Saturday 19 December 2015

இசை வசை

நூற்றாண்டு மழையை நாம்  கடந்து விட்டோம் என்று தோன்றுகிறது. காலையில் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது  "நீ ஏன்டா நேத்து லீவு போட்ட?" என்று ஒருவர் மற்றொருவரை கடுமையாக விளாசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நகர்ந்ததும் இன்னொருவர் போனில், "நீ என்ன பெரிய **** ?" என்று மிக மென்மையாக குசலம் விசாரித்தபடி தென்பட்டார். அடுத்து இருவர் சாலையில் எதிர் எதிராக நின்றபடி ஒரு கைகலப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். மழை உணர்த்திய மனிதத்தையும், அது கரைத்துவிட்ட பிழைகளையும் நாம் வழக்கம்போலவே மறந்துவிட்டோம். உண்மைதான். சென்னை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. 

மக்களின் துயரங்களும் கண்ணீர்த்துளிகளும் வடியும் முன்னே பல செய்திகள் மழையை பின்னுக்குத் தள்ளி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டன. அரசியல் வசவுகள், பேரிடர் அறிவிப்புகள், விசாரணை விபரங்கள், இந்த அசாதரணமான கண்ணீர் நிகழ்விலும் ஆதாயம் தேடும் அரசியல் காய் நகர்த்தல்கள் என வரிசையான அபத்தமான அதிரடிகள் தலைப்புச் செய்திகளாக நாம் படிக்கப்படக்  காத்திருக்கின்றன.

இந்த வேளையில்  ஆண் தினவெடுத்த இருவர் பாடல் என்ற பெயரில் எதையோ பேசி, அதற்கு சில வாத்தியங்களை வைத்து இசை என்று ஒரு கருமத்தை அமைத்து பிரசித்தி பெற்ற ஒலியுடன் வெளியிட, அந்த ஒலிப் பாடல் உண்டாக்கிய அலையில் சென்னை வெள்ளமே மூழ்கி விட்டது. நம் தமிழ் இசை இத்தனை தூரம் ஒரு "உயரிய" இடத்திற்கு செல்லும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. தடை செய்யவேண்டிய கருமாந்திரங்களை நாம் அப்போதே பாரபட்சமில்லாமல் தூர  தூக்கி வீசி எறிந்திருந்தால் இத்தனை ஆவேசத்திற்கு இப்போது அவசியம் ஏற்பட்டிருக்காது.

தடை செய் கைது செய் போன்ற ஆர்ப்பாட்டங்கள் பெண்களால் தற்போது முன்னிறுத்தப்படுவது இதற்குத் தேவையான எதிர்வினையே.   ஆண் திமிர் கொண்ட வசனங்கள் பெரிய பெரிய நடிகர்களால் பேசப்பட்டு, ஆராவாரமான கைத்தட்டல்கள் பெறப்பட்டு, பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு சார்பான சிந்தனையை பொதுவானதாக கட்டமைத்த நமது சினிமா அதன் அடுத்த பரிணாமமாக பாடல்கள் மூலம் பெண்களின் மீது வன்முறை நடத்தியது. இந்த இசை வசை ஏறக்குறைய முப்பது வருட பாரம்பரியம் கொண்டது. இன்று விமர்சனக் கோட்டுக்கு மேலே உட்கார வைக்கப்பட்டிருக்கிற சிலரால் போடப்பட்ட  இந்த ஆபாசத்தின் வித்து புயலில் சிக்கிக்கொண்ட மரம் போன்று தற்போது தலைவிரித்து ஆடுகிறது. எனவே  இந்த இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று நம்ப நான் தயாராக இல்லை. அவர்களுக்கு  ஏதுவான இந்தப் "புனிதப் பாதையை" அமைத்துக் கொடுத்த பல "புண்ணியவான்களை" நாம் மறந்துவிட்டு, அவர்களைப் பற்றிப் பேசாமல் இவர்களை  நோக்கி சாட்டையை சுழற்றுவதில் அர்த்தமில்லை.

இந்தப் பாடலை எதிர்த்த பலரில் ஒருவரது கருத்து என்னை கடும் கோபம் கொள்ளச் செய்தது. "இது போன்ற ஆபாசப் பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்" என ஒரு காராசாரமான கருத்தை அவர் சொல்லியிருந்தார். படித்தபோது எனக்கு வியப்பு வரவில்லை. ஏனென்றால் சிம்பு, அனிரூத் போன்றவர்களுக்கு எந்தவிதமான தண்டனை சரியோ அது அவருக்கும் பொருந்தும். அவர் வேறு யாருமல்ல. இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்தான் அந்த ஆவேசமான "திடீர் புனிதர்".

பள்ளி நாட்களில் நான் எழுத நினைத்த  ஒரு கதையின் தலைப்பு: "திருடுவது மகா குற்றம் என்றான் கொலைகாரன்."  க அ வின் கருத்தைக் கண்டதும் எனக்கு ஏனோ அந்த தலைப்புதான் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் எண்பதுகளைத் திரும்பிப் பார்த்தால், அலைகள் ஓய்வதில்லை என்றொரு படத்தை அடையாளம் காணலாம். அதில் வரும் ஒரு பாடல் அப்போது விடலைகளை அதிரடித்தது. அந்தப் பாடலைப் பாடாத உதடுகள் வெகு சிலவே. வாடி எ கப்பக்கிழங்கே என்ற அந்த கருமாந்திரம்  அப்போது போட்ட ஆபாசக் கூத்து இன்டர்நெட், யூ ட்யூப் இல்லாமலே சமூகத்தை அதிர்ச்சியடையவைத்தது. ( பொதுவாக அழகான பெண்களை கிழங்கு மாதிரி இருக்கா என்பார்களாம். கப்பக்கிழங்கு கேரளாவில் பிரசித்தி பெற்றதாம். மேலும் படத்தின் நாயகி ராதா கேரள தயாரிப்பு என்பதால்  வாடி எ கப்பக்கிழங்கே என்று தான் எழுதியதாகவும் இதே க அ பெருமை பொங்க விளக்கம் வேறு அளித்தார்! அதே சமயம் இதே படத்தில் இடம் பெறாத மிக அருமையான புத்தம் புது காலை பொன்னிற வேளை என்ற பாடலையும் இவர்தான் எழுதினார்.)

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான வார்த்தை வன்முறை காலம் காலமாக எந்தவித எதிர்ப்புகளையும் சந்திக்காமல் திடமாக வளர்ந்துவந்தது. 70கள் வரை மரபு என்ற சொல்லுக்குள் புகுந்துகொண்டு திரைப்படத் துறையினர் பெண்களை ஆண்களுக்கான மற்றொரு உப பொருளாக மூளைச் சலவை செய்துவந்தார்கள். ஆணை எதிர்த்துப் பேசுவது, வேலைக்குச் செல்வது, ஆணை விட அதிகம் சம்பளம் வாங்குவது, அவன் காலை காலை வேளையில் தொட்டுக் கும்பிட்டாமல் இருப்பது போன்ற அம்சங்கள் ஒரு குடும்பப் பெண் தவிர்க்கவேண்டிய குணாதிசியங்களாக ஒரு அரைவேக்காட்டுச் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. இரண்டு திருமணம் செய்வதே ஒரு பெண்ணின் "கற்பு" சார்ந்த விஷயமாக பார்க்கப்பட்டது. அப்படி எட்டாவது அதிசயமாக அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாலோ அவள் தன் முதல் கணவனுடன் உடல் ரீதியாக எந்தவித தொடர்பும் கொண்டிராதவளாக இருக்கவேண்டிய நிர்பந்தமும் அந்தப் பெண்ணின் மீது திணிக்கப்பட்டிருந்தது. 2000த்தில் கூட இந்த மக்கிப்போன எண்ணம் மாறவில்லை. ரிதம் என்ற படத்தில் திருமணமான அன்றே தன் புது  மனைவியை  தொடக்கூட நேரமில்லாமல் கணவன் அவரச வேலையாக அவளை  விட்டுப் பிரிந்து செல்லும் சமயத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதாக திரைக்கதை அபாரமாக பின்னப்பட்டிருக்கும். என்ன ஒரு புனிதமான கற்பனை நமது திரைத்துறையினருக்கு! ஆனால் தினவெடுத்த ஆணோ ஆயிரம் திருமணங்கள் செய்வதை கண்டு  மக்கள் அட்சதை போடாத குறையாக களி கூர்ந்து பரவசமடைந்தார்கள். ஆனால் பெண் என்றால் ஒரே முறைதான். கல்யாணம் மட்டுமல்ல. காதலும்தான். இரண்டாம் காதல் கூட  ஒரு பெண்ணுக்கு திரையில் அனுமதிக்கப்படவில்லை. இந்த புழுத்துப் போன ஆண் வர்கத்து அகம்பாவம் பெண்ணை தனக்கு விருப்பம்போல வரையறுத்தது மட்டுமில்லாது பெண்களையே அதுதான் உண்மை என நம்பவும் வைத்துவிட்டதுதான் கொடுமை.

இதன் நீட்சியாக வெளிப்பட்டதுதான் இசை வசை. பெண் பற்றிய ஒரு கருத்தியல் அடிமைத்தனம் கட்டமைக்கப்பட்டவுடன் அடுத்த கட்டத்திற்கு தமிழ்த்திரை நகர்ந்தது.   60களிலும் 70களிலும் கொஞ்சம் கவிதை கலந்த இச்சையுடன் சீண்டிய ஆண், எண்பதுகளில் கோவில் காளை போல அடங்காது அடாவடியாக பெண்ணை தன் பாடல்களால் இம்சித்தான். ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும், நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்றெல்லாம் பெண்ணை பகடி செய்தவன், பாரதிராஜா வகையறாக்களின் வருகைக்குப் பிறகு வாடி என் கப்பக்கிழங்கே என்று துணிந்து அவளது முந்தானையை பிடித்து இழுத்தான். மைனா மைனா மாமா புடிச்ச மைனா என்று நாலந்திரமாக சீண்டினான். வாட வாட்டுது என்று பாலியல் தொந்தரவு செய்தான். பொன்மேனி உருகுதே என்று பெண்ணை வெறும் போகத்துக்காக ஆயத்தம் செய்தான்.

இதன் உச்சமாக நிலா காயுது பாடலில் அவனும் அவளும் சேர்ந்து அடித்த கூத்து மிக மிக ஆபாசமான, அருவருப்பானது. அத்தனை அருவருப்பான பாடல் தமிழில் அதுவரை வந்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை. அந்தப் பாடலுடன் தற்போதைய பிரச்சினைக்குரிய ஒலிப் பாடலை ஒப்பிட்டால் யார் அதிகமாக நம் சமூகத்தை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரியும். தடை செய்திருக்கப் படவேண்டிய பாடலாகிய நிலா காயுது வை அப்போது தமிழர்கள் ரசித்தது இன்றைய தினத்தில் மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. இதைத்தான் இணையத்தில் ஒரு  பதிவர் நாம் நிலா காயுது பாடலையே ரசித்தோம் என்று நக்கலாக குறிப்பிட்டிருந்தார்.


பாரதிராஜாவின் வருகை ஒரு திருப்பத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவரோடு வந்த மாற்றம் தமிழ்த் திரை மற்றும் திரையிசையை சீரழிக்க பெரிதும் துணைபோனது பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்த பாரதிராஜா- இளையராஜா வகையறாக்கள் வந்த பின்னர்தான் நம் இசை இத்தனை தூரம் கேடு கெட்டு நாற்றமடிக்க ஆரம்பித்தது. முதலாமவர் தன் முதல் படத்திலேயே கதாநாயகியை தண்ணீரில் உடை நனையாமல் ஒரு நதியை கடக்க வைத்து ஆண் வர்க்கத்துக்கே  சேவை செய்தார். பதினாறு வயதினிலே அப்படி வெறியாட்டம் போட்டதற்கு பாரதிராஜா விஷம் போல கொஞ்சமாக  செலுத்தியிருந்த பாலியல் காட்சிகளுக்கும் பங்குண்டு.  அதன் பின் சிகப்பு ரோஜாக்கள் என்று பெண்களை கொலை செய்வதை பெருமிதத்துடன் காட்சிபடுத்தினார். அதில் வரும் ஒரு வசனம் மிகப் புகழ் பெற்றது. அது பெண்களை எத்தனை தூரம் மனதளவில் காயப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனையே இல்லாமல் நான் உட்பட சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் உரக்க பகிர்ந்து கொண்டதை நினைத்தால் இப்போது வலிக்கிறது. அந்த வசனம் இதுதான்;"இந்த பொம்பளங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க. நல்லா குத்துங்க". (திருமணம் ஆகாத நாதாரிகள் இப்படி எழுதினால் போடா என்று விட்டு விடலாம். ஆனால் பெண் மூலம் கிடைக்கும் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துவிட்டு பணத்துக்காக அவளை இந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கும் ஆண் மனப்பான்மையை மன்னிக்கவே முடியாது.) இது பாரதிராஜா தமிழ் சமூகத்துக்கு அளித்த இரண்டாவது கொடை.

நிழல்கள் என்ற சகித்துக்கொள்ளக்கூடிய படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட பிறகு சிலிர்த்துக்கொண்டு அவர் கொடுத்த அடுத்த ஆபாசம்தான் அலைகள் ஓய்வதில்லை. இன்றைக்கு நம் திரையில் பள்ளிச் சிறுவர்கள் சிறுமிகள் காதல் செய்வது  அந்தப் படத்தின் நீட்சியே.  காதல் ஒரு புனிதம் என்ற புரட்டை கடை விரித்து பள்ளிக்கூடப் பருவத்தில் காதல் செய்வது காதலின் மகத்துவம் என்ற புதிய "புரட்சியை" அலைகள் ஓய்வதில்லை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது.

தற்போதைய ஒலிப்பாடல் கூட ஒரு மோசமான கெட்ட வார்த்தையையோடு முடிந்துவிடக் கூடியது. அதை நீக்கிவிட்டால் அது மற்றொரு காதல் தோல்விப் பாடல்தான். ஆனால் வாடி எ கப்பக்கிழங்கே போன்ற இளையராஜா அமைத்த பல பாடல்கள் முழுவதும் ஆபாசத்தில் முக்கி எடுக்கப்பட்ட கடைந்தெடுத்த கருமாந்திரங்கள். பள்ளிச் சிறுவர்கள் பெண்களை குரூரமான வக்கிரத்தோடு இழிவு செய்ய ஏதுவான பாடல்கள் பலவற்றை  அவர் வெகு அலட்சியமாக அமைத்ததோடு மட்டுமில்லாது அந்த ஆபாச பாணியை தன் புதிய இசை வடிவமாக சுவீகரித்துக்கொண்டார். ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா பாடல் வந்த புதிதில் சில இடங்களில் பெரு உஷ்ணத்தை சந்தித்தது.அதே போலவே கடல் மீன்கள் படத்தின் மதனி மதனி மச்சான் இல்லயா இப்ப வீட்டுல பாடலும் சர்ச்சைகளில் சிக்கி தன் பல்லவியை மயிலு குமரா என்று மாற்றிக்கொண்டது.

இணையத்தில் ஒரு இராவாசி சின்ன வீடு படத்தில் வரும் ஒரு கண்றாவிப்பாடலை (பாக்கியராஜ் என்ற பாரதிராஜாவின் அடுத்த உருவாக்கம் இதில் பெண்களை நான்குவிதமாக பகுத்து அதை வைத்து கேவலமாக ஒரு பாட்டு வேறு பாடுவார்!) குறித்து சிலாகித்து (வழக்கம் போல முதல் சரணத்தில் இரண்டரை செகண்டுக்கு வரும் புல்லாங்குழல் ...வகை சிலாகிப்பு) எழுத ஒரு பெண் பதிவர் வெகு அலட்சியமாக "நாங்களெல்லாம் இது போன்ற பாடல்களை கேட்பதேயில்லை. முதல் வரியைக் கேட்டதுமே கடந்து போய்விடுவோம்" என்று சொல்லியிருந்தார். அப்படியானால் இளையராஜாவின் நிறைய பாடல்களை நம் பெண்கள் இது போலத்தான்  கடந்து சென்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது.  ஏனென்றால் வீட்டுக்குள் நிலா காயுது, நேத்து ராத்திரி யம்மா, பொன்மேனி உருகுதே, போன்ற பல பாடல்களை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் சகிதமாக கேட்பதற்கு இளையராஜா ரசிகர்களே விரும்பமாட்டார்கள்.

எங்கே நிம்மதி என்ற புதிய பறவை படப் பாடலில் கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்ற ஒரு வரி என்னை கேட்ட முதல் நொடியிலேயே அதிர்சிக்குள்ளாக்கியது. என்ன ஒரு அராஜக மனப்பான்மை! ஆணாக இருப்பதாலேயே தமிழ் சினிமா அவனுக்கு பெண்களை இழிவுபடுத்தும் எல்லா சுதந்திரங்களையும் கொடுத்துவிடுகிறது என்ற எண்ணமே என்னை திடுக்கிடவைத்தது.

கண்ணதாசன் சற்று கவிதை நயத்துடன் குறியீடாக உணர்த்திய ஆணாதிக்க அகம்பாவத்தை வாலி வைரமுத்து போன்றவர்கள் வெளிப்படையாகவே கவிதையாக வடித்தார்கள். எப்படி எப்படி சமஞ்சது எப்படி? பொத்தி வச்ச மல்லிக மொட்டு போன்ற பாடல்கள் பெண்களை இழிவு செய்த பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

பெண்களை பாடல்கள் மூலம் வன்முறை செய்யும் இசையை தமிழில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தவர் இளையராஜா. வாங்கோன்னா வில் விதைத்த இந்த விஷ வித்து பின்னர் ஆபாச மரமாக வளர்ந்து கிளை விட்டது மறுக்க இயலாத உண்மை. இதை நான் துணிந்து வெளிப்படையாகவே சொல்கிறேன். சொல்ல நினைப்பவர்கள் சற்று தயங்குகிறார்கள். அதுவே வித்தியாசம்.

இளையராஜா ஆரம்பித்துவைத்த இந்த இசைச் சீரழிவை எண்பதுகளில் யாரும் மிகத் தீவிரமாக எதிர்க்காததால் (தன் தலையைச் சுற்றி தானே ஒரு ஒளிவட்டம் போட்டுக்கொண்டதால்) தெருக்களில் சிதறும் ஆபாச வார்த்தைகள் தமிழ்ப் பாடல்களுக்குள் எந்தவித சிரமமுமின்றி புகுந்துகொண்டன. நல்ல கவிதை இலக்கியத்தரமான வார்த்தைகள் என்ற பேதமெல்லாம் இளையராஜாவின் இசைக்கு ஒரு பொருட்டே அல்ல. வெறும் பத்து வார்த்தைகளைக் கொண்டே எந்தவித கவிதை அனுபவமும் தராத சக்கைகளை அவர் தயாரித்து வெளியிட்டுக்கொண்டேயிருந்தார். தமிழிசையின் தரம் அதி வேகமாக படு பாதாளத்திற்கு சென்றுகொண்டே இருந்தது. பெண்களை வக்கிரமாக சீண்டும் இசை இளையராஜாவின் தவிர்க்க முடியாத இசை வடிவமாக  நிலைபெற்றது.

இளம் பெண்கள் என்றில்லை குடும்பத்து பெண்களைக் கூட இவரது இசை விட்டுவைக்கவில்லை. இசைக் குயில் சுசீலாவை வாங்கோன்னா என்று கண்ணியமில்லாமல் பாடவைத்து அவர் மீது இருந்த வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார். சுசீலா அப்படி பாடியது அப்போது பலரின் புருவத்தை உயர்த்தியது. ஜானகி பற்றி கேட்கவே வேண்டாம். அவரை மிமிக்ரி பாடகியாகவும் , கட்டில் பாடகியாகவும் அவருக்கு அபாரமாக புதிய அரிதாரம் பூசினார். ஜானகி இவரது இசையில் பாடிய "அந்த ஓசை" கொண்ட பாடல்கள் எண்பதுகளின் மத்தியில் அனேகமாக அனைத்துப் படங்களிலும் இடம்பெற தவறியதேயில்லை. அதையெல்லாம்  வீட்டிற்க்குத் தெரியாமலோ, தெரு டீக்கடைகளிலோ, வாக் மேன்  வசதியோடோதான் கேட்கவேண்டும்.  வீட்டில் தப்பித் தவறி கேட்டாலோ செருப்படிதான் கிடைக்கும்.

 வெள்ள நிவாரண நிகழ்ச்சிக்காக இளையராஜா சென்றிருந்தபோது தற்போதைய ஒலிப் பாடல் குறித்து ஒரு நிருபர் அவரின் கருத்தைக் கேட்க இளையராஜா தன் ட்ரேட்மார்க் ஆணவத்துடன் "ஒனக்கு அறிவிருக்கா?" என்று நிருபரை விலாச, பொது இடங்களில் எப்படி பேசவேண்டும் என்ற சபை நாகரிகம் அறியாத இந்த மனிதரைக் குறித்து பலர்  வெடித்து எழுதியிருப்பதை படித்து ஆச்சர்யப்பட்டேன். இளையராஜா என்ற தனக்குத் தானே ஒளி வட்டம் போட்டுக்கொண்ட இந்த அகம்பாவத்தின் ஊற்றை நாம் மிகையாகப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போதும் நமக்கு வராவிட்டால் சிம்பு, அனிரூத் வகையறாக்களை குறை சொல்வதில் பயனில்லை.

கீழே இருப்பது சுரேஷ்  கண்ணன் என்ற பதிவர் தனது  ஃபேஸ் புக்கில் எழுதியிருப்பது. நான் எனது பதிவுகளில் இளையராஜாவை காட்டமாக விமர்சிப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு முஷ்டியை மடக்கும் இராவசிகள் இதைப் படிக்கவும். இதுதான் நல்லிசை நாடும் இசை விரும்பிகளின் ஆதங்கம் கருத்து எல்லாமே.

ஆயிரம் முக்கல் முனகல்களுடன் பல அருவருப்பான பாடல்களை தம்முடைய தொழிலுக்காக செய்திருக்கும் ஓர் இசையமைப்பாளர் தன்னை ஒரு சுத்த ஒழுக்கமானவனாக உருவகித்துக்கொண்டு சீ சீ என்று அருவருப்பு காட்டும் அந்த போலித்தனம்தான் அருவருப்பூட்டுகிறது.

இதை மேலும் படிக்க கீழ் கண்ட தொடர்புகள்  உதவும்.

http://avargal-unmaigal.blogspot.com/2015/12/ilayaraja-answering-beep-song.html

http://anbanavargal.blogspot.in/2015/12/blog-post_19.html


இத்தனை அருவருப்பான சாக்கடைப் பாடல்களை அமைத்தவரிடம் போய் அவருடைய கோடிட்டிற்கு கீழே உள்ள ஒரு ஆபாச பாடலைப் பற்றிக் கேட்டால் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் விழாதவகையில் அவர் கோபம் ஆணவம் என்ற போர்வை கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டார் என்று தோன்றுகிறது. வழக்கம் போலவே இராவாசிகள் இதை அந்த நிருபருக்கு என்ன திமிர் என்று விமர்சனம் செய்கிறார்கள். பாவம் இப்படியெல்லாம் அபத்தமான போலி கேடயங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது குறித்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.

இளையராஜா ஆரம்பித்த இந்த இசைச் சீரழிவே இன்றைய என்ன ***** லவ் பண்றோம் நிலைக்கு வந்திருக்கிறது. இன்றைய அறிவியல் விரைவு யூ டியூப் என எண்பதுகளில் சாத்தியப்பட்டிருந்தால் இளையராஜாவுக்கும் சிம்பு அனிரூத் கதிதான் ஏற்பட்டிருக்கும்.  கொஞ்சம் பிழைத்துகொண்டார்.  இந்த ஆபாசம் பற்றி பேச கங்கை அமரனுக்கோ, இளையராஜாவுக்கோ பாரதிராஜாவுக்கோ, வைரமுத்துவுக்கோ  கொஞ்சமும் அருகதை கிடையாது. சிம்பு மற்றும் அனிரூத் இருவரும் இந்த ஆபாச இசைச் சாக்கடையின் மற்றொரு துளி. அவர்களை மட்டுமே  தண்டனைக்கு உட்படுத்துவதில் நாம் ஒரு நல்ல இசை பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டதாக வீண் கற்பனை செய்துகொள்ளவேண்டாம். அவர்கள் இந்த அசிங்கமான பாரம்பரியத்தை வளர்த்துவரும் கிளைகள்.  நான் வேர்களை குறித்துப் பேசுகிறேன். நம் இசையின் இன்றைய சீழ்  பிடித்த அருவருப்பின் ஆணிவேர் இளையராஜா.

என் கருத்துடன்  ஒன்றிக்க முடியாதவர்கள்  நிலா காயுது பாடலை தங்கள் வீட்டு வரவேற்பறையில் அம்மா மனைவி மகள் சகிதமாக உட்கார்ந்து கேட்கக்கூடிய அராஜக தைரியம் கொண்டவர்களாகத்தான் இருக்கமுடியும்.

என்னை எதிர்ப்பதற்கு முன் அந்த அசிங்கத்தையும் செய்துவிட்டு வாருங்கள்- மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கிருந்தால்.




38 comments:

  1. உங்கள் பார்வையில் நல்ல கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. வாங்க பரிவை குமார்,

      உண்மைதான். எனது பார்வைதான். வருகைக்கு நன்றி.

      Delete
  2. இளையராஜாவின் சமீபத்திய நிருபரின் மீதான 'கொதிப்புக்கு' உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.
    ஆபாசப் பாடல் சம்பந்தமான சர்ச்சைக்கு இ.ரா மாதிரியான இசை சம்பந்தப்பட்ட பெரிய மனிதரிடம் கருத்துக்கேட்காமல் யாரிடம் கேட்கச் சொல்லுகிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்படி அவரிடம் கருத்துக் கேட்டதே தவறு என்கிற மாதிரியான எண்ணத்தை இணையம் முழுவதுமாக சில அன்பர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பொது இடத்தில் நிருபர்களிடம் விஜயகாந்த் நடந்துகொள்ளும் விதத்தை கண்டித்தும் கிண்டல் செய்தும் விஜயகாந்த்தை ஒரு மனிதன் என்ற அளவுக்கே மதிக்காமல் கீழே போட்டு மிதிக்கும் இந்தக் கூட்டம் அதே அநாகரிகத்தை செய்யும் இன்னொரு மனிதருக்கு ஆதரவாக குத்தாட்டம் போடுகிறார்கள். கோபம் கொள்ளுகிறார்கள். 'இசைஞானி என்பதால் அவர் பேசாமல் விட்டுவிட்டார்.நானாக இருந்திருந்தால் அந்த நிருபரை அங்கேயே அறைந்திருப்பேன்' என்றெல்லாம் எகத்தாளமாக எழுதுகிறார்கள். இந்த சமூக்ம் புரையோடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவத்தில் அந்த நிருபரை எதிர்த்துக் 'கொதிக்கும்' அறிஞர்களே சாட்சி.
    ஒரு பெரிய மனிதரிடம் இப்படிக் கேள்வி வரும்போது "இந்த சமயத்தில் அந்த சப்ஜெக்ட் பற்றி வேண்டாமே. அதை இன்னொரு சமயம் வைத்துக்கொள்ளலாம்" என்று தவிர்த்திருக்கலாம்.
    "நான் இன்னமும் அந்தப் பாடலைக் கேட்கவில்லை. அதனால் கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்று புறந்தள்ளியிருக்கலாம்.(பெரும்பான்மையான சினிமாக்காரர்கள் இப்போது இப்படிச் சொல்லித்தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்) அல்லது இருக்கவே இருக்கிறது "நோ கமெண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருந்திருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் 'உனக்கு அறிவிருக்கா?' என்று கேட்டு ஒரு பெரிய மனிதர் சாதாரண நிருபரிடம் மல்லுக்கு நின்று சிறுமைப்பட்டுப் போகிறார் என்றால் என்னத்தைச் சொல்ல?
    \\நிலா காயுது பாடலில் அவனும் அவளும் சேர்ந்து அடித்த கூத்து மிக மிக ஆபாசமான, அருவருப்பானது. அத்தனை அருவருப்பான பாடல் தமிழில் அதுவரை வந்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை. அந்தப் பாடலுடன் தற்போதைய பிரச்சினைக்குரிய ஒலிப் பாடலை ஒப்பிட்டால் யார் அதிகமாக நம் சமூகத்தை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரியும். \\

    \\இந்த பாரதிராஜா- இளையராஜா வகையறாக்கள் வந்த பின்னர்தான் நம் இசை இத்தனை தூரம் கேடு கெட்டு நாற்றமடிக்க ஆரம்பித்தது.\\

    \\பெண்களை பாடல்கள் மூலம் வன்முறை செய்யும் இசையை தமிழில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தவர் இளையராஜா. வாங்கோன்னா வில் விதைத்த இந்த விஷ வித்து பின்னர் ஆபாச மரமாக வளர்ந்து கிளை விட்டது மறுக்க இயலாத உண்மை.\\
    இன்னமும் இதுபோன்ற இரண்டு பாராக்களில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் நிச்சயம் பல பேரின் கண்களைத் திறக்கும் என்று நம்புகிறேன். இதுபற்றி ஜேம்ஸ் வசந்தனின் ஒற்றை வரி விமரிசனமும் சரியான சாட்டையடி. வழக்கம்போல் உங்களுக்குப் பாராட்டுக்கள் காரிகன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அமுதவன்,

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      கொஞ்சம் இணைய இடைஞ்சல். விண்டோஸ் 10 மாறியதில் சற்று தடங்கல்கள். பழையபடி மீண்டும் விண்டோஸ் 7 பக்கமே போகலாமா என்று தோன்றுகிறது. எனவேதான் இத்தனை இடைவெளி.

      இசைவசை என்ற ஒரு புதிய ஆபாச அத்தியாயத்தை ஆரம்பித்தவரே இளையராஜா என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. இதை பலரும் ஒப்புக்கொண்டாலும் வெளிப்படையாக சொல்வதற்கு தயங்குவதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் தற்போது அந்த இசைஞரின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் வரையப்பட்டுள்ளது.

      இன்றைய தினத்தில் பீப் சாங் அதன் வீரியம் குறைந்துபோய் காணப்படுகிறது. எதோ திடீரென எதற்காகவோ இந்தப் புகைச்சல் கிளம்பியதைப் போலவே இது தோன்றுகிறது.

      ஆபாச பாடல்கள் என்றால் அது இளையராஜா இல்லாமலா? அது அவரது ரசிகர்களுக்கே நன்றாகத் தெரியுமே?

      Delete
  3. \\நம் இசையின் இன்றைய சீல் பிடித்த அருவருப்பின் ஆணிவேர் இளையராஜா.\\
    'நம் இசையின் இன்றைய சீழ் பிடித்த' என்று மாற்றிவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  4. சிறப்பான ஒரு கட்டுரை. எத்தனையோ பாடல்கள் பெண்களைக் கேவலப்படுத்தியும், காட்சிகளும், வசனங்களும் கூட ..சரி அதை விடுங்கள் நமது வரவேற்பரையிலேயே எல்லா நாட்களிலும் எல்லா சானல்களிலும் வந்து கொண்டிருக்கின்றதே சீரியல்கள் எனும் கேவலங்கள் அதிலும் கூட பெண்கள் சித்தரிக்கப்படுவது படு கேவலமாய்...ஆனால் இது ஒன்றிற்குமே மாதர் சங்கங்கள் குரல் எழுப்பவில்லையே என்பது விளங்காத ஒன்று.இப்போது இதற்கும் மட்டும்??

    ஆனால் ஒன்று மட்டும் வேதனையாக இருக்கின்றது...இந்த மாதிரி பரபரப்புகள் எல்லாம் 20 நாட்களின் முன் வந்த சென்னை, கடலூர் வெள்ளத்தையும், தமிழகத்தின் தென்னகத்து மழை பாதிப்பையும் அந்த பாதிப்பை மீட்டெடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் புறம்தள்ளிவிடும் அபாயம் உள்ளதோ என்று மனம் ஆதங்கப்படுகின்றது. இப்போதைய பாட்டிற்கும், ராஜாவிற்கும் எழுச்சி பெறட்டும் தமிழகம். ஆனால் அதே சமயம் மீட்டெடுக்கும் பணிகளுக்கும், அரசைக் கேள்வி கேட்டும், அடிப்படை உரிமைகளுக்கும் எழுச்சி பெறாத தமிழகமாக இருக்கின்றாதே என்றும் மனம் வேதனையுறுகின்றது மறுபுறம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எதோ ஒரு பரபரப்புக்காக ஆரம்பிக்கப்பட்டதைப்போல இந்த பீப் அத்தியாயம் எல்லா சுவாரஸ்யங்களையும் இழந்துபோய் தற்போது நிற்கிறது. உங்கள் எண்ணம் சரியாகவே இருக்கலாம். கொஞ்சம் சிம்பு அனிரூத் இருவரையும் விட்டுவிடலாம் என்று கூட பலர் எண்ணலாம். இதை விட கேவலமான பாடல்கள் நம்மிடம் உண்டு. அதில் பல நம் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை கூட. இளையராஜா விதைத்த அருவருப்பு இது. அறுவடை நாள் வந்துவிட்டது.

      Delete
  5. காரிகன்
    இசைவசை தலைப்பே உணர்த்தியது இளையராஜாவை வசைமழையில் மூழ்கச் செய்யப்போகிறீர்கள் என்று .தங்களால் குறிப்பிடப்பட்டுள்ள சில பாடல்கள் மட்டுமே அவரால் இசைக்கப்படவில்லையே.தீயதை விடுத்து நல்லதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே.இருந்தும் இதுபோன்ற இழிவான பாடல்கள் ,படங்கள் வெளியீட்டிற்கு யார் காரணமாயினும் தவறென்பதையும் மறுக்கவில்லை . பெண்கள் மீதான தங்களின் அக்கறை ,மதிப்பு அதிகமாகவே வெளிப்படுகிறது இப்பதிவில்.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அருள் ஜீவா,

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      தமிழ் இசையின் சீரழிவிற்கு இளையராஜா போட்ட பல பாடல்கள்தான் பாதை அமைத்தன.இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லிவருகிறேன். புரிந்துகொண்டதற்கு நன்றி.

      பெண் வதைக்கு நம் தமிழ் சினிமா ஏகத்துக்கும் படங்கள் பாடல்கள் படைத்துள்ளது. விரைவில் அது பற்றி எழுத எண்ணம்.

      Delete
  6. மிக விரிவாகவும் தெளிவாகவும் நாகரிகமாகவும் எழுதப்பட்ட பதிவு இது. இந்த பதிவு இளையராஜா ரசிகர்களுக்கானது அல்ல காரணம் இந்த பதிவை புரிந்து கொள்ளும் அறிவு இல்லாதவர்கள்


    இளையராஜா ரசிகர்கள் அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி இழிவானது அதை இளைய ராஜாவிடம் கேட்டு இருக்க கூடாது என்று சொல்லி அதன் பின் இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்

    ஆண்மகனிடம் கேட்ட கேள்வியானதே இழிவு என்கிற போது அதை பெண்னிடம் கேட்ட சொல்லும் இவர்களை என்னவென்று சொல்லுவது அவர்கள் மிகவும் கிழ்த்தரமனாவர்கள்தானே இளையராஜாவின் ரசிகர்களுக்கு இப்படிதான் சிந்திக்க தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரைத் தமிழன்,

      இளையராஜா பற்றி ஒரு மிகையான கட்டமைத்தல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் இது கொஞ்சம் அதிகம். முதலில் பத்தாயிரம் பாடல்கள் என்றார்கள். பிறகு அதை ஐயாயிரம் என்று செங்குத்தாகக் குறைத்தார்கள். தற்போது 4500 என்று சொல்கிறார்கள். இந்த 4500 இல் 300 பாடல்கள் மட்டுமே சிறப்பானவை.(இது என் தனிப்பட்ட கருத்து) மற்றவை அனைத்துமே ஒரு தடவைக்கு மேல் கேட்க முடியாத சராசரி வகைப் பாடல்கள்தான். இராவசிகள் யாராவது அவருடைய 90களில் வந்த பாடல்கள் குறித்து சிலாகித்துப் பேசுவது கிடையாது. வீம்புக்கெனெ விதாண்டவாதமாக பேசும் சிலரைத் தவிர.

      மேலும் இராவின் சராசரிப் பாடல்களில் பல படு ஆபாசமானவை. தமிழ் திரையிசையில் இந்த அருவருப்பான இசை பாணியை அறிமுகம் செய்தவரே இளையராஜாதான்.

      பீப் சாங் பிரச்சினை பற்றி இவரிடம் கேட்டது தவறு என்று குதிக்கும் இராவாசிகளுக்கு தற்போது வந்திருக்கும் தாரை தப்பட்டைப் படப் பாடல்கள் அடுத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. படமே படு ஆபாசம் கேவலம். பாடல்கள் வரிகள் என எல்லாமே அருவருப்பின் அம்சம். இதற்கு இளையராஜா இசை அமைத்தது ஏன் என அவரது விசிறிகளே சங்கடப்படுகிறார்கள். ஆனால் என்ன வெளியே சொல்லமாட்டார்கள். பீப் சாங்கை தூக்கி சாப்பிட்டு விட்டது தாரை தப்பட்டை என்ற கருத்து படம் வந்த முதல் நாளே வெளிவந்த ரிசல்ட். ஒருவேளை இதனால்தான் இரா அப்போது அந்த நிரூபர் மீது அத்தனை கோபம் கொண்டார் போலும்.

      தங்களின் வருகைக்கு நன்றி. தொடருங்கள்.

      Delete
  7. உங்கள் தளத்தில் பாலோவர் கெட்ஜெட்டை நிறுவங்கள் அப்போதுதான் உங்கள் தளத்தை தொடர ஏதுவாக இருக்கும். நா திரட்டிகளுக்கு சென்று அங்கு யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று தேடி படிப்பதில்லை நான் யாரை எல்லாம் பாலோ செய்கிறேனோ அவர்களின் பதிவுகளை மட்டும்தான் படிப்பது வழக்கம் முன்பே உங்கள் பதிவை படித்து இருக்கிறேன் ஆனால் அதனை தொடர வழியில்லததால் உங்கள் பதிவுக்ளை படிக்க முடியவில்லை அதனால் முடிந்த இணைக்கவும்

    ReplyDelete
    Replies
    1. தற்போது சில இணைய சிக்கல்கள். கண்டிப்பாக நீங்கள் சொல்வதை செய்கிறேன் விரைவில். தொடர்ந்து வாருங்கள். பேச பல விஷயங்கள் உள்ளன.

      Delete
  8. காரிகன்!

    இளையராஜாக்கு பேசத் தெரியாது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதாவது "people skill"னு சொல்லுவாங்க. மனதுக்குள்ளேயே ஒருவனை "பாஸ்டட்"னு திட்டிக்கொண்டு வெளியே, "இல்லை நண்பரே, என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்" னு பூசிப்பேசும் திறன். அது நிச்சயம் இளையராஜாவுக்கு கிடையாது.

    மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பல பாடல் வரிகள் எல்லாம் ஆபாசமானதுதான். அதற்கு இசையமைத்தது இளையராஜா மட்டுமல்ல, எம் எஸ் வி, கே வி எம், ரகுமான் எல்லாரும்தான்..

    எனகென்னவோ இந்தப்பாடலில்வரும் வார்த்தையை வெளியே என்னனு சொல்ல முடியாத அளவு இருக்கிறமாதிரி இருக்கு..

    கனிமரம் னு வைரமுத்து எழுதியதுகூட பல விமர்சங்களுக்குள்ளானதுனு நினைக்கிறேன்..

    மற்றபடி சிம்பு ஹாஸ் அ ரெப்யூடெஷன்! இளையராஜா ஹாஸ் அ ரெப்யூடெஷன்! அதற்கெல்லாம் ஒரு விலை இருக்கு..:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண்,

      நன்றி. இரா பற்றி நான் செய்யும் விமர்சனங்கள் நீங்கள் அறியாததல்ல. பல தளங்களில் நான் காரசாரமாக விவாதம் செய்தவன். இதானாலே நிறைய பேருக்கு என் மீது "விசேஷ பாசம்" கூட உண்டு.

      விரகதாபப் பாடல்கள் பலர் அமைத்திருக்கிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த போர்ன் வகையை வணிக ரீதியாக முன்னிலைப் படுத்தியது இளையராஜா என்பதே நான் சொல்ல வரும் கருத்து. இப்போது கூட தாரை தப்பட்டை படப் பாடல்கள் பற்றி இலேசாக புகைகிறது. ஆனால் என்ன சிம்பு அனிரூத் இவர்களுக்குக் கிடைத்த "மரியாதையை" இளையராஜாவுக்கு நமது மீடியாவோ மக்களோ தரமாட்டார்கள். கேட்டால் அவர் ஒரு ஞானி என்று வேறு பக்கம் பாய்வார்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட யாரும் இங்கே இல்லை.

      சிலரை மட்டும் கட்டம் கட்டி அடித்துத் துவைப்பது என்ன நியாயமோ தெரியவில்லை.

      Delete
  9. காரிகன்

    உங்களின் ' இளையராஜா வசை ' வழக்கமாக உங்களிடமிருந்து வருவதுதான்! புதிய செய்தி என்னவென்றால் சிம்பு அனிருத் சேர்ந்து படைத்த படைப்புக்கு இளையராஜாதான்... இல்லையில்லை.... இளையராஜா மட்டுமே காரணம் என்று சொல்வதுதான். வழக்கமான அதே பல்லவி. அதே பாடல்களைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

    சென்னை வெள்ளத்திற்கும் இளையராஜாதான் காரணம் என்று சொல்ல வேண்டியதுதானே!? நீங்கள் அப்படியும் சொல்லக் கூடியவரே!

    அசிங்கமாக கெட்ட வார்த்தை போட்டு பாட்டு எழுதி வெளியில் விட்ட கேடு கெட்டவர்களோடு ராஜாவை ஒப்பிட்டுப் பேசுவது அவர் மீது நீங்கள் காட்டும் வழக்கமான வன்மம்தானே ஒழிய வேறொன்றுமில்லை.

    பெண்கள் மீது பாலியல் ரீதியான பார்வை கொண்ட பாடல்களை இளையராஜாவிற்கு முன்னர் இசையமைத்த இசைப் பிரபலங்களும் செய்திருக்கிறார்கள். நிறைய பாடல்களை எடுத்துச் சொல்லலாம். அந்தப் பாடல்களும் சிம்புவிற்கும் அனிருத்திற்கும் இன்ஸ்பிரேசனாக அமைந்திருக்கலாம் இல்லையா!?

    சிருங்காரத்திற்கும் பாலியல் வன்மத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள். இளையராஜாவின் பாடல்கள் சென்சாருக்குப் போன பிறகு வெளியில் வந்தவை. இந்தத் திருட்டு பசங்க செய்தது போல ராஜா பாடல் வெளியிடவில்லை. ராஜாவின் பாடலில் எந்த கெட்ட வார்த்தையும் இல்லை. மகளிர் சங்கங்கள் எதுவும் எதிர்க்கவில்லை . போராட்டங்கள் ஏதும் நடக்கவுமில்லை.
    நீங்கள்தான் நிறைய கற்பனையோடு எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சால்ஸ்,

      உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் பிரயோஜனமில்லை.

      உங்கள் ஆள் இசை அமைத்த தாரை தப்பட்டை என்று ஒரு படம் இப்போது வந்திருகிறது. முடிந்தால் வீட்டில் சத்தமாக அதன் பாடல்களை வைத்துக் கேட்டுப் பாருங்கள்.

      ---சிருங்காரத்திற்கும் பாலியல் வன்மத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள். ---

      உடலுறவு இச்சையில் கூச்சல் போடுவது உங்கள் அகராதியில் சிருங்காரம் போல. என்னத்தைச் சொல்ல?

      பாயும் புலி என்ற படத்தில் வரும் வா மாமா வசமாத்தான் மாட்டிக்கிட்ட வா வா பாடல் கேட்டதுண்டா? அதுவும் நீங்கள் குறிப்பிடும் இதே சிருங்கார ரகத்தில் சேர்த்தியோ?

      வேடிக்கைதான்.

      Delete
  10. காரிகன்

    இந்த லிங்கை ஒரு நண்பர் என் தளத்திற்கு அனுப்பியிருக்கிறார். இது இங்குதான் இருக்கவேண்டும் . வாசகர்கள் இளையராஜா மீதான உங்கள் பார்வையோடு இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்.

    http://tdharumaraj.blogspot.in/2015/12/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. மற்றொரு அரைவேக்காட்டுதனமான தனி நபர் துதி பாடும் பதிவு. இராவாசிகள் சுலபமாக செய்யும் வேலை இதுதானே?

      Delete
  11. இசையில் சபதங்களின் நாடிகளை பிடித்தவர் இசைஞானி ஒருவரே.யாதொரு ஒலியையும் அவர் விட்டு வைக்கவில்லை.
    இப்படி மேதாவித்தனமாக கேள்வி எழுப்பும் நிருபர்களைக் கண்டிக்கும் நேர்மை தமிழ் நாட்டில் யாருக்காவது இருந்ததுண்டா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு என்ற விமல்,

      இராவிடம் இசை தொடர்பாக கேள்வி கேட்ட ஒரு நிருபரை கேவலமாக பொதுவில் திட்டுவது ரொம்ப பெருமையான விஷயம் என்று கருதும் உங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று குழப்பமாக இருக்கிறது.

      "எந்த அறிவை வச்சு உனக்கு அறிவு இருக்குன்னு கண்டுபிடிச்ச?" தத்துவத்தின் புரியா மொழி. தற்போதைய பஞ்ச் டையலாக்.கோமாளித்தனம்.

      Delete
  12. அருமையான பதிவு...சாட்டையடி வரிகள்....உங்கள் கூற்று சரியே...யாருக்கும் அருகதையில்லை....
    --செல்வக்குமார்
    http://naanselva.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்வகுமார்,

      கருத்துக்கு நன்றி.

      ஆபாசப் பாடல் பற்றி கருத்து சொல்ல இரா சரியானவர்தான். அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதுதான் சுவாரஸ்வமானது.

      Delete
  13. Please read this : https://balhanuman.wordpress.com

    A good article about ilayaraja.. explain about what today people are expecting from him.. if he realises & take any steps will be very happy.

    ReplyDelete
    Replies
    1. Thanks for the visit Mr. Xavier,

      I read that post. What an article! Enjoyed reading that.

      Delete
  14. https://www.youtube.com/watch?v=klRiP_T7N4A

    ReplyDelete
    Replies
    1. தாரை தப்பட்டை தான் இப்ப கிழிஞ்சு தொங்குதே! இதுக்குதானா இத்தனை ஆர்ப்பாட்டம்! இளையராஜாவின் 1000 மாவது படத்துக்கு இப்படியா கதி ஆக வேண்டும்?

      Delete
  15. அன்புள்ள நண்பரே,
    வணக்கம்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாங்க புதுவை வேலு,

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

      Delete
  16. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாம்,

      வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      உங்கள் தளத்தில் பின்னூட்டம் அளித்திருக்கிறேன். மனிதம் மலரத்தான் எல்லோருக்கும் விருப்பம். நிஜம் வேறு விதமாக அல்லவா இருக்கிறது?

      Delete
  17. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாங்க புதுவை வேலு,

      உங்களுக்கும் எனது இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

      Delete
  18. வூடு கட்டி அடித்தல் என்றால்... என்பவர்கள் படிக்க வேனித்யா பதிவு

    நிகில் குறித்து சில செய்திகள்

    ReplyDelete
  19. வாங்க மது,

    இது ஒரு பொறிதான். நிறைய காத்திருக்கிறது. உங்களைப் போல நியாயத்தைப் புரிந்துகொள்ளும் இரா ரசிகர்கள் அதிகம் இருந்தால் தேவலை.

    ReplyDelete
  20. குறைமாதக் குழந்தைத்தனமான பதிவு.

    ReplyDelete
  21. நூறு இருநூறு பேர் படிக்கும் பதிவே நன்றாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்களுக்கு ஒரு சமூகம் முழுதும் கேட்கும் ஒரு பாடல் கேடு கெட்டதாக, கண்றாவியாக , ஆபாசமாக இருப்பதில் ஆட்சேபனை இல்லை போலும். நான் அப்படி எண்ணாததினால்தான் இந்தப் பதிவு.

    ReplyDelete