Sunday 9 November 2014

இசை விரும்பிகள் XXII -எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


ஒரு கருப்பு வெள்ளைப்  புகைப்படம், முற்றத்தில் தெறிக்கும் சூரிய வெளிச்சம், தூண்கள் நிரம்பிய வீடு, ரசாயன மாற்றமடைந்து சருகாகிவிட்ட மஞ்சள் நிறம் பூசிக்கொண்ட  புத்தகப் பக்கங்கள், ஒரு இன்லேன்ட் கடிதம், பொத்தான்கள் கொண்ட ஒரு பழைய ரேடியோ,  பின் ஒரு பழைய பாடல்..... இவை நமது மன ஆழத்தில் துயில் கொண்டுவிட்ட துயரமான, களிப்பான, வேதனைச் சுகமான நினைவுகளை நோக்கி நம்மை விரைந்து செலுத்தும்  வியப்புகள்....

                                       

                                              எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.


             நீண்ட நாட்கள் கழித்து எனது பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர்களின்  சந்திப்பே ஒரு உற்சாக ஊற்றுதான்.  குன்ஹா தீர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல், தண்டனை என்று அவன் அப்போது நிகழ்ந்தவைகளை  சூடாக விவாதிக்க ஆரம்பித்தான். எனக்கோ இந்த அரசியல் பார்வைகளில் அதிக ஈடுபாடு எப்போதுமே கிடையாது. நீதி, நேர்மை என்பதெல்லாம் நம் நாட்டில் நேர்மையாக இருப்பதாக நான் என்றுமே தீவிரமாக எண்ணியதேயில்லை. மேலும்  என்னிடம் அரசியல் பேசினால்  எனது எதிர்வினை கடைசியில் "அப்படியா? இருந்துவிட்டுப் போகட்டுமே." என்பதாகத்தான்  இருக்கும்.  என் நண்பனோ முன்னை விட முனைப்பாக அரசியல் கட்சிகளை சாடத் துவங்க  நான், "அரசியல் மதம் இரண்டும் பொதுவெளியில் தவிர்க்கப்படவேண்டிய விவாதங்கள்." என்றேன் அவனிடம். "நீ சொல்வது சரிதான்" என்று உடனே ஒத்துக்கொண்டவன் ."வேறு என்ன பேசலாம்?" என்று கேட்டான். "பொதுவாக இசை பற்றி பேசலாம். உனக்குப் பிடித்த ஐந்து பாடல்களைக் குறிப்பிடு" என்று வேறு பாதைக்கு அவனை இழுத்து வந்தேன். இன்னும் துடிப்பாக உடனே என் யோசனைக்கு செவிசாய்த்தான். இரண்டு நிமிடங்கள் செலவழித்து ஐந்து பாடல்களை குறிப்பிட்டான்.  கீழ்க்கண்டவைகள் எப்போதும் ரசிக்கும் அவன் விருப்ப ஐந்து.

நினைவோ ஒரு பறவை-சிகப்பு ரோஜாக்கள்.
ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்-ஜானி.
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை.
பூ மாலையே தோள் சேரவா-பகல் நிலவு.
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து-  வயசுப்பொண்ணு.

    நாங்கள் 70-80களைச் சார்ந்தவர்கள் என்பதால் இது எனக்கு வியப்பாக இல்லை. அவன் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாமே எனக்கும் விருப்பமானவையே. குறிப்பாக நினைவோ ஒரு பறவை என்ற பாடலை நான் அதிகம் நேசித்ததுண்டு. சாலையில் நின்றுகொண்டும் எதோ  கடைக்கருகில் சதைத்தூணாக மாறி செய்யவேண்டிய வேலையைச் செய்யாதும்  வானொலியில் ஒலித்த பல பாடல்களை நான் என் பால்ய பருவத்தில் ரசித்துக் கேட்டவன். அவை பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களாகத்தான் இருக்கும். பள்ளிப் பருவத்தில் நாம் கேட்கும் கானங்கள்தானே பசுமையாக நம்மில் துளிர்த்துக்கொண்டிருகின்றன!

    "அதெல்லாம் சரி. அது ஏன்  காஞ்சிப் பட்டுடுத்தி பாடல்? இது உன் தேர்வு போல தெரியவில்லையே?" என்றேன். "எப்படி சரியாக கண்டுபிடித்தாய்?" என்றவன், "எனக்குப் பிடிக்கும் ஏனென்றால் என் ஆளுக்கு ரொம்பப் பிடிக்கும்." என்றான் கண் சிமிட்டியபடி. நான் எதிர்பார்த்ததுதான். "உன் மனைவிக்குத் தெரியுமா இது?" என்று கேட்டேன். ஏனென்றால்  அவன் காதல் கதை நம் சமூகத்திலிருக்கும் ஏராளமான தோல்வியடைந்த அமர காவியங்களில் ஒன்று.

     சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, "ஆனால் என்ன ஒன்று பார்த்தாயா? இது ஐந்துமே இளையராஜா பாடல்கள்." என்றான் உணர்சிவசப்பட்டவனாக. அது ஒரு தேவையில்லாத உணர்ச்சியாக எனக்குத் தோன்றியது. ஏனென்றால்  அது உண்மையில்லை என்று எனக்குத்  தெரியும். அவன் சொன்னதில்  நான்கு இளையராஜா இசையில் வந்த பாடல்கள். கடைசியில் அவன் குறிப்பிட்ட   காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து என்ற பாடல் 78 இல் வந்த வயசுப் பொண்ணு என்ற படத்தில் இடம் பெற்றது. அதற்கு இசை அமைத்தது  எம் எஸ் விஸ்வநாதன். இதை நான் அவனிடம் தெரிவித்த போது இரண்டு முறை நம்பாத சிரிப்பு சிரித்தான். சரிதான். சிலர்  மண்டைகளைத்  திறந்து நேரடியாக கபாலத்தில் உண்மையை ஊற்றினாலும் ஒரு பலனுமில்லை என்று என் முயற்சியை கைவிட்டுவிட்டேன். என் நண்பனைப் போலவே  பலரும் இந்தக் காஞ்சிப் பட்டுடுத்தி பாடலை  இளையராஜாவின் இசை  என்றே கருதுகிறார்கள். இது  நானறிந்த ஒன்றுதான். ஏன் நானே எனது பால்ய வயதில் இந்தப்  பாடலை அப்படித்தான் நினைத்திருந்தேன். படத் தலைப்பும் வயசுப் பொண்ணு என்று பாரதிராஜா வகையறாக்களின் தலைப்பு  போல இருந்ததும்  இந்தப்  பிழை நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.

  புதிதாக திருமணமான பெண்ணொருத்தி தன் கணவன் வீட்டில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற மூளை மழுங்கிய ஆணாதிக்க சிந்தனை வரிக்கு வரி தெறித்தாலும்  கேட்பதற்கு மந்திர மயக்கத்தைக் கொடுக்கும் கானம்.  ஒரு இடத்தில் கூட நம் ரசனையை சிதைக்காத வகையில் நளினமாக நடை பயிலும்  மிக அலாதியான பாடல் இது.

      இப்போது பாதியில் விட்டுவிட்டு வந்த என் நண்பனை மீண்டும் பார்ப்போம். "என் பட்டியல் முடிந்தது. இப்போது நீ சொல்." என்று என்னைக் கேட்டான். இதைச் சொல்லிவிட்டு உடனே, "நீ டி ஆர் மகாலிங்கம்  பாட்டையெல்லாம் சொல்லுவியே" என்று கலவரமடைந்தான் . எனக்கு அது சற்று ஆச்சர்யமாக இருந்தது. அடடே என்னைப் பற்றி கொஞ்சமேனும் சரியாகக் கணித்திருக்கிறானே என்று எண்ணினேன்.  "டி ஆர் மகாலிங்கம் வரை போகமாட்டேன்." என்ற உறுதிக்குப் பிறகு நான் சொன்னேன், "சொன்னது நீதானா? பாடல் எனக்குப் பிடித்த ஒன்று."  உடனே , "நான் அடுத்து இதைத்தான் சொல்ல நினைத்தேன்." என்றான் அவன். "ஏன் இதையும்  உன் ஆள் ரொம்பவும் விரும்பிக் கேட்பாளோ?" என்றேன். "அதில்லை. நல்ல பாடல். அப்பறம் பாச மலர் படத்தில் ஒரு அருமையான பாடல்..." அது என்ன பாடல் என்பதை அவன் மறந்துவிட்டான். "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல.." என்று நான் ஆரம்பித்ததும் "அதேதான். ச்சே சான்சே இல்லை." என குதூகலித்தான்: "கேட்டா அழுகை வந்துரும். இல்ல?" என்றான்.   "உண்மைதான். ஆனால் ஒன்று. இதையும் இளையராஜா பாடல் என்று சொல்லிவிடாதே." என்றேன்.  "அப்ப இல்லியா?" என்று போலியாக வியப்பு காட்டினான். எனக்கு எரிச்சல்தான் வந்திருக்கவேண்டும் மாறாக   சிரிப்பு வந்தது.  " நாம்  அரசியல் பற்றியே பேசியிருக்கலாம்." என்றேன்.

     எழுபதுகளின் நேர்த்தியான இன்னிசை  அதிகம் விவாதிக்கப்படாத ஒன்று. பெரும்பாலும் இந்த காலகாட்டம் ஹிந்தி இசையின் ஆதிக்கம் நிறைந்ததாகவும் தமிழிசை பின் இருக்கைக்கு  போய்விட்டதாகவும் ஒரு நிரூபனமற்ற கருத்து பரவலாக சிலரால் பரப்பப்படுகிறது.  எழுபதுகளின் இன்னிசையை என்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தும்  முயற்சியில் நான் எழுதும் ஏழாவது பதிவு இது.  இவற்றில் மொத்தமாக  நான் சேகரித்துச் சொல்லியிருக்கும் பாடல்கள் அப்போது வந்ததில் பாதி அளவு கூட இருக்காது.  இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையையாவது பதிவு செய்வது அவசியம் என்பதைத் தாண்டி சில  முரட்டுக் கருத்துகளுக்கு முடிவு கட்டவும்  சில மூடப்பட்ட கதவுகளை திறக்கவும் தேவைப்படும் ஆயுதம் என்றே நான் எண்ணுகிறேன்.

      மதன மாளிகையில் மந்திர  மாலைகளா உதய காலம்வரை உன்னத லீலைகளா என்ற பாடல் ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் இடம்பெற்ற கனவு கானம். அப்போது அதிகம் கேட்டதில்லை. ஏனோ பிடித்ததில்லை.  75ஆம் ஆண்டு  காலில் நடந்த அறுவைச் சிகிச்சை ஒன்று என்னை ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் முடக்கிப்போட்டது. அம்மா மட்டும் என்னுடன் இருக்க என் சகோதரனும் சகோதரிகளும் தினமும் என்னை வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு போவது எனக்குப்  பழகியிருந்தது. அடுத்த வார்டில் தனியாக இருந்த ஒரு வயதான தாய் ட்ரான்சிஸ்டரில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பார். குறிப்பாக மதன மாளிகையில் என்ற இந்தப் பாடலை அப்போதுதான் முழுமையாகக் கேட்டேன். அதன் மெட்டும் ராக தாள நுணுக்கங்களும்  முழுதும் புரியாவிட்டாலும் எதோ ஒரு வசீகரம்  அந்தப் பாடலை ரசிக்கவைத்தது.  இன்றும் இந்தப் பாடல் எனக்கு நான் தங்கியிருந்த மருத்துவமனையின் வாசனையையும் அந்த நீண்ட தாழ்வாரங்களையும், காலில் தினமும் எதோ ஒரு கூர்மையான கம்பி கொண்டு டிரெஸ்ஸிங் செய்தபோது அனுபவித்த வலியையும் அப்படியே திரும்ப கொண்டுவருகிறது.  நாஸ்டால்ஜ்யா! நினைத்தை முடிப்பவன் படத்தின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடலாம் பாடலாம் என்ற பாடலும் இதே மருத்துவமனை நினைவுகளை என்னுள் புதுப்பிக்கும்.

        நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரியுதடா  என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எங்கள் ஊரிலிருந்த  பிரகதாம்பாள் என்ற திரை அரங்கில் இருப்பது போன்ற நினைவே வரும். பட இடைவேளையின் போது மிகப் பொருத்தமாக இந்தப் பாடல் ஒலிக்கும். இது மணிப்பயல் என்ற படத்தில் வந்தது என்று அறிந்தேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இசை எம் எஸ் வி யாக இருக்கலாம்.

    பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ, நிலவே நீ சாட்சி மன  நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்,  தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே - நிலவே நீ சாட்சி படத்தின் இந்தப் பாடல்கள் தரமானவை.  குறிப்பாக பொன்னென்றும் பூவென்றும் பாடலில் எஸ் பி பியின் இளமை துள்ளும் வசீகரக் குரலை ரசிக்கலாம்.

      நீல மலர்கள் ( அனுராக் என்ற ஹிந்திப் படத்தின் நகல்) என்று ஒரு படம் 79 இல் வந்தது. கமலஹாசன்-ஸ்ரீதேவி நடித்தது. இதில் ஒரு காவியப் பாடல் உண்டு. வசியம் செய்யும் இசை கொண்ட தாலாட்டும் மெலடியுடன் எம் எஸ் வி அமைத்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா என்ற பாடல்தான் அது. பார்வையற்ற பெண்ணொருவள் தன் காதலன் வழியே இந்த உலகைப் பார்க்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தை இப்பாடல் மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்தும். எத்தனை அழகான கற்பனை! அதை இன்னும் அழகேற்றும் என்ன அபாரமான காவியக் கவிதை வரிகள்! பல்லவியைத் தாண்டி சரணத்துக்குள் செல்லச் செல்ல பார்வையற்ற உலகின் இருண்ட சோகத்தைக்  கூட ரசிக்கும் இன்ப மனநிலை நமக்கு வந்துவிடக்கூடிய ஒரு இதயமில்லா இன்னிசை.
     
   கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் என் வாழ்க்கை உன்னோடுதான் லலிதா (76) என்ற படத்தில் வந்த இந்தப் பாடல் ரேடியோ நாட்களின் சுவையை பலருக்கு இன்னமும் உணர்த்தக்கூடியது. மரபிசையை விட்டு விலகாத மெட்டும் வாணியின் வெள்ளிக்குரலும் துருத்தாத இசையமைப்பும் எத்தனை அழகாக ஒன்றுசேர்ந்து விருந்து படைக்கின்றன! இதே படத்தில் வரும்  சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது  பாடலும் கேட்பதற்கு சுகமானது.

   நான் சில எம் எஸ் வி பாடல்களை இளையராஜாவின் இசையாக நினைத்ததுண்டு. அதில் ஒன்றுதான்     அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா  வணக்கத்துக்குரிய காதலியே என்ற பாடல். வணக்கத்துக்குரிய காதலியே என்ற படத்தில் வரும் பாடலிது. இது மாலைமதி  பத்திரிகையில் (ஆரம்பத்தில் மாலைமதியில் ஆங்கில காமிக்ஸ் கதைகள் வந்ததன.)  எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய ஒரு புதினம். இதே படத்தின் அதிகம் கேட்கப்படாத மற்றொரு இனிமையான கீதம் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான். இந்தப் பாடல் செல்லும் விதமே ஒரு ஊஞ்சலில் ஆடுவதைப் போலிருக்கும். இரண்டும் செழுமையாகச் செதுக்கப்பட்ட இசைச் சிற்பங்கள். 

    79இல் வந்த படம் ஒரே வானம் ஒரே பூமி. ஐ வி சசி இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த இந்தப் படம் முக்கால்வாசி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதற்கு இசையமைத்தது  எம் எஸ் விஸ்வநாதன்.  அந்நிய மண்ணில் எடுக்கப்படும்  படங்களுக்கான  சிறப்பான பொருத்தமான மேலும் இனிமையான  இசையை கொடுப்பதில் எம் எஸ் வியை விட்டால் அப்போது வேறு யார் இருந்தார்கள்? எண்பதுகளில் ஜப்பானில் கல்யாணராமன் என்று ஒரு படம் வந்தது.  அதில் இருக்கும் ஒரு பாடலில் கூட   ஜப்பானை நினைவு படுத்தும் எந்த சங்கதியும் இருக்காது. எதோ அமிஞ்சிகரையில் எடுக்கப்பட்டதைப் போன்ற   உணர்வுதான் வரும்.  ஒரே வானம் ஒரே பூமி படத்தின்  கும்மாள கீதமாக ஒலிக்கும் சொர்கத்திலே நாம்  அடியெடுத்தொம் வெகு சுகமோ சுகமாக என்ற பாடல் குதூகல முத்திரையை கொண்டது. பிரமாண்டமான இசையமைப்பு கொண்ட மிகச்  சிறப்பான பாடல். உலக சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கொஞ்சம் காம்யுனிஸ்ட் சிவப்பு தென்படும்   அட்டகாசமான பாடல் ஒரே வானம் ஒரே பூமி ஒரே ஜாதி ஒரே நீதி.  சொல்லும் கருத்தைக் கொண்டு இது ஏறக்குறைய யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலின்  தொனியைக் கொண்டது என்று சொல்லலாம். இதிலுள்ள மற்றொரு அழகான பாடல் மலைராணி முந்தானை சரிய சரிய. இதை முதலில் கேட்டபோது இதில் ஜாலி ஆபிரகாம் வாணி ஜெயராமின் ஒவ்வொரு வரிக்கும்  லலல லலலா ( படத்தில் ஒரு அமெரிக்க ஆசாமி நம்மூர் கே ஆர் விஜயாவை காதலிப்பார். இந்த லலல அவர் பாடுவது.) என்று பின்பாட்டு பாடுவது பெருத்த நகைச்சுவையாக இருந்தது.  நயாகரா நீர்வீழ்ச்சியை குறிக்கும் பாடலிது என்று நினைக்கிறேன். அந்த அமெரிக்க காதலன் கே ஆர் விஜயாவை நினைத்து லலலா என்று பாடுவது ஒரு வேடிக்கை. நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் நம் மீது படியும் சிலிர்ப்பைக் கொடுக்கக்கூடிய பாடல்.

   அவன் அவள் அது என்று எழுத்தாளர்  சிவசங்கரியின் கதை படமானது. இதில் ஒரு தென்றலாக வீசும் கானம் உண்டு. இப்படிப் போகும்  இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம். உண்மையில் தம்பதிகள் இவ்வாறுதான் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்கிறார்களா என்ற சந்தேகத்தை ஒதுக்கிவிட்டு இந்தப் பாடலை ரசிக்கலாம். மார்கழிப் பூக்களே இளந்தென்றலே கார்மேகமே என்று மற்றொரு அருமையான பாடலும் இதிலுண்டு. அந்தக் காலம் முதற்கொண்டு என்ற பாடல் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அதிகம் நான் கேட்டதில்லை அப்போது. ஜிஞ்சினக்க சின்னக்கிளி  சிரிக்கும்  பச்சைக்  கிளி  என்ற ராஜபார்ட் ரங்கதுரை பாடலின் மெட்டில் அமைந்த பாடல்.

      76 இல் வந்த ஒரு படம் பேரும் புகழும். இசை எம் எஸ் வி. இதில் அவளே என் காதலி கொடி  நீருக்குள்ளே மலர் மேலே என்ற ரம்மியமான பாடல் இருக்கிறது. வழக்கமான எம் எஸ் வி பாணிப் பாடல். இதுவும் அதிகம் airplay அடையாத பாடல். ஆனால் எத்தனை நளினமான கீதம்!

     நீ வருவாய் என நான் இருந்தேன்- சுஜாதா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மெலடியின் மேகத் தடவல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். அசாதரணப் பாடல்.  இதன் ராகமும் மெட்டும் வரிகளும் ஒருசேர துளித்துளியாக கசிந்து மனதை நிரப்பும்.

   அப்போது ஹிட்லர் உமாநாத் படத்தில் வரும் சுருளிராஜனின் வில்லுப்பாட்டொன்று மிகப் பிரபலமடைந்தது. எம் எஸ் வி பலவிதமான இசை வடிவங்களை அளிப்பதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்த பாடல். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான இசை முயற்சியாக உருவான  இந்தப் பகடிப் பாடல் அப்போது இளவட்டங்களில்  அதிக பிரசித்திப் பெற்றது. பூப்பறிச்சு மாலை கட்டி  ஆமாடி தங்கம்  எனத் துவங்கி ஒரு பாரம்பரிய வில்லுப்பாட்டுக்கான எல்லா விழுமியங்களையும் ஒருங்கே கொண்டு இடையிடையே சுருளிராஜனின் முத்திரை நகைச்சுவையுடன் (பெரியோர்களே தாய்மார்களே உங்க மனைவிமார்களே, தப்பா எழுதினாதானே அழி ரப்பர் தேவை, மகாத்மா காந்தி என்ன சொன்னார் என்ன சொன்னார் டேய் என்னடா சொன்னாரு?, வில்லை எடுத்தவன் வில்லன், புல்லரிக்குதுண்ணே-பாத்து மாடு மேஞ்சிறப்போகுது ) கேட்பதற்கே அதகளமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒரே saving grace  இந்தப் பாடல்தான் என்று நினைக்கிறேன். இதில் ஒரு நம்பமுடியாத பாடல் உண்டு. நம்பிக்கையே மனிதனது  சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் என்ற இப்பாடல் குறிக்கும்  நாயகன் யார் தெரியுமா? கொஞ்சம் தயாராகுங்கள் அதிர்ச்சிக்கு. அடால்ப் ஹிட்லர். ஜெர்மனியில் கூட ஹிட்லருக்கு இப்படியொரு வந்தனப் பாடல் இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கோழையான கணவனுக்கு தன்னம்பிக்கையூட்ட மனைவி ஹிட்லரைக் கொண்டு வீரம் கற்பிக்கும் அபூர்வப் பாடல்.  இந்தப் படத்தைப் பற்றி விகடன்  விமர்சனத்தில்  "ஹிட்லர் என்ன அவ்வளவு நல்லவரா? அவரை  எதோ காந்தி ரேஞ்சுக்கு புகழ்கிறார்கள் இந்தப் படத்தில்! " என்றொரு ஆச்சர்ய வாக்கியம் இருந்தது.

   ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி- 79இல் வந்த நங்கூரம் என்ற படப் பாடலிது. வானொலிகளில் அப்போது  அதிகம் மிதந்தாலும் நிறைய பேருக்கு இப்போது ஞாபகமிருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கைகளில் பிடிபடும் வண்ணத்துப் பூச்சியின்  உணர்வை கொடுக்கும் பாடல்.

       79ஆம் ஆண்டு வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பாவின் தயாரிப்பில் வந்த ஒரு படம் திசை மாறிய பறவை. இதில் ஒரு அபாரமான கானம் கேட்ட முதல் நொடியிலேயே என்னைக் கவர்ந்தது.  கிழக்குப் பறவை மேற்கே பறக்குது அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது என்று பல்லவி துவங்கி ஒரு லயமான வசியப்படுத்தும் தாளக்கட்டுடன் சரணம் சரணமாக பயணித்து ஒரு மோக நிலையை கேட்பவர்க்கு கொடுக்கும் மந்திர கானம். குறிப்பாக காவிரி என்ன கொள்ளிடமென்ன என்று டி எம் எஸ் கணீரென்று பாடும் அந்த இரண்டாவது சரணம் மற்றும் சரணத்தின் முடிவில் வேறு மெட்டுக்குத் தாவும் காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை என்ற இடம் கேட்பதற்கு சுகமான ஆனந்தம். என்ன ஒரு தாளம்! என்ன ஒரு பாவம்! மரபை மீறாத மந்திர இசை.
     
  ரதிதேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான  நினைவுகளின் இதழ் மணி ஓசை   ஒரு வீடு இரு உலகம் (80)  என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் எ ல் மகாராஜன்- சசிரேகா பாடியது. எம் எஸ் வி இசையில் இருக்கும் நீர்த்துப் போகாத நமது பாரம்பரிய இசை இழைகள் இந்தப் பாடலை ராக தூரிகை கொண்டு ரம்மியமாக வரைவதைக்  கேட்கலாம். ஒரு ஆழமான ரசிப்பிற்கான மிகப் பொருத்தமான பாடல்.

    குழலும் யாழும் குரலினில் ஒலிக்க கும்பிடும் வேளையிலே  சிறு வயதில் இதை ஒரு திரைப்படப் பாடல் என்று   எண்ணியிருந்தேன். பல அருமையான கிருஸ்துவ கானங்களை படைத்த எம் எஸ் வி யின் பரவசப்படுத்தும் பரலோக கீதம். 

     எண்பதுகளின் துவக்கத்தில் நான் அதிகமாக இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஒரு நாள் வழக்கம்போல சிலோன் வானொலியின் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய பாடலொன்றைக் கேட்டேன். கேட்டதும் வியப்பு மேலிட்டது. இவர் இப்படியெல்லாம் கூட பாடல்கள் அமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்தாலும் அதை மீறிய ரசனைக்கான பாடலாக அது என்னைத் தீண்டியது. இன்றும் அதே தீண்டல் என்னை சுகமாக அணைப்பதை இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் உணர்கிறேன். அந்தப் பாடல்  உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா. 82இல் வந்த சிம்லா ஸ்பெஷல் என்ற படத்தின் துடிப்பான இசையுடன் கூடிய துயரப் பாடல். எம் எஸ் வியின் இன்னிசை  இன்னும் இளைக்கவில்லை என்ற செய்தியை ரசிகர்களுக்கு உணர்த்திய பாடல். தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் என்ற வரிகளுக்குப் பிறகு எஸ் பி பியின்  மின்னல் ஆலாபனை மேலிருந்து கீழிறங்குவது ஒரு அழகியலின் நேர்த்தி. இதே படத்தின் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் ஒரு  டப்பாங்குத்துப் பாடலாக இருந்தாலும் அப்போது வரிசை கட்டிவந்த அதே வகைப் பாடல்கள் போலில்லாது சற்று நளினமாக இருக்கும். இதை விட லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா என்றொரு மிகச் சிறப்பான பாடல் இதிலுண்டு. கண்ணியமான காதல் கானம். மெட்டை உடைக்காத அழகான வார்த்தைகள். தழுவும் இசை. பரவசப்படுத்தும் பாடல். ஒரு பாடலை நம் மனதருகே கொண்டு வருவதற்கு எம் எஸ் வி அமைக்கும் மெட்டுக்கள்தான் எத்தனை நுணுக்கமானவை! ரசனைமிக்கவை! அவைகள்  அற்புதத் தருணங்கள் என்னும் கருத்தோடு  முரண்பட முடிந்தால்  உங்களுக்கு ஒரு நோய் பிடித்த இசை ரசனை இருந்தால் மட்டுமே முடியும்.
     
    பில்லா என்ற ஹிந்தி டான் படத்தின் நகல் 80இல் வந்தது. இதிலிருந்துதான் ரஜினிகாந்த் வேறு அரிதாரம் பூசிக்கொண்டார். அதுவரை எதோ கொஞ்சமாவது இயல்பான நடிப்பை அவரிடம் காணமுடிந்தது. பில்லாவிற்குப்பின் அமிதாப்பச்சனை அப்படியே நகல் எடுக்க ஆரம்பித்தார். பாதை மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றவை. இருந்தும் நான் அடிக்கடி கேட்க விரும்பாத பாடல்களாகவே அவை இருந்தன. நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு என்ற பாடல் அப்போது ரஜினிகாந்தைப் பற்றி பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த சில கறுப்புக் கருத்துக்களை பகடி செய்வதுபோல இருக்கும்.  மை நேம் இஸ் பில்லா சற்று விறுவிறுப்பான நேர்த்தியான பாடல்.

   இதே ஆண்டில் பொல்லாதவன் என்றொரு படம் ரஜினிகாந்த் நடிப்பில் வந்தது. இசை எம் எஸ் வி. இதில் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்டது.  ரஜினி ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடினார்கள். நல்ல பாடல்தான். அதோ வாராண்டி வராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்றொரு காதல் பாடல் இதிலுண்டு. கேட்பதற்கு சுவையாக இருக்கும். வழக்கமான எம் எஸ் வி மெலடி. ஆனால் நான் இவற்றைவிட அதிகம் ரசிப்பது நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா என்ற மிக மென்மையான கீதத்தைதான். கேட்கத் திகட்டாத பாடல்.

  82இல் போக்கிரி ராஜா என்ற படம் வெளிவந்தது. ஏ வி எம் முரட்டுக்களைக்குப் பிறகு ரஜினியை வைத்து எடுத்த இரண்டாவது படம் என்று ஞாபகம். கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு, நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போன்ற அப்போதைய காலத் தேவைக்கான பாடல்கள் அதில் இருந்தன. எனக்கு சற்றும் பிடிக்காத பாடல்கள்.  இளையராஜாவின் அதிரடியான பொதுவாக எம்மனசு   தங்கம் பாடல் பாணியோடு  எம் எஸ் வியால்  ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் விடிய விடிய சொல்லித் தருவேன் என்ற பாடல் ஒரு குளுமையான நிலவின் சுகத்தையும், ஒரு எரிந்து முடிந்த நெருப்பின்  கதகதப்பையும்  கொண்டது.

      அஞ்சலி என்றொரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்த சமயத்தில் அதிலுள்ள அஞ்சலி அஞ்சலி எங்கள் கண்மணி என்ற பாடலைச் சிலாகித்து என் நண்பர்கள் பேசுவது வழக்கம். நான் அப்போது தமிழ்ப் பாடல்களை கேட்கும் விருப்பங்களை விட்டு வெகு தூரம் வந்திருந்தேன். விரும்பாவிட்டாலும் அந்த அஞ்சலி பாடல்கள்  எதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதில் விழுந்த வண்ணமாக இருந்தன. ஒரு பாடல்கூட என் ரசனைகேற்றதாகவோ, நவீனமாகவோ அல்லது கேட்கத் தூண்டும்படியாகவோ எனக்குப் படவில்லை. எல்லா பாடல்களும் இளையராஜாவின் வழக்கமான வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane music. இம்மாதிரியான நீர்த்துப்போன சக்கைகளை ரசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் இருந்ததற்காக சற்று வேதனை கூட வந்தது. அப்போது தமிழ்வாணன் என்றொரு நண்பர் சுசீலா பாடிய மற்றொரு குழந்தைப் பாடலைக்  குறிப்பிட்டு, "இது அதைவிட நன்றாக இருக்கும்." என்றார். அது முன்பு நான் கேட்ட பாடல்தான். ஆனால் என்னால் அப்போது அந்த ஒப்பீட்டை பூரணமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வருடங்கள் கழித்து அவர் சொன்ன அந்தப் பாடலை மீண்டும்  கேட்டபோது  அவர் கூறியது உண்மைதான் என்று உணர்ந்தேன். அது  மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே என்ற 86இல் வந்த நிலவே மலரே படத்தின் பாடல். நமது மரபிசை ராகத்தின் மீது மேற்கத்திய வண்ணம் பூசப்பட்ட ஒரு ஹாண்டிங் மெலடி. துருத்திக்கொண்டு நம்மை துன்புறுத்தும் மேற்கத்திய தாளங்கள் (அதுவும் கூட மிகவும் பாமரத்தனமாக) அலறும் அஞ்சலிப்பட  பாடல்கள் போலன்றி  இந்த கானம்  ஒரு நதியோரத்து நாணலின்  அழகைக்  கொண்டது. சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன், மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்த வேளை போன்ற கேட்பதற்கினிய பாடல்களும் இதில் இருக்கின்றன.

    கீழே உள்ளது எழுபதுகளில் எம் எஸ் வி அல்லாத பிற இசை அமைப்பாளர்களின் இசையில் வந்த சில ஏகாந்தப் பாடல்கள். இதையும் விட அதிகமான அளவில் பல சுவையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றை சேகரிப்பதில் இருக்கும் சிரமம் இந்தப் பதிவை இன்னும் நாள் கடத்தும் என்பதால் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

பேசு மனமே நீ பேசு பேதை மனமே பேசு- புதிய வாழ்க்கை.இசை-கே வி எம். எஸ் பி பியின் துவக்ககால அற்புதங்களில் ஒன்று.

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை, கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா?- எங்கள் தங்க ராஜா. கே வி எம்.

கல்யாண கோவிலின்  தெய்வீக கலசம்- சத்யம்.கே வி  எம். சற்றே தெலுகு சாயல் வீசும் பாடல். ரசிக்கவைக்கும் கானம்.

நதிக்கரையோரத்து நாணல்களே என் நாயகன் அழகைப் பாருங்களேன்- காதல் கிளிகள். கே வி எம். இந்தப் பாடலைப் பற்றி ஒரு ஆச்சர்யமான தகவல் உண்டு. அது தமிழ்த்திரையிசையில் இந்தப் பாடலில்தான் மிக வேகமாக  தபலா இசைக்கப்பட்டிருக்கிறது என்பதே. இரண்டு சரணத்திலும் வரும் தபலா இசையைக் கேட்டால் இந்தத் தகவல் பொய்சொல்லவில்லை என்று நாம் உணரலாம்.

ஆடுவது வெற்றி மயில் மின்னுவது தேவி இதழ் - அக்கா தங்கை. சங்கர் கணேஷ்.

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே- கனிமுத்து பாப்பா,- டி வி ராஜு. ஷர்மிலி என்ற ஹிந்திப் படத்திலுள்ள Khilte hain gul yahan    பாடலின் நகல். இதற்கு இசை எஸ் டி பர்மன்.

மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே-  உன்னைத்தான் தம்பி. -விஜய பாஸ்கர்.

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணை தான் பார்த்ததுண்டு- கண்ணாமூச்சி வி குமார்.

பனிமலர் நீரில் ஆடும் அழகை ரசிக்கும் மனதில் சுகமே, மிக நவீனமாக அமைக்கப்பட்ட பாடல். ஏறக்குறைய எண்பதுகளின் மேற்கத்திய சாயலைக் கொண்ட பாடல். மோகனப் புன்னகையின் ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே - உறவு சொல்ல ஒருவன். விஜய பாஸ்கர்.

ஆவணி மலரே ஐப்பசி மழையே -தொட்டதெல்லாம் பொன்னாகும் விஜய பாஸ்கர். ஆஹா! என்ன ஒரு அற்புதக் கானம்! இதைக் கேட்கையில் மேகத்தில் ஊர்வலம் போவதைப் போன்ற உணர்வைப்  பெறலாம்.

கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்- ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு- வி குமார்.

ஆனந்தம் அது என்னடா அதை காணும் வழி சொல்லடா,தொடவரவோ தொந்தரவோ - இரு நிலவுகள். இசை ராஜன் நாகேந்திரா. இரண்டுமே ஓடை ஒன்றில் பாதம் நனைய நடக்கும் சுகமானவை.

வரவேண்டும் மஹராஜன் தரவேண்டும் சுக ராகம்- பகடை பனிரெண்டு இசை- சக்கரவர்த்தி. அருமையான பாடல். கேட்ட நொடியிலேயே என்னை வீழ்த்திவிட்டது இந்தப் பாடல். இதை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜன்னலருகில் அமர்ந்திருக்கையில் திடீரென ஒற்றைக் காற்று ஒன்று  முகத்தை முத்தமிட்டுச் செல்வதைப் போன்ற  ஒரு திடீர் சுகம் இந்தப் பாடல். ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுகொண்டிருந்தபோது அங்கு வந்த என் நண்பனின் மகன் "இதையெல்லாம் எப்படிக் கேட்கிறீர்கள்?" என்று அதிர்ச்சியடைந்தான். "இன்னும் இருபது வருடம் ஆனதும் இதற்கான பதிலை நீயே தெரிந்துகொள்வாய்." என்றேன் நான் அவனிடம்.

    ஒரு முறை  ஒரு சாலையோரக் கடையொன்றில்  இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்தபோது   அருகிலிருந்த டிபிகல் சென்னைவாசிகள் மூவர் தங்கள் புதிய அலைபேசி பற்றி அளந்துகொண்டிருந்தார்கள். ஒருவன் சொன்னான்; "புதுசா ஒரு ரிங்டோன் வச்சிருக்கேன். கேளுங்கடா". எதோ பாண்டி நாட்டு கொடியின் மேலே தாண்டிக் குதிக்கும் மீனப் போல ரகப் பாடல் ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால்  நான் கேட்ட  பாடல் என்னை சற்று திகைக்க வைத்தது. இதையெல்லாம் கூட இந்த அனிரூத் தலைமுறையினர் கேட்கிறார்களா என்ற ஆச்சர்யம் எழுந்தது. அந்தப் பாடல்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே. அவன் உற்சாகமாகச் சொன்னான் : "இந்தப் பாட்டு எப்பிடியிருக்கு பாத்தியா? என்னா மீசிக்? இன்னொரு பாட்டு போடுறேன். இந்த பாட்டையும் கேளேன்." சற்று நேரத்திற்குப் பிறகு  ஒலித்தது நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா. அவனுடைய குதூகலிப்பும் ரசனையும் என்னை மிகவும் வசீகரித்தது. அவன் கண்டிப்பாக ஊதா கலரு ரிப்பனு வகைப் பாடல்களை தனது ரசனையின் அடையாளமாகக் கொண்டவனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தாலும்  அதைத் தாண்டி இளையராஜாவின் இன்னிசைத்துளிகளைக் கேட்க அவன் காட்டிய ஆர்வம் ஒரு விதத்தில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு.  2014இல் ஒரு இளைஞன் 1980களை வியப்புடன் பார்ப்பது ஒரு முதிர்ந்த ரசனைதான்.  ஆனால்   1980களைச் சேர்ந்தவர்கள் அதே எண்பதுகளில் நின்றுகொண்டு எழுபதுகளையும் அறுபதுகளையும் இகழ்ச்சியுடன் நோக்குவது ஒரு வீழ்ந்த ரசனை.

     வாழ்கையின் வழிகளில் சில வெளிச்சங்களைத் தேடும் விருப்பம் சில சமயங்களில்  நமக்கு ஏற்படும் ஒரு கட்டாயம். இந்தத் தேடல்களே நமது அனுபவங்களை செழுமையாகக்குகின்றன. கடந்த கால வண்ணங்களின் வசீகரத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தேடல்தான் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது. புதிய கதவுகளைத் திறந்தது. எல்லையில்லா வானத்தில் நிலவைத் தாண்டி ஒளிரும் ஏராளமான   இசை நட்சத்திரங்களை அடையாளம் காட்டியது. குளங்கள்தான் எத்தனை பெரியவை என்ற எண்ணம் இயல்பானதுதான். ஆனால் அது கடல்களைக் காணும் வரைதான்.



அடுத்து: இசை விரும்பிகள் XXIII - எழுபதுகள்: பாதையெல்லாம் பரவசம்.



107 comments:

  1. வாழ்த்துக்கள் காரிகன்,
    பதிவுக்குள் போவதற்குள் அந்த அழகான இரு ரேடியோப் பெட்டிகளைப் பார்த்ததுமே பரவசமான ஒரு 'மூட்' வந்துவிடுகிறது. அதன்பிறகு நிச்சயமாக தேனமிர்தப் பாடல்களின் வரிசை உலா இருக்கும் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை. இளங்காலைக் குளிரில் லால்பாக் பூங்காவில் பசுந்தரையை மிதித்துக்கொண்டு நடந்துசெல்வது போன்ற உணர்வு பதிவு நெடுகிலும் கிடைக்கிறது.

    ஆச்சரியப்படுத்துவது உங்கள் உழைப்புதான். அதுவும் எந்தப் பத்திரிகைகளிலும் இது வரப்போவதில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், இணைய உலகிற்கு மட்டுமே எழுதுகிறோம், அதுவும் இதே உணர்வுடன் இருக்கும் கூட்டம் நிறைய இருந்தபோதிலும், 'கருத்துத் தெரிவிக்கும் தொழில்நுட்பம் தெரிந்நத கூட்டம்' இந்தச் சிந்தனைக்கு எதிரானவர்கள் என்பது தெரிந்திருந்தும்- எத்தனை சிரமமெடுத்து இத்தனைத் தகவல்களோடு இந்தக் கட்டுரைத் தொகுப்பை எழுதிவருகிறீர்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது.
    உங்கள் பதிவுகளில் தொடர்ச்சியாக நிறையப் பாடல்களின் அணிவகுப்புகள் வந்தபோதும் சுவாரஸ்யம் கெடாமல் படிக்கத் தூண்டுபவை உங்கள் எழுத்தில் இருக்கும் வார்த்தை ஜாலங்கள். ஒரு தேர்ந்த படிப்பாளிக்கு மட்டுமே சாத்தியம் இது.
    'கைகளில் பிடிபடும் வண்ணத்துப்பூச்சியின் உணர்வைக் கொடுக்கும் பாடல் இது' என்கிறீர்கள்.
    'மெலடியின் மேகத் தடவல்' என்கிறீர்கள்.
    படித்துக்கொண்டிருப்பதிலிருந்து ஒரு கணம் விலகி, அந்த வார்த்தைகளை மனதில் அசைபோட்டு ரசித்துவிட்டு பிறகுதான் தொடர்ந்து படிக்கச்செல்வதுபோல் எழுதுகின்ற நேர்த்தி உங்களிடம் இருக்கிறது.
    \\மெட்டை உடைக்காத அழகான வார்த்தைகள். தழுவும் இசை. பரவசப்படுத்தும் பாடல். ஒரு பாடலை நம் மனதருகே கொண்டு வருவதற்கு எம் எஸ் வி அமைக்கும் மெட்டுக்கள்தான் எத்தனை நுணுக்கமானவை! ரசனைமிக்கவை! அவைகள் அற்புதத் தருணங்கள் என்னும் கருத்தோடு முரண்பட முடிந்தால் உங்களுக்கு ஒரு நோய் பிடித்த இசை ரசனை இருந்தால் மட்டுமே முடியும்.\\
    இத்தனை அழகாகவும் துல்லியமாகவும் கட்டுரையின் நோக்கத்தைச் சொல்லுவதற்கு எத்தனை வார்த்தைத் திறன் வேண்டும்!
    அப்புறம் சில எழுத்துப்பிழைகள்.... ஆரம்ப பாராவின் மூன்றாவது வரியில்- 'புத்தகப் பக்கங்கள்' என்றிருக்கவேண்டும்.
    படத்தின் பெயர் 'ராஜபார்ட் ரங்கதுரை'தான் 'ராஜபாட்' அல்ல.
    \\இது இரவா பகலா நீ நிலவா கதிரா என்ற பாடல்தான் அது. பார்வையற்ற பெண்ணொருவள்\\
    ஒருவள் என்பதைத் தமிழ் இலக்கணம் ஏற்பதில்லை. 'ஒருத்தி'தான்.

    தொடருங்கள்..........


    ReplyDelete
  2. காரிகன் சார்,
    நீண்ட உழைப்பு கொண்ட நல்ல பதிவு. பாராட்டுகிறேன். எழுத்தில் நல்ல நயம் இருக்கிறது. ஒன்று புரியவில்லை. இளையராஜாவை புகழும் பத்திகள் எழுதுகிறீர்கள்.
    "சாலையில் நின்றுகொண்டும் எதோ கடைக்கருகில் சதைத்தூணாக மாறி செய்யவேண்டிய வேலையைச் செய்யாதும் வானொலியில் ஒலித்த பல பாடல்களை நான் என் பால்ய பருவத்தில் ரசித்துக் கேட்டவன். அவை பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களாகத்தான் இருக்கும்."
    "அதைத் தாண்டி இளையராஜாவின் இன்னிசைத்துளிகளைக் கேட்க அவன் காட்டிய ஆர்வம் ஒரு விதத்தில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. "
    அதேவேளையில் அவரை தாக்குவதையும் செய்கிறீர்கள்.
    'எல்லா பாடல்களும் இளையராஜாவின் வழக்கமான வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane music. இம்மாதிரியான நீர்த்துப்போன சக்கைகளை ரசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் இருந்ததற்காக சற்று வேதனை கூட வந்தது."
    "எண்பதுகளில் ஜப்பானில் கல்யாணராமன் என்று ஒரு படம் வந்தது. அதில் இருக்கும் ஒரு பாடலில் கூட ஜப்பானை நினைவு படுத்தும் எந்த சங்கதியும் இருக்காது. எதோ அமிஞ்சிகரையில் எடுக்கப்பட்டதைப் போன்ற உணர்வுதான் வரும். "
    ஏனிந்த முரண்பாடு?

    ReplyDelete
  3. நன்றி அமுதவன் அவர்களே,

    முதல் கருத்தை வெளியிட்டதற்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டியதற்கும். திருத்தி விட்டேன். ஆனால் ஒருத்தி என்பதை நான் ஒருத்தன் என்பதன் எதிர்ப்பதமாக பார்க்கிறேன். ஒருவன் என்றால் ஒருவள் என்பதுதான் நியாயம் என்பது என் எண்ணம். என் கல்லூரி நாட்களிலேயே நான் எழுதிய கதைகளில்இந்த ஒருவள் வந்துவிட்டாள். இதைத் தவிர மேலும் தீவிரமான பல தமிழ்ச் சீர்திருத்தங்கள் என்னிடம் இருக்கின்றன. அதையெல்லாம் சொன்னால் சில தமிழ்வாதிகள் என்னை எதிரியாகப் பார்க்கும் பார்வை ஏற்படும். எனவே ஒருவள் ஒருவளாகவே இருக்கட்டும்.

    உங்களின் மனங்கனித்த பாராட்டுக்கு நன்றி. பத்திரிக்கையோ இணையமோ எனக்கு இதில் வேறுபாடே தோன்றவில்லை. என்னைப் பொருத்தவரை நான் எழுதும் பத்திகள் எனக்கு திருப்தி கொடுக்கவேண்டும். அதை எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை லைக்ஸ் வந்தது என்பதைப் பற்றியெல்லாம் நான் எண்ணுவதேயில்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை. வரும் காலத்தில் இணைய எழுத்தாளர்களே அச்சு எழுத்தாளர்களைவிட அதிகம் பேசப்படப்போகிறார்கள். இணைய எழுத்தே சில முடிவுகளைத் தீர்மானிக்கப் போகிறது என்பதை தீவிரமாக நம்புவன் நான்.

    நீங்கள் பாராட்டும் எனது வார்த்தை ஜாலங்கள் எல்லாம் திடீரென்று தோன்றும் மின்னல் வரிகள். நான் இந்தப் பதிவில் ரொம்ப யோசித்து எழுதியது ------பல்லவியைத் தாண்டி சரணத்துக்குள் செல்லச் செல்ல பார்வையற்ற உலகின் இருண்ட சோகத்தைக் கூட ரசிக்கும் இன்ப மனநிலை நமக்கு வந்துவிடக்கூடிய ஒரு இதயமில்லா இன்னிசை.------- என்பதைத்தான். அந்தப் பாடலை விவரிக்க அதிக நேரம் செலவழித்தது அதன் தரத்திற்கு தேவைப்பட்ட ஒன்றுதான்.

    எழுபதுகளின் இன்னிசையை ஏழு எட்டு பதிவுகளுக்கு எழுத முடிந்தால் தமிழிசையின் பொற்காலமான அறுபதுகளை எப்படி விட்டு வைக்க முடியும்? அதை நான் சரியாக எழுதவில்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. அறுபதுகளை விவரிக்கும் நீண்ட பதிவுகளை விரைவில் எழுத உத்தேசித்துள்ளேன்.

    உங்களின் தொடரும் ஆதரவுக்கு நன்றி. மீண்டும் இதே பதிவில் சந்திப்போம்.

    ReplyDelete
  4. வாருங்கள் குமார விஜயன்,

    பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. இளையராஜாவைப் பற்றிய எனது பார்வையில் முரண்பாடு இருப்பதாக நீங்கள் நினைப்பது இயற்கையானதுதான். நான் சிறிய வயதில் கோலிகுண்டு,பட்டம், கில்லி, டயர் ஓட்டுவது, கண்ணாமூச்சி ஆட்டம் போன்ற பால்ய வயதுக்குரிய எல்லா சிறு பிள்ளை சந்தோஷங்களையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இப்போது செய்வதில்லை. இதை முரண்பாடாகப் பார்ப்பீர்களா?

    இளையராஜாவின் இசை எனக்குப் பிடிந்திருந்தவரை அவரை ரசித்தேன். என்றைக்கு அவர் இசை மீது நாட்டம் அகன்று போனதோ அன்றே அவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு அடுத்த நகர்தல் என்று பார்த்தால் இந்த முரண்பாடு தோன்றாது.

    எம் எஸ் வி யின் போக்கிரிராஜா பாடல்களை கேட்க நான் விரும்பியதில்லை என்று எழுதியிருக்கிறேன். அது மட்டும் ஏன் உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லை?

    ReplyDelete
  5. ஹலோ காரிகன்

    அடடா மறுபடியும் எழுபதுகளில் நீந்தும் நினைவுகளின் நீட்சியா?

    ///அந்நிய மண்ணில் எடுக்கப்படும் படங்களுக்கான சிறப்பான பொருத்தமான மேலும் இனிமையான இசையை கொடுப்பதில் எம் எஸ் வியை விட்டால் அப்போது வேறு யார் இருந்தார்கள்? எண்பதுகளில் ஜப்பானில் கல்யாணராமன் என்று ஒரு படம் வந்தது. அதில் இருக்கும் ஒரு பாடலில் கூட ஜப்பானை நினைவு படுத்தும் எந்த சங்கதியும் இருக்காது. எதோ அமிஞ்சிகரையில் எடுக்கப்பட்டதைப் போன்ற உணர்வுதான் வரும். ஒரே வானம் ஒரே பூமி படத்தின் கும்மாள கீதமாக ஒலிக்கும் சொர்கத்திலே நாம் அடியெடுத்தொம் வெகு சுகமோ சுகமாக என்ற பாடல் குதூகல முத்திரையை கொண்டது.///

    ஹி..ஹி.. சொர்கத்திலே நாம் அடிஎடுத்தோம் என்ற பாடலை கூர்ந்து கேளுங்கள் . நம்ம கூடுவாஞ்சேரியில் எடுத்த பாட்டு மாதிரிதான் இருக்கும் . அமெரிக்காவின் மைக்கேல் ஜாக்சன் பாட்டு மாதிரி இருக்காது . ஜப்பானில் படம் எடுத்தால் ஜப்பான் நாட்டுக்காரன் இசையையா போட முடியும்!?எம்.எஸ்.வி . வாசிச்சா குதூகலம் . இளையராஜா வாசிச்சா குண்டக்க மண்டக்கவா? எத்தனை நாளைக்குதான் இப்படி ஓட்டப் போறீங்களோ ? நீங்கள் எப்படி உங்களை நடுநிலை பதிவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்?


    எம்.எஸ்.வி. போலவே இளையராஜாவும் வெளிநாட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு அற்புதமாகவே இசை அமைத்திருப்பார். ப்ரியா படம் ஒன்று போதாதா?

    ReplyDelete
  6. ஹலோ காரிகன் , தங்கள் பதிவு அமுதவன் போன்றோருக்கு சொற்சுவை,பொருட்சுவை என பலசுவைகளை உடையதாயிருக்கலாம்.எம் .எஸ் .வி.க்குப் பிறகு வி.குமார் ,விஜயபாஸ்கர்,சங்கர்கணேஷ் போன்றவர்களெல்லாம் சிறந்த இசையமைப்பாளர் களாக தெரியும் தங்களுக்கு இளையராஜாவை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் மனமில்லை?மனம் வருடும் பாடல்கள் இளையராஜாவால் இசைக்கப்படவில்லையா?அல்லது மற்றவரிலிருந்து தனித்திருக்க வேண்டும் என்ற தற்பெருமையா?இசைரசிகன் இசையை ரசிக்கவேண்டுமேயொழிய இசையமைப்பாளரையல்ல.மறுக்க வேண்டுமென்பதற்காக பிறரை குறைவாக மதிப்பிடுதல் நல்ல ரசிகனுக்கு அழகல்ல .2014ஐச் சார்ந்த ஒருவர் இளையராஜாவின் பாடலை ரிங் டோனாக வைத்திருந்ததைக் கண்டு ஆச்சரியம் கொண்டதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள்.எப்போது இசைஞானியின் ரசிகர்கள் எம்.எஸ் .வி.யைதங்களைப்போல குறைத்து மதிப்பீடு செய்தார்கள் ?இசைஞானியைப் போல அவரது ரசிகர்களும் பெருந்தன்மை யானவர்களே.

    ReplyDelete
  7. காரிகன்

    /// 'எல்லா பாடல்களும் இளையராஜாவின் வழக்கமான வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane music.///

    அஞ்சலி படத்தின் பாடல்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை கடைந்தெடுத்த ரசனையற்றதனம் என்று சொல்லலாம் . ஊரெல்லாம் பேசாத பாட்டுக்களை எடுத்துப் போட்டு புகழ்ச்சி கீதம் பாடும் நீங்கள் ஊரே உலகமே பாராட்டித் தள்ளிய அஞ்சலி பாட்டை தூக்கி எறிந்து பேசுகிறீர்கள். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட் ! நீங்கள் பேசுவது வினோதம் . கொஞ்சம் திமிர்வாதம்.

    உனக்கென்ன மேலே நின்றாய் என்ற எம்.எஸ்.வி யின் பாடலும் வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane மியூசிக் தான் என்பதை மறந்து விடக் கூடாது. ஆனாலும் ஹிட்!

    எம்.எஸ்.வி யின் நீர்த்துப்போன சக்கைகளை ரசிக்க முடியாமல் போனதாலேதான் மக்கள் இசைஞானியின் இசைக்கு செவிமெடுத்தார்கள் என்ற உண்மையை எப்போது ஏற்றுக் கொள்ள போகிறீர்களோ?

    70 கள் எம்.எஸ்.வி. இசையின் வறண்ட காலம் .

    ReplyDelete
  8. திரு. காரிகன் அவர்களுக்கு,

    உங்கள் நண்பரிடம் அவருக்கு பிடித்த பாடல்கள் பற்றி கேட்டு அவர் சொன்ன பாடல்கள் எல்லாம் ராஜா சார் இசை தான். ஒரு பாடலை தவிர்த்து. அவருக்கு புரிந்த ஞானம் உங்களுக்கு இன்னும் புரிபடவில்லை. அதை போல இன்றைய இளைஞர்கள் இசைஞானி பாடல்களை ரிங் டோனாக வைத்து கேட்டு கொண்டு இருப்பதையும் பதிவில் சொல்லிருக்கீர்கள். அவர்களுக்கு புரிந்த ஞானம் உங்களுக்கு புரியவில்லையா? இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீர்களா?

    ஜப்பானில் கல்யாணராமன் பட கதைக்கும், ஒரே வானம் ஒரே பூமி கதைக்கும் நிச்சயமா வித்தியாசம் இருக்கும். வெளிநாட்டில் நடக்கும் கதைகளம் மட்டும் தான் ஒன்று. நீங்கள் ஜப்பானில் கல்யாணராமன் படம் பார்க்கவில்லை என்பது நீங்கள் கூறியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த படத்தில் ''சின்ன பூ சின்ன பூ வண்ணமெல்லாம்'' ''அம்மம்மோய் அப்பபோய்'' என்கிற இரண்டு பாடலை படத்துடன் பாருங்கள். அந்த கதைக்கு தகுந்தமாதிரி தான் பாடல் போட முடியும். அதை விட்டு ஜப்பானில் கல்யாணராமனுக்கு communisum பாடல்கள் மாதிரி போடவா முடியும்? பிரியா படத்தில் ''அக்கறை சீமை அழகினாலே'' பாட்டை கேளுங்கள். அது கதைக்கு தகுந்தமாதிரி அன்றைய காலத்திற்கு ஏற்றவாறும், இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இருக்கும். நீங்கள் கூறிய பாடல்கள் இன்றைய இளைஞர்களிடம் கொண்டு போய் கேட்க வையுங்கள். நிச்சயமா உங்களை ஒரு மாதிரியாக தான் பார்பார்கள் (நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்).

    மண்ணில் வந்த நிலவே..என் மடியில் பூத்த மலரே'' எனக்கும் பிடித்த பாடல் தான். ஆனால் இதன் காலகட்டம் அறுபதை குறித்த பாடல் மாதிரி இருக்கும். அது ஒரு குழந்தை வைத்து நகரும் கதை. அதனால் அந்த குழந்தையின் தாய் அந்த குழந்தையை தாலாட்டு போன்று பாடுகிறாள். ஆனால் ''அஞ்சலி'' படம் முழுவதும் குழந்தைகள் கதை அதுவும் அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு apportment இல் நடக்கும் கதை. ஒரு கற்பனை செய்து பாருங்கள். மண்ணில் வந்த நிலவே பாடலை இந்த படத்தின் பாடலாக கொஞ்சம் நினைத்து பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும். வெஸ்டேர்ன் கலந்து உங்களுக்கு தந்தது ஒரே நாராசமா இருக்கா? அப்புறம் ஏன் அந்த பாடல்கள் இன்னும் கேட்கபடுகிறது? உங்கள் காதுக்குள் ஏதோ புகுந்து கொண்டது போல..நீங்கள் நல்ல ENT டாக்டர் பார்ப்பது நல்லது. இப்படியெல்லாம் பேசுகிறேன் என்று தப்பாக எடுக்க வேண்டாம். நீங்கள் காட்டும் வெறுப்பு (இசைஞானி இசையின் மேல் அல்ல) தான் என்னையும் பேச வைக்கிறது.

    முந்தய உங்களின் பதிவின் நீட்சி போல் இல்லை. தீடீரென எண்பதின் காலகட்ட பாடல்களையெல்லாம் இழுக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. 2014இல் ஒரு இளைஞன் 1980களை வியப்புடன் பார்ப்பது ஒரு முதிர்ந்த ரசனைதான். ஆனால் 1980களைச் சேர்ந்தவர்கள் அதே எண்பதுகளில் நின்றுகொண்டு எழுபதுகளையும் அறுபதுகளையும் இகழ்ச்சியுடன் நோக்குவது ஒரு வீழ்ந்த ரசனை.//

    நிச்சயமாக அந்த இளைஞர்களுக்கு இருக்க கூடிய ரசனை தயவு செய்து உங்கள் ரசனையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். இன்றைய பாடல்கள் காட்டிலும் பழைய (இசைஞானி பாடல்கள்) கேட்க கேட்க இனிமை என்பதை. அவர்கள் தங்களின் ரசனை நிச்சயமாக உயர்த்திக்கொண்டு தான் வருகிறார்கள். நாங்களாவது என்பதோடு நின்று கொண்டு இருக்கோம். நீங்கள் இன்னும் அறுபது, எழுபத்தைந்து குள்ளே தான் இருக்கீர்கள்? நீங்கள் கூறிய பழைய அய்யா, குமார், சங்கர் கணேஷ் பாடல்களை ரசித்து கேட்கிறோம். நீங்கள் இசைஞானியின் இசையை, அவர் புகழை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படுவது போல்தான் உங்கள் பதிவுகள் இருக்கிறதே, நல்ல கண்கூடாக தெரிகிறது.

    //எழுபதுகளின் இன்னிசையை என்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தும் முயற்சியில் நான் எழுதும் ஏழாவது பதிவு இது. இவற்றில் மொத்தமாக நான் சேகரித்துச் சொல்லியிருக்கும் பாடல்கள் அப்போது வந்ததில் பாதி அளவு கூட இருக்காது. இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையையாவது பதிவு செய்வது அவசியம் என்பதைத் தாண்டி சில முரட்டுக் கருத்துகளுக்கு முடிவு கட்டவும் சில மூடப்பட்ட கதவுகளை திறக்கவும் தேவைப்படும் ஆயுதம் என்றே நான் எண்ணுகிறேன்.// சில முரட்டு கருத்துகளுக்கும், மூடப்பட்ட கதவுகளை திறக்க வேண்டுமானால்..சாவியை சரியான அளவில் வைத்து திறக்க வேண்டும். பாதியளவில் திருப்பி விட்டு கதவு திறக்க முயற்சிக்கக்கூடாது. கதவு திறக்காது. அப்பொழுதான் முரட்டு கருத்தாலும் வந்து விழும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் இருக்கும் என்பது போல நீங்கள் என்ன தான் இந்த பாடல் இப்படி, அந்த பாடல் இப்படி என்று திருகி திருகி பார்த்தாலும் அந்த பாடல்கள் எல்லாம் ஹிந்தி சாயலும், மக்கள் மறக்க பட்ட பாடல்கள் தான். அந்த ஐந்து வருடங்களில் ஒரு இருநூறு பாடல்கள் தேறும் என்றளவில் தான் இருக்கும். நீங்கள் உங்களையும் ஏமாற்றி, தமிழ் திரைசையில் நடந்த வறட்டு பக்கத்தை பிடித்துகொண்டு கதற வேண்டாம். இன்றைய பாடல்களில் ஏற்படுகிற இந்த வறட்டு இசை தான் அந்த காலகட்டத்தில் நடந்தது. அன்று இசைஞானி வந்ததுபோல இனி ஒருவர் வருவார் அல்லது இந்த நாரச இசையை, வறட்டு இசையை நாம் கேட்க வேண்டிய தலைஎழுதுதான் ஏற்படுமோ? என்று அச்சமாக இருக்கிறது. எழுபதுக்குமேல், இசைஞானி பாடல்கள் தான் என்றுமே நிலைத்து நிற்கும்.

    ReplyDelete
  10. திரு. காரிகன் அவர்கள்,

    நீங்கள் எம்.எஸ்.வி. அய்யாவின் பாடல்கள் பற்றி எழுதுவது எல்லாம் சரி. ஆனால் விஜயபாஸ்கர், குமார். வேதா, சங்கர்கணேஷ், மற்றும் ஊர் பேர் தெரியாத ஒன்று, இரண்டு படத்துடன் ஓய்ந்த இசையமைப்பாளர்கள் பாடல்களும் சிறந்தது என்று கூறுவது என்னால் நமது தமிழ் திரை இசை மட்டுபடுத்துவது போல இருக்கிறது. இன்றும் நூறு இசையமைப்பாளர்கள் வருகிறார்கள், போகிறார்கள். படத்தில் ஒரு பாடல் அல்லது முக்கி தக்கி இரண்டு பாடல் கேட்பது மாதிரி அறிமுக படத்தில் தான் வருகிறது. அவர்களெல்லாம் சிறந்த இசையமைப்பாளர்கள் என்று நாளை வரலாற்றில் உங்களால் சொல்ல முடியும்.

    நீங்கள் கூறிய ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பாடல் எந்த வகை சேர்த்தி என்று எனக்கு புரியவில்லை. அது அன்று மிகபெரிய ஹிட் பாடல் என்றால் நிச்சயமாக இன்றும் அது நிலைத்து இருக்கும். எனக்கே புதியதாக இருக்கிறது. கன்னட பாடல் கேட்டது போல இருக்கிறது.

    ReplyDelete
  11. சால்ஸ்,

    உங்கள் பதிலை ரசித்துப் படித்தேன். அதெப்படி கோபம் கொள்வதாக் கூறிக்கொண்டு இத்தனை சிரிப்பு சிரிப்பாக எழுதுகிறீர்கள்? திறமைதான். நான் அமிஞ்சிகரை என்றதும் நீங்கள் கூடுவாஞ்சேரி என்கிறீர்கள்... பிரியா படப் பாடல்கள் ஒன்றே போதும் என்கிறீர்கள்.. நான் சொன்ன அதே mundane music எம் எஸ் விக்கு தாரை வார்க்கிறீர்கள்... இந்த விளையாட்டுக்கு நான் வரலை.. கொஞ்சமாவது யோசித்து எழுதுங்கள்...

    ReplyDelete
  12. வாங்க அருள் ஜீவா,

    ரொம்ப பார்மல் எழுத்து. ஆனால் ஒன்று.. நீங்கள் இன்னும் என் எழுத்தை முழுதும் உள்வாங்கிப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அதுசரி அதென்ன கடைசியில் ஒரு ஜோக்: இசைஞானியைப் போல அவரது ரசிகர்களும் பெருந்தன்மை யானவர்களே என்று. அதைத்தான் புதிய காற்று தளத்தில் பார்த்தோமே?

    ReplyDelete
  13. காரிகன் அவர்களுக்கு , தங்கள் பதிவை முழுவதும் படிக்கவில்லையென்று எப்படி கணீத்தீர்கள் ?புதிய காற்றில் சார்லஸ் அவர்ளது பதிவு தங்களுக்கும் தங்கள் அபிமான அமுதவன் அவர்களுக்கும் சொந்த அனுபவங்களைப் பகிர்வதாக ,திணிப்பதாக குற்றம் சுமத்துகிறீர்கள் .ஆனால் தங்கள் மனம் கவர்ந்த பாடலாக மதன மாளிகையில் என்ற பாடல் அமைந்ததன் பின்னணி யாக கூறப்பட்டுள்ள காரணம் பொது அனுபவம் சார்ந்ததோ?கடலைப் பார்க்கும் வரைதான் குளம் பெரியதாக காட்சியளிக்கும் என்றறிந்த தாங்கள் ஏன் குளத்தில் நின்றுகொண்டு ஆர்ப்பரிக்கும் ஆழியை ரசிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்?உங்கள் அபிமானி பத்திரிகைக்களில் வெளிவராது என்று தெரிந்தும் தாங்கள் மெனக்கெடுவதாக அனுதாபம் கொண்டாரே .தெரிந்துதானே இசைஞானியை வம்புக்கு இழுக்கிறீர்கள் .வரிந்துகட்டிக்கொண்டு நிறைய பேர் வாதாட வருவார்களென்று . இசைஞானியின் இசையை பழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இளையராஜாவின் இசைகுறித்த தகவல்களில் ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பது தங்கள் பதிவின் மூலம் நன்கு புலப்படுகிறது .

    ReplyDelete
  14. குமார்,

    வருகைக்கு நன்றி. நீங்கள் மிக நீண்ட பதில் சொல்லியிருந்தாலும் அதன் சாராம்சம் ஒன்றுதான். அதை நான் புரிந்துகொண்டேன். ஆனால் அதை என்னால் செயல்படுத்த முடியாது. மன்னிக்கவும்.

    என் நண்பன் கூறியதை நான் எந்தவித புனைவுமின்றி அப்படியே கொடுத்திருப்பதே என்னுடைய நடுநிலையை வெளிப்படுத்துவதாகவே நான் நினைக்கிறேன். என் நண்பன் மட்டுமல்ல நானே கூட இளையராஜாவின் பாடல்களை ஆரம்பத்தில் மிகவும் ரசித்தவன்தான்.எனவே நீங்கள் கூறும் கருத்து ஒரு தோல்வியடைந்த ஒன்று. நான் எங்குமே இளையராஜாவின் பாடல்கள் என்னை கவரந்தேயில்லை என்று சொல்லியிருப்பதாக நீங்கள் (அதாவது உங்களைப் போன்றவர்கள்) எண்ணினால் அதைக் குறிப்பிடவும். திருத்திக்கொள்கிறேன்.எனக்கு இளையராஜாவின் இசையும் பிடித்தே இருந்தது. அதன் பின் என் ரசனை வேறு பக்கம் சென்றது. இப்போதோ இளையராஜாவைப் பற்றி நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன.

    ஜப்பானில் கல்யாண ராமன் படத்தின் ஒரே சகித்துக்கொள்ளக்கூடிய பாடல் எனது பார்வையில் அப்பப்பா தித்திக்கும் இந்த முத்தம் என்ற பாடல்தான். கொஞ்சம் விறுவிறுப்பாக சரியான மேற்கத்திய சாயல் கொண்ட பாடல். மற்ற எல்லாமே கடைந்தெடுத்த சக்கைகள். எம் எஸ் வி யின் இசையை இந்த அறுவை இசையுடன் ஒப்பீடு செய்வது உங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். எனக்கு இது ஒரு அபத்தம். பிரியாவின் அக்கரைச் சீமையிலே பாடல் ஒரு ஆங்கிலப் பாடலின் காப்பி. எனவே உங்கள் பரிந்துரை ஒரு வீண் வேலை. மேலும் இளையராஜாவின் இடையிசை என்ற ஆர்ப்பரிப்பே மேற்கத்திய செவ்வியல் இசையின் அப்பட்டமான நகல். நீங்கள் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அது உங்கள் விருப்பம்.

    அஞ்சலி படப் பாடல்கள் ஒரு அவஸ்தை. காதுக்குள் சுத்தியல் அடிக்கும் வெற்று ஓசை கொண்ட மிக பாமரத்தனமான பாடல்கள் அவை. என் ரசனைக்கு அவை ஒரு சிறிய அளவில் கூட உணவளிக்கவில்லை. அஞ்சலி மட்டுமல்ல அக்னி நட்சத்திரம் படப் பாடல்களும் இதே குப்பைதான். இதை விட மேலான மேற்கத்திய கலப்பு இசை நம்மிடம் ஏராளம் உண்டு. அதில் ஒரு சிறிய அளவே இளையராஜா கொடுத்துள்ளார். இதை நான் விவரிக்க துவங்கினால் உங்களின் ரத்தக் கொதிப்பு அதீதமாக ஏறக்கூடிய அபாயம் இருக்கிறது.

    டெக்னிகலாக இது எழுபதுகளின் இசையை மட்டுமே சொல்வதில்லை. உண்மைதான். அலைகள் ஓய்வதில்லை,ஜானி, பகல் நிலவு படங்கள் என்பதுகளைச் சேர்ந்தவை. இது இதை எழுதியவனாக நான் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம். இதை ஒரு பெரிய குற்றமாக நீங்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனம்.

    ...................தொடரும்.....................

    ReplyDelete
  15. குமார்,

    நான் நான் கடந்துவந்த அனுபவங்களை எந்த வித சார்புமின்றி அவ்வப்போது குறிப்பிடுகிறேன். அதனால்தான் இளையராஜாவை விரும்பும் சம்பவங்களையும் என் பதிவில் காண முடிகிறது. உங்களின் எண்ணப்படி இளையராஜாவை வெறுக்கும் நான் ஏன் என் நண்பன் இளையராஜாவின் பாடல்களை விரும்பியதாகக் கூறியதையும் சில சென்னைப் பையன்கள் இளையராஜாவின் இசையை ரிங் டோனாக வைத்திருப்பதையும் வலிந்து எழுதவேண்டும்? இதனால் என் கோட்டைத்தானே தகர்கிறது? அந்த சம்பவங்களை சொல்லாமல் என்னால் பதிவுகளை எழுத முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது ஒரு முரண்பாடாக உங்களுக்குத் தெரியவில்லையா? இதைத்தான் குமார விஜயன் என்ற நண்பர் மேலே கேட்டிருந்தார்.

    நான் குறிப்பிட்ட அந்த இளைஞன் அதே இசைத் தேடலில் தொடர்ந்தான் என்றால் இளையராஜாவையும் தாண்டிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் நான் முதிர்ந்த ரசனை என்று அழைக்கிறேன். மற்றபடி அவன் இளையராஜா பாடல்களைக் கேட்டான் என்பதால் அல்ல. நீங்கள் என்னுடைய கடைசி பத்தியைப் படித்தீர்களா அல்லது புரிந்துகொண்டீர்களா ( உங்கள் மொழியில் நடிக்கிறீர்களா? ) என்று தெரியவில்லை.

    -----------குளங்கள்தான் எத்தனை பெரியவை என்ற எண்ணம் இயல்பானதுதான். ஆனால் அது கடல்களைக் காணும் வரைதான்.---------------

    நான் கடல்களுக்கு வந்துவிட்டேன். நீங்கள் இன்னமும் குளத்தங்கரையிலேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள். நான் அறுபது எழுபதுகளிலேயே நின்றுகொண்டிருக்கவில்லை. உண்மையில் எண்பதுகள் தொண்ணூறுகளிலிருந்து அங்கு சென்றிருக்கிறேன். இந்த metaphor உங்களுக்குப் புரியவில்லை என்றால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய இயலாது. மன்னிக்கவும்.

    ----நீங்கள் இசைஞானியின் இசையை, அவர் புகழை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படுவது போல்தான் உங்கள் பதிவுகள் இருக்கிறதே, நல்ல கண்கூடாக தெரிகிறது. ------

    இது பெருத்த நகைச்சுவை. இளையராஜா போன்ற தமிழ்த் திரையிசையில் சாதனை படைத்த ஒருவரின் புகழை ஒரு நூறு பேர் படிக்கும் என் எழுத்து மாற்றியமைக்கும் என்று உண்மையிலேயே நீங்கள் எண்ணினால் உங்களைப் பார்த்து பரிதாபம்தான் ஏற்படுகிறது. இளையராஜாவை நான் மட்டம் தட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு நீங்கள்தான் அந்த வேலையை திறம்பட செய்துகொண்டிருக்கிறீர்கள்.

    .......தொடரும்....

    ReplyDelete
  16. குமார்,

    அடுத்து நீங்கள் சொல்லியிருக்கும் கதவை திறக்க சாவியை திருகவேண்டும் என்ற கருத்தை சுயநினைவோடுதான் எழுதினீர்களா? இதுபோன்ற அறிவுரைகளை பள்ளிக்கூட சிறுவர்களே இப்போது ஏளனம் செய்கிறார்கள்.

    ---நீங்கள் என்ன தான் இந்த பாடல் இப்படி, அந்த பாடல் இப்படி என்று திருகி திருகி பார்த்தாலும் அந்த பாடல்கள் எல்லாம் ஹிந்தி சாயலும், மக்கள் மறக்க பட்ட பாடல்கள் தான். அந்த ஐந்து வருடங்களில் ஒரு இருநூறு பாடல்கள் தேறும் என்றளவில் தான் இருக்கும். நீங்கள் உங்களையும் ஏமாற்றி, தமிழ் திரைசையில் நடந்த வறட்டு பக்கத்தை பிடித்துகொண்டு கதற வேண்டாம். -----

    மக்களால் மறக்கப்பட்ட பாடல்கள் என்பது ஒருவிதத்தில் உண்மையே. அதற்காக அவை சிறப்பானவை அல்ல என்று சொல்லிவிட முடியுமா? பொன்மேனி உருகுதே, வாடி எ கப்பகிழங்கே, நேத்து ராத்திரி யம்மா, ருக்குமணி ருக்குமணி, கொலவெறி, கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா,காசு பணம் துட்டு பாடல்கள் பெருத்த வெற்றி அடைந்தவைதான். அந்தப் பாடல்களை எல்லாம் மக்கள் விரும்பினார்கள் என்பதால் உச்சாணிக் கொம்பில் வைத்துவிடமுடியுமா? எது தமிழ்த் திரையின் வறண்ட பக்கம்? நீங்கள் கேட்காத அல்லது கேட்க விரும்பாத காலத்தை வறண்டது என்று சொல்வது உங்களுக்கு எளிது.

    இளையராஜா வந்து மாற்றங்களைச் செய்தார். அவரால்தான் விடிவு காலம் பிறந்தது என்று நீங்கள் எண்ணினால் அது ஒரு மடத்தனமான கற்பனை. சொல்லப்போனால் எ ஆர் ரஹ்மானின் வரவால்தான் ஐ சி யு வில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நமது தமிழ்த் திரையிசைக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்தது. இல்லாவிட்டால் இங்கே ஒரு இசைப் பாலைவனமே உருவாகியிருக்கும். இளையராஜாவின் பாடல்கள் எல்லாமே சாகா வரம் பெற்றவை கிடையாது. அந்த தகுதிக்கு அவரது சில பாடல்களே தேறும். இன்றைக்கு கிளாசிக் என்ற வகையில் இளையராஜாவுக்கு முன்னால் வந்த பாடல்களே நிலைத்து நிற்கின்றன. என்றைக்கும் இதுவே நிதர்சனம்.

    பத்துப் பதிவுகள் இசை பற்றி வந்தால் அதில் பெரும்பாலும் இளையராஜா ரஹ்மான் பிறகு இன்றைய இசை அமைப்பாளர்களின் பாடல்கள் பற்றி எழுதப் படுகிறது. என்னைப் போன்ற சிலராவது நமக்கு அழகான தரமான அருமையான பாடல்களை வழங்கிய அதிகம் கவனிக்கப்படாத தகுதிக்கேற்ற அங்கீகாரம் அடையாத சங்கர் கணேஷ், வி குமார், விஜய பாஸ்கர், ஷியாம், எம் பி ஸ்ரீநிவாசன், போன்றவர்களைப் பற்றி எழுதுகிறோமே. அதைக் கூட தடுத்து "இளையராஜாவைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும்" என்று உங்களைப் போன்றோர் கூச்சலிடுவது ஒரு அருவருப்பான கூத்து. ராஜா விசிறிகள் செக்கு மாடுகள் என்பதையும், அவர்கள் கிணற்றுத் தவளைகள் என்பதையும் நான் சொல்லவேண்டியதில்லை. அதையும் நீங்களே உங்கள் எழுத்தில் அடையாளம் காட்டிக்கொள்கிறீர்கள். அந்த விதத்தில் எனக்கு ஒரு வேலை மிச்சம்.

    ReplyDelete
  17. வாருங்கள் அருள் ஜீவா,

    இந்தப் பதிவின் தலைப்பே நினைவுகளின் நீட்சி என்றிருக்கையில் ஒரு சில தனிப்பட்ட அனுபவங்கள் இடம் பெறுவது இயல்பானது. நான் மதன மாளிகையில் பாடலை மட்டும் அப்படிக் குறிப்பிடவில்லை. இளையராஜாவின் பாடல்களையும் என் அனுபவ கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறேன். அது உங்கள் கண்ணுக்கு படவில்லை போலும். Blind spot. மேலும் அமுதவன் சார்லசின் தளத்தில் இளையராஜாவின் பாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் அனுபவங்களை எழுதப் போகிறீர்களா? என்றுதான் கேட்டிருந்தார். அதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. அதற்குக் காரணம் சால்ஸ் அவரது பால்ய வயதில் என்னமோ வேறு எவரது பாடலையும் கேட்டதேயில்லை என்பதைப் போலவும் இளையராஜா பாடல்கள் மட்டுமே அவர் கேட்டார் என்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்.

    ------------தெரிந்துதானே இசைஞானியை வம்புக்கு இழுக்கிறீர்கள் .வரிந்துகட்டிக்கொண்டு நிறைய பேர் வாதாட வருவார்களென்று . இசைஞானியின் இசையை பழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இளையராஜாவின் இசைகுறித்த தகவல்களில் ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பது தங்கள் பதிவின் மூலம் நன்கு புலப்படுகிறது ----

    வழக்கம் போல எதோ புரிகிறது எதோ புரியவில்லை. தலை சுற்றுகிறது. உங்கள் பெயர் அருள் ஜீவாவா அல்லது ஆஸ்ப்ரின் ஜீவாவா? ஏற்கனவே குமார் என்பவருக்கு இதே கேள்விக்கு பதில் சொல்லியாகிவிட்டது. நீங்கள் என் பதிவுக்குப் புதியவர். பதிவுகள் எழுதும் முன்பே நான் ஏகத்து நிறைய தளங்களில் நிறைய ராஜா பதிவர்கள் மற்றும் அவரது அபிமானிகளுடன் விவாத மோதல்கள் செய்திருக்கிறேன். எனவே உங்களின் இந்த கருத்து முதிர்ச்சியற்றது. நான் எழுதும் பதிவுகளால் தனது புகழ் குறைந்துவிடும் இடத்திலா உங்கள் இளையராஜா இருக்கிறார்? நீங்களே அவரைப் பற்றி இப்படி எண்ணுவது வேடிக்கையாக இருக்கிறது. கண்டிப்பாக நான் அவ்வாறு சொல்லமாட்டேன்.

    ReplyDelete
  18. காரிகன் சார்,
    மன்னிக்கவும், நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடவில்லை. தற்போது நினைவுகளின் நீட்சியைப் படித்தேன். உங்களின் தளத்தின் தோற்றமே இப்போது வித்தியாசமாக முன்னைவிட அழகாக தோற்றமளிக்கிறது. இந்தப் பதிவும் கடின உழைப்பின் பயனாக நன்றாக சுவையான கனி போன்று இனிக்கிறது.
    எழுபதுகளில் வந்த பல பாடல்களைக் குறிப்பிட்டு எழுதும் உங்கள் கட்டுரைகள் அருமை. மேலே உள்ள சில இசை ஞானம் குன்றிய ஆசாமிகள் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்வதே வீண்வேலை. சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். எத்தனை முறைகள் பார்த்துவிட்டீர்கள். இன்னுமா போரடிக்கவில்லை?
    நான் அவ்வளவாக எழுபதுகளின் பாடல்களை கேட்டவனில்லை- அதிலும் நீங்கள் சொல்லும் பல பாடல்கள் எனக்கு ஒரு புதிய அனுபவமே. உனக்கென்ன ஒ நந்தலாலா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசை அற்புதமாக இருக்கும். பிறகு விடிய விடிய சொல்லித்தருவேன் பாடலும் அருமையான பாடல். சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். அமுதவன் சொன்னதுபோல சில உவமைகள் அற்புதமாக இருக்கின்றன.
    இத்தனை நீண்ட கட்டுரைகள் எழுதுவதற்கு கடின உழைப்பும் உண்மையான இசை ரசனையும் தேவை. அது உங்களிடம் நிறையவே இருக்கிறது என்பது அதைப் படிக்கும் போதே தெரிந்துவிடுகிறது. நல்ல பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
  19. மிஸ்டர் பாரத் சாரி பரத் ..."நான் அவ்வளவாக எழுபதுகளின் பாடல்களை கேட்டவனில்லை" என்று சொன்னவர் " சில இசை ஞானம் குன்றிய ஆசாமிகள் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும் " என்று 70களின் எல்லா பாடல்களையும் கேட்ட எங்களைப் போன்றவர்களை பழிக்கிறீர்களே ... உங்களின் இசை ஞானம் எவ்வளவு என்பது இப்போது புரிகிறது . சரியாக கேட்டு வளராதவர் மற்றவரின் ரசனையை இழித்துப் பேச என்ன ஞாயம் இருக்கிறது? ' இசை ஞானம் குன்றிய ஆசாமி' லிஸ்டில் உங்களைதான் வைக்க வேண்டும்.

    ReplyDelete
  20. காரிகன். அருமையான விரிவான பதிவு. பின்னூட்டம் போடலாம் என்றால் எங்கே துவங்குவது என்று தெரிய வில்லை. மீண்டும் ஒரு முறை படித்து இந்த வார இறுதியில் வருகின்றேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  21. ஏ.ஆர் .ரகுமானின் வரவு ஐ.சி.யு.வில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழ் திரை இசையை மீட்டது எனவும் பாலைவனமாக மாறவிருந்ததை சோலையாக மாற்றியது என்ற தங்கள் கூற்று கேட்பதற்கும் ,படிப்பதற்கும் கேளிக்கை யாக உள்ளது .ரகுமான் அவர்கள் பாணி யே தனி.நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமேயொழிய மறுக்கவில்லை .அது போலவே எம் .எஸ் .வி.அவர்களது பாடல்களுக்கென்றும் உள்ள ததனித்தன்மையும் நாங்கள் அறிந்ததே .எக்காலத்திலும் இசைஞானியின் புகழை மட்டுமே பதிவு செய்யவேண்டும் என்று வற்புறுத்தியதில்லை.அபிமான இசையமைப்பாளர் புகழை பலர் அறிய எடுத்துரைக்கலாம் .அதை விடுத்து பிடிக்கவில்லை என்பதால் பழித்துரைத்தல் அநாகரீகமே .தங்களைப்போபோனற சிலர் கிணற்றினுள் அடிபட்டு வீழ்ந்த தவளையைப் போல ஈனஸ்வரத்தில் இசை ஞானியை இழித்துரைப்பது நன்கு புரிகிறது .நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருப்பதே நலம் .இசைஞானியின் புகழ் பரப்ப மனமில்லையெனினும் பரிகாசம் செய்யாமலிருத்தல் நலமே.எம் .எஸ் .வி.யின் அற்புத படைப்புகளுக்கு நாங்களும் ரசிகர்களே .ரசனை தனி மனிதன் சார்ந்தது நமக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை மனம்கவர்ந்த கலைஞனை ,அவர் புகழை பறை சாற்றுவோம். றற

    ReplyDelete
  22. one of the disturbing tendencies in the singing compeition area the judges term certain songs not fit for e really of good compeition and the participants should take up energy songs. i had observed that the songs discarded by the judges are really classics of the seventies eighties. indirectly these so called judges develop encourage certain songs of their choices. the latest one from kaviathalaivan a damn new song by a.rahman is below standard and the singer hari just shouts at the peak of his voice.
    a.r rahmans period is already over......

    ReplyDelete
  23. காரிகனும் அமுதவனும் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் " மக்களிடம் வாக்கெடுத்து ,கருத்துக் கணிப்பு செய்யப்பட்டவை " என்பதை உணராமல் இங்கே பலரும் கருத்துக்களைக் கூறுகிறீர்கள் .அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் கருத்துக்கள்
    அவர்களின் கருத்து முரணாக சொல்பவர்கள் எல்லாம் அவரவர் கருத்துக்கள்.

    காரிகன் இப்போது தான் 1960,1970 களின் பாடல்களை கேட்க்கின்றார் என்பது அவரது எழுத்தில் வெளிப்படுகிறது.அதைவிட தன்னை நடுநிலையானவர் என்று நம்ப சொல்கிறார்.அது தான் சிறந்த நகைச்சுவையாக உள்ளது.

    சார்ல்ஸ் மற்றும் அருள்ஜீவாவின் கருத்துக்கள் நியாயமானவையாக உள்ளன.

    இனிஒரு.காம் [ inioru.com] இணையத்தில் , திரை இசை பற்றி திரு .T.சௌந்தர் எழுதும் கட்டுரைகளை நண்பர்களுக்கு பரிந்துரைக்கின்றேன்.
    தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர் .www.inioru.கம /http://inioru.com/?p=42020

    Vimal

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே14 November 2014 at 10:23

      :)

      High five

      Delete
  24. அன்பு காரிகன்,
    சிறிய பதிவானாலும் சிறப்பாக உள்ளது.ஆனால் பானகத்துரும்பு போல நல்ல இசையைபற்றி சிந்திக்கும் வேளையில் ஏனிந்த தேவையற்ற விவாதங்கள்?. "லோக பின்ன ருசி" அதாவது உலகத்தவர் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான் ருசி. நாம் ஏன் அதைப் பற்றி கவலையோ ,அக்கறையோ கொள்ள வேண்டும்.?. நல்ல எழுத்து நடையில் சுவாரஸ்யமாக எழுதும் திற்ன் கொண்ட நீங்கள் இன்னும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.ரசிக்கலாம்.இப்படிப்பட்ட விவாதங்களுக்கு ஒரு முடிவே இராது. திரு.இளையராஜா அவர்களுக்கு நல்ல கவிஞர் இல்லாததாலேயே அவரது பல மெட்டுக்கள் பாலைவனத்தில் பெய்த மழை போலானது.அந்த வகையினில் அமைந்த பல பாடல்களை வாத்திய இசையில் (அதாவது பாடல் வரிகள் தவிர்த்து) கேட்பது ஒரு சுகமான அனுபவம் என்பது எனது கருத்து. நாராசமான ,கொஞ்சம்கூட கரற்பனை வளமே இல்லாத,அரை வேக்காட்டு கவிஞர்களின்((இப்படி அழைக்கவே மனம் கூசுகிறது) பாடல் வரிகளில் ராஜா அவர்களின் பாடல்களை கேட்டதனாலேயோ என்னவோ உங்களுக்கு இத்தனை ஆக்ரோஷம் வருகின்றது என நினைக்கிறேன்.
    அன்புடன் ரவி.

    ReplyDelete
  25. வாருங்கள் பரத்,

    நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே என்று நினைத்தேன். வருகைக்கு நன்றி. மன்னிப்பு போன்ற சம்பிரதாயங்கள் தேவையில்லை. எழுபதுகளின் பாடல்களை பலர் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் நான் அந்த காலகட்டப் பாடல்களை சேகரித்து எழுத விரும்பினேன். இதையும் எதிர்க்கும் பல குரல்கள் எழுவது வினோதம்தான். அவர்களைப் பொருத்தவரை ஒருவரைத் தவிர வேறு யாரையும் யாரும் பாராட்டக்கூடாது. இது ஒரு கடுகுச் சிந்தனை. தவளைகள் பறக்கும் என்று எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

    ReplyDelete
  26. வாருங்கள் விசு,

    உங்களின் நீண்ட பின்னூட்டத்தை விரைவில் படிக்க விரும்புகிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  27. வாருங்கள் அருள் ஜீவா,

    மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருப்பதுதான் உங்களின் வாடிக்கை போலும். இந்தப் பதிவு இளையராஜா பற்றியதேயில்லை. பின் ஏனிந்த கலகம்? உங்களுக்குத் தெரிந்த ஒரே கருத்தை விடாது சொல்லியிக்கொண்டே இருக்கிறீர்கள் உடைந்து போன ரெகார்ட் போல. அதுசரி கடைசியில் அந்த ற ற என்னவென்று புரியவில்லை. ஒருவேளை கோபத்தில் பற்களைக் கடிக்கிறீர்கள் போல.

    ReplyDelete
  28. வாருங்கள் நட் சந்தர்,

    நான் சூப்பர் சிங்கர் போன்ற வெட்டி நிகழ்சிகளை அடியோடு வெறுப்பவன். தப்பித்துக்கொள்ள முடியாத சில அசந்தர்ப்பங்களில் எதோ தவிர்க்க முடியாத விபத்து போல பார்க்கவேண்டி வந்த சமயங்கள் உண்டு. அதிலும் ஜூனியர் சிங்கர் என்ற பெயரில் சில சிறுசுகள் பெரிய தோரணையில் கேட்கச் சகிக்காத சக்கைகளைப் பாடுவதை கேட்டால் பற்றிக்கொண்டு வரும். அதில் வரும் நடுவர்கள் அடுத்த கோமாளிகள். அவர்கள் அடிக்கும் கூத்தையெல்லாம் சீரியஸாக எடுத்துகொள்வது தேவையில்லாத ஒன்று. உங்களுக்கு ரஹ்மானின் மீது எதோ எதிர்க் கருத்து இருப்பது தெரிகிறது. நான் அதை தவறு என்று சொல்லமாட்டேன்.

    ReplyDelete
  29. சார்லஸ்,
    நான் எழுபதுகளின் பாடல்களை அவ்வளவாக கேட்டவனில்லை என்பதே நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிகிறது. சரி. நானாவது கேட்கவில்லை.நீங்கள்தான் அதையெல்லாம் நன்றாக கேட்டவராயிற்றே ? பின் ஏன் என்னை விட மோசமாக கருத்து எழுதுகிறீர்கள்? உங்கள் கருத்தைப் படிக்கும்போது நீங்களும் என்னைப்போலத்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. வேறு யார் இசையையும் கேட்காமல் ஒரே ராஜா பாடல்களாகக் கேட்டுவிட்டு குதிப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. நானே தேவலை.

    ReplyDelete
  30. சார்,
    என் கணவர் கஸ்தூரிரெங்கன்(மது) உங்கள் நீண்ட நாள் வாசகர்!!! உங்கள் பதிவுகளை பலவாறு புகழ்ந்தபடி இருப்பார்!! அவ்வவ்வபோது பதிவின் நீளம் குறித்தும் சொல்வதுண்டு!! பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி! so இசை!! அதுவும் மெலடி குறித்த அருமையான கட்டுரைகள் என்ற போதும் ரொம்ப பயமா இருந்து:) ஆனால் வந்து படித்துப்பார்த்த போது படித்தல் ஒரு இலகுவான பட்டுநூல் போல் வழுக்கி சென்றது!! ஆனால் படித்துக்கொண்டே வரும் போது அதை குறிப்பிடவேண்டும் இதை குறிப்பிடவேண்டும் என் அவா ஒரு ஐந்து வயது சாப்பிடுவதில் அதிக ஆர்வம் உள்ள குழந்தையை கொண்டுபோய் பப்பே விருந்தில் விட்டது போல், எனக்கான தகவல்களை சேகரிக்க தெரியாமல் விழிக்கிறேன். அனுபவம் போதவில்லை எனக்கு!!

    ஆனாலும் பரவாயில்லை எனக்கும் கொஞ்சம் இசை ஞானம் இருக்கிறது போல உங்கள் நண்பரின் பட்டியலில் கடைசி பாடல் மட்டும் துருத்திக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது!
    ***பெண்ணொருத்தி தன் கணவன் வீட்டில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற மூளை மழுங்கிய ஆணாதிக்க சிந்தனை** hats off:)
    என்று பின்பாட்டு பாடுவது பெருத்த நகைச்சுவையாக இருந்தது. *** நானும் சிரித்திருக்கிறேன்:))
    எனக்கும் இசைபதிவு ஒன்று எழுதும் ஆவல் வந்துவிட்டது!! இசையமைப்பாளர் மீது அதிக கவனம் செழுத்தியதில்லை நான். எனக்கு P.B.ஸ்ரீநிவாஸ் பாடல்கள் மிகவும் பிடிக்கும் .மனிதன் என்பவன் என்ன அருமையான பாடல்.!!
    நீங்கள் குறிப்பிட்ட மண்ணில் வந்த நிலவே நான் பல முறை கேட்டு ரசித்தபாடல். அதே போல் ஜானி படத்தின் எல்லா பாடல்களும் பிடிக்கும். என் அத்தைகள் கேட்ட டி.ஆர் மற்றும் மோகன் பாடல்களில் அத்தைகளின் தாவணி வாசனை அடித்தபடி இருக்கிறது!! என் பதின்மங்களில் ரஹ்மான் வந்திருந்தார். என்ற போதும் அத்தைகளால் ராஜாவும், அம்மா மற்றும் பாட்டிகளால் சௌந்தரராஜன், சுசிலா மற்றும் சீநிவாசுமே பலநாள் என் செவியை நிறைத்தபடி இருந்தார்கள். பின் என் சுய விருப்பத்தின்படி கேட்கத்தொடங்கியது ஹரிஹரன் மற்றும் ஹரீஸ் ராகவேந்திரா வின் குரல்களை தான். இப்போ சைந்தவி ஜீவி சேர்ந்து அசத்துகிறார்கள்:))) இசைபற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியவில்லை தான்:))

    ReplyDelete
  31. வாருங்கள் விமல்,

    பல நாட்கள் ஆகிவிட்டன உங்களின் பின்னூட்டம் பார்த்து. ஆனால் அதே சொற்பிழைகள். அது மாறவேயில்லை. அதுதான் விமல்.

    உங்களுக்கு இன்னும் அமுதவன் காரிகன் போபியா தீரவில்லை போலிருக்கிறது. அடுத்த ஜென்மத்தில் கூட எங்களை விடமாட்டீர்கள் போல.

    ஒரு வகையில் நீங்கள் சொல்வதுபோல நான் கூறும் சில கருத்துகள் சாமானியர்களின் நெஞ்சத்தின் ஆழமான உணர்சிகளின் வெளிப்பாடே. இல்லாவிட்டால் என் நண்பன் இளையராஜாவின் பாடல்களை விரும்பியதை நான் மறைத்திருக்கலாமே? அந்த சென்னைப் பையன்கள் ரசித்த பாடல்களை நான் ஏன் என் பதிவுகளில் எழுத வேண்டும் அவை எனக்கு ஏற்றதாக இல்லாத பட்சத்தில்? இளையராஜாவை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக என் நடுநிலைமை கேள்விக்குறியாவது அவரைப் பாராட்டும் போது ஊமையாகி விடுகிறது. என்ன ஒரு பண்பட்ட சிந்தனை!

    நான் 60 70 களின் பாடல்களை இப்போதுதான் அதிகம் விரும்பிக் கேட்கிறேன். சிறுவயதில் வானொலியில் கேட்டதோடு சரி. இதில் குறையென கண்டீர்கள்? இதை நான் மறைத்துச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. நீங்களெல்லாம் ஜி ராமநாதன், டி ஆர் பாப்பா, கே வி மகாதேவன், எம் எஸ் வி, டி ராமமூர்த்தி, வி குமார், சங்கர் கணேஷ் பாடல்களில் மூழ்கித் திளைத்து விட்டு அதன் பின்னர் இளையராஜாவுக்கு வந்தவரோ? அப்படியானால் அந்த விபரீதம் எப்படி சாத்தியமானது என்பதை விவரிக்கவும். நான் என் சிறு வயதில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு ரசித்தேன். பின்னர் ... அது எதற்கு? உங்களுக்கு கோபம் வரும்..

    சால்ஸ், அருள் ஜீவா வின் கருத்துகள் உங்களுக்கு நியாயமாக இருப்பதில் எனக்கொன்றும் வியப்பேயில்லை. அப்படித்தானே இருக்கவேண்டும்? ஒரே கிணறு ஒரே தவளைகள்...

    இனிஒரு டாட் காம் தளத்திற்கு நல்ல விளம்பரம் செய்கிறீர்கள்.. உங்கள் கற்பனைக் கோட்டைகள் சரிந்துகொண்டிருப்பது கூட தெரியவில்லை. கிளாசிக் என்ற தகுதிக்கு இளையராஜாவின் பல பாடல்கள் அருகதையற்று பரிதாபமாக தோல்வியடைந்து நிற்கின்றன. உங்களைப் போன்றவர்கள் மட்டும் கொடி
    பிடிக்கும் அவலம் மட்டுமே நிரதர்சனம்.

    நான் உங்களுக்கு ஒரு தளத்தை அறிமுகம் செய்கிறேன்.. உங்கள் நண்பர்தான். போய் ஆனந்த ஜோதியில் ஐக்கியமாகுங்கள்.

    http://puthukaatru.blogspot.in/

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. அய்யா வணக்கம். முதலில் நான் ஒரு இளையராஜா ரசிகன் என்பதையும், இந்த பின்னூட்டம் ஒரு சார்பாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதையும் சொல்லி விடுகிறேன்.

    இன்றுதான் உங்கள் பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம். இன்னும் படிக்க நிறைய உள்ளது. படித்தவரை என்னுடைய கருத்துக்கள்.

    1. ராஜா எப்போது இயக்குனரின் தேவைக்காக இல்லாமல், வெறும் பாடல்களை மட்டும் கொடுத்தாரோ, அப்போதே அவருக்கு சரிவு தொடக்கி விட்டது. (அப்படிப்பட்ட பாடல்களும் எனக்குப் பிடிக்கும் என்பது வேறு விஷயம்).

    2. இன்றைய தலைமுறைக்கு எப்படி பழைய பாடல்கள் எல்லாம் இளையராஜாவோ, அதே போல எனக்கு முன்பு ஒரு காலத்தில், பழைய பாடல்கள் என்றாலே MSV என்றுதான் நினைப்பேன். எப்படி இளையராஜா காலத்தில் வேறு சிலர் இருந்தார்களோ, அதே போல MSV காலத்திலும் இருந்திருக்கிறார்கள் போல என்று. இது பழக்க தோஷம்.

    3. ராஜா வருவதற்கு முன், வரிகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. இசையோடு, வரிகளும், முக்கியமாக சொல்லியிருந்த கருத்துகள் மக்களுக்கு புரிந்தன. இதுவே எம்ஜியாரின் வெற்றிக்கு பெரிய காரணம். ஆனால், ராஜாவின் பாடல்களில், இசையே முன்னால் இருந்தது. வரிகளோ, கருத்துகளோ தேவையில்லை. என்று. 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் அர்த்தத்தை புரிந்து கொண்டால், வாந்திதான் வரும். மக்கள் எது பிடிக்கின்றதோ, அதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். பிடிக்காத வீட்டிற்கு விருந்துக்கு போனால், 1000 நொட்டை சொல்லத்தான் செய்வோம். விருந்தில், நமக்கு வேண்டியதை மட்டும் சாப்பிட்டு விட்டு, வேண்டாததை மூடி விட வேண்டியதுதான்.

    4. இளையராஜா ஏன் ஒருவரின் உணர்ச்சிகளோடு கலந்திருக்கிறார் என்பது அவரவர்களுக்கு மட்டுமே புரியும். அதனால்தான் ஒரு பழைய பாடல் தன்னைக் கவர்ந்தபோது அந்த நண்பர் அப்படி எண்ணியிருக்கக்கூடும்.

    5. எப்போதும் ஒருவரை பாராட்டும் போது, இன்னொருவரை இகழ வேண்டாம். 'அவர்கள் அப்படி சொல்கிறார்களே' என்று சொன்னால், உங்களுக்கும், அவர்களுக்கும் என்ன வித்தியாசம். கண்டிப்பாக உங்களுக்கு 'கானா பிரபா' அவர்களின் வலைத்தளம் தெரியும் என்று நினைக்கிறேன். அவர் ராஜாவின் ரசிகர். அவரின் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் உங்களின் பதிவுகள் இருக்காது. ஏனென்றால் அவர் ராஜாவைப் புகழ்வதற்காக யாரையும் தாழ்த்தி எழுதுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர் தேவா, சபேஷ் முரளி பற்றிக் கூட நல்ல விதமாகவே எழுதி இருப்பார். (எனக்கும் உங்களை இன்னொருவரோடு ஒப்பிட்டுப் பேசியதில் வருத்தம்தான். ஆனாலும், தோன்றியது). கண்டிப்பாக MSVயின் பாடல்கள் பற்றி அரிய தகவல்கள் தருகிறீர்கள். ஆனால், ஏன் தேவையில்லாத ஒப்பீடு? இவரின் பாதை வேறு, அவரின் பாதை வேறு. ஏன் நீங்கள் MSVயை சம கால போட்டியாளர் KVM முடன் ஒப்பிடக்கூடாது? அல்லது அவரின் இசையையும் இப்போதைய ரஹ்மானின் இசையையும் ஒப்பிடக் கூடாது?

    6. கடைசியாக ஒரே ஒரு கேள்வி. பொதுவாக ராஜாவை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது, (அல்லது என அவரின் தீவிர ரசிகர்கள் சொல்லுவது) அவரின் பின்னணி இசைக்கோர்ப்பு. ஆனால், அதைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே? ஏன்?

    எனது பின்னூட்டத்தில், ஏதேனும் தவறான கருத்துகள் இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

    ReplyDelete
  34. வாருங்கள் ரவி,

    நல்ல கருத்து. பாராட்டுக்கு நன்றி. ஒரு பதிவின் சாரம்சத்தை உள்வாங்கிக்கொள்ளாமல் ஒரு சில வரிகளை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டும் கும்பல் அடிக்கடி இதுபோல செய்வது வழக்கமான ஒன்றுதான். மிகவும் அபத்தமாக அவர்களின் பேச்சு திசை மாறும் போது நான் நிறுத்திக்கொள்வது எனது பழக்கம். சர்கஸில் கோமாளிகள் வருவதில்லையா அதுபோலத்தான் இதுவும்.

    சிலர் இதையே பெரிய நீண்ட பதிவு என்று நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு இது அப்படியில்லை என்று தெரியும். இளையராஜா பற்றிய உங்களின் சிந்தனை எனக்கும் உண்டு. நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அவரின் பல அருமையான மெட்டுக்கள் சராசரிக்கும் கீழான கவிதை(!)களால் ஒருமுறைக்கு மேல் கேட்கக் கூடிய தகுதியை இழந்தன என்பது என் எண்ணம். அவரும் சிறந்த தமிழ்க் கவிதைகள் தனது பாடல்களில் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தவராகவே தெரியவில்லை. அவருக்கு அவரே முக்கியம். தன் இசை பேசும் என்ற நினைப்பு அதிகம் கொண்டவர். அதுதான் அவரது வீழ்ச்சி. நல்ல கவிதை இல்லாத வெற்றி பெறும் பாடல்கள் என்ற புதிய பாணியே இவரது வருகைக்குப் பின்தான் உருவானது. ஆனால் இன்றும் அவரது ஆரம்ப காலப் பாடல்களை நான் மறுப்பதில்லை.

    ReplyDelete
  35. வாருங்கள் மைதிலி,

    முதல் வருகைக்கு நன்றி. நண்பர் மது ரசிக்ககூடிய வகையில் சிறப்பாக எழுதக்கூடியவர். அவருக்கும் ஒரு ஹலோ.

    உங்கள் பபே உவமை அற்புதம். உண்மையே. உங்களுக்கும் இசை பற்றி எழுத ஆர்வம் வந்தது குறித்து மகிழ்ச்சி. சீக்கிரமாக அதைச் செய்யுங்கள். இசை என்று வந்துவிட்டாலே நேரம் கரைந்து விடுகிறது. மீண்டும் வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சார்
      உங்களுக்கு பொழுது கிடைக்கையில் எனது இந்த பதிவை படித்துபார்க்குமாறு வேண்டுகிறேன்:)http://makizhnirai.blogspot.com/2014/11/my-music.html#comment-form

      Delete
  36. காரிகன்

    உங்கள் பதிவிற்கு நிறைய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் . ஆனால் உண்மை மறைத்துப் பேசும் உங்களின் வித்தையை மறந்து போகும்படி நீங்கள் செய்யும் வார்த்தை ஜாலங்கள் அபாரம் !

    வரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் பாட்டுக்கள் எப்படி பிரபலம் அடைந்திருக்க முடியும் என்பதை உங்களை ரசிப்பவர்களும் நினைத்துப் பார்க்க வேண்டும் .

    வைரமுத்து இல்லாவிட்டால் வேறு கவிஞர்களே இல்லையா? வாலி அற்புதமான பாடலாசிரியர் . வாலிபக் கவிஞர். எந்த சூழலுக்கும் பாடல் கொடுத்தவர் . அவருடைய பாடல்களில் இளையராஜாவிற்கு நிறைய ஹிட் கிடைத்தது. பிறை சூடன் , பா. விஜய், கபிலன் போன்ற இன்னும் பல நல்ல கவிஞர்களும் பாடல் கொடுத்துள்ளனர். கண்ணதாசனும் ஆரம்பத்தில் பல பாடல்கள் தந்தவரே! இத்தனை பாடலாசிரியர்களோடு சேர்ந்து நல்ல பல பாடல்கள் கொடுத்த இளையராஜாவை தூற்றாவிட்டால் தூக்கம் வாராதோ?

    மன்றம் வந்த தென்றலுக்கு எழுதப்பட்ட வரிகள் கண்றாவி என்று ஒரு நண்பர் சொல்லியிருப்பது மிகவும் அபத்தம் . படத்தில் வரும் சூழலைக் கவனித்து அதன் பின் வரிகளை கவனித்தால் புரியும் . எளிமையாக ஆழமாக எழுதக் கூடிய வாலியை கேவலப்படுத்தி விட்டார் அவர்.

    ReplyDelete
  37. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    அருமை நண்பரே
    இனி தொடர்வேன்

    ReplyDelete
  38. வாருங்கள் அரவிந்த்,

    உங்களின் முதல் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி. நீங்கள் என்னை எதிர்க்கும் எந்த கருத்தையும் தெரிவிக்கலாம். "I don't agree with you but I will die to defend your right to say it" என்ற நம்பிக்கை கொண்டவன் நான். எதிர்க் கருத்துகள் இல்லாவிட்டால் இன்றைக்கு உலகம் உருண்டை என்ற உண்மையே ஒரு பொய்யாகத்தான் இருக்கும். உங்களின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்ல விரும்புகிறேன்.

    1.இளையராஜா என்றைக்கு தனக்கு தேவைப்பட்டதையும் தெரிந்ததையும் மட்டுமே கொடுக்க ஆரம்பித்தாரோ அப்போதே அவருடைய வீழ்ச்சி துவங்கியது என்பது எனது எண்ணம். அவர் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் யதார்த்தத்தை உணரவில்லை என்று தோன்றுகிறது. As it is said the man who doesn't explore himself is lost.

    2. இது உண்மையே. இன்றைய தலைமுறைக்கு இளையராஜா ஒரு பழைய இசை அமைப்பாளர். அவரது பாடல்கள் வெறும் டப்பாங்குத்து இசை என்றே அவர்கள் எண்ணம் கொள்கிறார்கள். வெகு சிலரே அவரது பொன்னான பாடல்களை தேடிச் சென்று அவரை வியக்கிறார்கள்.

    3. அடுத்த உண்மை. எம் எஸ் வி மேலும் அவரைப் போன்றவர்களின் இசையில் பாடல்கள் ஒரு அற்புதம். உதாரணமாக காட்டோடு குழாலாக ஆட, வெள்ளிக்கிண்ணம்தான் போன்ற பாடல்கள் இசையின்றியே நம் நெஞ்சத்தை தாலாட்டும். அதன் ராகம் மட்டும் மெட்டமைப்பு அவ்விதமான அழகியல் கொண்டது. இளையராஜாவிடம் இசை இல்லாவிட்டால் அந்தப் பாடலே அழகு குலைந்து சரிந்துவிடும். அதுவே அவரது வெற்றி மற்றதும் வீழ்ச்சி. மற்றும் அவர் வைரமுத்துவின் பிரிவுக்குப் பின் நல்ல கவிதையை வேரறுக்க முனைப்பு காட்டியது அவரது இசையின் தரத்தை பெரிதும் பதம் பார்த்தது.

    4. இருக்கலாம். இது ஒரு தனிப்பட்ட விஷயம். அவனுக்கு அப்படி. ஆனால் எனக்கோ வேறு சிலருக்கோ அதே விருப்ப ஐந்து வேறு விதமாக இருக்கக்கூடிய யதார்த்தங்கள் இருக்கின்றன. இளையராஜா மட்டுமே ஒருவரின் உணர்சிகளோடு பங்கு பெற்றார் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கருத்து. உங்களுக்கு அப்படி இருக்கலாம். பலருக்கு அவ்வாறில்லை.

    5. இது ஒரு புனைவான கருத்து. நான் இளையராஜாவை இகழ்ச்சியாக பேசியதாக தோன்றவில்லை. ஜப்பானில் கல்யாணராமன் படப் பாடல் பற்றிய கருத்தை வைத்தே இப்படிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது ஒரு அவசியப்பட்ட ஒப்பீடு. அதே வேளையில் இளையராஜா மிகச் சிறப்பாக இசை அமைத்த பாடல்கள் குறித்தும் நான் பேசியிருக்கிறேன். அப்படியிலாவிட்டால் ஒருவேளை என்னுடைய அடுத்த பதிவில் இது நிறைவேறலாம். மற்றபடி மற்ற சிலரோடு என்னை குறிப்பிட்டுப் பேசுவது குறித்து எனக்கு ஒரு ஆட்சேபனையுமில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு என்பதை மறுக்க முடியுமா?

    6. இளையராஜா பற்றிய பதிவல்ல இது என்பதே உங்களின் ஆறாவது கேள்விக்கான எனது பதில். மேலும் அவரது bgm குறித்து எனக்கு அதிகமான ஆச்சர்யங்கள் கிடையாது.

    முடிந்தால் மீண்டும் வாருங்கள். சந்திப்போம்.

    ReplyDelete
  39. வாருங்கள் கரந்தை ஜெயக்குமார்,

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரவும்.

    ReplyDelete
  40. அரவிந்த் அவர்களே

    காரிகன் போன்றோர் எம் எஸ் வீ பற்றி இப்போ எழுதுவதர்க்குக் காரணம் இளையராஜாவை மட்டம் தட்டவே தவிர எம் எஸ் வீ , கே வீ எம் பற்றியோ ஆழமான அறிவு இல்லாதவர்.

    மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாட்டை உணர்ச்சி உள்ள மனிதன் எவனாவது கன்னாபின்னா என்று எழுத முடியுமா ?

    தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முட்டாள் தனம் தான் இதன் அத்திவாரம்.

    இவர் அமுதவனின் தளத்திலும் பிற தளங்களிலும் இசைக்கலைஞர்கலைக் குறித்து எழுதும் வசவுகளை படித்தால் நீங்கள் மயங்கி விழுந்து விடுவீர்கள்.அவ்வளவு மொழியாற்றல் மிக்கவர்.

    இவர் பைத்தியமாய் அலைந்து பாடல் கேட்டதெல்லாம் ஆங்கிலப்பாடல்கள்.தமிழ் பாடல்களை எல்லாம்குப்பை என்று ஒதுக்கியவர்.

    இவரைப் போலவே அமுதவனும் இவரது ராஜா எதிர்ப்புக் கூட்டணியை சேர்ந்தவர்.

    எம் எஸ் வீ ,கே வீ எம் பாடல்கள் எப்படி இளையராஜா பாடல்களை விட சிறந்தவை என்று கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் !

    இவர்களின் எழுத்தில் அதை நீங்கள் பார்க்கவும் முடியாது.இப்போது தான் பாடல்களை [எழுதுவதற்கென்றே கேட்டுவிட்டு ] எழுத ஆரம்பித்தவர்கள்.

    பாடல்கள் பற்றி எழுதுவதைப் பாருங்கள்.

    என்ன ஒரு அற்புதக் கானம்! ஒரு காவியப் பாடல் ! என்று வள வள எழுத்துக்களாக இருக்கும்.

    vimal

    ReplyDelete
  41. தருமியின் பதிவில் பின்னூட்டமாகச் சில வார்த்தைகள் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  42. அமுதவன் சார்
    மூத்த இசையமைப்பாளரை செத்தா போய்விட்டார் என்று எப்படிச் சொல்லலாம் இது மட்டும் சரியாய்?
    கண்ணன்.

    ReplyDelete
  43. அமுதவன் சார்
    மூத்த இசையமைப்பாளரை செத்தா போய்விட்டார் என்று எப்படிச் சொல்லலாம் இது மட்டும் சரியா? விவாதம் செய்யும் போது நாகரிகமான நபர்களிடம் மட்டுமே செய்யவேண்டும் இல்லை என்றால் நாகரிகமில்லாத வார்த்தைகளை நாம் படிக்க வேண்டி வரும்.
    ...............................................................................................................................................................
    நீங்கள் அங்கே விவாதம் செய்யவில்லை என்றால் நான் அதைப் படிக்க வாய்ப்பே இல்லை. எனவே எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நீங்கள் தான் பொறுப்பு இது போல் மறுபடி செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும் கண்ணன்.

    ReplyDelete
  44. கண்ணன் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துகிறேன். மனிதப் பண்புள்ள யாருக்கும் ஏற்படக்கூடிய மன உளைச்சல்தான் அது. தங்களின் வார்த்தைக்கு மதிப்பளித்தே நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறினேன். தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  45. கண்ணன்,

    நீங்கள் சால்ஸ் தளத்தில் என்ன சொன்னீர்கள் என்று தெரியவில்லை. இதைத்தான் சொல்லியிருந்தீர்கள் என்று அனுமானிக்கிறேன். விமல் கூறிய அந்த காட்டுமிராண்டிக் கருத்தை சால்ஸ் உடனே நீக்கி இருக்கவேண்டும். அதை அவர் பாராட்டியது எனக்கு அதிர்சியாக இருந்தது. உங்களின் வருத்தம் போன்றதே எனதும். இப்படிக் கூட ஒரு மனிதன் பேசுவானா என்று உறைந்தே போனேன். நீங்கள் அதற்காக அமுதவனை குற்றம் சொல்வது ஏனென்று புரியவில்லை. இதை நீங்கள் அந்தத் தளத்தை நடத்தும் சால்ஸ் என்ற புண்ணியவானை கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அல்லது வீராப்பு பேசிக் கொண்டிருக்கும் விமல் என்ற காட்டுமிராண்டி, அல்லது இத்தனை குழாயடிக் கூத்துகளையும் பார்த்து என்னால்தான் இப்படி என்று குதூகலிக்கும் பேராசிரியர் தருமி போன்றவர்களைக் கேட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  46. வாருங்கள் அமுதவன்,

    உங்களின் நியாயமான கருத்தை தருமி தளத்தில் படித்தேன். பஞ்சாயத்து என்ற போர்வையில் எதையோ உளறி இருக்கிறார் பேராசிரியர். இதில் இங்கிலிபீசு என்று நக்கல் வேறு. அதாவது இவருக்கு ஆங்கிலம் மீது மோகம் கிடையாதாம். சரிதான். இந்த லட்சணத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் என்னத்தை இவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியிருப்பார் என்று வியப்பாக இருக்கிறது. பாவம் அவர்கள்! இங்லீஷ் என்பதை இங்கிலிபீசு என்று சொல்லும் பாமரத்தனமான மட்டமான நகைச்சுவை. அவருக்கு இசை அறிவு ஏகத்துக்கு இருக்கிறது என்று பாராட்ட அங்கு காற்று போயிருக்கிறது.

    நான் இரண்டு பின்னூட்டங்கள் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  47. அமுதவன் அவர்களே ,

    சொல்ல மறந்துவிட்டேன்.

    இங்கேயும் அந்த காட்டுமிராண்டி கருத்தை விதைத்துவிட்டு போயிருக்கிறது விமல் என்ற அந்த அநாகரிக ஆசாமி. மூன்று நாட்களாக இன்டர்நெட் இணைப்பு இல்லாததினால் இன்றுதான் அதைக் கண்டேன். உடனே அழித்து விட்டேன்.இனிமேலும் எனது தளத்திற்கு வரும் அதன் கருத்துக்களை கண்டிப்பாக வெளியிடப் போவதில்லை. இந்த அழகில் ஒரு புதிய ப்ளாக்கர் ஒன்றை துவக்கியிருக்கிறது இன்னும் அநாகரிகமாகப் பேசுவதற்கு வசதியாக. எக்கேடோ கெட்டுபோகட்டும்.

    ReplyDelete
  48. அமுதவன் சார் மேல் உள்ள அன்பின் காரணமாகவே அவரைக் குறைபட்டுக் கொண்டேன். மேலும் அவரைப்பற்றிச் சிலர் தரக்குறைவாகச் சொல்லவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தான் அப்படி எழுதினேன்......... கண்ணன் .

    ReplyDelete
  49. வணக்கம்.

    நான் தருமியின் தளத்தில் எழுப்பிய கேள்வியைப் பிரசுரிக்கவில்லை.

    என் கேள்வி இதுதான்,
    இளையராஜா இசையமைத்த வெற்றிப் பாடல்களுக்கு அவர் மட்டும் காரணம் என்று சொல்லும் நீங்கள் தரமற்ற பாடலுக்குப் பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் ரசிகர்கள் என்று காரணம் சொல்கிறீர்கள்?
    தொட்டுப்பாரு குத்தமில்லை போன்ற தெய்வீகப் பாடலுக்கு அவர் பொறுப்பில்லை?

    இதைச் சுட்டிக்காட்டினால் அதற்கு விளக்கம் தராமல் சாக்குபோக்குச் சொல்கிறார்கள்.
    (வேறு யாரும் ஞானி என்று பீற்றிக் கொண்டிருக்கவில்லை)

    ReplyDelete
  50. வாருங்கள் சேகர்,

    உங்களின் பின்னூட்டம் இதுவரை தோன்றவில்லை தருமி சார் தளத்தில். ஆனாலும் சரியான கேள்விதான். மேலே விமல் என்றொரு காமடி நாயகர் இதற்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  51. காரிகன்

    தங்கள் தளத்தை அடிக்கடி பார்ப்பேன் வார்த்தைக்கு வார்த்தை பதிலிடும் உங்கள் பின்னூட்டங்களிலும் காட் டு மிராண்டித்தனம் உள்ளது,
    இது என் கருத்து.

    செல்வநாயகம்

    ReplyDelete
  52. செல்வநாயகம் அப்போ விமல் கருத்துக்கள் உங்களுக்குத் தமாஷாகத் தெரிகிறதா? நல்ல அடிங்க......

    ReplyDelete
  53. சார்லஸ்
    //பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன் ....மலைத்தேன்//
    நீங்கள் தருமிக்கு எழுதிய பின்னுட்டம் தான் இது.
    ............................................................................................
    இதுதான் மூத்த இசையமைப்பாளர்களின் வெற்றி.
    பாகுபாடின்றி அனைவரின் உணர்வுகளில் கலந்துள்ள மெட்டுக்களும் அதன் வரிகளும் என்றும் மனிதர்களுடன் பயணிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சேகர்

      அந்தப் பாடல் , ' பார்த்தேன்.. சிரித்தேன் ..பக்கம் வரத் துடித்தேன் ' என்றல்லவா இருக்கும் . நான் அப்படிச் சொல்லவில்லையே! ஓ... பழைய பாடலின் வார்த்தைகள் இசை அமைத்தவருக்கு சொந்தமா என்ன!?

      Delete
  54. "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ" / "நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே" விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  55. சின்னதா ஒரு கதை,
    ஒரு நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க அதிகக் குழந்தை பெரும் ஆண்களுக்கு ஒயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தார்கள்.
    ஒரு வருடத்திக்கு பிறகு பரிசு பெற ஆண்கள் சிலர் அரசரை பார்க்க வந்திருந்தார்கள். வந்தவர்களில் பத்து குழந்தை பெற்ற ஞானதேசிகன் தலைகனத்துடன் மற்றவர்களை பார்த்து கேலி செய்து சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார் .
    சோதனை செய்ய நினைத்த அரசர்அவரை அழைத்துப் பரிசை உன் அப்பா சுப்பிரமணிக்குத் தருவதுதான் சரி என்று எண்ணுகிறேன் என்றார்.
    என்னைவிடக் குறைவாகக் குழந்தை பெற்ற அவருக்குத் பரிசு தருவது சரியில்லை அவரை விட நானே சாதனை செய்தவன் அவர் எனக்குச் சமமல்ல என்றார் .

    உடனே அரசர் சொன்னார் உன் அப்பாவுக்கு என்றும் நீ சமாக முடியாது .

    தலைக்கனம் உள்ள நீ பரிசு பெற தகுதி இல்லாதவன் ஓடிப்போவிடு மறுபடியும் வந்தால் தண்டனை நிச்சயம் என்று அவரை அடித்து விரட்டிவிட்டார்கள் .

    அதே சமயம் இரண்டே குழந்தை பெற்ற கர்வமில்லாத திலிப் என்ற வாலிபருக்கு பரிசு கிடைத்தது.
    (பரிசு கிடைக்காத வெறுப்பில் ஞானதேசிகன் எல்லோரிடமும் எனக்குப் பரிசு ஒரு பொருட்டே இல்லை என்று ஊரெல்லாம் சொல்லி மனசை தேற்றி வருகிறார். அவர் பெற்ற பத்தும் போலி நகை அணிந்து ஊர் சுற்றுகிறது)

    ReplyDelete
    Replies
    1. இளையராஜா ரகுமான் ஒப்பீடுக்காக புனைந்த கதை ....அபத்தம் !

      Delete
    2. சரி! அந்தச் சுப்பிரமணி யாருன்னு தெரியவில்லை. உமக்கெல்லாம் உண்மை புரியவா போகிறது.
      சுப்பிரமணிக்கு ஞானதேசிகன் இணையில்லை என்பதே சொல்ல வரும் கருத்து

      Delete
  56. விமல் சோடி போட்டு பார்க்கலாம் வாங்க! வாங்க!

    ReplyDelete
  57. விமல்.
    உமக்கு விளக்கம் நான் என் தளத்தில் தருகிறேன் வாரும் ஐயா அங்கே .
    பயமாய் இருந்தால் வரவேண்டாம் .

    ReplyDelete
  58. என்ன காரிகன் நலமா? ஒரு நான்கைந்து நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்தேன். இணையத்தில் செலவிட நேரம் இருக்கவில்லை. அதற்குள்ளாக இங்கே சிலர் துள்ளிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்து கீழே விழுந்து புரண்டு பரிதவித்து ஓய்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இணையத்தில் எழுதிவிட்டால் வேறு எந்த வேலை வெட்டியும் இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தேவுடு காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
    அவர்கள் பேசும் வம்படிக்கும் வல்லடிக்கும் பதிலளித்துப் பிதற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
    ஒரே விஷயத்தை எந்தவிதச் சலிப்புமில்லாமல் பேசிப் புலம்பிக்கொண்டிருக்க வேண்டும்.
    அதைச் செய்யவில்லை என்றதும் ஒரு நண்பர் என்னென்னவோ எழுதி எழுதி மாய்ந்திருக்கிறார். அந்த சந்தோஷத்தையாவது அவருக்குத் தந்தோமே என்பதில் ஒரு சிறிய திருப்தி.
    இப்போதுதான் பல பின்னூட்டங்களையும் பார்த்தேன். தருமி அவரது தளத்தில் என்னுடைய பின்னூட்டத்திற்கு பதில் தந்திருக்கிறார். அவருக்கு மட்டும் பதில் எழுதினேன்.
    இந்த நண்பர்கள் கண்ணனின் பின்னூட்டத்தை எப்படித் திரித்திருந்தார்கள் என்பதுதான் எச்சரிக்கைப் படுத்தியது. அவர் மிகவும் தெளிவாக என்னையும் உங்களையும் பெயர் குறித்துவிட்டு எழுதியிருந்தார். 'இப்படியெல்லாம் எழுதுகிறார்களே உங்களுக்கு இப்போது சந்தோஷம்தானா? இவர்களோடெல்லாம் எதற்கு விவாதம் செய்கிறீர்கள்? நம்முடைய மரியாதைதான் போகும்' என்ற அர்த்தத்தில் சொல்லவந்தவர் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையும் சேர்த்திருந்தார். விவாதம் தடம் மாறி வேறெங்கோ பயணிக்கிறது என்பதை உணர்ந்த நான் அந்த நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு 'விலகிக்கொள்கிறேன்' என்று சொல்லி விலகிக்கொண்டேன
    உடனே 'நான் கண்ணனின் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். நீங்கள் தொடர்ந்து வரவேண்டும்' என்று எழுதுகிறார் சார்லஸ். ' நான் உங்களைத்தான் சொன்னேன். ஏன் இப்படித் திரிக்கிறீர்கள்?' என்று இன்னொரு பின்னூட்டமும் அவர்களுக்குப் போடுகிறார் கண்ணன். அதன் பிறகும் 'அமுதவனையும் உங்களையும் பற்றி மிக மோசமாக எழுதினார் கண்ணன். அதனால்தான் அந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்' என்று மறுபடியும் திரிக்கிறார் சார்லஸ். இணையத்தில் கூட எப்படிப்பட்டவர்களையெல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது என்ற வருத்தம்தான் வருகிறது.
    இசையமைப்பாளர்களை இ.ரா தாண்டிய வரலாறுகளைப் படித்துவிட்டீர்களா?
    அவர் போண்டா சாப்பிட்டார்; இவர் பஜ்ஜி சாப்பிட்டார். அவர் மோர்சாதம் சாப்பிட்டார் எங்க இ.ரா பிரியாணி சாப்பிட்டார் ரேஞ்சில் பேசுகிறார்கள். கொஞ்சம் விட்டால் ஜி.ராமனாதன் ரிக்ஷாவில் வந்தார்; இவர் அம்பாசிடர் காரில் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்தார். மறுக்க முடியுமா திராணி இருக்கிறதா? என்றெல்லாம்கூடப் பேசுவார்கள் போலும்.
    'கட் அவுட்' பேசினால் அனிருத்தின் யூடியூப் பாடல்தான் மூன்று நாளில் பத்துலட்சம் பேரையும் ஐம்பது லட்சம் பேரையும் சென்று சேர்ந்த பாடல் என்று அனிருத் ரசிகர்கள் பெருமைப் பேசவேண்டியதுதான். என்ன செய்வது?
    நீங்கள் ஏ.ஆர்.ரகுமானின் கிராமி விருதுகளைப் பேச எடுத்ததும் -ஆஸ்காருக்குக்கூட போகவே இல்லை- கிராமி என்றதுமே 'நாங்கள் முன்னோர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். இ,ராவுக்குப் பின்னே வந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை என்ற பிரகடனம் வேறு.
    இ,ராதான் பாடல் எழுதின ஒரே இசையமைப்பாளராம். அந்தக் காலத்தில் (அவர்கள் வார்த்தையில் 2000 அல்லது 5000 வருடங்களுக்கு முன்பு) பாடல் எழுதின பாபநாசம் சிவன் அவர் எழுதிய எல்லாப் பாடல்களுக்கும் அவரே மெட்டையும் அமைத்துவிடுவார் என்று சொல்வார்கள். பின்னர் அவரும் எஸ்விவெங்கட்ராமனும், அவரும் சி.ஆர்.சுப்பராமனும், அவரும், ஜி.ராமனாதனும் ஒன்றாக அமர்ந்துதான் இசையமைப்பார்கள் என்றும் நூல்கள் பேசுகின்றன. நம்முடைய காலத்தில் டி.ஆர். தாம் இசையமைக்கும் 'எல்லாப் பாடல்களையும்' டிஆரேதான் எழுதுகிறார். கங்கை அமரன் பாடலும் எழுதுகிறார் இசையும் அமைக்கிறார். அட, நம்ம எஸ்ஏ ராஜ்குமார்கூட அவர் இசையமைக்கும் ஒரு படத்திற்கு அவரே ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்று செய்தி படித்தேன். ஏதாவது சிறப்பியல்புகளைச் சொல்லும்போது அது தனித்துவம் மிக்கதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையான மிகச்சிறிய விதிகூட இவர்களுக்குத் தெரிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அமுதவன் சார்

      என்ன தோசையை திருப்பிப் போட்டுவிட்டீர்கள். கண்ணன் என்பவர் உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார் என்றுதானே அந்தப் பின்னூட்டம் நீக்கினேன் . நான் அதை திரித்துவிட்டேன் என்கிறீர்களா ? சரி எது உண்மை என்று தெரியவில்லை. கண்ணன்தான் பதில் சொல்ல வேண்டும் . ஒருவேளை கண்ணன் எங்களைச் சொல்லியிருந்தாலும் யாரைச் சொல்லியிருந்தாலும் அது நாலாந்தர வார்த்தைகள் இல்லையா? அதை வரவேற்பதா? அதே போல திரு வருண் அவர்கள் நல்ல பல வார்த்தைகளால் திடீரென அர்ச்சித்து விடுவார் . அதனால் அவரிடம் செய்யும் வாதத்தில் கவனமாகத்தான் இருக்க வேண்டியதிருக்கிறது.

      Delete
  59. இ,ரா உதவியாளர்களை வைத்துக்கொள்வதில்லை என்றொரு 'சிறப்பியல்பு'. உதவியாளர் என்ற பெயர் அறிவிக்கப்படவில்லை என்றால் உதவியாளரே இல்லையென்று இவர்களே நினைத்துக்கொள்கிறார்கள். உதவியாளர் என்பதுபற்றியெல்லாம் பேசவேண்டும் என்றால் இந்த நிலையில் இவர்களிடம் பேசிப் பயனில்லை. என்னையும் உங்களையும் வசை பாட அதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்.
    ஆயிரம் படங்களுக்கு ஒருத்தர் எப்படி இசையமைக்க முடிந்தது என்ற அடிப்படையான சிறிய கேள்வியைக் கேட்டுக்கொண்டாலேயே பதில் கிடைத்துவிடும். எந்த ஒரு முக்கியமான செய்தி பற்றியும் 'உண்மைத்தன்மையை' அறிந்துகொள்ள 'in between the lines' படிக்க வேண்டும் என்பார்கள். இணையத்தில் படித்தவர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு இதன் பொருள் புரிந்தால் போதும்.

    இ.ராவைப் பற்றி எதிர்கருத்தை வைத்தாலேயே வன்மம், ஏதோ பெர்சனல் வென்ஜன்ஸ் என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படியென்றால் 'பாராட்டி எழுதிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கெல்லாம்' இ.ரா தினசரி பிச்சைச்சோறா போடுகிறார்? என்ன பிதற்றல் இதுவென்றே தெரியவில்லை.
    வருணைப் பற்றி இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது போலும். அவரிடம் பம்முகிறார்கள், பதுங்குகிறார்கள். நம்மிடம் மட்டும் எகிறிக் குதிக்கிறார்கள். குதிக்கட்டும். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்போம்.
    ஒரு அன்பரின் தமிழ் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லி இப்போதைய அவருடைய பின்னூட்டங்களில் அவ்வளவான எழுத்துப் பிழைகள் இல்லாமல் செய்திருக்கிறீர்கள். இது நிச்சயம் உங்களின் சாதனைகளில் ஒன்று. இதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  60. இன்னொரு தகவல் விடுபட்டுப் போய்விட்டது. சமீபத்திய சென்னை வருகையின்போது ஒரு தயாரிப்பாளரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். இளம் தயாரிப்பாளர். இன்னமும் நாற்பதைத் தொடாதவர். என்னுடைய வலைப்பூவை அவ்வப்போது படிப்பவர். சமீபத்தில் எழுதிய விஷயம் பற்றிக்கேட்டார். (நீண்ட நாட்களாக இணையத்தின் பக்கமே வரவில்லை என்றார்) நான் இந்த வாதங்களைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னார் "நானும் இளையராஜா ரசிகன்தான். கல்லூரியில் படிக்கும்போதெல்லாம் இளையராஜா மீது பைத்தியமாக அலைந்தவன்தான். ஆனால் இன்றைக்கு நான் இளையராஜா கேட்பதில்லை. ஏனெனில் இன்றைக்கு அந்த ரசனை மாறிவிட்டது. கல்லூரி காலத்திலிருந்தே அவ்வப்போது என்ன ட்ரெண்டோ அதன் போக்கில் போகிறவனாகத்தான் இருந்தேன். இப்போது லேட்டஸ்ட்டாக என்ன வருகிறதோ அதுதான் கேட்பது. போனவாரம் கேட்டது இப்போது இல்லையா? கவலையே இல்லை. இப்போது என்ன கிடைக்கிறதோ அதனைக் கேட்டுவிட்டுப் போகிறேன். நிரந்தரமான மியூசிக் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை. இப்போதைய பாட்டு இரண்டு நாட்கள்தான் நிற்கும் என்றால் நின்றுவிட்டுப் போகட்டும். மூன்றாவது நாள்தான் இன்னொரு சிடி வந்துவிடுகிறதே. இளையராஜா பாட்டுக்கேட்டால் நான் பழைய ஆசாமியாய் என்னைக் கருத வேண்டியிருக்கிறது. அதனால் அவருடைய பாடல் கேட்டு சுமார் ஒரு வருடமாவது ஆகியிருக்கும். இப்போதெல்லாம் கேட்பதே இல்லை" என்றார்.
    அவருடைய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதும் இப்படி ஒரு ரசனையும் இருக்கிறது என்பதைக் குறிக்கவே இதனை இங்கே எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது தனிப்பட்ட ஒரு நபரின் எண்ணம் அல்லது கருத்து . பொதுவில் வைக்கப்படும் கருத்தாகாது . இளையராஜாவிற்கு முன்னர் இசையமைத்த இசையமைப்பாளர்களின் பாடல்கள் பற்றி அந்த நண்பரிடம் நீங்கள் கருத்து கேட்கவில்லையா?

      Delete
  61. செல்வநாயகம் உங்களது மறு பெயர் அல்லது இன்னொரு பெயர் விமல்தானே? எதற்காக இந்த பேடித்தனம்? உங்களுக்கான கதவுகள் என் தளத்தில் ஏறக்குறைய மூடப்பட்டுவிட்டன. உங்கள் நண்பர் புதிய காற்றின் ஆதரவோடு அவருடைய மைதானத்தில் இன்னும் நிறைய தரமான வசவுகளை அள்ளிவிடுங்கள். பார்த்து, தமிழ் ரொம்பதான் விளையாடுது உங்க எழுத்தில். அதை முதலில் சீர் செய்துகொள்ளவும்.

    ReplyDelete
  62. சேகர்,

    --(பரிசு கிடைக்காத வெறுப்பில் ஞானதேசிகன் எல்லோரிடமும் எனக்குப் பரிசு ஒரு பொருட்டே இல்லை என்று ஊரெல்லாம் சொல்லி மனசை தேற்றி வருகிறார். அவர் பெற்ற பத்தும் போலி நகை அணிந்து ஊர் சுற்றுகிறது)---

    அதில் ஒன்று ஒரு மார்க்கமாக போய்க்கொண்டிருக்கிறது- திலீப்பை அப்பட்டமாக காப்பி அடித்துக்கொண்டே. அப்போதாவது ஏதாவது தட்டில் விழும் என்ற எதிர்பார்ப்புடன்.

    ஞானதேசிகனால்தானே "விருதுக்கே" மரியாதை? இந்த "உண்மையைக்" கூட புரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?

    ReplyDelete
  63. கண்ணன் இணையத்தில் உலா வரும் சில குள்ளநரிகளை நீங்கள் அடையாளம் கண்டிருப்பீர்கள் இந்நேரம். கவனம் தேவை.

    ReplyDelete
  64. அமுதவன் அவர்களே,

    நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது என் இணைய இணைப்பு இறந்து போயிருந்தது. நான் பேசியபோது நீங்கள் தொடர்பில் இல்லை. எத்தனை வசவுகள்!எத்தனை நரித்தனமான அணுகுமுறைகள்! நீசப்போக்குகள்! இது போதாதென்று தனியாக ஊளையிடும் பேடித்தனம் வேறு!. இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு வசனம் உண்டு."பூவோட சேர்ந்த நாரும் மனக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இங்கே இவன் மாதிரி ஆளுகிட்ட போட்டிபோட்டு நாரோட சேர்ந்த பூவும் நாறிப்போச்சு". எனக்கு நடந்தது இதுதான். வருண் இதைதான் இவர்களின் தரத்திற்கு அமுதவன் காரிகன் போன்றவர்கள் இறங்கிவிட்டார்கள் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் இதன் மூலம் ராஜா ரசிக சிகாமணிகளின் யோக்யதையும், தரமும், நியாயங்களும்,பண்பற்ற வார்த்தைகளும் சந்தி சிரித்துவிட்டன. அதுவரையில் எனக்கு மகிழ்ச்சியே. நானே எதிர்பார்க்காத அளவுக்கு அவர்களின் அநாகரீகம் வெளிப்பட்டது எனக்கே ஆச்சர்யம்தான்! இந்த அளவுக்கா முட்டாள்களாக இருப்பார்கள்! அல்லது நாம்தான் இவர்களிடம் ரொம்பவும் அதிகமாக எதிர்பார்த்துவிட்டோமா?

    நிறைய பேச வேண்டியதிருக்கிறது. பிறகு வருகிறேன்..

    ReplyDelete
  65. என் நோக்கம் தகுதி இல்லாத மனிதர்களுடன் விவாதம் செய்து தேவை இல்லாமல் உங்கள் மரியாதை மட்டும் அல்ல முன்னோர்களின் தரத்தைக் குறைக்க வேண்டாம் என்பதே.

    என் பணிவான வேண்டுகோள் அவர்களுக்கு நீங்கள் பதில் தருவதாக இருந்தால் உங்கள் தளத்திலேயே பதில் சொல்லவும். நன்றி

    ReplyDelete
  66. அமுதவன்,

    நீங்களோ நானோ எந்த இடத்திலும் சால்சை இளையராஜாவைப் பாராட்டி எழுதுவது ஏன் என்ற கேள்வி கேட்டதாக நினைவில்லை. அந்த இங்கிலிபீசு பேராசிரியர்தான் இப்படி முதலில் ஒரு உதவாக்கரைக் கருத்தை உதிர்த்தது. அப்போதே எனக்குள் ஒரு சிகப்பு விளக்கு எரிந்தது. நான் பத்ரகாளி படத்தைப் பற்றி சொன்னதை சால்ஸ் விவாதத்திற்காக மறுக்க (அவருக்கு உண்மையிலேயே சில உண்மைகள் தெரியாதது பரிதாபம்தான்.)அங்கே ஆரம்பித்த மழை விடாது பெய்தது. சால்ஸ் இந்த விவகாரத்தை சரியாகக் கையாளவில்லையா அல்லது ஒரு புதிய பதிவராக இருப்பதால் ஏகத்தும் வரும் பின்னூட்டங்களைக் கண்டு இன்னும் இன்னும் என்று எல்லா குப்பைகளையும் அனுமதித்தாரா என்று தெரியவில்லை.(உடனே என் கருத்தை இந்த குப்பை வகையில் சேர்க்க ஒரு சிலர் முயல்வார்கள்.) அவரே சில பதில்களை நீக்கும் படியான கட்டாயமே அவருக்கு ஏற்பட்டது. அதிலும் கண்ணன் எழுதியதை திரித்துக் கூறி தன் சுயத்தை கேலிப் பொருளாக மாற்றிவிட்டார். அவருடன் பல விவாதங்கள் செய்தவன் என்ற முறையில் அவர் மீது தனிப்பட்ட விதத்தில் யாரும் கருத்து சொல்வதை நான் எனது தளத்தில் அனுமதித்ததே இல்லை. அதே பண்பு அவரிடம் சற்று குறைந்திருப்பது நான் எதிர்பார்க்காதது. அதிர்சியாகக் கூட இருந்தது. அவர் இந்த முதிர்ச்சியற்ற வாதத்தின் போக்கை இன்னும் உசுப்பேற்றினாரே தவிர ஒரு சரியான நியாயமான பாதைக்கு அதைக் கொண்டுவருவதற்கு முயற்சிகளே செய்யவில்லை. இது ஒருவிதத்தில் எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

    காரி உமிழ்வது, ...த்திரத்தை அடக்கினாலும் ஆத்திரத்தை அடக்கமாட்டார், செத்தா போனார்கள், போன்ற வசைச் சொற்கள் எந்த ஊர் நாகரீகம் என்று தெரியவில்லை. இதைப் பற்றி இப்போதுவரை அந்த இங்கிலிபீசில் பிளந்து கட்டும் பேராசிரியர் எதுவும் கருத்து சொல்லவில்லை. அவருக்கு நான் ஒரு விஷ ஜந்து ஒன்று எல்லா இடத்திலும் ஒரே கருத்தை காப்பி பேஸ்ட் செய்து வருவதை வாந்தி என்று சொன்னதை மட்டும் மட்டமான வார்த்தை என்று குறிப்பிடத் தெரிந்திருக்கிறது. கோபம் வந்தால் ஆங்கிலத்தில் கூச்சலிடும் வழக்கமான மேல்தட்டு ஆணவம்.

    நீங்களும் மிகத் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். இந்த விளக்கம் விசிலடிக்கும் ராஜா மணிகளை கண்டிப்பாக வாயடைத்துப் போக வைத்திருக்கும். கட்டவுட் நாயகன் இளையராஜாவுக்கு இன்னும் வேறென்ன சிறப்பு என்று மண்டை காய்ந்து காகிதம் காகிதமாக எழுதிக்கொண்டிருக்கும் சில அற்பங்கள் இனி இதற்கும் என்னத்தைச் சொல்வது என்று குழம்பிப் போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுகளே கூச்சலிடும் நாம் சொன்னதை இல்லை இது எனக்கு வேண்டியதில்லை என்று நியாயம் பேசும். இந்த கருமாந்திரங்களுக்கு என்னத்தை சொன்னாலும் அது தீர்வாகாது என்று நாம் பாதையை திருப்பிக்கொண்டு போனால் அதற்கும் ஒரு காரணம் வைத்திருக்கும்.

    காரிகனின் எழுத்து இதுகளை எந்த அளவுக்கு பயப்படுத்தியுள்ளது என்பதை நான் அறிந்துகொண்டேன். என் பதிவுகளைப் படித்துச் சிரிப்பவர்கள் பிறகு எதற்கு என் கருத்தை இத்தனை தீவிரமாக எதிர்க்கவேண்டும்? என்னிடம் பதில் கேட்க வேண்டும்? அப்படியானால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அச்சத்திற்கு என் எழுத்தும் ஒரு காரணம். இல்லை என்றால் நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ என்பதே எனது பதிலாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      'அதுகள் இதுகள் ' என்று என்று இளையராஜா ரசிகர்களை நீங்களும்தான் வசை பாடுகிறீர்கள் . வசைச் சொற்கள் பொழிவது உங்களுக்கும் கைவந்த கலைதான் ! நீங்கள் என்னென்ன வசைச் சொற்கள் இதுவரை உபயோகித்திருக்கிறீர்கள் என்பதை வரிசையாக எடுத்துப் போட்டால் ஒரு பதிவே போடலாம் . காரிகனின் எழுத்து இளையராஜா ரசிகர்களை பயமுறுத்துகிறது என்பது நல்ல நகைச்சுவை. இளையராஜா பற்றிய உண்மைகள் சொல்லும்போது நீங்கள்தான் அஞ்சுகிறீர்கள் . உண்மையை மறைத்துப் பேச என்னென்ன சொல்லாடல்கள் இருக்குமோ அத்தனையையும் பயன்படுத்துவீர்கள். பொய்யான தகவல்கள் கொடுப்பீர்கள் . அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் .

      என் தளத்தில் உங்களைக் குறித்து அசிங்கமாக யாராவது எழுதியிருந்தால் அதை நான் நீக்கி இருப்பேன் . நீங்கள் அதை சரியாக கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. விமல் உங்கள் அளவிற்கு மோசமான வார்த்தைகள் பயன்படுத்தவில்லை . பயன்படுத்தி இருந்தால் அதையும் நீக்கி இருப்பேன் .

      Delete
  67. \\இதுபோன்ற சல்லித்தனமான விவாதங்களையே தவிர்ப்பது மேல் என்பது என் எண்ணம்.\\
    காரிகன்,காலையில் எழுந்து லேப்டாப்பைத் திறந்ததும் கண்களில்பட்ட ஒரு நல்ல செய்தி. நீங்கள் உங்கள் தகுதிக்கு சம்பந்தமில்லாத பல தளங்களில் சென்று சண்டைப்போடுவது 'எதுக்கு இவருக்கு இந்த வீண்வேலை?' என்ற எண்ணத்தையே எனக்குள் பல சமயங்களில் ஏற்படுத்தும். சில சமயங்களில், இல்லை இருக்கட்டும். இப்படி இவர் இருப்பதனால்தான் பலர் ஓரளவு பயத்துடனாவது எழுதுகிறார்கள் என்ற எண்ணத்தையும் தரும்.
    இவர்களையெல்லாம் நான் மிகச்சுலபமாகத் தவிர்த்துவிடுகிறேன்.
    நான் மட்டுமல்ல, தொடர்ந்து படிக்கும் பலபேர் அதனைத்தான் செய்வார்கள்.

    தலைப்பைப் பார்த்துவிட்டு இன்னதுதான் விஷயம், என்பதோ அல்லது இன்னார் இப்படித்தான் எழுதுவார்கள் என்பதோ தெரியவந்தபிறகு அதை எதற்குப் படிப்பது?

    படிக்கின்ற ஒன்று படிக்கிறவர்களுக்குப் புதிதான ஒரு தகவலையாவது தரவேண்டும். அல்லது எழுத்திலாவது மிகப்பெரிய அழகு இருந்து அதனை வாசிக்கின்ற இன்பத்தையாவது தரவேண்டும்.
    ஒன்றுமே இல்லாமல் அவர்கள் பாட்டுக்குச் சொன்னதையே திரும்பத் திரும்ப நாள்தவறாமல் சொல்லிக்கொண்டிருப்பதும், ஒரே சப்ஜெக்டையே புரட்டிப்புரட்டிப்போட்டு அதையே வார்த்தை அழகுகூட இல்லாமல் ஒரே வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருப்பதும்............ நமக்கு எதற்கு என்று நகர்ந்துவிடுவேன்.
    நான் மட்டுமில்லை, பொதுவாகவே இணையம் படிக்கும் நிறையப்பேர் அதனைத்தான் செய்வார்கள்.
    ஒருவர் ஒரே மாதிரி ஒரே சப்ஜெக்ட் பற்றி எந்நாளும் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார் என்று வையுங்கள். நான்கைந்து பதிவுகளுக்குப் பிறகு யாரும் படிக்கமாட்டார்கள். 'பதிவு படிக்காமலேயே ஓ இன்னைக்கு இந்தப் பாட்டா? சர்தான்' என்று நினைத்துக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள். எழுதுபவர் அவர்பாட்டுக்கு நமக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கவேண்டியதுதான். இணையம் என்பதில் மட்டுமல்ல, பொதுவாக வாசிப்பு என்பதே இப்படித்தான் இருக்கமுடியும்.
    ஏ.ஆர்.ரகுமானின் இசையாளுமைக் குறித்து நமக்கு என்ன அபிப்பிராயம் என்பது ஒருபுறமிருக்க அவர் அடைந்திருக்கும் உயரம் என்பது யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாததாக இருக்கிறது. இத்தனை உயரங்கள் அடைந்தும் துளியளவுகூட கர்வமோ தலைக்கனமோ இல்லாமல் அவர் இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம்.
    அவருடைய ஃபேஸ்புக்கில் அவருடன் இருக்கும் உலகப்பிரபலங்களும் அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாகத் தருகிறார்கள். அவையெல்லாம் அசாத்தியமாயிருக்கின்றன.
    இவையெல்லாம் ஒருபுறமிருக்க அவருக்கான வணிக மார்க்கெட்டிங்............... தலை சுற்றுகிறது. இவற்றையெல்லாம் ஒரு புன்முறுவலுடன் கடந்துபோகும் ரகுமான் பெரியதொரு பிரமிப்பையே ஏற்படுத்துகிறார்.
    இத்தனை இருந்தும் அவருக்கான ஆர்ப்பாட்டக் கூச்சல்கள் இணையத்தில் இல்லவே இல்லை என்பதுதான் முக்கியம்.
    உங்களது புதிய முடிவில் தேவையில்லாத சாதாரணத்தளங்களுக்கு விளம்பரம் தந்து எல்லாரையும் அழைத்துப்போகும் தேவையற்ற வேலையையும் தவிர்க்கிறீர்கள் என்பதாகவும் நான் புரிந்துகொள்கிறேன். நன்றி . சந்திப்போம்.

    ReplyDelete
  68. கண்ணன்,

    இணையதில் சில வருடங்கள் வரை பெரும்பாலும் இளையராஜா-ரஹ்மான் விவாதங்கள் பெரிய அளவில் இருந்தன. இன்னமும் இருக்கின்றன. இருவரில் யார் பெரியவர் என்ற அபத்தமான விவாதம் தனியாக முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இளையராஜா பற்றிய பதிவுகள் அதிகம். காரணம் இப்போது முப்பது நாற்பது வயதில் இருப்பவர்கள் எல்லோரும் அவரது இசையை கேட்டாமலிருந்திருக்க முடியாது. அதிகமான எண்ணிக்கையில் இணையத்தின் முதல் தலைமுறையினராக இவர்கள் இருக்கிறார்கள். எனவே தான் கேட்ட பாடல், தனக்கு நிகழ்ந்த இசை மாற்றங்கள், இசை அனுபவங்கள் இவற்றைக் கொண்டு இசைப் பதிவுகள் எழுதுவது நடந்துகொண்டிருக்கிறது. குற்றமில்லை. இது இயல்பானதுதான்.இப்போதுகூட முரளி கண்ணன் என்பவர் ரஹ்மான் இசை எப்படி தமிழகத்தை ஆட்டிப் படைத்தது என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

    http://muralikkannan.blogspot.in/2014/12/blog-post.html

    ஆனால் ராஜா ராஜாதான் வகையறாக்களால் ஒரு மிகப் பெரிய மோசடி அல்லது புனைவான ஒரு பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அது இளையராஜாதான் தமிழ்த் திரையின் ஒரே இசை அமைப்பாளர் என்பது. அவருக்கு முன்னோ பின்னோ அவரைப் போல ஒருவர் இல்லை என்பதே இவர்கள் போடும் காட்டுக் கூச்சல். ராஜா ராஜாதான் பதிவர்கள் இந்த மோசடியை வெற்றிகரமாக அரங்கேற்றி வந்தார்கள். ரஹ்மான் பதிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பது இவர்களுக்கு கிடைத்த மற்றொரு வசதி. நான் இணையத்தில் வாசிக்கத் துவங்கிய காலங்களில் என் கண்ணில் பட்டதெல்லாம் இந்த கருமாந்திரப் பதிவுகளே. இளையராஜா அல்லது ரஹ்மான் என்ற இருவரோடு அறுபது வருட தமிழ்த் திரையிசை பாரம்பரியத்தை இவர்கள் எளிதாக அல்லது மலிவாக எடை போடுகிறார்கள்.

    இந்த சமயத்தில்தான் அமுதவன் எழுதிய இளையராஜாவா ரஹ்மானா என்ற பதிவை நான் படிக்க நேர்ந்தது. சரி இவரும் அப்படித்தான் என்ற எண்ணத்துடனே படித்த எனக்கு அமுதவன் இந்த இருவரையும் தாண்டி தமிழ்த் திரையின் இசை சகாப்தங்களான எம் எஸ் வி- டி கே ஆர் பற்றிக் குறிப்பிட்டது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பரவாயில்லை. ஒருவராவது உண்மையை எழுதுகிறாரே என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. இதற்கும் முன்னே பல இடங்களில் ராஜா ரசிகர்களுடன் முட்டல் மோதல் உரசல் எல்லாம் நடந்தது.

    அமுதவன் மட்டுமே பழைய இசை அமைப்பாளர்கள் பற்றி அப்போது எழுதினார் என்பதில்லை. இன்னும் சில பதிவர்களும் எழுதினார்கள். இருந்தும் அவர்களின் எழுத்தில் இளையராஜாவை விட எம் எஸ் வி போன்றவர்கள் பெரிய சிறப்பு பெற்றவர்கள் இல்லை என்ற தொனி தென்படும். ஒரு ஒப்பீடாக பழைய இசை அமைப்பாளர்களைக் குறிப்பிட்டு ஆனால் ராஜா போல இல்லை என்ற மட்டித்தனமான கருத்தை நமது தலையில் ஊற்றுவார்கள். அமுதவன் இந்த ஒப்பீட்டை வேறு விதத்தில் செய்தார். எவை உண்மையில் மக்களின் மனதில் ஆட்சி செலுத்தும் பாடல்கள் என்று தெளிவாக எழுதினார். வழக்கமான ராஜா பற்றிய புனைவான மிகைப் படுத்தப்பட்ட சொல்லாடல்கள் அவரிடம் இல்லாதது கண்டு ராஜா ரசிகர்கள் அவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

    இப்போது நான் எழுதுவது அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. என்னைப் பற்றிய தகவல்கள் அவர்களை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது போல் தெரிகிறது. இதுதான் புதிதாக ஆங்கில மோகி என்று என்னை அழைப்பதன் பின்னணி. இளையராஜா பாடல்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமலே தமிழ்த் திரை இசை குறித்து பல பதிவுகள் எழுத முடியும் என்ற உண்மையே அவர்களை இடைஞ்சல் செய்கிறது.

    நீங்கள் எனது தளத்திலேயே விவாதங்களை நடத்துங்கள் என்பது சரியே. ஆனால் அதை விட இதுபோன்ற சல்லித்தனமான விவாதங்களையே தவிர்ப்பது மேல் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  69. ----- தலைப்பைப் பார்த்துவிட்டு இன்னதுதான் விஷயம், என்பதோ அல்லது இன்னார் இப்படித்தான் எழுதுவார்கள் என்பதோ தெரியவந்தபிறகு அதை எதற்குப் படிப்பது?படிக்கின்ற ஒன்று படிக்கிறவர்களுக்குப் புதிதான ஒரு தகவலையாவது தரவேண்டும். அல்லது எழுத்திலாவது மிகப்பெரிய அழகு இருந்து அதனை வாசிக்கின்ற இன்பத்தையாவது தரவேண்டும். ஒன்றுமே இல்லாமல் அவர்கள் பாட்டுக்குச் சொன்னதையே திரும்பத் திரும்ப நாள்தவறாமல் சொல்லிக்கொண்டிருப்பதும், ஒரே சப்ஜெக்டையே புரட்டிப்புரட்டிப்போட்டு அதையே வார்த்தை அழகுகூட இல்லாமல் ஒரே வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருப்பதும்............----


    அமுதவன், நீங்கள் குறிப்பிடுவது சரிதான். சலிப்பான எழுத்தில் தெரிந்த விஷயங்களை விவரிப்பதை படிப்பதென்பது சற்று பொறுமையை பதம் பார்க்கும் வேலைதான். என்ன செய்வது? சிலருக்கு அதுவே அதிகம்.

    கண்ணனுக்கு எழுதிய பின்னூட்டத்தில் சில மாற்றங்களைச் சேர்த்துக்கொண்டிருந்த வேளையில் உங்களது பதில் வந்தது.

    நான் வீண் விவாதங்கள் செய்வதில்லை. நான் ஒரு கருத்தை வைத்தால் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விவாதங்களை மற்றவர்கள் -- இ.ரா. ரசிகர்கள்--செய்வதில்லை. எனவே சில தளங்களிலேயே நான் போர் புரிய வேண்டியதாக இருக்கிறது. இந்த விவாதங்களைப் பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். ஆல்பி (நியுயார்க்கில் பரதேசி என்ற தளம்) என்பவர் இளையராஜாவின் பழைய பாடல்கள் குறித்து எழுதிக்கொண்டு வருகிறார். அங்கே நான் இதுவரை கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர் பதிவுகளைப் பாராட்டியே எழுதுகிறேன். ஏனெனில் எனக்கும் பிடித்த பாடல்களை அவர் விவரிக்கிறார். விவாதமே வர வாய்ப்பில்லை. நான் எப்போதுமே ஒரு குறிப்பிட்டவரை விமர்சிப்பதாக சொல்லும் அந்த நாலுபேர் இதைப் பற்றியும் பேசலாமே? தகுதியில்லாத இடங்களில் ஒரு முட்டாள் போல காட்சியளிக்கும் சந்தர்ப்பங்களையும் வீண் விளம்பர செயல்களையும் தவிர்க்க விரும்பினாலும் விபத்து போல சில சமயங்களில் இந்த விபரீதம் நிகழ்ந்துவிடுகிறது.

    ---உங்களது புதிய முடிவில் தேவையில்லாத சாதாரணத்தளங்களுக்கு விளம்பரம் தந்து எல்லாரையும் அழைத்துப்போகும் தேவையற்ற வேலையையும் தவிர்க்கிறீர்கள் என்பதாகவும் நான் புரிந்துகொள்கிறேன்.---

    அப்படியேதான்.

    ReplyDelete
  70. காரிகன்...

    எழுபதுகளின் வானொலிப்பெட்டியும் டீ கோப்பையுமாக... " கிளாஸிக் " படங்களை பார்த்ததுமே எங்களின் பூர்வீகவீட்டு ஞாபகத்திலும், அந்த காலகட்டத்தில், படத்தில் இருப்பது போன்ற வானொலிப்பெட்டியில் இருந்து அங்கு விடாது ஒலித்த திரைப்பாடல்களின் நினைவுகளிலும் முழ்கிவிட்டதால் பதிவை படிக்க தொடங்கவில்லை !!!

    என்ன ஒரு அற்புதமான படத்தேர்வு ?! இந்த தலைப்பும், இரண்டு படங்களும் மட்டுமே போதும் என தோன்றுகிறது...

    மிக விரைவில் பதிவுக்கான என் பின்னூட்டம்....

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  71. வாங்க சாம்,

    பாத்து ரொம்ப நாளாச்சு. நீங்க வந்ததே ஒரு சந்தோஷம்தான்.

    எங்கள் வீட்டில் இருந்த ரேடியோ கூட இந்தப் படத்தில் இருப்பது மாதிரியானதுதான். அந்த பொத்தான்களை அழுத்துவது, குமிழை திருகுவது, இடது பக்க மூலையில் இருக்கும் ஒரு பச்சை விளக்கு எரிவதை ரசிப்பது என்று பாடல்களைவிட பல நேரங்களில் அந்த ரேடியோதான் ஒரு அதிசயமான அங்கமாக இருந்தது.

    ரசிப்பில் பல வகை. தலைப்பையும் படத்தையும் ரசிப்பதும் அதில் ஒரு வகை.(இந்த ரேடியோக்கள் பற்றி அமுதவனும் சொல்லியிருந்தார் தன் முதல் பின்னூட்டத்திலேயே.) ஏறக்குறைய நானும் இதே வகையானவன்தான்.

    மீண்டும் ஒரு விரிவான பின்னூட்டத்துடன் வருக. நன்றி.

    ReplyDelete
  72. வணக்கம் அய்யா,
    பதிவு அசத்தல்..
    படிக்கக் ஒருமுறை
    பின்னூட்டம் ஒருமுறை
    பின்னூட்டங்களைப் படிக்க ஒரு முறை என்று பலமுறை படிக்க வேண்டிய பதிவு..
    படிக்கிறேன்..
    சதராம் நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... உங்களலால் எழுதப்பட்டிருகிறதா
    பெரிய ஆச்யர்யம் நீங்கள் புதுகை மண்ணைச் சேர்ந்தவர் என்பது
    facebook/kasthurirengan74 எனது முகநூல் முகவரி
    மின்னஞ்ல் தருக malartharu@gmail.com எனது முகவரி
    நீங்கள் புதுகைக்காரரா ?


    ReplyDelete
  73. வாருங்கள் மது,

    என் தந்தை தாசில்தாராக திருச்சி மாவட்டத்தில் வேலை பார்த்தவர்.எனவே திருச்சியைச் சுற்றி இருந்த ஊர்களில் எங்கள் பால்ய தினங்கள் கழிந்தன. அதில் கடைசியாக நாங்கள் வசித்த இடம் புதுகை.

    புதுக்குளம், மச்சுவாடி, பிரகதாம்பாள், பழனியப்பா, வெஸ்ட், எஸ் வி எஸ் திரை அரங்குகள், டி ஈ எல் சி பள்ளி, புவனேஸ்வரி கோவில், ராணி ஸ்கூல்,(ஒ இது வேறயா? எல்லாம் ஒரு பழைய பாசம்தான்) எல்லாமே எனது மனதில் ஒரு fossil போல படிந்துவிட்ட நினைவுகள். இதை நான் ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்தேன். இப்போதுதான் உங்களுக்குத் தெரிகிறது. நிறைய பேசலாமா?

    ReplyDelete
  74. //காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து- //
    பாடலில் இளையராஜாவின் சாயல் இருப்பதாக தெரியவில்லை.
    எம்.எஸ். வி யின் இசையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்என்று நினைக்கிறேன்.
    நான் அறிந்த வரை நிறைய எம் எஸ்.வி பாடல்களில் சரணத்தின் இறுதி வரிகள் இரண்டு முறை பாடப்படும்
    இந்தப் பாடலும் அப்படி இருப்பதால் எது எம். எஸ்.வி இசைதான் என்று உறுதிப் படுத்த முடிகிறது.

    ReplyDelete
  75. வாருங்கள் முரளிதரன்,

    நீங்கள் சொல்வது சரியே. இப்போது அந்த வித்தியாசம் நன்றாகவே தெரிகிறது. மேலும் எம் எஸ் வியின் இசை அமைப்பில் இளையராஜவின் சாயல் சற்றும் இருக்காது. ஆனால் இந்தப் பாடல் வெளிவந்த சமயத்தில் இளையராஜா வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். அதனால் எல்லாப் பாடல்களையும் முதலில் இளையராஜா இசை என்றே முடிவு கட்டிவிடுவது வழக்கமாக நாங்கள் செய்வதுதான். வயசுப் பொண்ணு என்ற தலைப்பு வேறு. ஒரு சிறுவனான நான் அப்போது எம் எஸ் வியின் இசை நுணுக்கங்களை அதிகம் அறிந்திராத பருவம். அதுவாவது ஒரு சிறிய கவனக் குறைவு. மெல்லத் திறந்தது கதவு படப் பாடல்களை இளையராஜாவின் இசை என்றே முன்னிலைப் படுத்துகிறார்கள் இன்றுவரை. இதை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்தேகம் எனக்கும் உண்டு. இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் எம்.எஸ்.வி தான் இசை அமைத்தாரா? அல்லது சில பாடல்களுக்கு மட்டுமா என்பது இன்றுவரை ஐயம் உண்டு. அப்பாடல்களில் எம்.எ.ஸ் வி யின் சாயலை உறுதியாக என்னால் அறிய இயலவில்லை. ஊரு சனம் தூங்கிடுச்சி பாடல் அவர் சாயலை நினைவு படுத்துகிறது.

      Delete
  76. முரளிதரன்,

    அந்தப் படத்தில் (மெல்லத் திறந்தது கதவு) எப்படி எம் எஸ் வி யும் இளையராஜாவும் இசை பகிர்வு செய்திருந்தார்கள் என்பதை வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை. ஒரு யூகமாக எம் எஸ் வி எல்லா மெட்டுக்களையும் அமைத்தார் என்றும் அதற்கு இளையராஜா இசை அமைத்தார் என்று சொல்லப்படுகிறது. அப்போது இளையராஜா அணியில் இருந்த ஒரு அன்பர் (நாகூர் கனி) நண்பர் அமுதவன் மற்றும் எனது தளத்தில் இதைப் பற்றி சில உண்மைகளை சொல்லியிருந்தார். அதன்படி ஒரே ஒரு பாடல் மட்டுமே இளையராஜாவால் முழுவதும் அமைக்கப்பட்டது. மற்ற எல்லாமே எம் எஸ் வி யின் மெட்டுகள்தான். பிறகு ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் எம் எஸ் வி அமைத்தது என்று குறிப்பிட்டிருந்தார். சொல்லப் போனால் அந்தப் படத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு பாடல் அதுதான் அது எம் எஸ் வி யின் பாடல் என்று தெரியாமலே. இந்த விஷயத்தில் இன்னும் ஒரு தெளிவான படம் கிட்டவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஊரு சனம் எம் எஸ் வியா..ஆஹா மிகவும் பிடித்த பாடல்...இளையராஜா என்று நினைத்திருந்தோம்...ஏன் சில போட்டிகளில் கூட அப்படித்தான் சொல்லிவருகின்றார்கள்...ம்ம்ம் நல்ல பகிர்வு..

      Delete
  77. \\இந்த விஷயத்தில் இன்னும் ஒரு தெளிவான படம் கிட்டவில்லை.\\
    இன்னமும் என்ன தெளிவான படம் வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்பது புரியவில்லை. நான் சொன்ன கருத்துக்கள் திரு எம்எஸ்வி அவர்கள் ஆதவனிடத்திலும்(மெகா டிவியில் என்று நினைக்கிறேன்), மேலும் திரு கங்கை அமரன் தன்னுடைய நிகழ்ச்சியிலும் தெரிவித்த கருத்துக்களே. மற்றும் நாகூர் கனியும் இதே கருத்தைச் சொல்லியிருந்தார்.

    ReplyDelete
  78. அமுதவன் அவர்களே,

    நீங்கள் சொல்வது உண்மைதான். நான் உடன்படுகிறேன்.

    இந்தப் படத்தின் இசை அமைப்பின் பங்களிப்பு வெளிப்படையாகப் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்த தகவலைச் சொன்னாலும் சிலர் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எல்லாமே இவர் பண்ணுனதுதான் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனால்தான் அந்த வாக்கியம்.

    ReplyDelete
  79. மகாபாரத்தில் கண்ணன் அர்ஜூன னுக்கு உபதேசம் செய்தது போல அமுதவன் காரிகனுக்கு உபதேசிக்கிறார் .தகுதியில்லாத பதிவைப் படிப்பதையும் ,பின்னூட்டமிடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று . பெயரில் அமுத த்தைக் கொண்டிருப்பவர் வார்த்தையில் விடத்தைக் கொட்டுவது ஏனோ? .இசையறிவு நிரம்பப்பெற்ற இரட்டையர்கள் என்று இதுவரை பிதற்றிக் கொண்டிருந்தவர்கள் தற்போது இணையத்தில் பதிவை எழுதுவதற்குத் தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று தம்பட்டம் அடிப்பது ஏன் ? அழகோடும் ,வார்த்தை ஜாலங்களோடும் எழுதுவதற்கு நீங்கள் என்ன செய்யுளா இயற்றுகிறீர்கள் ? எதுகை ,மோனை ,சந்தம் என்று எழுதுவதற்கு ? படித்ததை,பார்த்ததை ,அனுபவித்ததை பகிர்ந்து கொள்ள அழகூட்டல் எதற்கு ?எளிய நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது தானே நல்ல எழுத்தாளனுக்கு அழகு . கற்பனை உலகில் சஞ்சரிப்பதை விடுத்து யதார்த்தத்திற்கு வர முயலுங்கள் . புதியகாற்றில் சார்லஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதாக அமுதவன் குற்றம் சாட்டுகிறார் .எம் .எஸ் வி .யின் துதிபாடிக்கொண்டிருந்த காரிகன் இடைச்செருகலாக தன் சிறு வயது நிகழ்வுகளை நினைவுகளின் நீட்சி என பதிவு செய்திருந்தார் .இதில் அமுதவன் என்ன புதுமையைக் கண்டார் என்று தெரியவில்லை . தகுதியில்லாதவரோடு விவாதம் செய்வதால். தரம் தாழ்ந்து விடுவதாகவும் எச்சரிக்கிறார் . இளையராஜா மற்றும் அவரது ரசிகர்கள் குறித்த காரிகனின் வார்த்தைகள் அமுதவனின் பார்வைக்கு . இளையராஜா -porn music director ,தமிழிசையை சீரழித்தவர் . ஜானகி -கீச்குரல் ,சித்ரா -சுண்டெலி . இளையராஜா ரசிகர்கள் -(மரமண்டைகள் ,குள்ளநரிகள் ,கிணற்றுத்தவளைகள் ,அரைவேக்காடுகள் ,கருமாந்திரங்கள் ,சாக்கடை ரசனையாளர்கள் ,அற்பர்கள் ,விளக்கெண்ணெய் கருத்துக்கள் ,திராணி இல்லாத ஜென்மங்கள் ,உளுத்துப்போன பதிவை எழுதுபவர்கள். ..........)காரிகனின் பதிவைப் போலவே அவரின் வசைப்பட்டியலும் நீண்டுகொண்டே இருக்கிறது . இசையறிவுத் தகுதி கொண்ட இரட்டையர்களே தங்கள் தரத்தையும் தகுதியையும் சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் .

    ReplyDelete
  80. காரிகன்,

    ... இசை என்பதாலா அல்லது உங்களின் எழுத்தின் வசீகரமா... இல்லை இரண்டுமா என தெரியவில்லை... உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட எனக்கு ஒரு அமைதியான தருணம் வாய்க்க வேண்டும் ! இதோ...

    காலை நேரம்... நானும் தேனீர் கோப்பையோடு தனித்திருக்கும் ஏகாந்தம்... ஆனால் எனக்கு முன்னால் ரேடியோ பெட்டிக்கு பதிலாய் கணினி ! இதை பெறுவதற்க்காக தான் அதை இழந்தோமா அல்லது இது பழையதின் மீட்சியா ?!

    " முற்றத்தில் தெறிக்கும் சூரிய வெளிச்சம், தூண்கள் நிரம்பிய வீடு, ரசாயன மாற்றமடைந்து சருகாகிவிட்ட மஞ்சள் நிறம் பூசிக்கொண்ட புத்தகப் பக்கங்கள், ஒரு இன்லேன்ட் கடிதம், பொத்தான்கள் கொண்ட ஒரு பழைய ரேடியோ, பின் ஒரு பழைய பாடல்..... "

    இந்த வரிகளில் " கொல்லைப்புரத்து தென்னைகளில் சலசலப்பு, ஊஞ்சல் ஆடும் சப்தம்... " ஆகியவைகளும் சேர்த்துக்கொண்டால் எங்கள் வீடு !

    " விவித் பாரதியில் வர்த்தக ஒலிபரப்பு... "

    என் காதுகளில் முரசறைகிறது !

    " படத் தலைப்பும் வயசுப் பொண்ணு என்று பாரதிராஜா வகையறாக்களின் தலைப்பு போல இருந்ததும் இந்தப் பிழை நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம். "

    " காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்த்தூரி பொட்டுவைத்து... " எம்.எஸ்.விதான் ! என சொல்லிவிட்டு கடந்துவிடாமல் அந்த பிழைக்கான காரணமக நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச்சரி ! நானும் நீங்கள் குறிப்பிட்ட வகையறாதான் ! நான் பல ஆண்டுகள் தேடி பதிவு செய்த பாடல் அது. அந்த படத்தின் ரெக்கார்ட்டை பார்க்கும்வரை நானும் இளையராஜா எனவே நினைத்திருந்தேன் !

    " திருமணமானவுடன் பெண் முதலில் கணவனுக்கு,பிறகு அவனின் தாய் தகப்பன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அடிமையாக இருந்து புகுந்த வீட்டின் பெண்ணொருத்தி கெட்டு சீரழிந்தால் கூட இவள் மட்டும் பத்தினி பதிவிரதையாய் வாழ வேண்டும் " என்ற உயர்வான கருத்தை உணர்த்தும் வரிகள்... ஆனால் ஏகாந்த இசை, அதற்கு பாடியவர்களும் ஒரு காரணம் !

    " மலர்ந்தும் மலராத " பாடலின்... " யானைப்படை கொண்டு சேனை பல வென்று... " அதுபோன்று இனியொரு பாடல் சாத்தியமா என தெரியவில்லை !

    ஒரே வானம் ஒரே பூமி, ... எக்ஸ்ப்போ 74 விழாவின் போது எடுக்கப்பட்டதாக ஞாபகம்.. நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் ! இதை எழுதும் போது மலைராணியின் முந்தானை யூ டியூப்பின் வழியே என் அறையில் தவழ்ந்துகொண்டிருக்கிறது...

    காரிகன்,
    இழந்த நினைவுகளை மீட்டுக்கொடுக்கும் உங்களின் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் மட்டுமே நன்றியாகிவிடுமா ?!

    மலைராணியை தாண்டி நீங்கள் குறிப்பிட்ட மற்ற பாடல்களுக்கு நகர மனமில்லை !!!

    நண்பர் யாதவன்நம்பி எனது பதிவிலிட்ட இந்த பின்னூட்டத்துக்கான தகுதி உங்கள் பதிவுக்கே உண்டென்பதால்... கொடுக்கிரேன் !
    " இழந்த இந்த இளமைக் கால நினைவுகளை எல்லாம் மீட்டுக்கொடுத்த, காணாதக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உமது இந்த கட்டுரை பதிவு.
    இதுதான் ஒரு படைப்பாளியின் உண்மை வெற்றி! "

    " வாழ்கையின் வழிகளில் சில வெளிச்சங்களைத் தேடும் விருப்பம் சில சமயங்களில் நமக்கு ஏற்படும் ஒரு கட்டாயம்... குளங்கள்தான் எத்தனை பெரியவை என்ற எண்ணம் இயல்பானதுதான். ஆனால் அது கடல்களைக் காணும் வரைதான். "

    " இதுவும் கடந்து போகும் " வாழ்க்கையில் " புழுக்களும், பூச்சிகளும் " மட்டுமே குளங்களிலும், குட்டைகளிலும் தங்கி விடுகின்றன !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  81. காஞ்சி பட்டுடுத்தியும் இளையராஜா என்றுதான் நினைத்திருந்தோம்...அதுவும் எம் எஸ் வி ஆஹா...மிகவும் ரசிக்கும் பாடல்....

    ReplyDelete
  82. வாருங்கள் துளசிராமன்,

    சரியாகச் சொன்னீர்கள். இதைத்தான் நான் சொல்லியிருந்தேன். வானொலிகளில் கூட மெல்லத் திறந்தது கதவு பாடல்கள் ஒலிபரப்பினால் அதை வெறும் இளையராஜா இசை என்றே தெரிவிக்கிறார்கள். சிலரே எம் எஸ் வி -இளையராஜா என்று உண்மையைச் சொல்கிறார்கள். இந்த மடத்தனத்தைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஊரு சனம் தூங்கிருச்சு பாடலை உங்களைப் போல் பலரும் இளையராஜா இசை என்று கருதுவது எத்தனை மோசடி! இந்தப் பாடல் வெளிவந்த சமயத்தில் நான் அதிகமாக ஆங்கிலப் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன். செயின்ட் ஜோசெப் கல்லூரியின் விடுதியில் காலை நேர உணவருந்தும் சமயங்களில் இந்தப் பாடலை நான் முதலில் கேட்டபோதே இதன் மெட்டும் இசையும் என்னைத் தாலாட்டியது. அட நல்லாயிருக்கே என்று நான் கேட்ட பாடல் இது. என் நண்பன் இந்தப் பாடலை வெகுவா விரும்பிக் கேட்பான். அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்தப் பாடல் எம் எஸ் வி யின் கை வரிசை என்று அறிந்த போது என் இசை ரசனையின் மீது எனக்கே பெருமை ஏற்பட்டது.

    காஞ்சிப் பட்டுடுத்தி பாடலும் இதே போலத்தான். எம் எஸ் வி யின் முத்திரையான ராக இழைப்பு பாடல் முழுவதும் ஒரு நேர் கோடாகச் சென்று கேட்பவரை வசியம் செய்யும். இளையராஜாவும் பல நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் எம் எஸ் வி என்று வந்துவிட்டால் அவரே சற்று ஒதுங்கிக்கொள்வார். எம் எஸ் வி போன்று ராக வளைவுகளை அதன் நுணுக்கங்களை எளியோரும் ரசிக்கும் வண்ணம் மெட்டுகளாக இசை மொழி பெயர்ப்புச் செய்ததது அவரன்றி வேறு யார்? மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடல் ஒன்று போதாதா?

    ReplyDelete
  83. வாருங்கள் சாம்,

    உங்களின் தளத்தில் பின்பதில் செய்துவிட்டு இங்கே வருகிறேன்.

    முதலில் நன்றி. இத்தனை ஆழமான நேசிப்பான புரிதலான பின்னூட்டதிற்க்காக. பதில் எழுதுவதையே அனுபவித்து எழுதுவது ஒரு கலைதான்.

    நான் எழுதிய பல வார்த்தைகளை உள்வாங்கி அதனை மிக அழகாக வெளிப்படுத்தும் உங்களின் பின்னூட்டம் கண்டு நான் எதிர்பார்த்தவைகளை அப்படியே பிரதிபலித்தது குறித்து எனக்கு ஆச்சர்யம்.

    ---இந்த வரிகளில் " கொல்லைப்புரத்து தென்னைகளில் சலசலப்பு, ஊஞ்சல் ஆடும் சப்தம்... " ஆகியவைகளும் சேர்த்துக்கொண்டால் எங்கள் வீடு !----

    அடடே! என் வீட்டில் இந்த ஊஞ்சல் தோட்டம் தென்னை மர சலசலப்பு போன்ற இயற்கையின் இன்பங்கள் இல்லையே என்று ஆதங்கமாக இருந்தது இதைப் படித்தபோது. மரங்களின் நிழலில் சொர்கத்தின் துளி போன்று வீசும் பூங்காற்றின் சுகத்தை சுவாசித்து ஊஞ்சலாடும் அந்த போதை அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. நீங்கள் ராசிக்காரர்தான். நினைவுகளின் தொடுகை மட்டுமே இப்போது நம்மை தூங்க வைத்துக்கொண்டிருக்கிறது-சுகமாக --பழைய பாடல்களின் வடிவில்.

    நினைவுகளின் நீட்சியா அல்லது பழையதின் மீட்சியா என்ற உங்களின் கேள்வி என்னை கொஞ்சம் அதிர வைத்தது. எனக்குத் தோன்றவில்லையே இந்த வசீகர வார்த்தைகள்?

    ---" இதுவும் கடந்து போகும் " வாழ்க்கையில் " புழுக்களும், பூச்சிகளும் " மட்டுமே குளங்களிலும், குட்டைகளிலும் தங்கி விடுகின்றன !---

    உங்களைப் போன்ற வண்ணத்துப் பூச்சிகளும் பறவைகளும் என் தளத்தில் பறக்கும் போது புழுக்களையும் வெறும் பூச்சிகளையும் யார் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்? அவர்கள் குட்டையிலே கூடியிருக்கட்டும். தொந்தரவு செய்யவேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன்.

    வாழ்த்துக்களுடன்
    காரிகன்.

    ReplyDelete
  84. காரிகன். நீங்கள் எதிர்பார்த்த கருத்துக்களைப் பிரதிபலிப்பவர்கள் வண்ணத்துப்பூச்சிகளாகவும் ,பறவைகளாகவும் காட்சி தரும் போது எதிர் கருத்துரைப்பவர்கள் புழுக்களாகவும் ,பூச்சிகளாகவும் தெரிவது ஏனோ ?இதுதான் நடுநிலையாளருக்கான தகுதியா!

    ReplyDelete
  85. குட்டைகள் குளங்களைத் தாண்டி கடலுக்கு வந்துவிட்டவர்களை பறவைகள் என்றும் அவ்வாறான மேலான அனுபவம் இல்லாதவர்கள் புழு பூச்சிகள் என்பதே இதற்கு அர்த்தம். நீங்கள் இதில் எந்த வகை என்பதே கேள்வி. என்னை எதிர்க்கிறீர்களா இல்லையா என்பதல்ல.

    ReplyDelete
  86. பேராசிரியர் தருமி தமது தளத்தில் உங்கள் பின்னூட்டங்கள் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  87. அமுதவன் அவர்களே,

    படித்துவிட்டேன். அவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை. 804 இல் எழுதிய கருத்துக்கு மூன்று பதிவுகள் கழித்து 808 இல் ஏன் இந்த திடீர் விளக்கம் என்று புரியவில்லை. கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் மீண்டும் எதையாவது செய்து தொலைக்கப் போகிறார். பதில் எழுத வேண்டாம் என்று இதுவரை நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

    அதுசரி உங்கள் பதிவுகள் சிலவற்றில் பல கருத்துகளைக் காணவில்லையே என்ன ஆயிற்று? தேவையில்லாத இடங்களுக்கு உங்களை பஸ் ஏற்றி விட்டதற்கான எதிர் வினையோ என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  88. எல்லாவற்றுக்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. பதில் எழுதவேண்டாம் என்று நினைத்தால் அதுவே சரி.
    பின்னூட்டங்கள் பற்றிய விஷயம். வைரஸ் வேலை என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு அனானிமஸ் தத்தக்கா பித்தக்காவென்று ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதனை மட்டும் அழிக்கச்சொல்லி கிளிக் பண்ணியதற்கு மற்ற எல்லாப் பின்னூட்டங்களும் அழிந்துபோய்விட்டன. சரி, அடுத்த பதிவில் சோதித்துப் பார்க்கலாம் என்று முயன்றதில் அங்கேயும் அதே கதை நடந்துவிட்டது. சரி செய்யவேண்டும்.

    ReplyDelete
  89. காரிகன் சார்,
    அடுத்த பதிவு எப்போது? நீண்ட நாள் ஆகிறதே?

    ReplyDelete

  90. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    தோழமையுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  91. வாருங்கள் அனானி,

    அடுத்த பதிவு புத்தாண்டில் வந்துவிடும்.

    ReplyDelete
  92. வாருங்கள் யாதவன் நம்பி,

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய ஆண்டாக 2015 இருக்கும் என்ற நம்பிக்கையுடன்

    காரிகன்.

    ReplyDelete
  93. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  94. மது,

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்களது பணி தொடர்ந்து சிறப்பாக அமையட்டும்.

    ReplyDelete
  95. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  96. புத்தாண்டு வாழ்த்துக்கள் காரிகன் . உங்களின் அடுத்த பதிவிற்காய் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் .

    ReplyDelete
  97. 70களின் ஓ பாடல்கள் ஆனந்தம்.அதில் எம்.எஸ்.வி கே.வி.எம். குமார். விஜய் பாஸ்கர் சங்கர் கணேஷ் ஆரம்ப கால இளையராஜா அனைவருக்கும் பங்குண்டு.ஆனால் இசையை 60சதவீதம் மேற்கத்திய இசைக்கு மாற்றி இளையராஜா பாடலை கேட்க முடியாத படி செய்தார்.பல அருமையான பாடல்களையும் கொடுத்தார்.அவர் ஆரம்பித்து வைத்த நாசத்தை ரஹ்மான் செவ்வனே செய்தார்

    ReplyDelete