Friday 13 March 2015

இசை விரும்பிகள் XXIV - மாலை வெளிச்சம்.


உடைந்த நிலா, சுருதி குறையும் நாதம், அறுந்த வீணைக் கம்பி, மங்கிய ஒளி, வாடும் மலர், வாகனம் விட்டுச் சென்ற புழுதி, காதில் ஒலிக்கும் மணியோசை, குழந்தையின் திடீர் சிரிப்பு, கூரையிலிருந்து சொட்டும் மழைத்துளி, பயணத்தின் இறுதி நிறுத்தம், பாடல் முடிந்தும் கேட்கும் இசைத் தட்டின் தேய்ந்த ஓசை........



            



                                  எழுபதென்பதுகள்:   மாலை வெளிச்சம்.


      
   நினைவுகளின் நீட்சி  பதிவின் துவக்கத்தில் நான் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த எனது நண்பனைப் பற்றிக் குறிப்பிட்டு,  அவன் தெரிவித்த ஐந்து விருப்பப் பாடல்கள் பற்றிய தகவலுடன்  பதிவை ஆரம்பித்திருந்தேன். அவனுடைய இசையறிவு குறித்த என் சங்கடத்துடன் வெறும் அரசியல் பேசலாம் என்பதோடு அதை அங்கே  நான் நிறுத்திக்கொண்டாலும் அப்போது அந்த இடத்தில்  நடந்த  ஒரு முக்கியமான, (அதைவிட) வேடிக்கையான நிகழ்வைப் பற்றி நான் அப்போது குறிப்பிடவில்லை.  அது இங்கே வருகிறது.

      இசை, அரசியல் என   நாங்கள் தொடர்ந்து உரையாடியபடி இருந்தபோது அங்கேயிருந்த பெரிய டிவி திரையில் எனக்குப் பிடிக்காத கிரிக்கெட் என்ற சங்கதி ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கண்றாவியை காணச் சகிக்காமல் நான் எதோ பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவித்துக்கொண்டிருக்கையில் நல்லவேளையாக இடைவேளை போன்று  எதோ ஒன்று வர எனக்கு விமோசனம் கிடைத்தது. டிவியில் பாடல்கள் ஓட ஆரம்பித்தன. எனக்கு  ஆர்வமில்லா சில பாடல்கள் அசைந்தன. பிறகு திடுமென ஆ ஆஆ என ஹம்மிங் துவங்க ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற நிறம் மாறாத பூக்கள் படத்தின்  பாடல் திரையில் தோன்றியது. உடனே  என் நண்பன்  துடிப்பாக,  " ஆஹா! என்ன ஒரு இசை!" என்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.  "என்ன பாட்டு இது! கேளு, அப்படியே சொர்கத்துக்கே போயிடுவ" என்று எதோ அங்கே ஒவ்வொரு வாரமும் போய்வருபவன்   போலச் சொன்னான்.  இசை துவங்க, பாடலின் தாளம் ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தபடி கேட்க இன்பமயமாக   இருந்தது. (ஜென்சியின் குரலில் பாடல் துவங்கியதும் அந்த இன்பம் ஒரே நொடியில் தொலைந்துவிட்டது.) 

    திடீரென அங்கிருந்த ஒரு ஆசாமி பலமாகக் கைகளைத் தட்டி, குட்டிக்கரணம் அடிக்காத குறையாக குதித்து குதித்து வெகு உற்சாகமாக ஹோஹோ என்று குகை மனிதன் போல ஊளையிட்டான். அவனுடைய ஆவேச ரசனை எங்களை திடுக்கிடச் செய்தது.   "பார்த்தாயா இளையராஜாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை? அவர்கள் எங்கேயும் இருப்பார்கள்." என்று என்னைச் சீண்டும் மமதையுடன் சொன்னான் என் நண்பன். எனக்கோ அவன் கூறியது அப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிப்ஸ் போன்ற எதோ ஒரு வஸ்து உள்ளே சென்ற அளவுகூட செல்லவில்லை. அந்த குகை மனிதனின் சேஷ்டைகளை  சற்று கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் ஒன்றைக் கண்டேன். அவன் நடவடிக்கையில் ஒரு ஒழுங்கு முறை தெரிந்தது. அவ்வப்போது கைகளைத் தட்டுவதும் பின் அமைதியாவதும் என அவன் இருக்க, சிறிது நேரத்திலேயே எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. 

     நான் என் நண்பனிடம் திரும்பி," கொஞ்சம் உங்கள்  இளையராஜா ரசிகர் செய்வதை கவனி", என்றேன். அவனைக் கூர்ந்து நோக்கிய  என் நண்பன் , "இதிலென்ன?" என்றான் மிக அலட்சியமாக. "சரிதான். அப்பப்ப உங்க ஆள் அமைதியாகி விடுகிறாரே கவனிக்கவில்லையா?" என்றேன் நான். அப்போதுதான் அது அவனுக்கு உறைத்தது. "அட. ஆமா. எதுக்கு இப்படி செய்றான்?" என்றான் புரியாமல்.  "இது கூடவா தெரியல  உனக்கு? அவன் அடுத்து  கையைத் தட்டும் போது திரையைப்  பார்." என்றேன். அடுத்த முறை அந்த சேஷ்டை அரங்கேறியபோது திரையில் அசைந்தது  ஒரு மெல்லிய  உருவம்.  நடிகை ரதி அக்னிஹோத்ரி.  விசில் ஒன்றுதான் பாக்கி. மற்றதெல்லாம் செய்துகொண்டிருந்த அந்த குகை மனிதன் ரதி திரையை விட்டு மறைந்ததும் எதோ ஸ்விட்சை அனைத்ததுபோல அமைதியாகி பரீட்சைக்குப் படிக்கும் மாணவன் போல பரிதாபமாக  உட்கார்ந்திருந்தான். என் நண்பன், "இவனையெல்லாம்..."  என்று ஆரம்பித்து  எழுத சிரமமான தமிழில் அவன் புகழ் பாடிவிட்டு , "இதுக்குத்தானா   இத்தனை ஆர்ப்பாட்டம்? எக்மோர் மியுசியத்தில இருக்கவேண்டிய... (மற்றொரு புகழ் மாலை.) இப்புடி என்ன கவுத்துட்டானே." என்றான் ஒரு பாசாங்கான வருத்தத்துடன்.

         இந்தப் பாடல் எனக்குள் ஒரு வியப்பான எண்ணத்தை உண்டாக்கியது. உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அவ்வளவாக விருப்பமில்லாத ஒன்று. அவர் பல நல்ல பாடல்களை தனது கரடுமுரடான சாரீரத்தால் சரித்தவர்  என்று தீவிரமாக எண்ணம் கொள்பவன் நான். முதல் மரியாதை பாடல்கள் தவிர கோடை கால காற்றே, அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா?, வா வா வசந்தமே என வெகு சில பாடல்களே அவரது குரலில் என்னால் கேட்கமுடிந்தவைகள். அடுத்து எஸ் பி ஷைலஜா என்ற இடைச்செருகல்.  எஸ் பி பாலசுப்ரமணியத்தின் தங்கை என்ற ஒரே தகுதியால் பாட வந்தவரோ என்று நாங்கள் அப்போது பேசிக்கொள்வோம். இவரது குரலையெல்லாம் கேட்கவேண்டும் என்ற பாக்கியம் நமக்கு இளையராஜா என்ற ஒருவரால்தான் கிடைத்தது. இவராவது பரவாயில்லை. இவரது பாடல்களில் சில கேட்பதற்கு நன்றாகவே இருக்கும். குறிப்பாக 1983 இல் வந்த ஒப்பந்தம் என்ற படத்தில் இவர் பாடிய ஒரே முகம்  நிலா முகம் என்ற பாடல் கேட்க இனிமையாக இருக்கும். இறுதியாக எனக்கு எப்போதும் பிடிக்காத குரலுக்கு உரியவரான மூக்கால் பாடும் ஜென்சி. இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் இவராலேயே சீரழிந்தன என்ற என் எண்ணத்தை என்றைக்கும்  நான் மாற்றிக்கொள்ளவே மாட்டேன். காதல் ஓவியம் பாடும் காவியம் என்ற நல்ல பாடலை இவர் இளையராஜாவை விட கொடூரமாக குதறியிருப்பார்.  இந்த மூன்று வறண்ட  குரல்களும் சேர்ந்து ஒரு பாடல் பாடினால் அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்ற எண்ணமே திகிலூட்டுகிறது. ஆனால்  திகைப்பூட்டும் விதமாக இவர்கள் மூவரும் இணைந்து பாடிய ஆயிரம் மலர்களே மலருங்கள்   என்னைக் கவர்ந்தது. இது ஒரு முரண்தான். அதற்குக் காரணம் ஒன்றேதான் - இசை.  அங்கே இளையராஜாவின்  அந்த இசை இல்லாவிட்டால் ஆயிரம் மலர்கள் எனக்கு மட்டுமல்ல கேட்கும் யாருக்குமே இத்தனை வாசம் வீசியிருக்காது. மெய்மறக்கச் செய்யும் தாளமும், மேகம் போல நகரும் இசையும் மன ஆழத்தில் துயில் கொண்ட வேதனையை  எழுப்பும் துயர  மெட்டுமே இதன் காரணமாக இருக்கமுடியும். இதே மெட்டில் படத்தின் துவக்கத்தில் டைட்டில் பாடலாக நிறம் மாறாப் பூக்களே என்று  ஒரு பாடல் உண்டு. வெறும் லாலாலா என்ற ஜென்சியின் ஆலாபனையுடன் இந்தப் பாடலைக் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இசை. அந்த காலகட்டத்தில் வந்த மிக நவீன டைட்டில் இசை. நண்பர்கள் வட்டத்தில் இந்த இசையையும் ஒரு விவாதப் பொருளாக இருந்தது. முதல் முறையாக காதல் டூயட் பாடவந்தேனே என்றொரு பகடிப் பாடல் உண்டு. வித்தியாசமான காதல் பாட்டு. அப்போது பெரிய அளவில் புகழ் பெற்றிருந்த ஹிந்தி நடிகை ஜீனத் அம்மனை சீண்டிப்பார்க்கும் ஒரு  வரி கூட இதிலுண்டு. சட்டென ஆகாயத்தில் பறக்கும் உணர்வையூட்டும் இசையாக ஒலித்தது  இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன பாடல். ஜிவ்வென்ற துளிர்ப்பான இசைகொண்டது. 

     நான்கைந்து வருடங்களுக்கு முன் அரிதாக எனக்குக் கிடைத்த ஒரு சி டி யில் அந்தப் பாடலைக் கேட்டேன். பள்ளி நாட்களில் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல் அது. மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டபோது  அதே பழைய வண்ணம் மனதை ஆக்ரமிக்க, இசை நெஞ்சத்தில் பூங்காற்று வீச, அங்கு வந்த என் சகோதரியின் மகன் என்னை ஏளனமாகப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே கடந்து சென்றான். "ஒனக்கெல்லாம் வேற வேலையே  கெடையாதா?" என்ற செய்தி அந்தப் புன்னைகையின் பின்னே ஒளிந்திருந்தது.  நானோ அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் என் நினைவுகளின் மடியில் சுகமாக தஞ்சமடைந்தேன். சிலருக்கு ஏளனம் சிலருக்கோ  ஏகாந்தம். சில பாடல்கள்தான்  நம் எண்ணங்களை எங்கெங்கோ இழுத்துச் செல்லும் வலிமை கொண்டவையாக இருக்கின்றன!. அப்படியான அந்தப் பாடல் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.  பட்டாக்கத்தி பைரவன் என்ற அதிகம் அறியப்படாத  படத்தில் உள்ளது இந்த அற்புத இசை இழை. பாடலின் துவக்கமே போதை தரும்.  அதிக சத்தங்களின்றி மெதுவாக கிளம்பும் ஒரு ரயில் போன்று துவங்கும் இசை பின்னர் சடசடவென்று கோடை மழை போல் சரமாரியாக கொட்ட,  வானவில்லின் மீது படுத்துக்கொண்டது போன்ற  மயக்கம் தழுவ, தேனொழுகும் மெட்டுடன் பாடல் துளித்துளியாக உள்ளத்தில் நிரம்பும். இது  சிவாஜிக்கான பாட்டு என்பதே அப்போது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு அழகான ஓவியம் போன்ற பாடலும் உண்டு இதே படத்தில்.  தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள் என்ற பாடலே அது. பாடலின் போக்கே எதோ ஊஞ்சலில் ஆடுவதைப் போலிருக்கும்.

    77இல் பட்டி தொட்டி எங்கும் குதித்து விளையாடிய 16 வயதினிலே படப் பாடல்கள் அடுத்து இளையராஜாவை எடுத்துச் சென்ற இடம் அவரே எதிர்பார்க்காதது.  77 இல் அவர் இசையமைத்த ஒரு படம் தீபம்.  இது ஒரு மிகச் சாதாரண தகவல் போல தெரிந்தாலும் இதன் பின்னணியில் உள்ள அசைவுகள் அசாதாரணமானவை. தமிழக அரசியல் சூழல் அப்போது இந்திரா காந்தி 75 இல் அனுமதித்திருந்த எமெர்ஜென்சி புயலின் பாதிப்பில்  சிக்கியிருந்த நேரம். தமிழக அரசியலில் புதிதாக உருவான இரட்டை இலை கட்சி மக்கள் மத்தியில் பெற்ற பெருத்த வரவேற்ப்பும்  அதன் தலைவரான  நடிகர் எம் ஜி ஆரின் மீது மக்கள் வைத்திருந்த அபிமானமும் மிகையில்லாத உண்மைகள். அதுவரை திரைத் துறையில் கோலோச்சி வந்த இருவர்களில்  முதன்மையானவரான   எம்ஜிஆர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனதும் வேறு வழியின்றி  (அவர் தான் நடிக்க அனுமதி கேட்டு அது கடுமையாக நிராகரிக்கப்பட்டது)  நடிப்பைத் துறந்து  அரசியலில் கலந்துவிட, மீதமிருந்த ஒரே பெரிய ஆளுமையாக சிவாஜி நீடித்தார்.  இருந்தும் அவரது அரசியல் காய் நகர்த்தல்கள் மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. இது அவரது படங்களிலும் எதிரொலித்தது. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியைத் தழுவியபடி இருந்தன.

    இந்த சமயத்தில் சிவாஜியின் நீண்ட நாள் நண்பரும் தயாரிப்பாளருமான பாலாஜி (இவர் வழக்கமாக தெலுகு மற்றும் ஹிந்திப் படங்களை தமிழில் மறுபதிப்பு செய்பவர்.) ஒரு புதிய படத்தை உருவாக்க முனைப்பு காட்டினார். இந்த காலகட்டத்தில் அவருக்கும்  வெற்றி தொட முடியாத புள்ளியாகவே இருந்தது. இந்த  சூழலில்தான்  தீபம் என்ற படம் உருவானது சிவாஜி நடிப்பில். பாலாஜி, சிவாஜி இருவருக்குமே தீபம் ஒரு மிக முக்கியமான படமாக இருந்தது. எனவே சில மாற்றங்களை அனுமதிக்கவேண்டிய தேவைகள்  அவர்களுக்கு எழுந்தன. இதன் நீட்சியாக அதுவரை சிவாஜி படங்களுக்கு தொடர்ச்சியாக இசை அமைத்து வந்த கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்ற பழைய பள்ளி  இசை அமைப்பாளர்களை (old school musicians) ஒதுக்கி விட்டு முதல் முறையாக ஒரு புதியவருக்கு கதவுகளைத் திறக்கலாம் என்ற எண்ணம் அப்போது அவர்களுக்கு ஏற்பட்டதன் விளைவு சிவாஜி-இளையராஜா இணைப்பு.   இது  தீபம் படத்தில் நிகழ்ந்தது.

        இதற்கு முன்னோடியாக ஒரு பத்திரிகை பேட்டியில் சிவாஜி அப்போது தான் அதிகம் விரும்பும் தனக்குப் பிடித்த பாடலாக குறிப்பிட்டது செந்தூரப் பூவே என்ற பதினாறு வயதினிலே படப் பாடலைத்தான். இந்த  தகவலுக்குப் பின்னே இருந்த செய்தி சிவாஜி இளையராஜாவை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொன்னாலும்   தீபம் படத்தில் இளையராஜா இசை அமைப்பது அப்போது பலருக்கு பெருத்த வியப்பைக் கொடுத்தது. 76 இல் வந்த ஒரு சிறிய இசை அமைப்பாளர் வந்தே ஒரே ஆண்டில் சிவாஜி படத்திற்கு இசை அமைப்பது அப்போது பலரது புருவங்களை உயரச் செய்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்து வந்த சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்குக் கிடைக்காத இந்த பொன்னான வாய்ப்பு இளையராஜாவுக்குப் போனது அவரை நோக்கி தயாரிப்பாளர்கள் பலரும் படையெடுக்கும் நிலைக்கு அவரை உயர்த்தியது.  படம் வெற்றி பெற்று பாடல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே,  என்ற  இரண்டு பாடல்களும் சிறப்பானவை. சிவாஜிக்கு இளையராஜா எவ்வாறு இசை அமைப்பார் என்று எதிர்பார்த்தவர்களின் ஆவலை பூர்த்தி செய்தது அந்தப்புரத்தில் ஒரு மகாராணி.   மீதமான பேசாதே, ராஜா ஒரு யுவராஜா என்பவை அதிகம் பேசப்படாத சராசரி வகை. சற்று தொய்வானவை.

       சிவாஜிக்கு தொடர்ந்து  ஆறு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும்  இளையராஜாவினால் சிவாஜி பிராண்ட் எனப்படும் அவரது  ஆளுமைக்கான நேர்த்தியான  இசையை அளிக்கமுடியவில்லை என்பதே உண்மை. தீபம் தியாகம் நல்லொதொரு குடும்பம் என்று துவக்கத்தில் சிவாஜிக்கான இசையை கொடுப்பதில் கடுமையான பிரயத்தனம் காட்டிய இளையராஜா அதன் பின் தன் பாணியில் சிரமங்களின்றி சென்றுவிட்டார். டி எம் எஸ் குரல் ஒன்றே   சிவாஜி என்ற   நடிகனை  அடையாளம் காட்டக்கூடியதாக ஒலித்தது.

      உதாரணமாக கவரிமான் என்ற படத்தின் பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினைக் கண்டேனம்மா என்ற பாடல் (மட்டுமே) சிறப்பாக இருந்தாலும் சிவாஜி பாணி கொஞ்சமும் இல்லாத பாடல். விஜயகுமார், சிவகுமார் அல்லது கமலஹாசன் பாடுவதைப் போலவே இருக்கும். "சிவாஜிக்கு இளையராஜா போட்டிருக்கிற பாட்டப் பாரேன்" என்று நாங்கள் கிண்டல் செய்வதுண்டு. 

   நல்லதொரு குடும்பம் படத்தின் செவ்வானமே பொன்மேகமே, மிக ரசனையான பாடல். சிவாஜிக்கான சிந்து நதிக் கரையோரம் அந்தி நேரம் பழைய எம் எஸ் வி பாணியில் இருக்கும் ஒரே நல்ல பாடல்.  , கண்ணா உன் லீனாவிநோதம், 1, 2 சசச்சா (எல் ஆர் ஈஸ்வரி இளையராஜா இசையில் பாடிய வெகு சில பாடல்களில் ஒன்று.) என்ற இரண்டுமே மிக நலிந்த இசை அமைப்பு கொண்டவை. ஒரு தடவைக்கு மேலே கேட்கவே முடியாது.

  ஆனால் தியாகம் படத்தின் பாடல்கள் தென்றலைத் தொட்டு வரைந்த ஓவியங்கள் போல வெகு இனிமையாக இருந்தன, தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே , நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி, வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் என இதன் பாடல்கள் கேட்க சற்றும் அலுப்பைத்தராதவை. குறிப்பாக இன்றளவும் நான் மிகவும் ரசித்துக் கேட்கும் பாடலான நல்லவெர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒரு காவியப் பாடல். 

   இதே போல நான் வாழவைப்பேன் படத்தின் ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே, என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்துப் பாடல்கள், திருத்தேரில் வரும் சிலையோ என அனைத்துப் பாடல்களும் கேட்க ஆனந்தமயமாக இருக்கும்.  எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ உள்ளமே என்ற டி எம் எஸ் பாடிய பாடல் அப்போது பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

    தொடர்ந்து ரிஷிமூலம் படத்தில் வந்த இரண்டு பாடல்கள் ரம்மியமான உணர்வை கொடுப்பவை. ஐம்பதிலும் ஆசை வரும்  அப்போது பலரால்  அதிகம் பகடி செய்யப்பட்டாலும்  மிக அருமையான கானம். நான் அதிகம் ரசிக்கும்  பாடல் நேரமிது, நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுது என்ற கண்ணியமான தொல்லை தராத சுக கீதத்தைதான். ஒரு தாலாட்டைப் போன்ற காதல் கானம்.  இந்தப் பாடலின் போதுதான் இளையராஜாவுக்கும் டி எம் எஸ் ஸுக்கும் மோதல் ஏற்பட்டதாகப் படித்த நினைவு. பாவங்கள் இல்லாமல் பாடுகிறார் என்று வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்,  சட்டி சுட்டதடா கை விட்டதடா, ஆறு மனமே ஆறு, யார் அந்த நிலவு, காற்று வாங்கபோனேன் ஒரு கவிதை வாங்கிவந்தேன், அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் போன்ற ஆன்மாவை தொடும் பாடல்களைப் பாடியவரை இகழ்ச்சியாக குறிப்பிட்டது அப்போது பெரிய விவாதப் பொருளாக இருந்தது. இதற்கு முன்னோடியாக சிலோன் வானொலிக்கு அளித்த பேட்டி  ஒன்றில் டி எம் எஸ் இளையராஜா இசை பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிக்கு (ஓரம்போ பாடல் பிரபலமாக இருந்த சமயம் அது.) " இது போன்ற மலிவான பாடல்கள் மக்களிடம் நிற்காது" என்ற கருத்தில் எதையோ சொல்லப் போக இது அவரை கடுமையாக கொதிப்படையச் செய்ததாக தகவல் உண்டு.  இதன் நீட்சிதான் டி எம் எஸ் - இளையராஜா இடையேயான விரிசல்.

        வெற்றிக்கு ஒருவன் என்றொரு படம் இந்த சமயத்தில் (79) வந்தது. சிவாஜி ஒன்றும் தெரியாத அப்பாவியாக(!) நடிப்பதாக நினைத்து நம்மை படுத்தியிருப்பார்.  இவரது தந்தை வழக்கமான மேஜர் சுந்தரராஜன். நண்பர்கள் போல பழகுவார்களாம். அம்மா புஷ்பலதா கூட படத்தில் ஒருமுறை இவர்களைப் பார்த்து "சகிக்கல" என்று சொல்லும் வசனம் வரும். நமக்கும் அப்படித்தான் தோன்றும். தந்தையும் மகனும்  சேர்ந்து "அந்த" மாதிரியான ஆங்கிலப் படங்களுக்கு சென்று பார்ப்பதாக ஒரு காட்சி வேறு உண்டு. போலிஸ் அதிகாரியான சுந்தரராஜன் கொல்லப்பட்டதும் நம் தமிழ் சினிமா ஊட்டும் திடீர் விதியின் படி வெகுண்டு எழும் ஒன்றுமே தெரியாத சிவாஜி தந்தையை கொன்றவர்களை பழி வாங்க சபதம் ஏற்று,  இடையில் ஸ்ரீப்ரியாவுடன் தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி, முத்தமிழ் சரமே இளங்கொடி மலரே  போன்ற  பாட்டெல்லாம் கோட் சூட் அணிந்து வித்தைக்காரன் போல ஆடிப்பாடி "எல்லாம்" அறிந்தவராகி, இறுதியில்  ஹோட்டல் ஒன்றில் கொடூர  ஆப்பிரிக்க மேக்கப்பில்  பலவிதமான ஆதிவாசி சேஷ்டைகளுடன் ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ என்று கொடியவர்களைப் பார்த்து   மங்களம்  பாடிவிட்டு , (அவர்களுக்கு இவரை அடையாளம் தெரியாதாம்.  அதுதான் அந்த ஆப்பிரிக்க மேக்கப்பின் லாஜிக்.)  வழக்கமான டிஷ்யூம் டிஷ்யூம் சண்டைக்குப் பிறகு பழிவாங்கல்   இனிதே முடிய, ஸ்ரீப்ரியாவை அணைத்துக்கொள்வார். பார்க்கிற நமக்குத்தான் படு பயங்கரமாக எரியும். என் பள்ளி நாட்களில் நான் பார்த்த சிவாஜி படங்கள் பொதுவாக இதுபோன்ற குப்பைகள்தான். அதனால்தான் யாராவது என்னிடம் சிவாஜி மாதிரி யாரும் நடிக்க முடியாது அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர்  என்றால் ஒரு ஏளனச் சிரிப்புடன் "எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீங்க ஒங்க வேலையப் பாருங்க" என்று எண்ணிக்கொள்வேன். நான் பார்த்த சிவாஜி படங்கள் அப்படி. அவர் தன் ஆரம்ப காலத்திலேயே முதல் 150 படங்களில் தன் அனைத்து நடிப்பையும் காட்டி முடித்துவிட்டார் என்ற உண்மையெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நான் எப்படி  சிவாஜியை ரசிக்கத் துவங்கினேன்  என்பது  ஒரு தனிப் பதிவாகவே எழுதக்கூடிய விவரங்கள் கொண்டது.   இதை இப்போது தவிர்த்து விட்டு மையமான தகவலைப் பார்ப்போம்.

   இத்தனை படங்கள் இருந்தும் இந்தப் படத்தை நான் இப்படி குறிப்பிடுவதற்குக் காரணம் இதில் வரும் ஒரு கொலைக் காட்சி. மற்றும் ஒரு பாடல். எதோ ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து சுட்ட காட்சிதான். வில்லன் மோகன் பாபு தனியாக நீண்ட  தூரம் நடந்து சென்று ஒரு ஆட்களில்லாத கட்டிடம்  மேலே நின்று  பெட்டியைத் திறந்து உள்ளே இருக்கும் பல துண்டுகளை  நிதானமாக ஒவ்வொன்றாக  இணைத்து ஒரு பெரிய ரைபிள் ஒன்றை உருவாக்கி டெலஸ்கோப் உதவியுடன் குறி பார்த்து சுடுவார்- சுந்தர்ராஜனை. (ஜான் எப் கென்னெடியை சுட்டதுபோல). சுந்தர்ராஜனுக்கு இதெல்லாம் ரொம்பவும் அதிகம் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது.  அந்த காட்சி மனதில் அப்போது  பதிந்துவிட்டது. படத்திற்கு கொடுத்த 2.15 காசு அதற்கே சரியாகப் போய்விட்டது என்று  நினைத்துக்கொண்டேன். அந்த காட்சி மட்டும் படத்தோடு கொஞ்சமும் ஒட்டாமல் இருக்கும். அதன் பின் அந்த சிவாஜியின் கர்ண கடூர காட்டுவாசி தோற்றத்தில் வரும் ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ என்ற பாடல் என்னைக் கவர்ந்தது. சொல்லப்போனால் மேற்கத்திய பாணி என்று இளையராஜா எண்பது, தொண்ணூறுகளில் அமைத்த கொடூரமான இசையை விட (ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா வகைகள்.) இந்தப் பாடலில் மேற்கத்திய இசையை அபாரமாக அமைத்திருப்பார்.  துடிப்பான இசையில் வெட்டிச் செல்லும் மெட்டு. ஒரு முறை கேளுங்கள். இந்தப் பாடலை இத்தனை தூரம் நினைவில் வைத்திருக்கும் வெகு சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன் என்றே நினைக்கிறேன்.

        இச்சமயத்தில் வந்த பல படங்களுக்கு இளையராஜாவின் இசை ஒரு புதிய வண்ணம் அளித்தது. விரைவாக அவரது இசை நோக்கி இளைஞர்கள் நகரத் துவங்கினார்கள். அப்போது பொதுவாக இப்படித்தான் நாங்கள் பேசிக்கொள்வோம்;" இசை யாரு? இளையராஜாவா? இல்லை வேற ஆளா?" 

   இளமை என்னும் பூங்காற்று பாடல் அளித்திருந்த சுகம் பற்றி போன பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைத்தவிர பகலில் ஒரு இரவு படத்தின் பாடல்கள் எல்லாமே அற்புதமான இசை வடிவங்கள் . பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம், தாம் ததீ ஆடும் உள்ளம் பாடும் காவியம் (மிக அருமையான இசையமைப்பு கொண்ட வளைந்து வளைந்து செல்லும் மலைச்சாலை போன்ற மெட்டு கொண்ட பாடல்) , கலையோ சிலையோ, தோட்டம் கொண்ட ராசாவே என்று அதுவரை காணாத  இசைச் சோலைகள் விரிந்தன.

     காற்றினிலே வரும் கீதம் படப் பாடல்கள் அடுத்த இனிய அதிர்ச்சி அளித்தன. சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்,  ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய், கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் போன்ற பாடல்கள் இடைவிடாது ஒலித்து எம் எஸ் வி யின் சாம்ராஜ்யத்தை சற்றே அசைத்தன. ஒரு புதிய இசை வடிவம் வந்துவிட்டதை இளையராஜாவின் தொடர் வெற்றி உறுதி செய்தது. 

       எதோ நினைவுகள் மனதிலே   அகல் விளக்கு படத்தில் இடம் பெற்ற ஒரு பசுமையான எண்ணத்தை விதைக்கும் அருமையான பாடல். நல்லிசையின் நீட்சியாக வந்த இளையராஜாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று. 

    வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது பூந்தளிர் படத்தின் மிக சிறப்பான பாடல். பாரம்பரிய ராக தொடர்பு கொண்ட  மெட்டு மழைத்துளி போல  பாடல் முழுவதும் தெறித்து நம் மீது படரும். இதிலுள்ள இன்னொரு நல்ல பாடல் ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே. இதையெல்லாம் விட மற்றொரு மயக்கும் கானம் இந்தப் படத்தில் உண்டு. மனதில் என்ன  நினைவுகளோ இளமை கனவோ என்று துவங்கி அபாரமான தாள ஓசையுடன் இசை இசையாக உள்ளுக்குள் இறங்கும் இனிய கானம். எஸ் பி பி யும் எஸ் பி ஷைலஜாவும் சேர்ந்து பாடிய டூயட். (இருவரும் சேர்ந்து பாடிய முதல் பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.) இது போன்ற தேன்துளிகளை புதைத்துவிட்டு பின்னாளில் வந்த நீர்த்துப் போன பாடல்களை இளையராஜாவின் முத்திரை இசையாக சிலர் பேசுவது குறித்து எனக்கு வருத்தமே.

   தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக் கிளியே என்றொரு பாடல் லட்சுமி படத்தில் இருக்கிறது. பாடல் வந்த புதிதில் இது எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. தடத்தடவென ஓடும் இசை. கேட்பதற்கு அலாதியாக இருக்கும். இதே படத்தில் உள்ள மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே   என்ற பாடல் சுசீலாவின் குரலில் மிக மென்மையாக ஒலிக்கும். இளையராஜாவின் இசையில் சுசீலா என்ற கானக் குயிலின்  தனித்தன்மை மிக இனிமையாக  வெளிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

      முள்ளும் மலரும் வெளிவந்த பின் மகேந்திரன் என்ற இயக்குனர் பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து  உதிரிப்பூக்கள் என்ற படம் அவர் இயக்கத்தில் வந்தபோது மகேந்திரன் தமிழக சத்யஜித்ரேவாக மாறிப்போனார். படத்தில் இல்லாத குறியீடுகளும், உலகத் தரமும் விமர்சகர்களால் இன்றுவரை அலசப்பட்டு வருகின்றன. தமிழில் வந்த வெகு சில தரமான படங்களில் மகேந்திரனுக்கும் கண்டிப்பாக ஒரு பங்கு இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. உதிரிப்பூக்கள் படத்தின் நான் விரும்பும் ஒரே பாடலான அழகிய கண்ணே உறவுகள் நீயே பாடல் ஒரு துயர இசையின் பிரதியாக கேட்கும் நம்மை நாம் மறந்துவிட்ட சோகங்களுக்கு அழைத்துச்  செல்லும் வலிமை கொண்டது.  ஆனால் ஒரு பாசமிகு தாய் ஒரு மகிழ்ச்சியான சூழலில் எதற்காக இத்தனை துயரமாக தான் நேசிக்கும்   குழந்தைகளிடம் பாடவேண்டும் என்ற கேள்வி எனக்குண்டு.

      80ஆம் ஆண்டில் இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி வந்தது. பிறமொழிப் படங்களை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி தமிழில் பிரதி எடுத்து தன் மேதமையை நிரூபித்த  பாலு மகேந்திராவின் மூன்றாவது படம். இன்றும் பலரால் விரும்பப்படும்  வசந்தமாக வீசும் கானம் ஒரு கானம் இதிலுள்ள என் இனிய பொன் நிலாவே. ஜேசுதாசின் நெளிவான ததத தாத்ததா இன்றைக்கும் நம் மனதை சுண்டியிழுக்கும். ஒரு விதமான கிறக்கம் கொடுக்கும் பண்பான காதல் கீதம். மேற்கத்திய இசையும் நமது ராகங்களும் இணைந்து படைத்த சுவையான இசை விருந்து.  என் நண்பர் ஒருவர் இந்தப் பாடலை உலகின் தலை சிறந்த பாடலாக சிலாகித்துப் பேசுவார். எண்பதுகளின் இறுதி, தொன்னூறுகளில் வந்த இளையராஜாவின் பாடல்களை இதனுடன் ஒப்பீடு செய்து ," அதான் பாட்டு. என் இனிய பொன் நிலா கொடுத்த ராஜாவை காணவில்லையே" என்று கண்ணீர்த் துளிகள் இல்லாமல் வருத்தப்படுவார்.  இதே படத்தின் பருவ ராகங்களின் கனவு என்ற பாடல் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. ஆனால் நேர்த்தியாக இசைக்கப்பட்ட தரமான பாடல். இதில் ஸ்விங் ஸ்விங் என்றொரு ஆங்கிலப் பாடல் உண்டு. டாக்டர் கல்யான் என்பவர் இளையராஜாவின் இசையில் இதுபோல சில ஆங்கிலப் பாடல்கள் அப்போது பாடியிருக்கிறார். (இன்னொரு பாடல் காளி என்ற படத்தில் இருக்கிறது.) நான் இந்தப் பாடலைப் பதிவு செய்து அடிக்கடி கேட்ட நாட்கள் உண்டு.

      சங்கர்லால் என்று ஒரு படம் வருடக்கணக்காக எடுக்கப்பட்டு இறுதியில் வெளிவந்தது. படத்தில் கமலஹாசன் பலவித முக அமைப்பில் எந்தவித மேக்கப் உதவியும் இல்லாமலே வருவார். வண்ணப் படம் திடீரென கருப்பு வெள்ளையாக  மாறும். இளங்கிளியே இன்னும் விளங்கலியே,  கஸ்தூரி மான் ஒன்று என்று இரண்டு பாடல்கள் அப்போது வானொலிகளில் வட்டமடித்தன.  இந்த உருப்படாத படத்துக்கு கூட இளையராஜா நல்லா பாட்டு போட்டுருக்கார் என்று நாங்கள் சொல்வதுண்டு.

    சட்டம் என் கையில் படத்தின் சொர்க்கம் மதுவிலே சொட்டும் அழகிலே இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் வரும் வினோதமான பெண் ஓசை கேட்பவரை திடுக்கிடச் செய்யும். ஆங்கில பாணி என்று நினைத்துக்கொண்டு இளையராஜா வெகு மலிவான முறையில் பாடலை அமைத்திருப்பார்.  இடையிசை மட்டும் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.  ஒரே இடம் நிரந்தம் என்ற பாடல் சற்று தெளிவான கானம். சலிப்பின்றி கேட்கலாம். வழக்கமான இளையராஜா பாணி அதிரடி கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ. ஆழ்கடலில் தேடிய முத்து என்றொரு நல்ல பாடல் இருக்கிறது. 

    இளையராஜாவின் இசை தமிழ் திரையிசையின் போக்கை மாற்றிக்கொண்டு வந்த நேரமது. இந்த இடத்தில்  நாம் ஒரு மிக முக்கியமான நிகழ்வைப் பற்றி பேசவேண்டும். இளையராஜாவின் இசை எவ்வாறு சில நடிகர்களின் larger-than-life என்ற அபிரிமிதமான  ஆளுமைக்கு வலு சேர்த்தது என்பதை இங்கே நாம் நினைவில் கொள்வது அவசியம்.  அப்போது வளர்ந்து வந்த புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி இருவருக்கும் இளையராஜா அளித்த இசை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. ஒரு விதத்தில் அவர்களிருவரும் இளையராஜாவின் இசையினால் வார்த்து எடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம். எவ்வாறு தமிழ்த்திரையின் மகத்தான சகாப்தங்களான எம் ஜி ஆர், சிவாஜி இருவரின் அசுர வளர்சிக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே வி மகாதேவன், எம் எஸ் வி போன்றவர்களின் இசை ஒரு மிக முக்கியமான அம்சமாக இருந்ததோ அதே அளவில் 70களின் இறுதி மற்றும் 80களில் கமல் ரஜினி இருவரின் வணிக வெற்றி மற்றும் தனி ஆளுமை வளர்ச்சிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு மறுக்கமுடியாத காரணமாக இருந்தது. ஒரு நடிகனைக் கொண்டு பாடல்களை தேர்வு செய்யும் நம் சமூகத்தின்  பொது எண்ணப்படி சிவாஜி பாடல்கள் என்று கணக்கிட்டால் அவற்றில் பதில் ஒன்று கூட   இளையராஜா பாடலாக இருக்காது. ஆனால் அதே சமயத்தில் கமல், ரஜினி பாடல்கள் என்று ஒரு பட்டியலிட்டால்  பத்தில் எட்டு இளையராஜா இசையில் உருவானவைதான்.

      கமல் ரஜினி இருவரின் துரித புகழ் கண்ட வெற்றிடங்கள் இளையராஜாவின் இசையினால் நிரப்பப்பட்டன. அவரது இசை மட்டுமே அவர்களை புகழின்  உச்சிக்கு எடுத்துச் சென்றது என்பதல்ல இதன் பொருள். ஆனால் அவர்களின் வெற்றிக்கு மிக அத்தியாவசியமான உந்து சக்தியாக பின்புலத்தில் இயங்கிய பல காரணிகளில் இளையராஜாவின் இசைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஒரு  கமல் பாடல் என்று நீங்கள் கற்பனை செய்தால்  அந்தி மழை பொழிகிறது, நினைவோ ஒரு பறவை, கண்ணே கலைமானே, என்ன சத்தம் இந்த நேரம், வனிதாமணி வனமோகினி, வளையோசை கலகலவென, உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் போன்ற பாடல்கள் உங்கள் மனதில் உலா வருவதை தவிர்க்க முடியாது. ரஜினியின் ஆளுமையும் இதே இசையின் மற்றொரு பரிமானம்தான். எண்பதுகளில் சாமானியர்களின் நாயகனாக வடிவம் பெற உதவிய பைரவி  , ப்ரியா, முரட்டுக்காளை, தனிக்காட்டுராஜா, நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களின் பாடல்கள் ரஜினியை தமிழகத்தின் மூலைகளில்  இருந்த ரசிகனிடம் அறிமுகம் செய்தன.

     என் நண்பர்  ஒருவர் தீவிர ரஜினி ரசிகர். லிங்கா படத்தையே தொடர்ந்து மூன்று முறை தியேட்டரில் மூர்ச்சையடையாமல் பார்த்துவிட்டு, "இன்னும் அஞ்சு தடவ பாக்கணும்" என்று பயமில்லாமல் சொல்லி எனக்கு அதிர்ச்சி கொடுத்தவர். என் வீட்டிற்கு வரும் சமயங்களில் ,"ஏதாவது இளையராஜா பாட்டா போடு." என்று அழுத்தமாக சொல்வார். அவர் வந்தாலே நான் இளையராஜா பாடல்கள் அடங்கிய ஒரு சிடியை தயாராக வைத்திருப்பேன். ஆனால் மிக முரண்பாடாக அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பவை காக்கிக் சட்டை படத்தின்  வானிலே தேனிலா ஆடுதே பாடுதே, கண்மணியே பேசு, பூப்போட்ட தாவணி, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள பாடல்கள்தான். "ஒரு பாட்ட போட்டுட்டு இருபது  வருஷம் பின்னால போக வச்சுட்டியேப்பா" என்று குறிப்பிடுவார். இவரைப் பற்றித்தான் இசை விரும்பிகள் I காலமும் கானமும் பதிவில் நான் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

----எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்க வரும்  பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பட பாடல்களை இசைக்க சொல்லி கேட்பது வழக்கம். நானும் அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன்.  அது அவர் கல்லூரி நாட்களில் பார்த்த படம். அதன் பாடல்களை கேட்கும் போது அந்த நாட்கள் மீண்டும் அருகே வருவது போன்ற ஒரு எண்ணம் அவருக்கு ஏற்படுவதை    அவர்  கண்களில் தெரியும் ஒருவித மயக்க நிலையை கொண்டே நான்  புரிந்து கொள்வதுண்டு.  இதை அவர் என்னிடம் ஒவ்வொரு முறையும்  சொல்லி " ஒரே பாட்டில இருபது வருஷம் பின்னால போயாச்சே "என்று களிப்புடன் சொல்வது உண்டு.குறிப்பாக வானிலே தேனிலா, கண்மணியே பேசு, பட்டுக்கன்னம்  என்ற காக்கி சட்டை பட பாடல்கள்தான் அவை.(ஒரு விஷயம்; அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்). இதுதான் நாம்  நாம் சிறு வயதில் கேட்ட பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவதின் உளவியல்.-----


       பொதுவாக மோகன், கமல் படப் பாடல்களாக அதிகம் விரும்பிக் கேட்கும் இவர்  ஒருமுறை "ஏதாவது என் தலைவர் பாட்டு போடேன்" என்று என்னை ஏகத்துக்கும்  படுத்தியதால் மிக கடுமையான தேடுதலுக்குப் பிறகு ஒரு சிடியை  கண்டெடுத்து ஓடவிட்டேன். பாடிய பாடல் சந்தனக் காற்றை மனதுக்குள் நிரப்பியது. நான் பள்ளி நாட்களில் ஓயாது ரசித்துக் கேட்ட மிக அற்புதமான காதல் கீதம். தென்றல் நேராக மின்னல் போல பாய்ந்து  நெஞ்சைத் தழுவும் கானம். சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவா என்ற தனிக்காட்டு ராஜா படப் பாடல்.

     பாடல் பாடிக்கொண்டிருக்க இரண்டாவது சரணம் தொடங்கியதும் கண் மூடி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர், "ரஜினிகாந்த் இளையராஜா காலைத் தொட்டுக் கும்பிடனும்" என்று திடீரென தூக்கத்தில் பேசுவது போல சொன்னார். கேட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது. "ஏன்?" என்றேன் கலவரத்துடன். "பின்ன? இந்த மாதிரி  ஒரு மெலடியை ரஜினிக்கு இளையராஜா போட்டிருக்கான் பாரு.  ரஜினிக்கெல்லாம்  பொதுவாக  எம்மனசு தங்கம் பாணி பாட்டுத்தான் சரி. சும்மா சாதாரணமா பாட்டு போட்டாவே நாங்க அந்த பாட்ட (ரஜினி ரசிகர்கள்) ஹிட் பண்ணிடுவோம். இப்படி அநியாயத்துக்கு அருமையான பாட்டா போட்டா என்ன பண்றது?" என்றார் வெகு இயல்பாக. "இப்ப பாருங்க, இந்தப் படத்தில ரஜினிகாந்த் பேசின எந்த வசனமும் எனக்குத் தெரியாது. ஆனால் நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு பாட்டு மட்டும் தெரியும்." என்றார் இதன் நீட்சியாக. "ரஜினிக்காவது சும்மா அப்படி இப்படின்னு பாட்டு இருக்கும். ஆனா கமலஹாசனுக்கு இளையராஜா உயிரக் குடுத்து பாட்டு போட்டிருப்பானப்பா. எத்தன பாட்டு?" என்று சிலாகித்தார். இறுதியில்  "கமல் பாட்டுன்னாவே இளையராஜாதான்." என்று சூடம் கொளுத்தாமல் அடித்துச் சொன்னார்.

     காலைத் தொடும் சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர் கூறியது ஒரு ஏளனச் சிரிப்புடன் புறந்தள்ள முடியாத ஒரு செய்தியை எனக்கு உணர்த்தியது. அவர் ஒன்றும் மிகப் பெரிய இசை விமர்சகரோ, இசை விற்பன்னரோ இல்லை. அவருக்குத் தோன்றியதை என்னிடம் ஒரு தகவலாக பகிர்ந்துகொண்டார். அவர் கூறியது உண்மைதான். கமல் ரஜினி இருவரது அசாதாரண வெற்றிகளில் இளையராஜாவின் நிழல்  கண்டிப்பாக இருக்கிறது.  ஒரு செடி வளரத் தேவையான நீராகவோ அல்லது சூரிய ஒளியாகவோ எதை வேண்டுமானாலும் உதாரணம் சொல்லக்கூடிய அளவுக்கு இளையராஜாவின் இசை இந்த இருவர்களின்  பிரமாண்ட வெற்றியின் மூலக் கூறுகளில் ஒன்றாக இருக்கிறது.  எம் ஜி ஆர் , சிவாஜி பாடல்கள் என்றாலே நமக்கு எம் எஸ் வி நினைவுக்கு வருவதுபோல கமல் ரஜினி பாடல்கள் இளையராஜாவை நினைவூட்டாமல் இருக்காது. என் நண்பர் சொல்வதுபோல இன்று அடுத்த வாரிசு, உல்லாசப் பறவைகள் போன்ற படு மோசமான இவர்களது படங்களை எடுத்துக்கொண்டால் எனக்கு  முதலில் நினைவுக்கு வருவது  பேசக்கூடாது, ஜெர்மனியின் செந்தேன் மலரே போன்ற பாடல்கள்தான். இதன் உச்சமாக  சகலகலாவல்லவன் என்ற படமும் அதன்   பாடல்களும் கமலஹாசனை ஒரே நொடியில் வணிக வெற்றியின் கோபுரத்தில் உட்காரவைத்துவிட்டன.  (நமது ரசனையை எண்ணி வியக்காமலிருக்க முடியாது. இளமை இதோ இதோ தவிர அத்தனையும் துடைத்து தூர எறியவேண்டிய பாடல்கள். தமிழ் சினிமாவின்  போதாத காலம்.)

     சில சம்பவங்கள்  நிகழ்ந்த பிறகு அவற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் அதன் உண்மையான நிறம் நமக்குத் தெரியவருகிறது. ரயிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் அல்லது சிறுமியை இங்கே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு தாங்கள் காணும் காட்சியாகிய மரங்கள், கட்டிடங்கள், வயல் வெளிகள்தான்  பின்னோக்கி ஓடுவதாக தெரிகிறது.  ஆனால் அந்த வயதையும் அனுபவத்தையும் தாண்டிய ஒரு நபருக்கு இது  உண்மையில்லை என்று நன்றாகத் தெரியும். நான் என்னுடைய  பால்ய பருவத்தில் இரவு வானத்தைப் பார்த்து நிலவு எத்தனை வேகமாக ஓடுகிறது என்று வியந்திருக்கிறேன். பல நாட்கள் இதற்காகவே இரவில் வீட்டைவிட்டு வெளியே வந்து ஓடும் நிலவை ஆச்சர்யம் பூசிய  விழிகளோடு பார்த்திருக்கிறேன். இதன் நீட்சியாக எனது கல்லூரி நாட்களில் இரவு உணவுக்குப்பின் செயின்ட் ஜோசெப் விடுதியில் நண்பர்கள்  புடைசூழ புல்தரையில் அமர்ந்து பல வேடிக்கைக் கதைகள் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் சில நேரங்களில் அந்த பழைய ஞாபகங்கள் மனதை ஆக்ரமிக்க,  நான் மேலே பார்ப்பதுண்டு. அப்போதும் அந்த இரவு வானத்தில் கண்டது அதே காட்சியைத்தான். ஆனால் அப்போது நான் பார்த்தது வேகமாக நகரும்  நிலவையல்ல. மாறாக ஓடும் மேகங்களை. நான் எதைப் பார்த்தேன்  என்பதைவிட எதை உணர்ந்தேன் என்பதுதான் இங்கே முக்கியம். அது இதுதான்:

உண்மைகள் என்றுமே மாறுவதில்லை. மாறினால் அவைகள் உண்மைகளல்ல.

மாறுவது நம் புரிதல்களும் பார்வைகளும்தான்.



அடுத்து : இசை  விரும்பிகள் XXV - உடைந்த  ஒப்பனைகள்.




81 comments:

  1. /// சிரமமான தமிழில் அவன் புகழ் பாடிவிட்டு... /// ஹா... ஹா...

    எங்கெங்கோ சென்றது என் எண்ணங்கள்...

    பாட்டு ரசிகருக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. அனைவரின் வாழ்விலும் நல்லவரைப்போல் பழகிப் பின்னாளில் வஞ்சிக்கும் வஞ்சகர்கள் இருந்திருப்பார்கள் . அவர்களுடன் பழகும் போது நடந்த இனிமையான நிகழ்வுகள் அதே இனிமையை இப்போது தருவதில்லை......

    ReplyDelete
  3. சரடு கோர்த்தாற்போல இ.ராவின் சங்கீத வெற்றியை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள். உங்களின் இசையனுபவம் என்பதையும் தாண்டி லேசான ஆராய்ச்சியும் ஆரம்பத்திலிருந்தே ஓடிக்கொண்டிருப்பதுதான் மற்ற எழுத்துக்களிலிருந்து உங்களது எழுத்தை வேறுபடுத்திக்காட்டும் ரசவாதத்தைச் செய்கிறது. இ.ராவைப் பற்றிய புகழ்மொழிகளுக்கும் எவ்விதப் பஞ்சமும் வைக்கவில்லை. இது வெறும் வெற்று வார்த்தைகள் கொண்ட பாராட்டுப் பத்திரம் இல்லை என்பதையும் உங்கள் எழுத்துக்கள் அழகுபடக் காட்டிவிட்டே நகர்கின்றன.
    இந்த நேர்மைதான் உங்கள் எதிராளிகளை பயமுறுத்தும் ஒரு விஷயம் என்றே நினைக்கிறேன்.
    ஜென்சி பற்றி நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்கள் படித்தபோது எனக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஜென்சியைப் பற்றிய உங்கள் பார்வை அது. ஆனால் இ.ராவின் பார்வையே வேறு. அன்றைய நிலையில் அவருக்குப் பிடித்தப் பெண் பாடகியே ஜென்சிதான். வெறும் பத்திரிகைச் செய்திகள், அல்லது இணையச் செய்திகள் மட்டுமே உலகம் என்று நம்பும் நிறைய ரசிகர்கள் இப்போது இதுபற்றி ஏதாவது சொல்லப்போனால் எங்கே ஆதாரம் காட்டு என்றெல்லாம் வாய்க்கால் தகராறுக்கு வருவார்கள். அதனால் இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
    நல்ல இசையனுபவத்துடன் பயணிக்கும் நேர்மையான ஒருவரின் நியாயமான அலசலாக இருக்கும் இந்தத் தொடரின் மூலம் நிறைய உச்சங்களைத் தொடப்போகிறீர்கள் என்பது மட்டும் உண்மை.
    வாழ்த்துக்கள் காரிகன்.

    ReplyDelete
    Replies
    1. அமுதவன் சார்

      தனித்துவமுள்ள குரலுக்கு சொந்தக்காரரான ஜென்சியை காரிகன் குறைத்து மதிப்பிட்டு எழுதியிருக்கிறார். படித்துவிட்டு சிரிப்பு வேறு வருகிறது. நீங்களும் சில காலம் சினிமாவில் வேலை செய்த கலைஞர் என்ற முறையில் அவரை கண்டிக்க வேண்டாமா ?

      பாடலைக் கேட்டவுடன் சட்டென அவரை அடையாளம் காணும் வண்ணம் அழகிய குரலுடையவர் ஜென்சி . இளையராஜாவிற்குபிடித்த குரல் என்றால் என்ன மட்டமா ? பத்திரிக்கைச் செய்திகள் வைத்துதான் எங்களைப் போலவே நீங்களும் காரிகனும் எழுதுகிறீர்கள் . ஏதோ இளையராஜா ரசிகர்கள் உண்மை தெரியாதவர்கள் போல மாயையை உருவாக்குகிறீர்கள் . இளையராஜாவிற்கு பிடித்த குரல் என்றால் ஆயிரம் படங்களிலும் அவரைப் பாட வைத்திருக்கலாமே! ஏன் வெவ்வேறு பாடகிகள் தேர்ந்தெடுத்தார் ? அதற்கு ஆதாரம் கொடுக்கிறீர்களா?

      Delete
  4. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    இனி தொடர்வேன் நண்பரே

    ReplyDelete
  5. நிறைய சங்கதிகள்.. அருமையான பாடல்களின் குறிப்புகள், மற்றும் சில அறிந்திராத செய்திகள். விரும்பி படித்த பதிவு.

    இளையராஜா அன்னகிளியில் அறிமுகம் ஆனாலும் என்னை தொட்ட முதல் பாடல் ... பூவிழி வாசல் யாரடி வந்தது கிளியே .. .கிளியே.. சிறிய டேப் ரெகார்டர் ஒன்றில் நான்கு பத்திரி போட்டு அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பேன். இந்த பாடலை ரீ வைண்ட் செய்தால் பாட்டரி தீர்ந்துவிடும் என்று இப்பாடல் முடிந்தவுடன் அந்த கசாட்டை வெளியே எடுத்து பென்சிலை வைத்து அதை சுற்றி திருகி மீண்டும் போட்டு கேட்ட காலம் அது.

    நினைவுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  6. காரிகன். மாலை வெளிச்சம் பிரகாசமாகத்தானிருக்கிறது.இசைஞானியை குறித்த பதிவானதால் .#கமல் ,ரஜினி இருவரது அசாதாரணமான வளர்ச்சியில் இளையராஜாவின் நிழல் இருக்கிறது #மறுக்க முடியாத உண்மை . இருந்தும் இவர்கள் ஏற்றிவிட்ட ஏணியை மறுத்து எஸ்கலேட்டரில் ஏற நினைத்ததால் அற்புதமான இசையையும் ,நினைவில் அழியாத பாடல்களையும் இழந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் .

    ReplyDelete
  7. ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைப் படிக்கும்போதெல்லாம் கடந்த காலதிறகு மனம் தானாகவே சென்றுவிடுகிறது. சினிமா மாயையில் தமிழ்நாடு அழிந்துகொண்டிருக்கிறது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடென்றாலும் பொழுதுபோக்கிற்கென்று தமிழனுக்கு இருந்த ஒரே வாய்ப்பு சினிமாதான். பள்ளியில் கட் அடித்துவிட்டெல்லாம் படம் பார்த்த அனுபவங்கள் எல்லாருக்கும் உண்டு. அதெல்லாம் மறந்து போனாலும் பாடல்கள் நாம் மரணிக்கும் வரை மறக்காது என்றே நினைக்கிறேன். இளையராஜாவை எனக்கும் ஏதோ சில காரணங்களால் பிடிக்காது. ஆனாலும் நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவை. பாடல்கள் இன்றி கதாநாயகர்கள் இல்லை. அதனால்தான் எம்ஜிஆர் பாடல் காட்சிகளில், இசையில் அதிக கவனம் செலுத்தினார். அதனால்தான் (இசையினால்தான்) ரஜினி, கமல் போன்றவர்களும் மேலும் புகழ் அடைந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கட்டுரைக்கும், அதற்கான உங்கள் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் காரிகன்.

    ReplyDelete
  8. வாங்க தனபாலன்,

    எப்படியோ எதிர்பார்த்தவனை இப்படி நோகடித்தால் அவன் வேறென்ன செய்வான்?

    நன்றி.

    ReplyDelete
  9. வாருங்கள் சேகர்,

    நீங்கள் சொல்ல வருவது நன்றாக புரிகிறது. ஆனாலும் சில நல்ல பொழுதுகளை கழித்த இனிமை கூடவா கொஞ்சம் மிச்சமிருக்காது?

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளராக உங்களின் பாரபட்சமற்ற பார்வையை எழுதியிருந்தீர்கள். அதைச் சிறப்பிக்கவே ஒரு சாதாரண மனிதனின் பார்வையாக நான் எழுதியது.

      Delete
  10. அமுதவன் ஸார்,

    பாராட்டுக்கு நன்றி.

    இது இ ரா வின் வெற்றி பற்றிய தொகுப்பல்ல. இருந்தும் அவர் அப்போது மேலே சென்றுகொண்டிருந்தது உண்மைதான். என் பால்ய தினங்களில் அவர் இசை அதிகம் கேட்டிருக்கிறேன். பல சமயங்களில் வெகு விருப்பத்துடன். இது அந்த நினைவுகளின் நீட்சி. எண்பதுகளில்தான் எனக்கு அவர் இசை மீது வெறுப்பும் எரிச்சலும் ஏற்பட்டது. அவரை ரசித்த அதே நேர்மையான உணர்வில்தான் அவரை விமர்சனம் செய்கிறேன். நான் இ ரா வை எப்போதுமே காட்டத்துடன் விமர்சிப்பவன் என்று சிலர் முன் முடிவுகள் செய்துகொண்டு என் எழுத்தைப் படிக்கிறார்கள். எனவே என் நேர்மை அவர்களுக்கு முள் போல நெருடுகிறது.

    ஜென்சி பற்றிய ஒரு தகவல் முன்பு ஒரு முறை பத்திரிகை ஒன்றில் படித்த ஞாபகம் இருக்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என தெரியாது.ஜென்சியின் கணவர் இ ராவை அடிக்கடி பகடி செய்வதுண்டாம். இது சம்பந்தப்பட்டவரின் காதுகளுக்குச் சென்றதால் ஜென்சி கழட்டி விடப்பட்டார் என்று குமுதம் லைட்ஸ் ஆன் செய்தி போல ஒன்று சொல்கிறது. என்னதான் இருந்தாலும் எத்தனை அருமையான பாடல்களை இ ரா அவருக்குக் கொடுத்தார். அதையெல்லாம் அவர் கெடுத்தார்.

    அடுத்து எவ்வாறு நமது திரையிசையின் பாணி மாறியது என்பது குறித்து எழுத இருக்கிறேன். உங்களின் தொடரும் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      குமுதம் 30 சதவீதம் ஒரு மஞ்சள் பத்திரிக்கையைப் போன்றதுதான். தினமலரின் வாரமலரில் வரும் வெத்துவேட்டு கிசுகிசுக்களைப் போல ஏதோ குப்பையை படித்துவிட்டு புதிதாக ஜென்சி இளையராஜா பற்றி கதை கட்டுகிறீர்கள் . இசையைப் பற்றிய புரிதல்களில் நீங்கள் தொலை தூரத்தில் இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன். இதில் நீங்கள் இசை ஆராய்ச்சி செய்வதாக அமுதவன் சார் உங்களை பாராட்ட வேறு செய்கிறார். என்ன கொடுமை காரிகன்?

      Delete
  11. வாங்க கரந்தை ஜெயகுமார்,

    ஏற்கனவே வந்திருக்கிறீர்கள் என்று நினைவு. வருகைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  12. வாங்க விசு,

    கருத்துக்கு நன்றி.

    பூவிழி வாசலில் யாரது வந்தது கிளியே கிளியே தீபம் படப் பாடல். அப்போது பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. கசெட்டை ப்ளேயரில் ரீ வைண்ட் பாஸ்ட் பார்வர்ட் செய்யாமல் பென்சில் அல்லது ரெய்னால்ட்ஸ் பால் பென் (அதன் டாப் சேர்த்து) சுழற்றி சுழற்றி விருப்பமான பாடலைக் கேட்ட அனுபவம் எனக்கும் உண்டு. இப்படியே சுற்றி சுற்றி ஒரு 90 கசெட்டின் ஏ சைட் முழுதும் கேட்காமல் பி சைட் மட்டும் கேட்டதுண்டு. இப்போதோ வெறும் →← என்ற ஏரோ குறிகள் போதும்.

    ReplyDelete
  13. காரிகன் அவர்களே,

    வஞ்சகபுகழ்ச்சி நு என்று ஒரு அணி இருக்கிறது உங்களுக்கு தெரியும் என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ராஜா சார் ரசிகர்கள் கேட்டால் நானும் அவரை ரசித்தேன். அவரை புகழ்ந்து எழுத வில்லையா? என்றெல்லாம் சொல்வதற்கு தான் இந்த பதிவு.

    மஞ்சள் கண்ணாடி மாட்டி கொண்டு வெள்ளை சுவற்றை பார்த்தால் உங்களுக்கு மஞ்சளாகத்தான் தெரியும் என்பதை நிருபித்துவிட்டீர்கள்.

    மலேசியா வாசுதேவன், ஜென்சி, சைலஜா குரல்கள் உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் பேசமால் இருக்கவும், தங்கள் குரலால் தனித்தன்மை நிருபித்தவர்களை இப்படி அசிங்க படுத்தகூடாது. அது சரி காக்க வலிப்பு குரல் கல்யாணி மேனன் குரலை உயர்த்தி பேசுபவர் அல்லவா? உங்களுக்கு எப்படி இந்த குரலை பிடிக்கும். ராஜா சாருக்கு எதிர் என்னவோ அதெல்லாம் உங்கள் பக்கமாக தான் இருக்கிறது உங்கள் பதிவு.

    இனி அடுத்து நீங்கள் எழுத போகும் பதிவை நினைத்து இப்பவே எங்களுக்கு தீனி இருக்கும் போல இருக்கிறது.

    நீங்கள் சிலாகிக்கும் ஆஸ்கார் நாயகன் அறிமுக படுத்திய, இசையில் பாடிய எந்த காந்த குயில் குரல்களை உங்களால இன்னாரு தான் பாடினார் என்று அடையாள படுத்த முடியுமா? தமிழ் இசையில் இன்று ஆண் படுகிறானா? பெண் பாடுகிராலா? என்று அடையாளம் தெரிய அளவுக்கு குரல்களை அறிமுக செய்ததது உங்கள் ஆஸ்கார் நாயகன். பாடுவது தமிழா? வேற அந்நிய மொழியா? என்று தெரியாவண்ணம் கொண்டு வந்தது உங்கள் நாயகன். கத்தி பாடுவது, பாடிய வரியை பாடுவது, வரிகள் பிரித்து அர்த்தம் இல்லாமல் பாடுவது, இடையில் வலிப்பு வந்தது போல பாடாவது என தமிழ் இசையை சீரழித்து இன்று போஸ்ட் மார்ட்டத்தில் படுக்க வைத்த சாதனை தான் உங்கள் ஆஸ்கார் நாயகனின் ஒரே சாதனை. இது உண்மை. எம்.எஸ்.வி. அய்யா, கே.ம்.வி அய்யாவின் பாடல்கள் ரசிக்கும் உங்கள் உள்ளம், உதடுகள் ஆஸ்கார் நாயகனை பேசுவது, ராஜா சாரின் இசை சாம்ராஜ்யத்தை சாய்த்து விட்டார் என்று நீங்கள் நினைத்து கொள்ள செய்யும் வரலாற்றுக்கு தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி ஒரு வரலாறு திணிக்க பட்டதே தவிர, உண்மை அதுவல்ல..அப்படி என்றால் இன்று ராஜா சார் வீட்டில் உட்கார்ந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நிகழ்வும் இல்லை. இன்றும் இருபது படங்களுக்கு மேல் இசையமைத்துகொண்டு, தன்னை நம்பி வரும் எந்த தயாரிப்பளருக்கும், இயக்குனருக்கு முகவரி கொடுக்க தனது இசையை, திறமையை கொடுக்கிறார், அந்த மாதிரி ஆஸ்கார் நாயகனால் வளர்த்து விடப்பட்டு ஜொலிக்கும் இயக்குனர்கள் யார் சொல்லுங்கள்.

    ReplyDelete
  14. வாருங்கள் அருள் ஜீவா,

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    இது இ ரா வின் சிறப்பை விவரிக்கும் பதிவு என்று நீங்களாகவே எண்ணிக்கொண்டால் என் தவறு எதுவுமில்லை. நான் அந்தந்த காலகட்டத்தின் சிறப்பான இசையை பதிவு செய்கிறேன். இதில் இ ரா வுக்கும் இடம் இருக்கிறது என்பதே நிஜம். மற்றபடி அவரை தூக்கிப்பிடிக்கும் வழக்கமான பதிவாக இது இல்லை என்பது எனக்கே தெரியும். உண்மைகளை திரிக்க வேண்டாம்.

    கமல் ரஜினி இருவரின் வளர்ச்சியில் இ ரா வின் பங்கு அதிகம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் இவரால்தான் அவர்கள் இருவரும் பெரிய பெயர் பெற்றார்கள் என்று சொல்லமாட்டேன். வணிக நோக்கங்கள் எல்லோருக்குமே உண்டு. அதில் இ ரா வும் அடக்கம். அவர்களால் இவரும், இவரால் அவர்களும் வெற்றி பெற்றார்கள் என்பதையே நான் சொல்ல விழைகிறேன். இவரை விட்டு போனதால் எந்தவிதமான இழப்பும் இவர்களுக்கு இல்லை. சொல்லப்போனால் ரஜினிக்கு தேவா இ ரா போன்றே சிறப்பான இசை அளித்திருந்தார். எனவே உங்களின் கருத்து என்னுடையது அல்ல.

    ReplyDelete
  15. வாருங்கள் கவிப்பிரியன்,

    வருகைக்கு நன்றி.

    சினிமா காணாமல் போனாலும் பாடல்கள் என்றும் நம்மை விட்டு அகலாது. நமது சமூகத்தில் பாடல்கள் என்றாலே அது சினிமாதானே?

    இளையராஜாவை எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. எனக்கு அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன. பலருக்கும் இது உண்டு. ஆனால் சொல்வதில் விருப்பமில்லை.

    பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வருவதில் இசையின் பங்கு அபிரிமிதமானது. இதில் இ ராவின் இசைக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக சிலர் எண்ணிக்கொள்வது வேடிக்கையானது. அவரே இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி வி எஸ் குமார்.

    முன்பெல்லாம் ஒரு குகை மனிதன் உங்களைப் போலவே பேசியபடி என் தளத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அநாகரீகமாக அவர் வார்த்தைகளை கையாண்டதால் அவரை இப்போது அனுமதிப்பதில்லை. நீங்கள் ஏறக்குறைய அவரைப் போலத்தான் பேசுகிறீர்கள். நல்லது. கோட்டைத் தாண்டினால் நீங்களும் அதே ஆள் போல்தான்.

    முதலில் அது வஞ்சப் புகழ்ச்சி நீங்கள் சொல்வதுபோல வஞ்சக புகழ்சியில்லை. ஒரு கேள்வி. எதற்காக நான் இ ரா ரசிகர்களுக்காக பயப்படவேண்டும்? அவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை இ ரா மட்டுமே இங்கு உண்டு. நான் அதையெல்லாம் ஒரு சிரிப்புடன் கடந்து செல்பவன். இ ரா வுக்குகே இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் எம் எஸ் வி மற்றும் நமது தமிழ்த் திரையை இத்தனை தூரம் நடத்தி வந்தவர்கள் பற்றி என்ன சொல்வது? முதலில் உங்களின் இசை அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். இ ரா மட்டுமே இசை என்றால் வேறு எங்காவது சென்று உங்களின் ஆலாபனையை வைத்துக்கொள்ளுங்கள். நான் இ ரா வை ஒரு மிக முக்கியமான ஆளாக நினைப்பதேயில்லை. முதலில் நன்றாக வந்தார். பிறகு நமது இசையை சீரழித்து விட்டு காணாமல் போனார்.

    எனக்கு மலேசியா வாசுதேவன், ஜென்சி, ஷைலஜா குரல்கள் பிடிக்காது என்பது ஒரு தனிப்பட விருப்பம்.எனது தளத்தில் அதை நான் எழுதாமல் வேறு எங்கே செய்யமுடியும்? நான் அவர்களை அசிங்கப்படுத்துவதாக நீங்கள் எண்ணினால் நீங்கள் ஒரு வலைப்பூ துவங்கி அங்கே அவர்களை தாராளமாக புகழ்ந்து பகுதி பகுதியாக எழுதுங்கள். நான் தலையிடவே மாட்டேன். ஆனால் என்னை அப்படிச் செய்யாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உங்களின் வார்த்தைகளை என்னிடம் திணிக்காதீர்கள். கல்யாணி மேனனின் குரலை நான் உயர்த்திப் பிடிப்பதாக நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை.

    இறுதியாக எ ஆர் ரஹ்மான் பற்றிய உங்களின் கருத்து. நான் அவரை எனது விருப்பத்திற்குரிய இசை அமைப்பாளராக எண்ணிக்கொள்வதாக நீங்களாகவே கற்பனை செய்வதினால் வந்த ஒரு முட்டாள் தனமான கருத்து என்பதைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. ரஹ்மான் என்ன சாதனைகள் செய்தார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். இ ரா ரசிகர்கள் மட்டுமே அவரை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வயிற்றெரிச்சல். இ ரா வை தனது ஒரே பாடலின் மூலம் விலாசம் இழக்கச் செய்தவர் ரஹ்மான் என்ற காரணத்தினால் அவர் மீது ராஜா ரசிகர்கள் இத்தனை காட்டமாக இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? பாவம். ரஹ்மானை இப்படியாவது தூற்றி உங்களின் வயிற்றெரிச்சலை குறைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி ரஹ்மானால் அடையாளம் காணப்பட்டவர்கள் யார் என்ற உங்களின் கேள்வி இங்கே ஒரு பொருட்டே அல்ல. ரஹ்மான் ஹிந்தி இசையையே மாற்றியவர் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் நான் என்ன புதிதாக சொல்ல முடியும்? அவருடைய சாதனைகள் உங்களின் இ ரா செய்தவைகளை விட அதிக தூரம் சென்றுவிட்டவை.

    இ ரா இன்னும் பல படங்களுக்கு இசை அமைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதன் பாடலகளைத்தான் யாரும் கேட்பதேயில்லை. தோணி, இது ஒரு நிலா காலம் (அப்படித்தான் நினைக்கிறேன். இல்லாவிட்டாலும்அலட்டிக்கொள்ளமாட்டேன்), மயிலு,தாரை தப்பட்டை (இன்னும் வரவில்லை) என அவரது சமீபத்திய படங்களின் பாடல்களை யார் விரும்பிக் கேட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடுங்கள். படங்கள் வரும் வரை அவற்றை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசும் வீ ஐ பீ க்கள் படம் வந்ததும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். இதுதானே நிதர்சனம்? கவுதம் மேனன் நீதானே என் பொன்வசந்தம் படத்திற்காக இ ரா வை அணுகியதை ராஜா ரசிகர்கள் பெரிய கொண்டாட்டமாக எழுதினார்கள். இவரே எங்கள் ராஜாவிடம் வந்துவிட்டார் என்றார்கள். படம் வந்தது. பாடல்களாலேயே அது ஊத்திக்கொண்டது. இ ரா வால் 2000திற்கான இசையை அளிக்க முடியவில்லை என்பதை உங்களைப் போன்றவர்கள் தவிர மற்ற எல்லோருமே நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். சரி அதை விடுங்கள். அதன் பின் கவுதம் மேனன் என்ன செய்தார்? தனது அடுத்த படத்திற்கு (என்னை அறிந்தால்) இ ரா விடமா சென்றார்? எங்கே போனது உங்களின் வீராப்பு? பாலா போன்ற பரதேசிகளின் (கோபம் வேண்டாம் இது கூட அவரது படம்தான்) படங்களுக்கு மட்டுமே இனி உங்கள் இ ரா இசை அமைக்க முடியும். தமிழ் இசை இ ராவை தாண்டி எப்போதோ வந்துவிட்டது. உங்களைப் போன்ற ஒரு பத்து இருபது பேர் புகழ்வதால் அவர் ஒன்றும் எம் எஸ் வி இடத்திற்கு வந்துவிட மாட்டார். அந்த இசைக்கான தகுதி அவருக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ காரிகன்

      எம்.எஸ்.வி யின் விலாசத்தை அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ஒரே பாடலால் இளையராஜா காணாமல் போகச் செய்தார் என்று நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

      Delete
  17. இளையராஜா இசையமைத்த பாடல்களாகவே இருக்கின்ற வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
  18. வாங்க வழிப்போக்கன்,

    முதல் முறையாக இங்கே வந்திருக்கிறீர்கள். நல்வரவு. மற்றும் நன்றி.

    இது ஒரு தொடர் பதிவு. நீங்கள் பொறுமையுடன் எனது பழைய பதிவுகளை படித்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    என்னை இ ரா எதிர்ப்பாளன் என்று முத்திரை குத்தும் ஆட்கள் அதிகம். ஆனால் பாதையெல்லாம் பரவசம், மாலை வெளிச்சம் என்ற இரண்டு பதிவுகளை மட்டும் படிப்பவர்கள் என்னை ஒரு இ ரா அபிமானியாக எண்ணிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டுமே உண்மையல்ல.

    ஜி ராமநாதன் முதல் எ எம் ராஜா, சுதர்சனம், பாப்பா.சுப்பையா நாயுடு, டி கே ராமமூர்த்தி, எம் எஸ் வி, கே வி மகாதேவன், சங்கர் கணேஷ், வி குமார், ஜி கே வெங்கடேஷ், ஷ்யாம், எம் பி ஸ்ரீனிவாசன், இளையராஜா, நரசிம்மன், எல் வைத்தியநாதன், சந்திரபோஸ், டி ராஜேந்தர், மரகதமணி, ரஹ்மான் என பொதுவாக எல்லாருடைய இசையையும் ரசிப்பவன். இதில் இ ரா வை மட்டும் தூக்கி எல்லோருக்கும் மேலே வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அவரவர் இடம் அவரவருக்கு.

    ReplyDelete
  19. காரிகன். #இளையராஜா வந்தார் .நல்ல இசை தந்தார் .பின் சீரழித்தார் # #தன் ஒரே பாடலால் இளையராஜாவை. வீழ்த்தினார் ஏ.ஆர் .ரஹ்மான் # இதையே திரும்ப திரும்ப சொல்வது போரடிக்கவில்லையா? காலங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது .தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடலை அக்கால தலைமுறையினரே விரும்பிக் கேட்டிருப்பர் .அதுபோலவே இன்றைய தலைமுறையினர் ஏ.ஆர் .ரஹ்மான் ,அனிரூத் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை விரும்பிக் கேட்கின்றனர். அதற்காக ஒரு இசையமைப்பாளர் வரவால் மற்றொருவர் வீழ்ந்துவிட்டார் என்று எப்படி கூறமுடியும் ? தனக்குப் பிடித்ததை ,தான் விரும்பியதை உயர்த்தி கூறுதல் மனித இயல்பு .அதைத்தானே இசைஞானியின் ரசிகர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் .இசைஞானியின் இசையை மட்டுமே கேட்கவேண்டுமென்றோ,அவரைப் பற்றிய பதிவைப் படிக்க வேண்டுமென்றோ கட்டாயப்படுத்தவில்லையே. பின் ஏன் இந்த வசைமொழிகள் ?(இசைஞானி மற்றும் அவரிசையில் பாடிய சிலர் )யாரும் யாரையும் விமர்சிக்கலாம். அதுவும் நியாயமான முறையில் இருந்தால் நலமே .

    ReplyDelete
    Replies
    1. கீறல் விழுந்த ரெக்கார்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எத்தனை முறை என்றாலும் கவலையே இல்லாமல் அது பாட்டுக்கு பாடிய ஒரே வார்த்தையை பாடிக்கொண்டே இருக்கும். உங்களின் இந்த பதிலைப் படித்ததும் ஏனோ இதுதான் நினைவுக்கு வந்தது...

      Delete
  20. ---ஹலோ காரிகன்
    எம்.எஸ்.வி யின் விலாசத்தை அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ஒரே பாடலால் இளையராஜா காணாமல் போகச் செய்தார் என்று நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?----

    சால்ஸ்,

    ரோஜாவின் சின்ன சின்ன ஆசை பாடல் ஒரு இசையதிர்ச்சி.. பாடல் பூகம்பம்.... ஒரு கோட்டையே தகர்ந்தது..நீங்களோ இதை அன்னக்கிளி ஒன்னத் தேடுதே பாடலோடு ஒப்பிட்டு விதாண்டவாதம் பேசுகிறீர்கள்... நல்லது . இவை இரண்டையும் அவைகள் நிகழ்ந்தபோது கேட்ட அனுபவங்கள் உடையவர்களுக்கு எது உண்மை என்று நன்றாகவே தெரியும்...

    ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள்.... There are seven days between Christmas and New Year but not between New Year and Christmas..

    ReplyDelete
    Replies
    1. தமிழில் ஒன்று சொல்வார்கள் . மாமியார் உடைச்சா மண் சட்டி . மருமக உடைச்சா பொன் சட்டி.

      Delete
  21. காரிகன்

    பதிவைப் படித்தேன் . வழக்கமான பாணிதான் . வழக்கமாய் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் . குமார் சொல்வதைப் போல வஞ்சப் புகழ்ச்சிக்கு உதாரணமாக உங்களின் இந்தப் பதிவைச் சொல்லலாம். இளையராஜா பாடல்கள் நிறைய பாடல்கள் உச்சம் தொட்டவை. அதை எல்லாம் பாராட்டாமல் இகழ்ந்தால் உங்கள் இசை ஞானத்தை சந்தேகித்து விடுவார்கள் என்ற பயம் பதிவில் தெரிகிறது. அதனால் சில பாடல்களை
    ஆகா ஓகோ என பாராட்டுவது போல் பாராட்டுகிறீர்கள் . ஆனால் எழுத்தில் ஒரு அலட்சியம் நன்றாகவே தெரிகிறது. சில இடங்களில் அதிகப் பிரசங்கித்தனமாகவும் தெரிகிறது .

    சிவாஜியின் கடைசி படங்களைப் பார்த்து எப்படி ஒரு முடிவிற்கு வந்தீர்களோ அதுபோல இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களை மட்டும் கேட்டுவிட்டு முடித்துக் கொண்டீர்கள். 80 களில் இருக்கிறது அவரது இசைப் பிரளயம் , இசை வினோதங்கள் , இசைப் பரிசோதனைகள் எல்லாம் ! அவரது இப்போதைய பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெறவில்லை என்பதற்காக அவரது சாதனைகள் பொய்யாகிவிடாது. நடிப்புக்கு சிவாஜி மாதிரி இசைக்கு இளையராஜாதான் பலராலும் பேசப்படுகிறார் என்பது உலகறியும் உங்களைத் தவிர!

    ReplyDelete
  22. வாங்க சால்ஸ்,

    என் எழுத்தைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்ராயம் நான் உங்களிடமிருந்து இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்த ஒன்றுதான். நேராக விஷயத்திற்கு வருவோம்.

    இ ரா பாடல்களில் பல வெற்றி பெற்றவை அல்லது உங்கள் மொழிப்படி உச்சம் தொட்டவை. ஒரு பாடல் ஹிட் ஆகிவிட்டால் அதுவே அதன் தரத்தை நிரூபிப்பதாக நீங்கள் நினைத்தால் அந்த 'முற்போக்குச்'சிந்தனையை என்னவென்பது? ராஜா ரசிகர்கள் என்னை இகழ்வது குறித்து எனக்கு கவலைகள் இல்லை. இ ரா வின் இசையை ரசித்தே இருந்தேன். அவரது சில பாடல்களை இன்றும் அதே மயக்கத்துடன் ரசித்தபடியேதான் இருக்கிறேன். வெற்றிக்கு ஒருவன் படத்தின் ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ பாடலை ரசிக்கும் இன்னொருவர் பற்றி சொல்லுங்களேன். நீங்களே அந்தப் பாடலை கேட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. அது ஒன்றும் பெரிதாக அடையாளம் காணப்பட்ட பாடல் அல்ல. அதே போலேதான் ஒப்பந்தம் படத்தின் ஒரே முகம் நிலா முகம் என்ற பாடலும். பெரிய அளவில் வெற்றி பெற்ற பிரியா படப் பாடல்களில் அக்கரைச் சீமை அழகினிலே பாடல் மட்டுமே எனக்குப் பிடிக்கும். மற்றவைகளை நான் சீந்துவதே கிடையாது. ஸ்டீரியோ போனிக் என்ற கிம்மிக் கினால் வெளிச்சம் பெற்ற அவஸ்தைகள் அவைகள் என்ற எண்ணம் எனக்குண்டு.

    சிவாஜி-இரா பற்றிய எனது சிந்தனைகள் வேறு வடிவம் கொண்டது எனக்கு ஏற்பட்ட மாற்றத்தின் வளர்ச்சி. சிவாஜியை பிடிக்காமல் பிறகு பிடித்தது ஆனால் இராவின் விஷயத்தில் இது தலைகீழ். எனவே இந்த ஒப்பீடு ஒரு முரண். இரா வின் ஆரம்பகால பாடல்கள்தான் அவரது இசையின் சிறப்பானவை என்று நம்பும் சில இசை ரசனை உள்ளவர்களில் நானும் ஒருவன். அவரது 80கள் பற்றிய உங்கள் எண்ணம் எனதாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. சொல்லப்போனால் 80களில்தான் நமது திரையிசை கெட்டது. அதை வெற்றிகரமாக முன்னின்று நடத்தியவர் இரா தான். எனவே 80கள் ஒரு பிரளயம் என்று வீரமாக முழங்குவதை கேட்டால் படு தமாஷாக இருக்கிறது.

    ReplyDelete
  23. காரிகன்

    இளையராஜா பாட்டுக்கள் என்றால் எத்தனையோ கிளாசிகல் பாடல்கள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு 'ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ ' என்ற பெரும்பான்மையோரால் அறியப்படாத பாட்டை ரசித்ததாகவும் அது ஆங்கிலப் பாட்டுக்கு இணையானது என்றும் சொல்லியிருக்கிறீர்கள் . அதுதான் நகைச்சுவை. இசை அறிந்தோர் இதை வாசித்தார்கள் என்றால் உங்கள் இசைப்புலமையை நினைத்து சிரித்துக் கொள்வார்கள். அந்தப் பாடல் பிரபலம் அடையாத பாடல் . அதிக பிரபலத்தை அடைந்த பாடல்கள் எல்லாம் 80 களில் இருக்கிறது. என்பதுகளில் தமிழ்த் திரையிசை சீரழிந்ததாக சொல்வது உங்கள் கற்பனை. ஆயிரம் பாடல்கள் பிரபலமானது. அதைக் கேட்டு ரசித்த கோடி ஜனங்கள் முட்டாள்கள் . நீங்கள் புத்திசாலியா?

    'சீரழிந்தது ' என்று பேசினோம் என்றால் பாரம்பரிய கர்னாடக இசையிலிருந்து சினிமா இசையை மெல்லிசைக்கு மாற்றிய ஜி.ராமநாதன் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி போன்றோர் சீரழித்து விட்டார்கள் என்று சொல்லலாமா காரிகன்?

    ReplyDelete
  24. -----1.குமார் சொல்வதைப் போல வஞ்சப் புகழ்ச்சிக்கு உதாரணமாக உங்களின் இந்தப் பதிவைச் சொல்லலாம். இளையராஜா பாடல்கள் நிறைய பாடல்கள் உச்சம் தொட்டவை. அதை எல்லாம் பாராட்டாமல் இகழ்ந்தால் உங்கள் இசை ஞானத்தை சந்தேகித்து விடுவார்கள் என்ற பயம் பதிவில் தெரிகிறது. அதனால் சில பாடல்களை
    ஆகா ஓகோ என பாராட்டுவது போல் பாராட்டுகிறீர்கள் . -------

    சால்ஸ், இது நீங்கள் முதலில் எழுதியது. இராவின் உச்சம் தொட்ட பாடல்களை நான் ஒரு நிர்ப்பந்தம் காரணமாக பாராட்டுவதாக ஒரு வெற்றுக் கருத்து வெளியிட்டதால், நான் எழுதினேன் "வெற்றிக்கு ஒருவன் படத்தின் ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ பாடலை ரசிக்கும் இன்னொருவர் பற்றி சொல்லுங்களேன். நீங்களே அந்தப் பாடலை கேட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. அது ஒன்றும் பெரிதாக அடையாளம் காணப்பட்ட பாடல் அல்ல. அதே போலேதான் ஒப்பந்தம் படத்தின் ஒரே முகம் நிலா முகம் என்ற பாடலும்".

    இதற்குப் பிறகு உங்களின் பதில் வருகிறது இப்படி------இளையராஜா பாட்டுக்கள் என்றால் எத்தனையோ கிளாசிகல் பாடல்கள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு 'ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ ' என்ற பெரும்பான்மையோரால் அறியப்படாத பாட்டை ரசித்ததாகவும் அது ஆங்கிலப் பாட்டுக்கு இணையானது என்றும் சொல்லியிருக்கிறீர்கள் . அதுதான் நகைச்சுவை. இசை அறிந்தோர் இதை வாசித்தார்கள் என்றால் உங்கள் இசைப்புலமையை நினைத்து சிரித்துக் கொள்வார்கள். அந்தப் பாடல் பிரபலம் அடையாத பாடல் .----

    நான் சொன்னது எனக்கே பதிலா? வேடிக்கைதான். ஒரு படத்தில் வடிவேலு சொல்வதுபோல "இதத்தானே நா அப்ப இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்".

    -----என்பதுகளில் தமிழ்த் திரையிசை சீரழிந்ததாக சொல்வது உங்கள் கற்பனை. ஆயிரம் பாடல்கள் பிரபலமானது. அதைக் கேட்டு ரசித்த கோடி ஜனங்கள் முட்டாள்கள் . நீங்கள் புத்திசாலியா? ------

    கொலவெறி பாடலையும் கோடிப் பேர் கேட்டார்கள். ஹிட் ஆக்கினார்கள்.. அவர்கள் புத்திசாலிகள் இல்லையா உங்களின் கூற்றுப்படி? ஒன்று உங்களுக்கு விஷயமே தெரியவில்லை. அல்லது இம்மியளவு தெரிந்துகொண்டு வீடு கட்டுகிறீர்கள்...

    இராவின் மிகப் பிரபலமான 80களின் பாடல்கள் பற்றியும் எழுதுகிறேன். எனக்குப் பிடித்த பாடல்கள் அதில் வெகு சிலவே. மற்றதெல்லாம் .................... புள்ளியிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  25. ஹலோ காரிகன்

    ///உண்மைகள் என்றுமே மாறுவதில்லை. மாறினால் அவைகள் உண்மைகளல்ல.

    மாறுவது நம் புரிதல்களும் பார்வைகளும்தான்.///

    நீங்கள் எழுதியதிலிருந்தே நானும் சொல்கிறேன் .

    இளையராஜாவின் இசை கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டது , தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத நினைவு கொண்டது, இசை வரலாற்றில் அழிக்க முடியாத தடம் ஏற்படுத்தியது என்ற உண்மைகள் என்றுமே மாறுவதில்லை. மாறினால் அவைகள் உண்மைகளல்ல.

    மாறுவது நம் புரிதல்களும் பார்வைகளும்தான்.

    ReplyDelete
  26. சால்ஸ்,

    என்றைக்கு நீங்கள் உங்கள் சொந்த வார்த்தைகளை வைத்து கருத்து சொல்லியிருக்கிறீர்கள்? என் வார்த்தைகள்தானே உங்களின் பதிலாக இருக்கும்? அதை நிரூபிக்கும் இன்னொரு பதிலாக இதை நான் பார்க்கிறேன்.

    நான் எழுதியது உங்கள் இராவை பாதுகாக்கும் என்றால் எனக்கு அதில் மகிழ்ச்சியே. என் பால்ய வயதில் என்னை ஆனந்தப் படுத்திய இராவுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக இதை நான் எடுத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  27. காரிகன் நீங்கள் சொன்னது ,

    ///இந்தப் பாடல் எனக்குள் ஒரு வியப்பான எண்ணத்தை உண்டாக்கியது. உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அவ்வளவாக விருப்பமில்லாத ஒன்று. அவர் பல நல்ல பாடல்களை தனது கரடுமுரடான சாரீரத்தால் சரித்தவர் என்று தீவிரமாக எண்ணம் கொள்பவன் நான். முதல் மரியாதை பாடல்கள் தவிர கோடை கால காற்றே, அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா?, வா வா வசந்தமே என வெகு சில பாடல்களே அவரது குரலில் என்னால் கேட்கமுடிந்தவைகள். அடுத்து எஸ் பி ஷைலஜா என்ற இடைச்செருகல். எஸ் பி பாலசுப்ரமணியத்தின் தங்கை என்ற ஒரே தகுதியால் பாட வந்தவரோ என்று நாங்கள் அப்போது பேசிக்கொள்வோம். இவரது குரலையெல்லாம் கேட்கவேண்டும் என்ற பாக்கியம் நமக்கு இளையராஜா என்ற ஒருவரால்தான் கிடைத்தது.///

    டி.எம்.எஸ் க்குப் பிறகு சுத்தமான தமிழ் உச்சரிப்பில் நல்ல குரல் வளத்தோடு பாடக்கூடியவர் என்ற பெயரெடுத்தவர் மலேசியா வாசுதேவன் . அவரது குரலையும் மோசமாக விமர்சிக்கும் உங்களது இசைப் பார்வையில் சந்தேகம் ஏற்படுகிறது. உங்களுக்குப் பிடித்த நாலு பாடல் மட்டும்தான் நன்றாக பாடியதாக மிகவும் ஒப்புக் கொள்கிறீர்கள் . விசித்திர ரசனை . அவர் ஆயிரம் பாடல்களுக்கு மேல் அழகாக பாடியிருக்கிறார். கிராமத்துப் பாடல்களுக்கு மிகவும் பொருத்தமான குரல் அவருடையது . ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என பலர் சொல்வார்கள் . போலவே ஷைலஜா குரலும் தனித்துவமுள்ள குரல்தான் . பாடினால் கண்டுபிடித்து விடக்கூடிய இனிய குரலுக்குச் சொந்தக்காரர் .

    இளையராஜாவின் இசையில் பாடினார்கள் என்ற காரணத்திற்காக குறைக் கண்ணோடு பார்க்கிறீர்கள் . அவர்கள் இருவரும் எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறார்கள் என்பது தெரியுமா?
    நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதற்கு மேலும் பல ஹிட் பாடல்கள் பாடியிருக்கிறார்கள் .

    உங்கள் பார்வையில் இவர்களின் குரல் குறையானது என்றால் உங்களின் இசைஞானமே சந்தேகத்திற்கு இடமானது எனலாம். நல்ல இசை விமர்சகர் என்று உங்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். உங்களைப் பொறுத்தவரை இளையராஜாவிடம் பாடியிருந்தால் அவர்கள் குறையுள்ளவர்கள் அப்படித்தானே!? ராஜா மீது இருக்கும் வெறுப்பை இவர்களிடம் திணிக்காதீர்கள் .






    ReplyDelete
    Replies
    1. சால்ஸ்,

      மீண்டும் மீண்டும் ஹிட் என்று குறிப்பிடாதீர்கள். பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம், பருவாயில்லை என்று பாடிய பாடல்களும் இங்கே ஹிட் அடித்தவைதான். ஹிட் ஆனால் அது பெரிய விஷயமா? அடப் போங்கப்பா..

      ஹரிஹரன் குரலைக் கூட விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் உங்கள் இராவே டிஎம் எஸ் குரலை பாவங்களே இல்லை என்று சொன்னவர்தானே? மூக்கால் பாடும் ஜென்சிக்கு தொடர்ந்து பல பாடல்கள் கொடுத்த புண்ணியவான் அல்லவா அவர்? எனக்குத் தெரிந்து ஜென்சி வேறு யார் இசை அமைப்பிலும் பாடியதாக நினைவில்லை.

      மலேசியா வாசுதேவன் ஒன்றும் மிகப் பெரிய பாடகர் இல்லை.இராவே அவருக்கு எஸ் பி பி க்கு அடுத்த இடம்தான் அளித்தார். எனக்குப் பிடிக்காது என்பதை நான் எதற்காக நியாயப்படுத்த வேண்டும்? எனக்கு இரா வின் இசையில் பல பாடல்களே பிடிக்காதவைதான். இதற்க்கெல்லாம் நான் உட்கார்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பத்துப் பேரில் எட்டு பேர் எனக்குப் பிடிக்கும் என்று சொல்வதை நான் அப்படி இல்லை என்று சொல்வது எனது உரிமை. இந்த பத்து எட்டு என்பது கூட இணையத்தில் மட்டுமே. இணையத்தைத் தாண்டிய வெளியில் உண்மைகள் வேறு விதம். நீங்கள் இராவின் பாடல்களை மட்டும்தான் கேட்டுகொண்டிருக்கிறேன் என்று உறுதியாக சொல்ல முடியுமா?

      இரா மீது எனக்கு வெறுப்பு என்பது உங்களின் புரட்டு. அவர் இசையின் பல அம்சங்கள் எனக்கு விருப்பமானதில்லை. அதையே நான் விமர்சனம் செய்கிறேன். கடல் மீன்கள் படத்தில் ஒரு அபாரமான நமது கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் பாடல் ஒன்று உண்டு. அது என்னவென்று நான் இப்போது சொல்ல மாட்டேன். உங்களுக்கே தெரியும். இதை அமைத்தது நீங்கள் இத்தனை புகழ் பாடும் உங்கள் தமிழிசையின் முத்திரையான இராதான்.

      இந்த பா ராவும் இராவும் நமது சினிமாவை கெடுத்தார்கள் என்று நான் சொன்னேன். இது நான் ஒரு பதிவாகவே எழுத வேண்டிய விஷயங்கள் கொண்டது.

      என் விருப்பங்கள் தாண்டி எனக்கு சமூக அக்கறை உண்டு. அதுவே என்னை இராவை விமர்சிக்கத் தூண்டுகிறது.

      Delete
  28. காரிகன். இளையராஜாவை விமர்சிப்பதில் என்ன சமூக அக்கறையை கண்டீர்கள் என்பதை விளக்கவும்.

    ReplyDelete
  29. திரு.காரிகன் அவர்களே..

    //முன்பெல்லாம் ஒரு குகை மனிதன் உங்களைப் போலவே பேசியபடி என் தளத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அநாகரீகமாக அவர் வார்த்தைகளை கையாண்டதால் அவரை இப்போது அனுமதிப்பதில்லை. நீங்கள் ஏறக்குறைய அவரைப் போலத்தான் பேசுகிறீர்கள். நல்லது. கோட்டைத் தாண்டினால் நீங்களும் அதே ஆள் போல்தான். //
    உங்களை விட யாரும் நான் அநாகரிக வார்த்தை பயன் படுத்தவில்லை. நீங்கள் தான், உங்கள் பதிவுக்கு எதிராக எழுதும் அனைவரையும் கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் வார்த்தை பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் பதிவுகள் அனைத்தையும் நீங்களே படியுங்கள்.

    //முதலில் அது வஞ்சப் புகழ்ச்சி நீங்கள் சொல்வதுபோல வஞ்சக புகழ்சியில்லை. ஒரு கேள்வி. எதற்காக நான் இ ரா ரசிகர்களுக்காக பயப்படவேண்டும்? அவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை இ ரா மட்டுமே இங்கு உண்டு. நான் அதையெல்லாம் ஒரு சிரிப்புடன் கடந்து செல்பவன். இ ரா வுக்குகே இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் எம் எஸ் வி மற்றும் நமது தமிழ்த் திரையை இத்தனை தூரம் நடத்தி வந்தவர்கள் பற்றி என்ன சொல்வது? முதலில் உங்களின் இசை அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். இ ரா மட்டுமே இசை என்றால் வேறு எங்காவது சென்று உங்களின் ஆலாபனையை வைத்துக்கொள்ளுங்கள். நான் இ ரா வை ஒரு மிக முக்கியமான ஆளாக நினைப்பதேயில்லை. முதலில் நன்றாக வந்தார். பிறகு நமது இசையை சீரழித்து விட்டு காணாமல் போனார்.//
    நான் சரியாக தான் சொல்லிருக்கேன். இலக்கணத்துக்கு வேண்டுமென்றால் வஞ்சப்புகழ்ச்சி யாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வஞ்சகமாக தான் புகழ்ந்து எழுதி, தாழ்த்தி எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதியதே நீங்களே மறுபடியும் படியுங்கள். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். ஆனால் உங்கள் பதிவுகளில் உங்கள் மனநிலையில் எழுதாமல் உண்மைகளை இன்றைய காலகட்டத்தை நினைத்து எழுத வேண்டும். உங்கள் பதிவுகள் நாளைய தலைமுறை படிக்கும் போது ஒரு இசை மேதையை பற்றி தவறாக நினைக்க வைக்குமளவுக்கு இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். நாளை வரும் தலைமுறையும் அவர் மேல் இருக்கும் பிரியத்தை உங்கள் பதிவு படித்து விட்டு, உங்கள் கருத்துக்களை காரி துப்பாமல் இருக்கத்தான் உண்மைகளை உங்கள் எண்ணத்தோடு எழுத வேண்டாம். எங்கள் இசை அறிவு வளர்ந்துதான் இருக்கிறது. எங்கு சென்று (புதிய காற்று) எங்கள் ஆலாபனை வைத்தாலும் அங்கேயும் நந்தி மாதிரி வந்து விடுகிறீர்களே? நீங்கள் மதித்துதான் அவர் முக்கியமான ஆளாக போகிறார் என்றால் பூனை கண்ணை மூடிய கதைதான். உங்களுக்கு நாங்கள் போதும். நன்றாக வந்தவர், பின்னாலே திரை இசை கெடுத்தி விட்டு போனார் என்றால் அப்ப யார் வந்து காப்பாற்றியது என்றால் ரகுமான் என்பீர்கள். உங்கள் காமெடிக்கு எல்லை இல்லாமல் போயிற்று. உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் இன்றைய தமிழ் திரை இசைக்கு ராஜா சார் தான் காரணமா? ஒரு வருடத்தில் எத்தனை பாடல்கள் உங்கள் மனதில் தங்கிருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? இரண்டு தலைமுறைக்கு தமிழை தமிழை கற்று கொடுத்தது ராஜா சார் இசைதான். ஒரு பாமரனுக்கு தெரிந்த உண்மை இசை விமர்சகர் என்று சொல்லும் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன சொல்ல?

    ReplyDelete
  30. //எனக்கு மலேசியா வாசுதேவன், ஜென்சி, ஷைலஜா குரல்கள் பிடிக்காது என்பது ஒரு தனிப்பட விருப்பம்.எனது தளத்தில் அதை நான் எழுதாமல் வேறு எங்கே செய்யமுடியும்? நான் அவர்களை அசிங்கப்படுத்துவதாக நீங்கள் எண்ணினால் நீங்கள் ஒரு வலைப்பூ துவங்கி அங்கே அவர்களை தாராளமாக புகழ்ந்து பகுதி பகுதியாக எழுதுங்கள். நான் தலையிடவே மாட்டேன். ஆனால் என்னை அப்படிச் செய்யாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உங்களின் வார்த்தைகளை என்னிடம் திணிக்காதீர்கள். கல்யாணி மேனனின் குரலை நான் உயர்த்திப் பிடிப்பதாக நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் சொல்லவில்லை.//
    அந்த தனிப்பட்ட விருப்பம் தான் எல்லோருக்கும், அதற்காக மக்களால் ஏற்றுகொள்ளபட்ட, ரசிக்கப்பட்ட குரல்களை ரொம்ப கீழ்த்தரமாக கழுதை குரல், கட்டை குரல் என்று விமர்சிப்பது அநாகரிகம். உங்கள் பதிவு என்பதால் என்ன வேண்டுமென்றால் எழுதுவதா? அப்படியென்றால் ஒரு நோட்டில் உங்களுக்கு தோன்றியதை எழுதி நீங்களே படித்து கொள்ளுங்கள். பொதுவில் வைத்தால் நாலு பேரு எதிர் கருத்துக்களை சொல்லத்தான் வருவார்கள். அதை தாங்கி கொள்ளும் பக்குவம் வரவேண்டும். எங்களது நண்பர் சார்லஸ் எழுதும் வலைப்பூவில் வந்து, உங்கள் வேலையத்தான் காட்டுகிறீர்களே. அங்கே மட்டும் எங்கே உரிமை வந்தது. நீங்கள் உடைத்தால் மட்டும் மண்குடம், நாங்கள் உடைத்தல் பொன்குடமோ? என்னவென்று சொல்வது உங்கள் நடுநிலை. தயவு செய்து தாங்கள் எங்கேயும் தங்களை நடுநிலையாளர் என்று சொல்லிகொள்ளதீர்கள். அது உங்களை எம்.எஸ்.வி அய்யாவின் ரசிகன் என்று சொல்லி கொள்வதை ஏமாற்றுகிற செயல் தான். உங்கள் முன்னால் பதிவுகளில் கல்யாணி மேனன் பாடிய பாடலை சிலாகித்து பேசியது பதிவாகியுள்ளது.

    ReplyDelete
  31. //இறுதியாக எ ஆர் ரஹ்மான் பற்றிய உங்களின் கருத்து. நான் அவரை எனது விருப்பத்திற்குரிய இசை அமைப்பாளராக எண்ணிக்கொள்வதாக நீங்களாகவே கற்பனை செய்வதினால் வந்த ஒரு முட்டாள் தனமான கருத்து என்பதைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. ரஹ்மான் என்ன சாதனைகள் செய்தார் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். இ ரா ரசிகர்கள் மட்டுமே அவரை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வயிற்றெரிச்சல். இ ரா வை தனது ஒரே பாடலின் மூலம் விலாசம் இழக்கச் செய்தவர் ரஹ்மான் என்ற காரணத்தினால் அவர் மீது ராஜா ரசிகர்கள் இத்தனை காட்டமாக இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? பாவம். ரஹ்மானை இப்படியாவது தூற்றி உங்களின் வயிற்றெரிச்சலை குறைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி ரஹ்மானால் அடையாளம் காணப்பட்டவர்கள் யார் என்ற உங்களின் கேள்வி இங்கே ஒரு பொருட்டே அல்ல. ரஹ்மான் ஹிந்தி இசையையே மாற்றியவர் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் நான் என்ன புதிதாக சொல்ல முடியும்? அவருடைய சாதனைகள் உங்களின் இ ரா செய்தவைகளை விட அதிக தூரம் சென்றுவிட்டவை.//
    அப்பாடா, உண்மையை உங்களிடம் கறப்பதற்கு நாங்கள் தான் ரொம்ப கஷ்டப்படவேண்டும், எங்கள் ராஜாவின் இசை அரசாட்சியை ஒரே நாளில் முறியடித்து,ஏதோ அவரை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் என்று புகழ்ந்து மாஞ்சு மாஞ்சு எழுதியதெல்லாம் மறந்து விட்டதா? அவர் இந்தியாவில் ஆஸ்கார் விருது வாங்கியதால் சாதனை என்று எப்படி சொல்லலாம்? அவருக்கு முன் சத்யஜித்ரே ஆஸ்கார் வாங்கிருக்கார். இன்றைய தகவல் தொழில் நுட்ப வசதியின் வாயிலாக அவர் ஆஸ்கார் வாங்கியது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. உண்மை சொல்லுங்கள் ஆஸ்கார் விருதுக்கு அவர் பாடல் தகுதியா? என்று. அதற்கடுத்த எந்த வருடமும் அவர் விருது வாங்கவில்லையே? ஆஸ்கார் விருது ஒரு அளவுகோல் கிடையாது. மக்கள் மனமே ஒரு அளவுகோல். ஆஸ்கார் விருது கொடுத்த புண்ணியவான்கள் யாரும் அந்த பாட்டை தினமும் கேட்பதில்லை. அன்றோடு அது முடிந்து விட்டது. ஆனால் மக்கள் மனதில் இருந்து இன்னும் ரசிக்கும் பாடல்கள் என்பது ராஜா சார் காலத்தோடு போய்விட்டது (பழைய பாடல்களும் சேர்த்துதான் சொல்கிறேன்). ராஜா சார் விலாசம் இழந்து விட்டார் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் கடந்த பத்து வருடங்களில் சிறந்த படங்கள் என்று எடுத்து கொண்டால் ராஜா சார் இசையில் வந்த ஆறு படங்கள் அந்த வரிசையில் இருக்கும். நான் சொல்வது வெற்றி , தோல்வி இல்லாமல் சிறந்த படங்கள், கிளாசிக் பட வகையில். இன்றும் அவர் தன்னை நிருபித்து கொண்டு இருக்கார். அவர் படங்கள் வரும் போது வரும் பட விமர்சங்களை படியுங்கள், படம் நல்ல இல்லை என்றாலும் படத்தின் முதுகெலும்பு, தூக்கி விடுவது, படத்தின் ஜீவனை கொண்டு வரும் இசை என்று தான் எழுதுவார்கள். இந்த மூன்று மாதத்தில் நான்கு படங்களின் (தமிழில் – டூரிங் டாக்கீஸ், ஹிந்தியில் – ஷமிதாப், கன்னடத்தில் – மைத்ரி (ஹிட்), தெலுங்கு –ருத்ரமாதேவ)ஆடியோ, மூன்று படங்கள் (டூரிங் டாக்கீஸ், ஷமிதாப், மைத்ரி ) ரிலீஸ் ஆகிவிட்டது. பாடல் நீங்கள் கேட்கவில்லை என்பதால் யாரும் கேட்கவில்லை என்று எண்ணாதீர்கள்.
    இன்று இந்தியாவில் ஐந்து மொழிகளில் இசையமைக்கும் ஒரே இசையமைப்பாளர் ராஜா சார் மட்டுமே. அவர் முகவரி இழந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கவில்லை. விரைவில் தாரை தப்பட்டை, ருத்ரமாதேவி, கேம், என பலபடங்கள் சிறிய, புதுமுக இயக்குனர்களின் படங்கள் என ரிலீஸ் ஆக போகிறது.

    ReplyDelete
  32. //இ ரா இன்னும் பல படங்களுக்கு இசை அமைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதன் பாடலகளைத்தான் யாரும் கேட்பதேயில்லை. தோணி, இது ஒரு நிலா காலம் (அப்படித்தான் நினைக்கிறேன். இல்லாவிட்டாலும்அலட்டிக்கொள்ளமாட்டேன்), மயிலு,தாரை தப்பட்டை (இன்னும் வரவில்லை) என அவரது சமீபத்திய படங்களின் பாடல்களை யார் விரும்பிக் கேட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடுங்கள். படங்கள் வரும் வரை அவற்றை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசும் வீ ஐ பீ க்கள் படம் வந்ததும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். இதுதானே நிதர்சனம்? கவுதம் மேனன் நீதானே என் பொன்வசந்தம் படத்திற்காக இ ரா வை அணுகியதை ராஜா ரசிகர்கள் பெரிய கொண்டாட்டமாக எழுதினார்கள். இவரே எங்கள் ராஜாவிடம் வந்துவிட்டார் என்றார்கள். படம் வந்தது. பாடல்களாலேயே அது ஊத்திக்கொண்டது. இ ரா வால் 2000திற்கான இசையை அளிக்க முடியவில்லை என்பதை உங்களைப் போன்றவர்கள் தவிர மற்ற எல்லோருமே நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். சரி அதை விடுங்கள். அதன் பின் கவுதம் மேனன் என்ன செய்தார்? தனது அடுத்த படத்திற்கு (என்னை அறிந்தால்) இ ரா விடமா சென்றார்? எங்கே போனது உங்களின் வீராப்பு? பாலா போன்ற பரதேசிகளின் (கோபம் வேண்டாம் இது கூட அவரது படம்தான்) படங்களுக்கு மட்டுமே இனி உங்கள் இ ரா இசை அமைக்க முடியும். தமிழ் இசை இ ராவை தாண்டி எப்போதோ வந்துவிட்டது. உங்களைப் போன்ற ஒரு பத்து இருபது பேர் புகழ்வதால் அவர் ஒன்றும் எம் எஸ் வி இடத்திற்கு வந்துவிட மாட்டார். அந்த இசைக்கான தகுதி அவருக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குரியது.//
    இந்த நிலை எல்லோருக்கும் தான் திரு.காரிகன் அவர்களே, கோச்சடையான், கடல், மரியான், லிங்கா, பாட்டெல்லாம் இப்போ யாரு மாஞ்சு, மாஞ்சு யார் கேட்கிறார்கள்? நீங்கள் கேட்கவில்லை என்பதால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? எங்கள் பக்கத்துக்கு வீட்டு பதினாறு வயது பையன் மேகா பாடலை கேட்கிறான். எனக்கே கொஞ்சம் ஆச்சிர்யம், அந்த பையனை பார்க்க வரும் அவனது நண்பன் caller tune ஒலிப்பது நீதானே பொன் வசந்தம் பட பாடலின் (வானம் மெல்ல பாடல்) சிறிய இடையிசை. இதெல்லாம் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். என் நண்பனின் தங்கை மகள் சமீபத்திய சன் டிவி ஸ்டார் சிங்கர்ஸ் போட்டிக்கான மதுரை தேடலில் புத்தம் புது காலை பாடலை பாட, அவளை போன்று ஏழு குழந்தைகள் பாடியதால் இரண்டு பெண்ணை தேர்ந்து எடுத்தனர். வேற யாரும் அந்த பாடலை பாட வேண்டாம் என்று அறிவிக்கும் நிலைமைக்கு போனதாக என் நண்பரின் தங்கை சொன்னார். கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ், ரகுமான், ராஜா சார் என்று தனது கதைக்கு தேவையான இசையமைப்பாளரிடம் பணியாற்றிக்கார். திரும்ப ஏன் ராஜா சாரிடம் போக வில்லை என்பது அவர் விருப்பம். எதிர்காலத்தில் மீண்டும் வருவார். நீதானே என் போன்வசந்ததின் கதைக்கு இவர் தேவைப்பட்டார். வருவார். உங்களுக்கு ஏன் இந்த பொல்லாப்பு? சமீப வருடங்களில் எல்லா பாடல்களும் ஹிட் ஆனது நீ. பொ. வ. பாடல்கள் தான். உண்மையில் சிறந்த படம், மக்களுக்கு பொறுமை வேண்டும், வசனங்கள் நிறைந்த படத்தின் தன்மை யாருக்கும் புரியவில்லை அது தான் படத்தின் தோல்விக்கு காரணம். தனது கதாபாத்திரத்துக்கு ஜீவன் கொடுத்த இசைஞானிக்கு ஒரு விருது மேடையில் நன்றி சொன்னவர் நடிகை சமந்தா. இந்த மாதிரி எந்த நடிகையும், எந்த விழா மேடையிலும் சொன்னதில்லை எனக்கு தெரிந்து. நாங்கள் யாரும் எம்.எஸ்.வி அய்யாவை யாரும் உங்களை போல கீழ்த்தரமாக நினைக்கவில்லை, எழுதவில்லை, திட்டவுமில்லை. அவர் பெரிய இசை மேதை என்பதும். எங்கள் ராஜா சாரின் மானசீக குரு என்பதும் எங்களுக்கும் தெரியும். ராஜா சார் எம்.எஸ்.வி அய்யாவின் பெரிய விசிறி என்றால் அதைவிட எம்.எஸ்.வி அய்யா இசைஞானியின் தீவிர விசிறி என்பதே அவர் தகுதி அடைதலுக்கு எம்.எஸ்.வி அய்யாவின் வாக்குறுதியே போதும். நீங்களும் அதை புரிந்து கொள்ள வேண்டும். எம்.எஸ்.வி அய்யாயின் இசையை எங்களை விட நீங்கள் தான் ரொம்ப கேவலப்படுத்திவிட்டீர்கள், தமிழ் திரை இசையை சீரழித்த ரகுமான் வகையராக்களுக்கு சப்போர்ட் செய்து. உங்களுக்கு எவ்ளோ பதில் அளித்தாலும் நீங்கள் நிமிர்த்த முடியாத வாலு தான் போலும்.

    ReplyDelete
  33. எனது பதிவில் சில இடங்களில் தமிழ் எழுது பிழை இருந்தால் அதற்க்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே, எனது தட்டச்சு பயிற்சியின் காரணமே. நான் எனது வலைப்பூவில் எழுதவில்லை. எல்லாம் கமென்ட் பதிவில் தான் எழுதுகிறேன். உங்களுக்கு புரியவில்லைஎன்றால், அதற்கும் ராஜா சார் தான் காரணம், அவரின் ரசிகர்கள் இப்படித்தான் என்று நீங்களே முடிவு கட்ட வேண்டாம். அவர் பெயரே கேட்டாலே நீங்கள் அதிர்வது எங்களுக்கு தெரிகிறது :)

    ReplyDelete
  34. இளையராஜாவை விமர்சிப்பதில் என்ன சமூக அக்கறையை கண்டீர்கள் என்பதை விளக்கவும்.-----------

    அருள் ஜீவா, உங்களுக்கான பதில் ஒரே பத்தியில் முடிந்துவிடுவதல்ல. என் பதிவுகளில் இதற்கான விடை இருக்கிறது. மேலும் நிறைய வர இருக்கிறது.

    ReplyDelete
  35. திரு குமார்,

    வரிக்கு வரி பதில் சொல்லும் சிறுவனான உங்கள் மீது கல்லெறிவதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடம் அப்படி. உங்களுக்குப் பதில் சொல்வது எனக்குத்தான் அசிங்கம்.

    ReplyDelete
    Replies
    1. தப்பிக்காதீங்க காரிகன்

      Delete
  36. திரு. காரிகன் அவர்களே,

    இந்த வரிக்கு வரி பதில் நீங்கள் அளித்தது இல்லையா? உங்கள் பதிவுகளில் நேர்மை, நிலையான கருத்து இல்லை. நான் சிறுவன் என்றால் நீங்கள் சிறு குழந்தை தான் போலும். நான் எங்கயாவது நின்று கொள்கிறேன். நீங்கள் தான் அங்கே இங்கே என்று உங்கள் திசை தெரிந்தும் தெரியாதது போல அலைந்து கொண்டு இருக்கீர்கள். நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்வது நல்ல வேடிக்கை. திரு. சார்லஸ் அவர்கள் சொன்னது போல் தப்பிக்காதீங்க.

    ReplyDelete
  37. சால்ஸ்,

    தப்பிக்கும் எண்ணமெல்லாம் இல்லங்க. உங்க மாறி ஆளுங்க கூட பேசிப் பேசி போரடிச்சுப் போச்சு. அவ்ளோதான்.

    நானோ நீங்களோ யாரும் யாருடைய மதிப்பீடுகளையும் மாற்றியமைக்க முடியாது. பின் இந்த வாதங்களே அர்த்தமற்றதாக தெரிகின்றன. இருந்தும் நீங்கள் ஆசைப்படுவதால் சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

    இப்போது நான் எழுதும் எல்லா வார்த்தைகளுக்கும் மீண்டும் இதே குமார் பத்தி பத்தியாக எழுதி கருத்து சொல்வதாக நினைத்துக்கொண்டு படுத்துவார். இதெல்லாம் எனக்குத் தேவையா? எனக்குத் தெரியாததை சொன்னாலாவது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். உங்களின் (நீங்களும்தான்) எழுத்தில் எந்தவிதமான புதிய தகவலும் இல்லை. ராஜா போல வேறு யாருமில்லை என்பதையே டிசைன் டிசைனாக சொல்வது மட்டுமே உங்களின் எழுத்து பாணி.

    தமிழை இரண்டு தலைமுறைக்கு கற்றுகொடுத்தவர் இரா என்று குமார் மார்தட்டுகிறார். வேடிக்கையாக இல்லை. படு கடுப்பாக இருக்கிறது. அம்மான்னா சும்மா இல்லடா, வாட காத்து வீசுது, உடம்பு நோகுது, பூவு எடுத்து நீவு, எம்பாட்டு எசப்பாட்டு, ராசா ரோசா, ராஜா கூஜா, சூடேறுது என்று நம் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற காவியப் புலவர் உங்கள் இரா. தொன்னூறுகளில் நமது பாடல்கள் வெறும் பத்து பதினைந்து வார்த்தைகளுக்குள் முடங்கிக் கிடந்தன. அதனால்தான் சின்ன சின்ன ஆசை சேர்த்து வைத்த ஆசை என்று வைரமுத்து கவிதை பாடியதும் ஒரு புதிய நறுமணம் நாம் இழந்திருந்த கவிதையை மீட்டெடுத்தது. ரஹ்மானின் வருகைக்குப் பிறகே பல நல்ல நிகழ்வுகள் தமிழ்த் திரையிசையில் நடந்தன. அதில் முதன்மையானது கவிதை. ரஹ்மானால்தான் நல்ல கவிதை மீண்டும் துளிர்த்தது என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை.

    இரா கோஷ்டிகளுக்கு இந்த நல்ல கவிதை சமாச்சாரமெல்லாம் பல மைல் தூரம் உள்ள ஒரு சங்கதி. அதன் பக்கமே போக மாட்டார்கள். கவிதையா அது எப்படியிருக்கும் என்று கேட்கும் வகையறாக்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரண்டு வயலின் இழுப்பு, சர் சர் ரென்ற ஒரு கிடார் சுரண்டல், பாத்திரங்களை உருட்டியது போன்ற கண்றாவி டமாரச் சத்தம் ( அதன் பெயர் மேற்கத்திய ட்ரம்ஸ் இசையாம்) அங்கங்கே சலிப்பான புல்லாங்குழல் ஓசை, பெண்களின் ஊஊ என்ற கோரஸ், பத்தாயிரம் முறை கேட்டுக் கேட்டு புளித்துப்போன கேட்டதும் தெறித்து ஓடச் செய்யும் பல்லவி, அந்தப் பல்லவிக்கு சம்பந்தமில்லாத சரணம், இது இரண்டுக்குமே ஒத்துவராத இடையிசை என்ற அவஸ்தை, பாடச் சொன்னால் பேசிவிட்டு போகும் பாடகர்கள் இது போதும். மற்றவர்களுக்கோ என்னை விட்டுறேன் என்று கெஞ்சும் கேட்கும் காதுகள். இதுதான் இரா வின் தொன்னூறுகள் அளித்த கொடை. இன்னும் கூட எழுத ஆசைதான். பிறகு இதுவே ஒரு சிறிய பதிவு போல ஆகிவிடும் என்பதால் வேண்டாம் என்று பார்க்கிறேன்....

    உங்களுக்கு எழுதிகொண்டிருக்கும் போதே குமார் வந்துவிட்டார். அவரும் இதையே சொல்லியிருக்கிறார். பொழுது போகவில்லை என்றால் மீண்டும் நிறைய பேசுகிறேன்.

    ReplyDelete
  38. காரிகன்

    டி. என். கிருஷ்ணா இளையராஜா பற்றி ஆ.வி.யில் கூறியது:

    “தமிழ் சினிமா இசையை ரசிப்பீர்களா?”


    ”இளையராஜா காலம் வரைக்கும் ரசிச்சேன். இப்போதைய இசையமைப்பாளர்கள் பத்தி சொல்ல ஏதும் இல்லை. கொஞ்சம் கவலையாகக் கூட இருக்கு.

    ’டெக்னாலஜி .. டெக்னாலஜி’னு சொல்றாங்க. கலைஞனின் சிந்தனைக்கு உருவம் கொடுக்கத்தான் டெக்னாலஜி பயன்படணும். ஆனா, இப்போ அந்தச் சிந்தனையையே டெக்னாலஜி தான் பண்ணுது. கலைஞர்கள் வெறும் ‘ஏற்பாட்டாளர்’களாக மாறிட்டாங்க. சின்ன பிட், குட்டி நோட் கூட பிசகாம பக்காவா பாட்டு பாடுறாங்க. ஆனா, அதுல உயிர் இல்லையே! மெஷின்ல பட்டன் தட்டி உருவாக்கும் பாட்டு அப்படித்தான் இருக்கும். சின்னச் சின்னக் குறைகளோடு கூட பாட்டு பண்ணுங்க. ஆனா அதுல உங்க கிரியேட்டிவிட்டினு ஏதோ ஒரு டச் இருக்கணும். அது இல்லாம வர்ற இசை ... நிக்காது.”

    நான் சொல்லவில்லை . ஒரு நல்ல கர்னாடக வித்துவான் சொன்னது .
    உங்கள் புரிதலில் ஒரு கோளாறு இருக்கிறது காரிகன்.

    ///ரஹ்மானால்தான் நல்ல கவிதை மீண்டும் துளிர்த்தது என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை. ///

    அப்படிச் சொன்ன நாலு நடுநிலையாளர்கள் யார் என்று சொல்கிறீர்களா?
    வைரமுத்துவை தூக்கிப் பிடிப்பதற்காக இதைச் சொன்னீர்கள் என்றால் உங்களின் மீது சாயம் பூசப் படலாம். ஆதிக்க உணர்வு ஆட்கொண்டு திரிபவரோ என சிலர் எண்ணுவதில் தவறில்லை. ஏனென்றால் வைரமுத்து இளையராஜாவை விட்டு விலகியதற்கு அது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    இன்னொன்று. ரகுமான் பாடல்களில் பாதி வார்த்தைகள் கேட்காதே! இசைக் கருவி ஊளையிடும் சப்தம் வார்த்தைகளை மறைத்து விடுமே! ரகுமான் பாட்டுக்களில் வார்த்தைகள் நல்லாயிருக்கும் என்று சொல்லும் நீங்கள் ஹியரிங் எய்ட் மாட்டியவரா?

    ReplyDelete
  39. காரிகன்...

    வணக்கம் ! " குகை மனிதனின் " சேட்டைகளை படித்து முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ! என்ன செய்வது ? நமது சினிமா அப்படி !!!

    " கோடை கால காற்றே, அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா?, வா வா வசந்தமே "...

    போன்ற பாடல்கள் மலேசியா வாசுதேவன் மென்மையாக பாடிய பாடல்கள். அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட " ஆயிரம் மலர்களே... " பாடலில் " பூமியில் மேகங்கள்... " என அவர் ஆரம்பிக்கும் வரிகள் " " கரடுமுரடு என்பதை விட, கணீரென ஆரம்பித்தது அந்த பாடலுக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்தது என்பது என் கருத்து !

    அதே போல ஜென்சி... ஒரு கை வீச்சில் ஒதுக்கி விட்டீர்களோ என தோன்றுகிறது காரிகன்... அவரது குரலிலும் ஒரு வசீகரம் இருந்தது !

    " சிலருக்கு ஏளனம் சிலருக்கோ ஏகாந்தம் "

    இந்த வரிகள் இந்த மூன்று குரல்களுக்கும் கூட பொருந்தலாம் அல்லவா ?

    " எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள். "
    " தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள் "

    வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில், க்ண்களில் நீர் திரள லயித்து கேட்ட பாடல்கள் இவை காரிகன் !


    இந்த பதிவை படிக்கும் போது ஒரு ஆச்சரியதை உணர்ந்தேன்... வேறு பல இசையமைப்பாளர்களின் பாடல்களை இதுநாள் வரையில் இளையராஜாவினுடையது என நான் நினைத்திருந்ததை போலவே தீபம், தியாகம், நல்லதொரு குடும்பம் போன்ற பட பாடல்களுக்கான இசை விஸ்வநாதன் என்றே நினைத்திருந்தேன் ! அந்த பாடல்களிலெல்லாம் விஸ்வநாதனின் இசை தொனி இருப்பது என் பிரமையா அல்லது அவரது பாணியில் இளையராஜா இசையமைத்ததாலா ?!... இல்லை டி எம் எஸின் குரலால் வந்த குழப்பமா ?

    தொடருவேன் காரிகன் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete



  40. பதிவுலகில் மத எதிர்ப்பு கட்டுரைகள் எழுதி வந்த திரு இக்பால் செல்வன் என்ற பதிவர் போன ஆண்டு 2014 நவம்பரில் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்ட செய்தி தற்போதுதான் படிக்க நேர்ந்தது. இதை அவர் நண்பர் வேறொரு தளத்தில் எழுதியிருந்தார். அதை நான் கீழே கொடுத்துள்ளேன்.


    விஜய் ஆனந்தவியாழன், 26 மார்ச், 2015 ’அன்று’ 10:03:00 முற்பகல் IST


    இது இவ்விடம் சம்பந்தமில்லாத ஒரு தகவல், ஆனால் எங்கே இதை பதிவு செய்வது என எனக்குத் தெரியவில்லை. தமிழில் மிகவும் பிரபலமாக இருந்த பதிவர் (இக்பால்) செல்வன் கடந்த 2014 நவம்பர் மாதம், சாலை விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். பதிவுலகில் யாராவது எழுதுவார்களா என பார்த்தேன். யாரும் எழுதவில்லை. அவருடைய கல்லூரி தோழர் ஒருவர் எனக்கும் நண்பர் என்பதால், இந்த தகவலை நானும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். செல்வா என்ற பெயரில் கவிதைகள் எழுதி இருக்கின்றாராம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சி, கோவை நகரில் கல்வி கற்று சிறிது காலம் வெளிநாட்டில் இருந்து விட்டு, சென்னையில் பணியாற்றி இருக்கின்றார். அவரது வயது 28 மட்டுமே. இந்த தகவலை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். நன்றிகள் !

    ReplyDelete
  41. திரு. காரிகன் அவர்களே,
    //தப்பிக்கும் எண்ணமெல்லாம் இல்லங்க. உங்க மாறி ஆளுங்க கூட பேசிப் பேசி போரடிச்சுப் போச்சு. அவ்ளோதான்//
    போரடிச்சு போச்சா இல்லை உங்கள் மனதை குழப்பம் அடைய செய்து விட்டதா?

    //நானோ நீங்களோ யாரும் யாருடைய மதிப்பீடுகளையும் மாற்றியமைக்க முடியாது. பின் இந்த வாதங்களே அர்த்தமற்றதாக தெரிகின்றன. இருந்தும் நீங்கள் ஆசைப்படுவதால் சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.//
    நீங்கள் சொன்ன முதல் கருத்து உண்மை. உங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்றினால் எங்களுக்கும் பொருந்தும். உங்கள் மனதில் தோன்றுவதெல்லாம் உண்மைக்கு மாறாக உங்கள் மதிப்பீடுகளில் பதிவு செய்வதுதான் இங்கே நாங்கள் எதிர்கிறோம். அதில் நடுநிலை இல்லாமல் பிடிக்காத மருமகளை குறை சொல்வது போல ஏன் எழுதவேண்டும். இதனால் உங்களுக்கு என்ன லாபம்.

    //இப்போது நான் எழுதும் எல்லா வார்த்தைகளுக்கும் மீண்டும் இதே குமார் பத்தி பத்தியாக எழுதி கருத்து சொல்வதாக நினைத்துக்கொண்டு படுத்துவார். இதெல்லாம் எனக்குத் தேவையா? எனக்குத் தெரியாததை சொன்னாலாவது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். உங்களின் (நீங்களும்தான்) எழுத்தில் எந்தவிதமான புதிய தகவலும் இல்லை. ராஜா போல வேறு யாருமில்லை என்பதையே டிசைன் டிசைனாக சொல்வது மட்டுமே உங்களின் எழுத்து பாணி. //
    நான் பத்தி பத்தியாக பதில் அளித்தாலும் உங்களுக்கு புரியாது. நீங்களும் அதற்க்கு பதில் தாராமல் தலையை சுற்றி தானே மூக்கை தொடுகிறீர்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது என்று தெரியாததை சொல்ல, நாங்கள் சொல்வதை தான் கேளாமால், உங்கள் மனப்போக்கிலே தானே இன்னும் இருக்கிறீர்கள். இது நாள் வரையில் எங்கள் பதிவுகளில் உள்ளதை, இன்னும் நீங்கள் ஆராயாமல், எங்களை எதிர்ப்பவர்களாக தானே பதிவிடுகீர்கள். ராஜா போல யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ராஜா சார் இசை போல என்று தான் போடுகிறோம். நீங்கள் அவர் பெயரை வைத்து வாதிடுகிரீகள் போல. அதான் இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை நாங்கள் கூறுவது. எத்தனை டிசைன் டிசைனாக சொன்னாலும் உங்களுக்கு புரியாது என்பது புரிந்துவிட்டது.

    ReplyDelete
  42. // தமிழை இரண்டு தலைமுறைக்கு கற்றுகொடுத்தவர் இரா என்று குமார் மார்தட்டுகிறார். வேடிக்கையாக இல்லை. படு கடுப்பாக இருக்கிறது. அம்மான்னா சும்மா இல்லடா, வாட காத்து வீசுது, உடம்பு நோகுது, பூவு எடுத்து நீவு, எம்பாட்டு எசப்பாட்டு, ராசா ரோசா, ராஜா கூஜா, சூடேறுது என்று நம் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற காவியப் புலவர் உங்கள் இரா. தொன்னூறுகளில் நமது பாடல்கள் வெறும் பத்து பதினைந்து வார்த்தைகளுக்குள் முடங்கிக் கிடந்தன. அதனால்தான் சின்ன சின்ன ஆசை சேர்த்து வைத்த ஆசை என்று வைரமுத்து கவிதை பாடியதும் ஒரு புதிய நறுமணம் நாம் இழந்திருந்த கவிதையை மீட்டெடுத்தது. ரஹ்மானின் வருகைக்குப் பிறகே பல நல்ல நிகழ்வுகள் தமிழ்த் திரையிசையில் நடந்தன. அதில் முதன்மையானது கவிதை. ரஹ்மானால்தான் நல்ல கவிதை மீண்டும் துளிர்த்தது என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை. //
    நீங்கள் எண்பதுகளில் தமிழ் நாட்டில் இல்லை என்று நினைக்கிறன். இருந்தாலும் கூறுகிறேன், எண்பதுகளில் தொண்ணூறு சதவிகித படங்கள் எல்லாம் கிராமிய படங்கள் சம்பந்தமாக தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை விக்கிபீடியா தமிழ் சினிமாவின் அந்தந்த வருடங்களில் போய் பார்த்துகொள்ளவும். ராஜா சார் இசை காலகட்டம் என்பதால் அவர் இசை வைத்து தான் அன்றைய படங்களை எல்லாம் கதையமைப்பை இயக்குனர்கள் தயார் செய்தனர். அன்றைய மக்களும் சி சென்டர். மக்களின் பொழுதுபோக்கே சினிமாதான். அவர்கள்தான் தமிழ் சினிமாவை வாழவைத்த சென்டர். அதுவுமில்லாமல் தமிழ்நாட்டில் வட்டார மொழி அதிகம், அதிலும் பேச்சு தமிழ், நகரம், கிராமம் சார்ந்து உச்சரிப்போ, வார்த்தைகளோ வேறுபடும். அந்த மாதிரி காலகட்டத்தில் எளிய மக்களுக்கு தமிழ் இசை கொண்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்களிடம், அவர்கள் புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்கள் மூலமாக தான் பாடலாக கொண்டு செல்ல வேண்டும். நீங்க சொன்ன ‘’அம்மான்னா சும்மா இல்லடா’’ எனபதை பாடுபவன் கிராமத்தில் வசிக்கும் ஒரு கிராமத்தான், அவனுக்கு தனக்கு தெரிந்த மொழியில் எளிய நடையில் தான் பாடுவான். செந்தமிழில் ‘’அம்மா என்றால் சும்மா இல்லை’’ என்று பாடமாட்டான். வேதனையில் உங்களை பாட சொன்னால் செந்தமிழில் கவிதை நடை கொண்டா பாடுவீர்கள்? அதை போன்று தான் வாடை காத்து வீசுது, நோவுது, பூவு, எல்லாம் கிராமம் சார்ந்த எளிய மனிதர்கள் பாடும் பாடல்கள் தான். ராஜா சார் பாடல் ஒன்று இசையமைத்தால் கதாபாத்திரங்கள் தன்மை அறிந்தே பாடல்கள் வரியை எழுத சொல்லுவார். அவர் பாடல்களை நிறைவாய் கேட்கும் யாரும் அறிவர். உங்களுக்கு அது ரொம்ப தூரம் போல. அவர் காவிய புலவர் எல்லாம் கிடையாது. கடைகோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் துயர் தீர்த்த ஞானி.

    ReplyDelete
  43. பிறர் தன் கவிதை இசையை ஆளவேண்டும் என்று மக்களின் உணர்வுக்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தமிழ் திரை இசையை சீரழித்தவர் போல் அல்ல. பத்து பதினைந்து வார்த்தைகளில் முடங்கியது என்று எந்த அர்த்தத்தில் சொல்கீறீர்கள். நீங்கள் பாடல் எல்லாம் கேட்டு விட்டு பதிவு இடவும். சும்மா கேட்டேன் என்கிற ரேஞ்சில் பதிவு இடக்கூடாது. தொன்னூறுகளில் ஏதோ தமிழ் திரை இசையில் கவிதை புரட்சி நடந்ததாக கூறுகிறீர்கள். உண்மையில் இசை புரட்சி நடந்ததா? கவிதை புரட்சி நடந்ததா? தமிழ் நாட்டின் கடைகோடியில் வசிக்கும் ஒரு கிராமத்துபெண், ‘’சின்ன சின்ன ஆசை, சிறக்கடிக்கும் ஆசை’ என்று கவித்துமான பாடலை எந்த கிராமத்தில் அடி,பாடி ஆடுகிறாள்? அந்த படத்தின் பாடல்கள் முதலில் கேட்ட அனைவரும் ஏதோ ரைம்ஸ் மாதிரி இருக்கு என்று புறக்கணித்தனர். படம் வந்த பின் தான், தியேட்டரில் காட்சியமைப்பும், பாடலின் ஒலிபரப்பு நல்ல கணீர் என்று ஒலித்ததினால் தான் கவரப்பட்டது. இந்த படம் மதுரையில் ஒரு சிறிய தியேட்டரில் தான் ரிலீஸ் செய்தனர். படம் எங்கே ஓட போகுது, பாடலும் குழந்தைகள் பாடும் பாடலை போன்று இருக்கிறது என்று கவனிப்பாரற்று தான் இருந்தது. நான் முதல் நாள், முதல் காட்சி எப்பொதும் மணிரத்னம் படம் பார்ப்பவன். அன்று அந்த அரங்கத்தில் என்னையும் சேர்த்து மொத்தம் முப்பது பேர் தான் இருந்திருப்போம். இது உண்மை. எனக்கு படம் பிடித்திருந்தது பாட்டும் அரங்கத்தில் பார்த்து, கேட்டதினாலும் பிடித்திருந்தது. என்னை போன்றே வந்தவர்களுக்கும் இருந்திருக்காலம். ஓபன் டாக் மூலமாக தான் அந்த படம் ஹிட் ஆனது, ஏதோ பாடல் வந்ததும் ராஜா சார் இசை ஓய்ந்தது என்று மனம் போன போக்கிலே உங்கள் பதிவுகள் வருகிறது. நிறுத்திகொள்ளுங்கள். நடுநிலையாளர்கள் என்று உங்களை நினைத்து கொள்ள வேண்டாம். கவிதையை கவிதையாக புத்தகத்தில் படித்து கொள்ளுங்கள். அதனை அனைவரும் பொழுது போக்கும் சினிமாவில் கொண்டு வந்து எல்லோரும் கவிஞர் ஆக போவதில்லை. துயர் அடைந்த மனதிற்கு மருந்தாகவும், மகிழ்ச்சியில் இருக்கும் நேரத்தில் குதுகலிக்கும் வகையில், நம் உறவுகளை மதிக்கும் குணங்களை எடுத்து வைக்கும் பாடல்கள் தான் தேவை. கவிதை நடையில் பாடல்கள் யார் மனதையும் சீராக்காது. துன்ப வேளையில் போய் எளிய மனிதரிடத்தில் கவிதை நடையில் பாடலை பாடினால் அவருக்கு மேலும் துன்பம்தான். உங்கள் வாதம் சரி என்று வைத்து கொண்டாலும் இதனால் தமிழ் அழிந்தா போயிற்று. இன்றைய தமிழ் திரைஇசை பாடல்கள் உங்களுக்கு கவிதை வடிவில் தமிழை வாழ வைத்து கொண்டா இருக்கிறது? உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். நீங்கள் எம்.எஸ்.வி அய்யாவின் ரசிகர் என்று சொல்லி கொள்ளவே வேதனையாக இருக்கிறது. சமீபத்தில் வந்த கடல், மரியான் பாடல்களில் அந்த கதையின் நேட்டிவிட்டி இல்லாததே அந்த படங்களின் தோல்விக்கு ஒரு காரணம். இந்த உண்மை உங்களுக்கு தெரியாது. தமிழ் மண்ணை விரும்பும் யாரும் இந்த துயரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    ReplyDelete
  44. // இரா கோஷ்டிகளுக்கு இந்த நல்ல கவிதை சமாச்சாரமெல்லாம் பல மைல் தூரம் உள்ள ஒரு சங்கதி. அதன் பக்கமே போக மாட்டார்கள். கவிதையா அது எப்படியிருக்கும் என்று கேட்கும் வகையறாக்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரண்டு வயலின் இழுப்பு, சர் சர் ரென்ற ஒரு கிடார் சுரண்டல், பாத்திரங்களை உருட்டியது போன்ற கண்றாவி டமாரச் சத்தம் ( அதன் பெயர் மேற்கத்திய ட்ரம்ஸ் இசையாம்) அங்கங்கே சலிப்பான புல்லாங்குழல் ஓசை, பெண்களின் ஊஊ என்ற கோரஸ், பத்தாயிரம் முறை கேட்டுக் கேட்டு புளித்துப்போன கேட்டதும் தெறித்து ஓடச் செய்யும் பல்லவி, அந்தப் பல்லவிக்கு சம்பந்தமில்லாத சரணம், இது இரண்டுக்குமே ஒத்துவராத இடையிசை என்ற அவஸ்தை, பாடச் சொன்னால் பேசிவிட்டு போகும் பாடகர்கள் இது போதும். மற்றவர்களுக்கோ என்னை விட்டுறேன் என்று கெஞ்சும் கேட்கும் காதுகள். இதுதான் இரா வின் தொன்னூறுகள் அளித்த கொடை. இன்னும் கூட எழுத ஆசைதான். பிறகு இதுவே ஒரு சிறிய பதிவு போல ஆகிவிடும் என்பதால் வேண்டாம் என்று பார்க்கிறேன்....//
    ஆமாம். எங்களுக்கு கவிதை என்று ஒன்றும் தெரியாதுதான். நாங்கள் சாதாரணமானவர்கள், எளியவர்கள் எங்களுக்கு எங்கள் பாணியில் திரை இசை பாடல் இருந்தால் போதும், கவிதைகளை புத்தங்களில் படித்து கொள்கிறோம். எங்களுக்கு இசை பற்றியும் ஒன்று தெரியாது தான். ஒரு கம்ப்யூட்டர், இரண்டு speeker வைத்து காப்பி, பேஸ்ட் செய்யும் இசை பற்றியெல்லாம் தெரியாது. எங்களை ராஜா சார் ஒரு கிடார் சுரண்டல், பத்திரங்களை உருட்டி அதில் வரும் சுக கீதங்கள் கொடுத்து, எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு இருக்கிறார் அல்லவா அது போதும். டமாரச்சத்தம், புல்லாங்குழல் ஓசை, பெண்கள் ஊ ஊ என்று எங்களை ஏமாற்றிதான் வருகிறார். மற்றவர்கள் மாதிரி கத்தி காது வலிக்க படுவது, இழவுவீட்டில் (அங்கே கூட நல்ல பாடல் கேட்கும்) போன்று ஒரு பாடல் (விண்ணை தாண்டி வருவாயா ஒப்பாரி பாடல்), தமிழா? வேறு மொழியா என்று தெரியாமல் பாடுவது, பாடுவது ஆணா? பெண்ணா? எனத்தெரியாத கழுதைகளை வைத்து பாடவைப்பது, பாடிய வரியை பத்து தடவைக்கு மேல பாடுவது, ஒரு சுரம் இல்லாமல், எந்த விதமான இசை கட்டுமானம் இல்லாத பாடலாக, மேற்கத்திய பாடல் நகல் எடுப்பது என தமிழ் இசையை சீரழித்தவர்கள் போல எங்கள் ராஜா சாருக்கு இசையமைக்க தெரியாமல் எங்களை ஏமாற்றிதான் வருகிறார். உங்களை, உங்கள் பதிவுகளை நினைத்தாலே எனக்கு வரவர சிரிப்பு தான் வருகிறது. உங்கள் பதிவுகளில் நீங்கள் எம்.எஸ்.வி அய்யாவை ஒரு ஊறுகாய் அளவுக்கு தான் பயன்படுத்தி யாரையோ தூக்கி விட இப்படியெல்லாம் பதிவிடுகிறீர்கள் என்று சந்தேகம் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறோம் நாங்கள் வணங்கும் மற்றொரு இசை தெய்வம் எம்.எஸ்.வி, அய்யா, கே.வி.எம். அய்யா மற்ற ராஜா சார் முன்னோடிகளின் பெயரை சொல்லி வேருஒருவரை வைத்து ராஜா சார் இசையை மட்டபடுத்த வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கவே செய்கிறோம். உங்கள் மேல் தனிப்பட்ட மதிப்புகள் எங்களுக்கு உண்டு. உங்கள் கருத்துகளின் பதிவை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ராஜா சார் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த பதிவுகளை தவிர்த்து உங்களுக்கு பிடித்தவர்களின் பதிவை மட்டும் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் அந்த பக்கம் கூட வரமாட்டோம். ஒப்பீடு அளவு வேண்டாம். இன்னும் நெறைய எழுத வேண்டும் என்று இருக்கிறது. நீங்கள் இதற்கே நொந்து விடுவீர்கள். உங்கள் பொழுது போக்கு எழுதவில்லை.

    ReplyDelete
  45. திரு இக்பால் செல்வன் இறந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். வாதம் செய்யும் திறன் படைத்த, சொந்தமாக சிந்தித்து எழுதும் ஒருசில பதிவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதிலும் சொந்த மூளையுடன் எழுதுபவர்களை எனக்குப் பிடிக்கும்.
    என்னுடைய எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவந்தவர் அவர். மிகச்சில சமயங்களில் மட்டுமே பின்னூட்டங்கள் எழுதியிருக்கிறார். ஆன்மா, சாந்தி போன்ற விஷயங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லையென்றபோதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்பதால் அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்பதை சொல்லிக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இக்பால் செல்வன் மறைந்தாலும் அவரின் நினைவுகள் நம்மிடம் நிலைக்கும்.
      அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு அமைதி கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

      Delete
  46. வி எஸ் குமார்,

    உங்களைப் போன்ற சல்லித்தனமான ஆட்களோடு மல்லுகட்ட வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை. ஏற்கனவே பல ராசா சிகாமணிகளுடன் மோதியாயிற்று. நீங்கள் புதியவர் என்பதால் என்னை தெரியாமல் ஏதேதோ எழுதுகிறீர்கள்.இத்தனை வேகம் நல்லதில்லை.விரைவிலேயே மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும்.நான் எழுதிய அனைத்து இசை விரும்பிகளையும் படித்துவிட்டு பிறகு பேசுங்கள். விமர்சனத்தை எதிர்கொள்ளத் தெரியாத கோழைகளின் கூச்சல் போலிருக்கிறது உங்கள் கருத்து.

    இது என் தளம். இசை விரும்பிகள் கட்டுரைகள் எனது வார்த்தைகளினால் உருவானது. என் தளத்தில் நான் விரும்புவதை எழுதுகிறேன். இதை எழுதாதே என்று சொல்ல நீங்கள் யார்? என் கையை கட்டிப்போடும் அதிகாரம் எப்படி உங்களுக்கு வந்தது? அந்த உரிமை இங்கே யாருக்கும் கிடையாது. ஏதோ பள்ளிக்கூட சிறுவர்கள் முறைப்பது போல உறுமுகிறீர்கள்... பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எனக்கு பதிவிடும் நேரத்தில் எனக்கு என்ன எழுத வேண்டும் என்று சொல்வதை நீங்களே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதியிருக்கலாம். முதலில் அதை செய்யுங்கள்.

    என் எழுத்தை விமர்சனம் செய்வதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் எனக்கு டிக்டேட் செய்யும் அடாவடித்தனம் வேண்டாம். இல்லை அப்படித்தான் என்றால் .. என் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. திரு. காரிகன் அவர்களே,

      என் பதிவு உங்களுக்கு சல்லியாக, அடாவடியாக இருந்திருக்கு என்றால் என் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை என்று நான் எடுத்து கொள்கிறேன். உங்கள் எழுத்து யாரும் கட்டி போடவில்லை. நீங்கள் எழுதுங்கள் ஆனால் உங்கள் மனம் போன போக்கிலே எழுதாதீர்கள் என்பது தான், நான் மிகவும் தன்மையுடன் தான் கூறியுள்ளேன். நீங்கள் என்னை சொல்வது உங்களுக்கும் பொருந்தும் என்றால் புதிய காற்றில் உங்கள் பதிவுகளை நீங்கள் படிக்கவும். உங்கள் எழுத்தை தான் நான் விமர்சனம் செய்திருக்கேன். உங்களை தனிப்பட்ட முறையில் எதாவது கூறியிருக்கேனா? விமர்சனத்தில் டிக்டேட் செய்ய சொல்வது ஒன்று புதியது அல்லவே. இனி உங்கள் பதிவுகளில் தலையிடுவது என் நேரத்தை வீணடிக்கும் செயல் ஆகும். இத்தோடு என் பதிவுகளை நிறுத்தி கொள்கிறேன். உண்மையை காலம் பதில் சொல்லும்.

      https://m.facebook.com/bharathratnaforilayaraja/photos/a.467336703396822.1073741829.380841895379637/631822526948238/?type=1&source=48

      இது கடந்த 23.03.2015 அன்று டைம்ஸ் ஆப் இந்திய பதிப்பில் வந்தது. இது பொய் என்றால் இங்கே எல்லாமே பொய் தான்.

      Delete
    2. ஒரு பக்கம் ஒருவர் ஆஸ்கர், கிராமி என உலக விருதுகள் வாங்கி அவரது ரசிகர்களை பெருமை படுத்துகிறார். இன்னொரு பக்கம் ஒருவரது பாடல்கள் சென்னை சிட்டி பஸ்ஸில் ஒலிப்பது குறித்து சிலர் பெருமை கொள்கிறார்கள். பாவம்தான் போங்க. இதாவது மிஞ்சுதே என்று நினைத்துக்கொள்ளுங்கள். வேற வழி!

      Delete
    3. தமிழன் கேட்பது போல் அவன் உணர்வுகளுக்கு தீனி கிடைத்த மாதிரி பாட்டு போட்ட இசையமைப்பாளரைப் பற்றிதான் இங்கு பேசுகிறோம் . மியூசிக் மார்க்கெட்டிங் செய்ய எந்த நிலைக்கும் போய் அவார்டு வாங்கியவரைப் பற்றி அவர் சொல்லவில்லை. காசு கொடுத்தால் எல்லா அவார்டையும் வாங்கலாமே!

      Delete
  47. சால்ஸ்,

    வைரமுத்துவின் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடலை சிறப்பித்துச் சொன்னால் இதே சாதி அடையாளம் பூசப்படாதா? என்னங்க கேலிக்கூத்தா இருக்கு? அப்படீன்னா கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார், கா மு ஷெரிப், ஏன் பாரதியார் பற்றியெல்லாம் யாரும் வாயை தெறக்கக்கூடாது போல. கலைஞனுக்கு வேறு கோடுகள் வரையாதீர்கள்.

    நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ரஹ்மான் இசையில்தான் நல்ல தமிழ் பிழைத்தது. உங்கள் வீட்டில் இரா பாடல் மட்டும்தான் ஒலிக்கிறது என்று மனதை தொட்டு சொல்ல முடியுமா உங்களால்? பின் ஏனிந்த விதாண்டவாதம்?

    a cappella என்றொரு இசை வடிவம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதில் மிகக் குறைந்த அளவில் இசை அல்லது வாத்திய இசையே இருக்காது.வெறும் மனித குரல்களே ஒலிக்கும். தமிழில் இதை அறிமுகம் செய்தது ரஹ்மான். மின்சாரக் கனவு படத்தின் அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே பாடல் இதைப் போன்றதொரு வடிவம்தான். அந்தப் பாடலின் கவிதை உங்கள் காதுகளில் விழவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      செய்தி தவறு . acappella என்ற குரலிசை வடிவம் முதலில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. படம் 'கரையெல்லாம் செண்பகப் பூ ' , பாடல் ' ஏரியிலே இலந்த மரம் ' என ஆரம்பிக்கும் . ஆரம்பத்தில் வெறும் குரல்கள் கொண்டு இசைக்கப்பட்டிருக்கும் .

      Delete

  48. காரிகன்
    \\a cappella என்றொரு இசை வடிவம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதில் மிகக் குறைந்த அளவில் இசை அல்லது வாத்திய இசையே இருக்காது.வெறும் மனித குரல்களே ஒலிக்கும்.\\

    இம்மாதிரியான நிறையப் பாடல்களை விஸ்வநாதன்- ராமமூர்த்தி நிறையவே போட்டிருக்கிறார்கள். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்......' பாடல் ஒரு உதாரணம். காதல் சிறகைக் காற்றினில் விரித்து பாடலும் அந்த ரகம்தான். பி.சுசீலாவுக்கான பல பாடல்களை மூன்று அல்லது நான்கு வாத்தியங்களை வைத்துக்கொண்டே செய்திருக்கிறார்கள். 'இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்...கையில் இரண்டுப் பாடல் கொண்டுவந்தான்' என்று ஜேசுதாஸ் குரலில் எம்ஜிஆர் படத்திற்கு எம்எஸ்வி ஒரு அருமையான பாடலைப் போட்டிருக்கிறார். பாடல் நா.காமராசன். கேவிஎம்மும் நிறையச் செய்திருக்கிறார். நான்கு சுவர்கள் படம் என்று நினைக்கிறேன். வேதா கூட இம்மாதிரி பாடல் ஒன்றைப் போட்டிருக்கிறார்.
    நீங்கள் சொன்னது சரியான தகவலாக இருக்கக்கூடும். இ.ரா வருகைக்குப் பின்னர் ரகுமான் இதனை முதன்முதலாகச் செய்தார் என்று சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. அமுதவன் சார்

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனைப் பாடல்களும் a cappella வகையைச் சார்ந்தவை அல்ல . ஆனால் நல்ல பாடல்கள் . இசைக் கலைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

      Delete
    2. அமுதவன் அவர்களே,

      வியக்கிறேன். ஏனென்றால் இந்தப் படத்தை ஒரு முறை சகித்துக்கொண்டு டீவியில் பார்த்த போதே இந்தப் பாடலைக் குறித்த எண்ணம் எனக்கு வந்தது. ரஹ்மானுக்கு முன்னே எம் எஸ் வி (பலரும் இதை செய்திருக்கலாம். ஆனால் ரஹ்மான்தான் இதை பெரிய அளவில் பேச வைத்தவர்.) இதை செய்திருப்பதை உணர்ந்தேன். இராவின் ராஜ்யத்தில் இதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. காரணம் அவருக்கு தனது இசை மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணம் உண்டு. அவராவது acappella வகை பாடல்களை அமைப்பதாவது?

      சால்ஸ் ஒரு வெத்துவேட்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பத்தரகாளி பட விவகாரத்திலேயே இவர் சரக்கு சந்தி சிரித்தது இவருக்கு இன்னமும் தெரியவில்லை போலும். எதோ இரண்டு மூன்று அரைவேக்காடுகள் என்னையும் உங்களையும் எதிர்ப்பதற்காக எழுதியதை இவர் தனக்கு கொடுக்கப்பட்ட புகழாரம் என்று கற்பனை செய்துகொண்டதினால் வந்த மாயை இது. பாவம். இதற்கும் ஏதாவது சம்பந்தம் இல்லாமல் உளறுவார்.

      Delete
    3. சால்ஸ்,

      உங்களுக்குத் தெரிந்த இசை வடிவங்களை எழுதுங்கள் பார்க்கலாம். நான் acappella என்றதும் உடனே அதை பிடித்துக்கொண்டு சிலம்பாட்டம் ஆடுவது கோமாளித்தனமாக இருக்கிறது. sophisticat-pop என்றொரு வகை இருக்கிறது. அதில் கண்டிப்பாக இராவின் இசை வராது. உடனே எங்கள் இரா அப்போதே அமைத்துவிட்டார் என்று சொல்லவும் நீங்கள் தயங்க மாட்டீர்கள்.

      நிறைய தெரிந்துகொண்டு பிறகு எழுத வாருங்கள். உங்கள் எழுத்தே சிரிப்பாய் சிரிக்கிறது.

      Delete
    4. காரிகன் மமதை கண்ணை மறைக்கிறது. நான் ஒன்று கேட்கிறேன். அடிப்படை தாளம் மொத்தம் எத்தனை? அந்தத் தாளங்களில் உலகத்தின் எல்லா பாடல்களும் அடக்கம். எல்லா தாளங்களிலும் இளையராஜா பாடல்கள் போட்டிருக்கிறார். வெளிநாட்டுக்காரன் இரண்டு தாளங்களில் பாடலே போட்டதில்லை . என்ன தாளம் என்று தெரியுமா? தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் எழுத்தைப் பார்த்தாலும் சிரிப்பு வருது.

      Delete
  49. a cappella வகையா என்னவென்பது தெரியாது. இப்போது முழுமையாக நினைவு வந்ததால் எழுதுகிறேன். நான்கு சுவர்கள் படத்தில் பி.சுசீலாவை வைத்து மிகக் குறைந்த வாத்தியங்களுடன் வேதா ஒரு பாடல் போட்டிருப்பார். 'நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே' என்று ஆரம்பிக்கும் அருமையான பாடல் அது. அந்தக் காலத்தில் அந்தப் பாடலைச் சிலாகித்து நான் சொன்னபோது என்னுடைய நண்பர் "ஏற்கெனவே சுசீலா பாடிய 'பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா' பாடலின் மறுவடிவம்தானே இது?" என்றார் சட்டென்று. நான் வியந்துபோனேன்.அற்புதமான இசை ஞானம் கொண்ட நண்பர்கள் மத்தியில் இருந்தது இப்போதும் நினைவுகளில் ததும்பிக்கொண்டே இருக்கிறது.
    இப்போது என்னடாவென்றால் 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை நினைவுபடுத்தினால் ஒருத்தர் கரையெல்லாம் செண்பகப்பூ படத்திலிருந்து ஒரு பாடல் என்று என்னத்தையோ சொல்கிறார். எல்லாம் நேரம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நான் குறிப்பிட்டிருக்கும் பாடலை ஒருமுறையாவது கேட்டிருக்கிறீர்களா சார் ? கேட்காமல் எப்படி முடிவு செய்கிறீர்கள்?

      Delete
    2. நான் அந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேனா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மொத்த தமிழ் மக்களில் ஒரு மூன்று கோடிப்பேர் அனுபவித்துக் கேட்ட ஒரு பாடலைப் பற்றிச் சொல்லும்போது முப்பது பேருக்குக் கூடத் தெரிந்திருக்காத ஒரு பாடலைப் பற்றிச் சொல்லி வாதத்தை வளர்க்க விரும்புகிறீர்களே என்பதுதான் நான் சொல்லவந்தது.

      Delete
    3. சார் நான் சொல்ல வந்தது அந்தப் பாடல்கள் எல்லாம் a cappella வகையைச் சார்ந்ததல்ல என்பதுதான்! மூன்று கோடி முப்பது பேர் என்று ரைமிங்காக ஏதோ சொல்கிறீர்கள்.

      Delete
    4. அமுதவன் சார்,

      விட்டு விடுங்கள். a cappella என்பதையே சால்ஸ் இப்போதுதான் கேள்விப்படுகிறார். அது என்னவென்று தெரியாமலே அவர் பேசுவதை நன்றாக கண்கூடாக காண முடிகிறது. இராவுக்கு ராக் என்ற மிகப் பிரபலமான ஆங்கில இசை வடிவம் கூட தெரியுமா என்பது சந்தேகமே. அவரது இசையில் அப்போது உலக அளவில் தோன்றிய இசை வடிவங்கள் பொதுவாக வெளிப்பட்டதே கிடையாது. இதை நான் எனது பதிவுகளில் விவரமாக எழுத இருக்கிறேன். இதை வைத்துகொண்டு உடனே இரா வாசிகள் கொதிப்படையவேண்டாம். வீண் வாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    5. அதை உண்மையாக எழுத வேண்டும் காரிகன் . பொய்களைக் கோர்த்து பூமாலை பின்னக் கூடாது . இவர் ஆயிரம் ஆங்கிலப் பாடல் கேட்டிருப்பாராம். இளையராஜாவிற்கு ஒன்றுமே தெரியாதாம் . இதிலேயே போலித்தனமும் போயும் புரட்டும் அடங்கியிருக்கிறது. பதிவு எழுதினால் கற்பனையும் பொய்யும் கலந்து எழுதுவீர்கள். உங்களுக்கு பழக்கப்பட்டதுதானே!

      Delete
    6. ----இவர் ஆயிரம் ஆங்கிலப் பாடல் கேட்டிருப்பாராம். இளையராஜாவிற்கு ஒன்றுமே தெரியாதாம் . -----

      ஏன் இராவுக்குத் தெரியாது? தெரியாமல்தான் மேற்கத்திய செவ்வியல் இசையை அங்கே இங்கே பிய்த்து பிய்த்து அதில் நாட்டுபுற ஓசைகளை சொருகி, தனது பாணியை உருவாக்கிக் கொண்டாரோ? வேண்டுமென்றால் கேட்பார் போலும். இல்லாவிட்டால் garbage என்று ஒதுக்கி விடுவார் போல.

      நீங்கள் இத்தனை பீற்றிக்கொள்ளும் (தவறாக படித்துவிட்டு என்னைச் சாட வேண்டாம்.) மவுன ராகத்தின் பிரபலமான அந்த பி ஜி எம் flashdance என்ற ஆங்கிலப் படத்தின் தீம் மியுசிக். அதை செய்தது ஜியார்ஜோ மொரோடர் என்ற ஜெர்மானிய இசைஞன். இந்த விஷயத்தில் விபரமறிந்தவர்கள் என்னோடு வீண் விவாதம் செய்யமாட்டார்கள். ஒரு ஒப்பீடுக்காகவாவது கேட்டுப் பாருங்கள்- ஒரு வித்தியாசமான இசையை.

      நான் உங்களைப் பறக்கச் சொல்கிறேன். நீங்கள் புரள்வதே இன்பம் என்ற எண்ணம் கொண்டவர் போலும்.

      Delete
  50. வாங்க சாம்,

    உங்களுக்கு பதில் எழுத நினைத்தபோது இக்பால் செல்வனின் மரணம் பற்றிய (கூட்டஞ்சோறு வலைப்பூ) தகவல் அறிந்தேன். பகிர்ந்துகொள்ளவேண்டிய துயரம். அதன் பின் இரா வாசிகளின் படையெடுப்பு. அவர்களுக்கு என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை.

    குகை மனிதனின் சேட்டைகள் போலவேதான் நான் மேலே குறிப்பிட்டுள்ள இரா வாசிகளின் நடவடிக்கை இருக்கிறது. மலேசியா வாசுதேவன் குரல் சிலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. அதில் நானும் ஒருவன். அவ்வளவே. ஏன், டி எம் எஸ், எஸ் பி பி குரல்களையே சிலர் நக்கலடிப்பதுண்டு. இருந்தும் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் அவர் குரலில் தொடங்கும் இடம் கேட்க அலாதியாக இருக்கும்.அந்தப் பாடல் எனக்குப் பிடித்தே இருந்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

    ஜென்சி ? மன்னிக்கவும்.. இணையத்தில் பலர் அவரை சிலாகித்துப் பேசுகிறார்கள். ஆனால் அவர் பாடிய காலகட்டத்தில் அவர் குரலை கிண்டல் செய்யாதவர்கள் வெகு குறைவு. அவர் இரா தவிர பிற இசை அமைப்பாளர்களிடம் பாடியதாக நினைவில்லை. ஜென்சி என்றாலே இரா தான் நமது ஞாபகத்துக்கு வருவார். சிலருக்கு ஏளனம் சிலருக்கோ ஏகாந்தம் என்ற வார்த்தைகள் பல சூழலுக்கு பொருந்தும். உண்மைதான்.

    தீபம் படம் வந்த சமயத்தில் அதற்கு இசை யார் என்பது குறித்து அப்போது எங்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதமே நடந்தது. எங்கள் ஊருக்கு புதிய திரைப் படங்கள் வர மாதக் கணக்காகும். வானொலிதான். அதை சரியாக கேட்காவிட்டால் யார் இசை என்பது தெரியாது. இறுதியாக எல் பி ரெகார்டை எடுத்துகொண்டு வந்த எங்கள் நட்பு வட்டத்தில் இருந்த ஒரு நண்பன், அதில் இளையராஜா பெயரைக் காட்டி எம் எஸ் வி இல்லை என்பதை உறுதி செய்தான். நீங்கள் சொல்வதுபடி ஆரம்பத்தில் இரா பழைய இசை அமைப்பாளர்கள் பாணியைத்தான் பின் பற்றினார். அவரது இசையில் எம் எஸ் வி, வி குமார், எல்லாருமே தெரிவார்கள்.அவர் பாணி மாறியது எண்பதுகளின் காலகட்டத்தில்தான். எனது அடுத்த பதிவு இதைப் பற்றியதே. தொடர்ந்து வாசியுங்கள். நன்றி.

    (உங்கள் தளத்தில் எப்போது புதிய பதிவு?)

    ReplyDelete
  51. காரிகன்,
    சார்லஸ் போன்ற அற்ப நபர்களை நீங்கள் ஏன் உங்கள் பகுதியில் அனுமதிக்கிறீர்கள் என்றே தெரியவில்லை. அவர் எதோ தான் பாட்டுக்கு உளறிக்கொட்டிக்கொண்டே இருக்கிறார். நீங்களும் அதற்கு வேலை மெனக்கெட்டு பதில் சொல்லிக்கிட்டு... ஒன்னு கருத்து சொல்லணும் இல்லன்னா பொத்திக்கிட்டு போகணும்.. ரெண்டுமே இல்லாம வெட்டிக்கத பேசற தர டிக்கட்டுகளுக்கு என்ன மரியாதை தரணும்னு உங்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பரத்

      எதிர்க் கருத்துக்கள் இருப்பதால்தான் உலகமே இயங்குகிறது. வாதாடவும் தெரிந்தால்தான் பதிவுகளும் பல உண்மைகள் பேசும் . எல்லாமே ஞாயமானது ஒருவனுக்கு ...தான் செய்யும்போது!

      Delete
  52. காரிகன். உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுபவர்கள் பிறரை தரைடிக்கெட் என கொக்கரித்துவிட்டு தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இடுவது ஏன்?புதியகாற்றில் சிலரது பின்னூட்டங்களை சால்ஸ் நெறிப்படுத்தவில்லை என்று அங்கலாய்த்த தாங்கள் கண்டும் காணாத து போல இருப்பது ஏன் ?(தங்கள் ஜால்ராவாக இருப்பதாலா)விவாதங்களையும் ,விமர்சனங்களையும் எதிர் கொள்ள தயங்குபவன் பொது இடத்திற்கு வருவதையும் தவிர்த்தல் நல்லது .

    ReplyDelete
  53. தரை டிக்கெட் திரைக்கு வெகு அருகே இருக்கும் ஒரு வரிசை. எனவே தரை டிக்கட் என்பதை முதல் வரிசை என்று எடுத்துக்கொண்டால் போச்சு. அவ்வளவுதான். இதில் சீறுவதற்கு போதிய fuel இல்லை என்றே நினைக்கிறேன். மேலும் பரத் சால்சை இகழ்வதாக நினைத்துக்கொண்டு புகழ்ந்தே சொல்லியிருக்கிறார். அது அவருக்கே தெரியவில்லை.

    ReplyDelete
  54. காரிகன். நன்றாக சமாளிக்கிறீர்கள். பரத் சால்ஸை புகழ்வது அவருக்கே தெரியவில்லையாம் .பாவம் என்ன செய்வது?உங்கள் அகராதியில் (அற்பமனிதர்,உளறிக்கொட்டுபவர் ,வெத்துவேட்டு ,தரைடிக்கெட் )இதெல்லாம் புகழ்மொழிகளோ! பிறரைக் குறிக்கும் வார்த்தைகள் தன்னை நோக்கின் எப்படியிருக்கும் என எல்லோருமே யோசித்துப் பேசினால் விவாதங்கள் சிறப்பாக இருக்கும் .

    ReplyDelete
  55. தலையெழுத்து...ராஜாவினால் தன்இசையறிவை ...அவரையே

    ReplyDelete
  56. காரிகனைப் போல மூளைக்கோளாறு யாரையும் நான் காணவில்லை.

    ReplyDelete