நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு மாற்றல், தனிப்பட்ட வகையில் எனக்கேற்பட்ட ஒரு ஆழ்ந்த இழப்பு, காரணங்களின்றி சடுதியில் வாழ்க்கையின் வண்ணங்கள் தன்னியல்பு இல்லாது மாறிவிடும் மந்திரம், நேரத்தை அபகரித்துக்கொள்ளும் இணையமில்லா இரண்டாம் உலகம் என இணையம் நோக்கி வரவேண்டிய சாலைகளை பல நடைமுறை நிகழ்வுகள் அடைத்துவிடுகின்றன.
இருந்தும் இணையத்தை விட்டு விலகி இருப்பது ஒரு விதத்தில் நல்லதாகவே தெரிகிறது. ஆனால் அதைத் தாண்டிய எதோ ஒன்று என் விரல்களில் மின்சாரம் பாய்ச்சி என் சிந்தனைக்களுக்கு வார்த்தைகள் கொடுப்பதை உணர முடிகிறது.
பல பதிவுகள் draft டாக கலைந்து போன படுக்கை போல ஒழுங்கின்றி இருக்கின்றன. அவற்றை சீர் செய்து இந்த வருடத்தின் முதல் இசைப் பதிவை வெளியிட விருப்பம்.
பார்ப்போம்.
காரிகன்
ReplyDeleteஇணையத்தை விட்டு வெகுவாகத் தான் விலகி விட்டீர்கள். தங்களது பதிவு வெளியாகி நாட்கள் பல கடந்துவிட்டனவே.
மீண்டு வாருங்கள்.விரியும் சிறகுகளாய் உங்களது பதிவுகள் பறந்து பவனி வரட்டும்.
ஆழ்ந்த இழப்பு ...
ReplyDeleteஉங்களுக்குத் தெரியாதல்ல
trauma நேரிட வாய்ப்பு இருக்கிறது போஸ்ட் என்று சொல்வார்கள்..
ஆளுமையே மாறிவிடும்
எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது
நான் எதிர்பாரா ஒரு சந்தர்பத்தில் எனது தாய் மாமா உயிரிழந்த பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி ...
பத்துஆண்டுகள் இருந்தது
நல்ல நண்பர்கள் ரசனை மீள முடியா புள்ளியில் மனநல மருத்துவரிடம் சென்றுவிடுவது நல்லது
இழப்பின் வலி உணர்ந்தவன் என்பதால் சொல்கிறேன்
வாருங்கள் அருள் ஜீவா,
ReplyDeleteவிரைவில் ஒரு இசைப் பதிவு வெளிவரும் என்ற எண்ணத்துடன் உங்களுக்கு எனது எனது நன்றி.
வாங்க மது,
ReplyDeleteபார்த்து பல நாட்கள் ஆனது போலிருக்கிறது. இழப்பின் வலி மிகுந்த ஆழமானது. உங்களின் அக்கறை குறித்து மகிழ்ச்சி. நன்றி.
வீடு மாற்றம், பிறகு சில திருப்பங்கள் என இணையம் குறித்த சிந்தனையை மூடுபனி போல மாற்றிவிட்ட காரணங்களினால் என் பார்வையை இங்கே திருப்ப முடியவில்லை.
எழுதுகிறேன். மீண்டும். மற்றபடி வேறு எந்த அதிர்ச்சிகரமான காரணங்களில்லை. பண்ணை வீட்டில் ஓய்வு எடுப்பது போன்ற உணர்வு வந்தது இணையம் வராத இத்தனை மாதங்களில். அது ஒரு உற்சாக ஓய்வு.
நன்றி உங்களுக்கு மீண்டும்.
நன்றி காரிகன் தங்கள் மறு பிரவேசத்துக்கு. அப்பாடா ! ("பூவே பூச்சூடவா " பத்மினியைப் போல ) எத்தனை முறைதான் உங்கள் blog திறந்து ,திறந்து பார்த்து ஏமாந்து போவது.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.
அன்புடன் ரவி.
ஆமாம்.எல்லாம் ஏதோ ஒரு காலகட்டம் வரைதான். அதன் பிறகு கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிடுகிறது. இனி வருங்காலத் தலைமுறைகளாவது இதைப் பற்றியெல்லாம் எழுதுமா அல்லது படிக்குமா தெரியவிலைலை. தங்கள் பதிவுகளை புத்தகமாகவோ அல்லது மின்நூலாகவோ மாற்றுவது அவசியம். எனது உதவி தேவைப்பட்டால் அணுகவும்.
ReplyDelete