திடுமென வானத்தை உடைத்துக்கொண்டு கொட்டும் கோடை மழை, முதன் முறையாக வானத்தில் கண்ட பனிபடர்ந்த அந்த வானவில், பேருந்தில் பயணம் செல்கையில் பாதையோரத்தில் சட்டென தோன்றும் வசீகரமான ஒரு பெண்ணின் முகம், அடர்ந்த நிசப்தமான ஒரு இரவில் திடீரென ஒலிக்கும் டெலிபோன் மணி, மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்கும் ஒரு எதிர்பாராத தருணத்தில் விரலைத் தீண்டும் நெருப்பு. இதைப் போன்றே மின்சாரத்தை விழுங்கிய அனுபவத்தை கொடுத்த அந்த அதிர்ந்த இசை....
சுவர்களைத் தாண்டி ....
(இந்தப் பதிவு தமிழ்த் திரையிசையைப் பற்றியதல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது முழுதும் ஆங்கில இசையைப் பற்றிய என் பதிவு. இது நான் பல வருடங்களுக்கு முன் Retro Ride என்ற தலைப்பில் எதோ ஒரு நோட்டுப் புத்தகத்தில் என் சொந்த வாசிப்புக்காக எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பதிப்பு. இதில் பல மாற்றங்கள் செய்தே இப்போது வெளியிடுகிறேன். தமிழ்த் திரையிசை என்னும்போது அதற்கு ஒரு துவக்கம் இருப்பதால் நம்மால் ஒரு கோட்டிலிருந்து ஆரம்பித்து எழுதக்கூடிய வசதி உண்டு. ஆனால் ஆங்கில இசையைப் பொறுத்தவரை அப்படியான ஒரு துவக்கப் புள்ளியை கண்டுகொள்வது சாத்தியமில்லை. அது ஒரு மகா கடலைப் போன்றது. இதில் ஏகப்பட்ட இசைக் குழுக்கள் அலைகள் போல வந்தவண்ணமிருக்கின்றன. இதனால் இதை எங்கே தொடங்குவது என்ற குழப்பத்தைத் தவிர்க்க ஆங்கில இசை எனக்கு அறிமுகமானதிலிருந்தும் அது எனக்குக் கொடுத்த அனுபவங்களிலிருந்தும் ஆரம்பிக்கின்றேன். இது முற்றிலும் என் அனுபவங்களைச் சார்ந்தேயிருப்பதால் சற்று பொறுமையுடன் இதைப் படிக்க வேண்டுகிறேன்.)
சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் திடுமென வானில் வினோத ஒலியுடன் குறுக்கே பறந்துசெல்லும் ஒரு ஹெலிகாப்டர் அதை முதல் முறையாகப் பார்க்கும் ஒரு சிறுவனிடத்தில் ஏற்படுத்தும் திகைப்பு வார்த்தைகளற்றது. 80 களின் துவக்கத்தில் ஒரு கோடை நாளின் மாலை நேரத்தில் எனக்கு இந்த ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த "ஹெலிகாப்டரோ" என் மனதுக்குள் பறந்தது. அது நான் முதன் முதலாகக் கேட்ட மேற்கத்திய இசை. இப்போது நான் முதலில் கேட்ட அந்த இசையை விட்டு வேறு வேறு இசைவெளிகளை அடைந்துவிட்டாலும், பல்வேறு மகத்தான கானங்களை கேட்டு அனுபவித்த ஆனந்தம் மனதுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் அந்த முதல் பாடலைக் கேட்கும் சந்தர்பங்களிலெல்லாம் அந்தச் சிலிர்ப்பு மீண்டும் மீண்டும் என்னைத் தீண்டுவதை உணர்கிறேன். ஆனால் நியாயமாக சொல்வதானால் நான் கேட்ட முதல் மேற்கத்திய இசை சிறிய துணுக்குகளே. இதை இப்படிக் கூறுவதன் காரணம் அந்த ignorable இசையைக் கூட நான் ஒரு முழுப் பாடல் என்ற உணர்விலேயே ரசித்துக் கேட்டதினால்தான். கசெட்டின் இறுதியில் filler எனப்படும் நிரப்பும் இசையாக நான் சில ஆங்கில இசையை பகுதி பகுதியாகக் கேட்டிருக்கிறேன். அது பெரும்பாலும் Kraftwerk என்ற சிந்தசைசர் இசைக்குழுவினரின் டிஜிடல் இசையாக இருக்கும். சில சமயங்களில் இந்த filler இசையை கேட்பதற்காகவே முழு கசெட்டையும் ஓட விடுவதுண்டு. (Rewind, Fast Forward போன்ற தொழிநுட்ப அனுகூலங்கள் எங்கள் வீட்டில் தடை செய்யப்பட்டிருந்தன.) எதோ ஒரு விதத்தில் மேற்கத்திய இசையை நோக்கி நான் நகர்ந்துகொண்டிருந்தேன் என்று பிறகுதான் உணர்ந்தேன்.
காமிக்ஸ் கதைகள் என்னை கதை எழுதத் தூண்டிய தினங்களில் படக்கதை எழுதி, பின்னர் துப்பறியும் மர்மக் கதைகளில் ஈடுபாடு வர, தொடர்ந்து மர்மக் கதைகள் எழுதிவந்தபோது, எதோ ஒரு அசந்தர்ப்பத்தில் ஒரு கதையில் கொலைகாரன் தன் காரை ரிவர்சில் எடுக்கும்போது அதில் ஒசிபிசா என்ற ஆங்கில குழுவினரின் பாடல் ஒன்று ஒலிப்பதாக எழுதியிருந்தேன். (அப்போதுதான் ஒசிபிஸா குழுவினர் மெட்ராஸ் வந்திருந்தார்கள். நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் அவர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன.) நான் கதை எழுதுவதை அறிந்திருந்த என் தந்தை படிப்பதற்கு பத்திரிக்கைகள் எதுவுமில்லாத ஒரு வறட்சியான பின்பொழுதில் நான் எழுதிய கதையை அசுவாரஸ்யமாக படிக்கத் துவங்கி பின் ஆச்சர்யத்துடன் , "அட! துப்பறியும் கதை எழுதுகிறாயாக்கும். நான் கூட எதோ அணில், முயல் கதைகள் எழுதுகிறாயோ என்று நினைத்தேன்." என்று பாராட்டினார். (மகனாயிற்றே, வேறு வழி!) தாசில்தாராக இருந்த அவர் அடுத்த முறை பணி நிமித்தம் திருச்சி சென்று திரும்பும்போது "இதோ உனக்கொரு பரிசு!" என்று ஒரு கசெட்டை என்னிடம் கொடுத்து, " ஒரு கடையில் இதைப் பார்த்ததும் எனக்கு உன் கதைதான் ஞாபகம் வந்தது." என்றார். அது ஒசிபிஸாவின் டி என் டி என்ற இசைத் தொகுப்பு. (இதில்தான் கிலேலே கிலேலே என்ற பாடல் இருக்கிறது. இதுதான் 13 வருடங்களுக்குப் பின் ரஹ்மானின் இசையில் ஜென்டில்மேன் படத்தில் பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத பாக்காதே என மாறியிருந்தது .) ஒசிபிஸாவின் பாடல்கள் ஒரு முழுமையான ஆங்கில இசை கிடையாது. அவர்கள் ஆப்ரிக்க இசைக் கூறுகளை ஆங்கிலத்தில் அமைப்பவர்கள். (ரகே வகையும் கிடையாது.) எனவே அந்த இசை என்னிடம் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் அந்த சிறிய வயதில் ஆப்ரிக்க இசை எனக்கு வித்தியாசமாக இருந்ததே ஒழிய விருப்பத்தை கொடுக்கவில்லை. மறைய வேண்டிய இந்த மயக்கம் எவ்வாறு ஒரு மாபெரும் மலை போல் என் மனதில் நிலைத்தது என்பது அடுத்தடுத்து எனக்கு நிகழ்ந்த இசை அனுபவ நீட்சியின் பாதிப்பே.
எண்பதுகளின் இறுதியில் எம் சி சியில் படித்துக்கொண்டிருந்த போது என் நண்பன் (சுமித்திரன் என்று பெயர்) நான் ஆங்கிலப் பாடல்களை ரசித்துக் கேட்பவன் என்பதால் என்னிடம் அவ்வப்போது அதைப் பற்றி விவாதிப்பதுண்டு. ஒருமுறை எங்கள் உரையாடல் இப்படிப் போனது:
"Waiting For A Girl Like You என்று ஒரு கிளாஸ் சாங் இருக்கிறது. நீ அதைக் கேட்டதில்லையா?" அவன் class song என்பதை சொல்லும்விதமே தனி.
"இல்லை" என்றேன். உண்மையில் அந்தப் பாடல் Foreigner என்ற அமெரிக்க hard rock இசைக் குழுவின் மிகச் சிறப்பான பாடல். காதலை மென்மையான தாலாட்டும் இசையுடன் சட்டென்று மனதைக் கவரும் கவிதையுடன் சொல்லும் மிக அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆனால் நான் அதை அப்போது கேட்டதில்லை.
"Hotel California பாடலாவது கேட்டிருக்கிறாயா? Welcome to hotel california such a lovely place." என்று அடுத்து கேட்டான் பாடலின் வரிகளைப் பாடிக்காட்டியபடி.
ஹோட்டல் கலபோர்னியா அமெரிக்க ராக் மற்றும் folk என்ற நாட்டுப்புற இசைகளின் கலவையான The Eagles என்ற சரித்திரம் படைத்த இசைக்குழுவின் மகா அபாரமான பாடல். பாடலை முழுதும் கேட்காமல் நகர்ந்து செல்ல முடியாது. குறிப்பாக பாடலின் இறுதியில் வரும் அந்த லீட் கிட்டாரின் துள்ளிச் செல்லும் தனி இசைத் துணுக்கு நமக்குள் மின்சாரம் போல பாயும்.
"ம்ஹூம். கேட்டதில்லை." என்றேன் அவன் குறிப்பட்ட பாடல்களை மனதில் குறித்துக்கொண்டே.
அவன் குழப்பத்துடன்,"Eric Clapton கேட்டிருக்கிறாயா?"
"இல்லை. பிடிக்காது". எரிக் கிளாப்டனின் Wonderful Tonight என்ற காதல் கானத்தை அப்போது நான் கேட்டதில்லை.
அவன் கொஞ்சம் அதிர்ச்சியுடன்," The Beatles கேட்டிருக்கிறாயா?" என்றான்.
மறுபடியும் என்னிடமிருந்து "இல்லை". அவர்கள் அதீதமாக புகழப்பட்டவர்கள் என்பதால் எனக்கு அவர்களின் இசை மீது அவ்வளவு நாட்டம் கிடையாது.
"நீ Let It Be கூட கேட்டதில்லையா?" என்றான் வியப்பில் விரிந்த விழிகளோடு. "கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றேன் அமைதியாக. லெடிட் பி ஒரு மிக மென்மையான தத்துவப் பாடல். அது சொல்லும் கருத்தைக் கொண்டு அதை போனால் போகட்டும் போடா வின் ஆங்கிலப் பதிப்பு என்று வைத்துக்கொள்ளலாம். அதை கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியதே ஆறு வருடங்களுக்கு முன்தான்.
அவன் மூர்ச்சையடையாத குறையாக இகழ்ச்சியுடன் சொன்னான்: "பீட்டில்ஸ், ஈகிள்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், எரிக் க்ளாப்டன் கேட்காமல் அப்படியே படார்னு Depeche Mode டுக்கு வந்துடிங்களாக்கும்!"
எனக்கோ அவனது இகழ்ச்சி ரசிப்புக்குரியதாக இருந்தது. 80களில் வந்த அனைத்து டேபேச் மோட் இசைத் தொகுப்புக்களையும் நான் தேடித் தேடி சேகரித்ததை அவன் நன்கறிவான். ஆனால் டேபேச் மோட் பாடல்களை அவன் கேட்டதில்லை. எனவேதான் இந்த நக்கல். அவன் சொன்னது கிண்டலுக்கு என்றாலும் அது உண்மையே. ஏனென்றால் நான் இப்படித்தான் ஆங்கில இசைக்குள் வந்தேன்.

பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஈகிள்ஸ் போன்ற இசைக் குழுக்கள் மிகப் பெரிய சகாப்தங்கள் படைத்தவை என்று அதை ஒரு புதிய தகவலாகச் சொல்வது ரோஜாவுக்கு நறுமணம் உண்டு என்பதைப் போன்று அசட்டுத்தனமானது. 60களில் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் இவர்களது இசை எங்கும் ஒலித்தது. ஜான் லென்னன், பால் மெக்கார்டினி (பீட்டில்சை சேர்ந்தவர்கள்) மிக் ஜேக்கர் (ரோலிங் ஸ்டோன்ஸ்) டான் ஹென்லி, கிளென் ப்ரே (ஈகிள்ஸ்) போன்ற பெயர்கள் எல்லோருடைய உதடுகளிலும் உதிர்ந்தவண்ணம் இருந்த காலகட்டம் ஓய்ந்து போனபின்பே நான் என் புதிய இசைத் தேடலைத் துவங்கினேன் இவர்களை யார் என்று அறியாமலேயே. அடிப்படையில் நான் ஒரு சராசரி BoneyM ரசிகனாகவே இருந்தேன். என்னைக் கவர்ந்த முதல் மேற்கத்திய இசையே ஒரு போனி எம் பாடல்தான். இது இப்படி நிகழ்ந்தது.
எண்பதுகளின் துவக்கத்தில் உலகையே உலுக்கிய கடல் காவியம் என்ற விளம்பரத்துடன் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் புகழ்பெற்ற Jaws திரைப்படம் எங்கள் ஊரில் திரையிடப்பட்டது. நானறிந்தவரையில் அந்த ஊரில் ஒரு ஆங்கிலப் படம் மூன்று காட்சிகளும் ஓடுவது அதுவே முதல் முறை. நான் அதைக் கண்டு மோகம் கொண்டு, அப்போதைய தமிழ்ப் படங்களை மாற்றுக்கண்ணோட்டத்துடன் அணுக, என் நண்பன் ஒருவன் (ஆனந்த் என்று பெயர்.அவன் தந்தை எதோ ஒரு கப்பலில் மாலுமியாகவோ வேறு எதாகவோ இருந்தார். எனவே அவனுக்கு இது கிடைத்ததாக பின்குறிப்பு வரைந்தான். ) ஒரு மாலை வேளையில் ஒரு ஆங்கில இசைத் தொகுப்பை என் கையில் திணித்து,"கேள் இதில் ஒரு கடல் பாட்டு உண்டு. அப்படியே கடல் அலைகளின் ஓசை கேட்கும்." என்று பெருமிதத்துடன் தெரிவித்தான். ( என்னிடம் கொடுக்க வேண்டிய காரணம் நான் jaws படத்தை அவ்வளவு ரசித்ததால்தான் என்று நினைக்கிறேன்.) கேட்டேன். கடல் ஓசை கேட்டது. தும் தும் என்றது தாளம். கொஞ்சம் என்னை உரசிச் சென்றது அந்த இசை. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன். ஆனால் அது என்னைக் கவர்ந்ததா இல்லையா என்றே புரிபடவில்லை. அவன் சென்றபின் நான் அந்த இசைத் தொகுப்பை என் பேனாசோனிக் ஸ்டீரியோ பிளேயரில் ஓடவிட்டேன். திருவிழாக் கூட்ட நெரிசலில் கண்ட ஒரு அழகான பெண்ணின் முகத்தை வெகு அருகில் தனிமையில் பார்ப்பதைப் போல இம்முறை நான் நிதானமாக தனியாக அந்த இசையை உள்வாங்கினேன். என் வாழ்வின் மிக முக்கியமான திருப்பம் அப்போது அங்கே சடுதியில் நிகழ்ந்தது. மிக முதல் பாடலாக என் செவிகளில் விழுந்த ஒரு இசை என் இசை ரசனையை ஒரே நொடியில் தலைகீழாக புரட்டிப்போட்டது. எனக்குள் எங்கோ என் ஆத்மாவின் குரல் "இதுதான்" என்று சொல்வதைப் போலிருந்தது. என் காதலி யாரென்று எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த தேவதையின் அழகான முகம் My Friend Jack என்ற பாடல். உண்மையில் இந்தப் பாடல் 1967 இல் The Smoke என்ற பிரிட்டிஷ் பாப் இசைக் குழுவினர் இசைத்தது. அற்புதமான கானம். ஆனால் நான் கேட்டது அந்தப் பாடலையல்ல. இது அந்த அசலின் ஆர்ப்பாட்டமான நகல். போனி எம் குழுவினரால் மீட்டெடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட இசை.
ஒரு பள்ளிச் சிறுவனாக நான் கேட்ட அந்த முதல் ஆங்கிலப் பாடல் என்னை அழைத்துச்சென்ற இசைச் சோலைகள் எனக்கு மிகப் புதிது. அதன் ஆரம்பமே ஒரு சிந்தசைசர் இசை சரசர வென்று இங்கும் அங்கும் அலைந்து பின் தடத்தடவென தாளம் துவங்கி அதன் பின் கிடார் சேர்ந்துகொண்டு மை ப்ரெண்ட் ஜேக் என்று பாடல் பாட கேட்க அதகளமாக இருக்கும். பொதுவாக ஆங்கில இசையில் நாட்டம் கொண்டவர்கள் போனி எம் இசையை பெரிதாக கருதுவது கிடையாது. அது ஒரு எலிமெண்டரி இசை என்றே அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவர்களின் தாளம் ஒரே வகையைச் சேர்ந்தது. டிஸ்கோ-பாப் இசையை மிகத் தரமான இசைத் தொழில் நுட்பத்துடன், முக்கால்வாசி cover songs எனப்படும் மற்றவர்களின் பாடல்களைப் பாடி இசைத் தொகுப்புக்களை வெளியிட்டவர்கள் போனி எம். (Frank Farian என்ற ஒருவரின் மூளைக் குழந்தைதான் இந்த இசைக் குழு.) மிகப் பெரிய இசை ரசனையை வைத்துக்கொண்டு மகா எதிர்பார்ப்புகளுடன் இவர்களை அணுகினால் நமக்கு ஏமாற்றமே ஏற்படும். ஆனால் ஆங்கில இசைக்குள் நுழைவதற்கு போனி எம் ஒரு அருமையான வாசல் என்பதை மறுப்பதற்கில்லை. என் நண்பன் குறிப்பிட்ட அந்தக் கடல் ஓசை கொண்ட பாடல் Oceans Of Fantasy . The Magic Of BoneyM என்ற அந்த இசைத் தொகுப்பின் இருபது பாடல்களும் (El Lute, I'm Born Again தவிர) அதன் பின் எங்கள் வீட்டில் ஒலிக்காத நாட்களே இல்லை. வெகு விரைவில் போனி எம் குழுவின் அனைத்து இசைத் தொகுப்புகளும் என் வசமாயின. பள்ளிப் பருவத்தில் என் நண்பர்கள் என்னை போனி எம் பயல் என்று நக்கலடிக்கும் அளவுக்கு நான் இவர்களின் இசை மீது தீரா காதல் கொண்டிருந்தேன். கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் இரண்டு மாதங்கள் வரை இந்த போனி எம் புராணம்தான் என் அடையாளமாக இருந்தது. என் வகுப்பில் இருந்த சமகால ஆங்கில இசையை கேட்கும் மேல்தட்டு வர்கத்தின் பிரதிநிதி ஒருவன் ஒரு முறை நக்கலாக, "Careless Whisper கேட்டிருக்கிறாயா?" என்று வினவினான். நான் அதே திமிருடன் கேட்டேன்:"நீ Kalim Ba De Luna கேட்டிருக்கிறாயா?". உதட்டை நாவால் வருடிக்கொண்டே இல்லை என்று தலையாட்டினான். கண்ணனுக்கு கண் என்ற கோட்பாடு தகுந்த பலனளித்த திருப்தி எனக்கு. சொல்லப்போனால் Wham! என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவின் (ஜார்ஜ் மைக்கல் பாடகராக இருந்த குழு) உலகப் புகழ்பெற்ற பாடல் கேர்லஸ் விஸ்பர். வழக்கமான அதிரடி தாளம் இல்லாது ஏறக்குறைய நம்ம ஊர் சாயல் கொண்ட மென்மையான கானம். நான் வீறாப்புடன் ஆயுதமாக வீசிய களிம்பாடிலூனா பாடலோ துடிக்கும் டிஸ்கோ இசை. இன்றோ நான் இந்தப் பாடலை நான் கேர்லஸ் விஸ்பருக்கு கீழ்தான் வைத்திருக்கிறேன். இது எவ்வாறென்றால் சிறிய வயதில் இனிப்பை அதிகம் விரும்பும் நாம் வயதாக ஆக அதை விரும்புவதிலிருந்து விலகிச் செல்வது போன்ற மாற்றமே.
தொடர்ந்து ஆங்கில இசையே ஒலித்ததால் எங்கள் வீட்டில் என்னை விநோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்ற சகிப்புத்தன்மை அவர்களிடம் இருந்தது. நானோ இன்னும் இன்னும் ஆங்கில இசையின் ஆழங்களுக்குள் சென்றபடியே இருந்தேன். பல பாடல்கள் கொண்ட தொகுப்பை வாங்கினால் அதை வெறுமனே கேட்பதோடு நிற்காமல் அதிலுள்ள என் மனத்தைத் தாக்கிய பாடல் குழுக்களை தேடி எனது பயணம் நீண்டது. அப்போது நான் கேட்ட சில ஒற்றைப் பாடல்கள் மேற்கத்திய இசையின் உன்னதனமான பல இசைக் குழுக்களிடம் என்னைக் கொண்டு சேர்த்தது. உதாரணமாக
The Alan Parsons Project ( Eye In The Sky ),
The Cars (You Might Think),
Starship ( Nothing's Gonna Stop Us Now),
Wham! ( Last Christmas),
Lionel Ritchie (Hello),
The Police (Every Breath You Take),
A-Ha (Take On Me),
Eddy Grant (Electric Avenue)
Tina Turner (What's Love Got To Do With It),
Stevie Nicks (You Can Talk To Me),
Big Country (In A Big Country),
Men At Work (Down Under),
Duran Duran (Rio),
Ric Ocasek (Something To Grab For),
Donald Fagen ( The New Frontier),
A Flock Of Seagulls ( Wishing),
Dire Straits (Twisting By The Pool)
Don Henley (Boys Of Summer)
Glenn Frey (The Heat Is On)
Pet Shop Boys (West End Girls)
Gazebo (I Like Chopin)
Simply Red (Money's Too Tight To Mention)
Phil Collins (I Don't Care Anymore)
Steely Dan (Do It Again)
Paul Young (Every Time You Go Away)
Status Quo (In The Army Now)
போன்ற இசைக்குழுக்கள் எனக்குப் பரிச்சயமானது. நான் ஒரே பாடலோடு நின்றுவிடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. மேலே அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அந்தந்த குழுக்களின் முத்திரைப் பாடல்கள். ஆனால் அவைகளைத் தாண்டி இன்னும் பல நெஞ்சத்தை தழுவும் கானங்கள் அவர்களிடம் உண்டு. ஒரு குழுவின் அனைத்து இசைத் தொகுப்புகளையும் கேட்டால் வணிக அளவில் வென்ற அவர்களது பாடல்களைக் காட்டிலும் சிறப்பான மற்ற கானங்கள் இருப்பதை இனம் காணலாம். பொதுவாக நான் அவ்வாறான பாடல்களையே தேடும் பழக்கமுடையவன்.
இந்த இசைத் தேடல் என்னை நீண்ட தொலைவுகளுக்கும், வினோதமான இடங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறது. இரவு பகல் வித்தியாசங்களில்லாமல் அலைய வைத்திருக்கிறது. எதிர்பார்க்காத ஆச்சர்யங்களையும், திடீர் துள்ளல்களையும், மன வருத்தங்களையும், வித்தியாசமான மனிதர்களையும் சந்திக்க வைத்திருக்கிறது. அறிமுகமேயில்லாத இடங்களில் காக்க வைத்திருக்கிறது. ஒரு முறை எங்கள் ஊரிலுள்ள அக்ரஹாரம் ஒன்றில் ஒரு வக்கீல் வீட்டில் ஆங்கிலப் பாடல்கள் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றால், நம்ப மாட்டீர்கள், அந்த மாமி "வாங்கோ! காபி சாப்பிடுங்கோ முதல்ல!" என்று எதோ மாமி மெஸ்சுக்கு சாப்பிட வந்தவர்களை உபசரிப்பது போல வரவேற்றார். காபியுடன் அந்த மாமி தட்டு நிறைய எதோ தட்டையா, வட்டையோ கொண்டு வர, நாங்கள் (என் அண்ணனும் வந்திருந்தான்.) திகிலடைந்து போய் ஒருவாறாக சமாளித்து Abba வின் The Name Of The Game, Rod Steward இன் Camouflage என்ற இரண்டு இசைத் தொகுப்புகளை பதிவு செய்துகொண்டு தெறித்து ஓடி வந்தோம். அதன் பிறகு மறுபடி அங்கு சென்றதாக நினைவில்லை. வீட்டில் சொன்னால் "அந்த மாமி நல்ல அழகா இருந்தாளா?" என்று உபரியாக சகோதரிகளின் நக்கல் வேறு. ராட் ஸ்டீவர்ட்டின் சிறந்த ஆல்பம் என நான் கருதும் கேமாப்ளாஜ் எனக்குக் கிடைத்தது நான் எதிர்பாராத அக்ரஹாரத்தில் என்பதை இப்போது என்னால் நம்ப முடியவில்லை. ராட் ஸ்டீவர்ட்டின் உல்லாச் குரலில் துள்ளும் Infatuation, Some Guys Have All The Luck, Bad For You பாடல்கள் இதில்தான் இருக்கின்றன. புன்முறுவலுடன் எங்கள் மீது வினோத பாச மழை பொழிந்த அந்த மாமியின் முகத்தை நான் இப்போது மறந்துவிட்டாலும், இந்தப் பாடல்களைக் கேட்கும் பொழுதெல்லாம் அந்த விசித்திர அனுபவத்தை அசைபோடத் தவறுவதில்லை.
நடுவில் எனக்கு போனி எம் கொடுத்த நண்பன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கத் துவங்க, நான் அவனை அடிக்கடி அங்கே சென்று சந்திக்க நேரிட்டது. போகும் வழியில் மியூசிக் லேன்ட் என்றொரு கடையில் அதிரும் தாளத்துடன் ஒரு ஆங்கிலப் பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.கேட்கும்போதே மனதில் அதன் வீச்சை உணரமுடியும். பொதுவாகவே ஆங்கில இசையில் தாளங்கள் துடிப்பாக ஒலிப்பவை. Rock Beat எனப்படும் இந்த inverted drum beat போதை தரக்கூடியது. நான் கேட்ட அந்தப் பாடல் Queen என்ற பிரிட்டிஷ் இசைக்குழுவின் The Works என்ற தொகுப்பிலுள்ள I Want To Break Free என்ற தடாலடிப் பாடல். க்வீன் இசைக்குழுவின் முதன்மைப் பாடகரான Freddie Mercury பார்சி இனத்தைச் சேர்ந்த ஒரு இந்தியராக இருந்தாலும் தன் இந்திய அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்து வீழ்ந்த சரித்திரப் பாடகர். (இவர் எய்ட்ஸ் நோயினால் இறந்து போனார்.) இவரது குரல் வசீகரமானது. தனித்தன்மை கொண்டது. Bohemian Rhapsody, Radio Ga-Ga, Don't Try Suicide, Another one Bites The Dust, We Are The Champions, We Will Rock You பாடல்களைக் கேட்டால் மெர்குரியின் குரல் ஜாலத்தை நீங்கள் வியக்காமலிருக்க முடியாது. குறிப்பாக Machines, Man On The Prowl, Keep Passing The Open Windows, Life Is Real, Under Pressure போன்றவை இவரது குரலுக்காகவே கேட்கப்படவேண்டிய கானங்கள். க்வீன் இசைத் தொகுப்பை அந்த மியூசிக் லேன்ட் கடையில் கண்டெடுத்த பின் அது எங்களின் புனிதத் தலமாகிவிட்டது. ஏனென்றால் கடையின் உரிமையாளன் (ஸ்ரீதர்) ஒரு விஷயமுள்ள ஆசாமி. அவன் எங்களுக்குத் தெரியாத பல ராக் இசைக் குழுக்களை பற்றி எங்களிடம் நிறைய பேசுவான். சில சமயங்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று ," சரி அப்பறம் பாக்கலாம்!" என்று கடையை மூடிவிட்டு மர்மமாக மறைந்து விடுவான். Third World என்ற ஒரு ரகே குழுவின் இசையை அங்கேதான் முதலில் கேட்டேன். (Try Jah Love என்ற நெஞ்சத்தை அள்ளும் கானம்.) இவன் கொஞ்சம் வேற மாதிரி. அதாவது "அது வேண்டாம் பசங்களா. நல்லாயிருக்காது. இதை கேளுங்கள்" என்று ஆச்சர்ய அறிவுரைகளை அவ்வப்போது அள்ளி வீசுவான் . அவன் வயதுக்குரிய இசை ரசனையை பள்ளிச் சிறுவனான என் மீது செலுத்தினான் என்று கூட சொல்லலாம்.
என் இன்னொரு நண்பன் (அழகப்பன்) தயவில் ஊரிலிருந்த சக்தி மியூசிகல்ஸ் எங்களது அடுத்த haunt ஆக மாறியது. அடிக்கடி கடையின் முதலாளி எல் பி ரெகார்டுகள் வாங்க திருச்சி சென்றுவிட, நாங்கள் அங்கே சென்று பெரிய ஸ்பீக்கர்களில் பாடல்களைக் கேட்போம். அவனோ சமகாலத்து தமிழ்ப் பாடல்களை போட்டு என்னை கலங்கடிப்பான். இந்தப் பாடல்களுக்கு இத்தனை பெரிய ஸ்பீக்கர் அவசியமா என்று நான் எண்ணிக்கொள்வேன். அதுதான் ஆயிரம் முறை வானொலியில் ஒலிபரப்புகிறார்களே என்ற நியாயமான சிந்தனை வரும். எப்போதோ ஒரு முறை "சரி இந்தா உனக்கும் கொஞ்சம்" என்கிற ரீதியில் ஒன்றிரண்டு ஆங்கிலப் பாடல்களுக்கு அனுமதி அளித்தான். அப்படிக் கேட்ட ஒரு பாடல் என்னைத் திணற அடித்தது. அது Somebody's Watching Me என்ற குதிக்கும் தாளம் கொண்ட அபாரமான பாடல். சரியான ராக் துள்ளல். பாடலின் துவக்கத்திலேயே திடும் திடும் என தாளம் ஆங்காரமாக குதிக்க, அதன் பின் ஒரே ஹை ஸ்பிரிட்டட் இசைதான். I always feel like somebody's watching me என்ற வரியை மட்டும் அப்போது உச்சத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற Michael Jackson பாடியிருப்பார். சிலர் இதை அவருடைய பாடல் என்று நினைப்பதுண்டு.உண்மையில் அது Rockwell என்ற கறுப்பின இசைஞனின் கானம். இதில்தான் என் விருப்பத்திற்குரிய அற்புதமான Knife என்ற கலைந்த காதலை துயரத்துடன் சொல்லும் பாடலும் இருக்கிறது.
டிஜிடல் இசை கொண்டு பாடல்கள் உருவாக்கிய -தமிழில் கம்ப்யூட்டர் இசை என்று சொல்வது வழக்கம் - முதன்மையானவர்களில் ஒருவரான Giorgio Moroder என்ற இத்தாலிய இசைஞனின் E=Mc2, From Here To Eternity என்ற இரண்டு இசைத் தொகுப்புகளையும் நான் இங்கேதான் கண்டெடுத்தேன். ஜார்ஜோ ஒரு அற்புதமான இசைஞன். டிஜிடல் இசையின் பிதாமகன் என்று தாராளமாகச் சொல்லலாம். இவர் Donna Summer என்ற கறுப்பின பாடகியுடன் சேர்ந்து அமைத்த பாடல்கள் பெரிய வெற்றி பெற்றவை. (பொதுவாக ஆங்கில இசை என்றாலே நமக்கு வெள்ளைத் தோல் ஆசாமிகள்தான் நினைவுக்கு வரும் என்பதால் இந்த கறுப்பின என்ற பதத்தை உபயோகிக்கிறேன். மற்றபடி வேறு அரசியல் இல்லை.) E=Mc2 ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிகப் புகழ்பெற்ற விஞ்ஞான விதி என்பதை நான் ஜார்ஜோ மூலம்தான் அறிந்தேன்! 70களின் துவக்கத்திலேயே இவர் இந்த டிஜிடல் இசைக்கு வித்திட்டார். 77 இல் வந்த ப்ரம் ஹியர் டு இடர்நிட்டி டிஜிடல் இசையின் முன்னோடியாக இன்று பார்க்கப்படுகிறது. இதிலுள்ள அனைத்துப் பாடல்களும் என்றும் அலுக்காத, தெவிட்டாத மேற்கத்தியத் தேன் துளிகள். குறிப்பாக I'm Left, You're Right, She's Gone என்ற பாடல் நம்மை வசியப்படுத்தும் இசைவண்ணம். 13 இசைத் தொகுப்புகளுடன் பத்து ஹாலிவுட் படங்களையும் இவரது டிஜிடல் இசை அலங்காரம் செய்திருக்கிறது. Top Gun ( டாம் க்ரூஸ் super stardom அடைந்த படம்) படத்தின் கையெழுத்துப் பாடலான Danger Zone, Take My Breath Away, Flash Dance இன் What A Feeling போன்றவை சில உதாரணங்கள்.
வெளிமாநிலத்தில் இருந்த ஒரு உறவினர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது ," நாள் பூரா இந்த காட்டுக் கத்தல்தான்" என்று புகார் வாசிக்கப்பட்டது. அவர் எங்களுக்கு ஏதாவது உபயோகமாக அறிவுரைகள் சொல்வார் என்று புகார் சொன்ன என் அம்மா எண்ணியிருக்கலாம். ஆனால் அவரோ ,"ப்பூ! இதெல்லாம் சும்மா. Born In The USA ன்னு ஒரு பாட்டு இருக்கு. Springsteen ன்னு ஒருத்தன் பாடுவான். அப்படி கத்துவான் பாட்டு பூராவும். இதெல்லாம் ஒண்ணுமேயில்ல." என்று அலட்சியமாக சொல்லி எனது இசைத் தீயின் மீது மேலும் பெட்ரோல் ஊற்ற, நான் அடுத்த முறை வழக்கமாகச் செல்லும் மியூசிக் லேன்ட் கடைக்குச் சென்ற போது இதைத் தெரிவித்தேன். "அந்தப் பாட்டு இருக்கிறதா?" எனக்கேட்டேன். அமெரிக்காவில் தி பாஸ் என்று அறியப்படும் ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் ஒரு folk இசை நாயகன். அமெரிக்க சமூகத்தின் மத்தியதர மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும், வலிகளையும் சுடும் நிஜங்களையும் தன் பாடலில் வடித்து உச்சக் குரலில் வெறிகொண்டு பாடுபவர். பார்ன் இன் தி யு எஸ் எ மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு அமெரிக்க போர்வீரனின் குற்ற உணர்ச்சி கலந்த நாட்டுபற்றை வெளிப்படுத்தும் ஒரு கதறல் கானம். நான் முன்பு குறிப்பிட்ட அந்த ஸ்ரீதர் "அதையே காட்டுக் கத்தல்ன்னா இதை என்ன சொல்றது?" என கேட்டுவிட்டு உடனே ஒரு எல் பி ரெகார்டை எடுத்து ஓட விட்டான். பாடல் துவங்கியதுமே bass கிடார் ஓசை தும் என அதிர, தாளம் எகிற, அடுத்து துப்பாக்கிக்குண்டு செல்லும் வேகத்தில் ஒரு மனிதக் குரல் எதையோ படபடவென்று பாட, இசை தறிகெட்டு ஓட, ஒரு வினாடி கூட நிற்காது ஆங்காரமாக செவிகளை பதம் பார்க்கும் ரிதம் கிடார் விர்ரென்று சூடேற, எனக்குப் பொறி பறந்தது. முதல் முறையாக அப்போதுதான் அப்படிப்பட்ட இசையை கேட்கிறேன். அது பிரிட்டிஷ் heavy metal இசைக்குழுவான Iron Maiden இசைத்த The Duelists என்ற பாடல். Powerslave என்ற அவர்களின் இசைத் தொகுப்பில் இது உள்ளது. அதை நான் முழுதாகக் கூட கேட்கவில்லை. ஏனென்றால் கேட்க முடியவில்லை. "இது என்ன?" என்றேன் காதைத் தேய்த்தபடி. "நீ சொன்ன அந்த காட்டுக் கத்தல் இதுதான். வேண்டுமா?" என்றான் அவன் அதிபயங்கரமாக சிரித்துக்கொண்டே. அந்த மாதிரியான பரிசோதனைகளுக்கு அப்போது நான் தயாராக இல்லை. அயன் மெய்டன் ஒரு ஹெவி மெட்டல் இசைக் குழு என்பதும் அவர்களின் இசை இரைச்சலாகத்தான் இருக்கும் என்பதையும் அதன்பிறகுதான் அறிந்தேன். மூன்று வருடங்கள் கழித்து அந்த "இரைச்சலை" பதிவு செய்து கேட்டதை விட இன்று நான் மிகவும் விரும்பும் இசைத் தொகுப்பாக அது மாறிவிட்டது என்பது தனிக்கதை. இதில்தான் எஸ் டி கோல்ட்ரிட்ஜின் The Rime Of The Ancient Mariner என்ற கிளாசிக் கவிதையை தங்களின் அதிரும் ஆர்ப்பாட்டமான இசை மூலம் முற்றிலும் வேறு பரிமானத்திற்கு எடுத்துச் சென்று ஒரு ராக் சல்யூட் அடித்திருப்பார்கள். பதிமூன்று நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் பாடல். கேட்டு முடித்ததும் காதுக்குள் கண்டிப்பாக மழை பெய்யும். இன்றோ death metal, black metal வகையைச் சேர்ந்த Cradle Of Filth, Celtic Frost, Morbid Angel, Napalam Death, Obituary போன்ற இசைக் குழுக்களால் இதை விட ஆயிரம் மடங்கு வீரியமான அலறல் இசை உருவாக்கப்பட்டு கேட்பவரை தெறித்து ஓடச் செய்கின்றன. இவைகளுடன் ஒப்பிடுகையில் Iron Maiden, Slayer, ACDC, Judas Priest, Black Sabbath, Deep Purple, Uriah Heep, Dio, Led Zeppelin, Scorpions போன்றவைகள் இன்றளவும் கேட்டு ரசிக்கக்கூடிய இசைக் குழுக்கள் அவை ஹெவி மெட்டல் வகையாக இருந்தாலும்.

இவ்வளவுக்கும் என் அம்மா "காட்டுக் கத்தல்" என்று புகார் செய்தது Eddy Grant, Queen, Giorgio Moroder, Wham போன்ற சாதாரணமான இரைச்சல்களற்ற rhythm-based இசைக் குழுக்களைத்தான். எடி கிராண்ட் ஒரு கறுப்பினத்தை சேர்ந்த மகா இசைக் கலைஞன். இவரது இசை Ringbang என்ற வகையை சேர்ந்தது. சிலர் இதை funk என்று வகைப்படுத்தினாலும் எடி இதை ஏற்றுக்கொண்டதில்லை. 15 இசைத் தொகுப்புகளை வெளியிடுள்ள இவர் பல அற்புதமான பாடல்களை படைத்தவர். Going For Broke என்ற தொகுப்பில் வரும் இவர் பாடிய ஒரு பாடல் Telepathy. இதை அவர் பாடும் விதம் கேட்பதற்கு நல்ல பசி என்று சொல்வதைப் போலிருக்கும். மேலும் இதை அவர் சொல்லிவிட்டு உடனே ஊ ஊ ஊ என்று வினோத சத்தம் போடுவார். கேட்பதற்கு பசியில் அவர் கத்துவது போலவே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் எடி கிராண்ட் ஒரு பாடலின் தலைப்பை அப்பாடல் முழுதும் நூறு முறையாவது திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பார் எதோ நர்சரி ரைம் போல. எனவே நல்ல பசி எங்கள் வீட்டில் ஒரு மிகப் புகழ் பெற்ற பாடலாகிவிட்டது. எனவே சில சமயங்களில் என்னைச் சீண்டும் விதத்தில் "என்ன இன்னைக்கு அந்த பிச்சைக்காரன் பாடலியா?" என்று வீட்டில் வெறுப்பேற்றுவார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆங்கிலத்தில் th என்ற ஒலியை தடியாக த என்று உச்சரிக்காமல் (உதாரணமாக தண்ணீரில் இருக்கும் த) மென்மையாக, லேசாக எஸ் ஓசை வரும் விதத்தில் stha என்று உச்சரிக்கவேண்டும் என்பதை அறிந்தேன். எனவே டெலிபதி நல்ல பசியாக மாறியதில் வியப்பொன்றுமில்லை. War Party என்ற பாடலில் முதலாளித்துவ வர்கத்தின் ரத்தம் தோய்ந்த பண வேட்டையை எடி கிராண்ட் கடுமையாக சாடியிருப்பார். அதே சமயம் Till I can"t Take Love No More என்று காதலின் கருப்பான பக்கத்தையும் மிக பக்குவமாக வெளிப்படுத்தியிருப்பார். நீங்கள் எடி கிராண்டை ரகே, Folk , Funk, பாப் என்று ஒரு கோட்டுக்குள் கொண்டுவரமுடியாது. அதுதான் அவரது சிறப்பு. அவரை நீங்கள் வண்ணம் தீட்ட முடியாததே எடியின் தனித்தன்மை. அவர் தன் இசையை ரிங் பேங் என்ற வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டார். Electric Avenue, Baby Come Back, I Don't Wanna Dance போன்ற பாடல்கள் பிரபலமானவை. இவரது பாடல்களைக் கேட்டுதான் எனக்கு Wanna (want to) Gonna (going to) என்ற பதங்கள் பரிச்சயமாயின.
இதற்கிடையில் மகேஷ் என்றொரு நண்பன் எங்களுக்குப் பழக்கமானான். இவன் ஒருமுறை "எதோ Modern Talking என்று ஒரு க்ரூப் இருக்கிறதாமே? அந்தப் பாடல் எதுவும் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"இல்லை."என்றேன் கவனமின்றி. மாடர்ன் டிரெஸ் தெரியும். மாடர்ன் டாக்கிங் எல்லாம் கேள்விப்பட்டதேயில்லை அப்போது. "ஏன்?" என்றேன் பிறகு. அவன் தொடர்ந்து சொன்னது படு திகிலாக இருந்தது.
"ஒன்றுமில்லைஅவர்களின் பாடல்களைக் கேட்டவர்களெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்களாம்." என்று ஒரு திரியை பற்ற வைத்துவிட்டுப் போய்விட்டான்.
அவன் இதை வெறுமனே சும்மா சொல்லாமல் உண்மையாகவேதான் கூறினான். அடுத்த இலக்கு அந்த மாடர்ன் டாக்கிங்தான் என்று முடிவு செய்துகொண்டு (அப்போது திருச்சி செயின்ட் ஜோசெப் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்) திருச்சியிலுள்ள சிங்காரத் தோப்பில் ஒரு குறுகிய நான்கு மாடிக் கட்டிடத்தின் ஒரு கடையில் (ஓம் சக்தி ரிகார்டிங் செண்டர்) கடைசியில் அந்தத் தற்கொலை இசைக் குழுவை கையும் களவுமாகப் பிடித்தாயிற்று. அவர்களின் முதல் ஆல்பத்தை பதிவு செய்து கொண்டு வந்து டேப்பில் ஓட விடும்வரை ஜாஸ் படத்தில் அந்த சுறாவைக் காட்டாமல் இருப்பதால் நமக்கு பதற்றம் எகிறுவதைப் போல உள்ளுக்குள் ஜிவ்வென்று ஒரு இனந்தெரியாத உணர்ச்சி படபடத்தது. டேப்பில் விஷ்க் விஷ்க் என்று சுழன்ற அந்த ப்ரவ்ன் வண்ண இசை நாடா கொஞ்ச நேரத்தில் இசைக்க ஆரம்பித்தது. முதல் பாடல் You're My Heart, You're My Soul. கும் கும் என்று மேடுபள்ளங்களில் பயணிக்கும்போது நமக்கு ஏற்படும் அதிர்வலைகளைப் போன்ற தாளத்துடன் அது ஒலித்தது. You Can Win If You Want என்ற அடுத்ததும் அதே வகையான மெத்தை மீது மோதும் சுகமான கானம். மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் ஒன்றில் கூட அவன் சொன்ன அந்தத் தீவிரமான தற்கொலைத் துணுக்கு மருந்துக்கும் இல்லை. உண்மையில் மாடர்ன் டாக்கிங் இருவர் கொண்ட ஒரு ஜெர்மானிய இசைக் குழு. இவர்கள் யூரோ பாப் அல்லது சிந்த் பாப் (Synth-Pop ) எனபடும் டிஸ்கோ இசையின் புத்துப்பிக்கப்பட்ட இசை வடிவம். மாடர்ன் டாக்கிங் இசையைக் கேட்டால் குதித்து எழுந்து நடனமாடத் தோன்றுமே ஒழிய மாடியிலிருந்து குதித்து விடத் தோன்றாது. Brother Louie, Atlantis Is Calling (SOS For Love), Let's Talk About Love, Geronimo's Cadillac, 10000 Lonely Drums, Operator Gimme 609, Romantic Warriors, Locomotion Tango போன்ற பாடல்களைக் கேட்டால் ஒரே நொடியில் இவர்களின் இசையை ஒரு கும்மாளமான குதூகலம் என்று சொல்லிவிடலாம். ஏறக்குறைய எல்லா பாடல்களுமே காதல் கீதங்களே. ஒரே வார்ப்பில் பாடும் முறை, ஒரே தாளம், ஒரே கோரஸ் என என்பதுகளின் டிபிகல் டிஸ்கோ. வழக்கமாக ஆங்கிலப் பாடல்களில் ஒலிக்கும் விர்ரென்ற லீட் கிடாரின் riff கூட இவர்களிடம் கிடையாது. சொல்லப்போனால் ரொம்ப சாதுவான சைவ இசை. அடுத்த முறை அந்தத் "தற்கொலை" மகேஷ் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் வேண்டுமென்றே அட்லாண்டிஸ் இஸ் காலிங் என்ற கேட்கவே மனது துள்ளும் பாடலை சத்தமாக வைத்தேன். பேசிக்கொண்டிருந்தவன் அப்பாடல் முடிந்ததும் என்னை நோக்கி," ரொம்ப அருமையா இருக்கே இந்தப் பாட்டு. ஏன்னா அடி? என்னது இது? மைக்கல் ஜாக்சனா?" என்று கேட்டான். "மாடர்ன் டாக்கிங்." என்றேன் நான். "நீ சொன்னதுதான். இத்துடன் இருபதாவது முறை கேட்கிறேன்." என்று பின்குறிப்பு வரைந்தேன். திகைத்துப்போய் அவன் கொஞ்சநேரம் தீவிரமாக யோசனை செய்வதுபோல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பின்னர் ஆண்ட்டி-க்ளைமாக்ஸ் போல அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ஒரு நல்ல நடன இசையை மரண இசை என்று சொல்லிவிட்டானே என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு ரசிக்கத்தகுந்த இசைக் குழுவை இவன் மூலமாக அறிந்ததற்காக அவனை "மன்னித்து" விட்டோம்.
ஆனால் உண்மையில் மேற்கத்திய ராக் இசையில் இவ்வாறான தற்கொலையைத் தூண்டும் இசையும் பாடல்களும் ஏகத்துக்கு இருக்கவே செய்கின்றன. குறிப்பாக ஹெவி மெட்டல் வகையச் சேர்ந்த இசைக் குழுக்கள் இந்த விஷயத்தில் கை தேர்ந்தவைகள். ஜூடஸ் ப்ரீஸ்ட், ப்ளேக் சேபத், Ozzy Osborne என சில இசைக்குழுக்கள் கேட்பவரை தன் கதையை உடனே முடித்துக்"கொல்ல" வைக்கும் வசிய சக்தி கொண்டவை என்ற குற்றச் சாட்டு மேற்குலகில் நிறைய உண்டு. மேலும் Devil Worship எனப்படும் சாத்தான் வழிபாடும் இந்த இசைக் குழுக்களிடம் உண்டு. மரணத்தைப் போற்றும் பல கவிதைகளை மனதுக்குள் விதைக்கும் வீரியப் பாடல்களாகப் பாடுவதும் இதற்கு ஒரு காரணம். நம்ப முடியாத தகவலாக தி ஈகிள்ஸ் இசைக்குழுவின் மிக சிறப்பான புகழ்பெற்ற பாடலான ஹோட்டல் கலபோர்நியா கூட இந்த சாத்தான் வழிபாட்டுப் பாடலே என்று சொல்லப்படுகிறது. Back Masking என்று அழைக்கப்படும் மர்மமான பின்குரல் ஓசைகள் இவர்களின் இசையில் ஒலிக்கும் என்றும் அதை ஒரு விசேஷ ப்ளேயரில் (பின்பக்கமாகச் சுழலும் ரெகார்ட் ப்ளேயர்) கேட்கலாம் என்றும் கருத்து உண்டு. நான் இதை தீவிரமாக நம்பி சில கசெட்டுக்களை வாங்கிய கடைகளிலேயே திருப்பிக் கொடுத்த விநோதமும் நடந்திருக்கிறது. இருந்தும் அந்த தற்கொலைப் பாடல் உண்மைதான். அது Rezso Seress என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைஞரின் Gloomy Sunday என்ற பாடல். பலர் இதைக் கேட்டு உடனே "போய்" விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. விசித்திரமாக அந்த ரெசொ செரஸ் என்பவரே இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பாடல் ஸ்பீல்பெர்க்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்ற படத்தில் கூட சில காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும்.
இந்த சமயத்தில்தான் உலகை ஒரு கறுப்பினக் கலைஞன் தன் பக்கம் திருப்பிய அதிசய நிகழ்வு நடந்தது. அது மைக்கல் ஜேக்ஸன் என்ற புதிய அத்தியாயத்தை இசையுலகில் துவக்கியது. எங்கும் அவரைப் பற்றிய செய்தியாகவே இருக்க, அதீத எதிர்ப்பார்புகள் என்னை அவரது இசை மீது ஒரு நாட்டத்தை ஏற்படுத்தின. Thriller இசைத் தொகுப்பு வந்ததும் அதை உடனே வாங்கிக் கேட்ட போது ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற எதுவும் என்னைக் கவரவில்லை. அது மிகப் புகழ் பெற்ற Beat It. மேலும் அவரது இசை அப்போது நான் கேட்டுக்கொண்டிருந்த இசையை விட்டு ,எனது பார்வையில், வெகு கீழே இருந்தது. இசையே இல்லை என்றுதான் சொல்வேன். வெறும் மனிதக் குரல் அதுவும் பெண் குரல். பாடலைவிட அவர் கோமாளித்தனமாக ஹீ ஹீ என்று கதவுக்கடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி மாதிரி கிறீச்சிடுவது எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. இருந்தும் பீடிட் பாடல் என்னை ஊடுருவிச் சென்றது. அடிதடியான வெற்றிப் பாடல். வெறியான குரல் சீறும் இசை, துடிக்கும் தாளம் என்று அது ஒரு திடீர்மழை. சில வருடங்களுப் பிறகுதான் பீடிட் பாடலில் அதன் அடிநாதமாக பாடல் முழுதும் அதிரும் சுரீர் ரென்ற கிடார் இசை Eddie Van Halen இசைத்தது என்பதை அறிந்தேன். அந்தப் பாடலை எடி வான் ஹேலனின் கிடார் இசையின்றி கற்பனை செய்து பாருங்கள். மிகச் சாதாரணப் பாடலாகவே அது இருக்கும். இந்த வான் ஹேலன் உலகின் மிகச் சிறந்த, மிக விரைவாக கிடார் இசைப்பவர்களில் ஒருவர். Van Halen என்ற இசைக் குழுவின் And The Cradle Will Rock, Jump, Panama, I'll Wait, Why Can't This Be Love போன்ற பாடல்களைக் கேட்டால் எடியின் கிடார் வேகம் நம்மை போதை கொள்ளச் செய்யும். Twister படத்தின் இறுதியில் வரும் ஒரு மிக நீண்ட தனி கிடார் இசை இவருடையதுதான். மைக்கல் ஜேக்சனை திறமையான musician என்பதைவிட ஒரு சிறந்த performer என்று சொல்லலாம். ஆடுவார், பாடுவார், உருளுவார், புரளுவார், பின்னோக்கி நடப்பார், தொடைகளுக்கு நடுவில் அவ்வப்போது தேய்த்துக் கொள்ளுவார். இது பார்ப்பதற்கு ரசிக்கும்படி இருக்கலாம். ஆனால் இசை என்பது கண்டிப்பாக பார்த்து ரசிப்பதற்கல்ல என்பது என் திடமான எண்ணம். எம் ஜே வுக்குப் பிறகே மேற்கத்திய இசையில் இதுபோன்ற இசையைக் "கண்டு" மதிமயங்கும் புதிய மோகம் பிறந்தது என்று கூட சொல்லலாம். மேடையில் தோன்றும் இசைஞர்களை ஆராவராத்துடன் வரவேற்பதை இதில் கணக்கில் கொள்ள வேண்டாம். இருந்தும் தற்போது மேற்கத்திய இசையில் காணப்படும் அசிங்கமான மாற்றங்கள் மைக்கல் ஜேக்சனைப் பற்றிய என் ஒப்பீடுகளை சற்று சீர்செய்து விட்டதைப் போல உணர்கிறேன். ஏனென்றால் ஹிப்-பாப், ராப், டெத் மெட்டல், டீன் பாப் போன்ற சகித்துக்கொள்ள முடியாத கழிவுகளைக் காணும்போது (எங்கே கேட்பது?) இந்தக் கருமங்களுக்கு எம் ஜே எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் இப்போது எனக்கு வந்திருக்கிறது.
இன்னும் நிறையவே இருக்கிறது .ஆனால் இடம் போதாது என்று எண்ணுகிறேன். ஆகையால் ....
அடுத்து; இசை விரும்பிகள் XVIII - எல்லைகளற்ற இசைவெளி.