Saturday 12 July 2014

இசை விரும்பிகள் XIX - எழுபதுகள்: ஏகாந்தக் காற்று



      70 களில் நமது திரையிசை ஜி ராமநாதன், கே.வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்ற  மகத்தான இசைச்  சுழலின் ஆதிக்கத்தை விட்டு வெளியேறி ஒரு நவீன இசை பாரம்பரியத்தை படைக்கத் துவங்கியிருந்தது. இது நமது மரபிசையின் தொடர்ச்சியாகவும்  அதே சமயத்தில் ஒரு நவீனத்தின் துவக்கமாகவும் இருந்தது. அதாவது பச்சையிலிருந்து நிறம் மாறி  மஞ்சள் வண்ணம் தோன்றும் விதமாக   நளினமான, இயல்பான முரண்பாடில்லாத மாற்றமாக  இருந்தது. அறுபதுகளின் வசந்தம் ஓய்ந்து விட்டது  என்றாலும் After glow எனப்படும் இன்பத்தின் அனுபவத்தை அது முடிந்தபின் நாம் அசைபோடும் ஒரு ஏகாந்தத்தின் நீட்சியாகவே  எழுபதுகள் இருந்தன. 

                                     

                   எழுபதுகள்:  ஏகாந்தக் காற்று
 
       பொதுவாக தமிழ்த் திரையிசை விவாதிப்பவர்களில்   அல்லது அதைப் பற்றி எழுதுபவர்களில் பலர்  தமிழின் காவிய கானங்களைப் பற்றிச் சொல்லும் வேளையில் ஆனந்த ஐம்பதுகளையும்  அற்புதமான அறுபதுகளையும் சிலாகித்து தென்றலாக வீசிய எழுபதுகளின் மீது மவுன அஞ்சலி செலுத்துவார்கள். நல்ல இசையின்றி நம் தமிழ் சமூகம் ஒரு ஐந்து வருடங்கள் இருந்தது என்ற எண்ணத்தை விதைக்கும் இந்த மவுனம் ஒரு வழக்கமான பிழை. காலத்தால் அழியாத பல இனிமையான காவியப் பாடல்களை நாம் வேற்றுமையின்றி ரசித்தாலும் எம்ஜியார், சிவாஜி, ஜெமினி, எம் எஸ் வி, கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம், கண்ணதாசன்,வாலி  பாடல்கள் என்று பெயரிட்டு அவைகளை நாம் அலங்கரித்து அகமகிழ்ந்தாலும் எழுபதுகளின் தாலாட்டும்     சுகமான கீதங்களை வழங்கிய பல இசை மேதைகளின் சாதனைகளை giant leap போல தாண்டிச் செல்வது  என்னைப் பொருத்தவரை ஒரு  முரண்பாடான இசை ரசனை . சரியான தகவல்களில்லாத ஒரு இருண்ட பிம்மமும்,  இருந்ததை உள்ளதுபடியே பிரதியெடுக்காத   பொய்த்  தோற்றமும், சாதனைகளை வசதியாக மறந்துவிடக்கூடிய நமது பண்பாடற்ற அணுகுமுறையும் எழுபதுகளை ஒரு களப்பிரர் காலம் போல உருமாற்றிவிட்டன.

       ஆனால் உண்மையிலேயே எழுபதுகளின் திரை இசைப் பாடல்கள் எவ்வாறு இருந்தன என்று சற்று ஆராய்ந்தோமானால் நமக்கு வியப்பே  ஏற்படுகிறது. 70 -75 காலகட்டங்களை ஒரு வித சில்லறைத்தனமான அலட்சியத்துடன் பார்க்கும் அந்தப் பொது பிம்பம் உடைபடுகிறது.  ஏனென்றால் நிஜத்தில் இவ்வாறன  பொய்யுரைகளை பொடிப் பொடியாகும் பொன்னான பாடல்கள் எழுபதுகளை வழி நடத்திச் சென்றிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.  ஒன்றா இரண்டா? கணக்கில்லாமல் ஏகத்துக்கு ஏராளமான பாடல்கள் எழுபதுகளின் இசை பாணியை மிக நளினமாக செதுக்கி நமது இசைப் பாரம்பரியத்தின் நீட்சியை வேரற்றுப் போகவிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றன. மழை ஓய்ந்ததும் காற்றில் பரவி நம் மனதை நிரப்பும்  மண் வாசனை போல் இவை நம்மை தொடர்ந்து பரவசப்படுத்தி வந்திருக்கின்றன. அறுபதுகளின் அந்த ஆனந்தத்  தொடுகை தொலைந்து போகவில்லை மாறாக  தொடர்ந்தது. இதோ ஓய்ந்துவிட்டார் என்று எண்ணப்பட்ட எம் எஸ் வி எழுபதுகளை அனாசயமாக ஆட்சி செய்தார். ஒரு புதிய இசை வடிவத்தை நோக்கி நகர்ந்த  நம் தமிழ்த் திரையிசை எழுபதுகளில் மரபும் நவீனமும் ஒருங்கே கலந்த ஒரு ஆச்சர்ய அவதாரம் எடுத்தது. இந்த அரிதாரத்தின் வண்ணங்கள் அபாரமானவை. அற்புதத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்தது.

    கொஞ்சம் 1970இல் வந்த சில படங்களின் மறக்கமுடியாத பாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவோம். பட்டியலைப் படித்ததும் மேகத்தை அனைத்துக் கொண்ட உணர்வு உங்களுக்கு உண்டானால் எனக்கு மகிழ்ச்சியே.

எங்க மாமா- செல்லக் கிளிகளாம் பள்ளியிலே, என்னங்க சொல்லுங்க, எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்,(குறிப்பாக எல்லா பாடல்களுமே சிறப்பானவையே)
சி ஐ டி ஷங்கர்- நாணத்தாலே கண்கள் மெல்ல மெல்ல,
நவகிரகம்- உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது.
ராமன் எத்தனை ராமனடி- அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.(எங்கேயோ நம்மை  அழைத்துச் செல்லும் கானம். இதிலுள்ள இன்னொரு காவியப் பாடலைப் பற்றி பிறகு ஒரு பத்தி வருகிறது.)
எங்கிருந்தோ வந்தாள்- நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் ,
கண்ணன் வருவான்- பூவிலும் மெல்லிய பூங்கொடி.(மெல்லிசையின் மென்மையை இதுபோல அனுபவித்துச் சொன்ன பாடல்கள் வெகு குறைவே.)
மாணவன்- கல்யாண ராமனுக்கும், (சங்கர் கணேஷின் இசையில் டி எம் எஸின் குரலுக்கு பொருத்தமில்லாத கமலஹாசன்   குதித்து ஆடிப் பாடும் விசிலடிச்சான் குஞ்சுகளா என்ற பாடல் இதில் இருக்கிறது. இதுவே வெகு வருடங்கள் கழித்து வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்று பிரதி எடுக்கப்பட்டது.)
சொர்க்கம்- பொன் மகள் வந்தாள் (எ ஆர் ரஹ்மானின் ரீமிக்ஸ் இதன் அருகே சற்றும் நெருங்க முடியாது.), ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள், சொல்லாதே யாரும் கேட்டால்.
வியட்நாம் வீடு- உன் கண்ணில் நீர் வழிந்தால்,
வீட்டுக்கு வீடு- அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம், அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ,( அற்புதமான பாடல். 70களின் துவக்கத்தில் கல்லூரி விடுதிகளில் அதிகம் விரும்பப்பட்ட அல்லது பாடப்பட்ட பாடல் இது என்று என் உறவினர் ஒருவர் சொல்லக்கேள்வி. சாய்பாபா என்ற எம் எஸ் வி யின் குழுவில் இருந்த ஒரு கிடாரிஸ்ட் பாடிய பாடல்.இதை ஒரு நகைச்சுவைப் பாடல் என்று கருதி பலர் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்.)

      மேற்கண்ட பாடல்கள் just the tip of the iceberg வகையே. இன்னும் ஏராளமிருக்கின்றன. 71, 72 என்று ஆண்டு வாரியாக  பட்டியலிட ஆரம்பித்தால் எழுபதுகள் பற்றிய நம்முடைய  முட்டாள்தனமான கண்ணோட்டத்தை நாம் மாற்றிக்கொள்வோம்- நிச்சயமாகவே.

       எழுபதுகளின் மத்தி வரை எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரண்டு மகா ஆளுமைகளின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. இவர்களைச் சுற்றியே திரையுலகம் பெரும்பாலுமிருந்தது. இவர்களின் இரண்டு குறிப்பிட்ட படங்கள் எழுபதுகளின் குரல்களாக ஒலித்தன. முதலாவது  72இல் கே வி மகாதேவனின் இசையில் வந்த சிவாஜியின் வசந்த மாளிகை. அதன் பாடல்கள் பெருத்த வெற்றியைப் பெற்றன என்று சொல்வது ஒரு மிக சாதாரண வாக்கியமாக இருக்கும். நான் 77,78ஆம்  ஆண்டுகளில் கூட அப்பாடல்களை மிக சத்தமாக ஒலிபெருக்கிகளில் தொடர்ந்து கேட்டதுண்டு- நிறைய அலுப்புடன். எல்லா பாடல்களும் மக்களால் ரசிக்கப் பட்டாலும் தனிப் பட்டவிததில் கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ  பாடலை இப்போது நான் அதிகம் ரசிக்கிறேன். இரண்டாவது  73இல் அரசியல் தலையீட்டால் தட்டுத் தடுமாறி வெளிவந்து பின் ஒரு புலியின் வேகத்துடன் தமிழகம் முழுதும் பாய்ந்த எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் வந்த எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன். இதன் பாடல்கள்  பட்டி தொட்டி மூலை முடுக்கெங்கிலும் படையெடுத்து மக்களை பரவசப்படுத்தின. என்ன பாடல்கள்! எம் எஸ் வி யின் இசை வாழ்வில் இது ஒரு மைல் கல் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம். அவளொரு நவசர நாடகம், லில்லி மலருக்கு கொண்டாட்டம், சிரித்து வாழ வேண்டும், பச்சைக் கிளி முத்துச்சரம், பன்சாயீ, உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம், தங்கத் தோனியிலே தவழும் பெண்ணழகே, நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ எதை சேர்ப்பது எதை விடுவது? படத்தின் பாடல்கள் மட்டுமில்லாது பின்னணி இசையும் ஒரு வசீகரம்தான். இதற்கு முன்னரே தமிழில் முதன்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சிவந்தமண் படத்திலும் எம் எஸ் வி மிகச் சிறப்பான இசை அமைத்திருந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

     இங்கே கொஞ்சம் நின்றுவிட்டு அப்போது இடைவிடாது ஒலித்த மற்ற சில பிரபலமடைந்த பாடல்களைப் பார்ப்போம்.

கடலோரம் வாங்கிய காற்று புதிதாக இருந்தது நேற்று, அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்ஷாக்காரன்.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல-நினைத்ததை முடிப்பவன்.
திருவளர்ச்  செல்வியோ நான் தேடிய தலைவியோ, நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு- ராமன் தேடிய சீதை.
காதல் என்பது காவியமானால் காதாநாயகி வேண்டும், நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது, நாளை நமதே, அன்பு நானொரு மேடைப் பாடகன், என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே.
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே, -உரிமைக்குரல்.
நேரம் பௌர்னமி நேரம்- மீனவ நண்பன்.
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ, பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை. (எல்லா பாடல்களும் தேன்சுவை வழியும் மெல்லிசை கீதங்கள்)
ஒன்றே குலமென்று பாடுவோம், போய்  வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க. கே வி எம்.
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும்.
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே,  நீயும் நானுமா கண்ணா, மெழுகுவர்த்தி எரிகின்றது- கெளரவம்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று -அவன்தான் மனிதன். உள்ளதை உருக்கும் இந்த தத்துவப்  பாடலை   என் கல்லூரி நாட்களில் கேட்டபோது பாடலின் ஊடே ஓடும் துயர ரேகையும் வாழ்ந்து வீழ்ந்த மனிதனின் வேதனைச் சுவடுகளும் என்  மனதை கலைத்தன.
       தந்தை தவறு செய்தான்.
      தாயும் இடம் கொடுத்தாள் 
     வந்து பிறந்துவிட்டோம் 
     வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் 
  என்ற வரிகள் என்னுள் மின்னல் போல இறங்கின. முன்பு எப்போதோ வானொலியில் கேட்ட இப்  பாடலை தொன்னூறுகளில் ஞாபகமாக பதிவு செய்து கேட்குமளவுக்கு என் மன ஆழத்தில் இது துடித்துக் கொண்டிருந்தது.  70களின் ஏகாந்ததைச் சொல்ல இது ஒரு சிறிய துணுக்கு என்றே எண்ணுகிறேன். இன்னும் எத்தனை இருக்கின்றன ஆராய்வதற்கு.

      கீழே உள்ளவைகள்  நம் பொது சிந்தனையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள சில அபாரமாக  புனையப்பட்ட அபத்தங்கள்.

எழுபதுகள் மத்தி வரை தமிழர்கள்   தமிழ்ப் பாடல்களையே கேட்கவில்லை.
ஏனெனில் அப்போது எந்தவிதமான சிறப்பான பாடல்களுமே நம்மிடம் உருவாக்கப்படவில்லை.
இதனால் தமிழர்கள் ஹிந்தி கானங்களை  வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அன்னக்கிளி படத்திற்குப் பிறகே தமிழ் திரையிசை பொலிவடைந்தது.
அதன் பின்னரே  நாம் தமிழ்ப் பாடல்களை கேட்க ஆரம்பித்தோம்.

     இதில் சிலவற்றில் கொஞ்சமாக உண்மைகள்  இல்லாமலில்லை. அந்நியக் காற்று என்ற  ஹிந்தி இசை பற்றிய என் பதிவில் இந்த மையப் புள்ளியை  நான் சற்று தொட்டிருக்கிறேன்.(விரிவாக என்று சொல்லமாட்டேன்.) தங்களுக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரை முன் நிறுத்த வேண்டிய ஒரு  இல்லாத அவசியத்தின் மீது கட்டப்பட்டு  உண்மைக்கு எதிராக வெடித்த புனைவுகள் மேற்கூறப்பட்டவைகள். இந்த கருப்பு வண்ணம் நமது எழுபதுகளை வெளிச்சத்திற்கு வருவதிலிருந்து தடுக்கிறது என்பது என் எண்ணம்.  எழுபதுகளின் மீது படர்ந்திருக்கும் இந்தத்  தூசிகளை துடைத்துவிட்டு நோக்கினால் நமக்குக் கிடைக்கும் பிம்பம் வேறு கதையை நமக்குச் சொல்கிறது.

       பல பாடல்களைக் குறித்து இங்கே பேசினாலும் சில மறையாத கானங்களைப் பற்றி சற்று அதிகம் ஆராய்வது  அவசியமாகிறது. உதாரணமாக சுசீலாவின் அற்புதக் குரலில் நான் என் சிறு வயதில்  ஒரு இளந்தென்றல் காற்று   உரசிய உணர்வைக் கொடுத்த பாடல் ஒன்றைக்  கேட்டிருக்கிறேன். எழுபதுகளில் எல்லா வானொலி அலைவரிசைகளிலும் ஒய்யாரமாக நடைபயின்றது   அப்பாடல். அந்தப் பாடலை  நான் குறிப்பிட்டால் பலரும்   சட்டென்று "அடடா ஆமாம். இந்தப்  பாடலுக்கு இணையே இல்லை." என்று சொல்லி என்று என் கருத்தை வழிமொழிவார்கள் . இத்தனை அழுத்தமாக நான் குறிப்பிடுவது  ராமன் எத்தனை ராமனடி (1970) என்ற படத்தின்  "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்" என்ற பாடலே. இந்தப் பாடலில்தான் எத்தனை விதமான ராக வளைவுகள் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! பாடலின் அற்புதமான இசையமைப்பை தன் குரலினால் சுசீலா ஏறக்குறைய பின்னுக்கு தள்ளிவிடுகிறார். பாடலின் பிண்ணனியில் தொடர்ச்சியாக ஒலிக்கும் ரயில் ஓசையும், அற்புதமான இடையிசையும் எவ்வளவு நவீனமாக இருக்கின்றன என்ற ஆச்சர்யத்தைத் தருகின்றன. தேரில் வந்த ராஜ ராஜன் என் பக்கம் என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் தட தடக்கும் இடையிசையின் துவக்கம் ஒரு அற்புதமான மேற்கத்திய கலப்பு. கண்ணதாசனின் கவிச் சுவை கொண்ட வரிகளும், சிவாஜி என்ற அபார நடிகனின் இணையில்லாத முகபாவணைகளும், எம் எஸ் வி என்ற இசைச் சிகரத்தின் சிலிர்ப்பான இசையும், பி சுசீலா என்ற இசை இன்பமும்  இந்தப்பாடலை ஒரு விண்ணிலிருந்து வந்த கானமாக மாற்றிவிடுகின்றன. மேற்கத்திய இணைப்பை தமிழில் "இவர்தான்" செய்தார் என்று கூப்பாடு போடும் கூட்டத்தாருக்கு இந்தப் பாடல் மட்டுமல்ல இதைப் போன்ற பல எம் எஸ் வி யின் கானங்கள் கசக்கவே செய்யும்.

   பள்ளிநாட்களில் அப்போது பிரபலமாக ஒலித்துக்கொண்டிருந்த இனிமை குன்றிய  தரமில்லாத சில பாடல்களை நான் விரும்பிக்கேட்ட தினங்களில் எங்கள் வீட்டில் இசை விவாதங்களுக்கு குறைவே இருக்காது. நான் எனது வயதின் இயல்பான ஈர்ப்பின்படி  புதிய பாடல்களை பாதுகாத்துப்  பேச, என் சகோதரிகள்  பழைய பாடல்களின் இனிமையை ஏற்றுக்கொள்ளாத என் மனதில் திணித்திருக்கிறார்கள்.   அப்போது அவர்கள் மேற்கோள் காட்டி சொன்ன ஒரு பாடல் இந்த சித்திரை மாதம் பாடல். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு எதிர்பாராத தருணத்தில் இப்பாடலை கேட்க நேர்ந்த போது எம் எஸ் வி போன்ற இசை மேதைகள் நமக்கு கொடுத்திருக்கும் இசைப் புதையல்களை நாம் எவ்வளவு இலகுவாக அலட்சியம் செய்திருக்கிறோம்  என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது.

      இசைக்கு மட்டுமே நாம் முதல் முறையாக ஒரு பாடலைக் கேட்ட கணத்தின் நிகழ்வை மீண்டும் உயிர் பெறச் செய்யும் சக்தி இருக்கிறது. நம் மூளைக்குள் சிறைப்பட்டுக்கிடக்கும் பழைய ஞாபகங்களின் ஒரு குறிப்பிட்ட கதவை ஒரு பாடல் சட்டென திறந்து விடுகிறது. நாம் மீண்டும் காலத்தில்  பின்னோக்கி பயணம் செய்து மறைந்த தினங்களுக்குள் புகுந்து கொண்டு  முடிந்துவிட்ட  ஒரு சில சம்பவங்களை மறுபடியும் ருசி பார்க்கிறோம்.  சவாலே சமாளி படத்தின் சிட்டுக் குருவிக்கென கட்டுப்பாடு என்ற பாடல் எனக்கு இதை செய்யத் தவறுவதில்லை. இதே போல் இதே படத்தின் நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே பாடலும் என்னை என் பால்ய தினங்களுக்குள் அடைத்துவிடுகிறது ஒரே நொடியில். எனது தந்தையின் தோளின் மீது சாய்ந்துகொண்டு இந்தப் பாடலை வானொலியில் கேட்ட அந்த நினைவை இந்தப் பாடல் இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
 
        72இல் வந்த ஒரு படம் கண்ணா நலமா? பெற்றடுத்த உள்ளமென்றும் தெய்வம் தெய்வம் என்றொரு மனதை பிழியும் பாடல் இதில் இருக்கிறது. வானொலிகளில் இதை எத்தனை முறைகள் கேட்டிருக்கிறேன்! என்ன ஒரு காவியப் பாடல் இது! பாடலே படத்தின் கதையை நமக்குச் சொல்லிவிடும். வி குமாரின் அசாத்திய இசை மேதமையை வெளிக்கொணர்ந்த பாடல்களில் இது மிக முக்கியமானது. ஒரு குழந்தை இரு தாய்கள்  என்ற கிளாசிக் சாலமன் கதையை டி எம் எஸ் தன் மந்திரக் குரலில் மனம் உருகும் விதத்தில் பாடும்போது கேட்பவர்கள் நெஞ்சுக்குள் கண்ணீர்த் துளிகள்   நிச்சயம்.

         இதே சமயத்தில் வந்த மற்றொரு பாடலும் அப்போது மிகப் பிரபலமாக வானொலிகளில் உலா வந்த ஞாபகமிருக்கிறது. அது திக்குத் தெரியாத காட்டில் என்ற படத்தின் பூப்பூவா பறந்து போகும் பட்டுபூச்சி அக்கா என்ற குழந்தையின் குதூகலத்தை கேட்பவர்களிடத்தில் உண்டாக்கும் அருமையான பாடல். எம் எஸ் வி யின் இசை என்ன ஒரு மாயாஜாலத்தை நடத்திக்காட்டி விடுகிறது இப்பாடலில் என்ற ஆச்சரியம் இதைக் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு அடங்குவதேயில்லை. இந்தப் பாடல் ஒரு ஆழமான ஆனந்தத்தை நமக்குள் செலுத்திச் செல்லும் வலிமை கொண்டது. குழந்தைகளின் பாடலை அவர்களின் குரலில் அவர்களின் உலகத்தை அவர்களின் கண் கொண்டே  பார்க்கும் அற்புத இசையமைப்பு.

   எம் எஸ் வி தனியாக இசை அமைத்த காலங்கள் நம் தமிழிசையில்  வசந்தத்தின் நீட்சி  என்பதை உணர்த்தும் பல கானங்கள் இன்னும் நம்மிடம் துடித்தபடியே இருக்கின்றன. பிராப்தம்  படத்தில் வரும் "சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது" என்ற பாடல் ஒரு இனிமையான தாலாட்டின் சுகம் கொண்டதை யாரால் மறுக்க முடியும்? இப்பாடல் எங்கிருந்தோ வந்தாள் படத்திலுள்ள சிரிப்பினில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே பாடலின் மறுவடிவமாக இருந்தாலும் கேட்கும்போது ஒரு புதுவித இன்பத்தை தருகிறது.   இப்படியான இரட்டை கானங்களை எம் எஸ் வி யின் இசையில் வெகு அரிதாகவே கேட்கமுடியும்.

    இதற்கு முன்பே 69 இல் எம் எஸ் வி நில் கவனி காதலி படத்தில் ஒரு அபாரத்தை அரங்கேற்றியிருப்பதை இங்கே கொஞ்சம் அடிக்கோடிடுவது மிக அவசியம் என்றுனர்கிறேன். ஜில்லென்ற காற்று வந்ததோ என்ற அப்பாடல் ஒரு இசைத் தென்றல். உண்மையில் ஜில்லென்ற உணர்ச்சி  இதைக் கேட்கும்போது நம்மை உரசிச் செல்வதைப் போன்றே  தோன்றும். ரம்மியத்தை தேனுடன் குழைத்துக் கொடுத்ததைப் போல ஒரு இன்னிசை இது. இதேபோல இதே ஆண்டில் ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா, பவுர்ணமி நிலவில் பனிவிழும்  இரவில் கடற்கரை மணலில் இருப்போமா  என்ற ரம்மியமான பாடல்கள் கன்னிப்பெண் படத்தில் இடம்பெற்றிருந்தன.  மற்றொரு வைர கானம் வேதாவின் இசையில் ஒளிர்ந்தது. அது செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற பாடல். சுசீலாவின் குரல்தான் என்னென்ன மாயங்கள் நிகழ்த்துகிறது! சுசீலா என்ற இந்த இசை தேவதையின்  தேன்மதுரக் குரலில் வந்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களும் மென்மையான  சுகத்தைத்  தரக்கூடியவை. இசைக் குயில் என்ற பெயர் அவரைத் தவிர வேறு எவருக்கும் இத்தனை பொருந்தியதேயில்லை. என்னைப் பொருத்தவரை நைடிங்கேல் ஆப் இண்டியா என்ற பதம் லதா மங்கேஷ்கரை விட சுசீலாவுக்கு அதிக நெருக்கமானது.   இப்படி எண்ணுவது நான் மட்டுமாக இருக்கமாட்டேன் என்பதும் எனக்கும் தெரியும். கீழுள்ள பாடல்களின் பட்டியலைப் பார்த்தாலே என்ன ஒரு பரவசம் பீறிடுகிறது!
சொன்னது நீதானா, 
மன்னவனே அழலாமா?
அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா,
தமிழுக்கும் அமுதென்று பேர், 
மலர்கள் நனைந்தன பனியாலே, 
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன், 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி, 
நினைக்கத் தெரிந்த மனமே, 
கங்கைக்கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம், 
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே,
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
   போன்ற கானங்கள் சுசீலாவின் குரலினில் இருக்கும் இனிமையைத் தாண்டி வேறொரு உலகத்துக்கு கேட்பவரை அழைத்துச் சென்று விடுகின்றன. குரலிலேயே அவர் தாயாக சகோதரியாக தோழியாக துணைவியாக தோற்றம் கொள்கிறார். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் சுசீலாவின் குரலுக்கு இசைக் குயில் என்ற அடைமொழி மிகப் பொருத்தமானதுதான். இருந்தும் சில தலைவலி ஏற்படுத்தும் கதவுக்கடியில் சிக்கிக்கொண்ட எலி போன்று கிறீச்சிடும் சில அவஸ்தைகளை  மக்களில் சிலர் சின்னக் குயில், பெரிய குயில் என்று பெயரிட்டு அழைப்பதைப்  பார்க்கையில் இதுவெல்லாம்  நம் தமிழிசைக்கு நேர்ந்த கொடுமை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது . இந்தக் குயில் புராணம் போதாதென்று எண்பதுகளை நமது தமிழிசையின் பொற்காலம் என்று சொல்லும் ஒரு புரட்டும் இணையத்தில் அரங்கேறிவருகிறது. மக்கள் கொஞ்சம் மவுனியாக இருக்கும் பட்சத்தில் இளையராஜாவின் வருகைக்கு   முன் நம் தமிழ்நாட்டில் மக்கள் ரசனைக்குரிய பாடல்களே வரவில்லை என்று சொல்லும் அற்பத்தனமும் மோசடித்தனமும்  கூட விற்பனை செய்யப்படும் ஆபத்து நம் கதவினருகே காத்திருக்கிறது.

  செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில் கட்டிடங்களுக்கு இடையே  அவ்வப்போது பெரிய திரை கட்டி தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவது உண்டு. இரண்டாம் ஆண்டில் அப்படி நான் விடுதித் தோழர்களோடு இரவில் கூட்டமாக சேர்ந்து கும்மாள உணர்வுடன் பார்த்த ஒரு படம் காதலிக்க நேரமில்லை. ஆங்கில இசைக்குள் நான் மூழ்கிக்கிடந்த அவ்வேளையில் அந்தப் படத்தின் பாடல்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. குறிப்பாக அனுபவம் புதுமை என்ற பாடலை  கேட்டபோது வார்த்தைகளில் வடிக்க  முடியாத எதோ ஒரு வசீகரம் என் மனதை தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. மேற்கத்திய இசைக்கும் நமது பாரம்பரிய இசைக்கும் இடையே இருக்கும் தூரத்தை அப்பாடல் எத்தனை அனாசயமாக தாண்டி வந்திருக்கிறது! மேற்கத்திய பாணியில் இருந்தாலும்  இப்பாடல் நம் மண்ணுக்குரிய  இயல்பான உணர்சிகளை சற்றும் நெருடலின்றி நமக்குப் புரிய வைத்து  விடுகிறது. இன்றைக்கும் புதுமையாக ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு வியப்பே.  மேற்கத்திய இசையும் நமது மரபின் இசையும் ஒரே குரலில் ஒரு சேர ஆரத் தழுவிக் கொண்டு பிணைந்தது எம் எஸ் வி என் மகத்தான இசைஞனிடம்தான். Fusion என்ற இவ்வைகையான கானங்களை அவரைப் போன்று சிறப்பாக அமைத்தவர்கள் வெகு குறைவே.

       திரையிசை சாராத ஆன்மீகப் பாடல்களில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமாக  இவைகளில் சொல்லப்படும் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாததால் இவ்வகைப்  பாடல்களை  நான்  எட்டவிரும்பாத   தூரத்திலேயே வைத்திருக்கிறேன்.  பெருவாரியான ஆன்மீகப் பாடல்கள் ஒரே இரைச்சலாக பாடகர்கள் பெருங்குரலெடுத்து உச்ச ஸ்தானியில் பாடுவதைக் கேட்கும்போது ஒரு சலிப்பான உணர்வு வருவதை தவிர்க்கமுடிவதில்லை. ஆனால் இம்மாதிரியான மிகை  உணர்சிகளின்றி மிக நளினமாகவும் இயல்பாகவும் பாடப்பட்ட கேட்கும் போதே நம்மைத் தாலாட்டும் ஒரு கானத்தை நான் என் பள்ளிநாட்களில் கேட்டிருக்கிறேன். இன்றும் அப்பாடல் என்னை தாலாட்டத் தவறுவதில்லை. அது ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான்  என்ற மிக அருமையான பாடல். தென்றல் போன்ற குரலால் வருடும் எஸ் பி பியா அல்லது எந்த இடத்திலும் தறிகெட்டு ஓடாமல் ஒரு குழந்தையின் துயிலை கொஞ்சமும் இடைஞ்சல் செய்யாமல் மிருதுவாக ஒலிக்கும் இசையமைப்பா அல்லது அந்த துயில் கொள்ளும் ராகத்தை வார்த்தைகளிலும் இசையிலும் துல்லியமாக வடித்தெடுத்த இசைக் கோர்ப்பா? பாடலின் சிறப்பு என்று எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பம் வருகிறது. இதற்கு இசை அமைத்தது எம் எஸ் வி என்று வெகு தாமதமாகத்தான் அறிந்தேன். கண்டிப்பாக வியப்பே ஏற்படவில்லை. பின் வேறு யாரால் இவ்வாறான தேவ கானங்களைத் தர முடியும்?

     கண்ணனை தாலாட்டிய அதே எம் எஸ் வி ஞான ஒளி படத்தில் தேவனே என்னைப் பாருங்கள் என்ற பாடலில்  கிருஸ்துவ மதத்தின் விசுவாக வேர்களை  எத்தனை  அருமையாக கொண்டுவந்திருக்கிறார் என்று பாருங்கள். இதிலுள்ள மற்றொரு அபாரமான கானம் மணமேடை மலர்களுடன் தீபம் என்ற காதல் கானம். இதன் இசைகோர்ப்பும் நேர்த்தியானது.  காமம் மேலோங்கிய ஒரு  பெண்ணின் காதலை எத்தனை நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் எல்லோரும் கேட்கும் விதத்தில் முகம் சுளிக்காதவாறு எம் எஸ் வி படைத்திருக்கிறார் என்று பாருங்கள். இவருக்குப் பின் வந்தவர்களிடம் நாம் இந்த பண்பாட்டு முதிர்ச்சியை காணமுடியாது போனது ஒரு விதத்தில் தமிழிசைக்கு ஏற்பட்ட இழப்பே. இதைத் தவிர புனித அந்தோனியார் (1976) படத்தில் வரும் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் என்ற பாடல் விண்ணிலிருந்து  மண்ணில் இறங்கிய தேவ இசையின் ஒரு துளி. மேற்கத்திய தேவாலய கோரஸ் இசையையும் கர்நாடக ராகத்தையும் ஒரே புள்ளியில் இணைத்த அற்புதப் பாடல். வாணி ஜெயராமின் நளினமான குரல்  கண்ணதாசனின் எளிமையான வரிகளின் உள்ளே இருக்கும்   ஆழமான உணர்வை நமக்குள் கொண்டுவர, எம் எஸ் வி யின் மிகச் சிறப்பான இசையமைப்பு கேட்பவரை கண்மூடி அமைதி கொள்ளச் செய்துவிடுகிறது. ஆர்ப்பாட்டமான ஆன்மீகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி. Dear M.S.V. You're a legend.

    1971இல் முகம்மது பின் துக்ளக் என்ற படம்  பெருத்த சிக்கல்களைச் சந்தித்தப் பின் வெளிவந்தது. படத்தின் இயக்குனர் நடிகர் சோ இதைப் பற்றிய நினைவூட்டலில் ஒரு தகவலை வெளியிட்டார். அப்போதைய அரசியல்வாதிகள் இந்தப் படத்தை ஒடுக்குவதில் தீவிரமாக இருந்து, படம் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி வெளிவரவேண்டிய நேரத்தில் இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று ஒரு புதிய திரியை பற்ற  வைக்க, படத்தை எதிர்க்க வந்த சிலர் படத்தின் ஆரம்பத்திலேயே கை தட்டி ரசிக்கத்  துவங்கிவிட்டார்களாம். காரணம் ஒரு பாடல். அதுதான் எம் எஸ் வி பாடிய  அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை என்ற பாடல். உலகில் சமாதானத்தை கொண்டுவர இசையைத் தவிர வேறு  சக்திகளும் உபயங்களும்   நம்மிடம் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொண்ட ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த ஒரு ஆத்திகவாதி எவ்வாறு மற்ற சமயங்களின் இசைப் பாரம்பரியங்களுக்குள்  புகுந்து கொள்ளும் மந்திரத்தை கற்றார் என்ற  திகைப்பும்,  இதைத் தவிர நாத்திகம், இன்பம், காதல், மோகம், நட்பு, வேதனை, தியாகம், விரக்தி, துன்பம், தத்துவம், வேடிக்கை என பல வாழ்வியல் கூறுகளையும்  எத்தனை நேர்த்தியாக அதன் உருவங்கள்  விகாரப்படாமல் கொடுத்திருக்கிறார் என்ற வியப்பும் எம் எஸ் வி இசையோடு வரும்  இலவச (விலையில்லா?) ஆச்சர்யங்கள்.

      மீண்டும் கேட்கும்போது வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வைத் தாண்டிய சுவை கொண்ட பாடல்கள் கீழே உள்ளன. எம் எஸ் வி இசையமைக்காத பாடல்களுக்கு அதன் இசை அமைப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, மங்கையரில் மகாராணி மாங்கனிபோல் பொன்மேனி, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி -அவளுக்கென்று ஓர் மனம்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே- பாபு. மனதை நெகிழச் செய்யும் கானமிது.
எங்கே அவள் என் தேவதை-குமரிக்கோட்டம்.
ஒ மைனா ஒ மைனா- நான்கு சுவர்கள்.
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா - பொன்னூஞ்சல். இந்தப் பாடல் ஒரு அதிசயம்தான். இதைக் கேட்கும்போது தோன்றும் எண்ணங்கள் மிக ரசனையானவை. என்ன ஒரு இசை!
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே, திருமகள் தேடிவந்தாள் - இருளும் ஒளியும்   கே வி எம். வானொலியில் திருமகள் தேடிவராத நாட்களே இல்லை அப்போது.
பார்த்தேன் பார்க்காத அழகை கேட்டேன் கேட்காத இசையை,தேன் சொட்ட சொட்டச் சிரிக்கும் ஒரு திருமண வேளை - கெட்டிக்காரன். சங்கர் கணேஷ்.
அம்பிகை நேரில் வந்தாள் - இதோ எந்தன் தெய்வம்.
தன்னந்தனியாக  நான் வந்த போது - சங்கமம். இதில் என்னமோ செய்யுங்கள் தள்ளியே நில்லுங்கள் என்று சுசீலா பாடும் அழகே தனி.
உலகில் இரண்டு கிளிகள்- குலமா குணமா? கே வி எம்.
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ - உத்தரவின்றி உள்ளே வா. காவிய கானம். மென்மையின் இசை இலக்கணம் இது என்று தாராளமாக சொல்லலாம். இதில் ஒலிக்கும் கிடாரின் இசைதான் எத்தனை மயக்கத்தை தருகிறது!
மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது, இன்று வந்த இந்த மயக்கம்- (பொருத்தமில்லாத நடிகர்கள் கொண்ட அருமையான பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இன்னொன்று அடுத்து வருகிறது.) -காசேதான் கடவுளடா.
காதலின் பொன்வீதியில்- பூக்காரி. என்ன நேர்த்தியான காதல் கானம். காட்சியை காணாது பாடலைக் கேட்பது உத்தமம்.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமன்றோ - பிள்ளையோ பிள்ளை. காண சகிக்காத காட்சியமைப்பு இந்த நல்ல பாடலை ரசிக்கவிடாமல் செய்துவிடுகிறது.

         மிக சமீபத்தில்  பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே என்றொரு அருமையான பாடலைக்  கேட்க நேர்ந்தது.  பல வருடங்களுக்கு முன்னே இதைக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது இனந்தெரியாத இன்பம் அதிலிருப்பதை கண்டுகொண்டேன். இது 1973இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அலைகள் என்ற படத்தின் பாடல். பாடகர் ஜெயச்சந்திரன் முதல் முறையாக தமிழில் பாடிய இந்த சிறப்பான பாடலை அமைத்தவர் எம் எஸ்  வி.  இது போன்று உயிர்ப்பான நம் மரபின் ராகங்களை இசையின் மீது வண்ணங்கள் போல தெளித்து ஒரு நளினமான இசையோவியத்தை படைப்பதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். இதற்கு சான்றுகளாக பல பாடல்கள் இருக்கின்றன. எண்பதுகள் வரை எம் எஸ் வி யின் இசைத் தென்றல்  வீசிக்கொண்டிருந்ததின் அடையாளமாக அவை  ஆர்ப்பாட்டம் விளம்பரங்களின்றி மவுனமாக நிற்கின்றன நம்மிடையே. வாடிய வசந்தம் போலில்லாமல் எழுபதுகளின் இனிமையை இசையாக வடித்த  கானங்கள் பல இன்னமும் பலரால் அறியப்படாமலே இருக்கின்றன. விளைவு  எழுபதுகளின் வசீகரம் சற்று திசை மாறிப் போனது போல ஒரு தோற்றம் இப்போது உருவாகியிருக்கிறது.

    இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ளது எழுபதுகளின் மத்திவரை உள்ள பாடல்களில் சில மட்டுமே. 75ஐ தாண்டிய பாடல்களை அவ்வளவாக இங்கு நான் தொட்டுச் செல்லவில்லை. என் அடுத்த பதிவில் அது  தொடரும்.  எழுபதுகளை இசை வறட்சி என்று வர்ணிக்கும் இசையறிவு பக்குவப்படாதவர்களின் பிழையான கருத்தை நாம் முற்றிலும் உடைத்துப் போடுவது அவசியம். வி குமார், ஷங்கர் கணேஷ், ஆர்.தேவராஜன், ஷ்யாம், எம் பி ஸ்ரீநிவாசன், விஜய பாஸ்கர் போன்றவர்களின் பாடல்கள் குறித்து நான் எழுதியுள்ள பதிவுகளையும் எழுபதுகள் பற்றிய இந்த சிறிய அறிமுகத்தையும் படித்த பின்னும் உங்களுக்கு எழுபதுகள் ஒரு இசை இருட்டு என்ற எண்ணம் மாறாமல் இருந்தால் உங்களின் இசையறிவும் இசை ரசனையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்பதன் கவலை கொள்ளச் செய்யும் அறிகுறி.


அடுத்து: இசை விரும்பிகள் XX --- வாடாத வசந்தம்.





66 comments:

  1. Excellent Songs, thanks for reminding.

    ReplyDelete
  2. மலரும் நினைவுகளாக மனதில் மணிமகுடம் சூட்டிய மகத்தான தமிழ் பாடல்களை
    எழுபதுகளின்(ஏ)காந்தக் காற்றில் எனது மனத்துகள்கள் ஒட்டிக் கொண்டு ஓ போடுகிறது.
    புதுவை வேலு

    ReplyDelete
  3. எழுபதுகளில் வளர்ந்தவன் என்கிற முறையில் இந்த நினைவூட்டலும் அற்புதமான பாடல்களை அதன் தனித்துவங்களை எழுதி வரும் தங்களிக்கு மனமார்ந்த நன்றி. உங்களின் குறிப்புகளை வைத்துக்கொண்டு எல்லா பாடல்களையும் தரவிறக்கி மீண்டும் கேட்க ஆவலாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. வாருங்கள் கிருபாகரன்,
    போன பதிவில் நீங்கள் கொடுத்திருந்த உங்களின் யு ட்யூப் லிங்கை கண்டேன். நன்றி.

    70இன் பாடல்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன? எல்லாம் ராகத்தின் ராஜ்ஜியங்கள்.

    ReplyDelete
  5. வாவ் காரிகன்,
    அடிச்சு பின்னுறீங்க போங்க,
    70இல் தமிழன் இந்திப் பாட்டு கேட்டான் என்று பொத்தாம்பொதுவாக சொல்வார்கள். நீங்களோ சாட்டையால் அடித்து அப்படியில்லை என்கிறீர்கள். எத்தனை அருமையான பாட்டுகள் அப்போது வந்தன என்று நினைத்துப் பார்க்கும் படி இருக்கிறது உங்கள் எழுத்து. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. வாருங்கள் புதுவை வேலு,
    கருத்திற்கு நன்றி.
    ஏகாந்தம் என்பதே ஒரு காந்த சக்தி கொண்டதுதானே.

    ReplyDelete
  7. வாருங்கள் கவிப்ரியன்,
    பாராட்டுக்கு நன்றி.
    இது போன்ற நினைவூட்டல்கள் நம்மில் சிலருக்கு தேவைப்படும் ஒரு மருந்து. இல்லாவிட்டால் கதையை மாற்றி சொல்லி பழமையை நக்கல் பேசி துரத்திவிடுவார்கள். எழுபதுகளின் இனிமை முடிந்துபோய்விட்ட ஒரு கனவு. நினைத்துப் பார்ப்பதிலாவது மீண்டும் அந்த சுகத்தை அடையலாம் என்ற நப்பாசையாவது கொள்வோமே?

    ReplyDelete
  8. கிட்டத்தட்ட இணையத்தில் முன்வைக்கப்படுகின்ற முட்டாள்தனமான கற்பிதங்களைச் சரிவர அடையாளப்படுத்திவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இந்த வரிகளின் சாராம்சம் முக்கியமானது..................
    \\71, 72 என்று ஆண்டு வாரியாக பட்டியலிட ஆரம்பித்தால் எழுபதுகள் பற்றிய நம்முடைய முட்டாள்தனமான கண்ணோட்டத்தை நாம் மாற்றிக்கொள்வோம்- நிச்சயமாகவே.\\


    தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரே தியாகராஜ பாகவதர்தான் என்றும் அவரது படங்கள் எத்தனை நாட்கள் ஓடின என்றும் அவை எதற்காக ஓடின என்றும் சொல்லப்படும் தரவுகள் தமிழ்ப்பத்திரிகைகளெங்கும் நிறைந்திருக்கின்றன. அதன்பிறகு டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி, டிஎம்எஸ், சுசீலா, கண்ணதாசன், எம்எஸ்வி என்று தமிழ்ப்பாடல்களுக்கான அடையாளங்கள் குன்றுகள் போலக்கூட அல்ல, மலைகளைப் போல் நின்றிருக்கின்றன.....இவர்களின் பாடல்கள் எல்லாம் எந்த லிஸ்டில் சேருவதாம்?
    \\எழுபதுகள் மத்தி வரை தமிழர்கள் தமிழ்ப் பாடல்களையே கேட்கவில்லை.
    ஏனெனில் அப்போது எந்தவிதமான சிறப்பான பாடல்களுமே நம்மிடம் உருவாக்கப்படவில்லை.
    இதனால் தமிழர்கள் ஹிந்தி கானங்களை வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
    அன்னக்கிளி படத்திற்குப் பிறகே தமிழ் திரையிசை பொலிவடைந்தது.
    அதன் பின்னரே நாம் தமிழ்ப் பாடல்களை கேட்க ஆரம்பித்தோம்.\\


    \\தங்களுக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரை முன் நிறுத்த வேண்டிய ஒரு இல்லாத அவசியத்தின் மீது கட்டப்பட்டு உண்மைக்கு எதிராக வெடித்த புனைவுகள் மேற்கூறப்பட்டவைகள். இந்த கருப்பு வண்ணம் நமது எழுபதுகளை வெளிச்சத்திற்கு வருவதிலிருந்து தடுக்கிறது என்பது என் எண்ணம்.\\
    அவர்களின் நோக்கம் என்ன என்பதை அவர்களின் குரல்வளையையே பிடித்துச் சொல்லும் வார்த்தைகள் இவை..........

    \\எம் எஸ் வி போன்ற இசை மேதைகள் நமக்கு கொடுத்திருக்கும் இசைப் புதையல்களை நாம் எவ்வளவு இலகுவாக அலட்சியம் செய்திருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது.\\
    இந்தக் குற்ற உணர்ச்சி சிலருக்கும் எழுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சீக்கிரமே எழுந்துவிடும்.

    \\ சுசீலாவின் குரல்தான் என்னென்ன மாயங்கள் நிகழ்த்துகிறது! சுசீலா என்ற இந்த இசை தேவதையின் தேன்மதுரக் குரலில் வந்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களும் மென்மையான சுகத்தைத் தரக்கூடியவை. இசைக் குயில் என்ற பெயர் அவரைத் தவிர வேறு எவருக்கும் இத்தனை பொருந்தியதேயில்லை.\\
    ஏறக்குறைய இதே கருத்தைக் கவிஞர் வைரமுத்துவும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்............

    \\இந்தக் குயில் புராணம் போதாதென்று எண்பதுகளை நமது தமிழிசையின் பொற்காலம் என்று சொல்லும் ஒரு புரட்டும் இணையத்தில் அரங்கேறிவருகிறது. மக்கள் கொஞ்சம் மவுனியாக இருக்கும் பட்சத்தில் இளையராஜாவின் வருகைக்கு முன் நம் தமிழ்நாட்டில் மக்கள் ரசனைக்குரிய பாடல்களே வரவில்லை என்று சொல்லும் அற்பத்தனமும் மோசடித்தனமும் கூட விற்பனை செய்யப்படும் ஆபத்து நம் கதவினருகே காத்திருக்கிறது.\\
    இதற்காகத்தானே நீங்களும் நானும் நம்மோடு இன்னும் சிலரும் சேர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த அவலம் இணையவெளியில் மட்டும்தான். பத்திரிகைத் துறையிலோ, டிவி விஷயங்களிலோ இல்லை. அவர்களெல்லாம் சரியான சிந்தனைகளுடன்தாம் இருக்கிறார்கள். எழுபதுக்கு முந்தைய பாடல்களை 'மட்டுமே' ஒளிபரப்ப ஏழெட்டு டிவி சேனல்களே இருக்கின்றன.
    இணையத்தில் மட்டும்தான் இப்படி ஒரு மோசடித்தனம் கட்டமைக்கப்படுகிறது. இது இப்போதே ஓரளவு தகர்ந்து ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் எழுதுபவர்கள் கூடவே எம்எஸ்வியின் பெயரையும் சேர்த்தே எழுதுகிறார்கள். ஒரு இசையமைப்பாளரைத் தங்கள் தளத்தின் முகப்பில் போட்டுக்கொண்டிருந்த ஒரு இணைய எழுத்தாளர் சத்தமில்லாமல் அந்தப் படத்தை எடுத்துவிட்டார்.
    சிம்பனி அமைத்தவர், ஆங்கிலேயனுக்கு இசைக் கற்பித்தவர் என்றெல்லாம் யாரும் அடாவடியாக எழுதுவதில்லை இப்போது.(அவர் காலத்துக்குப் பின் சிம்பனியை வெளியிடுவதாகத் தீர்மானித்திருக்கிறார்களாம். அதனால்தான் இப்போது வெளியிடவில்லை என்றொரு தகவல் எனக்குக் கிடைத்திருக்கிறது - என்றொருவர் காமெடி பண்ணியிருந்தார்)
    உங்களின் மொத்தத் தொகுப்பின் நோக்கமென்னவோ அதனை மிகவும் சரியான திசையில் சொல்லியிருக்கும் கட்டுரை இது.
    வழக்கம்போல் உங்களுக்கேயுரிய நேர்த்தியான வார்த்தைகளுடன் அழகிய முறையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாருங்கள் அனானி,

    நாம் ஹிந்திப் பாட்டு கேட்டதென்னமோ உண்மைதான். ஆனால் அதைமட்டுமே ரசித்துக் கேட்டுக்கொண்டே இருந்ததுபோல சிலர் அதை மிகைப் படுத்துவது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது. அப்போதுதானே எங்க ஆள் வந்து ஹிந்தியை துரத்தினார் என்று வீரம் காட்ட முடியும்?

    சொல்லப் போனால் 76 க்குப்பிறகே நம் தமிழ் இசையின் தரம் கீழிறங்கியது. இது உடனே நடக்கவில்லை என்றாலும் மெதுவாக இந்த சீரழிவு தொடங்கி எண்பதுகளின் ஆரம்பத்திலேயே நல்ல இசைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. எல்லாம் ஒரு இசை மேதையின் கைங்கர்யம். அவர் என்ன செய்வார்? அவருக்கு வருவதைத்தானே அவர் கொடுக்க முடியும்?

    ReplyDelete
  10. .........உங்களின் இசையறிவும் இசை ரசனையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்பதன் கவலை கொள்ளச் செய்யும் அறிகுறி."

    உங்களின் பதிவின் கடைசி வரியில் நச்சென்று ஒரு பஞ்ச் வைத்துவிடுகிறீர்கள். சிலருடைய இசை ரசனை icu விலேயே அடைபட்டுக்கிடக்கிறது.

    தன்ராஜ்

    ReplyDelete
  11. வணக்கம் காரிகன் அவர்களே,
    ஒரு அருமையான 70களின் தமிழ் திரை பாட்டு ஆய்வு கட்டுரை படித்தது போல் உணர்த்தேன்.
    ஆழமான தகவல்கள், அருமையான தொகுப்புகள் மிகவும் அசதலான பதிவு.
    மலரும் நினைவுகள்.
    பாராட்டுகள்

    ReplyDelete
  12. அமுதவன் அவர்களே,

    முதலில் உங்கள் கருத்துக்கு எனது நன்றி.

    எண்ணிலடங்கா பொன்னான பாடல்கள் நம்மிடம் உள்ளன-- சிலர் சொல்வதைப் போல "அவர்" வருவதற்கு முன்பே. அதை பட்டியலிட்டால் இதெல்லாம் போர் பழைய பாட்டு என்று காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அரைச்ச சந்தனம் அல்லது நிலா அது வானத்து மேலே என்று எதோ ஒரு அர்த்தமற்ற கண்றாவியை கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதுசரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. சிலருக்கு விருந்து. சிலருக்கு டீ போண்டா பஜ்ஜி போதும்.

    எம் எஸ் வி யை சிலர் சேர்த்துக்கொள்வது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறைதான் என்றாலுமே அது ஒரு சம்பிரதாயமான செயல் என்றே எண்ணுகிறேன். எதோ போனல் போகிறது என்று அவர்கள் இதைச் செய்யலாம். எம் எஸ் வி என்று சொல்லிவிட்டு இருந்தாலும் அவரை விட எங்க ஆள் என்று அடுத்த வரியை ஆரம்பிப்பார்கள். நிறைய கேட்டாயிற்று.

    எத்தனை அற்புதமான பாடல்களை எழுபதுகள் நமக்குக் கொடுத்திருக்கின்றன.அவைகளை வேர்பிடித்து அடையாளம் காண்பது மிக அவசியம். அடுத்த பதிவில் இன்னும் பல இனிமைகளை பற்றி பேச இருக்கிறேன்.

    உங்கள் தளத்தில் எப்போது புதிய பதிவை காணலாம்?

    ReplyDelete
  13. அவர்கள் ஹெட்போனை மாட்டிக்கொண்டு எந்தப் பாடலையாவது கேட்டுக்கொண்டு போகட்டும், எதை வேண்டுமானாலும் ரசித்துக்கொண்டு போகட்டும். 'உன்னுடைய ரசனையை, உன்னுடைய ரசனை இது என்று சொல்லிக்கொண்டு போ! வரலாற்றுச் சுவடுகளாய்ப் பதிந்துபோயிருக்கும் சாதனைகளையும் செய்திகளையும் மாற்றிச்சொல்ல உனக்கு உரிமை இல்லை என்பதுதான் நமது கருத்து.

    \\எம் எஸ் வி யை சிலர் சேர்த்துக்கொள்வது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறைதான் என்றாலுமே அது ஒரு சம்பிரதாயமான செயல் என்றே எண்ணுகிறேன். எதோ போனல் போகிறது என்று அவர்கள் இதைச் செய்யலாம். எம் எஸ் வி என்று சொல்லிவிட்டு இருந்தாலும் அவரை விட எங்க ஆள் என்று அடுத்த வரியை ஆரம்பிப்பார்கள். \\
    இதனை அவர்கள் சம்பிரதாயத்துக்காகச் செய்கிறார்கள் என்று சொல்லவரவில்லை. வேறுவழியில்லாமல் நம்முடைய பரப்புரைகளுக்கு பதில் சொல்லமுடியாமல் இந்த அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதைத்தான் சுட்ட விரும்புகிறேன். 'இருந்தாலும் எங்க ஆள்' என்று ஆரம்பித்து என்னத்தையாவது சொல்லிக்கொண்டு போகட்டும். காலத்தால் எது நிற்குமோ அதுதான் அழியாமல் நிற்கும்.

    உங்களுடைய அடுத்த பதிவு வரட்டும்.

    ஒரு சில காரணங்களுக்காக, நேரம் ஒதுக்க முடியாததனால் புதிய பதிவுகள் எழுத முடியவில்லை. உலகக் கால்பந்தாட்டப் போட்டி பற்றிய பதிவு ஒன்று இரண்டொரு நாட்களில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  14. வணக்கம் காரிகன்,
    எப்போதும் முழுதும் உடனே படித்துப் படித்த உடனே பின்னுட்டம் இடும் பழக்கம் உள்ள எனக்கு இந்த 'ஏகாந்தக் காற்று' மனதில் பல நினைவுகளைப் புரட்டிப் போட்டு விட்டது, முழுவதும் படித்த பிறகு என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  15. வாருங்கள் தன்ராஜ்,

    "சிலருடைய இசை ரசனை icu விலேயே அடைபட்டுக்கிடக்கிறது."

    இதுகூட ஒரு பஞ்ச்தானே. உண்மைதான்.

    ReplyDelete
  16. வாருங்கள் சத்தியா, (சரியாக சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்)

    உங்களின் பாராட்டுக்கு நன்றி. சிறப்பான பாடல்களை நாம் மறக்காமல் இருப்பது அவசியம் என்பதால் இந்தப் பதிவை எழுதினேன். நீங்கள் இதையே எதோ ஆய்வுக் கட்டுரை என்று சொல்லி என்னை அதிர வைக்கிறீர்கள். மலரும் நினைவுகளை கொண்டுவருவதில் இசைக்கு இணையே இல்லை.

    ReplyDelete
  17. வாருங்கள் சேகர்,

    நீண்ட நாட்களாக ஆளையே காணவில்லையே என்று பார்த்தேன். கருத்துக்கு நன்றி. உங்கள் மனதைப் புரட்டிப் போட்ட அனுபவத்தை சற்று விவரமாக அடுத்த பின்னூட்டத்தில் விரைவில் எழுதுங்கள்.

    ReplyDelete
  18. ஒரு சில காரணங்களுக்காக, நேரம் ஒதுக்க முடியாததனால் புதிய பதிவுகள் எழுத முடியவில்லை. உலகக் கால்பந்தாட்டப் போட்டி பற்றிய பதிவு ஒன்று இரண்டொரு நாட்களில் பதிவிடுகிறேன்.

    அமுதவன் அவர்களே,

    உலக கால்பந்து பற்றிய பதிவா? அடடா காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
    காணுது மனது ஓ ஹோ!
    'உங்கள் பதிவை பார்த்தவுடன்' எங்கும் இன்ப வெள்ளம்.....ஹா இங்கே அந்தச் சொர்க்கம் ............ என் உணர்வுகளை இந்தப் பாடல் வரிகள் சொல்கிறது.

    எனக்காக இந்தப் பாடலை ஒருமுறை கேட்பதின் மூலம் என் மனதில் உள்ள பின்னூட்டத்தை உணருங்கள். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கேட்டேன். அருமையான பாடல். உங்கள் கருத்தை ஒரு இனிமையான பாடல் மூலம் வெளிப்படுத்துவது ஒரு புதுமையே.

      Delete
  20. மலரும் நினைவிக்கும் ஆய்வு கட்டுரைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
    மலரும் நினைவுகள் ஒரு எல்லைக்குள் வரையறுக்க வாய்ப்புகள் அதிகம்.
    உங்கள் கட்டுரையில் நினைவுகள், குறிப்புகள், ஒப்பிடுதல், காலநிலை போன்ற காரணிகள் இருந்தன.
    உங்கள் பதிலுக்கு நன்றி. உங்கள் அடுத்த கட்டுரையை காண ஆவல்.

    sattia

    ReplyDelete

  21. வணக்கம்!

    சொல்விருப்ப நன்வலையில் சொக்கும் மனங்கொண்டேன்!
    பல்விருப்பம் பாடிப் பறந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கவிஞர் பாரதிதாசன் அவர்களே,
      வார்த்தை விருப்பத்தை சொல் விருப்பமாக்கிவிட்டீர்கள் தமிழின் மீது கொண்டுள்ள காதலால். அதுவும் நன்றே.

      Delete
  22. காரிகன்,

    கலைஞர்களின் சாதனையை அவர்களின் படைப்புகளின் எண்ணிக்கையை வைத்தே அளவிடும் " அறிவின்மையே " இந்த பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் ஆதங்கப்பட்டிருப்பதற்கான காரணம் ! நான் அடிக்கடி குறிப்பிடும் தனிமனித வழிப்பாட்டு கலாச்சாரத்தின் காரணமாய் " வியாபார உத்தி " தெரிந்த சாதனையாளர்களைமட்டுமே ( அல்லது சாதனையாளர்களாய் நாம் பிம்பமேற்படித்தி வைத்திருப்பவர்களை ! ) முன்னிறுத்தி, மற்றவர்களை மறைத்தாலும் பரவாயில்லை ! புதைத்தே விடுகிறோம் !

    கவனித்துபார்த்தால் இந்த " தனிமனித ஆராதனை " ஒரு காலகட்டத்தில் ஆராதிக்கப்படுபவரையே குப்புறத் தள்ளிவிடும் !

    ஒரு காலகட்டத்தின் சிறந்த ஒரே ஒரு அல்லது ஒன்றிரண்டு இசையமைப்பாளார்களை மட்டுமே சிலாகித்து அவரை போல் வருமா என வியப்பார்கள்... ஒரு கட்டத்தில் அவரின் monopoly காரணமாய் அந்த பாணி இசையே வெறுக்கும் நிலை வரும்... அந்த கட்டத்தில் வேறுபல இசையமைப்பாளர்கள் புறப்படுவார்கள்... அவர்களில் ஒருவரை சிறந்தவராய் தேர்ந்தெடுத்து, அவரின் இசையும் வெறுத்து... இது காலங்காலமாய் தமிழ் திரையுலகில் நடந்துவரும் கொடுமை ! இதற்கு எல்லாம் தெரிந்த ஊடகங்களும் துணைபோவதுதான் வேடிக்கை !

    நீங்கள் குறிப்பிட்ட " களப்பிரர் காலம் " எழுபதுகளில் மட்டுமல்ல, தொன்னூறுகளிலும் உண்டு ! " முதலாம் களப்பிரர் காலத்தில் (!) வெற்றிக்கொடி நாட்டியவர் இளையராஜா என்றால் இரண்டாம் களப்பிரர் காலமான (!) தொன்னூறுகளின் மத்தியில் வென்றவர் ஏ ஆர் ரகுமான் ! ( ஆனால் மூத்தவருக்கும் இளையவருக்கும் சில வித்யாசங்கள் உண்டுதான் ! )

    " ஆட்சி மாற்றம் " ஸ்திரமாய் அமைவதற்கு தேவையான காலகட்டத்தின் giant leap இசையை போலத்தான் தாண்டிவிடுகிறோம் !

    ReplyDelete
  23. ... " இதோ ஓய்ந்துவிட்டார் என்று எண்ணப்பட்ட எம் எஸ் வி எழுபதுகளை அனாசயமாக ஆட்சி செய்தார். "

    இதுதான் தனிமனித துதியின் ஆபத்தாய் நான் குறிப்பிட்டது ! " வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை " என ஒரு சொலவடை உண்டு ! ஒருவரை தூக்கினாலும் தலைக்கு மேலே வைத்து கொண்டு ஆடுவோம் ! கீழே போட்டுவிட்டாலோ அவ்வளவுதான் ! நம்மை பொறுத்தவரை அவர் மீன்டும் தேவைப்படமாட்டார் !

    அபப்டித்தான் " அற்புதத்தின் அடுத்த அத்தியாயம் " கண்டுக்கொள்ளாமலேயே விட்டுவிட்டோம் அல்லது " நல்லாருக்கா ? அப்ப அவருதான் ! ! " என்ற மாயையில் மறந்துவிட்டோம் என்பது என் எண்ணம் !

    நீங்கள் குறிப்பிட்ட அந்தப்பாடல் பிடிக்கும்,இதையும் கேளுங்கள் என்றெல்லாம் இந்த பின்னூட்டத்தில் சேர்க்ககூடாது என தான் ஆரம்பிதேன், ஆனால்...

    " ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் "
    " தேவனே என்னைப் பாருங்கள் "
    " அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை "

    முதல் பாடலை பற்றி படித்துக்கொண்டிருக்கும்போதே மற்ற இரண்டு பாடல்களும் என நினைவுக்கு வந்த்துவிட்டன !

    " உலகில் சமாதானத்தை கொண்டுவர இசையைத் தவிர வேறு சக்திகளும் உபயங்களும் நம்மிடம் இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. "

    நிச்சயமாக வேறு உபாயங்கள் இல்லை காரிகன் !

    ஒரு சின்ன உதாரணம் ஞாபகம் வருகிறது, மதங்களை விடுங்கள் ! நமது அண்டை நாடான பாகிஸ்த்தானை எடுத்துக்கொள்ளுங்கள்... இரு நாடுகளின் கிரிக்கெட் போட்டிகளைகூட போராக பாவிப்போம் ! நாம் தோற்றாலும் அவர்கள் ஜெயிக்க கூடாது என இரு பக்கமும் வேண்டுவோம் ! அப்படிப்பட்ட பாகிஸ்த்தானிலிருந்து என்பதுகளின் இறுதியில் ( என்று ஞாபகம் ) கிளம்பிய " ஹவா ஹவா " என்ற பாடல் இந்தியா முழுவதையும் ஆட்டுவித்தது ! அதேபோல இன்று வரைக்கும் இந்திய ‍ஹிந்தி பாடல்களுக்கு அவர்களும் அடிமை !

    எம் எஸ் வி பற்றிய உங்களின் ஆச்சரியமே இதுவரையிலும் யாரும் குறிப்பிடாதது !

    அவரை பற்றி குறிப்பிடவேண்டிய மற்றொரு முக்கிய செய்தி, அவர் சிலரைபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடன் வேலை செய்த இசைக்கலைஞரின் வாத்திய உத்திகளை " இரவல் " வாங்கி தன் பாணியாய் சேர்த்துக்கொள்ளவில்லை ! மேலும் அவர் சிலரைபோல " வியாபார உத்திகளால் " நிலைத்திருக்கவில்லை ! முதலாவது திறமை என்றால் அடுத்ததாக அவரது தொழில் பக்தி மற்றும் அந்த காலகட்டத்தின் இருபெரும் நடிப்பு ஜாம்பவான்கள் அவ‌ர்மீதுகொண்டிருந்த உண்மையான நட்பு !

    " காமம் மேலோங்கிய ஒரு பெண்ணின் காதலை எத்தனை நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் எல்லோரும் கேட்கும் விதத்தில் முகம் சுளிக்காதவாறு எம் எஸ் வி படைத்திருக்கிறார் என்று பாருங்கள். "

    பின்னர் இந்த பண்பாடு மறைந்து " கூச்சலே " காம உணார்வாய் இசைக்கப்பட்டது அசிங்கமான சோகம். மேலை நாடுகளில் கூட இந்தவித " கூச்சல்கள் " மூன்றாம்தர வயதுக்கு வந்தோர் படங்களில் மட்டுமே சாத்தியம் !

    காரிகன்,
    பெரும்பான்மை ஊடகங்கள், இசை மற்றும் திரை விமர்சகர்கள் கூட சொல்லத்துணியாத, ( அல்லது விரும்பாத ) மறைக்கப்பட்ட இசை புறக்கணிப்புகளை மனதில் தைக்கும் வகையில் வெளிப்படுத்தும் உங்களின் பதிவுகள் வலைப்பூவோடு நின்றுவிடக்கூடாது ! ஒரு அளவுக்கு பின்னர் நூலாகவும் உருப்பெற வேண்டும் ! இது என் அன்பு கட்டளையும்கூட !
    நன்றி
    சாமானியன்


    ReplyDelete
  24. திரு சத்தியா,

    உங்கள் பதில் நன்று. அதற்கு என் நன்றிகள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இது ஒரு ஆய்வுக் கட்டுரை போலதான் என்று தோன்றுகிறது. நீங்கள் என் எழுத்தை பகுத்துப் பார்க்கும் விதம் நன்றாக இருந்தது. கூடிய விரைவில் இதன் அடுத்த பகுதி வர இருக்கிறது இன்னும் பல ஈர்ப்பான கானங்களைப் பற்றிய விபரத்துடன். தொடர்ந்து படிப்பதற்கு நன்றி. மீண்டும் பார்க்கலாம்.

    ReplyDelete
  25. வாருங்கள் சாம்,

    நீங்கள் கண்டிப்பாக மிக ஆழமான பின்னூட்டத்துடன்தான் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். வீண் போகவில்லை. முதலில் நன்றியை சொல்லிக்கொள்கிறேன் உங்களுக்கு. இரண்டு மூன்று வரிகளில் உங்களுக்கு பதில் சொல்லிவிடமுடியாது என்று நினைக்கிறேன்.

    தனி மனித வழிபாடு நம்மிடமுள்ள ஒரு ஆரோக்கியமற்ற குணாதிசியம்(!). எம் ஜி ஆர், சிவாஜி என்று ஆரம்பித்து இதன் ரேகைகள் சென்ற திசைகள் தமிழ்த் திரைக்கு எந்த பயனும் செய்யவில்லை என்பது என் எண்ணம்.

    இசை என்று வரும்போது எனக்குத் தெரிந்து எண்பதுகளுக்கு முன் இம்மாதிரியான ஒருவரை வழிபடும் வழக்கம் அவ்வளவாக இல்லை. எம் எஸ் வி காலத்தில் கே வி எம், சங்கர் கணேஷ், வி.குமார், ஜி கே வெங்கடேஷ் என பலர் இருந்தார்கள். அவர்களுக்குரிய இடமும் இருந்தது. அதேசமயம் எம் எஸ் வி யை ஒரு ஆதார சக்தியாக பார்க்கும் போக்கும் கொஞ்சம் இருந்தது.மேலும் எம் எஸ் வி தான் இசையமைக்கும் எல்லா படங்களிலும் தரமான பாடல்களையே கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு விதத்தில் வேதா, வி குமார் போன்றவர்களின் இசை மேதமையை நாம் எம் எஸ் வி யின் பெயரால் புறக்கணித்துவிட்டோம் என்பதுகூட உண்மைதான். இதற்கு எம் எஸ் வி யை பொறுப்பாக முடியாது.அது நம்முடைய பிழை. தொடர்ந்து வந்த மச்சானப் பாத்தீங்களா மோகத்தில் நாம் வி குமாரை துரத்தியே விட்டோம். ஒரு நல்ல இசை அனுபவத்தின் நீட்சியை இதனால் இழந்தோம்.

    இளையராஜாவும் ரஹ்மானும் அந்தந்த காலகட்டத்தின் இசை நாயகர்களாக வடிவமைக்கப்பட்டவர்கள் என்ற உங்கள் கருத்தை நான் மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்கிறேன். அதுதான் உண்மை. ஊடகங்களின் பரப்புரை அதிக சக்தி கொண்டது. மற்றபடி அவர்கள் இத்தனை புகழுரைகளுக்கும் ஏற்றவர்கள்தானா என்பது விவாதத்திற்குரியது. இது என் தனிப்பட்ட கருத்து. இதை நான் விவரிக்க துவங்கினால் என் எழுத்து வேறு வண்ணம் பூசிக்கொள்ளும். எனவே ஒரு முற்றுப்புள்ளி.

    தொடரும்......

    ReplyDelete
  26. மதங்கள், மொழிகள், இனங்கள் இவற்றை விட இசை ஒன்றே நம்மை இணைக்கக்கூடியது என்று திடமாக நம்புவன் நான். சரியாக அதை விவரித்துள்ளீர்கள் சாம். பாராட்டுக்கள்.

    எம் எஸ் வியின் ஆன்மீக இசைத் தொகுப்புகளும் திரைப் படங்களில் அவர் அமைத்துள்ள பல சமயம் சார்ந்த பாடல்களும் தனித்தன்மை வாய்ந்தவை. நாட்டுப்பற்றை அலங்காரமின்றி அற்புதமாக சொல்லும் பாரத விலாஸ் பாடலும் மிகச் சிறப்பானது. எம் எஸ் வி பற்றி நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் உண்மையானவை. தரமில்லாத கண்றாவிகளையும் சாக்கடைகளையும் அவர் பாடலாக வடித்ததே கிடையாது. ஒன்றிரண்டு அவ்வாறு இருந்தாலுமே அவைகளை அவர் டிரெண்ட் செட்டர் பாணியாக அமைத்ததில்லை.

    காமத்தை பெண்கள் முகம் சுளிக்கும் படி கடைவிரித்த புண்ணியவான் யார் என்று தமிழகத்துக்கு நன்றாகவே தெரியும். எம் எஸ் வி போன்ற இசை மேதைகள் கட்டிக் காத்துவந்த இசைக் கோட்டையை மூன்றாந்தர வரிகளுடன் நாலாந்தர இசையுடன் செங்கல் செங்கலாக உடைத்து ஒரு புதிய பாணியை உருவாகியது யார் என்பதும் வெளிப்படை. நீங்களே இதை மிக சரியாக உணர்ந்துள்ளீர்கள்.

    ---பின்னர் இந்த பண்பாடு மறைந்து " கூச்சலே " காம உணார்வாய் இசைக்கப்பட்டது அசிங்கமான சோகம். மேலை நாடுகளில் கூட இந்தவித " கூச்சல்கள் " மூன்றாம்தர வயதுக்கு வந்தோர் படங்களில் மட்டுமே சாத்தியம் !----

    இதைத்தான் நான் என் வீழ்ந்த இசையில் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

    நான் எழுதும் சில தகவல்கள் பெரும்பான்மை ஊடகங்கள் சொல்லத் துணியாதவை என்பதைவிட சொல்ல விரும்பாதவை என்பதே பொருத்தம். இசையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒருவனால் மட்டுமே எந்தவித சார்புமின்றி நியாயமாக எழுத முடியும் என்பது என் கருத்து. என் எழுத்தை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என நீங்கள் விரும்புவது நானே எண்ணாதது. அட அதைக் கூட செய்யலாமே என்ற எண்ணம் சிறிய அளவில் தோன்றினாலும் அந்த சாத்தியக்கூறுகள் அதிகமில்லை.

    நீங்களும் தற்போது அதிக அளவில் படிக்கப்படுகிறீர்கள் என்பது உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களிலிருந்து நன்றாக தெரிகிறது. இது ஒரு மகிழ்ச்சியான மாற்றம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. காரிகன் சார்

    நல்லா இருக்கீங்களா? ஏகாந்த காற்று அப்படை ஒன்றும் காந்தம் மாதிரி ஈர்க்கவில்லையே.. ஏன்? ஏற்கனவே போட்ட பதிவுகளில் சொன்னதையேதான் இப்பவும் அறைச்சிருக்கீங்க . பழைய மாவை மறுபடி போட்டு ஆட்டி இருக்கீங்க. வழக்கம்போல சிலரை திருப்தி படுத்துவதற்காக 76 க்குப் பிறகு உருவான இசைப் பிரளயங்களை அபத்தம் என்பது போல் மூடி மறைக்கிறீங்க. நீங்க நல்ல எழுத்தாளர் . சந்தேகமில்லை. ஆனால் எழுதுவது எல்லாம் சரியானதுதானா என்பது கலந்தாலோசிக்க வேண்டிய விஷயம் !

    எம். எஸ்.வி ஒரு இசை மேதை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் 70 க்குப் பிறகுதான் அவருடைய சரிவு ஆரம்பம் ஆக ஆரம்பித்தது . போக போக சரிவு அதிகமானது. புதியவரின் வருகை அவரை பின்னுக்குத் தள்ளியது. இந்த உண்மையை மறைத்து இனிப்பு தடவிய மாத்திரையை குழந்தைக்கு கொடுக்கும் ஏமாற்று யுக்தியாக எல்லோருக்கும் கொடுக்கும் உங்களின் பாணியே தனிதான். ஆமாஞ்சாமி ஆசாமிகள் நாலு பேரு வேண்டுமென்றால் 'அப்படி போடு சபாசு ' என்று அதுதான் உண்மை என்று கருதிக் கொள்ளலாம். ஆனால் மக்கள் எல்லாம் மாக்கள் இல்லை. அவர்களின் ரசனை வெறும் காகித பூக்கள் இல்லை. 75 க்குப் பிறகு ஏற்றிவிட்ட ஏணியிலிருந்து இறக்கி விட்டார்களே ..ஏன் என்று ஒரு பதிவு போடா முடியுமா உங்களால்!?

    75 க்குப் பிறகு ஒரு புதிய இசை அமைப்பாளரை மக்கள் தேர்ந்தெடுத்ததின் பின்னணி என்ன? எம்.எஸ்.வியை ஓரங்கட்டியதின் உண்மை என்ன? இதற்கெல்லாம் விடை தெரிந்தும் கண்படாம் கட்டிய குதிரை போல முயல்வது அபத்தமாக படவில்லையா? இசை அறிவு பக்குவப்படாதவர்கள் மக்கள் அல்ல . இல்லாததை இருந்தது போல் காட்டுவதும் இருந்ததை இல்லாதது போல காட்டுவதும் உங்களின் எல்லா பதிவுகளிலும் நானும் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நீங்களும் பக்குவப்படவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது . நிஜம் பேசுங்கள்.. உங்களின் நிழல் பேசுகிறது காரிகன் !

    ReplyDelete
  28. காரிகன் சார்,
    70களின் காலத்தை வார்த்தைகளால் மறுபடி வரவழைத்து விட்டர்கள். சபாஷ். மேலே எதோ ஒன்று எதையோ கொட்டிவிட்டுப் போயிருக்கிறது. தூர தள்ளிவிடுங்கள். கற்பூர வாசனை தெரியாத சில ஜென்மங்கள் எதையாவது சொல்லும்.

    ReplyDelete
  29. ஹலோ பரத்

    கற்பூர வாசனை கழுதைக்கு தெரியாது . உங்களுக்கு தெரிகிறது . சந்தோசம் . ஆனால் எதை கற்பூரம் என்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை . காற்றில் கரைந்து காணாமல் போவதுதான் கற்பூரம் . கரையும்வரை வாசனை இருக்கும் . காரிகன் சொன்ன பல பாடல்கள் கற்பூரம்தான்! நான் எதையோ கொட்டவில்லை . மயக்கத்தில் இருக்கும் சிலரை தெளிய வைக்க தண்ணீர் தெளித்தேன் .

    ReplyDelete
  30. வாருங்கள் சால்ஸ்,

    உங்களின் ப்ரொபைல் படம் அழகாக இருக்கிறது. உங்கள் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றிக்கொண்டு விட்டீர்கள். அடையாளங்கள் மாறிவிட்டன. ஆனால் மற்ற எதிலும் மாற்றமில்லை. அதே நையாண்டி.அதே புலம்பல்.அதே வக்கிரம். அதே வசையாடல்.

    இந்தப் பதிவு உங்களை காந்தம் போல ஈர்க்கவில்லை என்பது எனக்கொன்றும் வியப்பாகவே இல்லை. தெரிந்ததுதானே. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது என்ற காவியப் பாடலை சிலாகித்து எழுதியிருந்தால் ஒருவேளை உங்களுக்கு என் எழுத்து புதுமையாகத் தோன்றலாம்.

    முதலில் நீங்கள் இந்தப் பதிவை சரியாகவே உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. நான் 75 ஆம் வருடத்துடன் நின்றுவிட்டேன். ஒன்றிரண்டு பாடல்கள் அந்த வருடத் தாண்டியதாக இருக்கலாம். இதன் தொடர்ச்சியில்தான் எழுபதுகளின் இறுதிகள் வருகின்றன. அதற்குள் நீங்களே முடிவு செய்துகொண்டு எதையோ எதிர்த்துப் பேசியே ஆகவேண்டும் என்பதுபோல கண்ணா பின்னாவென்று உளறுவது வேடிக்கைதான்.
    "எம் எஸ் வி ஒரு மேதைதான் ஆனாலும் அவரைவிட எங்க ஆள்"... என்று நான் அமுதவனுக்கு சொல்லிய வார்த்தைக்கு நீங்கள் ஒரு உதாரணம். நான் கூட இவ்வளவு விரைவில் என் எழுத்தை நீங்கள் உறுதி செய்வீர்கள் என்றார் எண்ணவேயில்லை. நன்றி.

    எம் எஸ் வி க்குப் பிறகு தமிழர்கள் ஒரு புதிய இசை அமைப்பாளரை தேர்ந்தெடுத்தது ஏனென்று உளவியல் ரீதியாக நான் ஒரு பதிவு எழுதவேண்டும் என்ற உங்களின் வேண்டுகோளை நான் பரிசீலிக்கிறேன். அதற்கு முன் நீங்களே அதை உங்களின் அழகான எழுத்தில் பதிவாக வெளியிட்டால் நலமாக இருக்கும் என்பது என் எண்ணம். வசதி எப்படி? மற்றவர்களுக்கு யோசனை சொல்வது சுலபம்தான்.

    எம் எஸ் வி - இளையராஜா என்ற போட்டி எப்போதும் எழவே இல்லை. மேலும் 76க்குப் பிறகு எம் எஸ் வி உடனே காணாமல் போகவுமில்லை -ரஹ்மானுக்குப் பிறகு இளையராஜாவின் விலாசம் தொலைந்துபோனது மாதிரி. எனவே உங்களின் மதியீனமான கருத்து ஒரு இருண்ட நகைச்சுவை. என்னைப் பற்றியும் என் பதிவுகளைப் பற்றியும் எதிர் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கும் அதே வேளையில் என் தளத்தில் பின்னூட்டமிடும் நண்பர்களை சற்று பண்பாடில்லாத வகையில் விமர்சனம் செய்வது உங்களின் தரத்தை காட்டுகிறது. அதைத் தவிர்ப்பது நன்று.

    உங்களுக்கு பதிலை தயார் செய்துகொண்டிருக்கும் போதே திரு பரத் வந்துவிட,அவருக்கு நீங்கள் கூறியிருக்கும் கருத்து அடுத்த முட்டாள்தனம். கற்பூரத்தை கேவலமாக குறிப்பிடும் முதல் நபர் நீங்களாகத்தான் இருக்க முடியும். எம் எஸ் வி யின் இசை கற்பூரம்தான். வேண்டுமென்றால் உங்களின் அபிமானவரின் இசை வேறு வாசனை கொண்டதாக இருக்கலாம்.

    கடைசியாக நீண்ட நாள் கழித்து வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  31. ஹலோ காரிகன்

    நான் பரத்தை வசை பாடவில்லை . கூர்ந்து நோக்குங்கள் . என்னைத்தான் அவர் வசைபாடி இருக்கிறார் . நான் நாகரீகமாகத்தான் அவருக்கு பதில் சொல்லி இருக்கிறேன் . அவர் தேவலாம் ..நீங்கள் அதை விட மோசமாக வசை பாடுகிறீர்கள். முட்டாள்தனம் , மதியீனம் என்ற அநாகரீக வார்த்தைகள் நீங்கள் சொல்வது ! உங்களைப் போலவே உங்களின் பின்னூட்டக்காரர்களும் இருப்பது வியப்பில்லை . ஒரே குட்டையில்... வேண்டாம் நான் நாகரீகமானவன் .

    ReplyDelete
    Replies
    1. அது நன்றாகவே தெரிகிறது,....

      Delete
  32. சால்ஸ்,

    விடாது கருப்பு போல சரமாரியாக வசைகளை வீசுகிறீர்கள். நான் குறிப்பிட்டது பரத் வருவதற்கு முன்பே நீங்கள் என் பதிவை நல்ல விதமாக விமர்சித்தவர்களை மட்டமாக சொன்னதைத்தான்.

    ----ஆமாஞ்சாமி ஆசாமிகள் நாலு பேரு வேண்டுமென்றால் 'அப்படி போடு சபாசு ' என்று அதுதான் உண்மை என்று கருதிக் கொள்ளலாம். ---

    இதுதான் நான் உங்கள் மீது வைத்த விமர்சனம். மற்றபடி முட்டாள்தனம் மதியீனம் என்பதெல்லாம் நாகரீகமில்லாத வசைபாடல் என்று நான் எண்ணவில்லை. உங்களைப் போன்றவர்களுக்காகவே மீண்டும் 80களைப் பற்றிய மற்றொரு பதிவு எழுத உத்தேசித்துள்ளேன். எனவே உங்களின் எல்லா கோபத்தையும் இப்போதே வீணடித்து விடவேண்டாம்.

    ReplyDelete
  33. பரத்,

    சால்ஸ் வந்ததும் அவருக்கு பதில் சொல்வதில் உங்களை மறந்தே போனேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    70களின் இனிமையை இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவேதான் இதன் தொடர்ச்சியை எழுதிக்கொண்டிருகிறேன்.

    தவிர, கற்பூரம் பற்றி சால்ஸ்ஸுக்கு பதில் சொல்லியாகிவிட்டது. அவர் அடுத்த வாசனை திரவியத்தை எடுத்துக்கொண்டு வர கொஞ்சம் நேரமாகலாம்.

    ReplyDelete
  34. காரிகன் சாரே

    /// கானங்கள் சுசீலாவின் குரலினில் இருக்கும் இனிமையைத் தாண்டி வேறொரு உலகத்துக்கு கேட்பவரை அழைத்துச் சென்று விடுகின்றன. குரலிலேயே அவர் தாயாக சகோதரியாக தோழியாக துணைவியாக தோற்றம் கொள்கிறார். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் சுசீலாவின் குரலுக்கு இசைக் குயில் என்ற அடைமொழி மிகப் பொருத்தமானதுதான். இருந்தும் சில தலைவலி ஏற்படுத்தும் கதவுக்கடியில் சிக்கிக்கொண்ட எலி போன்று கிறீச்சிடும் சில அவஸ்தைகளை மக்களில் சிலர் சின்னக் குயில், பெரிய குயில் என்று பெயரிட்டு அழைப்பதைப் பார்க்கையில் இதுவெல்லாம் நம் தமிழிசைக்கு நேர்ந்த கொடுமை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது . இந்தக் குயில் புராணம் போதாதென்று எண்பதுகளை நமது தமிழிசையின் பொற்காலம் என்று சொல்லும் ஒரு புரட்டும் இணையத்தில் அரங்கேறிவருகிறது. ///

    மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் உங்களுடையவை . சுசீலாவை 'வெள்ளைக் குயில்' , கானக் குயில்' என்று எல்லோரும் அழைத்தது எவ்வளவு பொருத்தமோ அது போலவே ' சின்னக் குயில்' என்று சித்ராவை அழைப்பதும் மிகவும் பொருத்தமே! தேனினிமையிலும் அருமையான குரலுக்கு சொந்தக்காரர்தான்! தமிழ் உச்சரிப்பிலும் தெளிவை தரும் குரல் அவருடையது . பொத்தாம் பொதுவாக எலி போன்ற கிறீச்சிடும் குரல் என்று நீங்கள் சொல்லி இருப்பது ' தனக்கு பிடித்தவரைத் தவிர மற்றவர் எல்லாம் ஞான சூனியங்கள் ' என்ற ஒரு
    கர்வப் போக்கும் பேதமையும் காட்டும் திமிவாதக் குரலாய் படுகிறது . உங்களின் எல்லா பதிவுகளிலும் இப்படிப்பட்ட விசயங்களை நான் அப்படிதான் பார்க்கிறேன் .

    எழுபதுகளை தமிழிசையின் பொற்காலமாக நீங்கள் கருதிக் கொள்ளும் பட்சத்தில் எண்பதுகளை இனிய கானங்கள் கனிந்த காலமாக மற்ற ரசிகர்கள் நினைத்துக் கொள்வதில் உரிமையும் உண்டு ; கௌரவமான கர்வமும் உண்டு . பொய்யும் புரட்டும் அரங்கேறுவதாக வீண் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் . பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாகிப் போனதாக கற்பனை செய்யுமாம் . நீங்கள் கண்ணை மூடி கொண்டு 70 களை மட்டும் இனிமை என்கிறீர்கள் .

    நாங்கள் 'ருக்குமணி வண்டி வருது ' கேட்போமாம் ...இவரு 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' கேட்பாராம். என்ன ஒரு வெட்டி அலட்டல்!? நீங்க கோபுர ரசனை ...நாங்க குப்பை ரசனையா .? நாங்க பத்து பாட்டு எடுத்து விடவா? 'சுமார் மூஞ்சி குமாரு' மாதிரி பாட்டுக்கள் எத்தனையோ 70 களில் வந்திருப்பதை சுட்டிக் காட்டினால் உங்க இதை எங்க கொண்டுபோய் வைப்பீர்கள்? ( முகத்தைச் சொன்னேன்)






    ReplyDelete
  35. சால்ஸ்,

    விடமாட்டீர்கள் போல. நல்லது.

    சுசீலாவை கானக் குயில் என்று அழைப்பதை யாரும் மறுத்துப் பேசவே முடியாது. அது ஒரு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் நிஜம். ஆனால் சித்ரா என்ற பாடகியை சின்னக் குயில் என்று சொல்வது பலர் ஏற்றுக்கொள்ளாதது. எதோ ஒரு படத்தில் கூ கூ சின்ன குயில் பாடும் பட்டு கேக்குதா குக்கூ குக்கூ என்று அவர் எளிமையாக பாடியதை பிடித்துக் கொண்டு உடனே வந்துவிட்டார் சின்னக் குயில் என்று போஸ்டர் வைத்து வரவேற்பதைப் போல கூவுவது நகைச்சுவை. குயிலைப் பற்றி பாடிவிட்டால் உடனே அவர் குயில் குரலுக்கு சொந்தக்காரராகி விடுவாரா? என்ன அபத்தம். மேலும் சித்ராவின் குரல் செயற்கையான இனிமை கொண்டது. அவர் குரலில் ஹீ ஹீ என்று ஒலிக்கும் சத்தங்களே அதிகமாக கேட்கும். இளையராஜா அறிமுகம் செய்ததற்காக ராஜா ரசிகர்கள் அவரை சுசீலாவை மிஞ்ச எங்க ஆள் ஒருத்தரை கொண்டுவந்து விட்டார் என்று மார் தட்டும் ஒரு மலிவான அரசியலுக்கான பட்டமே இந்த சின்னக்குயில். மற்றபடி சுசீலாவின் அருகே இந்த எலிக்குரல் பாடகி சற்றும் நெருங்க முடியாது. அவர் பாடிய முதல் தமிழ்ப் பாடலான பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது பாடலே ஒரு தலைவலி. எதோ வந்தார். பாடினார் என்ற அளவில்தான் அவரைஅடையாளம் காண முடியும். என்ன செய்வது? அப்போது இளயராஜா இசைத்ததுதான் இசை. அவர் அறிமுகம் செய்தவர்கள்தான் பாடகர்கள். இல்லாவிட்டால் மனோ, ஜென்சி, சித்ரா, ஷைலஜா போன்ற இடைச் செருகல்கள் தோன்றியே இருக்காது. நம் இசையும் உருப்பட்டிருக்கும். இன்னும் நான் பேசினால் உங்கள் கொதிப்பு அதிகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதால் இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.

    பூனை, இருட்டு போன்ற பாட்டிகளின் பழமொழியை படித்தால் நகைச்சுவையை மீறிய எரிச்சல் வருகிறது. வேற ஏதாவது புதியதாக யோசியுங்கள்.

    ----எழுபதுகளை தமிழிசையின் பொற்காலமாக நீங்கள் கருதிக் கொள்ளும் பட்சத்தில்-----

    எழுபதுகளை நான் தமிழிசையின் பொற்காலம் என்று எங்கும் சொல்லவில்லை அப்படி கருத்தும் கொள்ளவில்லை. 60களே நம் தமிழ்த் திரையின் பொற்காலம் என்பதே எனது திடமான எண்ணம். 70கள் அந்த பொற்காலத்தின் நீட்சி என்றே நினைக்கிறேன். தொடர்ந்த வசந்தம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

    -----எண்பதுகளை இனிய கானங்கள் கனிந்த காலமாக மற்ற ரசிகர்கள் நினைத்துக் கொள்வதில் உரிமையும் உண்டு ; ----

    தாராளமாக உண்டு. ஆனால் நான் எண்பதுகளை எப்படிப் பார்க்கிறேன் என்பதையும் நீங்கள் குற்றம் சொல்ல முடியாது. எண்பதுகள் பற்றிய அடுத்த பதிவுக்கு நான் சூட்டியிருக்கும் தலைப்பைப் படித்தால் உங்களுக்கு ஜிவ் வென்று ரத்தம் சூடாகலாம். அடுத்த "வாடாத வசந்தம்" பதிவின் இறுதியில் அந்த தலைப்பை நீங்கள் காணலாம். தலைப்பே என் பதிவின் சாரம்சத்தை சொல்லிவிடும்.

    ---நாங்கள் 'ருக்குமணி வண்டி வருது ' கேட்போமாம் ...இவரு 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' கேட்பாராம். என்ன ஒரு வெட்டி அலட்டல்!?---

    இந்த ஒப்பீடு ராஜாவின் ரசிகனான உங்களுக்கே எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். உண்மையில் சித்தரை மாதம் பௌர்ணமி நேரம் பாடலின் இனிமையை தொடும் பாடல் இளையராஜாவிடம் இல்லை என்றே எண்ணுகிறேன். அவர் பாணி தனி. அது ஒரு விதம்.

    ---நீங்க கோபுர ரசனை ...நாங்க குப்பை ரசனையா .?---

    இதை நான் சொல்லவில்லை. நீங்களாகவே சுய அறிவித்தல் செய்துகொள்கிறீர்கள். அந்த பெருந்தன்மைக்கு நன்றி. உங்களுக்கே இப்படி தோன்றுவது எனக்கு வியப்பாக இருக்கிறது.

    70களில் வந்த அனைத்துப் பாடல்களும் சிறந்தவை என்று நான் குறிப்பிடவில்லை. அது உண்மையும் கிடையாது. இளைய தலைமுறையினருக்கு பிடிக்காத பாடல்கள் எழுபதுகளில் நிறையவே இருந்தன. ஆனால் அவை தரமில்லாதவை என்று முத்திரை குத்த முடியாது. இதே விதி எண்பதுகளுக்கும் பொருந்தும்.ஆனால் இதை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், இல்லையா நண்பரே?

    ReplyDelete
  36. காரிகன் அய்யா

    கடைசியாக சின்ன குயில் சித்ராவை கேவலப்படுத்தி விட்டீர்கள். சந்தோசமா? ஏனென்றால் ராஜா அறிமுகப்படுத்தினார் . அதனால் அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை . சரியா?
    ராஜா ரசிகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல . எம். எஸ். வி அறிமுகம் செய்த எல்லா குரல்களையும் ஏற்றுக்கொண்டவர்கள்.. இன்னும் ரசித்துக்கொண்டு இருப்பவர்கள் . ஆனால் உங்களிடம் ஞாயம் எதிர் பார்க்க முடியாது . செக்கு மாடுகளை உழுவதற்கு கூட்டி வந்தால் ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றிதான் வரும் . ( அய்யகோ ...பாட்டிகளின் பழமொழியை மறுபடி சொல்லி விட்டேன் . உங்களுக்கு எரிச்சல் எரிச்சலாய் வருமே . உடம்புக்கு தண்ணீர் விட்டுட்டு வந்து உட்காருங்கோ)

    கோபுர ரசனை .. குப்பை ரசனை என்று சுய அறிவித்தல் செய்யவில்லை . நான் கோபுரத்திலிருந்து உங்கள் குப்பையை பார்க்கிறேன். அவ்வளவுதான் ! இக்கரைக்கு அக்கறை ( வேணாம் ..விட்டுடு .. சாருக்கு பழமொழி கேட்டால் ..மறுபடியும் எரியும் ..அவ்வ் - நன்றி வவ்வால் சார் )

    70 களில் ஏகாந்த காற்றை விட ஏமாந்த காற்றுதான் அதிகம் என்பதால் மக்கள் ஹிந்தி பக்கம் போனார்கள் என்ற உண்மையை சோற்றில் மறைத்த ...(போச்சுடா! திரும்ப திரும்ப சொல்ற நீ ...திரும்ப திரும்ப சொல்ற ... அண்ணனுக்கு பழமொழி கேட்டா எரியும்ல! ) பூசணிக்காயாய் மாற்ற முயலாதீர்கள் . பேசாமல் ஏமாந்த காற்று என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுத ஆரம்..பிக்கலாமே! எல்லோரும் படிச்சிட்டு பிச்சிக்கிலாமே ! 80 கள் பற்றி இனி நீங்கள் எழுதப் போகும் பதிவு எனக்கு எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தாது . ஏனென்றால் அதில் எல்லாம் இருக்கும் - உண்மையைத் தவிர ! தெரிந்ததுதானே!

    ReplyDelete
  37. charles6 August 2013 21:40
    ஹிந்தி பாடல்கள் எத்தனைதான் நமது தமிழர்களால் விரும்பி கேட்கப்பட்டிருக்கும்!? நூறு படங்களின் பாடல்களை சொல்ல முடியுமா ? முடியாது . நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களை தவிர ஒரு சில பாடல்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம் . அவ்வளவுதான் .அதற்காக தமிழன் தன் சுயத்தையே இழந்து அந்நிய மொழி இசைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டான் என்பது போல் எழுதி இருக்கிறீர்கள் . அது சற்று அபத்தமானது--

    சார்லஸ்21 July 2014 10:20
    70 களில் ஏகாந்த காற்றை விட ஏமாந்த காற்றுதான் அதிகம் என்பதால் மக்கள் ஹிந்தி பக்கம் போனார்கள் என்ற உண்மையை சோற்றில் மறைத்த ...(போச்சுடா! திரும்ப திரும்ப சொல்ற நீ ...திரும்ப திரும்ப சொல்ற ... அண்ணனுக்கு பழமொழி கேட்டா எரியும்ல! ) பூசணிக்காயாய் மாற்ற முயலாதீர்கள் .

    திரு சால்ஸ்,
    இது இரண்டும் நீங்கள் எழுதியதுதான். அடுத்த பின்னூட்டத்தில் இதில் எது உண்மை என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள். குழப்பமாக இருக்கிறது.

    ஏகாந்தக் காற்று ஏமாந்த காற்று என்ற உங்களின் பகடியை ரசித்தேன். ஆனால் அதை எண்பதுகளுக்கு சொல்வதே பொருத்தம்.

    ---80 கள் பற்றி இனி நீங்கள் எழுதப் போகும் பதிவு எனக்கு எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தாது . ஏனென்றால் அதில் எல்லாம் இருக்கும் - உண்மையைத் தவிர ! தெரிந்ததுதானே!----

    உங்களுக்குப் பிடிக்காதது உண்மை இல்லை என்று ஒரு விதமாக சமாளிக்கிறீர்கள். புரிகிறது.

    ReplyDelete
  38. வாருங்கள் ரிம்போச்சே,

    திரு ராஜநாயகத்தின் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் நான். உங்களின் லிங்க் கிற்கு நன்றி.

    70களின் நம் ஹிந்தி மோகம் நம் பழைய தலைமுறை நடிகர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அலுப்பின் பேரில் உண்டானது ராஜநாயகம் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பது போலவே. இதையேதான் நான் அந்நியக் காற்று என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு 70களின் இறுதியில்தான் கமல் ரஜினி என்ற புதிய பாணி நடிகர்கள் சாத்தியமானார்கள். அதுவரை விக் போட்டு நடித்த 50களின் கதாநாயகர்கள்தான் நம்மை அவர்கள் இஷ்டப்படி துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். எம் ஜி யார், சிவாஜி போன்ற பெரிய பழைய தலைமுறை நடிகர்களுக்கே பெரும்பாலும் இசை அமைத்ததால்தான் எம் எஸ் வி யின் பல சிறப்பான பாடல்கள் 70களில் ஒரு சார்பு நிலையை அடைந்தன. இதுவே இளையராஜாவுக்கு ஒரு புதிய ரசிகர் கூட்டத்தை உடனே அமைத்துக் கொடுத்தது. அவர் அதை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார்.

    ReplyDelete
  39. ரிம்போச்சே28 July 2014 at 09:51

    //தமிழ் ரசிகர்களுக்கு 70களின் இறுதியில்தான் கமல் ரஜினி என்ற புதிய பாணி நடிகர்கள் சாத்தியமானார்கள். அதுவரை விக் போட்டு நடித்த 50களின் கதாநாயகர்கள்தான் நம்மை அவர்கள் இஷ்டப்படி துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். எம் ஜி யார், சிவாஜி போன்ற பெரிய பழைய தலைமுறை நடிகர்களுக்கே பெரும்பாலும் இசை அமைத்ததால்தான் எம் எஸ் வி யின் பல சிறப்பான பாடல்கள் 70களில் ஒரு சார்பு நிலையை அடைந்தன.//

    அடடே, 90களின் இறுதியில் இளையராஜா மார்க்கெட் போனதுக்கும் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்றவர்களுக்கு வயதானதால் இருக்குமோ? யோசிக்க வேண்டிய விசயந்தான்.

    போலவே 90களில் களமிறங்கிய விஜய்க்கும், அஜீத்துக்கும் வயதாகிக் கொண்டே வருவதால் ரகுமானுக்கும் சீக்கிரம் மார்க்கெட் அவுட்டாகி விடுமே என்ற கவலை வருகிறது.

    ReplyDelete
  40. ரிம்போச்சே,

    எம் எஸ் வியின் காலத்தில் நடிகர்களை வைத்தே பாடல்கள் அறியப்பட்டன என்ற கருத்து உண்டு. இதை நான் முழுமையாக ஏற்காவிட்டாலும் அதில் சிறிதளவாவது உண்மை இருப்பதாகவே நினைக்கிறேன். ராஜா ரசிகர்கள் சொல்வது ராஜா வந்த பிறகே தமிழர்கள் இசையை ஒரு தனி ஆளுமையாகப் பார்த்தார்கள் என்று. இளையராஜாவே இசை அமைப்பாளர்களுக்கு ஒரு புதிய அந்தஸ்தை ஏற்படுத்தினார் என்று வகை வகையாக அவர்கள் சொல்வதை நான் அறிந்திருக்கிறேன். எனவே என் கருத்தும் உங்களின் பகடியும் ஒரே அளவில் வைத்துப் பார்க்க முடியாதது.

    இசைக்கு முகவரி கொடுத்து பல நடிகர்களை உருவாகிய (மோகன் ராமராஜன் முரளி ராஜ் கிரண் வகையறாக்கள் )அல்லது வெற்றி பெறச் செய்த (கமல் ரஜினி வகையறாக்கள்) மிக வலிமையான ஒரு இசை அமைப்பாளரான இளையராஜா 90களில் தொலைந்து போனதின் காரணம் ரஹ்மானின் வரவு என்ற உண்மை இங்கே எல்லோருக்கும் தெரியும். ரஜினியும் கமலும் 90களில் இளையராஜாவை நோக்கிப் போகாமல் வேறு இசை அமைப்பாளர்களை நாடியது ஏன் என்று கொஞ்சம் அலசுங்கள்.ராஜாவின் இசை பாணி ஒரே இடத்தில தேங்கி கிடந்ததே அவருடைய வீழ்ச்சியின் ஆரம்பம். இந்த சமயத்தில் வந்த ரஹ்மான் புதிய நவீன இசை அனுபவத்தை கொடுத்ததும் இளையராஜா தன் இடத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீங்கள் என் கருத்தை வேடிக்கை செய்து உங்கள் மன வேதனையை தேற்றிக்கொள்கிறீர்கள். சரி அது உங்கள் விருப்பம். அப்படியாவது ராஜா ரசிக மணிகள் கொஞ்சம் ஆறுதல் கொள்வது அவர்களுக்கு அவசியம்தான்.

    ரஹ்மான் இளையராஜா போல தனி ராஜாங்கம் செய்துகொண்டிருக்கவில்லை. அவர் காலத்தில்தான் பலப் பல புதிய இசை அமைப்பாளர்கள் தமிழ்த் திரைக்கே வர முடிந்தது. மேலும் ரஹ்மானின் வீச்சு இப்போது குறைந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்.மேலே செல்பவர்கள் ஒரு காலத்தில் கீழே இறங்கி வரவேண்டியது காலத்தின் மாற்ற முடியாத விதி. இதில் எம் எஸ் வி என்ன? இளையராஜா என்ன? ரஹ்மான் என்ன?

    ReplyDelete
  41. காரிகன் அவர்களே

    எல்லோருக்கும் வீழ்ச்சி உண்டு என்பது ஊரறிந்த விஷயம். ரகுமான் இசையில் வீழ்ச்சி மட்டுமல்ல ...வறட்சியும் ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஓடும் குதிரைதான் - இளையராஜா போலவே ! இதில் நடிகர்களுக்கு வயதானால் என்ன .. ஆகாவிட்டால் என்ன !? மொட்ட தலை முழங்கால் முடிச்சு போடாதீர்கள். இசைக்கு வயசாகாது .

    ஹிந்தி பாடல்களை விரும்பி கேட்க ஆரம்பித்திருந்த மக்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்த பெருமை இளையராஜாவைச் சாரும் என்றால் மறுபடியும் ஹிந்தி பாடல்களின் சாயலையும் சாயத்தையும் பூசி தமிழிசை கெடுத்து மக்களின் ரசனையையும் கெடுத்த பெருமை ரகுமானைச் சாரும். இதில் மாற்று கருத்தே இல்லை . அதை ஏற்க மனசு வராதே !

    ReplyDelete
  42. சார்லஸ் அண்ணே,

    "மொட்ட தலை முழங்கால் முடிச்சு போடாதீர்கள். இசைக்கு வயசாகாது ."

    இளையராஜாவை சிலர் அன்பாக மொட்ட என்று அழைப்பதை நீங்கள் இப்படி கிண்டல் செய்ய வேண்டுமா?

    ஏன்யா திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டுயிருக்கீங்க?

    ReplyDelete
  43. சால்ஸ்,

    கீழே உள்ளது நான் எழுதியதில்லை. குட்டி பூர்ஷ்வா என்பவர் ஏறக்குறைய என் கருத்தை ஆமோதிப்பது போல எழுதியிருப்பதை எதேச்சையாக படித்தபோது உண்மை அறிந்த பலர் இங்கே இருக்கிறார்கள் என்ற நிம்மதி உண்டானது. நீங்களும் படியுங்கள்.

    Friday, June 02, 2006

    செந்தூரப்பூவே -2.

    இளயராஜா மீது அபிமானம் கொண்ட சிலரில் கூட, அவரை பற்றி நல்ல விதமாய் சொல்வதாக நினைத்து கொண்டு, பொதுவாய் சொல்வது; ஒரு கட்டத்தில் விஸ்வநாதனின் இசை மக்களுக்கு அலுப்பு தருவதாக சென்று கொண்டிருந்தது; இந்தி பாடல்களின் பக்கம் தமிழ் மக்களின் ரசனை போய்க் கொண்டிருந்த நேரத்தில், இளயராஜா வந்து தன் பக்கம் மக்களை திருப்பி, தமிழ் பாடல்களை செவி மடுக்க வைத்தார் என்பது; இப்படி சொல்வதில் பகுதி உண்மை கொஞ்சம் இருந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து கேட்கும் இந்த அலுப்பு தரும் வாதத்தில் எந்த அளவு நியாயம் இருக்கிறது என்று பார்போம்.

    முதலில் எம். எஸ்.வியின் இசை அலுப்பு தரும் வகையில் போய்கொண்டிருந்ததா என்பது மிகவும் கேள்விக் குரியது. அவரது இசை காலத்துக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டு கொண்டிருந்தது, அவர் தொடர்ந்து பல ஹிட்களை அளித்துக் கொண்டிருந்தார் என்பதுதான் உதாரணங்களுடன் கூடிய உண்மை. 70களின் மத்தியில் (அவர் பயணத்தை துவங்கிய வடிவத்திலிருந்து) முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை அடையவும் செய்தார். அதன் உச்ச கட்ட வெளிபாடாக 'நினைத்தாலே இனிக்கும்' 1979இல் இளயராஜா தோன்றி மூன்று ஆண்டுகள் கழித்து அமைந்தது. 80 களின் துவக்கத்திலும், விஸ்வநாதன் பிஸியாக இளயராஜாவிற்கு போட்டியாளராய் ஊடகத்தாலும் மக்கள் ரசனையாலும் பார்க்கப் பட்டு, சொல்லப் போனால் இளயராஜாவை விட அதிகம் மதிக்கப்படுபவராய், ராஜா பிரபலமாகி பல வகை இசைகளை அமைத்திருந்தாலும் ஒரு 'டப்பாங்குத்து இசையமைப்பாளராகவே' பார்க்கப் பட்டும, எம்.எஸ்.வியை தமிழ் சமூகம் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருந்ததாகத்தான் தோன்றுகிறது. இன்று வரை ஒரு கொண்டாட்டமான இசையமைப்புக்கு, 'நினைத்தாலே இனிக்கும்' பாடல்களுடன் ஓப்பிட கூடிய வகையில் இந்திய அளவில் வேறு திரைப்படத்தின் பாடல்கள் இருப்பதாக தோன்றவில்லை -குறிப்பாக 'எங்கேயும் எப்போதும்', 'சம்போ, சிவசம்போ'.
    to be continued..

    ReplyDelete
  44. அடுத்து ஹிந்திப் பாடல்களின் பக்கம் தமிழ் மக்கள் காதை திருப்பினார்கள் என்பது முற்றிலும் நகைப்பிற்குரிய ஒரு வாதம். தமிழ் சமூகம் எல்லா காலகட்டத்திலும் இந்திப் பாடல்களுக்கு ஒரு சிறிய இடத்தை அளித்தே வந்திருக்கிறது. வருடங்களுக்கு ஒரு முறை, சில நேரம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை என்று பாபி, குர்பானி, கயாமத் ஸே கயாமத் தக், தேசாப் என்று ஏதாவது ஒன்று, அலுப்பு தரும் இடைவெளியில் ஹிட்டாகி கொண்டே இருக்கும். சில குறிப்பிட்ட படங்கள், பாடல்கள் மட்டும் (ஹிந்தி தெரியாத சமூகத்திடம்) எடுபட்ட வறலாறு பற்றி தனியாய் ஆராய வேண்டும். எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் போனி-Mஉம், ஆபாவும் கூட தமிழ் நாட்டில் பிய்ந்து கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் சமூகம் பற்றி வெளி மாநிலங்களிலும் (தமிழ் சமுதாயத்தினுள்ளும் சிலரால்) வைத்திருக்கப்படும்/பரப்பப்படும் முன் பிம்பத்திற்கு மாறாக, தமிழ் சமூகம் கொண்டிருக்கும், எல்லாவற்றிற்கும் இடமளிக்கும் எல்லாவற்றையும் நுகர விழையும், பரந்த மனப்பான்மையின் ஒரு பரிமாணம்தான் இது. ஒரு சிலர், கலைத்தாகம் கொண்டு எட்டுத் திக்கிலும் நோக்குபவர்கள், ஹிந்திப் பாடல்களையும் நுகர்ந்திருக்கலாம். தொடர்ந்து இப்படி ஒரு நிலை இருந்ததே ஒழிய ஹிந்திப் பாடல்களின் பக்கம் தமிழ் சமூகம் எப்போது காதை திருப்பிக்கொண்டது என்று புரியவில்லை.

    இதை தவிர்த்து ஹிந்திப் பாடல் கேட்பது என்பது தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சிறு கூட்டத்திற்கு, போலித்தனமான ஒரு பெருமைக்குரியதாக இருந்திருக்கிறது. இப்போது அது அதிகமும் ஆகியிருக்கிறது. அப்படி ஒரு கூட்டம் எல்லா காலகட்டத்திலும் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மானால் தமிழில் இசையமைக்கப் பட்டு, ஹிந்தியில் நகலெடுக்கக் கூட ஒழுங்காய் வக்கில்லாமல், அரைகுறையாய் காப்பியடிக்கப் பட்ட பாடல்களை, ஹிந்தியில் கேட்பதில் கூட அவர்களுக்கு ஒரு பெருமை. ஹிந்தி என்ற மொழிக்கு இருக்கும் மேலாண்மையான நிலையும், தமிழ் சமூகத்தின் கருப்பு வெள்ளை உளவியலில் இருக்கும் அடிமை புத்தியும் தவிர்த்து, இசை பூர்வமான காரணம் எதுவும் இதற்கு கிடையாது. இப்படி ஒரு நிலை நேன்று இன்று மட்டுமில்லாமல், தமிழ் உயிர்த்து இருக்கும் எல்லா கட்டத்திலும் தொடரும். எதிர்காலத்தில், தமிழ் திரை இசை உச்சத்தை தொட்டாலும், இந்த காய்ச்சல் இன்னும் அதிகமாக மட்டுமே செய்யும். அதனால் ஹிந்தியிடமிருந்து, தமிழ் திரையிசையை காத்ததாக சொல்வது, ராஜாவின் சாதனைகளை மிகவும் குறுக்கும் ஒரு அற்பமான வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. ராஜாவின் சாதனை முற்றிலும் வேறு வகையானது.

    பரிணமித்து கொண்டிருக்கும் எல்லா கலைகளின் வளர்ச்சியிலும் ஒரு கட்டத்தில் நெருக்கடி என்று ஒன்று எற்படுவது இயல்பு அல்லது ஆதார விதி. எல்லா வகை கலைகளிலும், அரசியல், அறிவியலில் கூட இதை காணமுடியும். இது சமூக மாற்றத்தாலும், நவீனமாவதாலும் மட்டும் நிகழவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கலை தொடர்ந்து உயிர்த்து இருப்பதால் அதன் இருப்பினாலே கூட ஏற்படலாம். அந்த நெருக்கடி விளிக்கப்படாமல் உள்வாங்கி கொள்ளப்படாமல் தொடர்வதும் உண்டு. அதன் பலனை அதற்கு அடுத்த காலகட்டத்தில்தான் உணரமுடியும். விஸ்வநாதன் அற்புதமாய் தொடர்ந்திருந்தாலும், இன்னும் பலர் புதிதாய் வந்திருந்தாலும் இந்த நெருக்கடி தவிர்க்க இயலாதது. இளயராஜா இல்லாவிட்டால் நிச்சயம் புதிதாய் வேறு பலர் வந்திருப்பார்கள். ஜிகே வெங்கடேஷ் தமிழில் பெரிய ஆளாக கூட வந்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி நிச்சயம் தொடர்ந்திருக்கும்.

    ஹிந்தியில் வளமான அளவு இசையமைப்பாளர்கள் இருந்தும், அங்கேயும் சரியாக எழுபதுகளில் இந்த நெருக்கடி ஏற்பட்டு, அது விளிக்கப் படாமல் லஷ்மிகாந்த் பியாரேலால் போன்றவர்களின் நேர்கோட்டு இசையுடன் தொடர்ந்தது. ஹிந்தியில், எண்பதுகளில் உருப்படியாய் எதுவுமே வெளிப்படாமல் (தமிழில் 80களும் ஒரு பொற்காலம்), 90களின் தொடக்கத்தில் எந்த வித படைப்பு தன்மையும் அற்ற (சினிமாபாட்டில் கிரியேட்டிவிடியா என்று கேட்கக்கூடாது, பரவலாய் நகலெடுத்த தேவாவிடம் கூட படைப்பு தன்மை உண்டு), வெறும் நகலெடுக்கும் வேலையாக மாறி, ஏ.ஆர். ரஹ்மானின் புதிய இசை உள்ளே நுழையும் வரை இந்த கலை நெருக்கடி விளிக்கபடாமல் ஹிந்தியில் தொடர்ந்திருந்திருக்கிறது. தமிழில் அப்படிப்பட்ட நெருக்கடி காலத்தில், மிக சரியாக தோன்றி, முற்றிலும் புதிய ஒரு இசையை அளித்து, அனைத்தையும் அள்ளிக் கொண்டு போனவர்தான் இளயராஜா. அவர் அளித்த இசைக்கு முன்னோடி தமிழில் மட்டுமின்றி, உலகிலும் இல்லை. எம்.எஸ்.வி/ஹிந்தி பாடல்களை முன்வைத்து சொல்லும் ஸ்டீரியோ வகை வாதத்திலிருந்து முற்றிலும் வேறுபடும் விஷயமிது.

    ReplyDelete
  45. the last part of the post is here.. Read on..

    ஏ.ஆர். ரஹ்மானும் கிட்டதட்ட இளயராஜாவின் தொடர்ந்த தனிக்காட்டு ஆதிக்கத்தால் ஏற்பட இருந்த நெருக்கடிக்கு சற்று முன் வந்தவர்தான். ரஹ்மானின் புதிய இசைகொண்டு தமிழ் திரையிசை அந்த நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும் சில வித்தியாசங்கள் உண்டு. ஒரு வகையில் ரஹ்மானின் இசைக்கு ராஜா ஒரு முன்னோடி. ராஜா தந்த இசையின் இயல்பான தொடர்சியை ரஹ்மான் தந்தார். ஆனால் ராஜா அளித்தது, முன்னோடி இல்லாத புத்தம் புதிய இசை.

    ராஜாவின் இசை ஒரு தமிழ் சூழலுக்கு(அதாவது தென்னிந்திய சூழலில்) மட்டுமே எடுபடக்கூடியதாக் இருந்தது. வட இந்திய வெகு மனம் ராஜாவின் இசையில் அடையாளம் காணமுடியவில்லை. மாறாக ரஹ்மானின் இசை வட இந்திய மனம் அடையாளம் கண்டு அனுபவிக்கும் வகையில் வெளிபட்டது. இதன் காரணமாய் வந்த சில ஆண்டுகளிலேயே ரஹ்மானை பாலிவுட் அள்ளிக் கொண்டு போய்விட, அவர் அமைத்துத் தந்த ட்ரெண்ட்களின் வழி தோன்றல்களோடு நாம் சமாதானப்பட வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  46. மேலே உள்ள மூன்று பத்திகளும் குட்டி பூர்ஷ்வா என்ற தளத்தில் எழுதிவரும் ரோசா வசந்த் என்பவற்றின் கருத்துக்கள். எனக்கும் அவர் கருத்துக்களில் உடன்பாடு உள்ளதால் அவைகளை முழுவதுமாக கொடுத்துள்ளேன்.(அவர் இளையராஜாவை பற்றி சொல்லும் சில கருத்துக்கள் மட்டும் எனக்கு தொடர்பில்லாதவை.) ஏறக்குறைய என் அடுத்த பதிவின் சாராம்சமும் இதை அடிப்படையாகக் கொண்டதே.

    ReplyDelete
  47. அனானி அண்ணே

    இளையராஜா இசை வெறுக்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரோ!

    ReplyDelete
  48. காரிகன் அய்யா

    குட்டி பூர்ஷ்வா தளத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் நாடு நாயகமான
    பதிவாக எழுதப்பட்டுள்ளது . இதைத்தான் உங்கள் பதிவிலும் எதிர் பார்க்கிறேன். ஆனால் நல்லா எழுதிட்டு வரும்போதே ராஜா வந்து விட்டார் என்றால் உங்கள் எழுத்தின் துலாபாரம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆடுவதுதான் சரியாக படவில்லை.

    அதிலும் குட்டி பூர்ஷ்வா பதிவில் உள்ளதை சொல்லிவிட்டு ராஜா பற்றிய விஷயம் தங்களுக்கு தொடர்பில்லாதவை என்று பல்டி அடிக்கிறீங்களே ! நான் மேலே சொன்னது சரிதானே!

    ReplyDelete
  49. சால்ஸ்,

    குட்டி பூர்ஷ்வா தளத்தின் ரோசாவசந்த் என்பவர் ஒரு தீவிர இளையராஜா ரசிகராக இருந்தாலும் 70களின் ஹிந்தி மோகம் பற்றிய உண்மையை தெளிவாக எழுதியிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டவே நான் விரும்பினேன். மற்றபடி அவருடைய மற்ற சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

    உதாரணமாக எ ஆர் ரஹ்மான் ஹிந்திக்குப் போன பின்பே ஹிந்தி இசை மறு வாழ்வு பெற்றது என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ரஹ்மானுக்கு முன்பே நதீம் ஷ்ரவன் என்ற இரட்டையர்களின் வருகையினால் ஹிந்தி இசை மீண்டும் தன் இழந்த பொலிவை அடைந்தது என்பது என் எண்ணம்.

    அடுத்து 80கள் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று சொல்லும் அவருடைய ராஜா அபிமானத்தின் வெளிப்பாட்டின் மீதும் எனக்கு ஒப்புதல் இல்லை. இது போன்று உண்மைக்கு மீறிய வாக்கியங்கள் ராஜா ரசிகர்களுக்கு இருக்கும் வெற்றுத் துணிச்சலையும் இசை வறட்சியையும் படம் பிடித்துக் காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.

    நீங்கள் அவரின் கருத்துக்களோடு கை குலுக்கும் எண்ணம் கொண்டிருந்தால் அவர் ரஹ்மானைப் பற்றி எழுதியிருக்கும் வரிகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது.

    ReplyDelete
  50. திரு. காரிகன் அவர்களுக்கு,
    தங்களது இந்த இடுகையில் கேட்ட பாடல்கள் எல்லாம் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதில் குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி படத்தின் ‘’சித்திரை மாத பௌர்ணமி நேரம்’’ பாடல் அந்த படத்தை முதன்முதலாக பார்த்த போதே ரொம்பவும் பிடித்தது.
    தங்களின் இந்த இடுகையின் நோக்கம் தங்கள் எடுத்து கொண்ட வருடங்களிலே தெரிந்ததும், மிகுந்த எதிர்பார்ப்புடன், தங்களிடமிருந்து எப்படி வரும் என்று தெரிந்து தான் படித்தேன். அதில் சிறிது கூட பிசிறில்லாமல் தாங்களும் ஒரு இடத்தில் இடைசெருகாய் நுழைத்து விட்டீர்கள். அது ஏன் 1975 வரை எடுத்துள்ளீர்கள். அதற்க்கு பின் எம்.எஸ்.வீ அய்யாவோ, சங்கர் கணேஷ் அவர்களோ, மற்றவர்கள் யாரும் சிறந்த இசையை கொடுக்கவில்லையா? இசைஞானி இளையராஜா 1975 இலிருந்து வந்தாலும் 1980 முதல் தான் அவரின் வீச்சு அதிகமாக இருந்தன, அப்பொழுதும் அய்யாவும், சங்கர் கணேஷும் படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர், அப்படியும் அன்றைய முன்னணி நாயகர்கள் சிவாஜி கணேஷன் அய்யா, ரஜினி, கமல், சிவகுமார் அவர்களுக்கும் இசைஞானிக்கு இணையாக தான் கொடுத்து கொண்டு இருந்தனர், ஆனால் பாடல்களின் கேட்கும் தன்மை மாறிவிட்டது அதனால் அந்த படங்களின் பாடல்களில் ஒன்று இரண்டு தவிர மத்தவைகள் எல்லாம் மறைந்து விட்டன. இசைஞானி புதிய முயற்சிகளை அன்று கொடுத்து கொண்டு இருந்ததினால் மக்கள் அதில் கேட்டு மயங்கி இருந்தனர் என்பதே உண்மை. அந்த சாயல் அப்புறம் அய்யா அவர்களின் இசையில் மட்டும் அல்ல, அன்றைய அனைத்து இசை அமைப்பாளர்களிடம் இருந்தது. அந்த பாடல்கள் எல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள். நீங்கள் இட்ட அனைத்து பாடல்களும் ஹிந்தி பாடல்களின் பாதிப்போ, சாயலோ இல்லாமல் இல்லை. அந்த பாடல்களின் இடைசைகளை சிலாகித்து சொல்ல கூடிய வகையிலோ, படத்தின் பின்னணி இசை பற்றி சிலாகித்தோ சொல்லகூடிய வகையிலோ உங்களால் காட்ட முடியுமா? இந்த உண்மைகள் அனைத்தும் எம்.எஸ்.வி அய்யா அவர்களுக்கு தெரியும். அவரை ஒப்புக்கொண்ட உண்மை. ஆனால் உங்களுக்கு இந்த உண்மைகளை உணர்ந்து கொள்ள மனம் தான் இல்லை என்பதை உங்களின் பழைய பதிவுகளிலே நான் புரிந்து கொண்டேன்.
    இசைஞானி இசையை நான் சிலாகித்து, பின்னணி இசை பற்றி சிலாகித்து எழுதுவதை நீங்கள் முழுவதுமாக படிக்க வேண்டும். சும்மா பார்த்து விட்டு நாங்கள் ஏதோ அவரை உயர்வை எழுதுவதை நீங்கள் மட்டமாக பார்த்தால் உங்கள் காதுகளையோ, ரசனையிலோ கோளாறு என்றே அர்த்தம். நாங்கள் எப்பவும் எம்.எஸ்.வி அய்யாவை பெரிய இடத்தில் வைத்தேதான் பேசுவோம். அவர் இசையில் எந்த இசைஞானி ரசிகன் யாரவது குறையோ, மட்டமாகவோ பேசினது கிடையாது. ஆனால் இசைஞானி இசை அதை காட்டிலும் ஒரு படி மேலை என்றும், நெறைய பரிசோதனைகள், புதிய பரிணாமங்கள் உண்டு என்பதை தான் நாங்கள் கூறுவோம். தங்களை போன்று விரகதாப இசை, வாசிக்க முடியாத இசை பிணைப்புகள் என்று மட்டமாக பேசுவது கிடையாது. ஏதோ நூற்றுக்கு ஒன்றோ இரண்டோ இருக்கும். அதற்காக ராஜா சார் இசையெல்லாம் அப்படிதான் என்பதை நீங்கள் பல பதிவுகளை இடுகீரிர்கள் என்பதை நான் கண்டிக்கிறேன். தனிமனித துதி என்பது அவர் காலத்தில் என்பது தான் சொல்கிறீர்கள். ஜெயிக்கிற குதிரை மேல் தான் பணம் கட்டுவார்கள். அன்று தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்தது இசைஞானி இசை என்பதை யாராலும் மறுக்க முடியாது, மறக்க முடியாது. ஆகையால் அவரை துதி பாடிருக்கலாம். நீங்களும் அந்த நிலையில் இருந்தால் அதை தான் ஏற்பீர்கள். எனக்கு இந்த துதி பிடிக்காது என்று உங்கள் மனம் சொல்லுமா?

    ReplyDelete
  51. இசைஞானியின் இசைக்கு வீழ்ச்சி கிடையாது. அது எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும். அவர்கள் எல்லாம் சீசனுக்கு வருகின்ற பறவைகள் போன்றவர்கள், வருவார்கள் இரண்டு அல்லது மூன்று வருடம் ஹிட் கொடுப்பார்கள் போய் விடுவார்கள். அது ரகுமானில் இருந்து இன்று இருக்கின்ற அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும். ஆனால் இசைஞானி மட்டுமே என்றும் ராஜா என்று நாங்கள் சொல்கிறோம் இதனை தாங்கள் மறுப்பீர்கள். உங்களுக்கு ஒரு உதாரணம், இன்று தமிழ் மட்டும் அல்ல, தென்னிந்திய மட்டும் அல்ல ஹிந்தி, மராத்தி படங்களுக்கு இசையமைத்து கொண்டு இருக்கும் ஒரே இசையமைப்பாளர் இசைஞானி மட்டுமே. இன்றும் கையில் இருபதற்கு அதிகமாகவே படங்களை வைத்திருக்கிறார். அதெல்லாம் நீங்கள் தெரிந்து இருக்க நியாயமில்லை. இந்த வருடத்தில் கன்னடத்தில் வெளியான படங்களில் பிளாக்பஸ்ட்டர் படங்களில் ஐந்தில் இரண்டு படங்களுக்கு இசையமைத்திருப்பவர் இசைஞானி. படங்கள் ஒக்கரனே, திரிஷ்யா. இன்னும் ஓடி கொண்டு தான் இருக்கிறது. அவர் இந்த படங்களுக்கு ஒரு முதுகெலும்பாய் இருக்கிறார் என்று அனைத்து விமர்சனங்களும் கூறுகிறது. ஆனால் என்றுமே அவர் அதன் வெற்றியை சுவைத்து கொண்டது கிடையாது.
    எனக்கு இன்னொரு உண்மை தெரிந்து கொள்ளவேண்டும், 1992 பிறகு இசைஞானி வீழ்ந்தார் என்று எதன் அடிப்படையில் கூறுகீர்கள். வெற்றியின் அடிப்படையிலா?, மேல் தட்டு நடிகர்களின் படங்களின் வெற்றியிலா?, மேல் தட்டு இயக்குனர்களின் வெற்றி படங்களின் வாயில்களா?
    அப்படி உங்களுக்கு அதன் அடிப்படை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் wikipediavil சென்று 1992 முதல் எந்த இசையமைப்பாளர்களின் படங்கள் அதிகமாக, வெற்றி அடைந்தது, மேல் தட்டு நடிகர்களின் படங்களால் வெற்றி அடைந்தது என்று பார்க்கவும்.

    http://en.wikipedia.org/wiki/List_of_Tamil_films_of_1992

    ஒவ்வொரு வருடங்களிலும் சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  52. இன்றைய ஊடகங்கள் தற்போதைய இசையமைப்பாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த முறை முதன் முதலாக ரகுமான் வந்த பிறகே ஆரம்பித்துள்ளது. அப்பொழுதெல்லாம் ஊடகங்கள் விரும்பியே செய்தி வெளியிட்டனர், அதற்க்கு மார்க்கெட்டிங் நுட்பத்தை கொண்டு வந்ததே ரகுமான் வந்த பின்தான். ஆகையாலே ஒரு முறை ஒருவரை புகழ்ந்து எழுதி விட்டு மற்றொருவர் வந்தால் அவரை பிடித்துகொள்கின்றனர்.
    இன்றைய இசை கோளாறுகளுக்கு ஒரு காரணம் புதிய இசையை எந்த விதமான மனம் தொடும் படி இல்லாமல் வந்த காலம் 1998 முதல் தான். இன்று நெறைய குப்பைகள் பாடல்களாக, ரசிக்க முடியாதவைகளாக இருப்பதற்கு காரணம் அன்றைய திரைப்படத்துறையில் இருந்த மேல்தட்டு இயக்குனர்களும், ஒரு கவிஞர் ஒருவரும், ஐந்து படங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாத ஒருவரை மார்க்கெட்டிங் திறமையால் அனைத்து இடங்களுக்கும் (ஊடங்களுக்கும்) பரப்பி விட்டதே காரணம்.
    அன்றைய காலங்களில் தமிழ்நாட்டின் அனைத்து ஊர் கோவில்களிலும் மெல்லிசை கச்சேரி ஒன்று திருவிழாவில் கட்டாயம் இடம் பெறும். அதில் இசைஞானி இசை, அதற்க்கு முன்பு வரை உள்ள பாடல்கள் அனைத்து பாட பட்டு அனைவராலும் கூட்டமாக ரசித்த காலங்கள் உண்டு. இது இன்றைய முப்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் அறிவர். அதன் பொற்காலத்தை. ஆனால் இன்று மெல்லிசை கச்சேரியில் பாடபடும் பாடல்களை கேட்க தான் ஆளில்லை. அந்த மாதிரி நிகழ்ச்சியும் யாரும் வைக்காமல் குத்தாட்ட நிகழ்ச்சிகளை வைத்து கூட்டம் சேர்கின்றனர். இந்த நிலையின் காரணம் மக்களின் ரசனை மாறிவிட்டது என்று எடுத்து கொண்டாலும் 1998 முதல் தான் இந்த நிலை.
    நீண்ட இடைவெளிக்கு பின் எங்கள் ஏரியா கோவிலில் ஒரு மெல்லிசை கச்சேரி வைக்கப்பட்டது. அந்த குழுவினர் பாடிய இருபத்தி இரண்டு பாடல்களின் பத்து பாடல்கள் இசைஞானி இசையில் வந்தவை. நெறைய வரவேற்ப்பு பெற்றதும் அவர் பாடல்கள், பழைய பாடல்கள் ஆறு பாடல்கள். இன்றைய இசையமைப்பில் வந்தது வெறும் ஆறு பாடல்கள் தான். சாமீ பாடல்கள் சேர்க்க வில்லை அது மூன்று. ஒரு பாடல்கூட ரகுமான் பாடல் இல்லை என்பதை மிகவும் உண்மைதரமாக சொல்லி கொள்கிறேன். தென் தமிழ்நாட்டிற்கு வந்தால் தெரியும், யார் பாடல்கள் இன்னும் மக்களின் மனதில் இருக்கிறதென்று? சென்னை மட்டுமே தமிழகம் அல்ல. அங்கேயும் ராஜா சார் இசையை உண்மையான இசைரசிகன் கேட்டு கொண்டு தான் இருப்பான். அவர் குப்பைகளையோ? தரமில்லததையோ கொடுத்திருந்தால் மக்கள் அதனை கேட்டுகொண்டு இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  53. அடுத்து தாங்கள் எழுதும் வாடாத வசந்தத்தில் உண்மைக்கு எதிராக இல்லாமல், உங்கள் மனசாட்சியை அணிந்து கொண்டு எழுதுங்கள். உங்களுக்கு பாடல்களின் தரத்தையும், இசையின் மகத்துவம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எங்களிடம் நெறைய ஆட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டு கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் இசைஞானி இசையில் இருக்கிற புதுமைகளை, சிறப்புகளை, வசந்தங்களை கூற.

    அன்புடன்

    உங்களிடமிர்ந்து உண்மைகளை எதிர்பார்க்கும் ஒரு நலம் விரும்பி.

    ReplyDelete
  54. வாருங்கள் வி எஸ் குமார்,

    முதல் முறையாக என் தளம் வருகிறீர்கள். நன்றி. உங்களின் ஆதங்கம் நான்கு தொடர்சிகளாக நீண்டிருப்பதால் நான் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

    சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடலை ரசிப்பது குறித்து மகிழ்ச்சியடைந்தேன். இதையெல்லாம் கூட ராஜா ரசிகர்கள் விரும்புவார்களா என்ற எண்ணமே இதற்கு காரணம். 1975 ஆம் ஆண்டுடன் இந்தப் பதிவை நிறுத்தியதன் காரணம் பதிவின் நீளம் கருதியே அன்றி வேறெந்த மறைமுகச் செய்தியை உணர்த்தவும் அல்ல.மேலும் நீங்கள் சொல்வதைப் போல 75இல் இளையராஜா வரவில்லை. அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டில் ஒரு மே மாதத்தில் வெளிவந்த படம்.70 முதல் 75 ஒரு காலகட்டம் என்றும் 75-80 அடுத்தது எனவும் இதற்கு ஒரு அர்த்தம் இருப்பதை நீங்கள் ஏன் உணரவில்லை என்று தெரியவில்லை. உங்களுக்கு எல்லாமே இளையராஜாவை சுற்றியே இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆயிரம் கேள்வி கேட்பீர்கள்.

    76இல் இளையராஜா வந்தாலும் 80களுக்குப் பிறகே அவர் ஆதிக்கம் உறுதியானது. நீங்கள் சொல்வது உண்மையே. நான் இதைத் தவிர மேலும் பல பதிவுகளில் பொதுவாக ராஜா ரசிகர்கள் அலட்சியம் செய்யும் வி.குமார், சங்கர்-கணேஷ், ஷ்யாம், எம் பி ஸ்ரீநிவாசன், ஜி கே வெங்கடேஷ், டி ராஜேந்தர் இவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். 80களில் இளையராஜாவின் இசை மட்டுமே சிறப்பாக இருந்தது என்பது ஒரு சார்பான கருத்து. அதில் உண்மையில்லை என்பதே எனது வாதம். நீங்கள் வெற்றிகளைக் கொண்டு தரம் பார்க்கிறீர்கள். எனவேதான் உங்கள் கண்களுக்கு இளையராஜா மட்டும் தெரிகிறார். அப்படியும் அவர் மட்டுமே வெற்றி பெற்றுக்கொண்டிருக்கவில்லை. அவர் இசையில் இந்த வெற்றியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பதால் அவரது இசை மட்டுமே எல்லாம் என்பதெல்லாம் நியாயங்களுக்கு முரணானது. இளையராஜாவின் இசை வெற்றி பெற்றதன் பின்னே பல காரணிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அவரது புதுமையான, வித்தியாசமான இசை. இருந்தும் 76-79 வரை இளையராஜாவின் இசையில் எம் எஸ் வி, வி.குமார், ஜி கே வெங்கடேஷ் போன்றோரின் சாயலை கேட்கலாம். அவருக்கென ஒரு தனி இசை பாணி 16 வயதினிலே படத்திற்குப் பிறகே வேரூன்ற ஆரம்பித்தது. நான் நிறைய தகவல்களை இங்கே எழுதுவதைக் காட்டிலும் என் பதிவுகளில் சொல்ல இருப்பதால் இது போதும் என்று நினைக்கிறேன்.

    மற்ற இசைஞர்களின் இடையிசை, பின்னணி இசை பற்றிய உங்களின் பார்வை மூளைச் சலவை செய்யப்பட்டது. ராஜா ரசிகர்கள் இப்படி சொல்வதில் வியப்பில்லை. ஏன்? அவருக்கு முன்னால் எந்தத் தமிழ் படத்திலும் பின்னணி இசை சிறப்பாக இல்லையா? நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் இசைக்கே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இசைதான் அப்படத்தின் உயிர்நாடி. எம் ஜி ஆரே இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள் ஒன்று நான் இன்னொன்று எம் எஸ் விஸ்வநாதன் என்று சொன்னது பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லையா? இடையிசை பற்றி உங்களின் கருத்து எல்லோரும் மேம்போக்காக சொல்வதுதான். ஒவ்வொரு இசை அமைப்பாளரும் தனது பாணியில் இடையிசையை அமைத்தார்கள். இதில் ஒருவரது பாணியை மட்டும் அளவு கோளாக வைத்துக் கொண்டு தரம் பிரிப்பது புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லை.ரஹ்மான் இசையில் இந்த இடையிசை சங்கதியே இருக்காது. அது அவர் பாணி.

    இளையராஜா எம் எஸ் வி போன்றவர்களை விட ஒரு படி உயர்ந்தவர் என்பதெல்லாம் எங்க ஆளு மாதிரி யாரும் இங்கே இல்லை என்னும் அரை டிராயர் சிறுவனின் மனநிலை. இசை முதிர்ச்சிப் பெறாத மனங்களின் முட்டாள்தனமான கருத்து. இதைச் சொல்வதால் உடனே நான் உங்களை வசை பாடுவதாக நினைக்கவேண்டாம். இளையராஜாவின் மூன்றாந்தர இசை மிகவும் பிரசித்திப் பெற்றது. இதில் நான் புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? இளையராஜா வந்த பிறகே நம் இசை கெட்டது என்று நம்பும் பலர் இருக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரு பாதிதான். அடுத்த பாதி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாதது. அதுதான் உண்மை.

    ReplyDelete
  55. வி எஸ் குமார்,

    92க்குப் பிறகு இளையராஜா தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்துவந்ததை நான் மறுத்திருப்பதாக எண்ணவில்லை. அது உங்கள் கற்பனை. அவருடைய பட எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.இருந்தும் அவர் எண்ணிக்கையில் முதலிடத்திலேயே இருந்தார் 96 வரை. அதன் பின்னர் அவரது ராஜ்ஜியம் சரிந்தது. ரஹ்மான், தேவா, வித்யாசாகர், எஸ் எ ராஜ்குமார், போன்ற பல இசை அமைப்பாளர்கள் மேலே வரத் துவங்கினார்கள். ராஜாவின் வீழ்ச்சி ரஹ்மானின் வருகையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது. இது எல்லோருக்கும் தெரியும். எப்படி எம் எஸ் வி இளையராஜாவின் வருகைக்குப் பிறகு பின்னுக்குத் தள்ளப்பட்டாரோ அதே இளையராஜாவுக்கும் நேர்ந்தது. இதைத்தான் நான் சொல்கிறேன். ராஜாவுக்கு வீழ்ச்சியே இல்லை என்று கண்மூடித்தனமான சிந்தனை கொள்ளும் உங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. பல படங்களுக்கு இசை அமைத்தால்தான் அவர் தரமிக்கவர் என்ற அடிப்படை 90களில் இல்லை. ரஹ்மான் வெகு சொற்பமான படங்களுக்கே இசை அமைத்தார். இருந்தும் அவர் அடைந்த வணிக வெற்றி இளையராஜாவின் வர்த்தக வெற்றியை விட பல மடங்கு உயர்ந்தது. உடனே என்னை ரஹ்மான் ரசிகனாக எண்ணிக்கொண்டு என் வாதத்தை திசை திருப்பவேண்டாம். நான் ராஜாவா ரஹ்மானா என்ற விவாதத்தில் ஈடுபாடு காட்டியதில்லை. அது வெற்று வாதம் என்று நினைப்பவன். எனது பார்வையில் மக்கள் மனதில் நீங்காத பல காவிய கானங்களை கொடுத்தவர்கள் என்ற பட்டியலில் இருவரது பங்களிப்பும் வெகு குறைவே. எனவே இந்த இருவரில் யார் பெரியவர் என்ற குழாயடி சண்டை ஒரு அபத்தம்.

    இளையராஜாவின் இசைப் பாணி மக்களுக்குப் புளித்துப் போயிருந்த வேளையில்தான் ரஹ்மான் தன் நவீன இசை ஓசைகளுடன் வந்தார். நவீனத்தை விரும்பும் இளைஞர்கூட்டம் ராஜாவை விட்டு ரஹ்மான் பக்கம் தாவியது. இது ஒரு இயல்பான வழக்கமான நிகழ்வே. இதை இல்லை என்று சொல்வதுதான் இயற்கைக்கு எதிரானது. இன்னமும் சிலர் எம் ஜி ஆர் இறக்கவில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் உங்கள் வாதம் இருக்கிறது.

    ReplyDelete
  56. வி எஸ் குமார்,

    கோவில் திருவிழாக்களில் நடைபெறும் மெல்லிசைக் கச்சேரி பற்றி ஒரு வித ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் அதே எண்ணம் உண்டு. ஆர்கெஸ்ட்ரா இசை கேட்க பல தூரங்கள் நடந்துசென்ற அனுபவங்கள் இப்போது அரிதாகிவிட்ட அந்த இனிமையை நோக்கி என்னை இழுக்கின்றன.

    உங்கள் ஊர் திருவிழா மெல்லிசை கச்சேரியில் எத்தனை இளையராஜா பாடல்கள் பாடினார்கள் என்பதை ஒரு தகவலாகவே பார்க்கிறேன். நீங்கள் அதை ஒரு இசை பற்றிய அளவுகோளாக முன் வைப்பது விநோதமாக இருக்கிறது. நான் சமீபத்தில் சென்ற ஒரு மெல்லிசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் முக்கால்வாசி 50-60 களைச் சார்ந்தவையே. இதைக் கொண்டு நான் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கமாட்டேன். சில நேரங்களில் சில விருப்பங்கள் முன்னே வருகின்றன. அவ்வளவே. மேலும் இளையராஜாவின் எல்லா பாடல்களும் தரமில்லாதவை என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இருந்தால் சுட்டிக் காட்டவும். திருத்திக்கொள்கிறேன். 80கள் இன்றைக்கு இளையராஜாவின் காலமாகவே பெரும்பான்மையானவர்களால் கருதப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.அதனால்தான் இத்தனை ஆழமாக அதிகமாக இரண்டு தலைமுறைகளை பாதித்த ஒரு இசை அமைப்பாளர் ஏன் தன் இசையின் பரிமானங்களை ஒரே வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டார் என்று கேட்கிறேன்.அவரால் ஏன் நம் மண்ணின் இசையை இன்னும் தரமானதாக்க முடியவில்லை என்றும் அவர் ஏன் ராக தீபங்கள் குடிகொண்டிருந்த நம் இசைக் கோவிலை பராமரிக்க தவறினார் என்றும் கேட்கிறேன். இதற்குச் சான்றாக பல நாலாந்தர பாடல்களை என்னால் அடையாளம் காட்டமுடியும். அதை என் பதிவுகளில் நீங்கள் காணலாம்.

    ----அடுத்து தாங்கள் எழுதும் வாடாத வசந்தத்தில் உண்மைக்கு எதிராக இல்லாமல், உங்கள் மனசாட்சியை அணிந்து கொண்டு எழுதுங்கள். உங்களுக்கு பாடல்களின் தரத்தையும், இசையின் மகத்துவம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எங்களிடம் நெறைய ஆட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டு கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் இசைஞானி இசையில் இருக்கிற புதுமைகளை, சிறப்புகளை, வசந்தங்களை கூற.

    அன்புடன்

    உங்களிடமிர்ந்து உண்மைகளை எதிர்பார்க்கும் ஒரு நலம் விரும்பி.----

    உங்களின் உண்மை இளையராஜா என்ற ஒருவரை சார்ந்தது. ஆனால் எனக்குத் தெரிந்த உண்மையோ மிகப் பெரியது. அதை ஏற்றுக்கொள்ள சில சமரசங்களும் உங்களின் விருப்பங்களை மாற்றியமைக்கும் மன வலிமையும், சில சங்கடங்களை அனுசரித்துப் போகவேண்டிய அணுகுமுறையும் தேவைப்படுகின்றன. உங்களிடம் உள்ள நிறைய ஆட்கள் என்ன பேசுவார்கள் என்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. நிறையவே பேசிவிட்டேன் அவர்களுடன். நீங்கள் பெருமைகொள்ளும் இளையராஜாவின் இசையில் தென்படும் புதுமைகள், வசந்தங்கள், சிறப்புகள் எல்லாமே ஒரு மிக அகண்ட வெளியின் ஒரு சிறிய பகுதி. உங்களுக்கு அதுவே போதும் என்றால் கண்டிப்பாக இழப்பு எனக்கல்ல.

    ReplyDelete
  57. குமார் சார்

    இளையராஜா பற்றிய உங்கள் விளக்கங்கள் எதுவும் காரிகனை இம்மி அளவும் அசைத்து விடாது . நீங்கள் ஆயிரம் முறை விளக்கம் கொடுத்தாலும் ஆயிரத்தொரு முறை பதில் போடுவார் - ராஜா எதிர்ப்பாகவே! தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முயற்சி தேவையா!?

    ஏ. எம் ராஜா பத்து படம் இசை அமைத்தவர் . இளையராஜாவை விட சிறந்தவர் என்பார். அதே போல் வி. குமார் , ஜி.கே. வெங்கடேஷ் , டி..ராஜேந்தர் போன்றோர் பத்து படங்களில் பாட்டுக்கள் ஹிட் கொடுத்தவர்கள் . அவர்களோடு ராஜாவை ஒப்பிடுவார் . மெல்லிசை மன்னரில் ஒருவரான ராமமூர்த்தி கூட நாலு படங்கள்தான் தனியாக ஹிட் கொடுக்க முடிந்தது . எழாமலேயே போய் போயே விட்டார் . வந்தவர் எல்லாம் தங்காமல் சென்று விட்டார்கள் . வாழும் இசை ஞானியை புரிந்து கொள்ள தெரியாத கல்லுளிமங்கனாக மாறிய காரிகனுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான்! பாவம் சார் நீங்கள் !

    ReplyDelete
  58. -----இளையராஜா பற்றிய உங்கள் விளக்கங்கள் எதுவும் காரிகனை இம்மி அளவும் அசைத்து விடாது . நீங்கள் ஆயிரம் முறை விளக்கம் கொடுத்தாலும் ஆயிரத்தொரு முறை பதில் போடுவார் - ராஜா எதிர்ப்பாகவே!-----

    சால்ஸ்,

    பாராட்டுக்கு நன்றி. என்னை மிக நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையே.

    ----வாழும் இசை ஞானியை புரிந்து கொள்ள தெரியாத கல்லுளிமங்கனாக மாறிய காரிகனுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான்!---

    கொஞ்சம் அதிக காரம் தெரிகிறது. ஆனாலும் அதுவும் உண்மைதான். தரமான நல்ல பாடல்களை விரும்பும் நான் சில கருமாந்திரங்களையும், அபஸ்வரங்ககளையும், கேடு கெட்ட கண்றாவிகளையும் கேட்க விரும்பாத செவிடன்தான். இந்தப் பாராட்டிற்கும் நன்றி. இன்னும் வேறு எதுவும் எழுதமுடிந்தால் நலம்.

    ---பாவம் சார் நீங்கள் !----

    பாவம்தான்.. ஆனால் அது அவர் மட்டுமல்ல.

    ReplyDelete
  59. காரிகன் sir ,

    'கண்ணா நலமா' படமும் மெல்லிசை மன்னர் இசைதான் என்று என் நண்பர் கூறினார். வி.குமார் என்பதாக நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள் . எதற்கும் உறுதி செய்து கொள்ளவும் . ஆனால் அருமையான கட்டுரை

    ReplyDelete
  60. வாருங்கள் அனானி,

    கண்ணா நலமா படத்தை நான் டிவியில் பார்த்திருக்கிறேன். அதன் இசையமைப்பு வி குமாருடையது. இதை நான் மிகத் தெளிவாகச் சொல்லமுடியும். உங்கள் நண்பர் எதோ ஞாபகத்தில் உங்களுக்கு ஒரு தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார். பலர் இதுபோன்றே வி குமாரின் இசையை எம் எஸ் வியின் இசை என்று சொல்வது ஒரு பிழை.

    ReplyDelete
  61. அன்பு நண்பரே உங்களுக்கு ஒரு விருதினை வழங்கியுள்ளோம்
    பார்க்க
    http://www.malartharu.org/2014/09/versatile-blogger-award.html#more

    ReplyDelete
  62. நண்பரே,

    பார்த்தேன். பதிலும் எழுதியிருக்கிறேன். உங்களின் நட்புக்கு ஆழ்ந்த நன்றி.

    ReplyDelete