Wednesday 27 April 2016

இசை விரும்பிகள்:XXX - எண்பதுகள்: இசையுதிர்காலம் I

வறட்சிக் காற்று. 
உடைந்த சிற்பம். 
உயிரற்ற ஓவியம்.
ரசம் போன கண்ணாடி,
கம்பிகள் அறுந்த  வீணை.
அணையும் விளக்கு. 
கிறுக்கல் கவிதை. 
குளத்து மீன்கள். 
காகிதப் படகு. 
சுவையற்ற உணவு. 
புகை மேகங்கள்.
குறுகலான சாலைகள்.
கூரற்ற  கத்தி. 
அந்தி வெளிச்சம். 
கண்ணாடிப்  பூக்கள். 
போன்சாய் மரங்கள்.
உதிர்ந்த இலைகள்.

                         
                        

   


            எண்பதுகள்: இசையுதிர்காலம்.


  மலர்களற்ற வெறும் மரங்கள் இருக்கும்,  கனவுகளைத் துறந்த  ஒரு இடத்தை கொஞ்சம் கற்பனை செய்து கொள்வோம். அங்கேயிருப்பவர்கள் அங்கே  காண்பதெல்லாம் வெறும் கிளைகளையும் அதில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சில  இலைகளையும் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் சருகுகளையும் மட்டுமே என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால்  அவர்களிடம் நாம் எந்தப் பூக்கள்  பற்றி பேசமுடியும்? பூக்களின் அறிவியலை அவர்களால் புரிந்துகொள்ள இயலுமா? பிறந்தது முதலே இவ்வாறான ஒரு வறட்சியான காட்சியை மட்டுமே நிஜமென நம்பிக்கொண்டிருக்கும் ஒருவன்  வண்ண வண்ணப் பூக்கள்  உடுத்திய ஒரு மரத்தை  திடீரென காண  நேர்ந்தால் அவன் நிஜமென்று நம்பியிருந்த முகத்திற்கு என்ன நிகழும்? தான் அறிந்தது மட்டுமே எல்லாம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒருவன்  முதன் முதலில் உண்மையான  உலகை சந்திக்கும்பொழுது  அவனது கற்பனை எப்படி உடையும்?

     
    ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு மாற்றம் வானவில் தோன்றுவதைப் போல நிறம் மாறி ஒரு புதிய வண்ணத்தை உடுத்திக்கொள்கிறது.  நமது தமிழ்த் திரையிசையை இதே போல பத்துப் பத்து வருடங்களாக பகுத்துப் பார்த்தால் நமக்கு மிகத்  தெளிவான பிம்பம் ஒன்று கிடைக்கிறது. நமது திரையிசையின் வரைபடத்தில் ஐம்பதுகளில் உயர்ந்து சென்ற இசைக் கோடுகள் அறுபதுகளில்  ஒரு உச்சத்தைத் தொட்டு அங்கேயே நிலை பெற்று நின்றதும், பின்னர் எழுபதுகளில் வேறு இலக்கு நோக்கி நகர்ந்ததும், எண்பதுகளில் சடாரென சரிந்ததும் ஒருசேர காணக் கிடைக்கின்றன.  எழுச்சியும் வீழ்ச்சியும்  நடைமுறை வாழ்க்கையின் நியதிகள் என்ற கசப்பான நிஜத்தை செரிமானம் செய்வதில் சிக்கல்கள் கொண்டவர்களுக்கு இந்த வாக்கியம் ஒரு அபத்தம்.

    எத்தனை வேகமெடுத்தாலும், எத்தனை உயரச் சென்றாலும், எத்தனை மெருகூட்டப்பெற்று அழகாகத் தோன்றினாலும் அத்தனை உண்மைகளும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்மறை மாற்றத்தை  சந்திப்பது இயற்கையின் டிஎன்ஏக்களில்  மறைந்திருக்கும் மர்மக் கோட்பாடுகளில் ஒன்று. எம் எஸ் வி- டி கே ராமமூர்த்தி, கே வி மகாதேவன் போன்றவர்கள் இசையால் இழைத்த சந்தன மெட்டுக்கள் காற்றில் தவழ்ந்த அறுபதுகள் நமது தமிழிசையின் மாற்ற முடியாத உச்சம். இசையின் வசீகரம் செவிகளையும், மனங்களையும் ஒரு சேர பரவசப்படுத்திய மேன்மையான காலகட்டம். அங்கிருந்து எந்தத் திசையில் நமது திரையிசை அதன்பின்னர் நகர்ந்தது என்று இசைச் சுவட்டை தொடர்ந்து சென்றால் ஒரு பிரமாண்ட அதிர்ச்சி நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது. எண்பதுகளின் முத்திரை இசைபாணி  விரிந்துசென்ற நமது இசையின் சிறகுகளை கொஞ்சம் மடக்கிப் போட்டது. விஸ்தாரமான வனாந்திரத்தில் பளபளவென பூரிப்பு காட்டும் ஒரு பரவசப் பூவை நமது வீட்டு மொட்டை மாடியின் அரையடி மண்சட்டியில் வைத்து ரசிப்பதைப் போல நமது இசை சுருங்கியது. அதன் இதழ்கள் விரியத் தயங்கின. வெடித்துக் கொட்டும் மழையின் இறுதிக் காட்சி போல இசை துளித் துளியாக சொட்டியது. எண்பதுகளின் மத்திக்குப் பிறகு எம் எஸ் வி போன்றோர் பாதுகாத்துவந்த இன்னிசை இயல்புகளும், நல்லிசை என்ற நம்பிக்கையும் தமிழ்த் திரையுடனான தமது தொடர்பை துண்டித்துக்கொண்டன. மேலும் அந்தக் காவிய கானங்கள் தமிழரின் செவிகளுக்கு அன்னியமாயின. இசை ஒரு தனி மனித ஆளுமையின் கீழ் பரிதாபமாக அடிமைப்பட்டது.

     இது ஒரு முரண்! எங்கும் வியாபித்திருக்கும் இசை என்ற மகத்துவத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இவரைவிட்டால் இசையே இல்லை என்ற மகா ஆணவத்தை பத்து வருடங்களாக பதிவு செய்ய விழைந்த அநாகரீகம், துர்பாக்கியம், செருக்கு, சுயபாராட்டல்கள் எண்பதுகளை நிரப்பின. இந்த விஷக் காற்றில் நமது மரபான நல்லிசை நலிந்து  நம் திரையிசை  மழை காணா பாலைவனமானது. வாடி எ கப்பக்கிழங்கேவில் ஒரு வளர்ந்த தலைமுறைக்கு இங்கு  இசை எப்படிப் பொழிந்தது என்றா தெரிந்திருக்கும்? அம்மாதிரியான பாடல்களில் தங்கள் ஆன்மாவை கண்டெடுக்கும் இசை மேதாவிகளின் கண்களில் அறுபதுகள் அபத்தமாகத் தெரிவது அவர்களது இசை ரசனையின் கோளாறு. நோய் வாய்ப்பட்ட அவர்களின் இசைத் தேர்வுகள் ஒரு வெளிப்படையான கோமாளித்தனம்.


    ஆரம்ப எண்பதுகளோடு என்னைப் பிணைத்த தமிழ் இசை தொடர்பான இழை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.  திடீரென காற்றலைகளில் மிதக்கும் ஒரு காந்தப் பாடல் என்னைக் கவரும் அந்த அடுத்த நொடி எப்போது வரும் என்றே தெரியாத சூழல். எனது செவிகளில் விழுந்த பெரும்பான்மையான பாடல்கள் எந்த நவீன கனவுகளையும், புதுமையான சோலைகளையும் என் கற்பனைக்குள் தோன்றச் செய்யவில்லை.  அப்போது வந்த பாடல்களில் பலவும் வேர்களற்ற, பொறுப்பற்ற, கண்ணியமிழந்த வெறும் filler இசை போலவே எனக்குத் தோன்றியது. நம்மைச் சுற்றி உலகில் நிகழ்ந்த ஒரு மாபெரும் இசைப் புரட்சியின் நிழலை, அந்த இசையின் வெடிக்கும் பரிமாணத்தை ஒரு அங்குலம் கூட நம்மிடம் கோடிட்டுக் கூட காட்டாத வெறும் வறட்சியான சக்கைப் போன்றதொரு இசை மட்டுமே அப்போது தமிழில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தது. அதை மட்டுமே கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறை என்னைப் பொறுத்தவரையில் இசையின் உண்மையான தொடுகையை தவற விட்டவர்கள்  என்றே கருதுகிறேன். ஆக்ஸிஜன் இல்லாத இசையை அவர்கள் சுவாசித்ததாக சொல்வதுகூட பொருத்தம்தான். அவர்களுக்கு  எண்பதுகளுக்கு முன்  நம் தமிழ்த்திரையிசை  எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் தெரியாது. எண்பதுகளில் உலக இசை எவ்வாறு அதீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதைப் பற்றியும்  அக்கறை கிடையாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம்  என்ற ரகத்தைத் சேர்ந்தவர்கள்.

      இரு சம்பவங்கள் பற்றி இங்கே நான் குறிப்பிடுவது அவசியம் என்றுணர்கிறேன். அந்தச் சம்பவங்கள் வேறு வேறு காலகட்டங்களில், இடங்களில் நிகழ்ந்திருந்தாலும் அவை சொல்லும் செய்தி ஒன்றுதான்.  முதலாவது சமீபத்தில் நடந்தது. கம்ப்யூட்டரில் வார்த்தை விருப்பம் தளத்தின் புதிய பின்னூட்டங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது என் நண்பரொருவர் வந்தார். வந்தவர்,"அப்படி என்னதான் இணையத்தில் பார்ப்பீர்கள்?" என்றார் மர்மமாக சிரித்தபடி. "பார்க்கவில்லை. படித்துக்கொண்டிருக்கிறேன்." என்று பதில் சொன்னேன். "கதையா?" என்றார் என் பின்னே நின்றுகொண்டு. நான் படிப்பதை அவர் படிக்க முயன்றது தெரிந்தது.  " ஏதோ இசை சம்பந்தமான கட்டுரை போல. அனிரூத், சிம்பு, பாடலாக இருக்கும்." என்றார் அவராகவே முடிவெடுத்தபடி. "இல்லை. இது பழைய பாடல்கள் பற்றியது". என்று சொன்னேன். அதை எழுதுவது நான்தான் என்பது அவருக்குத் தெரியாது. தெரியவேண்டிய அவசியம் அவருக்கில்லை. அதை தெரிவிக்க வேண்டிய விருப்பமும் எனக்கில்லை.

   "பழைய பாடல்களா?" என்று வியப்பு காட்டியவர் உடனே," இளையராஜா பாடல்களா?" என்றார் சீரியஸாக. எனக்கு என்ன தோன்றியிருக்கும் என்பதை இங்கே எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் பொறுமையை இழக்காமலிருக்க வெகுவாக பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. "இல்லை. இவர் பொதுவாக இளையராஜா பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. எம் எஸ் வி, கே வி மகாதேவன், ஜி ராமநாதன், வி குமார் போன்றவர்களைப் பற்றியது." என்றேன். அவருக்கு இந்தப் பெயர்கள் புதிதாக ஒலித்திருக்கலாம்.

  அடுத்து அவர் சொன்னது என்னை திடுக்கிட வைத்தது. அவர் சொன்னது இதுதான்: "இளையராஜாவைத் தாண்டியும் இசை இருக்கிறதா என்ன?" இப்படி சொல்லிவிட்டு, "கிரிக்கெட் போடுங்க. பார்க்கணும்." என்று எதோ ஒரு சேனலை அவராகவே தேர்ந்தெடுத்து கிரிக்கெட் என்ற எனக்குப் பிடிக்காத கண்றாவியை  ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

    எனக்குப் பிடிக்காத விதத்தில் பேசிவிட்டு எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும் அவரிடம் நான் என்ன இசை பற்றி பேச முடியும் என்று குழப்பமாக இருந்தது. நான் இணையத்தில் படித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் அந்த நேரத்தில் செய்யவில்லை. அது ஒன்றுதான் அப்போதைக்கு புத்திசாலித்தனமான செயலாக எனக்குப் பட்டது.

        இரண்டாவது வெகு காலம் முன்பு - எண்பதுகளின் ஆரம்பத்தில் -- நடந்தது. ஆங்கில இசையில் நாட்டம் கொண்டிருந்த சமயத்தில் எங்கள் ஊரில் இருந்த எல்லா ரெகார்டிங் கடைகளுக்கும் செல்வது எனக்கு பழக்கமான ஒன்று. முட்டுச் சந்தில் ஒரு கடைசி வீட்டில் ஆங்கிலப் பாடல்கள் பதிவு செய்கிறார்கள் என்று என் நண்பர்கள் புரளி கிளப்பினால் கூட நான் அங்கு சென்று வருவதை ஒரு கடமையாக  வைத்திருந்தேன். அப்படி ஒரு முறை பெரிய வீதியில் ஒரு கடைக்குள் தகவல் அறிந்து நுழைந்து, அங்கிருந்த  வெகு சில ஆங்கில கசெட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது "இருங்க. இப்ப எங்க முதலாளி வந்துருவார். அவருக்குத்தான் இங்கிலீஷ் பாட்டெல்லாம் தெரியும்." என்று அங்கிருந்த ஆள் தெரிவித்தான். மொத்தமிருந்த நூறு கசெட்டுகளில் இருபது ஆங்கில இசைத் தொகுப்புகள் இருந்தன. சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் வந்திறங்கிய ஒரு டிப் டாப் இளைஞன்  தன் குளுமை கண்ணாடியை கழற்றிவிட்டு கடையை ஆராய்ந்தான். கொஞ்சம் இளமையாக அந்த காலகட்டத்தின் அத்தியாவசிய தேவையான  32 இன்ச் பாட்டம் வைத்த பெல்ஸ் அணிந்திருந்தான். கடையில் இருந்த ஆள் பெரிய கும்பிடு போடவும் எனக்கு இவன்தான் அந்த முதலாளியாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.

   அதற்குள் அந்த ஆள் இவனிடம் "எதோ இங்கிலீஷ் பாட்டாம். பசங்க வந்திருக்காங்க." என்ற சொல்லவும் அந்த இளைஞன் என்னையும் என் சகோதரனையும் ஒரு முதலாளிப் பார்வை பார்த்துவிட்டு, "என்ன?" என்றான் அலட்சியமாக. அப்போதுதான் டோனா சம்மர் என்ற பாடகியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.  எனவே அதை விசாரித்தேன்.  உடனே,"அடடா! போன வாரந்தானே அந்த கசெட்டை  ஒருத்தர் வாங்கிட்டு  போனாரு ." என்ற வியாபார பரிதாபம் காட்டியவன் தொடர்ந்து, "அடுத்த வாரம் சிங்கப்பூரிலிருந்து நிறைய ஆங்கில கசெட்டு வரும்." என்று  அவன் சிங்கப்பூரில் இருந்தவன் என்பதற்கான சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டான். பின்னர், "நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப நிறைய இங்கிலீஷ் பாட்டு கேப்பேன். ஆனா இப்ப கேக்கறதில்ல."என்றான். அவசியமில்லாவிட்டாலும்   "ஏன்?" என்று கேட்டுவிட்டேன்.

      அவன் அதே  அலட்சியமாக "என்னைக்கு பிரியா படம் வந்துச்சோ அன்னைக்கே நான் இங்கிலீஷ் பாட்டு கேக்கறத நிறுத்திட்டேன்." என்றான். "அதான் ஏன்?" என்றேன் புரியாமல். "அதான் தமிழ்லயே இளையராஜா இப்ப இங்கிலீஷ் பாட்டுக்கு இணையா மீஸிக் போடுறாரே? பின்ன எதுக்கு இங்கிலீஷ் பாட்டு தனியா?" என்று ஒரு காரணத்தை முன்வைத்தான். இளையராஜாவைப் பற்றி பெரிதாக விருப்போ வெறுப்போ இல்லாத அப்போதே எனக்கு அவன் இப்படிச்  சொன்னது வேடிக்கையாகத் தெரிந்தது. வேடிக்கை என்பதை விட மட்டித்தனமாக என்று கூட சொல்லலாம். ப்ரியா படப் பாடல்கள் வந்தபோதே எனக்கு அதன்மீது எந்தவிதமான விசேஷமான ஈர்ப்பும்  ஏற்பட்டதில்லை. தவிர,ஸ்டீரியோ போனிக் என்ற  ஜிகினா தூவல்கள் இல்லாவிட்டால் அந்தப் பாடல்கள் இத்தனை பெரிய அளவில் பேசப்பட்டிருக்காது.   "இவன் கண்டிப்பா இங்க்லீஷ் பாட்டு எதுவுமே கேட்டுருக்க மாட்டான். சும்மா சொல்றான்." என்றான் என் சகோதரன் என்னிடம்  மெல்லிய குரலில். இவனிடம் எனது பசிக்கான  உணவு கிடைக்காது  என்ற எண்ணம் எனக்கு வந்தது. "அடுத்த வாரம் வாங்கப்பா. நீங்க கேட்டது கிடைக்கும்." என்றான் எங்கள்  பக்கம் திரும்பாமல். டோனா சம்மர் என்ற பெயரை மறந்துவிட்டான் போலும்.  அடுத்த வாரம் வந்தது. நான் அந்தக் கடைக்குச் செல்லவில்லை - அதன் பிறகு.

   எண்பதுகளைச் சார்ந்த பலரின் பார்வையில் இதுபோன்ற பிழை நோக்கு ஒரு யதார்த்தமான தவறு.  அவர்கள் தான் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பை ஒரு பொது விதியாக கட்டமைத்துக்கொள்வதோடு அந்தப் புனைவை உண்மையென மற்றவர்களை நம்பவைப்பதில் தீவிர ஈடுபாடு காட்டுகிறார்கள். இணையத்தில் இது மிக மலிவாகக் காணப்படுகிறது. சிலர் ஒரு hidden agenda போல தாங்கள் ரசித்ததை ஒரு கோட்பாடாக திணிக்க எத்தனித்து, ஏற்கனவே படைக்கப்பட்ட பழைய சாதனைகளையும், அந்தப் பழமை நிறுவிய மகத்துவங்களையும் ஒரேடியாக நிராகரிக்கிறார்கள். வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வுகளும், பேருந்து பயணத்தில் ஆன்மாவை தொட்ட தருணங்களும்,  விஸ்தாரமில்லாத விவரங்களும், தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் மீது பரிச்சயம் இல்லாமல் அவர்களால் பெரிய எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. சிறுவர்கள்  எங்க ஆள் மாதிரி வருமா என்று முஷ்டி மடக்குவதைப் போல இந்த வகையினர் அதே பக்குவமற்ற சிந்தனைக்குள்ளிருந்து வெளியே வரமறுக்கிறார்கள். சுரங்களை முதலில் கண்டவர், இசையே இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது, அவர் ஒரு சுயம்பு என இசையின் பிடிபடாத இழைகளை ஒரு தனிப்பட்ட ஆளுமையின் மீது முடிச்சு போடும் அவலத்தைக்  காணும்போது அங்கே சில விமர்சனங்கள் குறுக்கிடுவது அவசியமானது என்று நினைக்கிறேன். இதையும் பேசாதிருந்தால் நடந்த நிகழ்வுகளை திரித்துக் கூறி நமது அறுபது வருட திரையிசை ஒரே ஒருவரை சுற்றியே வந்ததாக ஒரு புதிய புனைவான சரித்திரம் உருவாகக்கூடிய  விபத்து நிகழக் காத்திருக்கிறது.

  நம் தமிழிசையின் ஆதார வேர்கள் வேய்ந்த, பாரம்பரிய ராகங்களின் வண்ணங்கள்  தோய்ந்த, நம் மரபுகளின் சங்கிலி நீட்சியாக  பலப் பல பாடல்கள் நாற்பதுகள் முதற்கொண்டு ஒரு இசை நதியாக ஐம்பதுகள், அறுபதுகள் வழியே தாவிச் சென்று எழுபதுகளில் வேறு பாதையில் தனது நீரோட்டத்தை கண்டுகொண்டன. இந்தப் புதிய வெளிச்சத்திற்கு  நம் மண் சார்ந்த நாட்டுப்புற இசைக்கு ஒரு மையமான இடமிருக்கிறது. எழுபதுகளில் தமிழ்த்திரை கூண்டை விட்டு வெளியே வந்த பறவை போல புதிய உற்சாகத்தில் சிறகடித்தது.

     யாரும் தொடாத கதைக் களம், திரைக்கதையில்  திருப்பம், நாடக வாசனையை துறந்த இயல்பான வசனங்கள், எளிமையான நடிப்பு, யதார்த்தமான காட்சி நகர்த்தல்கள் அதற்கான சரியான இசையமைப்பு போன்ற சினிமா தொழில் நுட்பங்கள் எழுபதின் இறுதியில் தமிழ்த் திரைக்கு நவீன அலங்காரம் கொடுத்தது. இதில் அதிகமாக பலனடைந்தவர் பாரதிராஜாவை விட இளையராஜாதான். அவருடைய புதிய பாணி இசை இந்த மாற்றத்தில் தனக்கான அலையை தேர்ந்தெடுத்து, அதன் மீது வியாபார  வெற்றியின் துணையுடன் ஒய்யாரமாக சவாரி செய்தது.  பலருக்கு எண்பதுகள்  என்பது இளையராஜாவின்  காலம்.  மறுப்பதற்கில்லை.

     தவிர, எம் எஸ் விக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கான விடை இளையராஜா மூலம் கடைசியாக வந்துவிட்டதாக கருதப்பட்டாலும், எம் எஸ் வியின் வியாபார உச்சங்களை விட  இன்னும் பல அடிகள் மேலே சென்றாலும், பல லார்ஜெர்-தேன்-லைப் ஆராதனைகளின் கருப் பொருளாக இருந்தாலும், குவாலிடி மியுசிக் என்ற வகையில் எம் எஸ் வி கொடுத்த இசைத் தரத்தின் அளவுகோளின் படி  பல படிகள் கீழே நின்றிருந்தார் இளையராஜா. வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து சுவைக்க முடிந்த அவரால் தமிழிசையின் தரத்தை அடுத்த மேலான இடத்திற்கு நகர்த்த இயலவில்லை. இந்த உண்மையை பலர் அறிந்திருந்தாலும்  அதை  வெளிப்படையாக அறிவிப்பதில் முரண்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

      எழுபதுகளின் இறுதியிலிருந்து தடம் மாறிய நமது இசை சில திகைப்புகளை திரைச் சரித்திரத்தில் பதிவுசெய்து கொண்டே வந்தது மறுக்க முடியாதது. நினைவோ ஒரு பறவை, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், இளமை என்னும் பூங்காற்று, உறவுகள் தொடர்கதை, நானே நானா யாரோ தானா  என அவ்வப்போது அறிவிப்பின்றி  தோன்றிய இளையராஜாவின் நியான்  வானவில்கள் சடுதியில் கரைந்துவிட்ட நிஜம் அவரது எண்பதுகளின் இசையில் வெளிப்படையாகத் தெரிந்தது. நீரில் நனைந்த கடிதத்தின் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்  தெரிவதைப் போல அங்கே இங்கே என சில சொற்பமான  சமயங்களில் அவர் இசையில் ஒரு குயிலின் உற்சாகம் தென்பட்டது. மீதமெல்லாம் இசையும், மெட்டுக்களும் மெலிந்துபோன பாடல்களே. எண்பதுகளின் மத்தியில் எதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த பாடல்களை random வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும். அதில் பலவற்றை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டிருக்க முடியும். இப்படியெல்லாம் கூட பாட்டு அப்ப வந்துச்சா? என்ற கேள்வி ஒரு நிச்சயமான போனஸ்.

     எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவிடமிருந்து வரும் இசையை மிக எளிதாக கணிக்க முடிந்தது.  அவரிடமிருந்த அந்த திடீர் ஆச்சர்யங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் துவங்கின.  இடையிசை என்று சொல்லப்படும் சரணங்களுக்கு இடையேயான இசையில் அவர் அமைத்த புதிய வண்ணங்கள் ஒரே நிறத்தில் அலுப்பூட்டும் வகையில் இருந்தன. இளையராஜாவின் மரபான ஒரே மாதிரியான புல்லாங்குழல், பிறகு சரசரவென இழையும் வயலின்கள் சில சமயங்களில் ஒற்றை வயலின் ஓசை, திடுமென தொடர்பேயில்லாமல் ஒரு பதிமூன்று நொடிகளுக்கு  ஒலிக்கும் கிடார் கார்ட்ஸ், பின்னர் வழக்கமான தபேலா என அவர்  பாணி சுருங்கியது.  கொஞ்சமும் பாடலின் போக்கிற்கு உதவி செய்யாத தொடர்பற்ற இடையிசை ஒரு ஆனந்தப் பாடல் கொடுக்கவேண்டிய முழுமையான அனுபவத்தை முப்பது வினாடி சுகங்களாக மாற்றிப்போட்டது. இசைத் துணுக்குகளாக பாடல்கள் உடைந்தன.  "பாட்டு சுமார்தான். ஆனா மியுசிக் அருமையா இருக்கு." என அப்போது பலர் சொல்லும் விமர்சனம் என்னுடைய இந்தக் கருத்தை உறுதி செய்வதாக நினைக்கிறேன். மேலும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட விரிசல் அவர் இசையில் இருந்த கவிதையின் தரத்தை சுக்கல் சுக்கலாக உடைத்தது. இல்லாத நல்ல கவிதையின் வெற்றிடத்தை வெறும் வாத்தியங்களை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று ஒரு இசையமைப்பாளர் தீர்மானித்ததன் விளைவு எதிர்பாரா இசைச் சரிவு.

   சிலர் அதாவது வெகு சிலர் அதாவது உண்மையான இசை அனுபவம் வசப்படாத வெகு வெகு சிலர் இந்த இசைக் கோபுரங்கள் சரிந்த எண்பதுகளை நம் தமிழிசையின் பொற்காலம் என்று வர்ணிப்பதுண்டு. இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் சொல்ல விரும்பினாலும் அந்தப் பிரமாண்டமான பொய்யை சற்று வேறு வார்த்தைகள் கொண்டு விவரிக்கலாம் என்று தோன்றுகிறது.  இது ஒரு மாய பிம்பம். அதாவது ஒரு குழந்தைக்கு தான் பார்க்கும் காட்சிகளே உலகமாகத் தெரியும் ஒரு முதிர்ச்சியற்ற புரிதல். முதல் முறையாக பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் ஒரு சிறுவனுக்கு மரங்களும் கட்டிடங்களும் நகர்வதாகத் தோன்றும் illusion போன்றது. எண்பதுகளை சிலாகிக்கும் கூட்டத்தினரை காணும்போது "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி" என்று அறுபதின் ஆரம்பத்தில் ஒலித்த ஒரு குரல் உணர்த்தும் அந்த வலிமையான உண்மையே நினைவுக்கு வருகிறது.

     துவக்கத்தில் ஒரு டப்பாங்குத்து இசையமைப்பாளர் என்று மேட்டுக்குடி விமர்சகர்களால் பரிகாசிக்கப்பட்ட இளையராஜா தன் மீதான இந்த முத்திரையை மேற்கத்திய தூரிகைகளால் வரைந்த ஓவியம் போன்ற  பல நளினமான பாடல்கள் மூலம் உடைத்தெறிந்து தன் ஆளுமையை வியக்கத்தக்க வகையில் பதிவு செய்தார். இளையராஜாவுக்கு  வெஸ்டெர்ன் மியுசிக் வராது என்று கிண்டலடித்தவர்களின் தாடையைப்  பெயர்த்தது என் இனிய பொன் நிலாவே, சின்னப் புறா ஒன்று போன்ற சிலிர்ப்புகள். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் எடுத்த சுவடுகள் மிக சிரமமானவை. வலி மிகுந்தவை.  சொற்பமான இசை வாத்தியங்களை வைத்தே அவர் அமைத்த பல பாடல்கள் இளைய தலைமுறையினரை போதையேற்றின. இளையராஜாவுக்கென கைதட்டும் ஒரு புதிய ரசிக வகையினர் தோன்றினர். எண்பதுகளில்  காலம் அவர் கரங்களில் தமிழ்த் திரையிசையின் கடிவாளங்களை ஒப்படைத்தது. இளையராஜாவின் தனிக் காட்டு ராஜ்ஜியம் ஆரம்பித்தது. மைடஸ் டச் என்னும் தங்கத் தொடுகை அவருக்கு வசப்பட்டது. வணிக வெற்றிகள் அவரது சாதனைகளாக இடம்பெற்றன.  இருந்தும் அவரது இசையில்  ஒரு வெற்றிடம் வியாபித்திருந்தது. அதை எந்த இசை கொண்டும் அவரால் நிரப்ப இயலவில்லை.

      எம் எஸ் வி யுடன் முடிந்துபோன அந்த மகத்தான இசைப் பாரம்பரியத்தையும் , இசையின் அழகியலையும், மெட்டுக்களின் மேதமையையும், காலங்கள் போற்றும் கனிவான கானங்களின் நீட்சியையும், சிந்தனைக்கு சுவையூட்டிய  கவிதை மரபையும், பாதுகாக்கவேண்டிய சாலைகளையும், மெருகேற்றவேண்டிய சோலைகளையும் எண்பதுகளில் இளையராஜாவின் இசை சாதித்ததா என்ற கேள்வி இப்போது எழுகிறது.


   ஒரே சொல்லில் இதற்கான பதிலை என்னால் சொல்ல முடியும். இருந்தும் சில கொடூர விபத்துக்களை அவ்வளவு எளிதாக ஒரே வரியில் விமர்சனம் செய்துவிட்டு கடந்து போவது உகந்ததல்ல.






அடுத்து; இசை விரும்பிகள்-XXXI --     இசையுதிர்காலம் II .


28 comments:

  1. காரிகன்
    வழக்கமான வசைபாடும் பதிவு .
    கவிதை ,கதை என வார்த்தை ஜாலம் காட்டுவதை வேறு வகையான கட்டுரைகளைப் பதிவிடுவதில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் .அதைவிடுத்து நீங்கள் பழைய பல்லவியே பாட எங்களுக்கும் சலிப்பையே ஏற்படுத்துகிறது.
    தமிழிசையின் தரம் குறித்த அளவுகோலைத் தெளிவாக்கினால் நலமாக இருக்கும்.இசையின் உச்சம் தொட்ட எம் எஸ் வி ,யின் இசைமீது தீராக் காதல் கொண்டிருந்தால் தைரியமாக அவரின் இசைமேன்மையை தளத்தில் பறைசாற்றுங்கள்.அவரவர் விருப்பங்கள் ,பாதித்த நிகழ்வுகள் பதிவுகளாய் தளத்தில் பதியப்படுகின்றன .இளையராஜாவின் இசைமேன்மையை பதிவிடுபவர்கள் எம் .எஸ் வி போன்றோரின் இசையைப் பழித்ததாய் எனக்குத் தோன்றவில்லை. அந்தந்த காலகட்டங்களில் வெவ்வேறு இசையைப்பாளர்களின் இசை உச்சம் தொட்டிருக்கிறது . 70களில் எம் எஸ் வி 80களில் இளையராஜா 90களில் ஏ .ஆர் .ரஹ்மான் . தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் ஜி.வி பிரகாஷ் அனிரூத் சந்தோஷ் சிவன் என புற்றீசல் போலஇசையமைப்பாளர்கள் வளரந்துகொண்டுதானிருக்கிறார்கள்.நாற்பது ,ஐம்பது களின் இசையைவிடுத்து . எம் எஸ் வி யின் இசையால் தாங்கள் ஈர்க்கப்படும் போது எண்பதுகளின் ஏகாந்தமாய். ஏற்றம்பெற்ற இசைஞானியின் இசைமேன்மையை இவரின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிடுவதில் தங்களுக்கு ஏனிந்த எரிச்சல் ?

    ReplyDelete
  2. //இசையுதிர்காலம்//

    Interesting word.
    Did you create the word?. Anyway beautiful new word.

    ReplyDelete
  3. காரிகன், மீண்டும் ஒரு ஆழமான அலசலோடு, 'இணையத்து வல்லரக்கர்களுக்கு' பயப்படாமல், தயங்காமல், 'எனக்குத் தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் எந்த விஷயமும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் நான் இணைய காலத்தவன்' என்ற சுயகர்வம் ஹோலிப் பண்டிகையில் வெள்ளைச்சட்டையை முழுமையாக நனைத்துக்கொண்டு வந்து நின்று எனக்கு இணையான வண்ணம் கொண்டவர்கள் யாருமில்லை என்று தனக்குத்தானே சுயமோகம் கொண்டு பிதற்றித் திரிபவனைப்போல் பேசிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் அழகான தைரியமான பதிவை வைத்திருக்கிறீர்கள். இங்கே இணையத்தில் சில 'ஸ்தாபிக்கப்பட்ட பிம்பங்கள்' உண்டு. அதில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் அதிலிருக்கும் உண்மைகளை உணர்ந்துகொள்வதில் எடுத்துக்கொள்ளும் காலம் என்பது சாதாரணமானது அல்ல; மிக நீண்ட நெடிய காலம்தான் அவர்கள் கண்களைத் திறக்கிறது.. அப்படியே கண்கள் திறந்துவிட்டாலும் உணர்ந்துகொண்டுவிட்ட உண்மைகளைச் சொல்வதற்கு அவர்கள் மனது இடம் கொடுப்பதில்லை. 'நான் இவ்வளவு நாட்கள் எழுதிக்கொண்டிருந்தது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்' என்று பேசாமல் இருந்துவிடுகிறார்கள். அவர்கள் இப்படிப் போய்விடுவதற்கு அவர்கள் வெட்கப்பட்டுப் போய்விட்டதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். போகட்டும்.
    இதை ஏன் சொல்லவருகிறேன் என்றால் நீங்களும் நானும் இ.ராவைப் பற்றி எழுத ஆரம்பித்தபிறகு இணையத்தில் பலருடைய எழுத்துக்கள் மாறியிருக்கின்றன. ஏதேதோ கூவ வந்தவர்கள் கூவ ஆரம்பித்து தங்கள் குரலை 'குறுக்கிக்' கொள்வதை நீங்கள் வெளிப்படையாகவே காணலாம். குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் அந்த சிம்பொனி விஷயம். இப்போதெல்லாம் அதைச் சொல்லவருகிறவர்கள் நெளிகின்ற நெளிவையும், குழைவையும் பாருங்களேன். வேடிக்கையாக இருக்கிறது.அப்படியில்லாவிட்டால் சிம்பனி அமைத்தார் புரட்டினார் இசை மாளிகையைத் தகர்த்தார் என்று என்னென்னவோ கூவி இருப்பார்கள்.
    தினத்தந்தியில் சனிக்கிழமை தோறும் ஒருவர் தமிழ்த்திரையுலகம் பற்றி எழுதி வருகிறார். உண்மையில் மிக ஆழமாக பாராட்டத்தக்க பணி. ஆனால் எம்எஸ்வியைப் பற்றி எழுத வந்தபோது மட்டும் கூனிக்குறுகி முழுக்க முழுக்க இ.ராவைப் பற்றி எழுதிவிட்டு இந்த இ.ராவே போற்றியவர் எம்எஸ்வி என்பதுபோல பேருக்கு சில பாராக்களை எழுதிவிட்டு 'முடித்துக்கொள்கிறார்'. இம்மாதிரியான செயல்களைப் பார்க்கும்போதுதான் நாம் இருவரும் போகவேண்டிய தூரம் இன்னமும் நிறைய இருக்கிறதென்பது புரிகிறது. தொடர்ந்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. \\வறட்சிக் காற்று.
    உடைந்த சிற்பம்.
    உயிரற்ற ஓவியம்.
    ரசம் போன கண்ணாடி,
    கம்பிகள் அறுந்த வீணை.
    அணையும் விளக்கு.
    கிறுக்கல் கவிதை.
    குளத்து மீன்கள்.
    காகிதப் படகு.
    சுவையற்ற உணவு.
    புகை மேகங்கள்.
    குறுகலான சாலைகள்.
    கூரற்ற கத்தி.
    அந்தி வெளிச்சம்.
    கண்ணாடிப் பூக்கள்.
    போன்சாய் மரங்கள்.
    உதிர்ந்த இலைகள்.\\- ஒரு கவிஞன் கட்டுரை எழுதினால் அது எப்படி இருக்கும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இந்த வரிகள். இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிது நேரம் மனம் செலுத்தி யோசித்தாலேயே நீங்கள் சொல்லவந்த கட்டுரையின் முழுச்சாரமும் புரிந்துவிடுகிறது.

    \\எங்கும் வியாபித்திருக்கும் இசை என்ற மகத்துவத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இவரைவிட்டால் இசையே இல்லை என்ற மகா ஆணவத்தை பத்து வருடங்களாக பதிவு செய்ய விழைந்த அநாகரீகம், துர்பாக்கியம், செருக்கு, சுயபாராட்டல்கள் எண்பதுகளை நிரப்பின. இந்த விஷக் காற்றில் நமது மரபான நல்லிசை நலிந்து நம் திரையிசை மழை காணா பாலைவனமானது.\\
    இது ஒரு அற்புதமான அப்பட்டமான படப்பிடிப்பு.

    \\அப்போது வந்த பாடல்களில் பலவும் வேர்களற்ற, பொறுப்பற்ற, கண்ணியமிழந்த வெறும் filler இசை போலவே எனக்குத் தோன்றியது. நம்மைச் சுற்றி உலகில் நிகழ்ந்த ஒரு மாபெரும் இசைப் புரட்சியின் நிழலை, அந்த இசையின் வெடிக்கும் பரிமாணத்தை ஒரு அங்குலம் கூட நம்மிடம் கோடிட்டுக் கூட காட்டாத வெறும் வறட்சியான சக்கைப் போன்றதொரு இசை மட்டுமே அப்போது தமிழில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தது. அதை மட்டுமே கேட்டு வளர்ந்த ஒரு தலைமுறை என்னைப் பொறுத்தவரையில் இசையின் உண்மையான தொடுகையை தவற விட்டவர்கள் என்றே கருதுகிறேன். ஆக்ஸிஜன் இல்லாத இசையை அவர்கள் சுவாசித்ததாக சொல்வதுகூட பொருத்தம்தான். அவர்களுக்கு எண்பதுகளுக்கு முன் நம் தமிழ்த்திரையிசை எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் தெரியாது. எண்பதுகளில் உலக இசை எவ்வாறு அதீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதைப் பற்றியும் அக்கறை கிடையாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற ரகத்தைத் சேர்ந்தவர்கள்.\\

    ஆமாம், நானெல்லாம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில்தான் திரைஇசையைப் பற்றி அறிந்துகொள்ள நேர்ந்தவன் என்றாலும் எனக்கு முந்தைய தலைமுறை எப்படி இருந்தது? அங்கே அப்போது இருந்த மகான்கள் யார்? அவர்கள் செய்த மகத்தான இசைத் தொண்டு எப்படிப்பட்டது? அவர்களின் சாதனை என்ன? திறமை என்ன? என்பதையெல்லாம் தேடித் தேடி அறிந்துகொள்வதிலும் அதில் வியப்பதிலும் ஆர்வமாக இருந்தேன். என் தலைமுறையினரும் அப்படித்தான் இருந்தனர்.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற இறுமாப்பில் அந்தத் தலைமுறையினர் இல்லை.

    \\எண்பதுகளைச் சார்ந்த பலரின் பார்வையில் இதுபோன்ற பிழை நோக்கு ஒரு யதார்த்தமான தவறு. அவர்கள் தான் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பை ஒரு பொது விதியாக கட்டமைத்துக்கொள்வதோடு அந்தப் புனைவை உண்மையென மற்றவர்களை நம்பவைப்பதில் தீவிர ஈடுபாடு காட்டுகிறார்கள். இணையத்தில் இது மிக மலிவாகக் காணப்படுகிறது. சிலர் ஒரு hidden agenda போல தாங்கள் ரசித்ததை ஒரு கோட்பாடாக திணிக்க எத்தனித்து, ஏற்கனவே படைக்கப்பட்ட பழைய சாதனைகளையும், அந்தப் பழமை நிறுவிய மகத்துவங்களையும் ஒரேடியாக நிராகரிக்கிறார்கள். வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வுகளும், பேருந்து பயணத்தில் ஆன்மாவை தொட்ட தருணங்களும், விஸ்தாரமில்லாத விவரங்களும், தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் மீது பரிச்சயம் இல்லாமல் அவர்களால் பெரிய எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் எங்க ஆள் மாதிரி வருமா என்று முஷ்டி மடக்குவதைப் போல இந்த வகையினர் அதே பக்குவமற்ற சிந்தனைக்குள்ளிருந்து வெளியே வரமறுக்கிறார்கள்.\\

    இதைவிடவும் அழகாக இந்த இணையப்புலிகள் பற்றிச் சொல்லமுடியுமா என்ன?

    ReplyDelete
  5. பி.சுசீலாவின் மேன்மைகள் பற்றிச் சொல்லுகிறீர்கள் இல்லையா? ஆனானப்பட்ட பி.சுசீலா பற்றியும் டிஎம்எஸ் பற்றியுமே அடுத்துவந்த தலைமுறை கவனிக்காது எனும்போது இன்றைய நேற்றைய குறுகிய புகழ் சிற்றரசர்கள் பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. இவர்களை அடுத்துவரும் காலம் தூக்கிப்போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கும்
    என்ற காலத் தத்துவம்தான் மனதிற்கு உவப்பளிக்கிறது.

    \\நீரில் நனைந்த கடிதத்தின் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிவதைப் போல அங்கே இங்கே என சில சொற்பமான சமயங்களில் அவர் இசையில் ஒரு குயிலின் உற்சாகம் தென்பட்டது. மீதமெல்லாம் இசையும், மெட்டுக்களும் மெலிந்துபோன பாடல்களே. எண்பதுகளின் மத்தியில் எதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த பாடல்களை random வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும். அதில் பலவற்றை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டிருக்க முடியும்.\\

    இ,ரா பற்றிய என்னுடைய அப்பட்டமான கருத்து இதுதான். இதுமட்டும்தான். இதனை இவ்வளவு அழகிய வரிகளில் ரத்தினச்சுருக்கமாகச் சொன்னதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
    மேலும் எழுதுங்கள்.

    ReplyDelete
  6. தாழையாம் பூமுடித்து பின்னணியில் ஒலிக்க இந்த பின்னூட்டத்தை தட்டுவது கொஞ்சம் முறுவலை வரவழைக்கிறது...


    உங்கள் பதிவுகள் மனதில் பெர்கொலேட் ஆகி பல்வேறு அனுபவங்களை தருகின்றன..

    பொங்கிப் பிரவகிக்கும் கருத்துக்களை உடனே பதிவிடுவது நல்லதல்ல என்பதால் நிறுத்தி நிதானமாய் இந்தப் பதிவு ..

    விங்க்ஸ் ஆப் பையர் என்கிற கலாமின் சுயசரிதையை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துப் போனது ..

    நூல் வெளிவருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் மாணவர்களுக்கு எடுத்த ஒரு பாடலின் தலைப்பு அது.

    விங்க்ஸ் ஆப் பயர் என்றால் ராக்கெட் என்பது நினைவில் ஒரு கவிச்சித்திரமாக இருந்ததும் காரணமாக இருக்கும் - முக்கியமான காரணம் அதுதான் ...

    அந்த நூலின் ஆங்கிலப் பதிப்பில் எடுத்தாளப்பட்ட கவிதைகள்-- கலாம் அவர்களின் தவவாழ்வு எல்லாம் ஒரு அற்புத வாசித்தல் அனுபவத்தையும்- கலாம் குறித்த ஆராதனையையும் எனது மனதில் எழுப்பியது.

    சில மாதங்கள் கழித்து அது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.

    நான் ரசித்த ஆங்கிலக் கவிதைகள் எப்படி தமிழில் வந்திருக்கின்றன என ஆவலாக எடுத்துப் படித்தேன் ...

    மூலத்தை படிக்கும் பொழுது இருந்த ஒரு அற்புத உணர்வு மொழியாக்கத்தில் இல்லை ..

    இதை குறித்து சிலகாலம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூலத்தை படியுங்கள் என்று சொல்லி, மொழியாக்கம் அதே உணர்வுகளை தருவதில்லை என்பதை சொல்லியிருந்தேன்.

    அப்படி ஒரு உரையாடலில் மூத்த விரிவுரையாளர் ஒருவர் கணங்கள் துடிக்க மூக்கு சிவக்க என்னிடம் கேட்டார் ' நீங்கள் ஆங்கில ஆசிரியர் படிப்பீங்க நாங்க என்ன பண்றது ?"

    என்னை வெகுவாக சிந்திக்கவைத்த எதிர்வினை அது...

    உண்மையில் உலகை என் கண்ணாடியை கொண்டே பார்த்துவந்திருக்கிறேன் நான் ..

    எனக்குத் தெரிந்ததை கொண்டாடும் வேளையில் அடுத்தவர்களால் புரிந்துகொள்ளவோ, உணரவோ முடியாத விசயங்களை மேன்மைப்படுத்தி பேசி அவசியமே இல்லாத ஒரு பெரும் இடைவெளியை எனக்கும் அவர்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன்.

    அதன் பின்னர் எனது கருத்துக்களை மென்மையாக வைக்க கற்றுக் கொண்டுவிட்டேன்.

    ஏன் எனக்குக் கர்நாடக சங்கீதம் உவப்பாக இல்லை ?
    கர்நாடகம் புரியாத தெலுங்கு கீர்த்தனைகளை பாடி இசையை நம்மிடம் இருந்து அன்னியப் படுத்துவதாக நான் உறுதியாக நம்பிய நாட்களும் உண்டு...

    ஒருமுறை நண்பர் ஹபீப் நத்தர் வறண்டு போன புதுகை வெள்ளாற்றின் மணல்வெளியின் நடுவே இருந்த பாறை திட்டுக்கள் மேலே அமர்ந்து "சாமஜ வர கமணா" எனப் பாடி எனது மயிர்க்கால்களை குத்திட்டு நிற்க வைத்தது கர்நாடக சங்கீதம் குறித்த எனது மனப்பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்கியது.

    இசை என்கிற அற்புதம் கேட்டு உணர்ந்து லயிக்க வேண்டிய ஒரு வரம் அல்லவா?

    எனக்கு பிடித்த கானங்களின் உயரம் எனது நண்பன் ரசிக்கும் கானங்களில் இல்லாது போகலாம் ...

    அவரது சூழல், கலாசாரம், வளர்ப்பு, அனுபவம் ஆகிய பல காரணிகளின் தொகுப்பு அவரது ரசனை.

    நான் அவரது ரசனையை குறித்து பதிவிடும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை.

    அதை விடுத்தது அவரை ஒருபோதும் நான் கையறு நிலையில் தள்ளமாட்டேன். ஒரு இயலாமை உணர்வை வரவழைக்கும் பதிவுகளை நான் எழுத மாட்டேன்.

    மாறாக எது இசை என்கிற பதிவுகளை எனது அனுபவங்களை மட்டுமே பகிர்வேன்.

    அவர்களுக்கு அந்தப் பாடல் எப்படி இருந்தது என்பதை கேட்டறிவேன்.

    செம மொக்கடா என்றால் அதையும் சிரித்துக் கடப்பேன்.

    இவை எல்லாவற்றையும் விட சமயத்தில் நானுமே பொதுப்புத்தியை கடும் அதிர்வுக்கு உள்ளாக்கும் பதிவுகளை எழுதியே இருக்கிறேன், எழுதவும் இருக்கிறேன் ...


    நாம் ஒரு விசயத்தில் ஒன்றாகத்தான் இருக்கிறோம்

    உங்களுக்கு இசை ஆராதனை, எனக்கு சமத்துவத்துக்கு எதிரான மனுவின் கொள்கைகள்,

    தொடர்ந்து நண்பர்கள் ஏன் பிராமணர்களை துவேசிக்கிரீர்கள் என்று நேரிலேயே கேட்டாலும் என்னை மீறி பதிவாகிவிடுகின்றன கருத்துக்கள் ..

    எனது துவேஷம் என்னை ஒரு பதிவராக என்னை வைத்திருக்கிறது என்பதும் உண்மைதான்.

    உண்மையில் மனிதத்திற்கு ஆதரவாக பேசினால் அதை தவிடுபொடியாக்கும் சக்திகளை சாடவேண்டியது அவசியமாகவே இருக்கிறது, ஆனால் இபோதும் எனக்கு பிராமண நண்பர்கள் உண்டு, அவர்களும் என்னுடைய கருத்துக்களுக்கு உடன்படுகிறவர்களாகவே இருகின்றனர்.

    நான் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்களின் அனுபவத்தில் ஆகச் சிறைந்த இசை அனுபவத்தை கொடுத்த பாடல்களில் அவற்றின் லிங்க்குகளுடன்..

    ஒரு பத்துப்பதிவை தாருங்கள் இப்படி...

    அதிகம் பேசியிருந்தால் பொருத்தருள்க.

    ReplyDelete
  7. இன்னொரு விசயம்

    உங்கள் எம்.எஸ்.வி ஆராதனை ஏ. இசட் என்கிற ஆன்ராய்ட் செயலியை நிறுவி தொடர்ந்து பழைய பாடல்களை கேட்டு வருகிறேன்...

    நீங்கள் ரசித்த உலகின் இசை ஆளுமைகளைக் குறித்து தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அருள் ஜீவா ,

    உங்களைப் பார்த்தால் ஸ்டார் பக்ஸ் சென்று இங்கே ஏன் எப்போதுமே காபி மட்டுமே செர்வ் செய்கிறீர்கள் என்று கேட்பீர்கள் போல தெரிகிறது. தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் நல்ல சைவ சாப்பாடு கிடைக்குமா என்று எதிர்பார்கிறீர்கள்.

    தலைப்பிலேயே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெரிவித்துவிட்ட பிறகு வேறு எதை நீங்கள் நம்பி என் பதிவை பொறுமையாக படித்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தும் சலிப்பூட்டும் பதிவுக்கு முதல் ஆளாக உற்சாகமாக பதில் எழுதியதற்கு நன்றி.

    உங்களைப் போன்றவர்கள் என்ன சொன்னாலும் வசை இத்தோடு முடியப்போவதில்லை.

    சிறிய திருத்தம்.. புதிய இசையமைப்பாளர்கள் பலர் இப்போது வந்திருக்கிறார்கள் என்கிறீர்கள். அதில் நீங்கள் குறிப்பிட்ட சந்தோஷ் சிவன் எனக்குத் தெரிந்தவரை ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமே. நீங்கள் சொல்ல வந்தது சந்தோஷ் நாராயணனாக இருக்கலாம். அவர்தான் இப்போதைய சூழலில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் தருகிறார்.

    ReplyDelete
  9. welcome Alien,

    இலையுதிர்காலத்தில் இரண்டாவது எழுத்தை மாற்றிப் போட்டால் வருகிறது இசையுதிர்காலம். இளையராஜாவின் இசை குறித்த எனது பார்வையின் ஒரே விமர்சனக் குறியீடு.

    சொல்லப்போனால் நீண்ட நேரம் யோசித்து உருவாக்கிய தலைப்பு. அதை அங்கீகரித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  10. வாருங்கள் அமுதவன்,

    உங்களுக்கான பதிலை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நானும் மூன்று பத்திகள் எழுதவேண்டுமல்லவா?

    ReplyDelete
  11. அமுதவன் ஸார்,

    இராவின் இசையை விமர்சிப்பவர்கள் வெகு குறைவு என்றொரு எண்ணத்தை இணையத்தில் காணமுடிகிறது. இது உண்மையல்ல. நிஜத்தில் நான் பலருடன் விவாதிக்கும்போது பெரும்பாலானவர்கள் என்னுடன் அதிகம் வேறுபடுவது கிடையாது. தற்போது வீதிகளில் மைதானங்களில் எல்லோருமே கிரிக்கெட் விளையாடுவது போல இளையராஜா என்றால் எல்லாமே அருமையான பாடல்கள் என்ற பொத்தாம்பொதுவான சிந்தனைக்குட்பட்டவர்கள் நம் ஆட்கள். சிலரே சற்று ஆழமாக சென்று தகவல்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இணையத்தில் நேரடி விவாதம் இல்லை என்பதால் பின்னூடங்களில் கண்டபடி ஏசி திட்டி சிலர் தங்களின் கோபத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். நான் சிலருக்கு கதவடைத்ததும் அவர்கள் வேறு தளம் சென்று அங்கேயும் என்னைப் பற்றி வம்பளந்து கொண்டிருக்கிறார்கள். கோமாளிகள்.

    எம் எஸ் வி குறித்து சிறப்பாக எழுதும் நண்பர்கள் கூட இளையராஜாவுடனான ஒப்பீடை ஏனோ தானோ என்று கடந்துசெல்வதைப் பார்க்க முடிகிறது. சிம்பனி, இடையிசை, முன்னணியிசை, பின்னணி இசை என்று வகை வகையாக கற்பனைக் கதம்பங்கள் கட்டுவதில் இராவாசிகள் சளைத்தவர்களல்ல. இளையராஜா இப்படி உட்கார்ந்தார், இப்படிச் சிரித்தார், இந்தக் கையில் நோட்ஸ் எழுதினார், இந்தப் பக்கம் பார்த்தார் என்றெல்லாம் எழுதி அதற்கு தாங்கள் இசையை ரசிப்பதாக கூறிக்கொள்ளும் ஆட்களும் இங்கே உண்டு.

    ReplyDelete
  12. -----தொடர்ச்சி----

    பொதுவாக நான் தலைப்புகளுக்கு மேலே கொடுக்கும் வரிகள் குறித்து விமர்சனங்கள் வந்ததில்லை. ஒருமுறை நண்பர் சாமானியன் சாம் இதுபற்றி குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். தற்போது நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான். ஒவ்வொரு வரிக்கும் ஒரு பாரா எழுதலாம்.

    சிலரோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் ஆங்கில இசை கேட்பதுண்டு என்பார்கள். அப்படியா என்னவெல்லாம் கேட்பீர்கள் என்றால் உடனே மைக்கல் ஜாக்ஸன் என்று பதில் வரும். ஆங்கில இசை வெறும் டமார் இசைதானே ஒழிய அதில் மெலடியே கிடையாது என்று உடனே குற்றம்சாட்டுவார்கள். மைக்கல் ஜேக்சனை வைத்து ஆங்கில இசையின் ஆழத்தை "கச்சிதமாக" அளந்துவிடும் அவர்களைப் போன்றவர்கள் நிறைய இருக்கிறார்கள். இதுபோலவேதான் இரா இசையை வைத்து மற்றவர்களை ஏளனம் செய்வதும்.

    நானும் இரா பாடல்களை விரும்பி ரசித்துக் கேட்டு ஒருகட்டத்தில் என்ன இசை இது என்று வெளியேறி வந்துவிட்டேன். பழைய சுவடுகளை தேடிப் பிடிப்பதில் உள்ள ஆர்வம் நமது இசை பற்றிய சிந்தனைக்கு வழிவகுத்தது. அப்படி பின்னோக்கி பயணித்ததில் பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. ஜி ராமநாதன், டி ஆர் பாப்பா, சுப்பையா நாயுடு, எ எம் ராஜா என்று துவங்கி நடைபயின்றதில் இந்த இரா இணையப் புனைவு உடைபடவேண்டிய ஒன்று என்பது விளங்கியது. மற்றவர்கள் போல் ஒதுங்கிச் செல்ல எண்ணினாலும், பல சமயங்களில் எனது கருத்தை தெரிவிப்பதில் தயங்கியதில்லை. இராவை விமர்சிப்பதையே இரா எதிரி என்று முடிச்சு போடும் சில இராவாசிகள் என்னைக் குறித்து தெரிவிக்கும் "பண்பான" உரையாடல்கள் படிக்க வேடிக்கையாக இருக்கும். அதையும் ரசித்துவிட்டு கடந்து போய்விடுகிறேன். அவர்கள் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

    ReplyDelete
  13. காரிகன்

    ஆழமும் அழுத்தமும் நிறைந்த வார்த்தைச் செறிவுகளோடு அற்புதமான கவி நடையில் கட்டுரை தந்தற்கு பாராட்டுகள். வார்த்தைகளில் சிந்தனைகளில் இருக்கும் விந்தையிலும் என்ன ஓட்டங்களிலும் கற்பனைகளிலும் கனம் இருந்தாலும் சொல்லும் செய்திகளில் கனமற்றுப் போனதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. நாஞ்சில் சம்பத் பேச்சு போல இருக்கிறது உங்கள் பதிவு. சிங்கம் போன்று கர்ஜனை செய்தவர் தற்போது ஒரு கட்சிக்காக அடிமைக் கோலம் பூண்டு பொய்களை கொஞ்சமும் சிரிக்காமல் பேசி வருவது போலதான் உங்கள் பொய்யான பதிவும் இருக்கிறது.


    சாலையே இல்லாத பாதையில் மண் சாலையை போட்ட இசைச் சாலைகளில் சுகமாக பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு , புதிதாய் தார்ச்சாலை போட்டபோது அதை விட சுகமான பயணம் கிடைத்தது . முன்னவர் போட்ட சாலைகளில் மீண்டும் புதுப் பொலிவாய் சாலையிட்டவர் இளையராஜாஎன்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தார்ச் சாலைகளுக்குப் பிறகு எத்தனையோ சாலைகள் போடப்பட்டிருந்தாலும் தார்ச்சாலையின் வரலாறு மறைக்க முடியாத ஒன்று என்பதை மறுக்கக் கூடாது .


    ஒன்றிரண்டு பாடல்கள் தவிர அத்தனைப் பாடல்களும் தரம் குறைந்தவை என்று வாய் கூசாமல் அரசியல்வாதிகள் போல வரலாறு மாற்றிப் பேசுவது இசை உலகத்திற்கு செய்யும் அநீதி. ராஜா இசையமைத்துக் கொண்டிருந்த அந்த எண்பதுகளில் எம் . எஸ். வி , கே. வி. எம். , வி. குமார் போன்றோரும் இசையமைத்துப் பார்த்தார்கள். ஏதும் எடுபடவில்லை என்பது அந்தக் காலத்தில் வாழ்ந்தோர் கண்ட சாட்சி. வித விதமான வார்த்தை ஜாலங்களோடு வரலாற்றை திரித்துப் பேசுவது ஒரு ' கலை ' என்று சொல்வதை விட உண்மைக்குச் செய்யும் 'கொலை ' என்று சொல்லலாம்.


    இலட்சோப இலட்ச மக்கள் கேட்டு ரசித்து இதயத்தால் அனுபவித்து மகிழ்ந்த இளையராஜாவின் பாடல்கள் என்பதுகளில்தான் உச்சத்தைத் தொட்டன. மக்களின் மனசுக்குள் நர்த்தனமாடிய மண் சார்ந்த பாடல்கள் எல்லோரது இதயங்களையும் ஈர்த்தன. அந்த மக்களின் ரசனைகளை மட்டப்படுத்திப் பேசும் மலிவான அரசியல் பேச்சு அருவெறுப்பானது. பெரும்பான்மை ஜனங்களின் ரசனையைக் கொச்சைப் படுத்துவது மலின யுக்தி .


    எண்பதுகளில் வந்தது இசையுதிர் காலம் அல்ல, இசையதிர்வுக்காலம்.

    சொல்லப்போனால் இசை உச்சம் தொட்ட காலம். அந்த பத்தாண்டு இசைச் சாதனையை காரிகன் மட்டுமல்ல எந்தக் கொம்பன் வந்து திரித்துக் கூறினாலும் அழிக்க முடியாது. வரலாறு பொய்யாகாது; திரித்து எழுதுபவனே பொய்யன். அழகான எழுத்து நடை என்றாலும் திரித்து எழுதும்போது அது திரிந்து போன பால் போலவே தெரிகிறது.
    வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போன்றது உங்களின் பதிவு. பார்க்கத்தான் அழகு . உள்ளே பொய்கள் புழுக்களாய் நெளிகின்றன.

    பழம்பெரும் பாடகி சரளா அவர்கள் சமீபத்தில் யாருடைய இசை பிடிக்கும் என்ற கேள்விக்கு இளையராஜா என்றுதான் பதிலுரைத்திருக்கிறார். கவனிக்க வேண்டும் அவர் 50, 60 களில் பாடியவர்.

    ReplyDelete
  14. சார்லஸ் அவர்களே,

    கடலுக்கு அருகில் ஒரு கிணறு இருந்தது. அந்த கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. அந்த தவளை பிறந்ததே அந்தக் கிணற்றில் தான். அங்கு தான் தவளை நெடுங்காலமாக வாழ்ந்து வந்தது. கிணற்றுக்கு வெளியே பரந்து விரிந்த ஒரு உலகம் இருக்கிறது என்ற உண்மை அந்தத் தவளைக்கு தெரியவே தெரியாது. ஏனென்றால், அது எப்போதுமே வெளியே சென்றது இல்லை. கிணற்றில் இருக்கும் சிறு சிறு பூச்சி புழுக்களைப் பிடித்து தின்று அது வாழ்ந்து வந்தது.

    ஒரு நாள் அந்த கிணற்றில் ஏதோ ஓன்று வந்து விழுந்தது. அது என்ன தெரியுமா? இன்னொரு தவளை தான் அது. இரண்டு தவளைகளும் ஒன்றை ஓன்று அறிமுகப்படுத்திக்கொள்ள தொடங்கின. கிணற்றுத் தவளை கேட்டது :

    "நீ எங்கிருந்து வருகிறாய்?"

    புதிய தவளை சொன்னது : "வணக்கம் நண்பனே! நான் கடலிலிருந்து வருகிறேன்.

    அதைக் கேட்டு கிணற்றுத் தவளை குழப்பமடைந்தது. "கடல்" என்றால் என்ன? அதை நான் பார்த்தது இல்லையே! கடல் என்பது இந்தக் கிணறு அளவு பெரிதாக இருக்குமா?"

    ஒரு ஏளனச் சிரிப்புடன் புதிய தவளை சொன்னது: "இல்லை நண்பா, கடலை வேறு எதனுடனும் ஒப்பிடுவது சிரமம். கடல் மிக மிக பறந்து விரிந்தது. இந்தக் கிணற்றை விட பல கோடி மடங்கு பெரிது."

    உடனே கோபம் வந்து விட்டது கிணற்று தவளைக்கு. அது கூச்சலிட்டது: "அடேய், நீ பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? நான் ஒன்றும் ஏமாளி அல்ல! நான் மிகவும் விவரமானவன். என் கிணற்றைவிடப் பெரிதான ஓன்று இந்த உலகத்திலேயே இருக்க முடியாது!"

    புதிய தவளை சமாதானமாகச் சொன்னது: "இல்லை நண்பா, நான் சொல்வது உண்மை தான். நீ என்னுடன் வந்தால், நான் உனக்குக் கடலை காட்டுகிறேன்.!"

    கிணற்றுத் தவளை திட்டியது: "நான் நல்லவன். உன்னைப் போன்ற பொய்யனுடன் வெளியே வந்தால் என் கெளரவம் என்னாவது? நீ உடனே இங்கிருந்து ஓடிவிடு. இல்லைஎன்றால், நான் உன்னை அடித்து நொறுக்கிவிடுவேன்.!"

    அதற்க்கு மேல் புதிய தவளை அங்கே இருக்கவில்லை. அது எப்படியோ வழி கண்டுபித்து அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அது சென்றவுடன் கிணற்றுத் தவளை உரத்தக் குரலில் சிரித்தது: "ஹா...ஹா...ஹா...! எங்கிருந்தோ வந்து என்னையே ஏமாற்றப் பார்க்கிறானே! நான் மிகவும் அறிவுடையவனாக இருந்ததால் ஏமாறாமல் தப்பித்தேன்! என் கிணற்றை விடப் பெரியது எங்குமே இல்லை என்பது தான் எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியுமே!


    இது விவேகானந்தர் சொன்ன கதை.

    இந்த கிணற்றுத் தவளை வேறு யாருமில்லை. நீங்கள் தான்.

    You neither accepted any music directors before 80's nor you are going to accept anyone who is going to come, since your mind has become saturated by Shri Mr. Ilayaraja.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்த் திரை இசை என்பதே ஒரு கிணறு அளவுதான். அதை விட்டு வெளியே உலக இசை என்பது கடல்தான் . மற்றவரின் இசையை கேட்காமலா பேசுவேன்!? நான் சொல்ல வந்தது 80 களில் தமிழ்த் திரையிசையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் யார் என்பதைத்தானே! மற்றவரின் இசை அதிகமாய் அந்தக் கால கட்டத்தில் பேசப்படவில்லை
      என்ற உண்மையை மறைத்துப் பேசக் கூடாது . அதைதான் சொல்ல வருகிறேன். 60 களில் மெல்லிசை மன்னர்கள் பேசப்பட்டார்கள். 80 களில் மக்கள் மனதில் நின்றவர் யார்? ஏன்? அதற்கு பதில் சொல்லுங்கள் ஏலியன் .

      Delete
  15. வாங்க மது,

    பொறுமையாகப் படித்தேன் உங்களது நீளமான ஆழமான கருத்தாக்கம் கொண்ட பின்னூட்டத்தை. அதை எழுதியற்கு நன்றி. படித்ததும் கொஞ்சம் வியப்பாகக் கூட உணர்ந்தேன். இப்படிக் கூடவா ஒரு இரா ரசிகர் நாகரீகமாக தனது எதிர்ப்பை வெளியிடுவார் என்று. ஏனென்றால் பல இரா விசுவாசிகள் இத்தனை முதிர்ச்சியுடன் அவரைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை கையாள்வது கிடையாது. எங்கள் இளையராஜாவை குற்றம் சொல்லிவிட்டாயா? நீ ஒரு பொய்யன்..முரடன்.. இன்னபிற அடைமொழிகள் நிறையவே கிடைக்கும்.

    Lost in translation என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பல உணர்சிகள் இந்த மொழி மாற்றத்தில் தொலைந்துபோவது ஒரு நடைமுறை விபத்து. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் wings of fire சம்பவத்தைப் படித்ததும் தோன்றியது இது. இருந்தும் நமக்கு எது பிடிக்கிறதோ அதுதான் பிடிக்கும். நீங்கள் மட்டுமல்ல எல்லோரிடத்திலும் சில விஷயங்களில் ஒரு பிடிவாத நிழல் படிந்திருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வெளியே வரும் பக்குவம் சிலருக்கு சாத்தியப்படுகிறது. நீங்கள் கூறிய அந்த கர்நாடக சங்கீத அனுபவமும் இதை உணர்த்தும் மற்றொரு தகவல் துளி.

    என்னைச் சார்ந்த இசை அனுபவங்களை மட்டுமே முன் வைத்து என்னால் ஒரு பொதுவான கருத்துக்கு உயிரூட்ட முடியாது. அப்படிச் செய்யும் பலரால்தான் நமது தமிழ்த் திரையிசை இளையராஜாவுக்குப் பிறகே பொலிவடைந்தது என்ற பொய்யை நம்பும் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் தங்களது புனைவை சரித்திரமாக்கத் துணிகிறார்கள்.

    ஒரு சராசரி இசை ரசிகனின் இசைத் தேர்வை விமர்சனம் செய்வது முற்றிலும் தவறு என்பதை உள்வாங்கிக் கொள்வதில் எனக்கு பிரச்சினைகள் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நமக்கு முன்னே இருந்த தலைமுறையினர் சுவாசித்த இசையையும், நமக்கு அடுத்து வந்த தலைமுறையினர் ரசிக்கும் இசையையும் நாம் விமர்சனதிற்க்குட்படுத்தக்கூடாத இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். உண்மையில் இரா ரசிகர்கள் அப்படியான பக்குவப்பட்ட இசைப் பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

    நான் செய்யும் விமர்சனங்கள் வெறுப்பினால் விளைந்தவை என்று இரா ரசிகர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் இதையேதான் அவர்கள் இளையராஜாவுக்குப் பின் வந்தவர்கள் பற்றி செய்கிறார்கள். ரஹ்மான் பற்றி அவர்கள் என்ன சிறந்த, நியாயமான விமர்சனத்தை நிறுவியிருக்கிறார்கள்? எம் எஸ் வி பற்றி அவர்கள் பேசுவதே கிடையாது. அப்படி எம் எஸ் வி போன்ற பழைய இசையமைப்பாளர்களை குறித்து புகழ்ந்து எழுதும் ஒரு " ராக ஊற்று" பதிவர் கூட இளையராஜா தனது குருக்களை மிஞ்சிய சிஷ்யர் என்று மனசாட்சியை புதைத்துவிட்டு இரா வழிபாடு செய்கிறார்.

    நமது பால்ய காலத்து ஞாபகங்கள் விலை மதிப்பற்றவை. அதை நாம் ஆராதிக்கும் அதே வேளையில் நமது முந்தைய சந்ததியினருக்கும் இதே போன்றதொரு விலை மதிப்பற்ற பால்யம் உண்டு என்ற எண்ணம் நமக்கு ஏன் வர மறுக்கிறது? அவர்கள் ரசித்ததையும், சிலாகித்ததையும் எதற்க்காக ஒரு மிக மலிவான ஏளனப் பார்வையோடு பார்க்கவேண்டும்? இசையை இசையாகவே உள்வாங்கும் எந்தஒரு ஆன்மாவும் இந்தத் தவறை எப்போதும் செய்யாது. அர்த்தம் புரியாத ஒரு அஸ்ஸாமிப் பாடல் என்னை உடைத்த கணம் எனக்கு நேர்ந்திருக்கிறது உங்களுக்கு அந்த புதுகை வெள்ளாற்றில் உங்கள் நண்பர் வஹீப் நத்தர் போதித்த புதிய புரிதலைப் போன்று.

    நீங்கள் இறுதியாக குறிப்பிட்டது போல என்னை அசைத்த இசை மேகங்கள் குறித்து நான்கைந்து பதிவுகள் எழுத நினைத்துள்ளேன். கண்டிப்பாக நீங்கள் அவற்றைப் படிக்கவேண்டும்.

    நீங்கள் அதிகம் பேசவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் நல்ல சிந்தனைகள் வலுப்பெறுகின்றன. எனவே நிறைய பேசுங்கள்.

    வருகைக்கு நன்றி. அடுத்த நன்றி பொறுமையாக எனது பதிலை வாசித்ததற்கு.

    ReplyDelete
  16. துணிச்சலான பதிவு. ஒவ்வொருவருக்கும் தங்கள் இளம்பிராயத்தில் கேட்ட இசையே மனதை ஆக்கிரமிக்கும். இசையில் எம்.கே.டி. எம்.எஸ்.வி,இலையராஜா,ஏ.ஆர்.ஆர் என ஒவ்வொருவரும் ஒரு ரகம். ஒப்பிடல் சரியாகாது. மிகையும் குறையும் ஒவ்வொரிடத்திலும் உண்டு. நான் என் தந்தை ரசித்த இசையையும் ரசிக்கிறேன்,என் மகன் ரசிக்கும் இசையையும் ரசிக்கிறேன்.
    ரசனை மனம் சார்ந்தது.

    ReplyDelete
  17. இளையராஜாவுக்கும் முன்னேயும் பின்னேயும் தமிழ்த்திரையுலகில் இசை ஜாம்பவான்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்தல் இயலாது.

    ReplyDelete
  18. துணிச்சலான பதிவு. ஒவ்வொருவருக்கும் தங்கள் இளம்பிராயத்தில் கேட்ட இசையே மனதை ஆக்கிரமிக்கும். இசையில் எம்.கே.டி. எம்.எஸ்.வி,இலையராஜா,ஏ.ஆர்.ஆர் என ஒவ்வொருவரும் ஒரு ரகம். ஒப்பிடல் சரியாகாது. மிகையும் குறையும் ஒவ்வொரிடத்திலும் உண்டு. நான் என் தந்தை ரசித்த இசையையும் ரசிக்கிறேன்,என் மகன் ரசிக்கும் இசையையும் ரசிக்கிறேன்.
    ரசனை மனம் சார்ந்தது.

    ReplyDelete
  19. வாங்க சால்ஸ்,

    பாராட்டுக்கு நன்றி. இத்தனை மென்மையாக தூரிகையை காகிதத்தில் தடவும்போதே தெரிந்துவிட்டது இறுதியாக அதே காகிதத்தை கசக்கி எறியப் போகிறீர்கள் என்று. எனவே எந்த அதிர்வும் இல்லாது உங்களது பின்னூட்டத்தைப் படிக்க முடிந்தது.

    எனக்கு அரசியல் கொஞ்சம் தூரம். எனக்கென சில திடமான கருத்துக்கள் இருந்தாலும் நான் தீவிர அரசியல் பேசுவதிலிருந்து என்னையே விலக்கி வைத்திருக்கிறேன். எனவே இந்த நாஞ்சில் சம்பத் உதாரணமெல்லாம் என்னை ஈர்க்கவில்லை.

    முட்புதர்களும் கற்களும் குடியிருந்த இடங்களில் சாலைகளை அமைத்தவர்களை ஒரு வரியில் பாராட்டிவிட்டு அப்படியான சாலைகளில் (இதில் தார் சாலை என்றொரு தனி வகை வேறு.) சுகமாக சொகுசாக வண்டி ஓட்டியவருக்கு பத்தி பத்தியாகப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுதான் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட நியாயம் போலும்.சாலைகள் வளர்ச்சி பெற்றால் அதையும் குறை சொல்கிறீர்கள்.

    இராவின் ஒன்றிரண்டு பாடல்கள் சிறப்பானவை என்பது சரியே. அதாவது வெகு குறைவான எண்ணிக்கையிலேயே இராவின் இசை சிறப்பாக இருந்தது என்ற அர்த்தம் கொண்ட வாக்கியம் அது. இந்தக் கருத்தை நான் எப்போதும் சொல்லிக்கொண்டுதானிருக்கிறேன்- புதிதல்ல.

    80களில் இசையமைத்த மற்றவர்களின் பாடல்கள் ரசிகர்களிடம் எடுபடவில்லை என்ற உங்கள் கருத்து ஒரு மோசடிக் கூற்று. காக்கைச் சிறகினிலே நந்தலாலா, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது, வைகைக் கரை காற்றே நில்லு, மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு என அவ்வப்போது சில தாலாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு சிறிய பட்டியல்தான். கருப்பு மின்னல்கள் என்ற தலைப்பில் நான் இதுபோன்று எண்பதுகளில் வெளிவந்த இரா இசையில்லாத அபாரமான பாடல்களைப் பற்றி எழுத இருக்கிறேன். வருடத்துக்கு முப்பது நாற்பது படங்களுக்கு இசையமைத்தால் கணித விதிகளின் படி மக்களை அதிகம் சென்றடையும் இசை யாருடையது என்ற கேள்விக்கான பதில் சுலபமே. அது இராவின் வேகம். அதை குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அது அவருடைய வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

    நீங்கள் மீண்டும் மீண்டும் வெற்றியையும் தரத்தையும் முடிச்சு போடுகிறீர்கள். ஒரு வெற்றி எப்பொழுதுமே தரத்தை நியாயப்படுத்தாது. மன்மதராசா பாடலும், ஒய் திஸ் கொலவெறி பாடலும் வெற்றிபெற்ற ஒரே காரணத்தினால் காவியங்களாகி விடுமோ? நான் குறிப்பிட்டது இளையராஜா எண்பதுகளில் வெற்றி பெற்றவராக இருந்தாரா இல்லையா என்பதல்ல. எண்பதுகள் என்றாலே சிலருக்கு அது இளையராஜா காலம். மறுக்க முடியாது என்று இந்தப் பதிவிலேயே நான் எழுதியிருப்பதை தாவி வந்துவிட்டீர்கள் போல. கொஞ்சம் நிதானித்து வாசிக்கவும். கீழே ஏலியனுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பதில் கூட இதேபோல ஒரு குழப்ப முடிச்சுதான்.

    என்பதுகளைச் சேர்ந்தவர்களின் இசை ரசனையை குறை கூறினால் உங்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால் உங்களைப் போன்ற இராவாசிகள் இராவுக்குப் பின் வந்த இசை குறித்தும் அதை ரசிக்கும் தலைமுறையினர் குறித்தும் அதே தவறைத் தானே செய்துகொண்டிருக்கிறார்கள். ரஹ்மான் ஒரு காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர். இப்பொழுது வருவதெல்லாம் பாடல்களே அல்ல என்ற விமர்சனங்கள் இந்தத் தலைமுறையினரின் இசை ரசனையை கேலி செய்யவில்லையா? எண்பதுகளைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் இசையை ஒழுங்காக ரசித்தார்கள் மற்றவர்கள் ஒப்புக்கென இசை கேட்கிறார்கள் போலும். வேடிக்கைதான். இந்த பாசிச மனப் பாங்கைத்தான் நான் கடுமையான எதிர்க்கிறேன். கீழே சிவகுமாரன் என்பவர் மிக தெளிவாக, முதிர்ச்சியுடன் சொல்லியிருப்பதைப் படியுங்கள். உங்கள் தந்தை காலத்து இசையையும், உங்கள் குழந்தைகள் கால இசையையும் ஒரேடியாக காலில் போட்டு மிதித்து விட்டு நான் கேட்டதுமட்டும்தான் சிறந்த இசை என்று மீண்டும் சொல்வீர்களேயானால் ஒன்று விதாண்டாவாதம் அல்லது புரிதலில் குழப்பம்.

    எண்பதுகள் நமது தமிழ்த் திரையிசை உச்சம் தொட்ட காலமல்ல. அது இளையராஜாவுக்குக் கிடைத்த உச்சம். அவரது வணிக வெற்றிகளின் உச்சம். அதை எல்லோருக்கும் பொதுவாக கூறுவது ஒரு சார்பானது. அதில் உண்மை கிடையாது. இளையராஜா இசையை விரும்பாதவர்கள் நிறையவே இருந்தார்கள் எண்பதுகளிலும்.

    அழகான இசையோவியம் போலிருந்த நமது காவிய இசையை சிதைத்த இளையராஜாவின் பல பாடல்கள் குறித்து நான் எழுதினால் உங்களுக்குக் கோபம் வருகிறது. என்னைப் பொய்யன் என்று வர்ணிக்கிறீர்கள். ஆனால் இல்லாத சிம்பனி பற்றி ஒரு பேச்சு மூச்சு இல்லை. அதைக் கேட்டால் பேடிகள் போல ஓடி ஒளிந்துகொள்ளும் உங்களைப் போன்ற இராவாசிகள் இசையே இவரிடமிருந்துதான் பிறந்தது என்று வரலாற்றைத் திரிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? அதுபோன்ற புனைவுகள் தானே உங்களது கேடயங்கள்.

    ReplyDelete
  20. எண்பதுகளில் படங்கள் ஓடியதே இளையராஜாவிற்காகத்தான் என்ற லாகிரி மயக்கம் இங்கே நிறையப் பேருக்கு உண்டு. ஒரு படம் ஓடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எண்பதுகளில் கவுண்டமணி செந்திலுக்காகவும் நிறைய படங்கள் ஓடியிருக்கின்றன.(இ.ராவின் பாடல்களுக்குப் புகழ் பெற்ற படமாக கருதப்படும் கரகாட்டக்காரனே முக்கால்வாசி ஓட்டம் வாழைப்பழக் காமெடிக்காகத்தான் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே) ஏன் இப்போது இ.ரா இசையமைக்கவில்லை என்றாலும் ஓடும் படங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

    ஒருவர் ஒரு கால கட்டத்தில் நிறையக் காரணங்களுக்காக பாப்புலராக இருப்பார்.என்ன கேட்டாலும் கொடுத்து அவரை புக் பண்ணுவார்கள்.அதுதான் சினிமா உலகம். அப்படி புக் பண்ணிவிட்ட காரணத்தினாலேயே இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவர்களைத் தரம் உயர்த்தப் பார்ப்பார்கள். காரணம் பணம். அந்தக் காரணிகளை எல்லாம் தாண்டி அவர்கள் நின்று நிலைத்தால்தான் திறமை அங்கீகரிக்கப்படும். அப்படி ஓரளவு அங்கீகரிக்கப்பட்டவர்தான் இ.ரா.

    இன்றைக்கு நயன்தாராவுக்கு அப்படியொரு மார்க்கெட். எத்தனைக் கோடி கேட்டாலும் கொடுத்து புக் பண்ணிவிடுகிறார்கள். அதற்காக பத்மினியை விடவும் சாவித்திரியை விடவும் நயன்தாராதான் சிறந்த நடிகை, இவரைப் போல் இதுவரை ஒருவர் வந்ததில்லை. இனிமேல் வரப்போவதும் இல்லை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்தால் பிழைப்பு நாறிவிடும்.

    இன்றைக்கு இமான் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் அங்கிங்கெனாதபடிக்குப் பரவிக் கிடக்கின்றன.
    சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தில் ஒரு கல்லூரிக் கூட்டம் 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' என்ற பாடலை பெங்களூரிலிருந்து கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் வரைக்கும் செல்போனில் ஒரு வினாடி கூட விடாமல் ஒலி பரப்பிக்கொண்டு கூத்தடித்துக்கொண்டு வந்தார்கள். இதெல்லாம் மனப்பிறழ்வு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இமான் போல இன்னொரு இசையமைப்பாளர் புவியில் இல்லை என்று அர்த்தமல்ல.

    எத்தனை எடுத்துச் சொல்லியபோதும் ஒரே மாதிரியாய் இங்கே சிலர் ஜல்லியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கால கட்டத்தில் அவர்களால் கேட்க நேர்ந்துவிட்டது என்பதற்காக ஒரு விஷயம் அதுதான் உலகின் சிறந்தது என்று ஆகிவிட முடியும் என்றால் இந்த உலகில் தினசரி ஒவ்வொரு விஷயம் ஆகச்சிறந்ததாக மாறிக்கொண்டிருக்கும்.
    இளையராஜா எம்எஸ்விக்கு அடுத்து வந்த நல்ல இசையமைப்பாளர்களில் ஒருவர். அவ்வளவு தான். அதற்காக இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பு தமிழர்களுக்கு காதுகளே இல்லாமல் இருந்தது. பிறகு பரிணாம வளர்ச்சியின் தேவை காரணமாகத்தான் தமிழனுக்குக் காதுகள் முளைத்தது என்ற தியரியை இவர்கள் இன்னமும் எத்தனைக் காலத்துக்கு ஓதிக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

    ReplyDelete
  21. http://tamilscreen.com/ilayaraja-vs-gangaiamaran/

    http://tamilscreen.com/ilayaraja-and-gangaiamaran-news/

    http://tamilscreen.com/ilayaraja-national-award-2/


    மேலே உள்ள பதிவுகள் எல்லாமே இரா எப்படி தேசிய விருது பெற்றார் என்றும், அவருக்கு இன்னும் ரஹ்மான் போபியா இருக்கிறது என்றும் தெளிவாகச் சொல்கிறது. இராவாசிகள் கண்டிப்பாக இதை படிக்கவும். ஆனால் படிக்கமாட்டார்கள்.

    ReplyDelete
  22. https://meedpu.blogspot.in/2016/03/blog-post.html

    காரிகனுக்கு,

    இதில் சென்று பாருங்கள்.. இளயராஜா எத்தனை தூரம் மற்றவர்களை மோசம் செய்திருக்கிறார் என்று தெரியும்.

    ReplyDelete
  23. வாங்க சிவகுமாரன்,

    உங்களுடைய ஒசிமாண்டியாஸ் கவிதையின் தமிழ்ப் பதிப்பை வாசித்து வியந்தேன். ஷெல்லியின் அந்த காவிய சானெட்டை அத்தனை அற்புதமாக தமிழ்ப்படுத்தியிருந்தீர்கள்.


    http://sivakumarankavithaikal.blogspot.com/2016/05/blog-post.html


    ஒரு காலத்தில் நானும் அந்தக் கவிதையை தமிழில் எழுத ,முயன்றது உண்டு.

    உங்களது வருகைக்கு நன்றி. அதைவிட உங்களின் தரமான கருத்துக்கு இன்னொரு பெரிய நன்றி. இசையின் பால் நாட்டம் கொண்டவர்கள் ஒரே புள்ளியில் நின்றுகொண்டு குதிரை ஒட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று தெளிவுபடுத்திய கருத்து. இணைய உலகில் பல புரட்டுக்கள் உண்மையாக உருவெடுக்க துடித்துக்கொண்டிருக்கின்றன. அதைச் செய்பவர்கள் தங்களுக்கான hidden agenda ஒன்றை நிறுவி அதை செயல்படுத்திவருவதை காணலாம். அதில் ஒன்று இளையராஜா பற்றிய பிம்பம். இவரை விட்டால் இசைக்கு வேற ஆளே கிடையாது போன்ற அற்ப கருத்தாக்கங்கள் முடிவின்றி புனையப்பட்டுக்கொண்டே வருகின்றன. இசை 90 களிலேயே இவரைவிட்டு அகன்று சென்று இன்று அவரால் பின் தொடரக்கூட முடியாத வேகத்திலும் இடங்களிலும் வேகமாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சில இசைப் பழமைவாதிகள் இதைப் புரிந்துகொண்டார்களில்லை.

    ----இளையராஜாவுக்கும் முன்னேயும் பின்னேயும் தமிழ்த்திரையுலகில் இசை ஜாம்பவான்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்தல் இயலாது.-----

    இந்த எண்ணம் ஏனோ சில சில்லுவண்டுகளுக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. அங்கேதான் சில முட்டல்கள், உரசல்கள் உருவாகின்றன.

    இராவை பாராட்டவேண்டிய உந்துசக்தி அவர்களை எம் எஸ் வி போன்ற இசை மேதைகளை இழிவாக விமர்சனம் செய்யத் தூண்டுவதே எனது எதிர்வினைக்கான ஒரே காரணம்.

    தொடருங்கள்....

    ReplyDelete
  24. அமுதவன் ஸார்,

    -----எண்பதுகளில் படங்கள் ஓடியதே இளையராஜாவிற்காகத்தான் என்ற லாகிரி மயக்கம் இங்கே நிறையப் பேருக்கு உண்டு. ஒரு படம் ஓடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எண்பதுகளில் கவுண்டமணி செந்திலுக்காகவும் நிறைய படங்கள் ஓடியிருக்கின்றன.(இ.ராவின் பாடல்களுக்குப் புகழ் பெற்ற படமாக கருதப்படும் கரகாட்டக்காரனே முக்கால்வாசி ஓட்டம் வாழைப்பழக் காமெடிக்காகத்தான் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே) ஏன் இப்போது இ.ரா இசையமைக்கவில்லை என்றாலும் ஓடும் படங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ----

    இதெற்கெல்லாம் சளைக்காமல் இன்னொரு பொய்யை உருவாக்குவதில் இராவாசிகள் மிக விரைவு கொண்டவர்கள்.

    காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா போன்ற படங்களின் பாடல்கள் அத்தனை அற்புதமாக இருக்கும். மேலும் அவை இரா உச்சத்தில் இருந்தபோது வெளிவந்தவை. இன்றைய மொழியில் அவை எல்லாமே ஹிட் அடித்த பாடல்கள். இருந்தும் அந்தப் படங்கள் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது குறித்து எந்த இரா ரசிகரும் வாய் திறப்பதில்லை. இராவுக்காக ஓடியதாக இப்போது பல வெற்றிப் படங்களை சீட்டுக் கட்டு போல எடுத்துப் போடும் அதேவேளையில் இந்த நிதர்சனத்தையும் அவர்கள் கொஞ்சம் பரிசீலிக்கவேண்டும்.

    -----அவர்கள் கால கட்டத்தில் அவர்களால் கேட்க நேர்ந்துவிட்டது என்பதற்காக ஒரு விஷயம் அதுதான் உலகின் சிறந்தது என்று ஆகிவிட முடியும் என்றால் இந்த உலகில் தினசரி ஒவ்வொரு விஷயம் ஆகச்சிறந்ததாக மாறிக்கொண்டிருக்கும்.-----

    அதற்கும் சாத்தியமில்லை. எண்பதுகள் மட்டுமே சிறந்தது என்ற ஒற்றைச் சிந்தனை மட்டுமே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  25. Dear Kaarigan, if you dont like IR's Music absolutely there is no issue neither for you nor for IR, but then why you are carrying him in your heart for decades to prove him as a trash? What troubles you? If somebody else can enjoy his music let him to enjoy.Why do you bother yourself to such an extend to disgrace a legend like him?. Through out your blog you are speaking about IR despite you dont like him...seems something funny
    Regards
    Muthuram

    ReplyDelete
  26. Mr. Muthuram,

    Thanks for the comment. This is a long chain of posts on Tamil film music. You have to read atleast some of them to figure out where my intentions lie. It's defenitely not about defaming IR. It's more about the whole music scene that we are surrounded with than about one man.

    One question; Why should I not criticise IR If I find him wrong?

    If he deserves to be criticised, he will be. I will do it becos I think he is not abvoe the law.

    If I criticise IR what troubles you sir? I don't get your logic. There are bloggers who hail him so much. So everyone should follow that, you think?

    I don't buy your stroy of my words are a disgrace to IR. I'm just a commoner. Hardly 100 people read my blog. In what way can my words possibly, tarnish his image?

    By the way, this post has two parts. The second will be bitterer than the first. You can't swallow it. My advice : Please don't read it when it's released.

    ReplyDelete
    Replies
    1. Mr.Kaarigan, you have all the rights to write anything in your blog and definitely i have nothing to bother about it. I just came across some of your articles on the same subject and registered my opinion that's it. I don't want to debate with you in this regard, its up to you..
      According to me he is one of the best composer and I am enjoying his creations for the past 30 years. That doesn't mean that he is the only one best MD..but,One of the best for sure. I enjoy ARR, Vidhyasaagar and other MD's music also...Mean to say that no need to be so aggressive in proving that IR is waste. Just enjoy his music if you can connect with it or just leave it.

      Delete