத்தின் ஆழத்தில் இறங்கிவிட்ட ஒரு மேகத் தீண்டல். அது 81ஆம் ஆண்டு வெளியான அமர காவியம்  என்ற காணாமல் போன ஒரு படத்தின்  செல்வமே,ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் என்ற பாடல்தான். 2014 ஆம்  ஆண்டிலும் எத்தனை நவீனமாக ஒலிக்கிறது இப்பாடல் என்ற மின்சார உணர்வு மின்னல் போல தாக்குகிறது. எண்பதுகளில் எம் எஸ் வி தன் பொலிவை இழந்து விட்டார் என்று சொல்லும் மட மனங்களே இதை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் சிலாகிக்கும் இசையை விட இது எத்தனை மகத்துவமானது என்பதை உணர்வீர்கள்.

       கீழ்வானம் சிவக்கும் என்ற படம் இதே ஆண்டில் வந்து நன்றாகவே பேசப்பட்டது. வழக்கம்போல சிவாஜிக்கான எல்லா அம்சங்களும் கொண்ட நாடகத்தனமான படம். போட்டிக்கு சரிதா வேறு. பிறகு கேட்கவா வேண்டும்? படம் பூராவும் ஒரே உணர்ச்சிக் குவியல்தான். இதில் இன்றைக்கும் நான் நினைவில் வைத்திருப்பது புதுமணத் தம்பதியினரை வாழ்த்திப்பாடுவதாக வரும் கடவுள் படைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலைமகளே நீ வாழ்கவே என்ற மிக நல்ல பாடலைத்தான். டேப் ரெகார்டர் வாங்கிய புதிதில் என் குரலைக்  கேட்க  விரும்பி ஒரு முறை ரொம்பவும் ரகசியமாக கீழ் தொனியில் இந்தப் பாடலைத்தான்  பாடி (!) பதிவு செய்தேன். "ரெகார்டிங்" முடிந்து போட்டுப்பார்த்தால் எதோ பிராண வாயுவுக்கு போராடும் ஐ சி யு நோயாளி போல என் குரல் ஒரே மூச்சுக்  காற்றாக  ஒலிக்க, இந்தக் கடுந்துயரை போக்கும் வழி தெரியாது நான் விழிக்க, என் அண்ணன் இதை எப்படியோ கேட்டுவிட்டு "அட பாட்டெல்லாம் பாடுவியா?" என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க....அதன் பின் அந்த சிகப்பு பொத்தனை அழுத்தி எந்தவித பரிசோதனைகளையும்  செய்யத் துணியவில்லை நான் . Once bitten twice shy.

     புது வருடம் பிறந்தாலே  வேறு நாதியில்லாமல் ஒரே ஒரு பாடலைத்தான் நாம் கேட்டாகவேண்டும்.  அது சகலகலாவல்லவன் என்ற கேடுகெட்ட கீழ்த்தரமான படத்தின் ஒரே சகித்துக்கொள்ளக்கூடிய அம்சமான இளமை இதோ இதோ  இனிமை இதோ இதோ பாடல்தான். பாடலின் துவக்கத்தில் ஹேப்பி நியு இயர் என்று வரும்  ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு இதை புது வருடப் பாடல் என்ற  சான்றிதழை நமது விருப்பமின்றி சில  தொலைக்காட்சிகளே தீர்மானித்துவிட்டது ஒரு துரதிஷ்டம்.  இந்த அபத்தமான பாடலைவிட பாலைவனைச்சோலை படத்தின் பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி என்ற பாடல் இந்தச்  சூழலுக்கு பொருத்தமானது என்பது என் எண்ணம். இதையும் விட இன்னொரு புது வருடப் பாடல் நம்மிடம் இருக்கிறது. அது 82ஆன் ஆண்டு வெளியான (காளிச்சரன் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான) சங்கிலி என்ற படத்தின்   நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க ஹேப்பி நியுயியர் என்ற எம் எஸ் வி யின் இசையில் வந்த பாடலே. ஒரே ஒரு முறை இதைக் கேட்டால் நான் சொல்வதின் நியாயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். ஆர்ப்பாட்டமான மேற்கத்திய இசை. அருமையான நம்பிக்கை துள்ளும் வரிகள். மிகச்  சிறப்பான மெட்டின் மீது வரையப்பட்ட ஒரு இசை ஓவியம். இது  பலரால் அப்போது விரும்பப்பட்டது. சிலோன் வானொலியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. சொல்லப்போனால் இளமை இதோ பாடலின் கொச்சையான குத்துவேன் வெட்டுவேன் வீரன் சூரன் போன்ற வரிகளைவிட சிறப்பான கவிதை  கொண்ட நல்லோர்கள் வாழ்வைக் காக்க என்ற இந்தப் பாடலே  ஒரு புதிய ஆண்டின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் களிப்பையும் கொடுப்பது. இதுவே  ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் எல்லா தகுதிகளையும்  கொண்டது. மேலும்  புத்தாண்டை வரவேற்ப்பதற்க்கான ஒரு சிறந்த பொருத்தமான பாடலாகவும்  எனக்குத் தோன்றுகிறது.


      சிவாஜிக்கும் எம் ஜி ஆருக்கும் பல சாகா வரம்பெற்ற காவிய கானங்களைக் கொடுத்து தன் சுயத்தை இழந்தவராகவே எம் எஸ் வி எனக்குத் தோற்றமளிக்கிறார். அவர்கள் அடைந்த புகழ் ஒரு வரலாறு. அதற்கு எம் எஸ் வி யும் ஒரு காரணம் என்பதை பல நேரங்களில் நாம் உணர்வதேயில்லை. அவருக்கு வேண்டிய புகழ் வெளிச்சம் வெறும் மேடை அலங்காரமாகவே இருக்கிறது. இத்தனை அற்புதங்களை அள்ளிவீசிய அவரின் இசையறிவை  பாராட்டுவதற்கு கூட சில வார்த்தைப் போர்  புரியவேண்டியதிருக்கிறது என்பதே நமது இசை வரலாறு செல்ல வேண்டிய திசையில் பயணிக்கவில்லை  என்ற சீரழிவின் அறிகுறி.

       ஒரு முறை முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா என்ற தூத்துக்குடி வட்டார தொனியை வைத்து எம் எஸ் வி அட்டகாசம் செய்த அனுபவி ராஜா அனுபவி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு பெங்காலி நண்பன் "இது ஹிந்திப் பாடலின் நகல்." என்றான் என்னிடம். நான் "இல்லை. இது முதலில் தமிழில் வந்த பாடல்." என்றேன். எதிர்பார்த்தைபோலவே அவன் அதை நம்பவில்லை. ஒருவேளை ஒரு தமிழ்ப் பாடல் ஹிந்தியில் நகல் செய்யப்படுவதை அவன்  தங்கள்  ஆளுமை கசங்கும் நிகழ்வாகப் பார்த்திருக்கலாம். இதில் தவறேதுமில்லை.  நம் மண்ணைச் சார்ந்திராத ஒரு சமூகத்திலிருந்து வந்தவன் அவன். ஆனால் அரை நூற்றாண்டாக  நம் சமூக பாரம்பரியத்தில் நிலை கொண்டுவிட்ட என்றுமே துறந்து விட முடியாத இசை மாளிகைகளை எழுப்பியவர்களை நம்மில் சிலர் எத்தனை எளிதில் இகழ்ச்சியுடன்  மிகச் சாதாரணமான பாராட்டுக்கான வார்த்தைகளைக் கூட உதிர்க்காமல்   கடந்து செல்கிறார்கள்! இன்று ஐம்பதாயிரம் விலை கொண்ட ஸ்மார்ட் போன் நம்மிடமிருந்தாலும் நமது தந்தைகள் வைத்திருந்தது விரல் வைத்து சுற்றும் அந்த கறுப்பு நிற டெலிபோன்தான். என் தந்தை போன்ற பலரிடம்  அதுவும் கிடையாது. நேற்றைய நிகழ்வை மறந்துவிடத் துடிக்கும் இந்த அற்பத்தனமான மனோபாவம் இன்று நிகழ்வதையும்  அதே  தராசில்தான் வைக்கப்போகிறது. எம் எஸ் வி போன்ற மகத்தான இசை கோபுரங்களே தூசிபடிந்து சிதிலமடைந்து சரிந்து போகக்கூடிய  சாத்தியங்களிருந்தால் இளையராஜாவும் ரஹ்மானும் இன்ன பிற திடீர் இசை மழைகளும்  பாவம்தான்!



அடுத்து: இசை விரும்பிகள் XXII -எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


   

69 comments:

  1. காரிகன் வாழ்த்துக்கள். வழக்கம்போலவே சாரம் கட்டி அடித்திருக்கிறீர்கள்.
    நல்ல அனுபவங்களை நல்ல தொனியில் நல்ல மொழியில் சொல்லிக்கொண்டே செல்ல முடியாமல், திடீரென்று தாக்குவதற்கு வந்து குதிப்பவர்களைத் தூக்கி அடித்து அப்புறப்படுத்திவிட்டு மேற்செல்லும் வகையான எழுத்திலே இந்தக் கட்டுரையை எழுதவேண்டி நேர்ந்திருப்பது நிச்சயம் உங்களுக்கும் ஒரு சங்கடமாகவும் இருந்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. அதனையும் செவ்வனே செய்திருக்கிறீர்கள்.
    'சிலர் எளிதில் இகழும் சாதாரண இசையமைப்புதான்' என்கிறீர்கள். இகழுகிறவர்கள் இகழ்ந்துகொண்டு போகட்டும். அந்த இகழ்வுகள் நிலைப்பதில்லை. எந்தவிதமான சுவடுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பதை இங்கே கடைசியில் சொல்லியிருக்கிறேன்.
    ஒரு நல்ல பாட்டு மெட்டாலும் வார்த்தைகளாலும்தான் நிற்குமே தவிர சிறப்பான வாத்தியக்கருவிகளால் மட்டுமே நிற்காது. ஆனால் கேட்பதற்குப் புதிய அனுபவங்களை நிச்சயம் தரும். பரபரப்பை ஏற்படுத்தும். மார்க்கெட்டை உயர்த்தும். எல்லாமே கொஞ்ச நாட்களுக்குத்தான். பிறகு மறுபடியும் நல்ல மெட்டுதான் நிற்கும். என்றென்றைக்கும் நிற்கும்.
    ஏனென்றால் வாத்தியக்கருவிகளால் ஏற்படுத்தப்பட்ட 'மாற்றம்' இன்னொரு 'வாத்தியக்கருவி மாற்றம்' வந்தவுடன் பொலிவிழந்து போகும். இன்றைக்கு பாடலிலும் பாடல் வடிவத்திலும் மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஏ.ஆர்.ரகுமானால் துவம்சம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறதன.
    என்னதான் முயன்றாலும் ஏ.ஆர்.ரகுமானின் நவீன உத்திகளுக்கும், நவீன வாத்தியக்கருவிகளுக்கும், அதனை ஒலிப்பதிவு செய்யக்கூடிய நவீன ஒலிப்பதிவுக்கூடங்களுக்கும் இணையாக மற்றவர்களால்- அது எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் - அருகில்கூடப் போகமுடியாது என்ற நிலைமை.
    இந்த நிலைமையில் எம்எஸ்வியை என்ன குற்றம் சொல்லி இவர்கள் புறக்கணிக்க முயன்றார்களோ அந்த விஷயம் உதறலெடுத்து உருக்குலைந்து கொண்டிருக்கிறது. இனிமேல், இளையராஜா மெட்டுக்கும் பாடல் வரிகளுக்கும் முதன்மைக் கொடுத்துப் போட்ட பாடல்கள் மட்டும்தான் நிற்கும் என்ற நிலைமை வந்தாகிவிட்டது. அந்தப் பாடல்கள் மிகவும் சொற்பம் என்பதுதான் யதார்த்தம்.
    இந்தக் காலத்தில், அதிகமாய் கலெக்ஷன் செய்த படம், அதிகமாய் சிடி விற்ற படம், அதிகமாய் யூடியூபில் பார்க்கப்பட்ட பாடல் என்றெல்லாம் சொல்லப்படுவதுபோல் அந்தக் காலத்தில் - மிக அதிகமான கலெஷன் செய்த படம், அதிகமான ரிகார்டுகள் விற்ற படம் (எலந்தப்பயம் ரிகார்டு அதிகம் விற்றதா, என்னடி ராக்கம்மா ரிகார்டு அதிகம் விற்றதா என்ற குழப்பம் இன்னமும் உண்டு) என்ற பெருமைகள் எல்லாம் பட்டிக்காடா பட்டணமா படத்திற்கு உண்டு. இந்தப் படத்தின் வெற்றி சிவாஜி- எம்எஸ்வி இருவரைத்தான் சாரும்.
    அவையெல்லாம் படங்களே அல்ல; அதெல்லாம் வெற்றிகளே அல்ல. அதில் வந்ததெல்லாம் பாடல்களே அல்ல. பாடல்கள் பிறந்ததே அன்னக்கிளிக்குப் பிறகுதான். அதுவும் ஒருத்தரிடமிருந்து மட்டும்தான் என்று சொல்லப்போகிறார்களா என்ன!

    ஆண்டவன் கட்டளையின் புகழ்பெற்ற பாடலான 'அமைதியான நதியினிலே ஓடம்' பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திதான். வெறும் விஸ்வநாதன் அல்ல.
    பதிவில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. \\அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்ததால் ஆடும்\\ -வெள்ளம் வந்ததால் அல்ல, 'வந்தால்'தான்,
    \\பல சாட்டையடி வசனங்கள் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்று கருத்தப்படுகிறது. \\ -'கருதப்படுகிறது.'
    \\இதை புது வருடப் பாடல் என்ற சான்றிதழை நமது விருப்பனின்றி சில தொலைக்காட்சிகளே தீர்மானித்துவிட்டது \\ -நமது 'விருப்பமின்றி'.

    மற்றபடி இங்கே நீங்கள் அன்றைக்கு வானொலியில் கேட்டு மகிழ்ந்ததாகச் சொல்லியிருக்கும் தொண்ணூற்று ஐந்து சதவிகிதப் பாடல்களை நாள்தோறும் வேளாவேளைக்கு முரசு, சன் லைஃப் ,மெகாடிவி, வசந்த் என்று ஏகப்பட்ட சேனல்கள் ஒளிபரப்பிக்கொண்டிருப்பதையும், அதனை லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து, கேட்டு அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் -அதே நாட்களில் வந்த ஏராளமான பாடல்கள் வழக்கொழிந்துகொண்டிருக்கின்றன என்கிற உண்மையினையும் சேர்ந்தே யோசிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

    ReplyDelete
  2. 25ந்தேதி 1976 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படமான "ரோஜாவின் ராஜா"வில் நடிகர்திலகம் சிவாஜி நடித்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து கவியரசு கண்ணதாசன் இயற்றிய மனதை மயக்கும்/நெஞ்சத்தை உருகவைக்கும் பாடலை "அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் " பாடலை எனக்கு நினைவு படுத்தியது உங்கள் பதிவின் தலைப்பு "அலங்காரம் கலையாத அழகு." சிலைக்கும் அழகுக்கும் உள்ள வேறுபாடு எனக்கு பாடும்பொழுது தெரியவில்லை! உங்கள் இசை விரும்பிகள் அனைவருக்கும் இந்த பாடலை சமர்ப்பிகின்றேன்.இதோ!
    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
    அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே...
    ஆனந்த மேகங்கள் பூசூடக் கண்டேன்
    ஐயா உன் முகம் கண்ட ஒரு நாளிலே
    ஐயா உன் முகம் கண்ட ஒரு நாளிலே... (அலங்காரம் கலையாத.... )

    கொத்தோடு பூக்கண்ட பன்னிர் மரம்,
    பொன்மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்,
    நீரோடு விழையாடி போகின்ற தென்றல்,
    நீ கொஞ்சம் விழையாட நெஞ்சம் தரும்
    நீ கொஞ்சம் விழையாட நெஞ்சம் தரும்.....(அலங்காரம் கலையாத ...)

    உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்
    இல்லாயின் இல்லென்று வான் செல்லுவோம்.
    எங்கே உன் பூப்பந்தல் மேளங்கலோடு
    கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்
    கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்....(அலங்காரம் கலையாத.... )

    தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
    அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்,
    தேன்னாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
    திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்
    திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்..
    « அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்ததால் ஆடும் » இந்த பாடல் எனக்கு வாழ்வில் அமைதியையும் தன்னம்பிக்கையும் தந்த பாடல்.
    அன்பைத் தேடி என்ற படத்தின் « சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் « என்ற பாடலை கேட்டதும் எனக்கு தமிழகத்தின் (முன்னாள் ?) முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் குரல் வளம் என் கண்முன் தெரிந்தது
    மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை அண்ணன் ஒரு கோவில் படத்தின் இந்த பாடலில் « கோதை ஆண்டாள் தமிழை ஆண்டால் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள். » வரிககளை காணும்போது உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களது பதிவு.
    முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா என்ற தூத்துக்குடி தொனியை வைத்து எம் எஸ் வி அட்டகாசம் செய்த அனுபவி ராஜா அனுபவி பாடலைக் கேட்டபொழுது இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லத் தோன்றுகிறது அது உங்களது படைப்பு கடலில் மூழ்கி முத்துக் குளிக்க நான் தயார்!
    ஆனால் மூச்சை அடைத்துவிட்டால் உங்களது அடுத்த பதிவினை பார்க்கவும் கேட்கவும் ஆசை பட்டு தயங்கி நிற்கின்றேன். மொத்தத்தில் இது ஒரு இசை பேழை
    நன்றி!
    புதுவை வேலு
    kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி அமுதவன் அவர்களே,

    ----நல்ல அனுபவங்களை நல்ல தொனியில் நல்ல மொழியில் சொல்லிக்கொண்டே செல்ல முடியாமல்,----

    என்னைச் சொல்கிறீர்களா அல்லது என்னை எதிர்ப்பவர்களையா என்று குழப்பமாக இருக்கிறது. என்னைச் சொல்வதாக இருந்தால் எனது பதில் இதுதான்: இந்தப் பதிவை எழுதத் துவங்கிய சமயத்தில் சில ராஜா ரசிகர்களின் வலைப்பூக்களைப் படிக்க நேர்ந்தது. அவற்றைப் படிக்கப் படிக்க அர்த்தமில்லாத அவர்களின் வெற்றுப் பூச்சுக்கள் அபத்தத்தின் உச்சமாகவே எனக்குத் தோன்றியது. ரத்தம் சூடேறியது என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை அதன் எதிர்வினையாக என் எழுத்தில் காட்டம் அதிகமாக இருக்கலாம்.

    ----ஒரு நல்ல பாட்டு மெட்டாலும் வார்த்தைகளாலும்தான் நிற்குமே தவிர சிறப்பான வாத்தியக்கருவிகளால் மட்டுமே நிற்காது. -----மறுபடியும் நல்ல மெட்டுதான் நிற்கும். என்றென்றைக்கும் நிற்கும்.-----

    அருமையான கருத்து. இது முற்றிலும் உண்மையும் கூட.

    ----இனிமேல், இளையராஜா மெட்டுக்கும் பாடல் வரிகளுக்கும் முதன்மைக் கொடுத்துப் போட்ட பாடல்கள் மட்டும்தான் நிற்கும் என்ற நிலைமை வந்தாகிவிட்டது. அந்தப் பாடல்கள் மிகவும் சொற்பம் என்பதுதான் யதார்த்தம்.-----

    இது ஒரு அதிரடியான கருத்து. நெத்தியடி என்று கூட சொல்லலாம். இந்த யதார்த்தத்தை உணர்ந்தும் உணராத அல்லது உணர முடியாத நெஞ்சங்களுக்கு இந்தத் தகவல் எத்தனை கசப்பாக இருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன். ரொம்பவும் பரிதாமாக இருக்கிறது.

    சில பிழைகள் இந்தப் பதிவில் இருப்பதன் பின்னணியில் எனது அவசரம் ஒரு காரணமாக இருக்கலாம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டதாக நினைக்கிறேன். மீண்டும் வருக.

    ReplyDelete
  4. காரிகன் சார்,

    கேட்டுக்கோடி உறுமி மேளம் கேட்டிருக்கேன். ஆனால் இப்போதான் நீங்கள் அதைப் பத்தி சொல்லியிருக்கும் விஷயத்தை அறிந்தேன். மறுபடி கேட்க தூண்டுகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. வாருங்கள் யாதவன் நம்பி,

    என் பதிவை ஒரு இசைப் பேழை என்று வர்ணித்ததற்கு மிக்க நன்றி.

    இந்தப் பதிவின் தலைப்பே "நிழல் தந்த இசை மரங்கள்," பின் "இசைச் சோலைகள்" என மாறி கடைசியில்தான் "அலங்காரம் கலையாத அழகு" வந்தது. இது ரோஜாவின் ராஜா படத்தின் அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன் என்ற தேன் சுவையான பாடலின் பாதிப்பே. கவிதைத்தனமான வரிகள் கொண்ட பாடல். பதிவின் சாரத்தை சொல்லக்கூடிய தலைப்பாக இருக்கவேண்டும் என நான் எனது தலைப்புக்களில் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்வதுண்டு. அதை கவனித்ததற்கு நன்றி.

    நான் இந்தப் பதிவில் சேகரித்துச் சொல்லியிருக்கும் பாடல்கள் அனைத்தும் என்றுமே கலையாத கானங்கள். இன்னும் மீதமிருக்கின்றன. அது அடுத்த பதிவில் தொடரும். நீங்கள் தாராளமாக முத்துக் குளிக்கலாம்.

    ReplyDelete
  6. எம் எஸ் வி போன்ற மகத்தான இசை கோபுரங்களே தூசிபடிந்து சிதிலமடைந்து சரிந்து போகக்கூடிய சாத்தியங்களிருந்தால் இளையராஜாவும் ரஹ்மானும் இன்ன பிற திடீர் இசை மழைகளும் பாவம்தான்!

    திரு காரிகன்,

    சூப்பர். எத்தனைப் பாடல்கள் திரு எம் எஸ் விஸ்வநாதனிடமிருந்து வந்திருக்கின்றன. அத்தனையும் இசை முத்துக்கள்.அதிலும் என் மனது ஒன்றுதான் பாடல் என்னை ஆட்டிப்படைக்கும் பாடல். மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள். எம் எஸ் விஸ்வநாதன் பற்றி இத்தனை விரிவாக எந்த கட்டுரையும் நான் படித்ததில்லை. தொடருங்கள்.

    ReplyDelete
  7. காரிகன் அவர்களே, எழுபதுகளின் இசை ஏகாந்தமாய் இருக்கட்டும் .அதற்காக எண்பதுகளின் இசை எவ்விதம் குறைவென்கிறீர்கள்? எம்.ஜி.ஆர்,சிவாஜி.இவர்களது புகழுக்கு. எம்.எஸ் .வி, டி.எம்.எஸ் இவர்களைக் காரணம் காட்டிய தாங்கள் ,கண்ணதாசன் ,வாலி போன்றவர்களை எப்படி மறந்தீர்கள்?சிலர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பார்கள் .அது போலத்தான் இருக்கிறது தங்கள் பதிவு .தனக்குப்ளூ பிடித்த ஒருவரின் துதிபாட மற்றவரை மட்டம் தட்டுதல் அபத்தமாக அல்லவா இருக்கிறது . யாரும் யாருக்கும் அபிமானியாக,ரசிகராக இருக்கலாம் .கலைஞனை ,அவனது திறமைகளை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வசைபாடாதிருப்பதே நல்ல ரசிகனுக்கு அழகு.விவாதங்கள் தேவைதான்.நல்லவை மட்டுமே தொடரட்டும் .

    ReplyDelete
  8. வாருங்கள் அனானி,

    கருத்துக்கு நன்றி. சில மறக்கப்பட்ட உண்மைகளை பலரும் அறிவது நல்லதுதானே. எதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  9. வாருங்கள் ஆனந்தன்,

    கருத்துக்கு நன்றி. கடந்து போனதை இகழ்வது ஒரு சக்கரம் போல இப்போது நாம் எதை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுகிறோமோ அதையும் அதே வட்டத்தில் கொண்டுவரும்.

    உங்களின் விருப்பமான என் மனது ஒன்றுதான் மிக அழகான பாடல். ஒரு அமிர்தத்துளி.

    ReplyDelete
  10. வாருங்கள் அருள் ஜீவா,

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி. எதோ செலுத்தப்பட்ட அம்பு போல என் மீது பாய்கிறீர்கள். என் பழைய பதிவுகளைப் படித்துப்பாருங்கள். (இந்தப் பதிவை முழுவதும் படித்தீர்களா என்பதே சற்று சந்தேகமாக இருக்கிறது.) போன பதிவு கே பாலச்சந்தர்- எம் எஸ் வி- கண்ணதாசன் கூட்டணியின் மகத்துவத்தைப் பற்றி நான் எழுதியது. கவிஞர்களை தவிர்ப்பவன் நானல்ல. அதைச் செய்தது உங்களின் விருப்பத்திற்குரிய இசை அமைப்பாளர்தான். அது உங்களுக்கே தெரியும்.

    இசை விரும்பிகள் xxiv இல் தான் நான் எண்பதுகள் பற்றி எழுத இருக்கிறேன்.அதற்குள் நீங்கள் அதை விமர்சித்து குற்றம் சுமத்துவது வேடிக்கைதான். மற்றபடி முயலுக்கு மூன்று கால் போன்ற சொற்றொடர்கள் சற்று சலிப்பைத் தருகின்றன.

    மீண்டும் வருக. அதற்கு முன் என் பதிவை முழுவதும் உள்வாங்கிப் படியுங்கள். சில தேன் சுவை கொண்ட பாடல்களை அறிய வாய்ப்புகள் இருக்கின்றன.

    ReplyDelete
  11. அன்பு காரிகன் ,
    உங்களது பதிவு சிறப்பாக உள்ளது .நீங்கள் குறிப்பிடும் பாடல்களை கேட்க தற்போது இலங்கை வானொலி இல்லாத நிலையில் அதற்கான லிங்கையோ ,அல்லது பாடலையோ இங்கு வழங்குங்கள் .ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் பாடல்களை கேட்காமலேயே பதில் பதிவு எழுதும் கூட்டத்திற்கு தேடிப்பார்க்க தெரியாமல் கூட இருக்க வாய்ப்பு உள்ளது .
    ரோஜாவின் ராஜா படத்தின் "ஜனகனின் மகளை "பாடலை குறிப்பிட மறந்து விட்டீர்களே .
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கும் அன்பன் ரவி .

    ReplyDelete
  12. காரிகன் சார்

    மீண்டும் ஒரு நல்ல பதிவு . அழகான நடை. அற்புதமான விஷயங்கள் . கிளறியெடுத்த குண்டுமணிகளாய் பாடல்கள் வரிசை . எல்லாம் சரி . வழக்கமான இளையராஜா இகழ் பாடும் பாட்டையும் பாடி விடுகிறீர்கள்.

    ///வெற்று ஓசைகளிலும், கண நேரத்திற்கு நமது கவனத்தை கவரும் துடிப்பான இசையை தருவதையும் தவிர்த்து தான் அதுவரை கடந்துவந்த பாரம்பரியத்தின் வேர்களை இழக்காத இசையை இறுதிவரை எந்தவித சமரசங்களுக்கும் உட்படாமல் கொடுத்துவந்த ஒருவரை கேட்கவே கூசும் நாலாந்தர இசை வடிவங்களை பிரபலமாக்கி தமிழிசையின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒருவருடன் ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது. இருந்தும் அவருக்குப் பின் இவர் வந்த ஒரே காரணத்திற்காக இந்த ஒப்பீடு சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. ///

    இளையராஜாவின் இசை தமிழிசையின் வீழ்ச்சி என்பது உங்கள் பார்வையே அன்றி அது உண்மையாகி விடாது . அவருக்குப் பின் வந்தவர்கள் செய்தார்கள் , செய்து கொண்டிருக்கிறார்கள் . சீன இறக்குமதி இந்தியாவிற்குள் நுழைந்தது போல தமிழிசையோடு வட நாட்டு , வெளிநாட்டு இசைக் கலப்பை உள் நுழைத்தவர்கள் . மரபணு மாற்றப்பட்ட பி. டி கத்தரிக்காயைப் போல பி. டி இசையை கொண்டு வந்தவர்கள் . சிலர் அதைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் . அவர்களைச் சொல்ல உங்களுக்கு தைரியமில்லை .

    ReplyDelete
  13. வாருங்கள் ரவி,

    கருத்துக்கு நன்றி. இலங்கை வானொலியின் சிறப்பு தெரிந்தவர்கள் (உங்களைப் போன்றவர்கள்) நான் குறிப்பிடும் பாடல்களை ஒரு முறையேனும் அசைபோடாமலிருக்க மாட்டார்கள் . அது தெரியாதவர்களுக்கு என்ன எடுத்துச் சொன்னாலும் புரியப்போவதில்லை. இருந்தும் நீங்கள் விரும்பியது போல சில குறிப்புகள் அவ்வப்போது தேவைதான். inbaminge.com, மற்றும் யூ டியுப் லிங்கில் அத்தனைப் பாடல்களும் கேட்கக் கிடைக்கின்றன. தேடினால் எவருக்கும் இந்த இன்பம் வசப்படும். தேடினால்தானே?

    ரோஜாவின் ராஜா படத்தின் ஜனகனின் மகள் பாடல் மட்டுமல்ல இன்னும் பல சிறப்பான பாடல்களை நான் இதில் குறிப்பிடவில்லைதான். இதற்கே இரண்டு மாதங்கள் செலவழிக்க வேண்டியதாக இருந்ததால் இதுவே போதுமென நான் நினைத்ததே இதன் காரணம். அடுத்த பதிவில் இதைப் போன்ற இன்னும் பல இசை முத்துக்களின் தொடர்ச்சி வரயிருக்கிறது. படியுங்கள்.

    உங்கள் கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு இன்னொரு நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் காரிகன்,

    இந்த பின்னூட்டத்தில், பதிவில் நீங்கள் குறிப்பிட்ட பாடல்களை பற்றி மீன்டும் குறிப்பிடுவதைவிட, பதிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன்...

    " அப்போது நமக்கு ஏற்படுவது வெறும் அழகின் சுவை மட்டுமல்ல அதை சுவைக்கத் தவறிய வலியும்தான்.... "

    " நீங்கள் செய்யும் எதுவும் தவறல்ல... இனிவரும் காலத்தில் அதனை தவறென நினைக்கும் நிலை வராதவரை ! " என்ற ஜென் வாக்கியதை வேறுவிதமாய், மிக அழகாய் மனதில் பதியவைத்துவிட்டீர்கள் !

    " பழைய பாடல்கள் நம் குடும்ப உறவினர் போல ரத்தத்தில் கலந்து விட்ட மறக்க முடியாத பிணைப்புகளில் ஒன்று... "

    www.malartharu.org - தோழர் மது எனது பதிவின் பின்னூட்டம் ஒன்றில் " பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ... " என பழைய பாடல்களை பற்றிய வைர வரி ஒன்றினை எழுதியிருந்தார்... அதே போன்ற மற்றொரு வைர வரி உங்களுடையது ! இசையை உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான் அதனை ரத்த பிணைப்பாய் உருவகிக்க தோன்றும் !

    " என் வாழ்க்கையில் அந்த சமயங்களில் அறுபட்டுப் போயிருந்த என் பழைய உணர்வுகளின் உயிர்ப்பை உறுதி செய்தது... "

    உணர்வுகளின் உயிர்ப்பை உறுதி செய்வதுடன் அந்த காலத்துக்கே நம்மை கடத்திவிடும் மாயக்கம்பளம்தான் இசை !

    இது சில வருடங்களுக்கு முன் என் அனுபவம்...

    நள்ளிரவை தாண்டிய நேரம்... பாரீஸ் மாநகரில், நான் காரை பார்க் செய்த பார்க்கிங் ஒன்றின் நிலவறை படிகளில் இறங்கிகொண்டிருக்கிறேன்... பார்க்கிங் முழுவதும் இதமாய் தூறிக்கொண்டிருந்த சிம்பொனி இசையின் வயலின்கள் சட்டென வேகம் பிடித்து பெருமழையாய் ஓர் இசைகோர்வையை வீச... ஒரு நொடிக்கும் குறைவான கணத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பின்னோக்கி வீசப்பட்டு எங்கள் பூர்வீக வீட்டின் ஊஞ்சலில் விழுந்தேன் !

    என்ன நடக்கிறது என்றே புரியாமல் படிக்கட்டுகளில் தடுக்கி, நான் மீன்டும் சுதாரிப்பதற்கு பல நிமிடங்கள் ஆகின ! இதில் எதையும் நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை காரிகன் !

    என் பழைய உணர்வுகளை உயிர்ப்பித்து, நாள் தோறும் அந்த இசைத்துணுக்கை நான் கேட்ட காலத்துக்கே அடித்துசென்ற அந்த சிம்பொனி இசைத்துணுக்கு...

    உங்களுக்கு தெரிந்திருக்கும்... எழுபது என்பதுகளில் " விவித்பாரதியின் வர்த்தக ஒலிப்பரப்பு... " என்ற வெண்கல குரலை தொடர்ந்து ஒலிக்குமே பல வயலின்கள் சேர்ந்த ஆக்ரோசம்... அதுதான் !!!

    மெல்லிசையை ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டு உதாரணத்துடன் ஒப்பிட்ட உங்கள் விளக்கம் மிக அருமை ! மெல்லிசையின் ஆத்மாவை அதன் ஐரோப்பிய மூலம் வரை விளக்கி, இசை பற்றிய உங்களின் புரிதலையும், ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக வலைத்தளங்களில் அவர்கள் எழுதியதையும் இவர்கள் எழுதியதையும் எடுத்து அவசர கோலத்தில் அள்ளித்தெளிப்பவர் அல்ல நீங்கள் என்பதையும் மீன்டும் ஒரு முறை நிருபித்துள்ளீர்கள்.

    " கேட்கவே கூசும் நாலாந்தர இசை வடிவங்களை பிரபலமாக்கி தமிழிசையின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒருவருடன் ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது... "

    உண்மை ! " நேத்து ராத்திரி " என ஆரம்பித்து " மயிர்கூச்செரியவைக்கும் பெண் ஒலிகளை " பிரபலமாக்கினார் ஒருவர் ! இன்னொரு தேனிசைதென்றலோ " சமைஞ்சது எப்படி ?! " என்ற , இலக்கியத்தரமிக்க, தர்க்கரீதியான கேள்வி எழுப்பினார் ! இதில் மன்னிக்க முடியாதது என்னவென்றால் இந்த அற்புத இசை கானங்களை (!) இசையமைத்த தருணங்களில் இருவருமே உச்சியிலிருந்தனர் ! " எல்லாமே " இவர்களின் பிடிக்குள் இருந்த காலமது ! இவர்கள் நினைத்திருந்தால் அந்த " ஒலிகளை " நீக்கியிருக்கலாம்... வார்த்தைகளை மாற்றியிருக்கலாம்...

    பொது இடத்தில் காதலனும் காதலியும் கட்டிப்பிடித்து உடல் வருடி முத்தமிடுவதை கலாச்சாரமாக கொண்ட ஐரோப்பிய நாடுகளின் இசையில் கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான வரிகள் இருப்பதாய் படவில்லை ! இந்த வக்கிரத்தின் வெளிப்பாட்டை குழந்தைகுட்டிகளுடன் கேட்பதோடல்லாமல் நல்ல இசையாகவும் நிருபிக்க முயல்கிறார்கள் சிலர் ! இதனை எழுதும்போது நாளையே மேற்சொன்ன பாடல்களின் வரிகளையும் சத்ததையும் கேட்க நேர்ந்து, அதன் அர்த்தத்தை என் குழந்தைகள் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயம் எழுகிறது காரிகன் ! அந்த வகையில் வயதில் சிறியவரானாலும் ரஹ்மானின் கண்ணியம் மரியாதைக்குரியது !

    உண்மை ரசனையின் அர்த்தம் புரிந்த வலைப்பூ நண்பர்கள் பலர் உங்களின் தளம் பற்றி குறிப்பிட்டு பாராட்டுவதை படிக்க நேரும்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்கிறேன் நண்பரே... தொடருங்கள் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  15. வாருங்கள் சால்ஸ்,

    பாராட்டுக்கு நன்றி. உங்கள் பின்னூட்டங்களைக் கண்டு உங்கள் எழுத்திலுள்ள நயத்தை அறிந்து நீங்கள் பதிவுகள் எழுதினால் என்ன என்று எனக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. கடைசியாக அதைச் செய்துவிட்டீர்கள். உங்களின் கருப்பொருளின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் உங்கள் எழுத்து படிக்க இன்பமயமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    இளையராஜாவின் எழுச்சி நமது தமிழிசையின் வீழ்ச்சி என்று சிலர் கருதுவதுண்டு. அதில் நானும் ஒருவன். எனவே எனது பார்வை அப்படித்தான் இருக்க முடியும். மேலும் நான் இளையராஜாவை மட்டும் குற்றம் சொல்லவில்லை. ரஹ்மான், ஹேரிஸ் ஜெயராஜ், தேவா,... பட்டியல் நீளும்... என பலரையும் இதே கூண்டில்தான் அடைத்திருக்கிறேன். அவர்கள் எல்லோருமே சில நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்க மாட்டேன். ஆனால் ஒரு ரஹ்மான் நேர்த்திருக்காவிட்டால் நமது திரையிசை இன்னும் கேவலப்பட்டுப்போயிருக்கும் என்பது என் எண்ணம். இளையராஜாவின் இசையே அவரது அந்திம காலங்களில் வெகுவாக மாறித்தான் இருந்தது -அழகிலிருந்து அலங்கோலமாக.

    நீங்கள் எழுதுங்கள் உங்கள் புதிய காற்றில் எப்படியெல்லாம் ராஜா உங்களைப் பரவசப்படுத்தினார் என்று.

    ReplyDelete
  16. வாருங்கள் சாம்,

    என்னைப் பாராட்டுவது இருக்கட்டும் . உண்மையில் நீங்கள் பின்னூட்டத்தை இத்தனை அழகாக எழுதுவதைக் கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள். மேலும் இத்தகைய பின்னூட்டதிற்கு எனது நன்றி.

    Old music is our family என்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன். இசை நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்வதை இப்படிக் கூட சொல்ல முடியுமா? எனக்கு ஏன் இது தோன்றவில்லை என என்னை எண்ண வைத்த எழுத்து:

    ---ஒரு நொடிக்கும் குறைவான கணத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பின்னோக்கி வீசப்பட்டு எங்கள் பூர்வீக வீட்டின் ஊஞ்சலில் விழுந்தேன் ! -----

    கன கச்சிதம்.களை கட்டுகிறது. மெல்லிசையை ஐன்ஸ்டீனின் சார்புத் தத்துவத்துடன் ஒப்பீடு செய்தததை கவனித்து அதை குறிப்பிட்டதற்கு நன்றி. மெல்லிசை பற்றி ஏற்கனவே வென்ற இசை என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். முடிந்தால் படித்துப்பாருங்கள்.

    இளையராஜாவின் இசை அழகாககத் துவங்கி சடுதியில் அலங்கோலமானதை பலர் நம்புவதில்லை. முதல் ஆறு அல்லது ஏழு வருடங்கள் அவரது இசை கேட்க ரம்மியமாக இருந்தது. அதன் பின் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் பெரும்பாலும் அவஸ்தைகள் என திரையிசையின் முகமே கோரமாக மாறிப்போனது. நீங்கள் சொல்வதுபோல அப்போது அவர்தான் உச்சத்தில் இருந்தார். அவ்வகையான பாடல்களுக்கான கட்டாயங்களோ, நிர்பந்தங்களோ அவருக்கு கண்டிப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தும் அவர் ஏகத்துக்கு நாலாந்திர வகையான பாடல்களை உருவாக்கினார் என்றால் அவருக்கு அதில் விருப்பம் இருந்திருக்கிறது அல்லது அதுதான் அவருக்கு தெரிந்தது என்று அர்த்தமாகிறது. நெஞ்சத்தின் நிறைவை வாய் பேசும் என்று சொல்வார்கள்.

    ---பொது இடத்தில் காதலனும் காதலியும் கட்டிப்பிடித்து உடல் வருடி முத்தமிடுவதை கலாச்சாரமாக கொண்ட ஐரோப்பிய நாடுகளின் இசையில் கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான வரிகள் இருப்பதாய் படவில்லை ! --

    அதற்க்கென்றே அங்கு போர்ன் இண்டஸ்ட்ரி இருக்கிறது. அவ்வகையான ஓசைகளை பிரபலமான வானொலிகள் பொதுவாக தடை செய்துவிடும் என அறிந்திருக்கிறேன். இங்கோ சிறிய பேருந்துகளில் கூட பெண்கள் கூட்டத்தின் மத்தியில் நிலா காயும்.. பொன் மேனி உருகும்... கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா சேரும். எல்லா அசிங்கங்களும் வெடித்து ஒலிக்கும். கண்றாவியான இசை ரசனை. அதுவும் ஒரு இசை தானே என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள் அவரது ரசிகர்கள். எல்லாமே இசைதான்..அதற்காக நாம் வழக்கமாகச் செய்யும் "எல்லா சங்கதிகளையும்" இசையாக வடித்து பாடலாக்க முடியுமா? கழுதையையே கானம் பாட வைத்தவர் ஏன் அந்தப் புரட்சியை மட்டும் விட்டுவைத்தாரோ தெரியவில்லை.

    ---அந்த வகையில் வயதில் சிறியவரானாலும் ரஹ்மானின் கண்ணியம் மரியாதைக்குரியது !---

    ரஹ்மான் பற்றி பல விமர்சனங்கள் என்னிடம் இருந்தாலும் இது முற்றிலும் உண்மையான கருத்து. வழிமொழிகிறேன்.

    மீண்டும் வருக.

    ReplyDelete
  17. மிகவும் அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை போல் இருக்கிறது. எல்லாப் பாடல்களிலும் தேன் உண்ணும் வண்டு போல் மாந்தி மாந்தி எழுந்தேன். :)

    எனக்கும் எம் எஸ் வியின் பல பாடல்கள் பிடிக்கும். இங்கே அநேகமாக சிவாஜி சம்பந்தப்பட்டதுதான் வந்திருக்கிறது.

    விஸ்வநாதன் வேலை வேண்டும். அனுபவம் புதுமை, ஹேய் நாடோடி, உத்தமபுத்திரனில் “அன்பே என் அன்பே நீ வா” என்று டான்ஸோடு கைதட்டிஆடும் பாட்டு இதெல்லாம் பிடிக்கும்.

    இதெல்லாம் விஸ்வநாதன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ( ரொம்ப கவனித்து நோக்குதல் குறைவு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ) :)

    இன்னும் பல பாடல்கள் உண்டு. விஸ்வநாதன் பேரரசர், அடுத்து இளையராஜா, அடுத்து இளவரசர் போல் ரஹ்மான் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்படித்தான் என் கண்ணோட்டம். ஆனால் பேரரசராக இனி யாரும் ஆகமுடியாது என்பதும் உண்மை.நன்றி பகிர்வுக்கு :)

    ReplyDelete
  18. வாருங்கள் தேனம்மை லக்ஷ்மண்,

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி. உங்கள் தளத்திற்கு நான் அடிக்கடி வருவதுண்டு. நீங்கள் குறிப்பிடும் பாடல்கள் கேட்பதற்கு அலாதியானவை. இசையின்றி அமையுமோ உலகு?

    இந்தப் பதிவில் பெரும்பாலும் எம் எஸ் வி- சிவாஜி (70களில் வந்தவை) பாடல்களையே நான் சேகரித்துச் சொல்லியிருக்கிறேன். என் பழைய பதிவுகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் உண்டு. முடிந்தால் அவற்றையும் படியுங்கள்.

    ஒரு விதத்தில் எம் எஸ் வி ஒரு பேரரசர், இளையராஜா அவர் பெயரைப் போலவே இளைய அரசர், ரஹ்மான் இளவரசர் தான். நல்ல வர்ணிப்பு. ரசித்தேன்.

    பாராட்டுக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  19. தேனம்மை அவர்களின் கவனத்திற்கு ; நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'விஸ்வநாதன் வேலை வேண்டும்' மற்றும் 'அனுபவம் புதுமை' 'ஹேய் நாடோடி' மூன்று பாடல்களுமே விஸ்வநாதன் - ராம மூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்தவை......உத்தம புத்திரன் படத்திற்கு இசை ஜி.ராமனாதன். மற்றபடி விஸ்வநாதன் பேரரசர் , இளையராஜா சிற்றரசர் என்ற உங்கள் கணிப்பில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.

    ReplyDelete
  20. நண்பரே,

    அருமையான அலசல். எழுபதுகளில் இத்தனை நல்ல பாடல்கள் வந்தனவா என்று இருக்கிறது. நான் கூட இளையராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். உங்களின் பதிவு ஒரு விழிப்பை தருகிறது.

    ReplyDelete
  21. "குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும்" அப்பப்பா! கேட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன! வழக்கம் போல ஒரு பிரமாதமான பதிவு. எங்களை வேறு ஒரு உலகத்துக்கே கொண்டு சென்று விட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  22. வாருங்கள் ஜானகி ராம்,

    கருத்துக்கு நன்றி. எழுபதுகளில் இளையராஜா வந்தது அதன் இறுதியில்தான். 76ஆம் ஆண்டில்தான் அன்னக்கிளி பறந்தது. அதன்பின் பத்ரகாளி கேட்டேளா இங்கே என்று உக்கிரமாக ஆடினாள்.பதினாறு வயதினிலே படமே இளையராஜாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்தது. உங்களைப் போல பலர் இளையராஜாவைத் தாண்டி வேறு இசை அமைப்பாளர்களின் பாடல்களை அதிகம் கேட்பதில்லை என்பது ஒரு வேடிக்கையான வேதனை. என் பதிவு ஒரு புதிய விழிப்பைத் தருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு ஒரு அதிகமான நன்றி. கொஞ்சம் உங்கள் வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். பல இசையோவியங்களை உங்கள் கண் காணட்டும்.

    ReplyDelete
  23. வாருங்கள் expatguru,

    உங்களின் பாராட்டுக்கு நன்றி. உங்கள் மனதில் குயிலாக நானிருந்தென்ன பாடல் மீண்டும் துளிர்ப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    ----எங்களை வேறு ஒரு உலகத்துக்கே கொண்டு சென்று விட்டீர்கள்.----

    It's the singer not the song என்று ஒரு ஆங்கிலப் பாடல் உண்டு. அருமையானது. ஆனால் எனக்கோ it's the song not the singer என்பதில்தான் உடன்பாடு உண்டு. இசை என்பதே இன்னொரு உலகம்தானே. அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதன் ஆனந்தம் புரியும்.

    ReplyDelete
  24. காரிகன்

    தேனம்மை அவர்கள் இளையராஜாவை சிற்றரசர் என்றோ இளைய அரசர் என்றோ எதையும் குறிப்பிடவில்லை . நீங்களாக இட்டுக் கட்டாதீர்கள் . இசை ராஜ்யங்கள் பலரால் எழுப்பப்பட்டது . இளையராஜாவிற்கும் தனி ராஜ்ஜியம் உண்டு . அதில் தனித் தன்மையும் உண்டு . சாம் அவர்கள் இளையராஜாவின் வக்கிர இசைப் பக்கத்தினை மட்டுமே பார்க்கிறார். அழகான பக்கங்களை அழகாக மறைக்கிறார் . வக்கிர வார்த்தைகள் கொண்ட பாடல்கள் இசையமைப்பு எம்.எஸ்.வி மற்றும் ரகுமானுக்கும் உண்டு . அதை உங்களின் பதிவுகளுக்கான பின்னூட்டங்களில் நான் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன் . நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியதைப் போலவே நானும் பல பாடல்களைச் சொல்ல முடியும் . வெளி நாட்டுக்காரன் இசையில் அசிங்கம் இல்லை என்று சொல்லாதீர்கள் . நிறைய இருக்கிறது . குறிப்பிட்டுச் சொல்ல அவசியமில்லை . பலர் இதை படிக்கின்றார்கள் . இளையராஜா எவ்வளவோ அற்புதமான பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார் . அவரைப் போய் ஏதோ porn industry க்கு வாசித்தவரைப் போல சித்தரிக்க முயற்சிக்கிறீர்களே ஞாயமா!?

    ReplyDelete
  25. சால்ஸ் ,

    எதற்கு வீண் விவாதம்? உங்கள் தளத்தில் மூன்றாம் ராட்சஷனை வெளியிடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. புரிந்தால் சரி.

    ReplyDelete
  26. அருமையான எழுத்து.ஆனால் உண்மை தான் குறைகிறது.
    மெல்லிசையின் ஆத்மாவை  அறியாமல் இதைப்போன்ற புரையோடிய கருத்துக் குப்பைகளை தாராளமாக அள்ளிவீசுபவர்களின் பக்குவமில்லாத  அடுத்த வெற்றுக்கூச்சல் எம் எஸ் வியின் இன்னிசையின் இனிமை  அவருடைய அந்திம காலங்களில் சோடை போனது என்பது. ,,,,,,
    காரிகன் இதை நீங்களே உங்கள் கட்டுரை களில் ஒத்துக்கொண்ட விடைய
    ராஜாவை வசைபாடாமல் ஒரு கட்டுரை எழுதுங்க.ப்ளீஸ்.தாளம் போட அமுதவன்.எந்த பக்கத்தால் சிரிப்பதென்று தெரியவில்லை.

    ReplyDelete
  27. வாருங்கள் அனானி,

    என் பழைய கட்டுரைகளில் நான் சிறுவயதில் எம் எஸ் வியை விரும்பாததின் காரணத்தையே சொல்லியிருகிறேன். அது ஒரு முதிர்ச்சியற்ற இசை ரசனையின் இயல்பான தோற்றம். ஆனால் இன்று எனக்கு அப்படித் தோன்றவில்லை என்பதால் நான் 1978,79களில் அவரைப் பற்றி நினைத்தது உண்மையாகிவிடாது. . இருக்கட்டும். அப்படியே வைத்துக்கொண்டாலும் நான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட விடயம் என்று இதை மட்டும் எடுத்துக்கொண்டு வரும் நீங்கள் நான் இளையராஜாவைப் பற்றி கூறிய பல விமர்சனங்களை வசதியாக மறுப்பது ஏன்?

    ராஜாவை வசைபாடாமல் ஒரு பதிவு..என்ற உங்களின் ஆதங்கத்தை புரிந்துகொண்டேன். ஒருவேளை அடுத்த பதிவில் அது நிகழலாம்.

    ReplyDelete
  28. தங்களின் இந்த இடுகையை ரசித்து படித்தேன். இது ஒரு புதையல் போல அல்லவா இருகின்றது. அதனால் தான் இந்த பதிவை பற்றியும் கடைசி சில வரிகள் குறிப்பிட்ட "முத்து குளிக்க வாரீகளா" பாட்டை பற்றியும் என் இன்றைய பதிவான "முத்து குளிக்க வாரீகளா" என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். நேரம் இருந்தால் படித்து தங்கள் கருத்தை கூறவும். மீண்டும், நன்றி ஒரு அருமையான பதிவிற்கு.

    ReplyDelete
  29. வாருங்கள் விசு,

    வருகைக்கு நன்றி. இந்த முத்துக்குளிக்க வாரீகளா பாடல் உங்களை ஒரு பதிவை எழுதத் தூண்டியது ஒரு உவகையான செய்தி. உங்கள் தளத்தில் அதற்கு பதில் எழுதியுள்ளேன். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  30. ஹப்பா எவ்வளவு ஒரு சிறப்பான பதிவு! இலங்கை வானொலிதான் நினைவுக்கு வருகின்றது! 70 களில் நிறைய தினமும் அதைக் கேட்டு கேட்டு, அலுப்பே தட்டாது! வித விதமான நிகழ்ச்சிகள்! வழங்குவதில் அவர்களைப் போல் இப்போது எஃப்ம் என்ற பெயரில் வந்தாலும், அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது!

    ஏஎம் ராஜா ஜிக்கி, தட்சிணாமூர்த்தி, வி குமார், போன்றவர்களின் இசையும் எத்தனை அருமை.....எம் எஸ் வி ஆஹா தான்....அருமையான பதிவு..

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  31. வாருங்கள் துளசிதரன்,

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. 70,80 களின் பாடல்கள் எல்லாமே இலங்கை வானொலியின்றி இத்தனை ஆழமாக நம்மைத் தொட்டிருக்குமா என்பது சந்தேகமே. நீங்கள் சொல்வது உண்மைதான். சிலோன் வானொலிக்கு இணையாக வேறு எந்த வானொலியையும் நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

    இணையத்தில் இளையராஜாவின் பாடல்கள் பற்றியே அதிகம் எழுதப்படுகின்றன அவையே அதிகம் விவாதிக்கப்படுகின்றன என்று சில ராஜா ரசிகர்கள் எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை என்று உண்மை வேறு விதமாக வடிவம் பெறுகிறது. சில கோபுரங்கள் சரிகின்றன.

    ReplyDelete
  32. காரிகன்
    \\சில கோபுரங்கள் சரிகின்றன.\\

    'சில காகிதக் கோபுரங்கள் சரிகின்றன' என்பது சரியாக இருக்குமோ?

    ReplyDelete
  33. I REQUEST MR> KARREEGAN TO LISTEN TO THE MUSIC OF G>RAMANATHAN OF FIFTIES AND SIXTIES best wishes

    ReplyDelete
  34. வாருங்கள் Nat Chander,

    உங்களின் கூகிள் ப்ளஸ் பக்கம் சென்றேன். அங்கே நான் கண்ட அனைத்தும் அருமையான பாடல்கள்.

    நீங்கள் ஜி ராமநாதன் இசையை கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள். நன்றி. பழைய இசை சகாப்தங்களை நான் மறப்பவனில்லை. ஜி ராமானாதன், சுதர்சனம், கே வி மகாதேவன், எ எம் ராஜா போன்ற மிகப் பெரிய இசை ஆளுமைகளை ஓரங்கட்டும் முதிர்ச்சியற்ற ரசனை கொண்டவன் நான் கிடையாது. என் பழைய பதிவுகளில் அவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் அவர்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. கூடிய விரைவில் அது நடக்கும்.

    ReplyDelete
  35. mr.kareegan as observed by mr.amudhavan there are thousands of songs not at all relayed in any channel i am afraid that such beautiful songs by G.RAMANATHAN DAKSHINAMOORTHY LINGAPPA and many music directors of sixties era are not at all relayed in any channel for example one song by purushothaman THENDRALENI SOLVOY in old tamil film MANDHRAVATHI hesr and enjoy the silky tone of purushothaman my best wishes to you

    ReplyDelete
  36. Simply Superb. I really appreciate your hardwork and the way it is presented to us .Your music knowledge & isai tamil are wonderful. I grew up in 80s . But still prefer MSV as a nest ever musician. if some one wants to learn to play certain musical instrument he must listen to MSV's songs rather than Ilayaraja's. This is my personal experience . Thank You So much Mr. Kareegan
    Suthakar

    ReplyDelete
  37. Nat Chander,

    நீங்கள் சொல்வதில் எனக்கு முரண்பாடுகள் இல்லை. இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள பாடல்களில் ஒரு பத்து சதவிகிதமே தொலைக் காட்சிகளில் பார்வைக்கு வருகிறது. அவை பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி,ஜெமினி,போன்ற பெரிய நடிகர்கள் நடித்தவையே. எனக்கொரு காதலி இருக்கின்றாள் அல்லது என் மனது ஒன்று தான் பாடல்கள் டி வி யில் கடைசியாக எப்போது தோன்றின என்று எனக்கு சரியாக ஞாபகமில்லை. இதேதான் 50,60 களின் பாடல்களுக்கும் நடக்கிறது.

    ReplyDelete
  38. வாருங்கள் சுதாகர்,

    பாராட்டுக்கு நன்றி. நானும் உங்களைப் போல 70-80களில் பள்ளி கல்லூரியில் படித்து வளர்ந்தவன்தான்.இளையராஜாவின் மீது மற்ற எல்லோரையும் போல ஆரம்பத்தில் பிடிப்பு ஏற்பட்டு சில வருடங்கள் கழித்து அவர் இசையை விட்டு வெளியே வந்துவிட்டேன். அதன்பின் அவர் செய்ததாக இவர்கள் சொல்லும் புரட்சிகள் மீதெல்லாம் எனக்கு என்றைக்கும் ஈடுபாடே வரவில்லை-இன்றுவரை. (இது என் தனிப்பட்ட பார்வை.)

    எம் எஸ் வி ஒரு இசை ஊற்று. இளையராஜா வந்த பின்னும் அவர் இசையில் இனிமை தரம் குறைந்ததாக நான் எண்ணவில்லை. சில பாடல்கள் அப்போதைய என் போன்ற இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது உண்மைதான். ஆனால் இன்று கேட்கும் போது அவை எல்லாமே அபாரமாக ஒலிக்கின்றன. அமிர்தம் போல இனிக்கின்றன.

    ---- if some one wants to learn to play certain musical instrument he must listen to MSV's songs rather than Ilayaraja's. This is my personal experience .---

    And it's a well-known truth, too.

    நீங்கள் சொல்லும் இந்தக் கருத்தை நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லோரும் இணையத்தில் எழுதுவதில்லை என்பதால் சில புனைவுகள் பூதாகரமாக பூச்சாண்டி காட்டுகின்றன. இருந்துவிட்டுப் போகட்டும். சக்கரங்கள் சுழலாமலா போய்விடும்?

    ReplyDelete
  39. yes mr.kareegan msv music is special always. one of the reasons for his innovation in music is that msv was closely associated with musicgiants like ramanathan lingappa dakshinamoorthy ramamoorthy venkatraman adhinarayana rao and many other music directors.best wishes to you.

    ReplyDelete
  40. =========
    74இல் ஜெயலலிதாவின் 100வது படம் திருமாங்கல்யம் வெளிவந்தது. படம் ஓடியதா இல்லையா என்ற விபரம் தெரியவில்லை. பொன்னான மனம் எங்கு போகிறது சொல்லுங்கள் மேகங்களே என்றொரு நளினமான கீதம் இதிலுண்டு. ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு சரி. இதன் பின் தற்போதுதான் மீண்டும் இந்தப் பாடல் என் செவிகளில் விழுந்தது. இதே படத்தின் மற்றொரு நல்லிசை கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே என்ற பாடல். அருமையான ராக வார்ப்பு.
    ===========

    டியர் காரிகன் சார்
    ஒரு சிறய திருத்தம்
    'கேட்டதெல்லாம் நான் தருவேன் '
    இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'திக்கு தெரியாத காட்டில்'. முத்துராமன் ஜெயலலிதா நடித்து வெளி வந்த படம்

    ReplyDelete
  41. Mr. Nat Chander,

    உங்களின் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். எம் எஸ் வி நமது பாரம்பரியத்தை விட்டு விலகாத மேன்மையான இசை அனுபவத்தைக் கொடுத்தவர். அதற்குக் காரணம் மற்ற பெரிய இசை ஜாம்பவான்களோடு அவர் கொண்டிருந்த இசைத் தொடர்புகளே.

    ReplyDelete
  42. வாருங்கள் கணபதி கிருஷ்ணன்+,

    கேட்டதெல்லாம் நான் தருவேன் பாடல் இடம் பெற்றது திக்குத் தெரியாத காட்டில் படத்தில்தான். சமீபத்தில் இந்தப் படத்தை டி வி யில் காண நேர்ந்தது. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    இதேபோல நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரியுதடா என்று எல் ஆர் ஈஸ்வரி பாடும் பாடல் ஒன்று உள்ளது. அது என்ன திரைப்படம் என்று முடிந்தால் தெரியப்படுத்துங்கள். தேடிக்கொண்டே இருக்கிறேன்.

    ReplyDelete
  43. காரிகன்,

    உங்களுக்கு பதில் எழுத ரொம்பவும் தயங்கி தான் எழுதுகிறேன். உங்கள் பதிவு இப்படிதான் இருக்கும் என்று என்னால் உணர முடிந்ததால் எதற்கு நம் energy வேஸ்ட் செய்யவேண்டும், உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு செய்யலாம் என்று நினைத்தேன். இந்த பதிவு உண்மையில் எனக்கு பல பழைய பாடல்களை மீட்டு கொடுத்தது மட்டுமல்லாது, கேட்கும் போது இனிமையாகவும் உணர முடிந்தது என்னவோ உண்மை. நீங்கள் கூறிய இந்த பதிவில் சொன்ன படங்களில் பாதி நிச்சயம் தோல்வி படங்களாக தான் இருக்கும். இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யாமல் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே (அதுவும் மிகவும் ஹிட் ஆன பாடல்கள்) பதிவு செய்திருந்தீர்கள். இந்த பாடல்கள் கேட்கும் போது எனக்கு பழைய ஹிந்தி பாடல்களின் இசை ஒலிப்பது போன்று தான் இருக்கிறது. அதை போன்று காட்சியமைப்பும். மெட்டு அப்டியே ஹிந்தி பாடல்களின் சாயல் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. இதனை தாங்கள் தங்கள் பதிவில் எங்கும் சொல்லவில்லை. பழைய ஹிந்தி பாடல்கள் இன்னும் youtubil இருக்கிறது, அந்த கால படங்களின் பாடல்களை நீங்களாக கேட்டால் அது ஏதோ தமிழ் படத்தின் எழுபதுகளின் பாடலின் வடிவில் இருக்கும். எழுபது வரை இருந்த ஒரு இசையமைப்பு எழுபதுக்கு மேல் ஹிந்தி பாடல்களின் சாயல் இருக்கும். இதனை நீங்கள் ஒத்துகொள்வீர்கள் என்பதை நான் நினைத்தால் அது முட்டாள்த்தனம் என்பதை நான் அறிவேன். எழுபதுக்கு மேல் தமிழ் சினிமாவின் இசையில் ஒரு வறட்சி இருந்தது என்பது உண்மை. படங்களும் ஒரே template தான் இருந்தது. நடிகர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ஜெய்கணேஷ், சிவகுமார் போன்ற இரண்டாம் நிலை நடிகர்களின் ஆட்சி அந்த காலங்களில் இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றோர் அப்போது வயதான நடிகர்களாக உலா வந்தனர். அவர்களின் படங்களின் பாடல்கள் மிகவும் ஹிட் ஆகின. அந்த படங்களின் பாடல்களும் கிட்ட தட்ட ஹிந்தி படங்களின் சாயல் இருந்ததை தங்கள் குறிப்பிட்ட பாடல்களை கேட்ட பிறகு உணர்ந்தேன். ஐன்பது, அறுபதுகளில் இருந்த எம்.எஸ்.வி. அய்யாவின் பாடல்களில் இருந்த ஒரு இசை, பின் காலத்தில் இல்லை என்பது தங்கள் மறுக்க மாட்டீர்கள். அதன் திசை மாறி ஹிந்தி சாயல்க்கு போய்விட்டது என்பது மறுப்பதற்கில்லை. என்றுமே இசைஞானியின் ரசிகர்கள் யாரும் அவர் காலகட்டதிருக்குமுன் இருந்த இசையமைப்பாளரை எந்த விதமான கடுன்சொற்க்களை சொன்னதில்லை. நாங்கள் அவர்களின் பாடல்களையும் கேட்டுதான் வளர்கிறோம். ஆனால் ராஜா சார் உண்டாக்கிய ஒரு தமிழ் இசை பாதையை இன்றைய இசையமைப்பாளர்கள் (யுவனை சேர்த்துதான்) எந்தளவுக்கு கொண்டு செல்கின்றனர் என்பதால் நாங்கள் குறை கூறுகிறோம். நல்ல இசை யார் கொடுத்தாலும் அதனை விரும்புகிறோம். பாவம் அவர்கள் ஒரு பாடலை மட்டும் தான் கொடுக்க முடிகிறது.

    ReplyDelete
  44. mr.kumars contention that all songs after seventies would resemble hindi song is absolutely not correct. of course onemr.veda had the fascination to put hindi films tunes which were excellent also particularly in modern theatre films.
    ofcourse i do agree with mr.kumar that viswanathans musuic before seventies were far better than after seventies. the reason is obvious viswanathan ramamoorthy remained together till 1965.

    ReplyDelete
  45. வாருங்கள் குமார்,

    எதற்காக இங்கே வருவதற்கு தயங்கவேண்டும்? தாரளமாக உங்கள் எதிர் கருத்தை பதிவு செய்யலாம்.

    -----இந்த பதிவு உண்மையில் எனக்கு பல பழைய பாடல்களை மீட்டு கொடுத்தது மட்டுமல்லாது, கேட்கும் போது இனிமையாகவும் உணர முடிந்தது என்னவோ உண்மை. நீங்கள் கூறிய இந்த பதிவில் சொன்ன படங்களில் பாதி நிச்சயம் தோல்வி படங்களாக தான் இருக்கும். இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யாமல் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே (அதுவும் மிகவும் ஹிட் ஆன பாடல்கள்) பதிவு செய்திருந்தீர்கள். இந்த பாடல்கள் கேட்கும் போது எனக்கு பழைய ஹிந்தி பாடல்களின் இசை ஒலிப்பது போன்று தான் இருக்கிறது.------

    தோல்விப் படம் வெற்றிப் படம் என்பதெல்லாம் இசைக்கு ஒத்துவராது. எனவே உங்களின் அர்த்தமற்ற கருத்துக்கு வேறு என்ன பதில் கூற முடியும் என்று தெரியவில்லை. இரண்டாவது ஒரு படம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதை ஒரு அடையாளமாகத் தான் பார்க்கவேண்டுமே தவிர ஒரு படத்தில் ஒரே ஒரு பாட்டு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மற்றவை இல்லை என்பது அடுத்த அபத்தம். சட்டென நினைவுக்கு வரும் பாடல்களையும் அதிகம் கேட்கப்படாத ஆனால் ரசிப்பிற்குரிய பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்வது என் வழக்கம். எல்லா பாடல்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்த படங்களை மட்டும் பற்றிப் பேச நிர்ப்பந்தித்தால் இளையராஜா பாடு பாவம். 1000 படங்களில் ஒரு நூறுதான் தேறும்.

    மூன்றாவது எழுபதுகளில் தமிழிசையில் ஹிந்திச் சாயல் அடித்தது என்று. இது ஒரு மூளைச் சலவை செய்யப்பட்ட கருத்து என்பதைத் தவிர இதில் தீவிரமாக விவாதிக்கவேண்டிய அளவுக்கு சரக்கு இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆகையால் உங்களின் கருத்தைப் படித்ததும் எனக்கு மூச்சு முட்டியது. அடடா! 70களில் தமிழிசையில் nativity எனப்படும் மண் மனம் இல்லாமல் ஒரே ஹிந்தி வாடை அல்லவா அடித்தது? நல்ல கண்டுபிடிப்பு! இது எனக்கு மட்டுமல்ல 70-76 வரை தமிழ்ப் பாடல்களைக் கேட்ட வேறு யாருக்குமே தோன்றவில்லையே என்ற பரிதாப உணர்ச்சியும் ஏற்பட்டது.

    அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு கீதமன்றோ, நினைவாலே சிலை செய்து, வணக்கம் பலமுறை சொன்னேன், ஆகாயத்தில் தொட்டில் கட்டி, இல்லம் சங்கீதம், போன்ற பாடல்களில் ஹிந்திச் சாயல் இருப்பதாக நீங்கள் நினைப்பது வடிகட்டிய ......(கோடிட்ட இடத்தை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.)

    நீங்கள் இளையராஜா இல்லாத இசையை ஓரங்கட்ட செய்யும் மலினமான பலனளிக்காத முயற்சியாகவே உங்களின் கூற்றைப் பார்க்கிறேன். இளையராஜாவும் கூட துவக்கத்தில் எம் எஸ் வி, வி குமார் பாணியில்தான் பாடல்கள் அமைத்தார். இன்றைக்கு அவைதான் கிளாசிக் என்ற தகுதிக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.

    ஒரு வாதத்திற்கு இந்த ஹிந்தி சாயல் என்ற சங்கதியை ஏற்றுக்கொண்டால் இளையராஜாவின் இடையிசை பற்றிய உங்களின் எண்ணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கும். ஏனென்றால் அவரது இடையிசை முழுதும் ஐரோப்பிய செவ்வியல் இசையின் நகல்தான். நீங்கள் பாக், விவால்டி, மொசார்ட், பெய்ட்டோவன் போன்ற மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டீர்களேயானால் இளையராஜா தன் பாணியை எங்கிருந்து கண்டெடுத்தார் என்ற உண்மையை ஒருவித அதிர்ச்சியுடன் உணர்ந்துகொள்வீர்கள். ஆனால் நீங்கள் அது போன்ற அதீத அதிர்சிகளுக்கு தயாரில்லை என்று தோன்றுகிறது. எனவே உங்களுக்குத் தெரிந்த குளத்திலேயே மீன் பிடித்துக்கொள்ளுங்கள்.

    அது என்ன இளையராஜாவுக்கு முன் இருந்தவர்கள் என்ற ஒரு மேலோட்டமான அலட்சியத்தை தெளிக்கும் வார்த்தை! தமிழிசையின் பரந்த வானத்தில் பல நட்சத்திரங்கள். அதில் இளையராஜாவும் ஒருவர். (உடனே மற்றவர்கள் நட்சத்திரங்கள். இவர் மட்டுமே முழு நிலா என்று அபத்தமாக சொல்லவேண்டாம்.) இன்றைக்கு இளையராஜாவின் பல பாடல்கள் கிளாசிக் என்ற முத்திரையை இழந்துகொண்டிருக்கின்றன. வெறும் டப்பாங்குத்து இசை என்றே அவை அறியப்படுகின்றன. வேண்டுமென்றால் ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வுக்கு அவை உணவளிக்கலாம்.

    ReplyDelete

  46. Mr. Nat Chander,

    விஸ்வநாதன்- ராமமூர்த்தி இரட்டையர்களின் இனிமை எம் எஸ் வி தனியாக இசை அமைத்தபோது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இதை யாரும் மறுத்ததாக எனக்கு நினைவில்லை. அது அப்படித்தான் இருக்க முடியும். ஏன் நான் கூட அதை சொல்லியிருக்கிறேன். இதில் வி எஸ் குமார் என்னத்தை புதிதாக சொல்ல இருக்கிறது? மேலும் அவர்கள் இருவர். பிரிந்தார்கள். இசை மாறியது என்று எடுத்துக்கொள்ளலாம்.சரி, இளையராஜாவின் இசையில் மட்டும் 76க்கும் 86க்கும் அதன் பின் 90க்கும் வித்தியாசமே இல்லையா? இளையராஜாவின் இசை படிப்படியாக மாறிக்கொண்டே வந்தது என்பதை ராஜா ரசிகர்கள் மறுப்பார்களா? இதை அடுத்த கட்ட வளர்ச்சி என்பார்கள்.இது என்ன வேடிக்கையான பேச்சு?

    ReplyDelete
  47. kareegan ji my earlierposting was not adequate hence the confusion and the misundrstanding.i wanted to clearly oppose mr.kumars contention that seventies songs resemble hindi songs. i had also failed to note your earlier observation that music of the m.ds undergo changes over a period of years. i conclude by congradulating you .for having brought outthe genius of msv in your style. best wishes

    ReplyDelete
  48. எம்எஸ்வி இசையில் இந்திப் பாடல்களின் சாயல் இருக்கிறது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்கிறோம் என்று வையுங்கள். "இளையராஜா புதிய பாணி என்று இசையமைத்த பல பாடல்கள் கன்னடப் பாடல்களின் சாயை கொண்டு இருக்கிறது" என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுவது வழக்கம்.
    ஒரு வேளை அவருடைய குரு ஜி.கே.வெங்கடேஷ் கன்னடப்படங்களுக்கே அதிகம் இசையமைத்ததால், அவரிடம் இளையராஜா நிறையப் படங்களுக்கு உதவியாளராய் இருந்ததால் அந்தப் பாடல்களின் சாயல் இவரிடம் இருக்கிறது என்பதும் உண்மை என்றே படுகிறது. இத்தனை நாட்களும் இந்த சிந்தனை வரவில்லை. இப்போது ஒரு அன்பர் சொன்னபிறகுதான் என்னுடைய நண்பரின் கூற்று ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  49. குமார் என்பவர் திறந்திருப்பது can of worms. அவர் மற்றவர்களை குற்றம் சொன்னது பூமராங் போல அவரிடமே வந்து சேர்கிறது. பரிதாபம். கொஞ்சம் விபரம் அறிந்து பேசவேண்டும் என்பதை அவர் இப்போது புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  50. திரு. அமுதவன் அவர்களுக்கு,

    எம்எஸ்வி இசையில் இந்திப் பாடல்களின் சாயல் இருக்கிறது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்கிறோம் என்று வையுங்கள். "இளையராஜா புதிய பாணி என்று இசையமைத்த பல பாடல்கள் கன்னடப் பாடல்களின் சாயை கொண்டு இருக்கிறது" என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுவது வழக்கம்.
    ஒரு வேளை அவருடைய குரு ஜி.கே.வெங்கடேஷ் கன்னடப்படங்களுக்கே அதிகம் இசையமைத்ததால், அவரிடம் இளையராஜா நிறையப் படங்களுக்கு உதவியாளராய் இருந்ததால் அந்தப் பாடல்களின் சாயல் இவரிடம் இருக்கிறது என்பதும் உண்மை என்றே படுகிறது. இத்தனை நாட்களும் இந்த சிந்தனை வரவில்லை. இப்போது ஒரு அன்பர் சொன்னபிறகுதான் என்னுடைய நண்பரின் கூற்று ஞாபகம் வருகிறது. //
    இருக்கலாம், நானும் ஒத்துகொள்கிறேன். ஆசிரியர் பாணியில் சில விஷயங்கள் அவர் செய்திருக்கலாம், அதற்காக அவர் ஐந்தாயிரம் பாடல்களும் அவர் பாணியைத்தான் அவர் காலங்களில் பின்பற்றினார் என்று சொல்ல முடியாது. உ.தா. அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் இடம் பெற்ற ''வா வா மைசூரு மல்லிகை'' பாடல் அவர் குரு நத்தார் அய்யா ஜி.கே.வி.யின் ஒரு கன்னட படத்தின் பிரதிபலிப்பு தான் (சரணத்தில் மெட்டு, ராகம் வேற). எம்.எஸ்.வி அய்யாவின் சாயல் இல்லாமல் ராஜா சார் இசையமைக்கவில்லை என்பதை அவரும் மறுக்க வில்லை, நாங்களும் மறுக்க வில்லை. நாங்கள் சொல்வது இளையராஜா அவர்கள் தமிழ் திரையிசைக்கு வரும்போது தமிழ் படத்து இசை, ஹிந்தி சாயலில் (மக்களும் மோகத்தில்) இருந்தது. அதை திசை திருப்பி தமிழன், தமிழ் இசையை மீண்டும் கேட்க வைத்தார்..அதில் பல புதுமைகளை வெஸ்டேர்ன் கிளாசிக் என பலவகையில் நம் இசையோடு சேர்த்து கேட்க வைத்தார். அப்படி பார்த்தல் ரகுமான் என்ன செய்தார் இசையில் புதுமை புகுத்தினர் என்று சொல்கிறார்கள். சவுண்ட் systemil தான் புதுமை புகுத்தினார். அதனால் அதற்க்கு முன் சவுண்ட் இல்லாமலா பாட்டை கேட்டேமோ? எம்.எஸ்.வி. அய்யா இசையில் எப்படி பின்காலத்தில் ஒரு மாற்றம் நேர்ந்தேதோ அது போல் இளையராஜா அவர்களின் இசையில் மாற்றம் நேர்ந்தது, அது சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. அவ்ளோதான். அதற்காக ரகுமான் வந்துதான் அதை மாற்றியது என்று சொன்னால்........ 1998வரை இளையராஜா அவர்களின் பாடலில் நெறய படங்கள் வந்தது. அன்று இசையமைத்த ரகுமான் பாடல் மாதிரியா இன்றைய அவர் பாடல் இருக்கிறது?

    ReplyDelete
  51. திரு. காரிகன் அவர்களுக்கு,

    அது என்ன இளையராஜாவுக்கு முன் இருந்தவர்கள் என்ற ஒரு மேலோட்டமான அலட்சியத்தை தெளிக்கும் வார்த்தை! // நான் மேலோட்டமான அலட்சியமாக கூறவில்லை. என் வார்த்தையை நீங்கள் படிக்கும் போது அந்த கண்ணோட்டத்தில் படித்ததால் அப்படி தோன்றியிருக்கும்.

    தோல்விப் படம் வெற்றிப் படம் என்பதெல்லாம் இசைக்கு ஒத்துவராது. எனவே உங்களின் அர்த்தமற்ற கருத்துக்கு வேறு என்ன பதில் கூற முடியும் என்று தெரியவில்லை. இரண்டாவது ஒரு படம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதை ஒரு அடையாளமாகத் தான் பார்க்கவேண்டுமே தவிர ஒரு படத்தில் ஒரே ஒரு பாட்டு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மற்றவை இல்லை என்பது அடுத்த அபத்தம். சட்டென நினைவுக்கு வரும் பாடல்களையும் அதிகம் கேட்கப்படாத ஆனால் ரசிப்பிற்குரிய பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்வது என் வழக்கம். எல்லா பாடல்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்த படங்களை மட்டும் பற்றிப் பேச நிர்ப்பந்தித்தால் இளையராஜா பாடு பாவம். 1000 படங்களில் ஒரு நூறுதான் தேறும். // உங்கள் வாதப்படி பார்த்தல் ஒரு வருடத்தில் எப்படியும் எழுபத்தைந்து படங்கள் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். அந்த கணக்குப்படி ஐந்து வருடத்திற்கு மூன்னுற்றி எழுபத்தைந்து படங்களோ, அதற்க்கு கீழோ இருக்கலாம். நீங்கள் எழுதிய பதிவுகளில் அந்தளவுக்கு பாடல்கள் பற்றி பதிவு இல்லை. நான் வெற்றி பெற்ற படங்களின் பாடல்கள், தோல்வி அடைந்த படத்தின் பாடல்கள் என்று பிரிக்க வில்லை. நீங்கள் எங்களுக்கு மீண்டும் கேட்க வாய்த்த பாடல்களின் படங்களின் நிலை பற்றி தான் கூறியுள்ளேன். அதில் நீங்கள் பதிவிட்ட பாடல்களின் மெட்டு ஹிந்தி சாயலாக இருக்கிறது என்று தான் கூறினேன். நீங்கள் பதிவிட்ட பாடல்கள் இப்படியென்றால் மீத பாடல்கள் எவ்வாறு என்பதை என்னோடைய கற்பனைக்கு தான் போக வேண்டியிருக்கும். நீங்கள் என் பதிவை படிக்கும் போதே குற்றம் சாட்டுபவன் போல் படித்தால் அப்படிதான் இருக்கும். உங்களே போன்றே இன்னும் சிலர் இருக்கின்றனர். ராஜா சார் இசையமைத்தெல்லாம் வெற்றி படத்தின் பாடல்கள் என்று எங்கேயும் நாங்கள் கூற மாட்டோம். அவர் பாடல்களின் இசையமைப்பை பற்றி தான் கூறுகிறோம்.
    நான் எந்த யாரையும் குற்றம் சொல்ல வில்லை. நீங்கள் எனக்கு எழுதிய பதிவுகளை படியுங்கள் குற்றம் யார் யாரை சொல்லியுள்ளோம் என்று தெரியும். நீங்கள் எழுதிய பதிவகளில் அந்த காலகட்டத்தில் இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றன என எடுத்து காண்பித்தால் போதும், தேவை இல்லாமல் எங்கிருந்தோ யாரோ ஒருவர் இப்படியெல்லாம் கூறுகின்றனர் என்று இளையராஜா அவர்களை தரம் தாழ்த்துவது போல் எழுதுவது. உங்கள் பதிவுக்கு நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு குறைய வேண்டாம். நாங்கள் உங்கள் பதிவின் முக்கிய அம்சத்திற்காக (தமிழ் திரை இசை) படிக்க வருகிறோம். பதிலுக்கு பதில் என்பதை எதிர் பார்க்கவில்லை. உங்களது அடுத்த பதிவில் வரும் காலகட்டத்தில் தான் நெறைய எங்களுக்கு வேலை இருக்கிறது என்று நான் நினேக்கிறேன். தனிமனித தாக்குதல் வேண்டாம்.


    ReplyDelete
    Replies
    1. குமார் சார்

      சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் . 70 க்குப் பிறகு வந்த எம்.எஸ்.வி , சங்கர் கணேஷ் , வி.குமார் , வெங்கடேஷ் பாடல்களில் ஹிந்தி வாடை அடித்ததை நானும் உணர்ந்திருக்கிறேன் . அதனால்தான் தமிழக மக்கள் அந்தப் பாட்டுக்களைக் கேட்பதற்குப் பதிலாக ஹிந்தி பாடல்களே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்திருப்பார்கள் . டீக் கடைகளில் , தியேட்டர்களில் , டெண்டு கொட்டகைகளில் ஹிந்தி பாட்டாக போட்டுக் கொண்டிருப்பார்கள்.

      அமுதவன் சார் சொன்னது பற்றி என் நண்பர் ஒருவர் வேறு விதமாகச் சொன்னார் . வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவின் மெட்டுக்களை கன்னடப் பாடல்களாகப் போட்டுக் கொண்டு காசு பார்த்தவர் வெங்கடேஷ் . இளையராஜா பிரிந்த பிறகு அவருடைய உண்மையான மெட்டுக்கள் தமிழ்ப் பாடல்களாக வந்ததை கன்னடர்கள் கேட்டுவிட்டு வெங்கடேஷின் பாடல்கள் போல இருந்ததாக அறியாமல் பேசினார்கள் என்று நண்பர் தெளிவாகச் சொன்னார். வெங்கடேஷிடம் அப்படிப்பட்ட திறமை இருந்திருந்தால்தான் இளையராஜாவைவிட பெரிய ஆளாக வந்திருக்கலாமே! ஏன் வரவில்லை? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் !

      Delete
    2. ரிம்போச்சே4 November 2014 at 17:10

      இன்றும் பெங்களூரு எப்.எம் வானொலிகளில் ஒரு நாளைக்கு எத்தனை முறை கீதா படத்தின் 'ஜொதெயலி' பாடல் ஒலிபரப்பாகிறது என்பதை அமுதவன் அவர்களின் கணிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

      Delete
    3. வாங்க ரிம்போச்சே ... என் பதிவிற்குள்ளும் வந்தீர்கள் என்றால் கொஞ்சம் எனக்கு பக்க பலமா இருக்கும் . கருத்து மோதல் வலுக்கிறது .

      Delete
    4. ரிம்போச்சே சார்

      jotheyali பாட்டை you tube இல் கேட்டேன் . அட நம்ம இளையராஜாவின் ' விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் ' என்ற பாட்டின் கன்னடப் பிரதி. அட்டகாசமான பாட்டாச்சே ! இதை வெங்கடேஷ் பாடல் என்று யாரும் சொல்கிறார்களா என்ன?

      Delete
  52. ஆமாம் சார்லஸ், ஜிகே வெங்கடேஷ் மட்டுமல்ல; மொத்த உலகமே இளையராஜாவின் மெட்டுக்களின் மீது சுழன்றுகொண்டிருக்கிறது என்பதுதானே உங்களைப் போன்ற ராஜா ரசிகர்களின் கூற்றாக இருந்துகொண்டிருக்கிறது.

    ராஜா ஒருவர்தான் இங்கே இசையமைப்பாளர், இசையின் படைப்பாளி என்பதுதானே உங்களின் முடிந்த முடிவு.

    இந்த மனப்போக்கிலேயேதான் திரு மதிமாறனும் ஒருமுறை ஜானகியைப் பற்றி எழுதியிருந்தார். அப்போதுகூட நான் அவருக்குப் பின்னூட்டம் இட்டிருந்தேன். 'நீங்கள் ஒரு தகவலைத் தவற விட்டிருக்கிறீர்கள் மதிமாறன், 'சிங்காரவேலனே தேவா பாடலைக்கூட ஒரு முறை தேனிப்பக்கம் காரில் போய்க்கொண்டிருந்தபோது எஸ்எம்சுப்பையா நாயுடு கேட்க நேர்ந்தது. ஒரு குன்றின் மீது சிறுவன் ஒருவன் உட்கார்ந்து அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான்(அந்தச் சிறுவன்தான் இளையராஜா என்பது உங்களின் டுபாக்குர் கற்பனையாக இருக்கட்டும்) அந்தப் பாடலைக் கேட்ட எஸ்எம்எஸ் அதை அப்படியே காப்பியடித்துக்கொண்டுபோய் மெட்டாகப் போட்டுவிட்டார் என்றுகூட எழுதுவீர்கள் போலிருக்கிறதே' என்று எழுதியிருந்தேன். ( தன்னுடைய பதிவு முகப்பில் இளையராஜா படத்தை வைத்துக்கொண்டிருந்த மதிமாறன் பிற்பாடு அதனை நீக்கிவிட்டார் என்பது வேறுவிஷயம்.)

    இம்மாதிரி சந்துகிடைத்தால் உடனே முன்னோர்களைக் கேவலமாகப்பேசி அந்த இடத்தில் இளையராஜாவை வைத்து அழகு பார்க்கும் அசிங்கம் பிடித்த வேலையை இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள் என்பது தெரியவில்லை. ஜிகே வெங்கடேஷ் கன்னடத்தில் நிலைபெற்றுவிட்டபிறகு இளையராஜா அங்கே போய்ச் சேர்ந்தாரா அல்லது இளையராஜா சேர்ந்தபிறகுதான் இளையராஜாவின் மெட்டுக்களை வைத்துக்கொண்டு ஜிகேவெங்கடேஷ் கன்னடத்தில் வாய்ப்பு பெற்றுக்கொண்டிருந்தாரா என்பதையும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  53. ---நாங்கள் சொல்வது இளையராஜா அவர்கள் தமிழ் திரையிசைக்கு வரும்போது தமிழ் படத்து இசை, ஹிந்தி சாயலில் (மக்களும் மோகத்தில்) இருந்தது. அதை திசை திருப்பி தமிழன், தமிழ் இசையை மீண்டும் கேட்க வைத்தார்..----

    குமார்,

    இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து. பொதுவாக ராஜா ரசிகர்கள் மட்டுமே இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இளையராஜா வந்த பிறகு கூட தமிழ்நாட்டில் ஹம் கிசிசே ஹம் நஹி (77) பாடல்கள் வெளுத்து வாங்கியது உங்களுக்கு தெரியாது போலும். 80களில் கியாமத் சே கியாமத் தக் படப் பாடல்கள் அதிரடி வெற்றி பெறவில்லையா? ரஹ்மான் வந்து என்னத்தை மாற்றினார் என்பதெல்லாம் நமது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் உங்கள் கற்பனைகளை வைத்து புது கதைகள் கட்ட வேண்டாம்.

    ஒரு வருடத்தில் வந்த படங்கள் அவைகளின் அனைத்துப் பாடல்கள் என்று எல்லாவற்றையும் நான் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சற்று அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு. நானென்ன சினிமா வரலாறா எழுதுகிறேன்? பதிவுகளில் என்னென்ன பாடல்கள் இருக்கின்றனவோ அவைகளை விவாதிப்பது நியாயமானது. எதையாவது குற்றம் சொல்லியே ஆகவேண்டும் என்ற நோக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது.அது உங்களுக்கு சரி என்றால் சரி...

    ----நான் எந்த யாரையும் குற்றம் சொல்ல வில்லை. நீங்கள் எனக்கு எழுதிய பதிவுகளை படியுங்கள் குற்றம் யார் யாரை சொல்லியுள்ளோம் என்று தெரியும். நீங்கள் எழுதிய பதிவகளில் அந்த காலகட்டத்தில் இப்படியெல்லாம் பாடல்கள் இருக்கின்றன என எடுத்து காண்பித்தால் போதும், தேவை இல்லாமல் எங்கிருந்தோ யாரோ ஒருவர் இப்படியெல்லாம் கூறுகின்றனர் என்று இளையராஜா அவர்களை தரம் தாழ்த்துவது போல் எழுதுவது. உங்கள் பதிவுக்கு நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு குறைய வேண்டாம். நாங்கள் உங்கள் பதிவின் முக்கிய அம்சத்திற்காக (தமிழ் திரை இசை) படிக்க வருகிறோம். பதிலுக்கு பதில் என்பதை எதிர் பார்க்கவில்லை. தனிமனித தாக்குதல் வேண்டாம். -----

    கண்டிப்பாக எனக்கு இது முழுமையாகப் புரிந்தபாடில்லை. அது என்ன நாங்கள்? தனி மனித தாக்குதல் நான் செய்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து இனி அது நிகழாது என்று உறுதி கூறத் தயார். ஆனால் இளையராஜாவை விமர்சித்தால் அங்கே எங்கே தனி மனித தாக்குதல் வருகிறது? நான் இப்படித்தான் எழுதவேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யலாமா? நீங்கள் என் தளம் வருவது எனக்கு மகிழ்ச்சியே. என் மதிப்பு குறைவது கூடுவது பற்றி எனக்கு யோசனைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் இல்லை.

    ----உங்களது அடுத்த பதிவில் வரும் காலகட்டத்தில் தான் நெறைய எங்களுக்கு வேலை இருக்கிறது என்று நான் நினேக்கிறேன்.---

    நீங்கள் என் தளத்திற்குப் புதியவர் என்று தோன்றுகிறது. ஏற்கனவே நான் இளையராஜாவைத் துவைத்துப் பிழிந்து காயப் போட்டாயிற்று. (வீழ்ந்த இசை பதிவை ஒரு முறை படிக்கவும்.) போதவில்லை என்று நீங்கள் எண்ணினால் என்னக்கென்ன தாராளமாக மறுபடியும் அதைச் செய்ய நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். உங்களுக்கும் நெறைய வேலை வேண்டுமல்லவா?

    ReplyDelete
  54. வாங்க அமுதவன்,

    சார்லஸுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் சூடு கொதிக்கிறது. அவருடைய பதிலைப் படித்ததும் எனக்கு வந்த எரிச்சலில் அப்போதே எதையாவது காரமாக சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் உங்கள் பதில் சரியான நேரத்தில் சரியான வடிவத்தில் சரியான கருத்துடன் வந்துவிட்டது. நன்றி.

    ஜி கே வெங்கடேஷ் ஐம்பதுகளிலிருந்து இசை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இவரிடம் திருடினாராம். இன்னும் என்னென்ன புனை கதைகளை வீட்டில் கம்யூட்டர் முன்னாள் உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறாரோ திருவாளர் சார்லஸ்? ரஹ்மான் கூட இளையராஜா மெட்டுக்களைத் தான் போட்டார் என்று சொல்வாரோ?

    ----இம்மாதிரி சந்துகிடைத்தால் உடனே முன்னோர்களைக் கேவலமாகப்பேசி அந்த இடத்தில் இளையராஜாவை வைத்து அழகு பார்க்கும் அசிங்கம் பிடித்த வேலையை இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் செய்துகொண்டிருக்கப்போகிறீர்கள்-----

    நல்ல நறுக். காரம் அதிகமாகத் தெரிகிறது. அது அவசியம்தான். இல்லாவிட்டால் இந்தக் கும்பல் போடும் பயித்தியக் கூச்சல் இன்னும் விகாரமாகிவிடும். ஆயிரம் பேர் ஆயிரம் பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். இதில் ஒரு ஆளை வைத்துக்கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த வெங்காயங்கள்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      உங்க இரண்டு பேரைத் தவிர வெங்கடேஷை யாருக்கும் தெரிந்த மாதிரியே தெரியவில்லை . தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும் ? இணைய வசதி வந்த பிறகு கொஞ்சம் தெரிந்திருக்கலாம் . அதற்க்கு முன்னாள் யாரும் பேசி நான் கேட்டதே கிடையாது . இளையராஜாவிற்கு முன்னாள் இசை அமைத்தார் . அவ்வளவுதான் . இளையராஜா அடைந்த உச்சியை அடைந்தாரா? பிரபலம் ஆனாரா? பிரபலம் ஆன அவருடைய பத்து பாட்டுக்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.
      அதற்கெல்லாம் உங்களிடமிருந்து பதிலே வராது.

      இளையராஜா ரசிகர்களை வெங்காயங்கள் என்று அவதூறாக பேசிவிட்டீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களை பேச மாட்டார்கள். இளையராஜா இசை ரசிப்பவர்கள் எல்லோரும் நல்ல நாகரீகம் தெரிந்தவர்கள் . வெங்காயம் போல நீங்கள் அவர்களை உரித்தாலும் இளையராஜாதான் தெரிவார் . அவருடைய இசைதான் வெளிப்படும் . உரித்தால் ஒன்றுமில்லாத வெங்காயம் அல்ல அவர்கள் ! உருக்கினாலும் புதிதாய் உருவாகும் தங்கங்கள். எல்லோரும் இசைஞானியின் இசையால் தங்களை புடமிட்டுக் கொண்டவர்கள். ஒரு உண்மையைச் சொல்லும்போது இவ்வளவு கோபமான வார்த்தைகளா ?

      Delete
  55. iwonder whether anirudhs fans or any mds of the present generation could boast of their favourite mds?the music of anirood.
    is noisy you get an immediate headache.satya and gibran looks o.k.
    i do expect mr.kareegan to write about the present mds of tamil film music.

    ReplyDelete
    Replies
    1. Mr. Nat Chander,
      I don't listen to modern Tamil songs that much. If anything hits me softly then I take a listen. I hardly think that I can write about the modern trend.

      Delete
  56. ரிம்போச்சே4 November 2014 at 17:17

    //ஒரு முறை முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா என்ற தூத்துக்குடி வட்டார தொனியை வைத்து எம் எஸ் வி அட்டகாசம் செய்த அனுபவி ராஜா அனுபவி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு பெங்காலி நண்பன் "இது ஹிந்திப் பாடலின் நகல்." என்றான் என்னிடம். நான் "இல்லை. இது முதலில் தமிழில் வந்த பாடல்." என்றேன். எதிர்பார்த்தைபோலவே அவன் அதை நம்பவில்லை. ஒருவேளை ஒரு தமிழ்ப் பாடல் ஹிந்தியில் நகல் செய்யப்படுவதை அவன் தங்கள் ஆளுமை கசங்கும் நிகழ்வாகப் பார்த்திருக்கலாம்.//

    ஒன்னு சொல்லணும்து தோனுது.
    சரி விடுங்க. அந்த பெங்காலி நண்பருக்கு இந்தியும் தெரியாது, தமிழும் தெரியாதுன்னு வெச்சிக்குவோம்.

    ReplyDelete
  57. வாங்க ரிம்போச்சே,

    நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. சொல்ல வந்ததை வாய்க்குளேயே முழுங்கிக் கொண்டால் எப்படி?

    நான் வட மாநிலம் ஒன்றில் இருந்தபோது எனக்கு வாய்த்த ஏழு பெங்காலி நண்பர்களில் ஒருவன் சொன்னதையே நான் குறிப்பிட்டிருந்தேன். பெங்காலிகள் ஹிந்தி பேசுவார்கள் என்பது பெரிய புதிரான விஷயமே இல்லை என்றிருக்கையில் அவருக்கு ஹிந்தியும் தெரியாது தமிழும் தெரியாது என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்வது வேடிக்கைதான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு தமிழ் கூட கொஞ்சம் தெரியும். அவன் தங்கை இங்கே மெட்ராஸில் பத்மா சுப்ரமணியத்திடம் பரதம் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் மூலம் அவன் கற்றுக்கொண்ட சிற்சில தமிழ் வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் என்னுடன் உடைந்த தமிழில் பேசுவான். இந்த நிகழ்ச்சி புனைவாக இருக்கும் பட்சத்தில் நான் எதற்காக பெங்காலி நண்பன் என்று சொல்லவேண்டும்? ஒரு டெல்லிவாசி என்று சொல்லியிருக்கலாமே? உங்களுக்கு எம் எஸ் வி பாடல் மீது சந்தேகமா அல்லது என் மீதா என்று குழப்பமாக இருக்கிறது.

    ReplyDelete
  58. ரிம்போச்சே5 November 2014 at 05:46

    உங்க பெங்காலி நண்பர் குறிப்பிட்டது 'தோ பூல்' படத்தில் நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் பாடிய 'முத்துக் குளிக்க வாரிகளா' பாடல் என்று நினைக்கிறேன். அனுபவி ராஜா அனுபவி படத்தில் வந்த பாடலைக் கேட்ட மெஹ்மூத் அதை அப்படியே இந்தியிலும் பாடினார். இதை உங்க நண்பர் ஒரிஜினல் இந்தி என்றதுதான்.....

    ReplyDelete
  59. ரிம்போச்சே,

    விசு என்னும் நண்பர் எப்படி முத்துக்குளிக்க வாரீகளா பாடல் ஹிந்திக்குச் சென்றது என்று தெளிவாக எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள்.

    http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_98.html

    ReplyDelete
  60. Karigan, I would like to talk to you one of these days. Please forward me your number at visuawesome@hotmail.com

    ReplyDelete
  61. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  62. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete