Thursday 23 January 2020

வேடிக்கை இசை ஞானிகள்

திரு சவுந்தர் என்பவரின் இசை பற்றிய பதிவுகளை நான் ஆர்வத்துடன் படிப்பதுண்டு. எனக்கு இப்போது தோன்றுவதெல்லாம் இவர் எதற்க்காக எம் எஸ் வி, கே வி மகாதேவன், சுதர்சனம், லிங்கப்பா, ஜி ராமநாதன் போன்றவர்களைப்  பற்றி  தேவையில்லாமல் எழுதுகிறார் என்பதுதான். திரு சவுந்தர் உங்கள் முகமூடியை கழற்றி விடுங்கள்.  இளையராஜாவை பெரிய இசை சகாப்தம் என்று புகழ எதற்காக இத்தனை நகாசு வேலைகள்? உங்களைப் போன்ற இரா வாசிகள் என்ன எழுதினாலும் இண்றைய இசை வட்டத்தில் உங்கள் இரா இல்லவே இல்லை என்பதே உண்மை. வந்தனம்.





8 comments:

  1. காரிகன்
    தங்களது பதிவு பெரியதாயினும்,சிறியதேயாயினும் இ.ரா. வை குறைத்து மதிப்பிடுவதில் மட்டும் குறைவதேயில்லை. எல்லோருக்கும் ஒரு கால கட்டம் உண்டுதானே. இ.ரா. கோலோச்சியிருந்த காலத்தில் எம்.எஸ்.வி. காணாம்ல் தானே போயிருந்தார்.அதற்காக அவர் மெல்லிசை மன்னன் இல்லை என்றாகிடுமா? இவர்களெல்லாம் காலத்தை வென்ற இசை ஜாம்பவான்கள்.இவர்களை இன்றைய இசையோடு ஒப்பிடுவதே அபத்தம்.

    ReplyDelete
    Replies
    1. இ.ரா கோலோச்சிய காலத்திலும் மெல்லிசை மன்னர் தனக்குரிய இடத்தை இழக்கவில்லை! தலைக்கனத்தோடு என்றும் நடக்கவில்லை! அன்றும் இன்றும் மமதை குறையாத இ.ரா. எதைஎதையோ பேசி வதைக்கிறார்! அன்று தள்ளாத வயதுவரை தாளம்தப்பாது காற்றுன்மொழியை தன் 'ஆர்மோனியப் பெட்டியில்'இசையின் மெட்டுக்களை இழைத்து இசைத்து மெருகேற்றிக் கொண்டிருந்தார்! இப்போது 30,40 ஐக்கடந்து எத்தனை இசையமைப்பாளர்கள் அத்தனையும் புதுவிதமாய் ஈர்க்க இ.ரா.வை காணவே இல்லை! ஒரே படத்தில் தேசிய விருது வாங்கிய ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய பின்னும் அடக்கமாய் இருக்க ... இந்த அடிப்பொலிகள் கூட்டத்தில் இ.ரா அப்படியே வேதாந்தம் பேச ரஹ்மான் தொடங்கி இமான்,ஹாரிஸ்,ஜீ.வி.பி.,அனிருத் என புதிய மெட்டுக்களை ஹிட்டாக்கும்போது இ.ரா., இன்றும் எதிர்பார்ப்பது தன்பருமை ... தற்பெருமை மட்டுமே ... இல.லை என்றால் ஆஸ்கர் நாயகனை 'எங்கிட்ட நீ 500 பட வேலைசெஞ்ச நான் சொல்லக்கூடாது நீயே சொல்லுன்னு இவரே சொல்லலாமா! இனிய பாடல்கள் யார் தந்தாலும் இரசிப்பதே இசை இரசிகரின் விருப்பம்,இதில் இ.ராவின் துதிபாடுவதில் விருப்பமில்லை! இராகத்திற்கு தேவன்,கடவுள் என வெட்டிப்பேச்சில் எள்ளளவும் உடன்பாடில்லை!

      Delete
    2. அனானி நண்பருக்கு,

      நான் சொல்ல நினைத்ததையே நீங்கள் இங்கே பதிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  2. நலம் பேணுக காரிகன்

    ReplyDelete
  3. நன்றி நண்பரே . நீங்களும் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. இளையராசா இசையின் உச்சம் காரிகன்

    ReplyDelete
    Replies
    1. அது உங்கள் கருத்து நண்பரே

      Delete
  5. //உங்களைப் போன்ற இரா வாசிகள் என்ன எழுதினாலும் இண்றைய இசை வட்டத்தில் உங்கள் இரா இல்லவே இல்லை என்பதே உண்மை. வந்தனம்.//
    hiii hey hey hey....hohohohoho....kannai thorakkanum saamy......

    ReplyDelete